மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garden tip-12Post ReplyPost Reply: Terrace garden tip-12

Quote from monisha on March 24, 2020, 7:25 PM

குறிப்பு - 12

கீரை வகைகள்
கொத்தமல்லி, புதினா, பாலாகீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கனிக்கீரை, மிளகுதக்காளிக்கீரை, ஆகியவற்றை வீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடலாம். கீரைகளில் – கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலாகீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, மிளகுதக்காளிக்கீரை ஆகியவற்றை விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். புதினா, பொன்னாங்கனிக்கீரை ஆகியவற்றை குச்சி (போத்துகள்) மூலம் நடவு செய்து உற்பத்தி செய்யலாம். வல்லாரைகீரை மட்டும் வேர்கள் மூலம் நடவு செய்து உற்பத்தி செய்ய முடியும். பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் முறை பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது நன்கு சுத்தம் செய்தல் வேண்டும். அதிகப்படியான தண்ணீர் செடியின் அருகில் இருந்தால் செடியின் வேர்கள் அழுகிவிடும். ஆகையால் தண்ணீர் வெளியேற டிரம் மற்றும் வாளிகளின் அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் துளை இட வேண்டும். பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது அவற்றில் மண்புழுக்கள் வராது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா