மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 27Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 27

Quote from monisha on August 6, 2025, 12:03 PM

27

நட்பும் காதலும்

ஆதித்தியா பூங்கொத்தை நீட்டி கொண்டிருக்க விந்தியா நடக்கப் போவதை எண்ணி பயம் கொண்டவளாய் நின்றாள். அவளின் கவலை புரியாமல் விந்தியாவின் செயல் குறித்து அவனே அர்த்தம் கற்பித்துக் கொண்டான்.

“இதை வாங்கிட்டா நான் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துப்பேனோன்னு பயப்படுறியா? உன்னோட அனுமதி இல்லாம என் விரல் நகம் கூட உன் மேல படாது... பிராமிஸ்” என்றான்.

“நான் அப்படியெல்லாம் யோசிக்கல ஆதி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சண்முகம் வந்து கதவை தட்டினார்.

விந்தியா சென்று கதவை திறக்க ஆதித்தியா பூங்கொத்தை படுக்கை மீது வைத்தான்.

“ஆதி ஐயாவை பெரிய ஐயா கூப்பிட்டாரு” என்றான் சண்முகம்.

“எதுக்கு?” என்று ஆதி கேட்டுக் கொண்டே சண்முகத்தை நெருங்கி வந்தான்.

“கீழே போலீஸ் வந்திருக்காங்க... ஏதோ கேஸ் விஷயமா உங்களை பார்க்கணுமாம்” என்றான்.

“என்னை பார்க்கணுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டே ஆதித்தியா கீழே சென்றான்.

விந்தியாவிற்கு கீழே போகவே தயக்கமாய் இருந்தது. நடக்கப் போவதை தடுக்க முடியாது எனும் பொழுது ஆதியின் நிலைமையைப் பார்க்கவும் சிவாவின் சங்கடத்தை எதிர்கொள்ளவும் முடியாமல் விந்தியா அறையின் உள்ளேயே தங்கி விட்டாள்.

வேணு மகாதேவன் வெளியில் காத்திருக்க சிவா மட்டும் உள்ளே நுழைந்தான். விந்தியா ஆதித்தியாவை திருமணம் செய்து கொண்டதினால் அந்த வீட்டிற்குள் வர விருப்பமில்லாமலிருந்த சிவாவிற்கு இப்படி ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

சிவா சந்திரகாந்திடம் நடந்தவற்றை விளக்கமாகக் கூற அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியானார். ஆதித்தியா இப்படிப்பட்ட செயலை செய்யக் கூடியவன் அல்ல என்ற உறுதியான நம்பிக்கை இருந்த போதும் மனம் கலக்கமுற்றது.

ஆதித்தியா நேராக இறங்கி வந்து சிவாவை எதிர்கொண்டு நின்றான்.

“என்ன விஷயம்?” என்றான் ஆதி.

“கேத்ரீனோட கேஸில் நீங்கதான் குற்றவாளினு சந்தேகமா இருக்கு... உங்களுக்கு எதிரா பலமான ஆதாரங்கள் இருக்கு மிஸ்டர். ஆதி. சோ... பிரச்சனை பண்ணாம நீங்களே வந்துட்டா நல்லா இருக்கும்” என்றான் சிவா

சந்திரகாந்த் ஆதிக்காக சிவாவிடம் பரிந்து பேசி கொண்டிருக்க ஆதித்தியா நடப்பவை எல்லாம் என்னவென்று புரியாமல் சிலையாக நின்றிருந்தான்.

“சாரி... என்கிட்ட நீங்க பேசுறது வேஸ்ட். நீங்க யாராவது ஒரு லாயர கன்ஸல்ட் பண்ணுங்க. இப்ப நாங்க ஆதியை அழைச்சிட்டு போறோம். போலாமா மிஸ்டர். ஆதி” என்று சிவா அழைத்ததும் ஆதித்தியா மெளனமாக நடந்தான்.

ஒரு புறம் விந்தியாவிடம் இந்த விஷயத்தை எப்படி புரிய வைப்பது என்பது பற்றிய கவலையும் கேத்ரீனின் இறப்பு பற்றிய குழப்பமும் அவனை வேதனைக்குள்ளாக்கியது.

சந்திரகாந்த் உடனே சமுத்திரனை தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். விந்தியா மாடியிலிருந்து இறங்கி வராமல் இருந்தது சந்திரகாந்த்திற்கு புரியாத புதிராய் இருந்தது. அவளுக்கு ஆதித்தியாவை கைது செய்யப் போவது பற்றி முன்னாடியே தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது.

விந்தியா தன் சோகத்தை மறைத்தே பழகியவள். இம்முறையும் அவள் மனதில் உள்ள வேதனையை வெளிக்காட்டாமல் புழுங்கி கொண்டிருந்தாள் என்பது யாரும் அறிந்திருக்க வாயப்பில்லை.

வேணு மகாதேவன் எதிரே ஆதித்தியா அமர்ந்திருக்க அவர் மனதில் தோன்றிய கேள்வியை அடுக்கடுக்காகக் கேட்க தொடங்கினார். ஆதித்தியா அமர்ந்திருந்த தோரணையில் பயமும் கலக்குமும் இல்லை. ரொம்பவும் இயல்பாகவே வீற்றிருந்தான்.

“பணக்கார பசங்கன்னா தலையில இரண்டு கொம்பு முளைச்சிருக்கா என்ன?”என்று கேட்டார் வேணு.

“அப்படியா தெரியுது?”என்று வேடிக்கையுடன் தலையைத் தொட்டுப் பார்த்தான்.

“யார் முன்னாடி உட்காந்திடிருக்கனு தெரியுதா?”

“சொல்லுங்க... தெரிஞ்சிக்கிறேன்” என்றான் ஆதி தயக்கமின்றி.

“இதுவரைக்கும் நான் எடுத்த கேஸில தோல்வியே கிடையாது... தப்பு செஞ்சவன் எப்பேர்பட்டவனாய் இருந்தாலும் தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டேன்“ என்று வேணு சொன்னதும் ஆதித்தியா முகத்தில் புன்னகை மலர்ந்தது.

வேணுவின் பின்னாடி விறைப்பாக நின்றிருந்த சிவா ஆதியின் தெளிவான நடவடிக்கையைப் பார்த்து ஆச்சரியம் கொண்டான்.

“கேத்ரீனை உனக்கு எப்படித் தெரியும்?”

“நாங்க ரெண்டு பேரும் பேங்களூரில் பிஸ்னஸ் மேனஜ்மென்ட் படிச்சோம். அப்படித்தான் எனக்குக் கேத்ரீனை தெரியும்... ஷி இஸ் மை குட் ஃபிரண்ட்”

“ஃபிரண்டுனா உங்க அகராதியில் என்ன அர்த்தம்”

“எல்லா அகராதியிலும் என்ன அர்த்தமோ... அதேதான் எனக்கும்”

“வெறும் ஃபிரண்டுன்னா... கேத்ரீன் எதுக்கு முக்கியமான லாக்கரோட பின் நம்பரா உன்னோட பிறந்த நாள் தேதியை வைச்சிருக்கா? ஃபிரண்டுன்னு நினைச்சாஅவ கம்பெனியோட பாதி ஷேரை உன் பேரில எதுக்கு எழுதி வைச்சிருக்கா?”

“கேத்ரீன் என்னை விரும்பினா... ஆனா நான் அவளைப் ஃபிரண்டாதான் நினைச்சேன்”

“சரி அப்படியே இருக்கட்டும்... நீங்க இரண்டு பேரும் பேசிக்க முடியாத அளவுக்கு உங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனை?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆதித்தியா கொஞ்ச நேரம் யோசித்தான். அதற்குள் வேணு கோபமடைந்தவராய், “என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா? கேட்ட கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லு”

ஆதித்தியா நடந்தவற்றை சொல்ல தொடங்கினான்.

“நாலு வருஷத்துக்கு முன்னே... படிப்பை எல்லாம் முடிச்ச பிறகு கேத்ரீனும் நானும் புது பிஸ்னஸ் ஆரம்பிக்க நிறைய ஐடியா யோசிச்சு வைச்சிருந்தோம். ஆனா சூழ்நிலை சந்தர்ப்பத்தால் கேத்ரீன் அப்பா அமரேஷ் உடல் நிலை சரியில்லாம இறந்து போனாரு. அமரேஷ் பேஃக்டரியை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம் கேத்ரீனுக்கு ஏற்பட்டது.

கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் கம்பிளீட்டா டவுனாயிடுச்சு... அந்த நேரத்தில் நானும் கேத்ரீனும் கிட்டதட்ட ஆறு மாதம் பாடாய்பட்டு அமரேஷ் பேஃக்டரியோட வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தினோம்.

அப்ப என் வாழ்க்கையில் இன்னைக்கு மாதிரி அன்னைக்கும் ஒரு மோசமான பிறந்த நாள் வந்துச்சு... எனக்காக அவளுடைய வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தா... நிறையப் ஃபிரண்ட்ஸ் வந்திருந்தாங்க... நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கேத்ரீன் என்னைக் காதலிப்பதாகவும் அவங்க கம்பெனியோட ஐம்பது சதவீத லீகல் ஷேர் ஹோல்டராக ஆக்குறாதாவும் சொன்னாள். நான் இரண்டையும் நிராகரிச்சிட்டேன்.

கேத்ரீனால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல. ஷீ இஸ் வெரி சென்சிட்டிவ்... போதை தலைக்கு ஏறும் அளவுக்கு குடிச்சிட்டு நிலை தடுமாறி இருந்தவளை அவளோட ரூமில் படுக்க வைச்சிட்டுக் கிளம்பிட்டேன்.

அடுத்த நாள் கேத்ரீன் ரொம்பக் கோபத்தோடு என்கிட்ட சண்டை போட்டா... ஏன் எதுக்குனு ஒண்ணுமே புரியல. கடைசியாகத்தான் எனக்குப் புரிஞ்சுது... யாரோ அவ கிட்ட அன்னைக்கு நைட் தப்பா நடந்துக்கிட்டு இருக்காங்க”

“தட் மீன்ஸ் சுயநினைவு இல்லாத போது அவளை ரேப் பண்ணிருக்காங்க அப்படித்தானே” என்று கேட்டார் வேணு

“ம்... போதையில் இருந்ததால் அவளுக்கு யாருனு தெரியல... அவ்வளவு பெரிய பழியை என் மேல தூக்கி போட்டா. இப்படி ஒரு கேவலமான பழியை என்னால தாங்க முடியல... நானும் பதிலுக்கு அவகிட்ட சண்டை போட்டேன். சண்டை முற்றி வாக்குவாதம் பெரிசாகி இரண்டு பேரும் மொத்தமா பிரிஞ்சிட்டோம்“

“அதுக்கப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?”

“அவளோட இறப்புக்கு முன்னாடி நாள் ஹோட்டலில் அவ கிளைன்ட்ஸோட மீட்டிங்கில் இருந்த போது பார்த்தேன். அவளும் என்கிட்ட பேச வரல... நானும் அதைப் பெரிசா எடுத்துக்கல. பட், அந்த ஆக்ஸிடன்ட் நடந்த நைட் கேத்ரீன் என்னை மீட் பண்ண வந்ததாக மேனேஜர் ரமேஷ் சொன்னாரு.

போதாக் குறைக்கு அளவுக்கு அதிகமா குடிச்சிருந்ததாகவும் சொன்னாரு. அவ லிக்கர் சாப்பிட்டா ரொம்ப அப்நார்மலா மாறிடுவா... என் மனசு கேட்கல... அவளோட ரூமுக்கு பத்திரமா போகணுமேன்ற அக்கறையிலதான் அவ பின்னாடி போனேன்...” என்று சொல்லிவிட்டுக் கண்களில் நிரம்பிய நீரை துடைத்துக் கொண்டான்.

மீண்டும் ஆதித்தியா சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.

“ஜஸ்ட் ஒன் மினிட் முன்னாடி போயிருந்தாலும் காப்பாத்திருப்பேன். என்னோட பேட் லக்... அவ தவறி விழுந்ததை மட்டும்தான் என்னால பார்க்க முடிஞ்சுது”

ஆதித்தியா சொன்ன விஷயங்களை கேட்டபின் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட வேணு,

“அவ போதையில் இருந்தபோது நீ அவளைக் கெடுத்துட்டனு பழி போட்டதா சொன்ன... அப்படி இருக்கும் போது திரும்பியும் அவ போதையில் இருக்கும் போது அவ பின்னாடி நீ போயிருக்கன்னா... இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கவா? அவகிட்ட நீ தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி அவ உன்னைத் தடுக்கப் போய்த் தவறுதலா கீழே விழிந்திருக்கலாமே”

இத்தனை நேரம் இயல்பாக இருந்த ஆதித்தியா அந்த வார்த்தைகளைக் கேட்டு நொறுங்கி போனான். கோபம் அவன் கண்களில் அனலாய் பறந்தது.

“நான் நல்ல எண்ணத்தோடுதான் அவ பின்னாடி போனேன்”

“சரி... நல்ல எண்ணம்னே வைச்சுப்போம்... நீ அவ ரூமுக்கு போன வீடியோ ஆதாரத்தை எதுக்கு நீ எடிட் பண்ணனும்”

இதற்கு ஆதித்தியாவிடம் எந்தப் பதிலும் இல்லை. என்ன சொல்வதென்று புரியாமல் மெளனமாய் இருந்தான்.

“உன்கிட்ட பதில் இல்லைன்னா... உன் கிட்ட தப்பு இருக்கு மிஸ்டர் ஆதி”

“நான் எனக்குத் தெரிந்து உண்மை எல்லாம் சொல்லிட்டேன்... நான் அவ ரூமுக்குப் போனதும் உண்மை... அதே போல அவ தானா தவறி விழுந்ததும் உண்மை”

உடனே வேணு கோபமடைந்தவராய், “கான்ஸ்டபில் அந்த லத்தியை எடுத்துட்டு வாங்க... அடிச்சா உண்மை எது ... பொய் எதுன்னு தானா தெரியும்” என்றார்.

ஆதித்தியா பதட்டமடையாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

லத்தியை கையில் வாங்கிய வேணு திரும்பி சிவாவை பார்த்தார். அத்தனை நேரம் ஆதியுடன் நடந்த விசாரணையை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்த சிவாவிடம் நீட்டினார்.

“நீங்க அடிச்சி விசாரிங்க சிவா... அப்படியாவது முழுசா உண்மை பேசுறானானு பார்க்கலாம்”

சிவா அந்த லத்தியை கைகளில் வாங்க கூடத் தயாராக இல்லை.

வேணு சிரித்து விட்டு, “என்ன சிவா... உங்க மனைவியோட அக்கா புருஷன்னு யோசிக்கிறீங்களா? நம்ப முடியலியே... அவ்வளவு சென்டிமன்ட் இருந்தா ஆதிக்கு எதிரான ஸ்டிராங்கான ஆதாரத்தைக் கொடுக்கும் போது யோசிக்காம இப்ப மட்டும் என்ன... கம்மான் சிவா” என்று வற்புறுத்தி அந்த லத்தியை கைகளில் கொடுத்து விட்டு வெளியே போனார்.

ஆதித்தியா கலகலவென சிரித்தான்.

“நீ எதிர்பார்த்த சான்ஸ் கிடைச்சிடுச்சுல்ல... ஏன் யோசிக்கிற? கம்மான் டு இட்”

சிவா சினம் கொண்டவனாய், “உன்னை அடிக்க ஒரு செகண்டு கூட ஆகாது... நான் யோசிக்கிறது விந்தியாவைப் பத்தி மட்டும் தான்“

“நீ அவளைப் பத்தி கவலைப்பட்டிருந்தா... இந்தப் பொய்யான பழியை என் மேல திட்டம் போட்டு சுமத்தி இருப்பியா?”

“உன்னை கல்யாணம் பண்ண வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம செஞ்சிக்கிட்டாளே... அவளுக்கு இதெல்லாம் தேவைதான்”

“என்னை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு சுத்தமா பிடிக்கல இல்ல... நீ அவளுக்கு நண்பன்னு சொல்ற... ஆனா உன் மனசில அந்த மாதிரியான எண்ணம் இருக்கிற மாதிரி தெரியலயே”

“எங்க நட்பை புரிஞ்சிக்க ஒரு தகுதி வேணும்... அது உன் கிட்ட இல்ல” என்று சொல்லி ஆதித்தியாவை இளக்காரமாய் பார்த்தான்.

“உன் நட்பை ஒண்ணுமில்லாம பண்றேன்... அப்போ தெரியும் என் தகுதி என்னனு”

சிவாவுக்கு சிரிப்பு வந்தது.

“அத்தைக்கு உடம்பு சரியில்லாத போது உங்க அப்பா அவளுக்கு உதவி செய்யலன்னா... நீ எல்லாம் அவ வாழ்கையில் வந்திருக்கவே மாட்ட. ஒன்னா பிறந்து வளர்ந்து படிச்சி எத்தனையோ தடங்கல்களைக் கடந்தும் சேர்ந்தே இருக்கிற எங்களோட நட்புக்கு முன்னாடி நீ கால் தூசி பெறமாட்ட ஆதி”

“வார்த்தைய அளந்து பேசு சிவா... இந்த இடமும் சூழ்நிலையும்தான் உன்னை இப்போ காப்பாத்திட்டிருக்கு”

சிவா கலகலவென்று சிரித்தான்.

“நான் மட்டும் நினைச்சேனா உன்னை இங்கயே நார் நாராய் கிழிச்சு தொங்க விட்டிடுவேன்...”

“அதான் லத்தி இருக்கு இல்ல... ஏன் யோசிக்கிற... அடி”

இருவருமே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வாளாக வீசினர். பனி விலகி நேருக்கு நேரான போர் அவர்களுக்குள் மூண்டது. ஆதித்தியாவின் மீது கை வைத்தால் விந்தியாவின் முகத்தை எப்படி பார்ப்பது என்று சிவா மனதிற்குள் பயந்தான்.

சரியான சமயத்தில் கான்ஸ்டபிள் வந்ததால் அவர்கள் அமைதியாகினர். ஆதித்தியாவிற்கு ஜாமீன் வந்ததாகச் சொல்லி கான்ஸ்டபிள் அவனை அழைத்து சென்றார்.

இவர்களின் நட்பும் காதலும் மோதிக் கொண்டதில் சம்பந்தமில்லாமல் காயப்படப் போவது விந்தியாதான்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா