மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 37Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 37

Quote from monisha on August 28, 2025, 6:07 PM

37

துரோகம்

நீதிமன்ற வாசலில் சுபா விந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

கேத்ரீனின் வழக்கு விசாரணைக்கான அழைப்பு வர எல்லோருமே நீதிமன்றத்தின் உள்ளே சென்று அமர்ந்தனர்.

ஆதித்தியா குற்றாவளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்தான்.

சுபா அவள் எடுத்த குறிப்புகளை மேலே வைத்துக்கொள்ள பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதன் தம் வாதத்தை முதலில் எடுத்துரைத்தார்.

“இந்த வழக்கில் கேத்ரீனை கொலை செய்ததிற்கான முக்கியமான சாட்சியே அந்தக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ ஆதாரம்தான்.

ஆதித்தியா அந்த இரவு சமயத்தில் தன் நிலை தவறியிருந்த கேத்ரீனை பின் தொடர வேண்டிய அவசியம் என்ன? அவளின் அறைக்குள் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இவை அனைத்தும் நல்ல எண்ணத்தில் செய்ததாக பெரும் ஹோட்டல் அதிபர் சந்திரகாந்தின் ஒரே மகன் ஆதித்தியா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன நல்ல எண்ணம் உங்களுக்கு ஆதித்தியா?” என்று ஆதியை பார்த்து வினவினார்.

“கேத்ரீன் டிரிங்ஸ் சாப்பிட்டா அப்நார்மலா மாறிடுவாங்க... அவங்களால தன்னை மேனேஜ் பண்ண முடியாது” என்றான் ஆதித்தியா.

“அப்போ கேத்ரீனை பற்றிய எல்லா விவரமும் உங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கு... அந்த சந்தர்பத்தைப் பயண்படுத்திதான் நீங்க கேத்ரீனை அடைய அறைக்குள் போயிருக்கீங்க”

“நோ... என் மனசில அந்த மாதிரி எண்ணம் துளிக்கூட இல்லை” என்றான் ஆதி.

“இது நம்பும்படி இல்லை” என்று பத்மநாதன் சொல்ல,. உடனே நீதிபதி சுபாவை பார்த்து, “இதில் நீங்கள் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“எஸ் யூர் ஆனர்... அந்த வீடியோ ஆதாரத்தை சரியா பார்க்காமலே மிஸ்டர் பத்மநாதன் உளறுகிறார். ஆதித்தியா அந்த அறைக்குள் சென்று மீண்டும் ஒரு சில விநாடிகளிலேயே பதட்டத்தோடு வெளியே வருகிறார்.

இத்தனை குறைவான நேரத்திலா ஆதித்தியா கேத்ரீனிடம் தவறாக நடந்து கொண்டிருப்பார்? அப்படியே நீங்கள் சொல்வதே உண்மை என்று வைத்து கொண்டாலும், மிதமிஞ்சிய போதையிலிருக்கும் பெண் ஒரு ஆணிடமிருந்து தன்னைக் காப்பாற்ற போராடி அவள் தவறி விழுந்துவிட்டதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். கொலை செய்யவோ கற்பழிக்கவோ திட்டமிட்டு செல்வதானால், ஆதித்தியா அறைக்கதவை ஏன் மூடாமலே உள்ளே செல்ல வேண்டும்?”

இதைக் கேட்ட பத்மநாதன் நீதிபதியை பார்த்து, “எதிர்க்கட்சி வக்கீல் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தன் கட்சிக்காரரை காப்பாற்ற வேலைக்கு ஆகாத விஷயங்களைச் சொல்லி கொண்டிருக்கிறார்“

“நோ பத்மநாதன்... அவங்க சொன்னதிலும் பாயின்ட் இருக்கு. சரி... இனி நீங்க உங்க தரப்பு சாட்சிகளை அழைக்கலாம்” என்று நீதிபதி பத்மநாதனை பார்த்து உரைத்தார்.

“என்னுடைய முதல் சாட்சி ஆதித்தியாவின் நெருங்கிய நண்பனாய் இருந்த சமுத்திரன்”

சமுத்திரன்... சமுத்திரன் என்று அழைத்ததும் அவன் கூண்டில் ஆதித்தியாவிற்கு எதிர்புறத்தில் நின்றான்.

பத்மநாதன் சமுத்திரனை நெருங்கி வந்து, “நீங்கள்தான் சமுத்திரனா?” என்றார்.

“ஆமாம்” என்றான்.

“நீங்களும் ஆதித்தியாவும் சுமார் எத்தனை வருடமாய் நண்பர்கள்”

“இருபது வருடம்”

“ஆதித்தியா கேரக்டர் எப்படி”

“எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். பார்க்கிற பெண்கள் எல்லோரும் ஒரே சந்திப்பில் அவனின் வலையில் விழுந்துடுவாங்க”

ஆதித்தியாவிற்கு கோபம் பொங்கி கொண்டு வர, எதிரே இருந்த சிவா கண் ஜாடையில் அமைதியாக இருக்கும்படி சொன்னான்.

“கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”

“அவன் லிஸ்டில் நிறையப் பெண்கள்... இதில் கேத்ரீனோட எப்போ பழக்கம் என்று எனக்கு எப்படி தெரியும்?”

“கேத்ரீன் இறந்த அன்னைக்கு நீங்க ஆதித்தியாவை பார்த்தீங்களா?”

“ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் அங்கே நடந்த ஆக்ஸிடன்ட் பத்தி ஃபோன் பண்ணணாரு... நான் நேரில் போய்ப் பார்த்தேன்... ஆதித்தியா அங்கே இல்லை“

“எங்க போனார்னு உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது... கிட்டதட்ட யாருக்குமே ஆதித்தியா அந்த ஆக்ஸிடென்ட் அப்புறம் எங்க போனான்னு தெரியாது... ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்தான்... எங்க போனன்னு கேட்டா சரியான பதில் இல்லை”

உடனே பத்மநாதன் நீதிபதியை பார்த்து,

“நோட் திஸ் பாயின்ட் யூவர் ஆனர். ஆதித்தியா கேத்ரீனின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்து கேஸ் தனக்கு எதிரா திரும்பவில்லைனு தெரிஞ்சதும் வெளியே வந்திருக்காரு” என்றார்

மேலே தம் கேள்விகளைப் பத்மநாதன் சமுத்திரனிடம் தொடர்ந்தார்.

“நீங்கதானே முதலில் ஆதித்தியா தரப்பில் ஆஜராவதாக இருந்தது. அப்புறம் ஏன் நீங்க விலகிட்டீங்க?”

“முதலில் ஆதித்தியா தப்பு செய்திருக்க மாட்டான்னு நம்பினேன். ஆனா ஆதித்தியா குற்றவாளினு எப்போ தெரிஞ்சுதோ நான் அநியாயத்திற்காக வாதாட விரும்பல”

“நண்பனா இருந்தாலும் நியாயத்தின் பக்கம்தான் நிப்பேன்னு சொல்றீங்க…”

“ஆமாம்”

“தட்ஸ் ஆல் யூர் ஆனர்” என்று பத்மநாதன் தம் இருக்கையில் அமர்ந்தார்.

நீதிபதி சுபாவிடம், “குறுக்கு விசாரணை செய்யப் போறீங்களா?” என்று கேட்க,

“எஸ் யூர் ஆனர்” என்றவாரு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சமுத்திரன் நின்றிருந்த கூண்டிற்கு அருகில் போய் நின்றாள். அவர்கள் பார்வைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன.

“நீங்கள் நியாயத்திற்காக மட்டுமே வாதாடுபவர்... இல்லையா?” என்று கேட்டாள் சுபா நக்கலாக.

“ஆமாம்” என்றான் அழுத்தமாக.

“அவ்வளவு நியாயம் தெரிந்த நீங்க எதற்கு ஆதித்தியா மாதிரி ஒருவருடன் நட்பு பாராட்டினீங்க?” என்று வினவினாள் சுபா.

“அதுக்குக் காரணம் இருக்கு... நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். படிக்க ஆசை இருந்தும் வசதி இல்ல. என்னோட அப்பாவோட முதலாளி சந்திரகாந்த் அவர்கள்தான் என்னைப் படிக்க வைச்சு இன்னைக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தை தேடிக் கொடுத்தது. அந்த நன்றிக்கடனை மறக்காமதான் சந்திரகாந்த்தின் ஓரே மகன் ஆதித்தியாவோட நட்போடு இருந்தேன்”

“அந்த நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தும் விதமாய் ஆதித்தியா எதிரா சாட்சி சொல்றீங்க?”

பத்மநாதன் எழுந்து நின்று கொண்டு, “அப்ஜக்ஷன் யூர் ஆனர்... சாட்சியைக் கலைக்கும் விதமாக எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்பது சரியல்ல” என்றதும்,

சுபா உடனே, “இருபது வருட நட்பை, நன்றி உணர்ச்சியை இவ்வளவு சுலபமா தூக்கிப் போடும் போது இந்த மாதிரி கேள்வி நம் மனதில் எழத்தானே செய்யும்…” என்றாள்.

நீதிபதி, “அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்” என்று சொல்ல, பத்மநாதன் அமைதியாய் உட்கார, சுபா “தேங்க்யூ யுவர் ஆனர்” என்று சொல்லி விசாரணையை மேலே தொடர்ந்தாள்.

“நீங்க பதில் சொல்லுங்க சமுத்திரன்” என்று சுபா சொல்ல மனைவியின் முன்னே இப்படி நிற்பது அவமானமாய் இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

“நன்றி உணர்ச்சி நிறைய இருப்பதினால்தான் ஆதித்தியாவிற்கு எதிரா சாட்சி சொல்றேன். என்னோட காட்பாஃதர் சந்திரகாந்த் இப்படி ஒரு மகனை பெத்துட்டு ஒரு நாள் கூட சந்தோஷமா இல்லை.

போதாக் குறைக்கு இப்படி ஒரு தப்பை தன் மகன் செஞ்சிட்டானேனு கவலையிலேயே உயிரை விட்டுட்டார். இவன் யாருக்குமே உண்மையா இல்லை. ஆதித்தியா செஞ்ச தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கணும்” என்று சமுத்திரன் இமோஷனலாகப் பேசி கண்களைத் துடைத்துக் கொண்டான்.

ஆதித்தியாவிற்கு இப்போதுதான் அவனின் சுயரூபமே புரிந்தது. அவன் துரோகத்தின் முழு உருவமாய் நின்றான். அவன் பேசியது வார்த்தைகள் இல்லை. ஆதித்தியா மீது வீசிய வாளாக இருந்து.

தந்தை இழந்த வேதனையிலிருந்து அவன் மீளாத போது சமுத்திரனின் துரோகம் இன்னும் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.

சுபாவுக்கு அவனின் நீலிக்கண்ணீர் புரிந்த போதும் ரொம்பவும் இயல்பாகவே அவனிடம் கேள்விகளைக் கேட்டாள்.

“நீங்க கேத்ரீன் டெத் நடந்த போது எங்க இருந்தீங்க?”

“என் வீட்டில கிளைன்ட்டோட பேசிட்டிருந்தேன்”

அவன் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை என்பது சுபாவுக்குத் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தாள்.

“அப்போ மேனேஜர் ரமேஷ் சொல்லித்தான் உங்களுக்கு விஷயம் தெரியும் இல்லையா?”

“ஆமாம்”

“தெரிந்த அரைமணி நேரத்தில் ஹோட்டலில் இருந்தீங்க இல்லை?”

இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சமுத்திரன் திணற… அவன் பதிலை எதிர்பார்க்காமல்…

“நீங்க போகலாம் மிஸ்டர். சமுத்திரன்” என்றாள்.

பத்மநாதன் விந்தியாவை அடுத்தச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று சொல்ல

“விந்தியா... விந்தியா” என்று அழைக்க விந்தியா வந்து எதிரே நின்றாள்.

“நீங்கதான் மிஸஸ். விந்தியா ஆதித்தியாவா?” என்று பத்மநாதன் கேட்க விந்தியா எதிரே நின்றிருந்த ஆதியை பார்த்தாள். ஆதித்தியா முதல் நாள் இரவில் அவளிடம் சொன்ன வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது.

‘அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நீ விந்தியா ஆதித்தியா என்ற அடையாளத்தை மாற்ற முடியாது‘ என்று சொன்னதும் இருவரின் நினைவிலும் மின்னலடித்து மறைந்தது.

இந்த நொடி நேர ஞாபகங்களைக் கடந்து, “ஆமாம் “என்று பதில் உரைத்தாள் விந்தியா.

“நீங்கதான் ஹோட்டல் ஆதித்தியாவை நிர்வாகம் பண்ணிட்டிருக்கீங்களா?”

“பண்ணிட்டிருந்தேன்... இப்போ இல்லை...” என்றாள்.

“அப்படின்னா... இப்போ நிர்வாகம் யாரு கையில் இருக்கு?”

“என் கணவர் கிட்ட” என்று சொன்னதும் ஆதித்தியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“சரி... அது போகட்டும்... நீங்கதானே அந்தச் சீசிடிவி ரெக்கார்ட்டிங்கை பேக்கப் எடுத்து இன்ஸ்பெக்டர் சிவாவிடம் கொடுத்தது?”

“ஆமாம்”

“அது உங்க கணவருக்கு எதிரான ஆதாரம்னு தெரிஞ்சும் கொடுத்தீங்களா?”

“தெரியும்”

“கணவனே ஆனாலும் அவருடைய தப்புக்கான தண்டனை கிடைக்கணும்னு நினைக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்”

“நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க... என் கணவர் தப்பு செய்யலனு நான் நம்பினதினால் கொடுத்தேன்”

“புரியலயே மிஸஸ். விந்தியா “

“தப்பு செய்றவங்கதானே ஆதாரத்தை மறைக்கணும்... அந்த அவசியம் எங்களுக்கு இல்லை”

“கரெக்டான பாயின்ட்... இந்த ஆதாரம் பத்து மாதத்திற்கு முன்னாடி போலிஸ் கையில் கிடைச்சிருந்தா இந்த வழக்கில் தீர்ப்பே வந்திருக்கும்... ஆனா ஆதித்தியா ஆதாரத்தை போலீஸ்கிட்ட இருந்து புத்திசாலித்தனமா மறைச்சிருக்கார்...”

“ஆதித்தியா மறைக்கல”

“அப்போ வேற யார்?”

“சமுத்திரன்”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

“ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் சொன்னாரு”

“சரி... அது போகட்டும். உங்க கணவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததா?”

“பல பெண்களோடு அவர் இயல்பா சிரிச்சு பேசி பழகுறதையும், இவர்கிட்ட எல்லாப் பெண்களும் இயல்பா பழகுறதையும் பலர் தப்பா புரிஞ்சிட்டிருக்காங்க”

“அப்படின்னா அவரு கரைப்படாத கணவன்னு சொல்றீங்க” என்று கேலியான தொனியில் கேட்டார் பத்மநாதன்.

“நோ டெளட்... ஆதித்தியா என்னுடைய இடத்தில் வேறு பெண்ணை வைச்சு பார்த்ததுமில்லை... இனி பார்க்கவும் மாட்டார்... ஹி இஸ் எ பெர்ஃக்ட் ஜென்டில்மேன்”

ஆதித்தியா அப்படியே திகைத்து போய் நின்றான். யாருமே அவனை இத்தனை துள்ளியமாய் கணித்திருக்க முடியாது. தன்னைத் தானே அவன் கரைபடிந்தவனாய் காட்டிக் கொள்ளவதெல்லாம் அவன் தந்தையை வேதனைப்படுத்த… அவன் மீதான அவளின் புரிதல் ஆதித்தியாவிற்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

“அப்போ கேத்ரீனை உங்க கணவர் பலவந்தபடுத்தல? “

“நான் இவ்வளவு நேரம் சொன்னது உங்களுக்குப் புரியல... என் கணவர் எந்த காரணத்தைக் கொண்டும்... எந்தப் பெண்ணையும் விருப்பமில்லாமல் பலவந்தப்படுத்தும் ஈனத்தனமான காரியத்தை செய்யவே மாட்டார்”என்று அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல ஆதித்தியாவிற்கு உள்ளூர குத்தியது.

“கணவர் என்கிற காரணத்துக்காக நீங்க விட்டுக்கொடுக்காம பேசிறீங்க” என்றார் பத்மநாதன்.

விந்தியா லேசாகச் சிரித்து விட்டு, “நான் பொய் சொல்லித்தான் என் கணவரை காப்பாத்தணும்னா அந்த சீடி ஆதாரத்தை போலிஸ் கிட்ட கொடுக்காமலே இருந்திருப்பேனே” என்று அவள் மடக்கி கேட்ட கேள்விக்குப் பத்மநாதனால் பதில் சொல்ல முடியவில்லை.

“தட்ஸ் ஆல் யுர் ஆனர்” என்று சொல்லி முடித்தார்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா