மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 3Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 3

Quote from monisha on October 27, 2025, 9:30 PM

அத்தியாயம் – 3

நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு...

அது ஒரு பழைய காலத்து வீடு. முற்றம், மரக்கதவுகள், நீட்டமான கம்பிகள் கொண்ட ஆதிகாலத்து ஜன்னல்கள். அவற்றுடன் பழமையுடன் கூடிய சில அறைகள். அந்த அறைகளில் எல்லாம் இளைஞர்கள் இரண்டிரண்டு பேராக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிலர் மேசைகளிலும் சிலர் தரையிலும் கால்களை நீட்டி என்று அவரவர் வசதிக்கு ஏற்ப அமர்ந்திருந்தனர்.

‘கவி வியர்ஸ்’ என்ற இணைய விற்பனையகம் தொடங்கிய காலக்கட்டம் அது . அஜய் குடும்பத்தின் பாரம்பரிய வீட்டைத்தான் தற்காலிக அலுவலகமாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

“எஸ் மேம்... அதல்லாம் டைமுக்கு டெலிவரி பண்ணிடுவோம். நீங்க கவலப்படவே வேண்டாம்” ஒரு பெண் முற்றத்தில் நடந்தபடி தன் செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

பேசி முடித்ததும், “கவி ஆர்டர் கன்பார்ம்... இன்னைக்கு வந்த மூணாவது ஆர்டர்” என்று உற்சாகமாக கூற, “சூப்பர் வினோ” என்று அறைக்குள் இருந்த கட்டை விரலைக் காட்டினாள் கவிதா.

ப்ளூ ஜீன்ஸ், சிவப்பு நிற குர்தி, தலையில் அலட்சியமாகச் சுற்றப்பட்ட கொண்டை என்று மிக எளிமையான தோற்றத்தில் இருந்த கவிதா, “ஹரிஷ் நெக்ஸ்ட் டெலிவரி” என்று அறையிலிருந்து சத்தமிட, “ஆன் இட்” என்று அவனும் சத்தமிட்டான்.

“டேய் எதுவும் மாத்தி கீத்தி அனுப்பி தொலைச்சிராத. அனுப்புறதுக்கு முன்னாடி டபுள் செக் பண்ணு”

“ஐ நோ ஐ நோ” என்றவன் சொல்லும் போது, “கம்மான் கைஸ் டீ பிரேக்” என்றபடி அஜய் கவி அறைக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் கவி, “ஆ அஜய்... டெலிவரி அனுப்புறதுக்கு முன்னாடி பீஸஸ்ல எதுவும் டேமேஜ் இருக்கானு செக் பண்ணிட்ட இல்ல” என,

“அதெல்லாம் நான் பார்த்துட்டேன். நீ முதல டீ குடி. காலையில இருந்து டென்ஷனாவே இருக்கு” என்று சொல்லி கொண்டே பிளாஸ்க்கிலிருந்த தேநீரை சூடாக இரண்டு கப்பில் ஊற்றினான்.

தேநீரைப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் பிரகாசம்.

“தேங்க் யூ ஸோ மச். இப்ப எனக்கு இது ரொம்ப தேவை” என்று கைகளைச் சேர்த்து நெட்டு முறித்து விட்டு கப்பை எடுத்தாள். அஜயும் தனக்கு ஊற்றிய கப்பை எடுத்து கொண்டான்.

இருவரும், “சியர்ஸ்” என்று கப்பை இடித்துக் கொள்ள,

“அடேய் டீக்கு போய் சியர்ஸ் அடிக்கிற ஆளுங்க நீங்கமட்டும்தான்”

“நாங்க அப்படிதான்” என்று அஜய் சொல்லி சிரிக்க, “என்னடா? சரக்குக்கு வந்த சோதனை” என்று ஹரீஷ் தலையிலடித்து கொண்டான்.

அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் கவி அறையில் வந்து டீயை ஊற்றிக் கொண்டு அமர்ந்தனர். கவி அஜயுடன் சேர்த்து அவர்கள் மொத்தமாக பத்துப் பேர்.

தேநீருடன் ஒரு சிறிய அரட்டையைப் போட்டுவிட்டு, மீண்டும் அனைவரும் பழையபடி வேலைகளில் ஆழ்ந்தனர்.

இரவு எட்டு மணிக்குப் பிறகு ஒவ்வொருவராகச் சொல்லிவிட்டுக் கிளம்ப, கவிதா மட்டும் கண்களைக் கூட சிமிட்டாமல் தன் மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கவி... ஏய் கவி” என்று அஜய் தோளில் கை வைக்க, “என்ன” என்றாள்.

“டைமாச்சு எல்லோரும் கிளம்பிட்டாங்க”

“ஓ” என்றவள் முகத்தில் படர்ந்த கவலையை கவனித்த அஜய், “என்னாச்சு?” என்று மிதமாக கேட்டான்.

“இல்ல... இந்த தடவையும் சம்பளம் போட முடியாது போல இருக்கு”

“ப்ச்... பார்த்துக்கலாம் விடு”

“என்னத்த பார்த்துக்கலாம். எல்லோருமே பிரண்ட்ஸா இருந்தாலும் ஓரளவுதான். அவங்களுக்கும் பேமிலி எல்லாம் இருக்கு இல்ல”

“இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்... பிக் அப் எடுக்க கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும்”

“என்ன இப்பதான்.. ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுது. நம்மகிட்ட ஆர்டர் போட்டவங்க எல்லாமே நம்ம சர்கிள் ஆளுங்கதான். இது போதாது அஜய். இது போதாவே போதாது”

“உனக்கு இது இல்ல. எதுவுமே போதாது. 99 மார்க் எடுத்தா கூட 100 எடுக்கலன்னு வருத்தப்படுற ஆளுதானே நீயி”

“பெருசா ஜெயிக்கணும், சாதிக்கணும்னு நினைக்குறது எல்லாம் தப்பா என்ன?”

“அதெல்லாம் தப்பு இல்ல. ஆனா அவசரமா ஜெயிக்கணும்னு நினைக்குறது தப்பு”

அவனை நிமிர்ந்து முறைத்தவள், “உன் அட்வைஸ் கொஞ்சம் நிறுத்துறியா” என, “அட்வைஸ்லாம் பண்ணல. எல்லாம் மாறும்னு சொல்றேன். நம்பு” என்றபடி அவள் தோளை தட்டிக் கொடுத்தான்.

பெருமூச்சுவிட்டவள், “சரி கிளம்பலாம்” என்று எழுந்து மடிக்கணினியை மூடி பையில் வைத்தாள்.

கதவை பூட்டிவிட்டு இருவரும் வெளியே வர, “ஆமா எங்க உன் பைக்கை காணோம்” என்று கேட்டான் அஜய்.

தலையில் கை வைத்து கொண்டவள், “பைக் செர்விஸ் விட்டதையே மறந்துட்டடேன்” என, “சரி வா. நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணிடுறேன்” என்றான்.

“எனக்காக நீ அவ்வளவு தூரம் வரணுமா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் ஆட்டோ பிடிச்சு போறேன்”

“ஒன்னும் தேவை இல்ல... வா நானே உன்னை டிராப் பண்ணிட்டு போறேன்” என்று சொல்ல, கவி அவனுடன் பைக்கில் கிளம்பினாள்.

போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டதில் அவர்கள் வண்டி ஊர்ந்து மெதுவாக நகர்ந்தது.

“எப்பா... இந்த சிட்டி ரோடுல வண்டி ஒட்டிரது மாதிரி டார்ச்சர் எதுவுமே இல்ல”

“ஏய் நம்ம காலேஜ் கட் அடிச்சுட்டு லாங் பைக் ரைட் போனோமே, ஞாபகம் இருக்கா?”

“ஹை வேஸ்ல சும்மா சல்லுனு, மறக்க முடியுமா அதெல்லாம்” என்றவன் கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தான். மஞ்சள் விளக்கில் ஒளிர்ந்த அவள் புன்னகை தனிப்பிரகாசத்துடன் தெரிந்தது.

“ஏய் ஏய் அங்க ஒரு டீக்கடை தெரியுது பாரு. ஓரமா நிறுத்து... டீ குடிச்சுட்டு போவோம்”

“டீ குடிக்கிறதுக்கு மட்டும் உனக்கு நேரங்காலமே இல்லயில்லடி” என்று கேட்டாலும் மறுக்காமல் அவள் சொன்ன இடத்தில் நிறுத்தினான்.

“அண்ணா! ஸ்ட்ராங்கா இரண்டு மசாலா டீ. ஒன்னு மட்டும் சக்கரை தூக்கலா” என்று சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தாள் .

தலைக்கவசத்தைக் கழற்றியபடி அருகே வந்து அமர்ந்த அஜய், “டீ ரொம்ப குடிச்சா முடி எல்லாம் சீக்கிரம் வெள்ளையாகிடுமாடி? எங்க அம்மா சொன்னாங்க” என,

“ஓ அப்போ குடிக்கலனா வெள்ளை ஆகாதாமா.” என்று கேட்டு நக்கலாகச் சிரித்தாள் கவிதா.

அவளிடம் அதற்கு மேல் வாதம் செய்ய முடியாது என்று வாயை மூடி தன்னுடைய தேநீரைக் குடித்து முடித்தான்.

அவளோ ஒவ்வொரு மிடறாக ரசித்து ருசித்து தொண்டைக்குள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“டைமாகுதுடி சீக்கிரம் குடி”

“வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன கிழிக்க போற”

“ஒன்னும் கிழிக்க போறதில்ல. ஆனா நாளைக்கு காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்”

“ஏன்?”

“ஊருக்கு போக போறனு சொன்னேனே மறந்துட்டியே”

“எப்போ சொன்ன?”

“சொன்னேனே”

“இல்ல நீ சொல்லவே இல்ல”

“நேத்து மீட்டிங் முடிஞ்சு சொன்னேனே... மறந்துட்டியா”

“நான் மறக்க எல்லாம் இல்ல. நீ சொல்லல”

அவனை முறைத்து கொண்டே தேநீருக்கு காசை எடுத்து வைத்தவள், “தேங்க்ஸ் அண்ணா, டீ சூப்பரா இருந்துச்சு.” என்று விட்டு நகர்ந்தாள்.

“சத்தியமா சொன்னேன் கவி... அப்போ சிவா கூட இருந்தான்”பைக்கில் ஏறியதும் அவன் மீண்டும் பேச, “நீ என்கிட்ட சொல்லல” என்ற அவள் தான் பிடித்த பிடியில் நின்றாள்.

‘உண்மையில் நாம்தான் மறந்துவிட்டோமா?’ என்று யோசித்தவன், “சரி சாரிமா... நான்தான் சொல்லல தப்புதான். இப்போ சொல்றன் நாளைக்கு நான் ஊருக்கு போறேன். வர மூணு நாளாகாகும்” என்று சரண்டராகிவிட்டான்.

“மூணு நாளா?”

“எல்லாத்துக்கும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்காதடி” என்றவன் பைக்கை அந்த பெரிய கேட்டின் முன்பு நிறுத்தினான்.

பைக்கிலிருந்து இறங்கிய கவிதா, “ஆமா மூணு நாள் ஊர்ல என்ன பண்ண போற” என, “குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு... அப்படியே ஊர்ல ஒரு பொண்ணு இருக்கான் பார்த்துட்ட்ட்டு” என்று அவன் இழுத்த இழுவையில், அவள் விழிகள் கூர்மையாகின.

“இல்ல பொண்ணு பார்த்துட்டு, ஓகே ஆச்சுனா அப்புறம் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்”

“அரேஞ் மேரஜ் பண்ற மூஞ்சியா இதெல்லாம்”

“என் மூஞ்சிக்கு எல்லாம் மேரஜ் செட் ஆகுறதே பெரிய விஷயம்”

“அந்த ஆனந்தி புள்ள உன்னை பைத்தியமாட்டும் லவ் பண்ணிட்டு இருக்குறது உனக்கு தெரியாதா? ஏன்? இன்னைக்கு மீட்டிங்ல கூட நான் பேசிட்டு இருக்கேன். அது உன் மூஞ்சியவே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கு.”

“வேணாம் கவி. அவ செட் ஆகமாட்டா”

“ஏன் செட் ஆகமாட்டா?”

“ஒருதடவ அவ நம்ம. இரண்டு பேரும் லவ் பன்றோமானு கேட்டா”

“க்ளேரிபை பணிக்கனும்னு கேட்டு இருப்பா. இதுல என்னடா இருக்கு?”

“கூடவே இருந்தும் நம்ம நட்பை அவ புரிஞ்சிக்காம பேசுறது எனக்கு பிடிக்கல. இவ எனக்கு லைப் பாட்னரா வந்தா நிச்சயமா அவ நம்ம பிரண்ட்ஷிப் இடைல வந்துடுவா”

“அதெல்லாம் உன் கற்பனை அஜய்.”

“இருக்கலாம். ஆனா நம்ம உறவுக்கு இடைல யாருமே வர்றதுல எனக்கு விருப்பம் இல்ல”

“இப்போ பார்க்குற ஊர்கார பொண்ணு மட்டும் வர மாட்டான்னு நினைக்குறியா?”

“நான் முன்னாடியே சொல்லிடுவேன். எனக்கு என் பிரண்டுதான் பர்ஸ்ட். அவளுக்கும் எனக்கும் இடைல யார் வந்தாலும் எனக்கு பிடிக்காதுன்னு”

“இப்படி சொன்னா இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணமே நடக்காது”

“நடக்காட்டி போகட்டும். ஆனா நீ எப்பவும் கூட இருப்ப இல்ல?” என்று அஜய் சொன்னதில் நெகிழ்ந்து போன கவிதா, “நான் எங்கடா உன்னை விட்டுட்டு போக போறேன்” என்றாள்.

“சொல்ல முடியாது. புருஷன் வந்ததும் நான் உனக்கு இரண்டாம் பட்சமாகிடலாம்”

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியா எல்லாம் இல்ல. அப்படியே எதிர்காலத்துல யாரையாவது பார்த்து நான் இம்பிரஸாகி கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்சா கூட அவனுக்காக உன்னை நான் விட்டு கொடுக்கவும் மாட்டேன். விட்டுட்டு போகவும் மாட்டேன்” என்ற தோழியின் உறுதியான வார்த்தைக்ளை கேட்டு அஜய் முகம் மலர்ந்தது.

“தேங்க்ஸ்டி” என்றபடி அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட அந்த நாளின் ஒவ்வொரு நொடிகளும் அவன் நினைவில் ஆழ பதிந்திருந்தது.

ஆனால் அன்று அப்படி எல்லாம் பேசிவிட்டு இன்று தொடர்பற்று எங்கேயோ போய்விட்டாள். யோசிக்க யோசிக்க நெஞ்சம் குமுறியத.

“அஜய்... அம்மா அப்பாலாம் வந்து ஹாலில வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. நீ என்ன ரெடி ஆகாம இருக்க”

மேடிட்டு வயிற்றுடன் நின்ற மனைவியை ஏறிட்டவன், “நீ போ நான் வரேன்” என்று சொல்ல, “கவியை பத்தி யோசிச்சுட்டு இருந்தியா?” என்று கேட்டு மிதமாக அவன் தலைமுடியை வருடி கொடுத்தாள்

“ஆமா ”

“நீ இப்படி யோசிச்சு கவலைப்பட்டுட்டு இருந்தா அவ திரும்ப வந்துட போறாளா?”

“அவ இனிமே வராம இருந்தாலே நல்லது” என்று அஜய் கோபத்துடன் கூற,

“என்ன அஜய் சொல்ற?” என்று கேட்டு அதிர்ந்தாள் ஆனந்தி.

“சுயநலவாதி. டிவோர்ஸ் கேட்டு ரஞ்சனுக்கு மெயில் பண்ணி இருக்கா. பாவம், அவன் ரொம்ப நொறுங்கி போயிட்டான்”

“அட கடவுளே!”

“தாங்கவே முடியல, அதான் மூட் ஆப்செட். ஐம் சாரி நம்ம கல்யாண நாள் அதுவும் நான் இப்படி இருக்க கூடாது... ஸோ சாரி”

“என்னால புரிஞ்சிக்க முடியுது அஜய்”

“தேங்க் யூ ஸோ மச். ஐம் ஸோ லக்கி டூ ஹேவ் யூ” என்று மனைவியின் கன்னங்களை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு, “ஹாப்பி அனிவர்ஸ்ரி ஆனந்தி” என்றான்.

“ஹாப்பி அனிவர்ஸரி அஜய்” என்றவள் மேலும், “ம்ம்ம் இப்ப கொஞ்சம் ரெடியாகிட்டனா” என்று இழுக்க, “எஸ் எஸ் டூ மினிட்ஸ்” என்று அவன் புதுச் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

அவர்களின் மூன்றாவது வருட திருமண நாளை கொண்டாட உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.

சரியாக கேக் வெட்டும் போது ரஞ்சனும் வந்து சேர்ந்தான்.

“ஹாப்பி அனிவர்சரி அண்ணா அண்ணி” என்று அவர்களை வாழ்த்தி பூங்கொத்தும் பரிசும் கொடுக்க, அஜய் அவனை வியப்புடன் நோக்கினான்.

அவன் காலையில் இருந்த மனநிலைக்கு இங்கே வரமாட்டான் என்றுதான் நினைத்தான். ஆனால் அவன் வந்தது மட்டுமில்லாமல் தன் வலி வேதனைகளை மறைத்து கொண்டு எல்லோருடனும் இயல்பாகச் சிரித்துப் பேசியது இன்னும் அதிகமாக அஜயை வேதனைப்படுத்தியது.

எப்படியாவது கவிதா மனம் மாறி ரஞ்சனுடன் சேர்ந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்த போதும் அவன் மூளை அதற்கு சாத்தியமே இல்லை என்று எடுத்துரைத்தது.

பள்ளி காலத்திலிருந்து கவிதாவை அவனுக்கு தெரியும். அவள் ஒரு முடிவெடுத்தால் சுலபத்தில் அதனை அவள் மாற்றிக் கொள்ளமாட்டாள்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா