மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-2

Quote from monisha on April 24, 2020, 12:07 PM
முந்தைய பதிவுக்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இந்த பதிவையும் படித்து உங்கள் கருத்தை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.  -ஷாமிலி தேவ்
2

ஒரெ மகள்
"நா... நாம இதுக்கு முன்னாடி பேசி இருக்கோமா?" என்று தயக்கத்தோடும் மிரட்சியோடும் அவள் கேட்டு வைக்க, பிரபா அதிர்ச்சியில் அப்படியே கல்லாக சமைந்துவிட்டான். சில நிமிடங்களுக்கு பின்னரே தான் அவள் சொன்னதை சரியாக கவனிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழ, "ஹேய் இரு இரு நீ என்ன கேட்ட? என் காதுல சரியாய் விழல"." "நாம இதுக்கு முன்னாடி பேசி இருக்கோம் னு கேட்டேன்".  "கரெக்ட்டு தானே நாம என்னைக்கு சகஜமா பேசியிருக்கோம். ஒன்னு நீ சண்ட போடுவ இல்ல நான் சண்டை போடுவேன்." என்று சொல்ல நினைத்தவன் வார்த்தை வராமல் அப்படியே நிறுத்திவிட்டான். அவனுக்கு திடீரென்று வேறொரு சந்தேகம் உதித்தது. ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?! ஆவேசமாக அவள் புறம் திரும்பி, "ஹேய்! உண்மைய சொல்லு உங்க அம்மாக்கு நீ ஒரே பொண்ணு தானே. இந்த டபுள் ஆக்க்ஷன் மாதிரி எதுவுமில்ல இல்ல...  அந்தமாதிரி ஏதாவது சொல்லி என் தலையில இடிய இறக்கிடாதம்மா" என்று பரிதாபமாக கேட்டு வைக்க, "இல்ல அப்படியெல்லாமில்லைங்க" என்று அவள் உடனடியாக மறுத்துவிட்டாள். ஆனால் அவன் சந்தேகம் களையவில்லை. "அப்படினா உங்க அப்பாவுக்கு உங்க அம்மா ஒரே பொண்டாட்டிதானா இல்ல செகண்ட் சேனல் ஏதாவது" என்று ஓரக்கண்ணால் அவளை பார்த்துக்கொண்டே கேட்டவன் அவள் முகத்தை பார்த்து சட்டென்று நிறுத்திவிட்டான். அவனது சந்தேகம் எல்லாம் அந்த பார்வையிலேயே தீர்ந்துவிட்ட்து. அதே அக்னி பார்வை. முழுவதுமாக த்ரிஷ்யமாளாவாக மாறி இருந்த தன் மனைவியை பார்த்தான்...  சற்றே மிரண்டவன் அப்படியே அந்தர் பல்டி அடித்து, "இல்ல மா அப்படியெல்லாம் எதுவுமே இருக்கவாய்ப்பே இல்லனு சொல்லவந்தேன். மாமாவ பத்தி தெரியாதா? அவரு ஒரு ரிட்டையர்ட் ஆரமி ஆஃபீஸ்ர் வேற. அவரை போய். சே ச்சே" என்று சொல்லி அசடு வழிய சிரித்தான். அவள் அவனை முறைத்ததோட சரி. வேறு எதுவும் பேசவில்லை. அவனாக தன்னிடம் என்ன நடந்தது... ஏன் இப்படி கேட்கிறாய் என்று கேட்பான் என்று எதிர்பார்த்தவள், எப்படியோ அவனாக ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமைதி காத்தாள். இவ்வளவு நேரம் அவள் ஏதோ தன்னிடம் அவனை வெறுப்பேற்ற விளையாடுகிறாள் என்று நினைத்தவன் அவளின் மௌனம் தொடர்வதை கண்டு விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்தான் . ஒரு நீண்ட பெருமூச்செறிந்தபின் நிதானமாக அவளை ஏறிட்டவன், "உனக்கு என்னை நிஜமாவே ஞாபகம் இல்லையா?" என்று வினவ, 'அப்பாடா இப்பவாச்சும் கேட்டானே!' என்று நிம்மதி பெருமூச்செறிந்தாள் அவனின் மனையாள். பின் அவன் கேள்விக்கு பதிலாக அவள் இல்லை என்பது போல தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, "இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல. எனக்கு எனக்கு." என்று தயங்கியபடியே வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.  அவன் மேலே பேசு என்பது போல் அவளிடம் கை அசைத்தான். பிரபா எந்த ஒரு விஷயத்தையுமே தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறன் உடையவன். அதனால் அவளுடைய பீடிகைக்கு அவன் பெரிதாக அசரவில்லை. அவள் தயங்குவதை பார்த்து அவனே கேட்டான். "இப்ப நீ என்ன சொல்ல வர்ற... உனக்கு தலையில அடிபட்டு அம்னீஷியா வந்துடுச்சுன்னா?" என்று அசட்டையாக கேட்க, அவள் உடனடியாக ஆமோதித்து, "ஆமாங்க... உங்களுக்கு அப்போ ஏற்கனவே தெரியுமா?" என்று வியப்புற்றாள்.  அவள் குரலில் அவ்வளவு உற்சாகம் தொனித்தது. இனி தன் வேலை சுலபமாக முடிந்தது என்று அவள் நினைக்க, அவன் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "நா ஏதோ ஒரு விளையாட்டுக்கு சொன்னேன். அப்போ உண்மையாவே உனக்கு ஞாபகம் இல்லையா?" என்று அவன் மீண்டும் அதிர்ச்சி அடைந்தான். ஒரு நாளில் ஒரே இரவில் இத்தனை அதிர்ச்சியா? என்று தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்தி கொண்டான். பின் அவன் நிதானமாக யோசித்து பார்க்கும் போது அவனது குழப்பம் எல்லாம் பனிபோல் விலகியது. அவள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னது அவளது இந்த குணமாற்றம் இவற்றின் காரணம் என்று ஒருவாறு அணைத்தும் புலப்பட்டது. அந்த வார்த்தையை மீண்டும் சொல்லி பார்த்தான். "அப்போ உனக்கு நெஜமாவே எல்லாமே மறந்துபோயிடுச்சா?" இம்முறை அவனின் குரலில் அதிர்ச்சி இல்லை. அதற்கு நேர்மாறாக அளவில்லாமல் சந்தோஷம் பொங்கியது. அவனை கூர்ந்து பார்த்தவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த புன்னகை குழப்பத்தை ஏற்படுத்தியது.  அதேநேரம் பிரபா தீவிரமாக யோசிக்கத்தொடங்கினான். 'டேய் பிரபா எல்லார்க்கும் பழம் நழுவி பால்ல விழும். ஆனா உனக்கு அது இரண்டும் சேர்ந்து வாயில விழுதுடா. ஆஹா ஆஹா. அய்யோ! இப்போ எனக்கு சந்தோஷத்துல என்ன பண்றதுனு தெரியலையே. இவ வேற நம்மளையே குறு குறுனு பார்க்குறாளே... முதல ரியாக்சன மாத்துடா பிரபா' என்றவன் சுதாரிக்கும் போதே, "எனக்கு அம்னீஷியா வந்ததுல உங்களுக்கு என்ன அப்படியொரு சிரிப்பு?" என்று கடுப்பாக கேட்டாள். அவனோ ஜகஜ்ஜால கில்லாடி. அந்த நொடியே தன் முகத்தை பரிதாபமாக மாற்றி கொண்டு, "சிரிப்பா... எனக்கா. துக்கம் தாங்கமுடியாம என் மனசுல குமுறிக்காட்டு இருக்கேன்... என் வேதனையை பார்த்தா = உனக்கு சிரிக்குற மாதிரி இருக்கா?" என்று அவன் திறம்பட சமாளிக்க, "இல்ல... அது... நீங்க சிரிச்ச மாதிரி தான் இருந்துது" என்று அவளே அவனுடைய முகமாற்றத்தில் குழம்பி போனாள். அவனோ உடனடியாக தலையை பிடித்து கொண்டு, "ஐயோ ஐயோ. நான் இப்படி ஏமாந்து போய்ட்டேனே. இதுவே என் பழைய த்ரிஷ்யாவா இருந்தா நான் பண்ற வேதனைய பாத்துட்டு எப்படியெல்லாம் என்ன சமாதானம் பண்ணி இருப்பா தெரியுமா?" என்று வடிவேல் பாணியில் புலம்ப ஆரம்பித்து விட்டான். அவனின் தவிப்பை கண்டவளுக்கு அவள் மனதின் தவிப்பு குழப்பமெல்லாம் முழுவதுமாக விலகிவிட்டது. அவனை சந்தேகித்து பேசியதற்கு தன்னை தானே கடிந்துகொண்டாள். அதுவும் அவனின், 'என் பழைய த்ரிஷயா' என்ற வார்த்தை ஒரு மந்திர சக்தியை போல் அவளை அவன் பால் ஈர்த்தது. அந்த வார்த்தையில் இருந்த நெருக்கம் அவர்களுக்குள்ளும் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் உதித்தது. அவளுக்கு சற்று தயக்கமாக இருந்தாலும் அவளால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை. "நாம ரெண்டு பெரும் காதலிச்சோமா?" பிரபா பதில் ஏதும் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும். இனி அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று. "காதலிச்சோமாவா?! உயிருக்கு உயிரா இருந்தோம். காதல்ன காதல் அப்படி ஒரு காதல். நீ இல்லாம நான் இல்ல நான் இல்லாம நீ இல்லங்குற மாதிரி இருந்தோம். ஊர்ல இருக்குற எல்லா காதலர்களும் நம்மள பாத்து பொறாமை படாத குறைதான்" என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து சொல்லி முடித்தான். "அப்போ எனக்கு ஆக்ஸிடென்ட் ஆனபோ நீங்க ஏன் என்ன பார்க்க வரல" என்று கேட்டாள். இம்முறை அவள் குரலில் சந்தேகம் எதுவும் தொனிக்கவில்லை . இயல்பாக தான் கேட்டாள். பிரபா ஆழமாக அவள் கண்களை ஊடுருவுவது போல் பார்த்தான். இவளுக்கு எல்லாம் மறந்து இருந்தாலும் இவள் புத்திக்கூர்மைக்கு மட்டும் ஒரு பங்கமும் வரவில்லை போல என்று நினைத்துக்கொண்டு, "அதற்கு காரணம் நீ தான்" என்று அவள் மீதே பழியை திருப்பிவிட்டான். "என்ன நானா?" "ஆமா நீ தான். நான் முதல வீட்டுக்கு போறேன் நீங்க பொறுமைய ஒரு மூணு மாசம் கழிச்சு உங்க அப்பா அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டு எங்க வீட்ல அவங்கள பொண்ணு கேக்க சொல்லுங்க. அதுவரைக்கும் எந்த வகைளயும் என்ன காண்டாக்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிட்ட.  உன்ன பாக்காம பேசாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?" இதை பேசும்போது தான் அவனுக்கு சுருக்கென்று உரைத்தது. இன்னும் அவளுக்கு எப்படி விபத்து ஏற்பட்டதென்று கூட அவனுக்கு தெரியவில்லை. இப்பொழுது அவள் தன் கண்முன் அம்மன் சிலை போல் எந்த ஒரு குறைபாடுமின்றி அழகு பதுமாய் அமர்ந்து இருப்பதால் அவன் இப்படி குதூகலமாக பேசிக்கொண்டு இருக்கிறான். ஒரு வேளை அந்த விபத்தில் விபரீதமாக ஏதாவது நடந்து இருந்தால். அவனால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. தலையை ஒரு முறை பலமாக உலுக்கி கொண்டு ஏதோ பயங்கர கனவில் இருந்து மீண்டவன் போல மிரட்சியுடன் தன் மனைவியின் கன்னங்களை தொட்டு அவளை தன் மார்போடு அணைத்து கொண்டான். த்ரிஷ்யாவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அவள் அவன் கைவளையத்திற்குள் எப்படி வந்தாள் என்று புரிவதற்கே சிலநிமிடங்கள் பிடித்தன. அதிர்ச்சியில் அவள் விலகநினைக்க அவன் பிடி மேலும் இறுகியது. அவளை ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் கவசம் போல நெருக்கமாக அவளை அணைத்து இருந்தன அவன் கரங்கள்! அந்த அணைப்பில் காமம் காதல் இவற்றை தாண்டிய அன்பும் பாதுகாப்பும் இருந்தது. எதிர்பார்ப்பில்லாத அன்பென்று எதுவுமே இல்லை. அன்பையே  பிரதிபலனாக எதிர்பார்ப்பதுதான் அன்பின் உச்சம்.
அந்தவகையில் ஒரு பெண்ணுக்கு தன் கணவினடமிருந்து எதிர்பார்ப்பில்லா அன்பு கிடைத்துவிட்டால் அதைவிட அவளுக்கு நிறைவான விஷயம் வேறேன்ன இருக்க முடியும்?
த்ரிஷ்யாவும் குறைந்தவள் அல்ல. அவளை பொறுத்த வரையில் அவள் வாழ்க்கையே அந்த விபத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மறுபிறவி. ஒரே ஒரு வித்தியாசம் தான். அவளது முன் பிறவி அவளை தவிர அவளது சுற்றாத்தார் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவளது பெற்றோர் யாரென்று அவளை குணமாக்கிய மருத்துவர் தான் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவள் தந்தை பெயர் ஆனந்த்ராஜ் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி. தாய் சீதாபாரதி. மருத்துவர் சிவா அவரின் குடும்பநல மருத்துவர் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். தன் பெற்றோர்களிடம் அவளுக்கு ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதை அவளும் உணர்ந்திருந்தாள். ஆனால் அது இன்னதென்று அவளால் கணிக்க முடியவில்லை. மருத்துவர் அவளிடம் எதை பற்றியும் பெரிதாக யோசிக்கவோ சிந்திக்கவோ வேண்டாம், அப்படி சிந்திக்க நேரிட்டால் அவள் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி இருந்தார். அதனால் சிக்கல் அதிகமாகுமே தவிர குறையாது என்று எச்சரித்தார். அதன்படி அவளுக்கும் அதிகமாக யோசித்தால் தலையே வெடுத்துவிடும் போல் வலித்தது. இந்த காரணங்களால் அவள் சில நாட்கள் அமைதியாக இருந்தாள் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. சிவா அவளை வாரம் ஒரு முறை மட்டும் சிகிச்சைக்கு வரச்சொல்லி இருந்தார். இந்தநிலையில் ஒருநாள் சிவா அவளது பெற்றோரை அழைத்து தனியாக பேசினார். அவர் என்ன சொன்னாரோ என்னவோ. வீட்டிற்கு திரும்பி வந்ததும் வராததுமாக திருமண பேச்சு எழுந்துவிட்டது. த்ரிஷ்யமாளவிற்கு எதுவுமே புரியவில்லை. இவர்களுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையரையே அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பவளை திருமணபந்தத்தில் எப்படி ஈடுபடுத்தமுடியும் என்று அவர்களிடமே கேட்டாள். திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பதில் வந்தது. ஏதோ குடிகாரனுக்கு கால்கட்டு போட்டால் திருந்திவிடுவான் என்பது போன்ற நம் நாட்டின் முட்டாள் தனமான தர்க்கத்தை இவர்கள் எப்படித்தான் கற்றுக்கொள்கிறார்களோ என்று அவளுக்கு புரியவில்லை. எனவே அவள் பிடிவாதமாக மறுத்தாள். அவள் பெற்றோர்கள் அவளை வற்புறுத்தவில்லையே தவிர அவர்கள் முயற்சியை கைவிடவுமில்லை. அவர்களின் மணமகன் தேடல் தொங்கியது. இந்த நிலையில் தான் பிரபாவின் புகைப்படத்தை ஆனந்தராஜ் அவளிடம் காட்டினார். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லாதிரும்பியவள் புகைப்படத்தை பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள். அந்த முகம் அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக தோன்றியது. இருந்தாலும் திருமண பந்தத்தில் தன்னால் இணங்க முடியாது என்று யோசித்த மூளை அவள் உதடுகளிடம் வேண்டாம் என்று சொல்ல சொல்லி ஆணை பிறப்பித்தது. ஆனால் அது வாய் தவறி, "சரி" என்று உளறி தொலைக்குமா?  அதன் பின் நடந்தது எதுவுமே அவள் கையில் இல்லை. எல்லாமே விதியின் போக்கில் நடந்து முடிந்துவிட்டது.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா