மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 45Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 45

Quote from monisha on September 22, 2025, 12:11 PM

45

உண்மையின் பலம்

சுபாவின் யுக்தியை நீதிபதி பாராட்டியதிற்காக அவள் நன்றி உரைத்தாள்

“தேங்க் யூ யுவர் ஆனர். இனி இந்த வழக்கில் தெரிய போகும் உண்மைகள் அனைத்தும் பெரும் அதிர்வை ஏற்படுத்தப் போகின்றன.

இங்கே கூண்டில் நிற்கும் சமுத்திரன் சட்டம் படித்துவிட்டு, அந்த சட்டத்தைத் தான் நினைத்தபடி எல்லாம் வளைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார். அது முற்றிலும் தவறு என்று அவருக்கு இப்பொழுது புரிந்திருக்கும்”

“நான் எந்த கொலையும் செய்யவில்லை”

“கவலைப்படாதீங்க சமுத்திரன். நீங்க எப்படிக் கொலை செய்தீங்க... அதன் பிண்ணனி என்னன்னு இன்ஸ்பெக்டர் சிவா உங்களுக்கு விளக்கமா சொல்வார்” என்றார்.

நீதிபதி, “இன்ஸ்பெக்டர் சிவாவா?”

“ஆமாம் யுவர் ஆனர்... இன்ஸ்பெக்டர் சிவாதான் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டறிய உதவியவர். சமுத்திரன் புத்திசாலிதனமாய் திட்டமிட்டு காவல்துறையை ஏமாற்றி கேத்ரீனின் இறப்பை விபத்து என நம்பும்படி செய்த திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். வல்லவனுக்கும் வல்லவன் இந்த வையகத்தில் உண்டு. இன்ஸ்பெக்டர் சிவா இந்த வழக்கில் திறமையோடு செயல்பட்டு சமுத்திரன் புத்திசாலித்தனமாய் மறைத்த குற்றத்தை இங்கே ஆதாரத்தோடு நிருபிக்க இருக்கிறார்”

சிவா நீதிபதி தலையசைப்புக்கு ஏற்ப கூண்டில் ஏறி நின்றான். “இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே எனக்கு ரொம்ப பெரிய சவால். சுழலில் மாட்டின மாதிரி கடைசி வரை குழப்பமாய் இருந்தது. சமுத்திரனின் இந்த கொலைக்கான திட்டமிடலை யாராலும் அத்தனை சீக்கிரத்தில் கணிக்கவும் முடியாது. அத்தனை தெளிவான க்ளீன் பிளான்.

எந்த இடத்திலும் எந்த வித ஆதாரத்தையும் விட்டு வைக்காத திறமையான எக்ஸீக்யூஷன். கேத்ரீனை கொலை பண்ண அவளைக் குடிக்க வைக்கணும் என்ற அவனுடைய திட்டத்திற்காக மனோஜை கரெக்டா யூஸ் பண்ணி இருக்கான்.

அத்தனை சீக்கிரத்தில் ஹோட்டல் ஆதித்தியாவின் செக்யூரிட்டியை மீறி ஒரு கொலையை சாதாரண ஆளால் செய்ய முடியாது. அது அந்த ஹோட்டல் ஆதித்தியாவின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் தெரிந்தவனால்தான் முடியும். அப்படித் தெரிந்தவர்களில் சமுத்திரனும் ஒருவன்.

ஹோட்டல் ஆதித்தியாவில் வேறு ஒரு பெயரில் தன் முகமே தெரியாதது போல மாறு வேடமணிந்து ரூம் நம்பர். 606ல் மிஸ்டர். சமுத்திரன் ஆல்பர்ட் என்ற பெயரில் தங்கியிருக்கிறார்.

கொலை நடந்த இரவு அந்த அறைக்குப் பின் பக்கம் இருக்கிற பால்கானி வழியா பைப் லைன் மூலமா கேத்ரீன் தங்கியிருந்த ரூம் நம்பர். 603 பால்கனியில் இறங்கியிருக்கிறார். கேத்ரீன் தங்கியிருந்த நாட்களில் அவளை நல்லாவே நோட்டமிட்டிருக்கிறார்.

எந்நேரமானாலும் கேத்ரீன் அந்த பால்கனி கதவை திறந்து வெளியே வேடிக்கை பார்க்கிற வழக்கத்தை  தனக்கு சாதகமா பயன்படுத்திக்கப் பாத்திருக்காரு. எல்லாமே சமுத்திரனின் திட்டபடி ரொம்ப சரியா நடந்துச்சு.

கேத்ரீன் அன்னைக்கு ஆதித்தியாவை சந்திச்சிருந்தா இவங்க திட்டமெல்லாம் சுக்குநூறாய்ப் போயிருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாய் அது அப்படி நடக்கல. கேத்ரீனை பால்கனியில் இருந்து கீழே தள்ளிட்டு அவள் குடிபோதையில் தவறி விழுந்துட்டானு ரொம்ப நேர்த்தியா திட்டத்தைத் தீட்டியிருக்கார்.

என்னதான் அறைக்குள் இருள் இருந்தாலும் பால்கனியின் வழியே ஆட்களின் நடமாட்டமும் அலங்கார விளக்குகள் பிரகாசமாய் இருந்துச்சு. பால்கனிக்கு கைபிடி கம்பிகளை நெருங்கி நடந்து வரும் வழியில் ஏதோ ஒரு கண்களுக்கு புலப்படாத தடுப்பை உருவாக்கி இருக்கிறார் அது கயிறு போன்ற ஏதாவதாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

அவள் போதையில் இருப்பதால் நிச்சயம் அந்தத் தடுப்பை அவளால் கவனிக்க முடியாது. கேத்ரீன் பால்கனி கதவை திறக்கவும் சமுத்திரன் கதவின் இடுக்கில் ஒளிஞ்சிட்டிருக்கணும். அவள் அந்த கம்பிகளை நெருங்கி வர அவ கால்கள் தடுக்க முன் புறம் வழுக்கி கைப்பிடியை தாண்டி அவள் கீழே விழுந்திருக்கணும்.

அந்த நேரத்தில் அவள் விழுந்ததைப் பார்த்த பதட்டத்தில் ஆதித்தியா சமுத்திரனை பார்க்க வாய்ப்பில்லை. கேத்ரீன் விழுந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே இறங்கி அவளைக் காப்பாத்த ஓடி இருக்கிறார்.

அதுதான் சமயம்னு அந்த அறைக்குள் போய் கேத்ரீனிடம் இருந்த லாக்கர் சாவியைத் தேடி எடுத்திருக்கிறார். பெட்ரூமில் உள்ள ஜன்னலின் வழியா இறங்கி அந்த ஓரத்திலேயே நடந்து தன் அறைக்குள் போய் சேர்ந்திருக்க வேண்டும். இதை எல்லாம் செய்யப் பெரிய அசாத்தியமான தைரியம் வேணும்”

சமுத்திரன் சிரித்தபடி, “இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு சிவா... ஆனா இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான்தான் கொலை செய்தேன்னு வாயால் கதை அளப்பதை விடுத்து ஆதாரம் இருந்தா நிரூபிங்க...

அட்லீஸ்ட் ரூம் நம்பர் 606ல் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரம்... நிச்சயம் இருக்குமே... ஹோட்டல் ஆதித்தியாவின் சீசிடிவியில் பதிவாயிருக்குமே” என்று சிவாவை கேள்விகள் கேட்டு அதற்குப் பதிலும் சொன்னான் சமுத்திரன்.

நீதிபதி சிவாவை பார்த்து, “சமுத்திரன் சொன்ன மாதிரி நீங்க சொன்னவற்றிற்கு ஆதாரம் ஏதாவது இருக்கா சிவா?” என்றார்.

சிவா பதில் எதுவும் சொல்லாமல் சுபாவை பார்க்க, அவள் ஒரு சீடியை எடுத்து அதை பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.

அந்த வீடியோ பதிவில் அறை எண். 606ல் இருந்து வெளியே வந்த நபரின் முகம் ஓரிடத்தில் கூட தெளிவாகத் தெரியவில்லை.

நீதிபதி அந்த வீடியோவை பார்த்து, “அந்த நபர் சமுத்திரன்தான் நீங்க எப்படிச் சொல்றீங்க சிவா” என்று கேட்க…

உடனே சுபா, “இந்தக் கேள்விக்கு நான் சமுத்திரனின் மனைவியாய் சில கேள்விகளை அவரிடம் கேட்க ஆசைப்படுகிறேன் யுவர் ஆனர்” என்றாள்.

நீதிபதி, “அப்படின்னா நீங்க கூண்டில் ஏறி நின்றுதான் கேட்கணும் சுபா” என்றார்.

சுபா தன் கோர்ட்டை கழட்டி விட்டுக் கூண்டில் ஏறி சமுத்திரனின் நேரெதிர் நின்றாள்.

“ஹோட்டல் ஆதித்தியாவின் கண்காணிப்பு கேமிராவில் ரூம் நம்பர். 606ல் இருந்து வெளியே செல்லும் நபர் நீங்க இல்லையா?”

“நான் இல்லை” என்றான் அலட்சியமாக.

“நீங்க ரொம்ப புத்திசாலிதான்... ஆனா என்னை நீங்க முட்டாள்னு நினைச்சிட்டு இருக்கீங்க”

“நினைச்சிட்டு இல்லை... அதான் உண்மை... இல்லாட்டி போனா வேற எவனையோ பாத்து நான்னு கைகாட்டுவியா?”

“எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை… அது நீங்கதான்”

“அதெப்படி அவ்வளவு ஸ்டிராங்கா சொல்ற?”

“உங்க கையில் இருக்கிற வாட்ச்... நாம கல்யாண ஆன புதுசில் நான் உங்களுக்கு கிஃப்ட் பண்ண வாட்ச். அது என் ரேஞ்சுக்கு இல்லனு சொல்லி அந்த வாட்ச் எப்பவுமே நீங்க கட்டினதில்ல. முதன்முதலில் அந்த வீடியோவை சிவா என்கிட்ட காட்டின போதே நான் கவனிச்சது அந்த வாட்சைத்தான்...”

“வாட்ச்செல்லாம் அந்த வீடியோவில் தெரியுதா என்ன?”

“உண்மையைத் தெரிஞ்சிக்கப் பார்வையும் கொஞ்சம் கூர்மையா இருக்கணும்”

“என் கண்ணுக்கு எதுவும் தெரியலியே” என்றான்.

சுபா மீண்டும் அந்த வீடியோவை ஒட விட்டு அந்த வாட்ச்சை பெரிது பண்ணி காண்பித்தாள்.

“யுவர் ஆனர்... நான் அந்த மாதிரி வாட்ச் எல்லாம் கட்டவே மாட்டேன். அவங்க சொல்ற மாதிரியான வாட்ச் என்கிட்ட இல்லவே இல்லை. எல்லாமே பொய்... தேவையில்லாம என்னை மாட்டி விட இவங்க சதி பண்றாங்க” என்றான் சமுத்திரன்.

“பொய் சொல்லாதீங்க சமுத்திரன்... அந்த மாதிரி வாட்ச்சை நான் உங்களுக்கு வாங்கித் தரல”

“எத்தனை தடவை கேட்டாலும் இல்லை என்பதுதான் என்னோட பதில்”

“எத்தனை பெரிய புத்திசாலியும் ஒரிடத்தில் தப்பு பண்ணுவான்... அதுக்கு நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன? உங்க முன்னாடி இன்னொரு வீடியோவை நான் பிளே பண்ணி காட்டட்டுமா?” என்று சொல்லி வேறொரு சீசிடிவி பதிவை காண்பித்தாள்.

கேத்ரீன் மரணத்திற்கு பிறகு, அந்த மர்ம நபர் வெளியே செல்லவும் சமுத்திரன் உள்ளே வரும் காட்சி பதிவாகி இருந்தது. உற்றுக் கவனித்த போது அதில் சமுத்திரன் அதே வாட்ச்சை கையில் அணிந்து கொண்டிருந்தான்.

அந்த வீடியோவை பார்த்த மாத்திரத்தில் சமுத்திரனின் கண்கள் அகல விரிந்தன.

சுபா அவன் புறம் திரும்பி, “என்ன மிஸ்டர். சமுத்திரன்... உங்க வேஷத்தை கலைத்த நீங்க அந்த வாட்ச்சை கழட்டி வைக்க மறந்திட்டீங்களோ?” என்றாள் கிண்டலாக.

“இனியும் நீங்க சொல்ல பொய் ஏதாவது இருக்கா?” என்று சுபா சமுத்திரனை பார்த்து கேட்டாள். அவனின் கண்களில் கோபம் தெறித்தது.

“இன்னும் நான் உங்களைப் பத்தி சொல்றதுக்கு சில உண்மைகள் இருக்கு. அதுதான் உங்க பெயரில் வி. டி பில்டர்ஸ் மூலமா 50 கோடி மதிப்புள்ள சிங்கள் ஹவுஸ் ரெஜிஸ்டராகி இருக்கு... அதுவும் கேத்ரீன் மரணத்திற்குப் பிறகு. அதுக்கான மூலதனம் ஏதுன்னு இப்போ இந்த நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா?” என்று கேட்க அவன் திருதிருவென்று விழித்தான்.

சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “யுவர் ஆனர்... இதோ அந்த சொத்து சம்பந்தபட்ட பத்திரம்... மினிஸ்டர் வித்யாதரன் கேத்ரீனை கொல்ல சமுத்திரனுக்குக் கொடுத்த சன்மானம். இவ்வளவுதானா… இல்லை இன்னும் எத்தனை கோடி பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது என்பது நாம் அறியாத உண்மை... சமுத்திரன் ஆரம்பித்திலிருந்து பொய்யை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இந்தக் கொலையையும் செய்துவிட்டு ஆதித்தியாவின் மீது பழியும் போட்டார். அதுவுமில்லாமல் சம்பவம் நடந்த பிறகு ஆதித்தியா தலைமறைவாகி விட்டதாய் குற்றம் சாட்டினார். உண்மையிலேயே ஆதித்தியா தன் தோழியின் இறுதி சடங்கிற்காக கோவாவிற்கு சென்றிருந்தார் என்பதுதான் உண்மை.

ஆதித்தியாவின் மீதான குற்றம் முழுக்க முழுக்கப் பொய் என்பது தெளிவாகிவிட்டது. ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது கேத்ரீனை மினிஸ்டர் வித்யாதரன் திட்டமிட்டு கொலை செய்ததிற்கான காரணம் அறிந்து கொள்வது” என்றாள்.

நீதிபதி, “நீங்கள் குற்றம் சுமத்துறது மத்திய அமைச்சர் வித்யாதரன் மேல... அதுவும் கொலைப்பழி. கண்கொத்தி பாம்பாய் பாத்திட்டிருக்கப் பத்திரிக்கைகளின் மூலமாக மக்களுக்குப் போய் சென்றடையப் போகிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்... தெளிவான ஆதாரத்துடன் உங்கள் வாதத்தை எடுத்துரைக்க வேண்டியது ரொம்பவும் அவசியம் மிஸஸ். சுபா” என்றார்.

சுபா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“நேற்று வரை இந்த வழக்கின் உண்மை வெறும் வார்த்தை வடிவமாகவே இருந்தது... ஏன் நீதிமன்றம் வரும் வரை கூட எங்களிடம் மினிஸ்டர் வித்யாதரனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லை... இல்லைனு சொல்வதை விட அந்த ஆதாரங்கள் எல்லாம் மறைக்கப்பட்டது.

கேத்ரீனை கொலை செய்த சமுத்திரன் லாக்கர் சாவியைத் திருடி இருக்கிறார்... ஆனால் லாக்கரின் ரகசிய எண் தெரியாமல் அந்த லாக்கரின் உள்ளே இருந்த ஆதாரத்தை வித்யாதரனால் எடுக்க முடியாமல் இருந்தது. இன்ஸ்பெக்டர் சிவாவும் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவனும் இந்த வழக்கை தீவரமாய் விசாரிக்கத் தொடங்கினர்.

சிவா அந்த லாக்கர் எண்ணை ஆதித்தியாவின் பிறந்த நாள் என்று யூகித்த போது… அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் மினிஸ்டர் வித்யாதரனுக்கு உளவாளியாக வேலை பார்த்து, அந்த லாக்கரில் கேத்ரீன் வித்யாதரனுக்கு எதிராய் சேகரித்து வைத்திருந்த ஆதாரம் எல்லாவற்றையும் கைக்குக் கிடைக்காமல் செய்துவிட்டார்”

உடனே அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் எழுந்து, “இது பொய்” என்றார்.

“எது பொய்? உங்க மகளை வித்யா மெடிக்கல் காலேஜில் சேர்க்க நீங்க விலையாய்க் கொடுத்தது உங்க நேர்மையை... இல்லைனு சொல்லுங்க பார்க்கலாம்? மினிஸ்டர் வித்யாதரனின் பதவிக்காகவும் பணத்துக்காகவும் லாயரா இருந்துட்டு கொலை பன்றார் ஒருத்தர்... போலீஸ் அதிகாரியாய் இருந்துட்டு அந்தக் குற்றத்தை நீங்க மறைக்க முயற்சி செய்றீங்க.

இதை எல்லாம் பார்க்கும் போது சட்டத்தின் மீதான நம்பிக்கையே குறைஞ்சிட்டு வருது... உண்மையிலேயே அந்த மினிஸ்டர் மீதான குற்றத்தை நிருபித்தால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்குமா என்பது கூடச் சந்தேகம்தான்...” என்றாள் உணர்ச்சி வேகத்தில்.

நீதிபதி அவளைப் பார்த்து நிதானமாக, “உங்க கேள்வியும் சந்தேகமும் நியாயமனது... சிலர் செய்கிற தப்பினால் நம்முடைய சட்டங்கள் தப்பாகிடாது... நம்முடைய சட்டம் எல்லோருக்குமே பொதுவானது.

அதனால் நீங்க எந்தப் பயமும் இல்லாம மத்திய அமைச்சர் வித்தியாதரனுக்கு எதிரான ஆதரத்தை சமர்ப்பிக்கலாம். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு அந்தக் குற்றத்திற்குக் காரணமானவர் யாராயிருப்பினும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவருக்கான தண்டனை பாரபட்சமின்றி வழங்கப்படும்” என்றார்.

“இப்போதைக்கு நம்முடைய சட்டத்தை நம்புவதைத் தவிர்த்து எனக்கும் வேறு வழியில்லை யுவர் ஆனர்... இது வெறும் கேத்ரீனின் கொலை சம்பந்தபட்ட வழக்கு மட்டுமல்ல... நம் நாட்டு மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி சம்பந்தபட்டது... மது குடித்து விட்டு வீழ்ந்து கிடப்போர் மீது நாம் இரக்கப்படவும் கவலை கொள்ளவும் மாட்டோம்.

ஏன் உயிரே போனாலும் குடி போதை என்று கெட்ட பழக்கத்தினால் நடந்தது என நாம் சாதரணமாகக் கடந்து விடுவோம். ஆனால் அதுதான் அவர்களுக்கு சாதகமாய் அமைந்துவிட்டது.

எம். வி. டி லிக்கர் பாஃக்டரியில் இருந்து உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் கொல்லும் விஷம் என்று சொன்னால் நம்புவீர்களா? அரசாங்கத்தின் அங்கீகாரத்தோடு விற்கும் இந்த மதுபானம் போலியானது என்பதை கேத்ரீன் கண்டறிந்தாள்.

மதுபான உற்பத்தியில் எத்தனால்(Ethanol) பயன்படுத்துவதுதான் முறை. ஆனால் எம். வி. டி லிக்கர் பாஃக்டிரியில் மெத்தனால் (Methanol) பயன்படுத்தபடுகிறது. இரண்டுமே ஒரே மாதிரியான போதையை ஏற்படுத்தினாலும் மெத்தனால் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதை அருந்துகின்ற அடித்தட்ட மக்களுக்குத் தெரியாது, அவர்கள் உட்கொள்வது கிட்டதிட்ட விஷத்திற்கு நிகரான மெத்தனால் என்று.

மலிவாய் உற்பத்தி செய்யபட்டு அதனைப் பெருமளவு லாபத்தில் விற்று அந்தக் கோடிக்கணகான பணத்தைத் தன்னுடைய அரசியல் சாம்ராஜ்யத்தின் அடித்தளமாய்க் கொண்டிருக்கிறார் மிஸ்டர். வித்யாதரன். இதுவரை மக்களின் பொருளாதாரம் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவர்களின் ஆரோக்கியமும் சேர்த்து சுரண்டப்படுகிறது.

இதைப்போன்ற அரசியல்வாதிகளாலும் விழிப்புணர்வில்லாத மக்களாலும் பல நாடுகளில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் எனத் தடை செய்யபட்ட உணவுப் பொருட்கள் பகிரங்கமாய் நம் நாட்டில் விற்கப்படுகிற அவலம். அமிலத்திற்கு நிகரான குளிர்பானங்கள் கூட அங்கீகாரத்தோடு விற்கப்படுகின்றன. குப்பை என்று வீசப்பட வேண்டிய பொருட்கள் எல்லாம் விற்பனைக்கூடத்தில் இருக்கின்றன.

இதுதான் மக்களுக்காக நடைபெறும் மக்களாட்சியா? இன்றைய காலகட்டத்தில் பணமும் பதவியும் பிரதானமாய் இருக்கும் நிலையில் இதைக் கேள்வி கேட்போரோ தட்டி கேட்போரோ யாருமில்லை. ஆனால் கேத்ரீன் தன் கண்முன்னாடி நிகழ்ந்த கொண்டிருந்த குற்றத்திற்காக ஒற்றைக் குரலில் துணையின்றிப் போராடினாள்.

அவளின் நியாயமான எண்ணம் அந்த எம். வி. டி லிக்கர் பாஃக்டரியை மூட வேண்டும், அதில் உற்பத்தியாகும் பானங்கள் தடை செய்யப்பட வேண்டும்… இவை எல்லாவற்றிற்கும் காரணமான மினிஸ்டர் வித்யதரனின் பதவி பறிக்கபட்டு, அரசியல் வாழ்க்கை முடக்கப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் அவளின் உயிர் உள்ளவரை அவளின் எண்ணம் எதுவும் ஈடேறவில்லை. வித்யாதரன் தன்னுடைய அரசியல் பின்புலத்தாலும் அதிகார பலத்தைக் கொண்டும் கேத்ரீனின் எல்லா முயற்சிகளையும் தோற்கடித்தார்.

ஆனால் உண்மையின் பலம் கேத்ரீன் இறந்த பின்பும் அவள் வித்யாதரனுக்கு எதிராய் தன் லேப்டாப்பில் சேகரித்த ஆதாரங்கள் இன்று அவரின் விதியை தீர்மானிக்கப் போகிறது” என்று சுபா கோபத்தோடும் வேதனையோடும் உரைக்க எல்லோருடைய பார்வையும் அவள் மீதே லயித்திருந்தது.

சுபா முச்சு வாங்கி நிற்க ஷாபானா அந்த லேப்டாப்பை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாள். அதன் பாஸ்வார்ட் ‘வேலட்டீனா 25’ என்று ஆதித்தியா நீதிமன்ற வாசலில் நின்றிருந்த போது முயற்சி செய்து திறந்து பார்த்தான். ஏற்கனவே கேத்ரீனின் லேப்டாப்பை ஆதித்தியா பலமுறை உபயோகப்படுத்தி இருந்ததினால் அவனின் கணிப்புச் சரியாக இருந்தது.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா