மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-8

Quote from monisha on May 6, 2020, 11:12 PM

உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
- ஷாமிலி
8
குரல் வந்த திசையை நோக்கிய பிரபாவின் உதடுகள் தாமாக, "மாமா" என்று முணுமுணுத்தது. இதற்குள் வீட்டினுள் நுழைந்த ஆனந்தராஜை அதுவும் தன் மாமனாரை இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் பிரபா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "என்ன மா அப்படியே அதிர்ச்சியில் நிக்குற. நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா?" என்று அஸ்மாவை பார்த்து கேட்டார் ஆனந்தராஜ்.  "அச்சச்சோ இது உங்க வீடு. உங்க நிழல்ல தான் நாங்க வாழறோம். நான் அப்படி சொல்லலாமா?" என்று அஸ்மா பணிவாக பதிலளிக்க, "நீ என் மேல கோபமா இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும் மா. நான் என் பொண்ணு கல்யாணத்துக்கு உன்னை வரவேண்டாம்னு சொன்னது உனக்கு எவ்வளவு வேதனையை தந்திருக்கும்னு எனக்கு நல்லா புரியுது. அதுவும் இல்லாம உன் மகளோட சேர்த்து த்ரிஷ்யாவையும் நீ ஒரு பொண்ணு மாதிரி பார்த்து பார்த்து வளர்ந்திருக்க... அப்படி இருக்கும் போது" "சத்தியமா இல்ல சார். நீங்க எந்த மாதிரி சூழ்நிலைல அப்படி சொன்னீங்கனு எனக்கு நல்லா தெரியும் ... நீங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு எனக்கு நல்ல தெரியும்" "அப்படினா உன் மகளை இப்போ என் கண்ணுல காட்டுவியாம்மா?" என்று ஆனந்தராஜ் இறைஞ்சுதலாக கேட்டார். அஸ்மா அவரை பார்த்த பார்வையில் அவருக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று புரிந்தது. அதுவும் பிரபாவின் முன்னிலையில் அவளை கொண்டுவந்து நிறுத்த அவர் விரும்பவில்லை. அதே நேரம் ஆனந்தராஜ் விருப்பத்தை மறுக்க மனமும் இல்லை. அதனால் அமைதியாக அவர் கேட்டதை செய்தார். அஸ்மா அழைத்து வந்த பெண் அவரின் மகள் மட்டும் அல்ல. ஆனந்தராஜ் வீட்டில் இன்னொரு மகளாக வளர்ந்தவள்.  பாத்திமாவிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. ஏதோ சூனியத்தை வெறித்து பார்ப்பவள் போல் எங்கோ பார்த்து கொண்டு அமைதியாக நின்றாள். அவளை பார்த்த ஆனந்தின் விழிகளினோரம் கண்ணீர் கசிந்தது. பிரபாவிற்கு அவளை பார்க்கும் பொழுது தாங்கமுடியாத துயரம் உண்டானது. எப்பொழுதும் சிரிப்பும் குதூகலமுமாக இருக்கும் பெண்ணின் முகத்தில் இன்று வெறுமை குடிகொண்டிருப்பதை அங்கிருக்கும் மூவராலும் சகித்துக் கொள்ளமுடியவில்லை. பிறகு ஆனந்தராஜ் மெதுவாக அஸ்மாவை திரும்பி பார்த்து, "அம்மா அஸ்மா. நான் வரும் பொழுது நீ எதை பற்றி பேசிட்டு இருந்தனு எனக்கு நல்லா தெரியும். நீ சொல்றதுலயும் ஒரு உண்மை இருக்கு பிரபாவும் இவளோட இந்த நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம் " என்று கூறினார். அதற்குள் பிரபா அவரை பார்த்து, "நீங்க என்ன சந்தேகப்படறீங்களா மாமா?" என்று கேட்டான். "பொறுங்க மாப்பிள்ளை ஏன் அவசர படுறீங்க. பேசுவோம் அதுக்கு தானே வந்திருக்கேன்?" "அம்மா அஸ்மா. பாத்திமா ரொம்ப கலைப்பா இருக்குற மாதிரி தெரியுரா நீ பொய் அவளை உள்ள ஓய்வெடுக்க வெச்சுட்டு வாமா. நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் சில விஷயம் பேசணும்" என்றார் பிரபா அமைதியாக இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். அஸ்மா அறையை விட்டு வெளியில் வந்து ஆனந்தின் முன்னிலையில் அமர்ந்தார் . இப்பொழுது பிரபா ஆனந்தை பார்த்து, "மாமா எங்க மூணு பேருக்கும் பழக்கம் இருக்குனு உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா மாமா?" என்று கேட்டான். அதற்கு ஆனந்தோ, "உங்களுக்கு என்ன மாப்பிள்ளை தோணுது?" என்று பதில் கேள்வி கேட்டார். பிரபா அவரை பார்த்து குறுநகை புரிந்தான்.  "இது நான் ஓரளவு எதிர்பார்த்தது தான். ஆனா இப்போ நீங்க பேசினதை பார்த்தா உங்களுக்கு என்ன விட அதிகமா நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கும்னு தோணுது மாமா" என்றான். இதனை கேட்ட அவரும் புன்னகை புரிந்தார். இப்பொழுது பிரபாவின் முகம் வாட்டமாக மாறியது. "ஆனா பாத்திமாவோட இந்த நிலைமைக்கு நான் காரணம்னு ஏன் மாமா நினைக்குறீங்க?" என்று வேதனையுடன் கேட்டான். "கண்டிப்பா சொல்றேன் பிரபா. ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சிலவிஷயம் தெரிஞ்சுக்கணும் அதே நேரம் சில விஷயங்களை வெளிப்படையா தெளிவு படுத்தனும்" என்று கூறிமுடிப்பதற்குள் பிரபாவின் பார்வை அஸ்மாவின் பக்கம் திரும்பியது. இந்த உரையாடல் ஒன்றும் அஸ்மாவிற்கு உவப்பாக இல்லை. அவருக்கு இந்த மாமன் மாப்பிள்ளை கொஞ்சல்கள் எரிச்சலையே தூண்டிவிட்டது. அந்த எரிச்சல் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. "யோசிக்காதீங்க பிரபா. இப்போ இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சுக்கவேண்டிய உரிமை என்னைவிட அஸ்மாவுக்கு தான் அதிகமா இருக்கு" என்று ஆனந்தராஜ் கூற பிரபா அதை ஆமோதிப்பதுபோல் தலையை மட்டும் அசைத்தான். அவரே மேலும் தொடர்ந்தார்.  "பிரபா என் பொண்ணு உங்ககிட்ட எல்லாவிஷயமும் நேத்தே சொல்லி இருப்பானு எனக்கு தெரியும். ஆனா அவ சொல்லாத அவளுக்கே தெரியாத சில விஷயங்களை நான் உங்கிட்ட சொல்லணும். உங்களுக்கும் த்ரிஷ்யாவிற்கும் ஏற்கனவே பழக்கம் இருக்குனு தெரிஞ்சு தான் அவளை உங்களுக்கு திருமணம் முடிக்க சம்மதிச்சேன். " என்று அவர் கூறியதும் பிரபா ஏதோ பேச வாய் திறந்தான். அவனை பேசவிடாமல் கைஉயர்த்தி நிறுத்தியவர், "இருங்க பிரபா நான் பேசிமுடிச்சுடறேன். அதுமூலம் உங்க எல்லாக் கேள்விக்கும் விடைகிடைக்கும்" என்று கூறி மேலும் தொடர்ந்தார். "இதெல்லாம் நான் உங்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் தான். ஆனா அப்படி சொல்லப்போய் நூர்த்துல ஒரு பங்கா நீங்க இந்த கல்யாணத்த மறுத்துட்டா என்ன பண்றது. த்ரிஷ்யாவோட அவ முழு சுயநினைவோட இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கல்யாணம் பண்றது தப்புனு நீங்க நினைக்கலாம். இல்லனா அப்படி நினைக்காமலும் போகலாம். ஆனா நான் ரிஸ்க் எடுக்க விரும்பல அப்படி அவளுக்கு அவசரமா கல்யாணம் பண்ண வேண்டிய அவசியமும் இருக்கு. அத நான் கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்போ நான் அத விட முக்கியமா நிறைய விஷயம் பேச வேண்டி இருக்கு." "த்ரிஷ்யாவிற்கு நடந்தது விபத்துனு அவ சொல்லி இருப்பா... ஆனா அது விபத்து இல்ல பிரபா. இதை தெரிஞ்சுகுட்டதுக்கு அப்புறம் எனக்கு மைசூர்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுல சம்பத்தை பட்ட மூணு பேர்ல ரெண்டுபேருமே நடந்ததை சொல்றநிலைமைல இல்ல. உங்கள தவிர. ஆனா நீங்களும் உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதால அவரோட பிசினெஸ்ஸா பார்த்துக்கறதுக்காக வேளைக்கு பிரேக் லீவு குடுத்துட்டு வெளிநாடு போய்ட்டாத சொன்னாங்க. நான் என்னைக்குமே என்னோட சொந்த விஷயத்துக்காக என்னோட பதவியை பயன்படுத்தினதில்ல. ஆனா இந்த முறை எனக்கு வேற வழி தெரியல. அதனால் எனக்கு தெரிஞ்ச சிலபேர் வெச்சு மைசூர் கேம்பஸ் ஓட சிசிடிவி ஃபூட்டேஜை ஆய்வு பண்ணதுல எனக்கு சில விவரம் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா? உங்க ட்ரைனிங் சென்டர் இருந்த தெருவுல பாத்திமாவை நீங்க துரத்திட்டு போறீங்க. அவ வேணாம் பிரபானு அழுதுட்டே உங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடினா... இன்னொரு முக்கியமான விஷயம் உங்க மேல் சட்டை உங்கமேல இல்ல பாத்திமா மேல இருந்தது" என்று கூறிவிட்டு ஆனந்தராஜ் பிரபாவை உற்றுப்பார்த்தார். பிரபாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  அஸ்மாவோ, "ஓ" என்று ஓலமிட்டு தலையில் அடித்து அழத்தொடங்கினாள். ஆனந்தராஜ் அவரை சமாதானம் செய்யும் விதமாக அவர் தலையில் கைவைத்து, "அவசர படாத அஸ்மா. நான் இதெல்லாம் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு." இப்பொழுது அஸ்மா, "சார் நீங்க ரொம்ப புத்திசாலினு நினைச்சேன். இவ்வளவு விஷயம் தெரிஞ்ச அப்புறமும் உங்க பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்துடீங்களே!" என்று கூறி மீண்டும் அழுதார். அதற்கு அமைதியாக புன்னகைத்த ஆனந் மேலும் தொடர்ந்தார். "எனக்கு உன் நிலைமை நல்லா புரியுது அஸ்மா. உன்னை மாதிரி தான் நானும் முதல நினைச்சேன். அப்பறம் பிரபவ பத்தியும் அவருக்கு நம்ம பொண்ணுங்க கூட இருந்த பழக்கம் பற்றியும் விசாரிக்க ஆரம்பிச்சேன்." பிரபாவை பத்தி நான் விசாரிச்ச விஷயத்துக்கும் நாங்க பார்த்த அந்த விடியோவிற்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. அப்போ எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்து அந்த விடியோவை திரும்ப பார்த்தேன். அப்போ நான் முதல பார்த்த அதே விஷயம் என் கண்ணுக்கு வேற மாதிரி தெரிஞ்சுது. ஒரு வேலை பிரபா நம்ம பாத்திமாவை தப்பான நோக்கத்தோடு துரத்தி இருந்தா அவர் முகத்துல வன்மமும் குரோதமும் தானே இருக்கனும். மாறா அதுல இரக்கமும் கவலையும் தான் எனக்கு தென்பட்டது. அந்த ஒரு பொறி தான் என்ன இந்த சம்பவங்களை வேற மாதிரி பார்க்க வைச்சுது. அது மட்டும் இல்லாம இந்த விசாரணைல பிரபா த்ரிஷ்யாவை உண்மையா நேசிச்சார்ன்ற விஷயமும் எனக்கு புரிஞ்சுது. இந்த கல்யாணம் நடத்துறது ரிஸ்குனு தெரிஞ்சும் அந்த ரிஸ்க நான் எடுக்க துணிந்தேனா அதுக்கு முழு காரணம் என் தொழில் அனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் மேல நான் வைச்சிருந்த நம்பிக்கை தான். பிரபாவ என்னால ஒரு இடத்துல கூட சந்தேகப்படமுடியல. அதுவும் இல்லாம இப்போ த்ரிஷ்யவிற்கு நிறைய ஆபத்து இருக்கு. இந்த மாதிரி சந்தர்ப்பத்துல அவளை பத்தி எல்லாம் தெரிஞ்சு அவளுக்காக உயிரையே குடுத்து பாதுகாக்க பிரபாவ தவிர வேற யாராலும் முடியாது. அவர் இப்படி யுகத்தில் பேசுவது அஸ்மாவிற்கு சரி என்று படவில்லை. அதையே அவர் வாய்மொழியாக கேட்டுவிட ஆனந்தராஜ் அவருக்கு மறுமொழி கூறினார். "நீ சொல்றது சரிதான்மா. நான் எல்லாம் மூணாவது மனுஷங்க மூலமா தெரிஞ்சுகூட்ட விஷயம்றதால அதுல எனக்கு சிலவிஷயம் இலைமறைய காய்மறையா தான் தெரியவந்தது. அதனால சமந்தப்பட்ட பிரபாவே முழுசா என்ன நடந்ததுனு சொல்லணும்னு தான் நானும் எதிர்பாக்குறேன். அவர் சொன்னதுக்கப்புறம் அவர் சொல்றத நம்பலாமா வேணாமான்னு முடிவெடுக்க வேண்டியது உன் பொறுப்பு. அப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்." என்று கூறி பிரபாவை நிமிர்ந்து பார்த்தார். நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். இனி உன் முறை என்பது போல இருந்தது அவர் பார்வை. பிரபா யோசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும் எங்கிருந்து சொல்வது என்றே அவனுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவன் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான். "மாமா உங்களுக்கு என்ன பத்தி எவ்வளவு தூரம் தெரியும்னு எனக்கு தெரியல. ஆனா நான் என்ன பத்தி சொல்லவேண்டியதை சொல்லிடறேன். எங்க அப்பா பிரபல மரியா சைக்கிள்ஸ் கம்பெனியோட ஓனர் என்பதும் அது ஒருவகைல தலைமுறை வழியில வந்த தொழில் என்பதும் உங்களுக்கு நல்லவே தெரியும். எங்க பெரிய தாத்தா இப்போ அப்பான்னு இந்த தொழிலை பாத்துக்குறாங்க. அந்த வரிசைல நான் இந்த தொழிலை நடத்தணும்ன்றது தான் அப்பாவோட ஆசை. ஆனா எனக்கு அதுல சுத்தமா இஷ்டம் இல்ல. " "எனக்கான அடையாளத்தை நானே தேடிக்கணும்னு தான் நான் நினைக்குறேன். சந்தானகிருஷ்ணனோட புள்ளன்னு மத்தவங்க சொல்லும் போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்ததோ அதே அளவு பெருமை பிரபா வோட அப்பானு அவரை சொல்லும்போதும் அவருக்கு இருக்கணும்னு நினைச்சேன். என் முடிவ அப்பாவும் ஏத்துக்குட்டாரு" "எனக்கு ப்ரோக்ராம்மிங் நல்லா வந்தது. அதனால நான் படிச்சு முடிச்சதும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேளைக்கு சேர்ந்தேன். அங்கேயே ட்ரைனிங் டூடர் ஆகுற வாய்ப்பும் கிடைச்சுது. இந்த சந்தர்ப்பத்துல தான் உங்க பொண்ண முதல் முறையை சந்திச்சேன். "  "நான் எத்தனையோ பொண்ணுங்கள பாத்திருக்கேன். ஆனா உங்க பொண்ண பார்த்த சம்பவம் எனக்கு ஜென்மத்துக்கும் மறக்காது. அவளையும் பாத்திமாவையும் கிண்டல் பண்ண ஒரு ஹிந்தி காரப் பையனை துவைச்சு காயபோட்டுட்டா. அவனை தோப்புக்கரணம் போட வைச்சா . குட்டிக்கரணம் அடிக்க வைச்ச. அந்த பயன் அன்னைக்கு அந்த கம்பெனிய விட்டு சொல்லாம கொள்ளாம ஓடினவன் தான். அதுக்கப்பறம் அவன் திரும்பவே இல்லை. " என்று கூறி நிறுத்தியவனின் கண்கள் கனவில் சஞ்சரிக்க தொடங்கிவிட்டது. அவன் நினைவுகள் மெல்ல அந்த நாட்களுக்குள் பயணிக்க தொடங்கின.  அவன் ஒரு புன்சிரிப்போட நடந்தவற்றை கவனித்துவிட்டு தன் வகுப்பிற்குள் சென்றுவிட, ஐந்து நிமிடம் கழித்து த்ரிஷ்யாவும் பாத்திமாவும் உள்ளே வந்தனர்.  சிலநிமிடங்களுக்கு முன்பாக மறைந்து போன அவனின் புன்னகை த்ரிஷ்யாவை பார்த்த மாத்திரத்தில் மீண்டும் வந்து அவன் முகத்தில் ஒட்டிக்கொண்டது. வகுப்பிற்குள் நுழைய இருந்த இருவரையும் அவன் தடுத்து நிறுத்தி, "ஹலோ ... யெல்லோ சுடி அன்ட் வைட் சுடி. பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு உள்ளவரணும்ங்கிற மேனர்ஸ் கூட தெரியாதா?". என்றான்.  த்ரிஷ்யாவும் பாத்திமாவும் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தனர். அவன்தான் டுட்டோர் என்று அவர்கள் சத்தியமாக நினைக்கவில்லை. யாரோ ட்ரைனி இப்பொழுது தான் உள்ளே சென்றுகொண்டிருக்கிறான் என்று நினைத்தார்கள். "சாரி நாங்க உங்கள கவனிக்கல" என்று அவசரமாக பதிலளித்தாள் த்ரிஷ்யா. "இப்போ டைம் என்ன தெரியுமா. 9:03. கிளாஸ் டைம் 9 ஷார்ப். நேத்தே உங்களுக்கு ஃபஸ்ட் டேவா இருக்கலாம். ஆனா நேத்து நடந்தது இண்டக்ஷன் கிளாஸ். அப்படி பார்த்தா இன்னைக்கு தான் ட்ரைனிங்க்கு ஃபஸ்ட் டே கிளாஸ். பிரஸ்ட் டே லேட்டா வர்றது நீங்க ரெண்டுபேர் மட்டும் தான். " "அப்போ நாளைக்கு லேட்டா வந்த பரவாயில்லையா சார்ர்ர்ர்ர்ர் " என்று ராகமாக இழுத்தாள் த்ரிஷ்யா. அவளின் இந்த துடுக்கான பேச்சு அவனை கவர்ந்தது. அதன் காரணத்தினாலேயே அவளை மேலும் சீண்ட ஆவல் கொண்டது அவன் மனம். "அது நாளைக்கு வரும்போது தெரியும்" என்று அவன் அடக்கப்பட்ட புன்னகையோடு சொல்ல,  "அப்போ இன்ணைக்கு நாங்க உள்ள போலாம் இல்லையா.?" என்று கேட்டாள் த்ரிஷ்யா! "போகலாம் ஆனா உள்ளே இல்ல வெளில." சட்டென்று த்ரிஷ்யா பதில் ஏதும் பேசுவதற்கும் பாத்திமா அவளை தரதரவென்று இழுத்துக்கொண்டு அறையின் வாயிலுக்கு சென்று நிறுத்தினாள். கிளாஸ் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி மதியம் ஒரு மணிவரையில் நடைபெறும். இடையில் பதினோரு மணிக்கு இடைவேளை நேரம். அனால் த்ரிஷ்யா அந்த இடைவேளை நேரத்தில் கூட அந்த வாசலை விட்டு அகலவில்லை. மூன்று மணிநேரமும் அந்த இடத்தை விட்டு அசைவேனா என்று பிடிவாதமாக நின்றாள். பாத்திமாவிற்கு கால் வலித்தது தான். ஆனால் அவளுக்கு த்ரிஷ்யாவுடன் பழகிய பிறகு இதெல்லாம் பழகிப்போய்விட்டது. மதியம் ஒரு மணிக்கு பிரபா வகுப்பு முடிந்து வெளியே வந்த பொழுது த்ரிஷ்யாவும் பாத்திமாவும் அறைவாயிலில் நின்று கொண்டிருந்தார்கள். "இப்போ நீங்க ரெண்டுபேரும் உள்ளே போகலாம்" என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறினான் . அங்கு மதியநேரங்களில் பயிற்சி நடைபெறாது. ஆனால் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை செயல் முறை கல்வி பயிலவேண்டும். ஒரே மாதத்தில் சுமார் 14000 பணியாளர்களுக்கு பயிற்சி தரவல்லமைகொண்ட வளாகம் அது. அந்த பயிற்சி வளாகத்தில் சுமார் பல ரகமான உணவகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு உணவிற்காக த்ரிஷ்யாவும் பாத்திமாவும் உணவகத்திற்கு சென்றனர். "என்னடி சாப்பாடு இது. சௌத்திண்டியன் புட்னு சொல்லி சப்பாத்தியை விக்குறானுங்க. சவுத் மீல்ஸ்னு சொல்லி இவன் தர மீல்ஸ வாய்ல்ல வைக்கமுடியால. சை... இப்போ தான் அஸ்மாவோட அருமை புரியுது " என்று புலம்பிக்கொண்டே பாத்திமா சாப்பிட்டுக்கொண்டிருக்க த்ரிஷ்யா மட்டும் யாரையோ வெகுநேரமாக தேடிக்கொண்டிருந்தாள். "ஏஹ் த்ரிஷ்யமாலா யாரை தேடுற. " "ஹ்ம்ம் காலைல நம்மள திட்டினான்ல அந்த டுட்டர் தான் கண்ணுல படுறானானு பார்த்துட்டு இருக்கேன். " "திட்டினான் இல்ல. திட்டினார். மரியாதையா பேசு. சரி அவரை ஏன் தேடுற.... அதுவும் இல்லாம. இங்க மொத்தம் எட்டு ஃபுட் கோட் இருக்கு. இதுல அவர் எங்க சாப்பிட போனாரோ யாருக்கு தெரியும்." "இல்ல அவன் உள்ளவரும்போது நான் பாத்தேன். இப்போ ஆள காணும். " "ச்சு இப்போ தானே சொன்னேன் மரியாதையா பேசுனு." "அவன் என்ன நம்ம காலேஜ் ப்ரோபஸரா ஏதோ நமக்கு ரெண்டு வருடம் முன்னாடி வேளைக்கு சேர்ந்திருப்பான். அவ்வளவு தான்" என்று சொல்லி கொண்டிருந்தவள் உற்சாகம் பொங்க, "ஏஹ் அதோ அதோ.. அங்க இருக்கான் பாரு. " என்றாள். "இருக்கட்டும் நீ என்ன பண்ண போற" என்று பாத்திமா அவளை சந்தேகமாக கேட்டாள். "நான் என்ன பண்ண போறேன் சும்மா கண்டுபிடிச்சுட்டேன். சொன்னேன் அவ்வளவு தான்" என்று அவள் சமாளித்தாலும் பாத்திமா இத்தனை வருட பழக்கத்தில் அவளின் உள்மனதை படித்து பட்டம் பெற்றவளாயிற்றே. அவளின் செயல்களை கண்காணித்துக்கொண்டே இருந்தாள் இருவரும் உணவு முடித்து எழுந்து கைகழுவ சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் தான் பிரபா அவன் நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்தான். அவர்கள் பிரபா இருந்த மேஜை அருகே சென்றபொழுது அங்க இருந்த கூட்டநெரிசலில் நிலைத்தடுமாறி த்ரிஷ்யாவின் தட்டு சாய்ந்து அதில் மீதமாக இருந்த ரசம் முழுவதும் பிரபாவின் சட்டையில் ஊற்றப்பட்டது. உடனே சுதாரித்து நிமிர்ந்த த்ரிஷ்யா அவசரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அவசரமாக மேஜையை விட்டு எழுந்த பிரபா யாரென்று திரும்பி பார்க்க அங்கே த்ரிஷ்யாவை கண்டான். அந்த கணத்தில் அவளின் முகத்தில் எட்டி பார்த்த குறும்புத்தனத்தை அவன் கவனிக்கவும் தவறவில்லை. உடனே த்ரிஷ்யா பாத்திமாவின் கையை பிடித்துவந்து வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். பாத்திமா த்ரிஷ்யாவை திட்டி தீர்த்துவிட்டாள்.  "உன் பழிவாங்கும் படலம் முடிஞ்சுதா திருப்தியா?" த்ரிஷ்யவோ பதில் ஏதும் சொல்லாமல் இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமிதமாக சிரித்தாள் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் அவனிடம் அவள் படாத பாடு படப்போகிறாள் என்பதை அறியாமல்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா