மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-7

Quote from monisha on May 2, 2020, 9:31 PM
உங்கள் கருத்துக்களை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் - ஷாமிலி
7
பிரபா அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியில் சிலையாக சமைந்துவிட்டான். த்ரிஷ்யா பிரபாவின் அருகில் வந்து, "இந்த பொண்ணு யாருனே தெரியலைங்க... இவள பார்த்த ஏதோ மனசு பாதிக்க பட்ட பொண்ணு மாதிரி தெரியுறா... யாரு இவளை இங்க தனியா விட்டுட்டு போயிருப்பாங்கனு தெரியல" என்று பிரபாவிடம் கூறியவளின் கண்கள் கோவிலை சுற்றி அலைபாய்ந்தது. யாரவது அவளை தேடி வருகிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தாள். பிரபாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த பெண்ணை பார்த்து பரிதாபம் கொள்வதா இல்லை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் தன் மனைவியை எண்ணி கவலை கொள்வதா என்று தெரியவில்லை. அதற்குள் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி அந்த பெண்ணின் அருகில் வந்து அவளின் கை பிடித்து, "உன்ன எங்கேல்லாம் தேடறது.. எங்க போய்ட்டியோனு பயந்தே போட்டேன்." என்று கூறி அழைத்து சென்றார். பிரபா அந்த பெண்மணியை அழைத்தார். "அம்மா.. இந்த பொண்ணு" என்று அவன் மேல பேசுவதற்குள் அந்த பெண்மணி இடைபுகுந்தாள். "யாரப்பா நீ என்ன வேணும் உனக்கு... உன்ன எனக்கு முன்னபின்ன தெரியாது வழியவிடு" என்று பிரபாவிடம் கோபமாக உரைத்தவர் அப்பொழுது தான் த்ரிஷ்யாவை பார்த்தார். அவளிடம் ஏதோ பேச அவர் நா எழுந்தது. ஆனால் அதை அடக்கிக்கொண்டு அமைதியாக திரும்பி சென்றுவிட்டார். அதற்குள் பிரபா தன் குரலை கொஞ்சம் உயர்த்தி, "உங்க பேர் அஸ்மா பர்க்கத் பேகம். சரிதானே?" என்று கேட்ட அடுத்த நொடி அந்த பெண்மணி மின்சாரம் பாய்ந்தது போல் அசையாது நின்றுவிட்டார். த்ரிஷ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பிரபாவை பார்த்து, "உங்களுக்கு தெரிஞ்சவங்களா?" என்று கேட்டாள். ஆனால் அவளுக்கு பிரபா எந்த மறுமொழியும் சொல்லவில்லை. அந்த பெண்மணியிடம் சென்று அவனின் சந்திப்பு அட்டையை நீட்டி, "என் பேர் பிரபா... நான் உங்க பொண்ணுடைய" என்று கூறிக்கொண்டே அவரின் மகளை பார்த்தவன் மேல பேசமுடியாமல் நிறுத்தினான். பிறகு ஒரு பெருமூச்செறிந்தவன், "இது என்னோட கார்டு... நான் உங்களுக்கு ஏதாச்சும் ஒருவகைள உதவி பண்ணனும்னு நினைக்குறேன். ஆனா எப்படினு தெரியல.. ஒருவேளை உங்களுக்கு என் பேர்ல நம்பிக்கை வந்தா இந்த நம்பர்ல என்கிட்ட பேசலாம்" என்று ஒருவாறு கூறி முடித்தான். ஆனால் அந்த பெண்மணி அவன் நீட்டிய அட்டையை வாங்காமல் அவனையே வைத்த கண்வாங்காமல் பார்த்தார். "உங்க பேர் என்னினு சொன்னீங்க" "பிரபா" அவனின் பெயரை கேட்டதும் அந்த பெண்ணிற்கு அளவில்லாது கோபம் வந்தது. அவரின் உதடுகள் துடித்து முகத்தில் சிவப்பேறியது. வெறிபிடித்தவள் போல் பிரபாவின் சட்டையை உலுக்க ஆரம்பித்துவிட்டார். "அடப்பாவி சண்டாளா என் பொண்ணோட வாழ்க்கையை அழிச்சது நீதானா... உன்ன கொன்னாதான்டா என் ஆத்திரம் அடங்கும்..." என்று கத்திகொண்டே அவன் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். த்ரிஷ்யாவிற்கு ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அவள் ஓடிச்சென்று அந்த பெண்மணியை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். "விடுங்கம்மா அவரை விடுங்க.. என் இப்படி பண்றீங்க?" என்று அந்த பெண்மணியை அதாவது அஸ்மா பரக்கத் பேகம் அவர்களை பிரபாவிடம் இருந்து பிரிக்கமுயற்சி செய்தாள். பின் "யாரவது காப்பாத்துங்க" என்று கத்தினாள், சிலர் ஓடிவந்து அந்த பெண்மணியின் கையை பிரபாவின் சட்டையில் இருந்து பிரித்தெடுத்தனர். அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர், "என்னம்மா ஏதோ மதச்சார்புன்ற பேர்ல எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு நீ இந்த கோவிலுக்கு வரர்து போறத எதுவும் கண்டுக்காம இருந்தா இவ்வளவு மோசமா நடந்துக்குறியே" என்று கூறி அஸ்மாவை கண்டித்தான். பின் அனைவருமாக சேர்ந்து அவரை கோவிலில் இருந்து வெளியேறும்படி கூறினார்கள். பிரபா இவ்வளவு நேரம் அஸ்மாவின் தாக்குதலை பெரிதாக எதிர்க்கவில்லை. ஆனால் எல்லாருமாக அவருக்கு எதிராக பேசியதும் அவனே முன்வந்து, "எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க. நான் தான் தப்பு பண்ணிட்டேன். அவங்கள தேவையில்லாம தொந்தரவு பண்ணிட்டேன். அவங்க மேல எந்த தப்பும் இல்லை. எல்லாரும் கலைஞ்சுபோய்டுங்க ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்டான். அத்துடன் அனைவரும் களைந்து சென்றனர். அந்த பெண்மணி அஸ்மாவும் தன் பெண்ணை அழைத்துக்கொண்டு கோவிலை விட்டுவெளியேறினார். ஆனால் அவர் கண்கள் போகும்வரை பிரபாவை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது. த்ரிஷ்யாவிற்கு தலைசுற்றுவது போல் இருந்தது. அவள் நேராக கோவிலை விட்டுவெளியேறி காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டாள். இதனை பார்த்த பிரபா அவளின் பின்னோடு ஓடி சென்று அவளை அழைத்தான். "ஹே என்னமா கோவிலுக்கு வந்துட்டு சாமிய பாக்காம போகக்கூடாது. வா." "........." "வானு சொல்றேன்ல." "......" இம்முறையும் மௌனமே பதிலாக வந்ததால் அவள் கையை பிடித்து இழுத்தான். "விடுங்க என்ன.. " "என்னமா ஆச்சு...." "அதே தான் நானும் கேட்குறேன். ... இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னும் புரியல. அந்த லேடிய உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? அவங்க என் உங்கிட்ட அப்படி நடந்துகுட்டாங்க." பிரபாவின் முகத்தின் புன்னகை அரும்பியது. "அதா உங்கிட்ட சொல்லாம நீ என்ன விடமாட்டானு எனக்கு தெரியாதா.. நான் கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்போ கோவிலுக்கு பொய் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போன அப்பறமா சொல்றேன்" "எனக்கு சாமி கூப்புடுற மூடே போச்சு." "அப்படிலாம் சொல்லக்கூடாது... மூட வந்தா போறதுக்கு கோவில் என்ன மாலா... நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேந்து முதல் முறையை கோவிலுக்கு வந்துருக்கோம் வாம்மா" என்று அவன் பரிவாக அழைத்ததில் மனம் இறங்கி அவனுடன் கோவிலுக்குள் சென்றாள். இருவரும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். அங்கு த்ரிஷ்யவின் தந்தை ஆனந்தராஜ், "என்ன மாப்பிள்ளை அதுக்குள்ள வந்துடீங்க.. பீச் சினிமானு போட்யிடு வரலாம்ல" என்று கேட்டார். "பரவால்ல மாமா.. இன்னைக்கு ஒரு நாள் ஓய்வெடுத்துட்டு இன்னொரு நாள் போறோம்.. அதுவும் இல்லாம அத்தை சமையல ஃபுல் கட்டுக்கட்டி இருக்கேன். ஒரு குட்டி தூக்கம் போடலாமேனு வந்துட்டேன்" "அப்போ சரி பொய் ரெஸ்ட் எடுங்க" த்ரிஷ்யா எதுவும் பேசாமல் மாடிப்படி ஏறினாள். அவள் இன்னும் கோவிலில் நடந்ததை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறாள் என்று பிரபாவிற்கு நன்றாக தெரியும். அதற்குள் பிரபாவின் கைபேசி சிணுங்கியது. அதில் பேசிமுடித்தவுடன் த்ரிஷ்யாவை அழைத்து, "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் வெளியில போகணும் நீ ரெஸ்ட் எடு" என்றான். "இவ்வளவு நேரம் அப்பாகிட்ட டயர்டா இருக்குனு சொன்னீங்க.. இப்போ டயர்டா இல்லையா?" என்று அவனை முறைத்துக்கொண்டு கேட்டாள். "வேலை இருக்குமா எதுனாலும் வந்ததுக்கப்புறம் பேசிக்கலாம். நீ தூங்கு" என்றுவிட்டு கதவை நோக்கி நடந்தான். ஆனால் த்ரிஷ்யவோ, "எனக்கு பதில் சொல்லிட்டு போங்க" என்றாள் விடாமல். "வேலை இருக்குனு சொல்றேன்ல" என்று கோபமாக கத்தியேவிட்டான். அவள் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்த பார்வையில் என்ன கண்டானோ? உடனே ஒரு நீண்ட பெருமூச்செறிந்தவன் மனமிறங்கி அவளிடம் அமர்த்தலான குரலில், "ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோ... கொஞ்சநேரத்துல வந்துடறேன்... ப்ளீஸ்" என்று சமாதானம் பேசினான். அவள் சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டிவைக்க அவன் மலர்ந்த முகத்துடன் அவள் நெற்றில் மென்மையாக முத்தமிட்டுவிட்டே அறையைவிட்டு வெளியேறினான்.  அவன் எங்கு செல்கிறான் என்று வாசகர்கள் கணித்திருப்பார்கள். கோவிலில் பார்த்த பெண்மணி அஸ்மாவின் வீட்டிற்கு தான். அவனுக்கு அவர்களின் வீட்டை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாக இல்லை. வீட்டிற்குள் வந்தவை பார்த்த அஸ்மாவின் முகத்தில் கோபமும் குழப்பமும் ஒரு சேர கலந்திருந்தது. "இப்போ எதுக்கு இங்க வந்திருக்கீங்க?" என்று கோபமாக கேட்டார். பிரபா பதில் ஏதும் சொல்லாமல் அவரை பொறுமையுடன் பார்த்தான். "ஒழுங்கா இங்க இருந்து போய்டுங்க. நீங்க த்ரிஷ்யா ஓட கணவர்ங்கிற ஒரே காரணத்துக்காக தான் நீங்க இப்போ உயிரோட இருக்கீங்க. அவளையாச்சும் நிம்மதியா வாழவைங்க."என்று கோபத்துடன் பேசினார். "எனக்கு புரியலைங்க உங்களுக்கு என் மேல ஏன் இவ்வளவு வன்மம்னு நான் தெரிஞ்சுக்கலாமா? கோவில்ல முதல்ல என்ன பாத்ததும் என்ன யாருமே தெரியல்னு சொன்னீங்க. அப்பறம் என் பெற கேட்டதும் பயங்கரமா கோவப்படீங்க. எனக்கு எதுவுமே புரியல." "அப்போ என் பொண்ணு யாருன்னே உனக்கு தெரியாதுனு சொல்லபோற அப்படி தானே?" "நான் ஏன் அப்படி சொல்லணும்? அவங்கள எனக்கு நல்லா தெரியும். எங்க ட்ரைனிங் அகாடமில படிச்சுட்டு இருந்த அண்டர் ட்ரைனி. ஆஹா... கோவில்ல வேற ஏதோ சொன்னீங்களே. உங்க பொண்ணோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்னு அதுவும் எனக்கு புரியல. அவங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்காங்க?" "புரியலையா... உனக்கு எப்படி புரியும்.. வேணாம்... என்ன கொலைகாரி ஆக்காதே... இப்போவே இந்த இடத்தை விட்டு போயிடு" "முடியாதுங்க... நீங்க எனக்கு எந்த விவரமும் சொல்லாம என் மேல வீண் பழி சுமத்த பாக்குறீங்க.. எனக்கு அது ஏன்னு தெரியாம நான் இங்க இருந்து ஓர் அடி கூட நகரமாட்டேன்" "என்ன தெரியணும் உனக்கு.. என்ன தெரியணும்... அன்னைக்கு மலர்ந்த பூ மாதிரி இருந்த என் பொண்ண கசங்கின நாரா கொண்டுவந்து கொடுத்தாங்களே. அத சொல்லணுமா? இல்ல இன்னைக்கு வரைக்கும் தனக்கு என்ன கொடும நடந்ததுனு எதுவுமே தெரியாம யார்கிட்டயும் எதுவும் சொல்ல முடியாத நெலமைல என் பொண்ணு இப்படி புதி பேதலிச்சு பொய் நிக்குறாளே.. அத சொல்லணுமா... இல்ல தினமும் ராத்திரில பயந்து எழுந்து என் கிட்ட வராதீங்க பிரபா ... ப்ளீஸ் பிரபானு... கதறி அழுவுறாளே அத சொல்லணுமா?!" என்று கண்களில் கண்ணீருடனும் ஆவேசமாக கதறினார். அவர் சொன்ன கடைசி வார்த்தையை கேட்ட பிரபாவின் காலடியில் பூமி நழுவியது. அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. அவன் மனதிற்குள் பெரும் புயல் அடித்துக்கொண்டிருந்தது. "இவளின் இந்த நிலைக்கு நானா காரணம்? நான் தான் தவறு செய்யது விட்டேனா?"என்று தலையை பிடித்துக்கொண்டு அப்படி சுவற்றில் நின்றபடியே சாய்ந்துகொண்டான். "ஆமாம் ஒருவகையில உங்க பொண்ணோட இந்த நிலைமைக்கு பிரபா தான் காரணம்" என்று இன்னொரு குரல் வாசற்பக்கம் கேட்டது. இருவரும் அந்த குரல் வந்த திசையை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பினர்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா