மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 2Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 2

Quote from monisha on October 16, 2025, 8:41 PM

அத்தியாயம் – 2

‘வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை’

ரஞ்சனால் உறங்க முடியவில்லை. ஒரு பொட்டு தூக்கம் கூட வரவில்லை. இதில் அஜய் பேசியது வேறு மண்டைக்குள் குடைந்தது என்றால், அந்தப் பாடல் ஒருபக்கம் அவன் காதிற்குள் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

கவிதா எங்கேயோ வெளிநாட்டில் இருக்கிறாள் என்று மட்டும் தெரியும். மற்றபடி எங்கே, என்ன செய்கிறாள் என்பன போன்ற எந்தத் தகவலும் தெரியாது. மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அவள் திரும்பி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டே வருகிறது.

‘அவளைப் போக விட்டிருக்கக் கூடாது’ என்று பலமுறை யோசித்திருக்கிறான். குற்றவுணர்வில் உள்ளம் புழுங்கி அழுதிருக்கிறான். ஆனால் அவள் முடிவை மாற்றும் துணிச்சல் அவனுக்கு அப்போது இல்லை. கணவன் என்ற உரிமையை அவளும் கொடுக்கவில்லை. அவனும் எடுத்துக் கொள்ளவில்லை.

சிலந்தி வலையில் சிக்குண்டது போல அவன் சிந்தனை முழுவதுமாக அவளிடமே சிக்கிக் கொண்டது. அறைக்குள் மூச்சு மூட்ட, பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்தான்.

நடுநிசியிலும் மினுமினுத்துக் கொண்டிருந்த அந்த மாநகரத்தைப் பத்தாவது மாடியில் நின்றபடி பார்த்திருந்தவனின் ஞாபகங்கள், நாள் நேரங்களை எல்லாம் கடந்து பின்னோக்கி நகர்ந்தது.

கல்லூரி முடிந்து வெளியே வந்த ரஞ்சனை சீனியர்கள் கூட்டம் பிடித்துக் கொண்டது.

“ஏய் நெட்ட, இங்க வா... உன் பேர் என்ன?”

அவன் திருதிருவென்று விழித்து கொண்டே, “ரஞ்சன்” என்றான்.

“காலையில பார்த்தேன் உன்னை. ஆமா நீ பிபிஏ பர்ஸ்ட் இயர்தனே” என்று ஏளனத்துடன் கேட்டான் அந்த ஆடவன்.

“ஆமா ண்ணா”

“நம்மெல்லாம் ஒரே டிப்பர்ட்மென்டு” என்று தோளில் கை போட்டவன், “சென்னையா?” என்று மேலும் கேட்க, ரஞ்சன் இல்லை என்று தலையை மட்டும் அசைத்தான்.

“அப்போ ஹாஸ்டலா?”

ஆம் என்று தலையசைத்தான்.

“என்னடா பூம் பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டிட்டு இருக்க... என்ன, சரியா பேச வராதா உனக்கு. திக்கு வாயு மாதிரி ஏதாவதா?” என்று சிரித்துக் கலாய்க்கவும், “அப்படி எல்லாம் இல்ல அண்ணா” என்று பதில் சொன்னாலும் அவன் குரலிலிருந்து சத்தமே வரவில்லை.

“ரொம்ப பயந்த பையனா இருக்க, சரி சரி எல்லாம் போகப் போக சரியாகிடும்” என்றவன் மேலும், “உன்கிட்ட ஒரு கணக்கு கேட்குறேன் பதில் சொல்றியா?” என, ரஞ்சன் முகம் வெளிறியது.

“ஒன்னும் இல்ல. சாதாரணக் கணக்குதான். எங்க எல்லோரும் ஆளுக்கு இரண்டு சமோசா வாங்கணும்னா மொத்தம் எத்தனை சொல்லு பார்ப்போம்?”

ரஞ்சன் அந்தக் கூட்டத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, “மொத்தம் பதினாறு சமோசாண்ணா” என்று சொல்ல,

“கரெக்ட்டா சொல்லிட்டியே. போய் அந்த கடைல வாங்கிட்டு வா. அப்புறம் எனக்கு ஒரு தம் பாக்கெட் அவ்வளவுதானேடா... வேற யாருக்காவது ஏதாவது வேணுமா?” என்று நண்பர்களிடம் கேட்க, ரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை

அவன் அங்கேயே நிற்க, “சொன்னது புரியல... போ போய் சீக்கிரம் வாங்கிட்டு வா” என்றான்.

நேற்றுதான் பழைய புத்தகம் கடையில் தேவையான புத்தகங்களை எல்லாம் வாங்கினான். மீதமிருந்தது கொஞ்சம் சில்லறைக் காசுகள்தான்.

“அண்ணா காசு” என்று ரஞ்சன் மெதுவாகக் கேட்க, “என்னடா சீனியர்ஸ்கிட்டயே காசு கேட்குற” என்று மிரட்டியவன், அவன் பையைப் பிடுங்கிக் கொண்டு எதிர்ப்பக்கமாக இருந்த கடைக்குத் துரத்திவிட்டான்.

வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்டதை எல்லாம் கடைக்காரரிடம் பட்டியலிட்டு வாங்கியவன் கையிலிருந்த காசை நீட்ட,

“இன்னும் பதிமூன்று ரூபா தரணும்” என்றார்.

“நாளைக்கு வந்து தரேன் அண்ணா”

“யாரு என்னனே தெரியாம உனக்கு எப்படி தம்பி நான் கடன் கொடுக்குறது”

“எதிரே இருக்கே காலேஜ்லதான் நான் படிக்கிறேன்”

“அங்க ஆயிரம் பேர் படிக்குறாங்க. அதுல நீ யார்னு எனக்கு எப்படி தெரியும்” என்றவர் கறாராகப் பேச, அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“காசு இல்லனா கிளம்பு. இங்கே நிக்காத” என்று அவர் காட்டமாகக் கூற, அவன் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.

அப்போது அங்கே டீ குடித்து கொண்டிருந்த கவிதா, “என்ன அண்ணா பிரச்னை” என்று கடைக்காரரிடம் விசாரிக்க, “எல்லாம் உங்க காலேஜ் பசங்க பண்ற பிரச்னைதான்” என்று கடுப்பானார்.

“எங்க காலேஜ் பசங்களா”

“பதினாறு சமோசமா தம் பாக்கெட் எல்லாம் வேணுமா? ஆனா ஐயா முழுசா காசு கொடுக்க மாட்டாராம்”

திரும்பி அவனைப் பார்த்ததுமே விஷயத்தைக் கணித்துவிட்டவள், “என்ன பர்ஸ்ட் இயரா?” என்று கேட்க, பதில் சொல்லாமல் அவளைக் குழப்பத்துடன் நோக்கினான். அன்று மேடையில் பார்த்த அதே முகம்.

“ஹெலோ தம்பி, உன்னைத்தான்... பர்ஸ்ட் இயரா”

அவன் தலையசைத்தான்.

“எப்ப பாரு பர்ஸ்ட் இயர் பசங்கள டீஸ் பண்றதே அந்த மகேஷ் கேங்குக்கு வேலையா போச்சு. அவனுங்கள இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுறேன்”

“வேணாம் கவி. எதுக்கு வம்பு... வா வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று நண்பன் அஜய் கையை அவள் பிடித்துத் தடுத்தான்.

“என்னால அப்படி எல்லாம் கண்டும் காணாமல் போக முடியாது.”என்றபடி அவன் கையை உதறியவள், அதே உறுதியுடன் சென்று அந்த சீனியர் குழுவினரை ஒரு வழி செய்தாள்.

“இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணீங்கனு தெரிஞ்சுது. நேரா பிர்னிஸிபல் ரூம்தான்” என்றதும், “சாரிக்கா சாரிக்கா” என்று மிரட்சியுடன் அவர்கள் பம்மினர். அந்தளவுக்குக் கல்லூரி மேலிடங்களில் அவளுக்குச் செல்வாக்கு இருந்தது.

இவற்றை எல்லாம் கண்டு ரஞ்சன் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்க, அவள் அவன் பையை திரும்பக் கொண்டு வந்து தந்தாள்.

நிம்மதிப் பெருமூச்சுடன், “தேங்க்ஸ் க்கா” என்றான்.

அவனை இறுக்கத்துடன் நோக்கியவள், “நல்லா பனை மரத்துல பாதி வளர்ந்திருக்க. இவனுங்கள பார்த்து பயப்படுற... என்ன சீனியர்னா தலையில கொம்பா முளைச்சிருக்கு

இத பாரு தம்பி. யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படாத... தைரியமா பேச கத்துக்கோ. இவ்வளவு பலவீனமா இருக்காத. ஒருத்தன் நம்மள விட பலவீனமா இருக்கானு தெரிஞ்சுட்டா போதும். மொத்தப் பேரும் அவன்கிட்டதான் பலத்தை காட்டுவாங்க.

உள்ளே பயம் இருந்தாலும் வெளியே தைரியசாலி மாதிரி நடிக்க கத்துக்கோ” என்று நீண்ட அறிவுரையை வழங்கிவிட்டுத் திரும்பி பாராமல் சென்றுவிட்டாள்.

அவள் அன்று பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் ஆழப் பதிந்து போனது.

அதன் பின் ஒன்றிரண்டு முறை அவளைக் கல்லூரியில் பார்த்ததோடு சரி. அவனும் ஒரு வருடத்தில் கல்லூரியிலிருந்து நின்றுவிட்டான்.

கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு தபால் முறையில் படித்தான். ஐந்து வருடங்கள் கடந்தன. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிறைய விதமான மனிதர்களை அவன் சந்தித்த போதும் அவளை மட்டும் மறக்க முடியவில்லை.

மீண்டும் ஒரு நாள் அதேபோல அவன் முன்னே வந்து நின்றாள். மெல்லிய சரிகை வைத்த நீல நிற புடவையில் இருந்தாள். தோளில் தவழ்ந்த கூந்தல். மினுமினுக்கும் பொட்டு. தோகை போல விரிந்த அவள் விழிகள் நேருக்கு நேராக அவனை நோக்கியது.

“ரஞ்சன் ரைட், என் பேர் கவிதா” என்று கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டவள், “உங்களுக்கு இந்த மேரஜ் ஓகேவா?” என்று வினவினாள்.

கல்லூரி சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் நேருக்கு நேராக நின்று அவள் அவனிடம் பேசியது அப்போதுதான். ஆனால் அவர்களின் முந்தைய சந்திப்பு குறித்த எந்த ஞாபகமும் அவளுக்கு இல்லை.

அவனும் அவற்றை எல்லாம் நினைவுப்படுத்த விழையவில்லை.

ஓர் இக்கட்டான சூழலில்தான் அவனைத் திருமணத்தைச் செய்து கொள்ளும் முடிவை அவள் எடுத்திருந்தாள். காதல், அன்பு ஏன்? குறைந்தபட்ச பிடித்தம் கூட இல்லாமல்தான் அவள் அந்த உறவை ஏற்றாள்.

குறுகிய காலக்கட்டமே சேர்ந்திருந்தாலும் இருவருக்கும் இடையில் அழகான புரிதலும் பரஸ்பர நட்பும் ஏற்பட்டிருந்தது. அந்த நட்பு காதலாக உருமாறி காமமாகக் கிளர்ந்தெழுந்த சமயம், அவள் அவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டாள்.

பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்த ரஞ்சன், ஒரு நிலைக்கு மேல் முடியாமல் தன்னுடைய மனக்குமுறல்களை எல்லாம் மடிக்கணினியில் தட்டச்சு செய்தான்.

பதில் வராது என்று தெரிந்தும் எழுதியவற்றை கவிதாவின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினான்.

இந்த மூன்று வருடத்தில் இது போல நிறைய மன்னிப்பு கடிதங்கள், நிறுவனம் சார்ந்து அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், அவனுக்கு எழும் மனச்சஞ்சலங்கள் என்று அவன் அனுப்பிய எந்த மின்னஞ்சலுக்கும் அவளிடமிருந்து பதில் வந்ததில்லை.

இம்முறையும் வரப் போவதில்லை. ஆனால் அப்படி எழுதி அனுப்பவது ஒருவித மன அமைதியை அவனுக்குத் தந்தது. அப்படியே மேஜையில் சாய்ந்து உறக்க நிலைக்குச் சென்று விட்டான்.

அவன் கண் வழித்த போது நன்றாக விடிந்திருந்தது. திறந்து கிடந்த மடிக்கணினியை மூட எத்தனித்த சமயத்தில்தான் திரையில் கவிதாவின் பெயர் ஒளிர்ந்ததை கண்டு அதிசயித்தான்.

நம்ப முடியவில்லை. அவளா... அவளா பதில் அனுப்பியிருக்கிறாள்?

இந்த மூன்று வருடத்தில் இதுதான் முதல் முறையாக அவள் அவனைத் தொடர்பு கொண்டிருப்பது.

ஆவலுடன் அந்த மின்னஞ்சலைத் திறந்தவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

‘Ranjan! Stop this. I have no feeling for you. Never in my life. Better we get divorced and end this relationship legally’

(‘போதும் நிறுத்து ரஞ்சன். உன்மீது எனக்கு எந்த உணர்வும் இல்லை. என் வாழ்வில் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் விவாகரத்து பெற்று சட்டப்பூர்வமாக இந்த உறவை முடித்துக் கொள்வது நல்லது’)

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா