மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 12Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 12

Quote from monisha on July 3, 2025, 8:09 PM

12

வீழ்வேனென்று நினைத்தாயோ!

விந்தியாவும் சித்ராவும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிவா உடனே செயல்பட்டான். மாதவி படிக்கட்டுகளில் இருந்து விழுந்து காயமுற்றிருந்தாள்.

சிவா உடனே தூக்கி சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தான். வனிதா மருத்துவமனை என்றும் பாராமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். வருண் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான். விந்தியா கலையாத அலங்காரத்தோடு நின்றிருந்தாள்.

அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்க, அவள் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. கண்ணீர் தன்னைப் பலவீனமாக்கிவிடுமோ என நம்பிக்கையைச் சுமந்தபடி சிலை எனவே நின்றிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார். அவர் சொன்ன விஷயம் அங்கிருந்த எல்லோரையும் கலங்கடித்தது.

“பி. பி அதிகமானதினால் மயக்கம் வந்திருக்கு. மாடியிலிருந்து விழுந்த அதிர்ச்சியால் கழுத்துக்குக் கீழ் உள்ள பாகங்கள் செயல்படவில்லை... இன்னும் தெளிவான ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பின்புதான் இந்தப் பாதிப்பு பற்றிய விவரம் தெரியும்”

“என்ன சொல்றீங்க டாக்டர்? கண்டிப்பா அப்படி எல்லாம் இருக்காது. என்னோட கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்த கனவோடு இருக்காங்க. இல்ல டாக்டர்... அப்படி எல்லாம் இருக்காது” என்று விந்தியா உணர்ச்சிவசப்பட, சரோஜா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

அவளை மீறிக் கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் விந்தியா எத்தனை மணி நேரம் அழுதிருப்பாளோ? எல்லாச் சரியாகிவிடும் என்று பெயருக்குச் சமாதானம் சொல்லிவிட்டு கிருஷ்ணகுமாரும் அவர்களுடைய குடும்பத்தினரும் முதலில் புறப்பட பிறகு உறவினர், நண்பர்கள் என ஒவ்வொருவராய் வெளியேறினர்.

இரண்டு நாட்களில் எல்லா ரிப்போர்ட்டுகளும் வந்துவிட மாதவியைக் குணப்படுத்துவது அசாத்தியம் என கை விரித்து விட்டனர். விந்தியா கலங்காமல் மாதவியைச் சரி செய்வதற்காக அவளுடைய ரிப்போர்ட்டுகளை மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனைகளில் விசாரித்த போது ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருப்பதாகச் சொன்ன சாக்ஷி மருத்துவனையில் சேர்ப்பித்தாள்.

ஆரம்ப நிலை சிகிச்சைக்கே பணமெல்லாம் செலவானது. வருண் நிலைமையைச் சமாளிப்பது பற்றி விந்தியாவிடம் கேட்டான்.

“நகைகள் இருக்குல்ல... அதை வித்திடு வருண்”

“அம்மா உன்னோட கல்யாணத்திற்காகச் சேர்த்தது”

“என் கல்யாணத்தில் நான் கழுத்து நிறைய நகை போடணுமா இல்ல அம்மா என் பக்கத்தில் இருக்கணுமா?” என்று விந்தியா சிக்கலான கேள்வி எழுப்ப அந்தக் கேள்விக்கு வருணிடம் பதில் இல்லை.

“நான் சொல்வதைச் செய்” என்றாள் அதிகாரமாய்.

வருண் சென்ற பின்பு மாதவி விந்தியாவிடம் அவள் நிலைமை குறித்துக் கண்ணீர் வடித்தாள். பின்னர் விந்தியா அவளைத் தேற்றி உறங்க வைத்தாள். விந்தியாவும் லேசாகக் கண்ணயர்ந்துவிட, அவள் விழித்துப் பார்க்கையில் அங்கே இருந்த மாதவி ரிப்போர்ட்களைப் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ண குமார்.

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் கிருஷ்ண குமார் விந்தியாவை நோக்கி!

“இட்ஸ் ஓகே... அம்மா இப்பதான் தூங்குறாங்க... வெளியே போகலாம்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே அழைத்து வந்தாள் விந்தியா.

“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?”என்று கேட்டான் கிருஷ்ண குமார்.

“எங்களால் ஆன முயற்சி செய்றோம்னு சொல்றாங்க”

“நடக்காத ஒரு விஷயத்திற்காக நீங்க ரொம்ப மெனக்கெடுறீங்க”

“புரியல”

“உங்க அம்மா எழுந்து நடக்கிறது இம்பாஸிபில் விந்தியா” என்று அவன் சொன்ன வார்த்தை அவளின் நம்பிக்கையைத் தகர்த்து எறிவது போல் இருந்தது.

“ஒரு டாக்டரா சொல்றேன்... காசு மட்டுமே செலவாகும்... ஆனால் குணமாகாது”

அவன் பேசி கொண்டிருக்கும் போதே கைகளைக் காட்டி நிறுத்தினாள்.

“வேண்டாம் ப்ளீஸ்... நெகடிவா எதுவும் சொல்லாதீங்க” என்றாள்.

“நெகடிவா பேசல... ரியாலிட்டியை சொல்றேன்”

“அதுதான் வேண்டாமே” என்றாள் விந்தியா கோபத்தோடு.

“வேற சாய்ஸ் இல்ல... உங்களால் இந்த டீரிட்மெண்டுக்கு ஆகிற செலவை மேனஜ் பண்ண முடியாது”

“உங்க கரிசனத்துக்கு ரொம்பத் தேங்க்ஸ்... ஆனா நிச்சயம் உங்ககிட்ட பணம் கேட்கமாட்டேன்”

“நீங்க அவசரப்படுறீங்க விந்தியா. நான் உங்க அம்மாவை அப்படியே விட்டுடணும்னு சொல்லலியே... ஒரு நர்ஸ் வைச்சுப் பாத்துக்கலாம்... அதுக்காக ஆகிற செலவை ஏத்துக்கலாம்”

அவன் பேசிய வார்த்தைகள் விந்தியாவைப் பெரிதும் கோபப்படுத்தின.

“எங்க அம்மாவை வாழ்க்கை முழுக்க முடமாகவே வைச்சிருக்கணும்னு சொல்றீங்க”

“அப்படி இல்ல...”

“பின்ன வேறெப்படி மிஸ்டர்... முகமூடி போட்டு அடிக்கிற கொள்ளையை விட வெள்ளை கோட் போட்டு நீங்க அடிக்கிற கொள்ளைதான் அதிகம்... இல்லயா?”

“என்ன பேசிட்டிருக்க” என்று மிரட்டலாய் கேட்டான் கிருஷ்ண குமார்.

“உள்ளதைத்தான் சொல்றேன்... என்ன குத்துதா?”

“வேண்டாம் விந்தியா”

“நானும் அதையேதான் சொல்றேன். நமக்குள் எந்த உறவும் வேண்டாம். உன்ன மாதிரி ஒருவனோட என் லைஃபை ஷேர் பண்ண நான் தயாராக இல்ல” என்று சொல்லிவிட்டுக் கையில் இருந்த மோதிரத்தை கழட்ட, அது அவள் விரலை விட்டு வர மறுத்தது.

“நீ நடந்துக்கிறது சரியில்ல” என்று கிருஷ்ண குமார் சொல்லும் போது விந்தியா மோதிரத்தை தூக்கி வீசினாள்.

“எவ்வளவு திமிரு” என்று சொல்லியபடி கிருஷ்ண குமார் விந்தியாவின் மீது கைகளை ஓங்கினான்.

சரியான சமயத்தில் சிவா அவன் ஓங்கிய கைகளைப் பிடித்துத் தள்ளினான்.

“கையை உடைச்சிடுவேன்” என்று சிவா மிரட்ட அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கிருஷ்ண குமார் மறுகணமே அங்கிருந்து புறப்பட்டான்.

அந்த நேரத்தில் வனிதாவும் சிவாவோடு வந்திருந்தாள். அவள் கண்ட காட்சி அவளைச் சந்தேகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நடந்தது என்ன என்பதை வனிதா தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் மாதவி இருந்த அறைக்குள் சென்றுவிட்டாள். சிவா விந்தியாவிடம் நடந்தவற்றை விளக்கமாகக் கேட்டறிந்தான்.

அதற்குள் வருண் கிருஷ்ணகுமார் சொன்ன கதைகளைக் கேட்டு விந்தியாவிடம் சண்டையிட்டான். சிவா அவனிடம் புரிய வைக்க முயற்சி செய்ய, வனிதா வருணோடு சேர்ந்து கொண்டாள்.

“போதும் உங்க டிராமாவை நிறுத்துங்க. உன் கல்யாணம் நின்னு போச்சுனு தெரிஞ்சா அம்மா எப்படிக் குணமாவாங்க? அம்மாவுக்கு அதிர்ச்சயாகதான் இருக்கும். நீ அம்மாவை பத்தி கவலைபடல. உன் சுயநலம்தான் உனக்கு பெரிசா இருக்கு... இல்ல?” என்று வனிதா விந்தியாவை வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.

“வனிதா!” என்று அதட்டினான் சிவா. ஆனால் வனிதா நிறுத்தாமல் மேலும்,

“அம்மாவுக்கு உனக்கு நல்ல வாழ்கையை அமைச்சு கொடுக்கணும் என்பதுதான் ஒரே கவலை. இன்னும் நீ பழசை மறக்கல... அதான் நீ இப்படி நடந்துக்கிற. சரி போகட்டும்... உனக்கு என்னோட வாழ்க்கையைத்தான் பங்கு போட்டுக்கணும்னா... சரி… அம்மாவுக்காக அதுக்கும் நான் தயாராத்தான் இருக்கேன்” என்று வனிதா ரொம்பவும் கடுமையாகப் பேசினாள்.

வனிதாவை நோக்கி சிவா கோபத்தோடு அருகில் வர விந்தியா அவள் முகத்தில் பளீரென அறைந்தாள்.

விந்தியா அப்படி நடந்து கொண்டதினால் வருணும் வனிதாவும் கோபத்தோடு எதுவும் பேசாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். விந்தியா தலை மீது கை வைத்தபடி அமர்ந்து கொள்ள… சிவா என்ன பேசுவதென்று புரியாமல் அவளின் தோள்களைத் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு அவளின் வேதனையான முகத்தைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து அகன்றான்.

அடுத்த நாள் மாதவியைப் பார்க்க கூட இருவரும் வராத நிலையில் விந்தியா துவண்டு போய் மாதவியின் அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது சிவா தன் தாய் சரோஜாவுடன் அங்கு வந்திருந்தான். சரோஜா அவளை வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்படி அனுப்பி வைத்தாள்.

விந்தியாவிற்கும் மாதவியின் முன்னிலையில் எந்தப் பிரச்சனையையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் நடிப்பது ரொம்பவும் சிரமமாய் இருந்தது. அதனால் சரோஜாவை அங்கே மாதவிக்குத் துணையாக விட்டுவிட்டு விந்தியா புறப்பட்டாள்.

அவள் செல்வதற்கு முன் சிவா விந்தியாவின் கைகளில் ஒரு ஃபோட்டோ ஒன்றை வைத்தான்.

“என்னது சிவா?” என்று புரியாமல் கேட்டாள்.

“பாரு” என்றான் சிவா.

அந்த ஃபோட்டோவை பார்த்ததும் விந்தியாவிற்குச் சிரிப்பு வந்தது. அது அவர்கள் இருவரும் கல்லூரியில் மாறுவேடம் அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம். அதில் சிவா சுபாஷ் சந்திர போஸாகவும், விந்தியா பாரதியாராகவும் நின்றிருந்தனர்.

“அப்போ நீ பேசின பாரதியோட கவிதை... கேட்ட எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இப்போ ஞாபகம் இருக்கா இல்ல மறந்திட்டியா?”

“எப்படி மறப்பேன்?

தேடிச் சோறு நிதம் தின்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடி துன்பம் மிக உழன்று பிறர்

வாட பல செயல்கள் புரிந்து நரை

கூடி கிழப் பருவமெய்தி கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!”

என்று பாரதியின் அதே கம்பீர பிரதிபலிப்போடு பாடி முடித்தாள்.

“இந்த மனோபலம் எங்கடி போச்சு உன்கிட்ட? எதையுமே தைரியமா சமாளிப்ப... அழுதா வீக்காயிடுவோம்னு சொல்லுவ... அந்த தன்னம்பிக்கை எங்க போச்சு? விந்தியா இப்படிச் சோர்ந்து போக மாட்டா...

அத்தையை குணப்படுத்தணும்னா அந்த ஸ்டிராங் விந்தியாவாலதான் முடியும்... ஷீ கேன் டு எனிதிங். ஆனா உன்னால முடியும்னு எனக்குத் தோணல” என்றான் சிவா அவளை இளக்காரமாய்ப் பார்த்தபடி!

விந்தியா அவனைப் பார்த்து சிரித்தபடி, “பார்க்கலாம் சிவா... என்னால எப்படி முடியாம போகுதுனு... நான் கூடிய சீக்கிரம் அம்மாவை குணப்படுத்திக் காட்டுறேன்” என்றாள்.

“திஸ் இஸ் வாட் விந்தியா இஸ்” என்று சிவா தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

சிவா மீண்டும் அவளுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தான். ஆயரமாயிரம் உறவுகள் இருந்தாலும் சிவா போன்ற ஒரு நண்பனுக்கு ஈடாகாது.

விந்தியா அவள் வாழ்வின் மோசமான அத்தியாயங்களை தன்னம்பிக்கையோடு கடந்து வந்தாள். யாராலுமே நம்ப முடியாத அதிசயமாய் மாதவி புத்துயிர் பெற்றவளாய் நடமாடத் தொடங்கினாள். விந்தியா தான் நினைத்ததை நிறைவேற்றினாள்.

ஆறு மாதங்கள் துயர் துன்பங்களை விலக்கி அவளின் நம்பிக்கையின் துணை கொண்டு கடந்து வந்தாள். கசந்து போயிருந்த உறவுகளையெல்லாம் இணைக்கும் விதமாய் விந்தியாவின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

குணம், பணம் என எந்தவொரு விஷயத்திலும் ஒத்து போகாத ஒருவனோடு விந்தியா கை கோர்க்க போகிறாள். இனி அவள் வாழ்கையின் பாதை தடம் மாறப் போகிறது.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா