மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 33Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 33

Quote from monisha on August 20, 2025, 5:18 PM

33

உணர்வுகளற்ற விழிகள்...

விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான கோபம் ஆழமாய் அழுத்தி கொண்டிருக்க, ஆதித்தியாவை பார்க்க போகும் தருணம் அவளுக்கு எரிச்சலை தோற்றுவித்திருந்தது.

இருந்தும் அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டு சந்திரகாந்த்திற்காக நடந்து வந்தவளின் எதிரே பைக்கில் சீறிக் கொண்டு ஆதித்தியா வந்தான்.

விந்தியா கேட்டை தாண்டி உள்ளே வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஆதித்தியா, கட்டுபடுத்த முடியாத வேகத்திலும் சடாரென நொடி பொழுதில் அவள் எதிரே கொண்டு வந்து பைக்கை நிறுத்தினான்.

“என்ன விந்தியா... அப்பப்போ ஷாக் கொடுத்து முன்னாடி வந்து நிக்கிற. டைம் நல்லா இருக்கு... வந்த ஸ்பீடுக்கு மோதியிருந்தால்...”

“மோதினா என்ன... எனக்கு அடிபட்டிருக்கும். என்னை நீங்க காயப்படுத்துறதும் நான் காயப்படுவதும் புதுசா நடக்குதா என்ன?” என்றாள்.

ஆதித்தியா பைக்கில் இருந்து இறங்கி வந்தான்.

“என் கூட சண்டைப் போட வந்திருக்கியா? அதைத் தவிர வேறெதுவும் தெரியாதா உனக்கு?”

“ப்ளீஸ் ஆதி... உங்க கூட சண்டை போடற தெம்பெல்லாம் இப்போதைக்கு எனக்கில்லை.உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…... பேசலாமா?”

“ஷுவர்... வா உள்ளே போய்ப் பேசுவோம்”

“இல்ல… இங்க கார்ட்னில் நின்னு பேசுவோமே”

“ஓகே” என்று சொல்லி விட்டு தோட்டத்தில் பசுமையான புற்களின் மீது இருக்கை போல் அமைக்கப்பட்ட கல் மேடையின் மீது கால் மீது கால் போட்டுச் செளகர்யமாக அமர்ந்து கொண்டான். விந்தியாவையும் உட்கார அருகில் அழைத்தான். ஆனால் அவளோ அவன் எதிரே நின்று கொண்டு எங்கேயோ பார்த்தபடி தான் நினைத்ததைப் பேசத் தொடங்கினாள்.

“அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியல... நீங்க வந்து பார்க்கணும்னு விருப்பப்படுறாரு...”

“யாரோட அப்பாவுக்கு?” என்று கேட்டான்.

“ஏன் நடிக்கிறீங்க? உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லனு உங்களுக்குத் தெரியாது? அவர வந்து பாக்காம இப்படி ஊரை சுத்திட்டிருக்கீங்க... மனுஷனா நீங்க?”

“மிருகம்தான்... இப்ப என்ன பண்ண போற? உன் மாமனார நீ பாத்துக்கோ... அதை விட்டுட்டு என்னை ஏன் தொல்லை பண்ற. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி எழுந்து கொண்டவன் அவளைக் கவனிக்காமல் பைக்கை நோக்கி நடந்தான்.

அவனைத் தடுப்பதற்காக அவன் பின்னோடு அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

“ஆதி... நில்லுங்க... நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க... ஆதித்தியா!”

அவள் கத்திய போதும் அவன் அவளைத் திரும்பி கூடப் பார்க்கவில்லை. பைக்கின் சாவியை எடுத்து வண்டியில் போட்டதும் விந்தியா கத்தினாள்.

“நில்லுங்க ஆதி... உயிரோட இருக்கிற வரைக்கும் அந்த மநுஷனோட அருமை தெரியாது... ஆனா மொத்தமா போயிட்டா நீங்க என்னதான் அய்யோ அம்மான்னு கதறினாலும் வராது”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றான்.

“நீங்க போட்டிருக்கிற டிரஸ்... பைக்கு... இந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை... உங்க பேருக்கு முன்னாடி இருக்கிற இன்ஷியலிருந்து கடைசியில இருக்கிற பட்டம் வரைக்கும் எல்லாம் உங்க அப்பா கொடுத்தது... அதையெல்லாம் வேண்டாம்னு தூக்கிப்போட வேண்டியதுதானே”

ஆதித்தியா அவளைத் திரும்பி பார்த்தான்.

“அப்பான்னா... இத செஞ்சிட்டா போதுமா? எங்க அம்மா இறந்த போது தனிமை மட்டும்தான் என் கூட இருந்தது... இவரு இல்ல. எனக்கு உடம்பு சரியில்லாத போது, வேலை செய்றவங்கதான் கூட இருந்தாங்க இவரு இல்ல... என் வெற்றிக்காகப் பாராட்டுறதுக்கு... தோல்வி வந்தா தேற்றுவதற்கு... இவரு இல்ல விந்தியா.

கொஞ்சோண்டு அந்த மனுஷன் மேல அக்கறை இருக்கிற காரணத்தாலதான் இங்க இருக்கேன்... அதுவும் வேண்டாம்னு சொல்லு... தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கேன்”

பைக்கின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டான்.

“அம்மாவும்... அப்பாவும் வேற வேற ஆதி. அப்பாக்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது. அந்த உறவே அப்படிப்பட்டதுதான்.

அப்பா இல்லாததின் வலி என்னன்னு என்னை விட வேற யாராலயும் சொல்லவே முடியாது. அப்பான்னா ஃபீஸ் கட்டுவாரு... துணிமணி வாங்கித் தருவாரு... எப்பையாவது வெளிய கூட்டிட்டு போவாரு... ரொம்பக் குறைவா பேசுவாரு... ஆனா நிறைய திட்டுவாரு... இவ்வளவுதான் எனக்குத் தெரியும்...

ஆனா திடீர்னு ஒரு நாள் அந்த அப்பா என்கிற உறவே இல்லாத போன போதுதான் தெரிஞ்சுது... அவரு வெறும் அப்பா இல்ல எங்க வீட்டோட அஸ்திவாரம். கனவுகளைத் தொலைச்சிட்டு பணத்தின் பின்னாடி ஓடும் போதுதான் தெரிஞ்சது... இழந்தது அப்பாவை மட்டும் இல்ல சகலத்தையும்.

ஆனா அந்தத் தலையெழுத்து உங்களுக்கு இல்ல... மாமா இன்னும் உங்க பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைச்சிருக்காரு... அந்த நன்றிக்காவது ஒரே ஒரு தடவை போய் பாருங்க... அப்பானு கூப்பிடுங்க...

அப்புறம் அவர் இல்லாம போயிட்டா நீங்க என்ன கூப்பிட்டாலும் அது வேஸ்ட்டுதான்... எந்த தனிமை உங்கள வாட்டுச்சோ அதே தனிமையை மாமாவும் அனுபவிச்சு இருக்காரே... ஒரு துணையைத் தேடிக்கணும்னு நினைச்சா உங்க நிலைமை என்னவாயிருக்கும்?

இதுக்கப்புறமும் உங்களோட பிடிவாதம்தான் முக்கியம்னு நினைச்சீங்கன்னா... பரவாயில்ல... அட்லீஸ்ட் அவரு முன்னாடி பொய்யா நடிங்க... பாசம் இருக்கிற மாதிரி பேசுங்க... நீங்க விட்டுக்கொடுத்து போறதினால ஏதாச்சும் நன்மை ஏற்படும்னா நீங்க அதைச் செய்யலாமே...

உங்க அப்பா உங்களுக்கு ஏற்படுத்தினதா நீங்க சொல்ற வலியை விட நூறு மடங்கு அவமானத்தையும் வலியையும் நீங்க எனக்குத் தந்திருக்கீங்க... இருந்தும் திரும்பவும் என் விதி... நான் அந்த அவமானத்தைப் பொறுத்துக்கிட்டு உங்க முன்னாடி பேசிட்டிருக்கேனா... மாமா குணமாகணும் என்கிற ஒரே காரணத்தினாலதான்...

எல்லா உறவுகளையும் உங்க சுயநலனுக்காக கொன்னு புதைச்சிட்டு நீங்க சந்தோஷமா இருக்க முடியாது ஆதி. பிளீஸ் யோசிச்சு முடிவெடுங்க” என்று அவனிடம் கண்ணீரோடு கை கூப்பிக் கேட்டுக்கொண்டாள்.

ஆதித்தியா விந்தியாவின் அழுகையினால் மொத்தமாய்க் கரைந்து போனான்.

விந்தியா கடைசியாய் , “இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. உங்க டைமை வீணடிச்சிருந்தா... ஐம் சோ சாரி” என்று சொல்லிவிட்டு ஆதித்தியாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கண்ணீர் நிரம்பிய கண்களோடு அங்கிருந்து வெளியேறினாள்.

விந்தியாவின் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்த ஆதித்தியாஅவளின் இன்னோரு பக்கம் வலியும் வேதனையும் கலந்தது என்பதை முதல் முறையாய் இப்போதுதான் உணர்ந்து கொண்டான்.

எப்போதுமே அழகாய் அவள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் அந்த விழிகள், அவனை ஏறிட்டும் பார்க்காமல் உணர்வுகளற்று கிடந்ததைப் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டான்... அவன் அன்று அவளுக்கு இழைத்தது பெரும் அநீதி என்று.

இங்கே விந்தியா ஆதியுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிவா கோவாவை சென்றடைந்தான். இம்முறை அவனின் எண்ணமெல்லாம் எம். வி. டி லிக்கர் ஃபாக்டரியை பற்றியதுதான். அந்த நிறுவனத்தின் எம். டி அவினாஷின் பி. ஏ ஷபானாவை சந்திக்க முடிவு செய்தான்.

பெரும் முயற்சிக்குப் பின் அவள் சிவாவை சந்திக்க சம்மதித்தாள். அதுவும் ஆராவாரித்துக் கொண்டிருக்கும் அரபிக் கடலின் நடுவில்...

ஒரு பெரிய போட்டில் இருவரும் அமர்ந்திருக்க அவளின் பத்து வயது மகன் ஆஷிக் கடலுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எகிறி குதிக்கும் டால்ஃபின்ஸை பார்த்தபடி சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.

“நான் உங்களை ரொம்பவும் தொந்தரவு செய்திட்டேனோ?” என்று சிவா கேட்டான்.

“ரொம்ப... ரொம்ப” என்றாள் ஷபானா தன்னுடைய விருப்பமின்மையை.

“நீங்க சென்னையா ஷபானா?”

“அதென்ன தமிழ் நாடுன்னாலே சென்னைதானா? வேற ஊரெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாதா? நான் திருநெல்வேலி... என் கணவர் இங்க இருந்ததினால நான் இங்கே வந்துட்டேன். இப்போ ஹி இஸ் நோ மோர். இருந்தாலும் என்னோட வேலை... குழந்தையோட படிப்புக்காக இங்கயே செட்டிலாயிட்டேன்”

“நீங்க முதலில் கேத்ரீன் ஆபிஸிலதானே வேலை பார்த்தீங்க... திடீர்னு ஏன் எம். வி. டில ஜாயின் பண்ணீங்க?”

“கேத்ரீனோட டெத்துக்குப் பிறகு அங்க மேனேஜ்மென்ட்... சரியில்ல”

“அது மட்டும்தான் ரீஸனா?”

“இல்லதான்... ஆனா காரணத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லணுமா?”

“கேத்ரீனோட இருந்த போது நீங்க ஆதித்தியாவை பார்த்திருக்கீங்களா?”

“எனக்கு ஆதித்தியாவை நல்லா தெரியும்... ஆனா அவங்களுக்கு இடையில திடீர்னு டெர்ம்ஸ் சரியில்லாம போயிடுச்சு”

“அதற்கான காரணம் உங்களுக்கு தெரியாதா?”

“தெரியாது”

“நீங்களும் கேத்ரீனோட ஹோட்டல் ஆதித்தியாவில் வங்து தங்கி இருந்தீங்க இல்ல?”

“ஆமாம்... ஆனா மீட்டிங் முடிஞ்சதும் மேடம் என்னைக் கிளம்பச் சொல்லிட்டாங்க... அவங்க அடுத்த நாள் வருவதா சொன்னாங்க... ஆனா பேட் லக் அந்த அக்ஸிடென்ட்”

“அது ஆக்ஸிடென்டா?”என்று கேட்டான் சிவா.

“ஹௌ டு ஐ நோ?... நான்தான் அங்க இல்லியே”

“மினிஸ்டர் வித்யாதரனை உங்களுக்குத் தெரியுமா?”

“எம். வி. டி லிக்கர் பாஃக்டரியோட உண்மையான ஓனர்... ஆனா இதை நீங்க எந்தக் கோர்ட்டில் சொன்னாலும் எடுபடாது”

“அந்த மினிஸ்டரோட மகனைத் தெரியுமா உங்களுக்கு?”

“அந்த பொறுக்கி பெயர் மனோஜ்... அடிக்கடி கோவாவிற்கு வருவதும், குடிப்பதும், கேம்ப்ளிங் ஆடுறதும் அவனோட வழக்கம்”

அவன் அவளிடம் ஒரு ஃபோட்டோவை காண்பிக்க ஷாபானா அவளை அடையாளம் காண்பித்தாள். விந்தியாவின் யூகம் சரியாக இருந்தது. இவர்களின் பேச்சுத் தடைபடும் விதமாய்ப் பெரிய சத்தம் ஒலித்தது.

அவர்கள் என்னவென்று யோசிப்பதற்குள் ஷபானாவின் மகன் ஆஷிக் தண்ணீரில் விழ அவள், “ஆஷிக்... ஆஷிக்” எனக் கதறினாள்.

சிவா கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்தக் கணமே கடலில் குதித்தான்.

ஆஷிக்கை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பின் சிவா அந்த ஈர துணியில் அமர்ந்திருக்க, ஷாபானா தன் மகனை எண்ணி கதறினாள்.

சிறிது நேரத்தில் ஆஷிக் ரொம்பவும் இயல்பாக மருத்துவமனையின் படுக்கை மீது அமர்ந்து கொண்டு தான் விழுந்த கதையை ஹிந்தியில் ஷபானாவிடம் சொல்லி கொண்டிருந்தான்.

சிவா எதுவும் புரியாதவனாய் அவன் எப்படி விழுந்தான் என ஷபானாவிடம் கேட்டான்.

“அவனா விழலயாம்... அங்க இருந்த கயிறு தடுக்கி விட்டிருச்சாம்” என அவனின் பாணியிலேயே சிவாவிடம் சொன்னாள்.

சட்டென்று சிவாவிற்கு ஆஷிக்கின் பதில் வேறு ஒரு கேள்விக்கான பதிலாய் தோன்றியது.

இப்படி அவன் சிந்தித்துக் கொண்டிருக்க ஷபானா நெகிழ்ச்சியோடு நன்றி கூறினாள். கேத்ரீன் கேஸில் அவளால் முடிந்த உதவிகளை எப்பேர்பட்ட ஆபத்து வந்தாலும் செய்வதாக உறுதியளித்தாள்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா