மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 44Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 44

Quote from monisha on September 19, 2025, 11:10 AM

44

பொய்மையும் வாய்மையிடத்து

“சில வருடங்களுக்கு முன்பு கேத்ரீன் உங்க ஆசிரமத்தில் ஒரு பிறந்த குழந்தையை சேர்த்தது உண்மைதானே?”

“ஆமாம்...”

“அந்த குழந்தையோட பெயர்? “

“சோபியா வேலட்டீனா”

“இந்தப் பெயரை கேத்ரீனே அந்தக் குழந்தைக்கு வைச்சாங்களோ?”

“ஆமாம்”

உடனே சுபா நீதிபதியின் பக்கம் திரும்பி, “நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். சோஃபியா என்பது கேத்ரீனின் அம்மாவின் பெயர்… அதே போல வேலட்டீனா என்பது கேத்ரீனோட கடைசிப் பாதிப் பெயர்” என்று சொன்னாள்.

மீண்டும் ஃபாதரின் பக்கம் திரும்பி கேள்விகளைத் தொடர்ந்தாள்.

“ஃபாதர்... அந்த குழந்தையின் மீது கேத்ரீனுக்கு தனிப்பட்ட முறையில் பிரியம்... இல்லையா?”

“ஆமாம்... அந்தக் குழந்தைக்கான செலவுகளையெல்லாம் தானே தனிப்பட்ட முறையில் பாத்துப்பாத்து கவனிச்சிக்கிட்டாங்க”

“அந்தக் குழந்தையின் மீது கேத்ரீனுக்கு அப்படி என்ன பிரியம்?”

“அது எனக்குத் தெரியாது... என் வாழ்க்கையை மாற்றியது அந்தக் குழந்தைதான்னு கேத்ரீன் அடிக்கடி சொல்லுவாங்க... அதுவும் இல்லாம அந்தக் குழந்தையைப் பார்க்க கேத்ரீன் வாரத்துக்கு ஒரு முறையாவது மறக்காம வந்துட்டு போவாங்க”

“அந்தக் குழந்தையை நாங்க இப்போ பார்க்கலாமா?” என்று சுபா கேட்க… ஃபாதர் தலையாட்டி விட்டு அந்த அழகான பெண் குழந்தையைத் தூக்கி கொண்டு வந்து கூண்டில் நின்றார்.

சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “இந்த சோஃபியா வேலட்டீனா என்ற சின்னக் குழந்தை கேத்ரீன் வளர்ப்பில் பல ஆதரவற்ற குழந்தைகளில் ஒன்றல்ல... அவள் வாழ்கையில் நடந்த மோசமான சம்பவத்தின் அடையாளம்.

சமுதாயத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பெண் துணை யாருமில்லாமல் ஒரு குழந்தையைத் தன்னுடையது என்று எப்படி அடையாளம் காட்ட முடியும்? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் கேத்ரீன் சிக்கிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய தாயின் பெயரைக் கொடுக்க முடிந்த அவளால் தன்னுடைய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அவளுடைய சொத்தில் சில பங்குகளை அந்தக் குழந்தையின் மீது எழுதி வைத்திருக்கிறாள்” என்று சொல்லி ஒரு பத்திரத்தை நீதிபதியிடம் கொடுத்தாள்.

“இந்தப் பெண் குழந்தை கேத்ரீனின் மகள்தான் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?”

நீதிபதி உட்பட எல்லோரும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க மனோஜின் முகம் வியர்த்துக் கொட்டியது. சமுத்திரனோ குறுக்கே எந்த விசாரணையும் செய்யாமல் அமைதியாக இருந்தான். அங்கேதான் சுபாவின் தந்திரம் வேலை செய்தது. சுபா இப்போது மனோஜை நெருங்கி வந்தாள்.

“என்ன மனோஜ்... அந்தக் குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?”

“இல்ல தெரியல”

“உங்க குழந்தையே உங்களுக்கு அடையாளம் தெரியல?”

“இல்ல... அது என் குழந்தை இல்ல”

“அந்தக் குழந்தை கேத்ரீனோடது... அப்போ அது உங்க குழந்தைதானே”

“நான்தான் எந்த தப்பும் செய்யலயே... அப்புறம் எப்படி அது என் குழந்தையாகும்?”

“கரெக்ட்... அப்படின்னா அந்தக் குழந்தை ஆதித்தியா உடையதா?”

“இருக்கலாம்”

“இப்ப வரைக்கும் ஆதித்தியாதான் தப்பு செஞ்சிருப்பார்னு அழுத்தம் திருத்தமா சொன்னீங்க...”

“அது... இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லும் போதே நாக்குழறியது.

“நீங்க ஏன் பதறீங்க மனோஜ்? டி என் ஏ டெஸ்ட் எடுத்தா தெரிந்துவிடப் போகுது”

இதைக் கேட்டதும் மனோஜுக்குப் பதட்டம் அதிகரிக்க… சுபா சமுத்திரனின் பக்கம் திரும்பி, “டி. என். ஏ டெஸ்ட் எடுக்க என் கட்சிக்காரர் ஆதித்தியாவிற்கு எந்த வித தயக்கமும் இல்ல... அதே போல் உங்க கட்சிக்காரர் மனோஜுக்கும் சம்மதம்தானே?”

சமுத்திரன் எழுந்து தயக்கமில்லாமல், “சம்மதம்” என்றான். அப்போது சமுத்திரனின் மனநிலை வேறொரு குழப்பத்தில் இருந்தது.

சுபா மனோஜின் புறம் திரும்பி, “உங்க வக்கீலே சொல்லிட்டாரு… இனிமே நீதிபதி அனுமதி கொடுக்க வேண்டியதுதான் பாக்கி... நீங்க கேத்ரீனை காதலித்தேன் என்று சொன்ன அப்பட்டமான பொய் முதல் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும்.

அப்புறம் கேத்ரீனின் தற்கொலைக்கு நீங்கதான் காரணம்னு எந்த வித சந்தேகமும் இல்லாம நிரூபணம் ஆகிவிடும்... இனிமே எந்த பொய்யும் உங்களைக் காப்பாற்ற போவதில்லை” என்றாள்.

“என் வக்கீல் சொல்றார் என்பதுக்காக எல்லாம் டி. என். ஏ டெஸ்ட்டுக்கு என்னால ஒத்துக்க முடியாது”

“ஏன் ஒத்துக்க முடியாது? உங்க பயமே சொல்லுது... நீங்க கேத்ரீன் வாழ்கையைக் கெடுத்திருக்கீங்க. அந்த உண்மையை கேத்ரீன் கிட்ட சொல்லி அவளை வேதனை படுத்தி இருக்கீங்க... தற்கொலைக்கும் தூண்டி இருக்கீங்க... இந்த டி. என். ஏ டெஸ்ட்டில் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடுமோனு பயப்படுறீங்க...”

“நான் பயப்படல… கேத்ரீனோட இறப்புக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை”

“பொய் சொல்லாதீங்க மனோஜ்... கேத்ரீனோட வாழ்க்கையைக் கெடுத்தது நீங்கனு நிரூபணமானதும் கேத்ரீனோட தற்கொலைக்கும் நீங்கதான் காரணம்னு தெரிந்துவிடும்”

“ஸ்டாப் இட்... நான் அன்னைக்கு தப்பு செய்தேன்... ஆனா கேத்ரீனோட இறப்புக்கு நான் காரணமில்லை” என்று மனோஜ் உரக்கச் சொல்ல… சுபா அமைதியாய் நிற்க… அந்த இடமே நிசப்தமாய் மாறியது.

பிறகு சுபா அங்கே இருந்த நிசப்தத்தைக் கலைத்தாள்.

“அப்படின்னா கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவளைக் கெடுத்தது நீங்கதான் இல்லையா?”

மனோஜ் தான் என்ன சொல்லிவிட்டோம் என உணர… சில நேரம் அமைதியானான்.

“பதில் சொல்லுங்க மனோஜ்... இனிமே மறைக்க என்ன இருக்கு? கேத்ரீன் தற்கொலைக்கும் நீங்கதான் காரணம்னு ஒத்துக்கோங்க”

“இல்ல நான் ஒத்துக்க மாட்டேன்... கேத்ரீன் தற்கொலையே பண்ணிக்காத போது நான் எப்படி அதுக்குக் காரணமா இருக்க முடியும்?” என்று மனோஜ் உளற சமுத்திரன் எழுந்து நின்று கொண்டான்.

“அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்... என் கட்சிக்காரரை எதிர்க்கட்சி வக்கீல் குழப்பிக் கொண்டிருக்கிறார்”

நீதிபதி உடனே, “வழக்கு இப்பதான் தெளிவான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது... நீங்க கொஞ்ச நேரம் அமைதியாய் உட்காருங்க சமுத்திரன்” என்று சொல்ல… சமுத்திரன் இயலாமையோடு அமர்ந்தான்.

சுபா மனோஜின் புறம் திரும்பினாள்.

“இனிமே பேசுவதற்கு எதுவுமில்லை மனோஜ்... நீங்கதான் கேத்ரீனின் தற்கொலைக்கு காரணம்னு உங்க பயமே காட்டிக் கொடுத்திடுச்சு”

மனோஜ் மெளனமாய் நின்றான்.

“யுவர் ஆனர்... மனோஜின் மெளனமே கேத்ரீனின் தற்கொலைக்குக் காரணம்னு உங்களுக்குத் தெளிவா புரிஞ்சிருக்கும்... அதுவுமில்லாம கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவளைக் கற்பழித்த காரணத்திற்காக ஐ. பி. சி செக்ஷன் 375, அவளை தற்கொலைக்கு தூண்டியதற்காக ஐ. பீ. சி செக்ஷன் 306ன் கீழ் தண்டனை வழங்க வேண்டும்” என்று சுபா சொல்ல மனோஜின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

நிச்சயம் தன் தந்தை வித்யாதரன் தன்னைக் காப்பாற்ற மாட்டார்… அவருக்கு அவரின் அரசியல் வாழ்க்கையே முக்கியம் என்று தோன்ற அவனின் மெளனம் கலைந்தது.

“கேத்ரீன் தற்கொலை பண்ணிக்கிட்டாதானே... அதற்கு நான் காரணமா இருக்க முடியும்?”

சுபா அவன் புறம் திரும்பி, “அப்படின்னா கேத்ரீனை கொலை பண்ணிருக்காங்கனு சொல்ல வர்றீங்களா?”

“ஆமாம்” என்றான் மனோஜ்.

“நீங்க சொல்றது நம்பும்படி இல்லை... ஏன்னா ஆதித்தியாவே கேத்ரீன் தானே கீழே விழுந்ததைப் பார்த்திருக்கார்”

“கேத்ரீன் தானா விழல... அதுதான் சமுத்திரனோட புத்திசாலித்தனம்” என்றான்.

சமுத்திரன் எழுந்து, “மனோஜ் சொல்வதெல்லாம் பொய்” என்றான்.

நீதிபதி “இத பாருங்க சமுத்திரன்... இப்படி எல்லாம் விசாரணையின் போது குறுக்கிடக்கூடாது... நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்களோ அதை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லலாம்” என்றார்.

சுபா மனோஜை பார்த்து, “சமுத்திரன் பெரிய கிரிமினல் லாயர்... கொலை எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்ல”

“பணத்துக்காக சமுத்திரன் எதையும் செய்வார்”

“நிறுத்துங்க மிஸ்டர். மனோஜ்... அவர் கிட்ட இல்லாத பணமா?”

“ஆமாம்... அவர் கிட்ட இல்லாத பணம்தான்... கோடிக்கணக்கில் எங்கப்பா பணம் கொடுக்கும் போது அவர் கொலையும் செய்வார்... அதுக்கு மேலயும் செய்வார்” என்று மனோஜ் சொல்லி முடிக்க சுபா பெருமூச்சிவிட்டாள்.

“உங்க அப்பான்னா... மினிஸ்டர் வித்யாதரனா?”

சுபா மனோஜிடம் கேட்க, அதற்குள் மனோஜின் மீது குறி பார்த்த துப்பாக்கியை ஆதித்தியா கவனித்தான்.

மனோஜின் கூண்டிற்கு அருகில் நின்றிருந்த ஆதித்தியா, “மனோஜ்” என்று கத்தி தள்ளிவிடத் துப்பாக்கி குண்டு ஆதித்தியாவின் வலது கையின் தோள்பட்டையைத் துளைத்து ரத்தம் சிதறியது.

எல்லோருமே சிலைப் போல் உறைந்து போக, சிவா தன் துப்பாகியை எடுத்து அந்த மர்ம நபரை ஒரே நொடியில் துப்பாக்கியால் சுட்டு ஒட விடாமல் செய்தான்.

அங்கே நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கீழே நிலைதடுமாறி விழுந்த ஆதித்தியாவை சுபா தாங்கிக் கொள்ள, விந்தியா கண்ணீரோடு அருகில் ஓடி வந்தாள்.

ஆதித்தியா அந்த வலி வேதனையிலும், “எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக்கூடாது” என்று சொன்ன ஆதித்தியா… சுபாவிடம் ஷபானாவை காண்பித்து ஏதோ சொன்னான்.

சிலமணி நேரங்களில் ஆம்புலன்ஸ் வர ஆதித்தியாவை அழைத்துச் செல்ல பெரும் வேதனையைச் சுமந்தபடி விந்தியாவும் அவனுடன் சென்றாள். மனோஜிற்கு நடந்தவை எல்லாம் கனவா நினைவா என்று புரியாமல் நின்றிருந்தான்.

நீதிமன்றத்தில் எல்லாம் பழைய நிலைக்கு திரும்ப… நீதிபதி, “நீதிமன்ற வளாகத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது அவமானத்திற்குரிய ஒன்றாகும். இதைப் பற்றி விசாரணை நடத்தி காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிடுகிறேன்.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மனோஜ் சமுத்திரன் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் விசாரணையை இப்போதைக்குத் தொடர முடியாத காரணத்தால் நாளை ஒத்திவைக்கிறேன்” என்றார்.

சிலையென அமர்ந்திருந்த சுபா எழுந்து நின்று கண்களைத் துடைத்தபடி, “இந்த வழக்கின் விசாரணையை இப்போதே நடத்தி முடிக்காமல் போனால், நாளை பெரிய பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எல்லாமே தலை கீழாய் மாறிப் போகலாம். யுவர் ஆனர்” என்றாள்.

“ஏற்கனவே கால தாமதம் ஆகி விட்ட காரணத்தினால் இப்போதைக்கு இந்த வழக்கின் விசாரணையைத் தொடர முடியாது” என்று திருத்தமாய்ச் சொல்லிவிட்டு நீதிபதி எழுந்து கொள்ள…

சுபா மேலும், “உங்களை மறுத்து பேசுவதற்காக மன்னிக்கணும் யுவர் ஆனர்... ' ஜஸ்டிஸ் டிலேட் இஸ் ஜஸ்டிஸ் டினைட்' என்ற ஒரு வாக்கியம் உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.

ஏற்கனவே இந்த வழக்கிற்கு வழங்கப்பட வேண்டிய நீதி ரொம்பவும் கால தாமதமாகவிட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்கள் ஒத்தி வைக்கப்படுவது சரயில்லை...

உண்மையை இன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியாமல் போனால் அது மீண்டும் இருளிலேயே சென்று மறைந்துவிடலாம்... அதுவும் இல்லாமல் நாளை யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் இல்லை...

என் உயிரை பற்றி கவலையில்லை... ஆனால் நீதியும் அதை நிலைநாட்டும் நம் சட்டமும் பொய்த்து விடக்கூடாது... அதனால் இன்றே இப்பொழுதே இந்த வழக்கின் விசாரணையைத் தொடர வேண்டும் யுவர் ஆனர்” என்று அவள் அதிகார தொனியில் உரைத்தது பார்ப்பவர்கள் எல்லோரையுமே கதிகலங்கச் செய்தது.

அவளின் வாதத்தையும் தைரியத்தையும் கண்டு சமுத்திரனே மிரண்டு போனான். அவன் இத்தனை வருடமாய் பார்த்த சுபா அவள்தானா என்ற சந்தேகம் எழுந்தது.

அது கோர்ட்டாக மட்டும் இல்லாமல் இருந்தால் சிவா கைகளைத் தட்டி ஆரவாரித்திருப்பான். பத்திரிக்கை நண்பர்கள் அந்த வழக்கை பற்றிய செய்திகளைச் சேகரிக்காமல் மெய்மறந்து அமர்ந்திருந்தனர். இவற்றை எல்லாம் ஒரு புறமிருக்க நீதிபதி பதில் பேசாமல் அப்படியே தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

“சரி... இந்த வழக்கின் விசாரணையை இப்போதே தொடரலாம்“ என்றார்.

சுபா மனோஜின் புறம் திரும்பி, “இன்று உங்க உயிரை ஆதித்தியா காப்பாத்தி இருக்கலாம்... ஆனா இதுக்கப்புறம் இதே போல் சம்பவம் நடக்காதுனு உத்திரவாதம் கொடுக்க முடியாது. இதற்கெல்லாம் யார் காரணம்னு நீங்க இப்பையாவது வெளிப்படையா சொல்லுங்க” என்றாள்.

மனோஜின் மனம் வெகுவாக மாறி இருந்தது

“நான் இப்போ சொல்ல போறது மறைக்கபட்ட உண்மை... திட்டமிட்டு நடந்த இந்தக் கொலையில் என்னோட பங்கும் இருக்கு... கேத்ரீன் இறப்புக்கு முன்னாடி அன்று இரவு நான் அவளைச் சந்திச்சேன்...

நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தை நான் கேத்ரீனுக்கு ஞாபகபடுத்தினேன்... அன்று நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான் சொன்னேன்... நான் நினைச்ச மாதிரி அவளைப் பழிவாங்கிட்டேன்னு சொன்ன போது கேத்ரீன் நிலைகுலைந்து போனா...

ஷீ வாஸ் ஆல்மோஸ்ட் டிப்பிரஸ்ட்... அவளோட மனதைரியம் எல்லாம் உடைஞ்சு போயிருந்தது... வரைமுறை இல்லாம கேத்ரீன் குடிக்க ஆரம்பிச்சா...

அங்கதான் சமுத்திரனோட மாஸ்டர் பிளான் இருந்துச்சு... போதையில் நிலை தடுமாறி ஹோட்டல் அறைக்குள் போன கேத்ரீனை தள்ளிவிடணும் என்பதுதான் அவனோட நோக்கம்... அந்த மாஸ்டர் பிளானோட மாஸ்டர் மைன்ட் எங்க அப்பா மினிஸ்டர் வித்யாதரன்” என்றான்.

சுபா நீதிபதியிடம் திரும்பி, “மனோஜ் சொன்னதைத் தாண்டி இந்த வழக்கில் தெரிய வேண்டியதும் சொல்ல வேண்டியதும் நிறைய இருக்கு யுவர் ஆனர்... ஆனால் அதுக்கு முன்னாடி இங்க ஒரு உண்மையை சொல்லியே ஆகணும். அதாவது சோஃபியா வேலட்டீனா கேத்ரீனின் மகள் இல்லை” என்றதும் மனோஜ் அதிர்ச்சியானான். நீதிபதியும் கிட்டதட்ட குழப்பமடைந்தார்.

சுபா மேலும் தொடர்ந்தாள்.

“அந்தப் பெண் குழந்தை கேத்ரனாவுடையது இல்லைதான். ஆனால் அந்தக் குழந்தை மனோஜ் ஏமாற்றிய பல பெண்களில் ஒருவரான ஜெனிதாவினுடையது... அவள் கேத்ரீனின் கல்லூரி தோழி.

அந்தப் பெண்ணின் மீது இரக்கப்பட்டு கேத்ரீன் அடைக்கலம் கொடுத்தாள். அந்தக் குழந்தை கேத்ரீன் ஆதித்தியாவை பிரிந்த பிறகு ஏற்பட்ட தனிமையின் போது, தாயினை இழந்து அநாதரவாய் பிறந்ததினாலோ என்னவோ அந்தக் குழந்தையின் மீது கேத்ரீனுக்குத் தனிப்பட்ட அன்பும் பிரியமும் ஏற்பட்டது.

கேத்ரீன் அந்தக் குழந்தையைத் தன் சொந்த குழந்தையாகவே பாவித்தாள். அந்த அன்புதான் கேத்ரீனின் மரணத்தின் பெரிய புதிருக்கு விடையாய் மாறி இருக்கிறது. நீதிமன்றத்தில் இத்தனை பெரிய பொய்யை சொன்னது சில உண்மையை வெளிக்கொணர்வதற்கே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது தவறென்னும் பட்சத்தில் நான் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்”

இதைக் கேட்ட சமுத்திரனுக்குக் கோபம் வர… அவன், “நீதிமன்றத்தில் பொய்களைச் சொல்லி எதிர்க்கட்சி வக்கீல் ஏமாற்றி இருக்கிறார். இதைப் போன்ற கட்டுக்கதைகளைச் சொல்லி இந்த வழக்கில் என்னையும் சிக்க வைக்கப் பார்க்கிறார்”

“இத பாருங்க சமுத்திரன்... நீங்கள் ஒரு கொலை குற்றவாளி. என்னை கேள்வி கேட்க எந்த வித தகுதியும் உங்களுக்கு இனி இல்லை” என்றாள் சுபா.

“அந்த மனோஜ் உணர்ச்சிவசப்பட்டு உளறுவதால் நான் குற்றவாளி என்று ஆகி விடாது” என்று சமுத்திரன் சொல்ல நீதிபதி அவனுக்குப் பதில் உரைத்தார்.

“இத பாருங்க சமுத்திரன்... நிதானமாய் யோசித்துச் சொல்வதுதான் பொய். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது பல நேரங்களில் உண்மைதான் வெளிவரும். உங்கள் மீது விழுந்த கொலை பழிக்கு விளக்கமளிக்க வேண்டுமென்றால் கூண்டில் ஏறிதான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றதும் சமுத்திரனின் முகம் சிறுத்துப் போனது.

நீதிபதி சுபாவை பார்த்து, “நீங்கள் பொய் சொன்னாலும் அது மனோஜிடமிருந்த உண்மையை வரவழைக்க நீங்கள் செய்த யுக்தி என்பதினால் அதை இந்த நீதிமன்றம் வரவேற்கிறது” என்றார்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா