மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 7Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 7

Quote from monisha on November 13, 2025, 10:45 AM

அத்தியாயம் – 7

கவிதாவும் ரஞ்சனும் அடுத்த நாள் காலை கிளம்பி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பங்களாவிற்குச் சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன்பாகவே கேமரா குழு அங்கே வந்திறங்கி இருந்தனர்.

கவிதா அவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள, லொகேஷன் எல்லாம் பார்த்துட்டோம் நீங்களும் சாரும் ரெடியாகிட்டு வந்தீங்கனா, போட்டோஸ் எடுத்துடலாம்” என்றான் அவர்களுள் தலைமையாக இருந்த நபர்.

“யா ஸுர்” என்றவள் தன்னுடைய உடையலங்காரத்திற்கு உதவிக்கு ஆனந்தியை அழைத்து வந்திருந்தாள்.

‘உங்களுக்கு யாராச்சும் ஹெல்புக்கு வேணுமா’ என்று ரஞ்சனிடம் கேட்டதற்கு வேண்டாமென்று விட்டான்.

அவனுக்கு அந்த போட்டோ ஷுட்செய்வதிலேயே விருப்பமில்லை. வராமல் இருக்க என்னென்னவோ செய்து பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை. பிரகாஷ் அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்.

மாடியிலிருந்த வலது பக்க அறையை அவனுக்கு கொடுத்துவிட்டு, இடதுபக்க அறையில் கவிதாவும் ஆனந்தியும் நுழைந்தனர். தனக்குத் தரப்பட்ட அந்த கோட் சூட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனின் மனம் எங்கெங்கோ தாவியது.

“ராணி, இந்த டிரஸ பையனுக்கு போட்டுவிடு” என்று ராகவன் அந்த கோட் சூட்டை மனைவியிடம் தந்தார்.

“ரஞ்சு கண்ணா அப்பா உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்காரு. பாரு சூப்பரா இருக்கு. வா வா போட்டுக்கோ”

“உஹும் எனக்கு இது பிடிக்கல. வேண்டாம். நான் பாட்டி வாங்கி தந்த டிரஸ் போட்டுக்கிறேனே. எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு”

“இதுவும் நல்லதான் இருக்கும். நீ போட்டு பாரேன்”

“ம்மா வேணாம் ம்மா. நான் பாட்டி வாங்கி தந்த ரெட் டிஷர்ட்டை போட்டுக்கிறேனே”

“கேக் வெட்டறதுக்கு அப்பா வாங்கினதைப் போட்டுக்கோ கண்ணா. அப்புறமா பாட்டி வாங்கி கொடுத்ததை போட்டுக்கலாம்” என்று ஜெயராணி பொறுமையாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க, “உஹும் எனக்கு இது வேண்டாம்மா?” என்று ரஞ்சன் பிடிவாதமாகத் தள்ளிவிட்டான்.

அந்த சமயம் பார்த்து உள்ளே வந்த ராகவன், “என்ன, பிடிக்கல” என்று கரகரத்த குரலில் கேட்டான்.

“பிடிக்கலன்னு எல்லாம் சொல்லலங்க. இந்த டிரஸ் அப்புறமா போட்டுக்கிறேன். இப்போ பாட்டி வாங்கி தந்ததை போட்டுக்கிறனு சொல்றான்” என்று ரஞ்சனின் அம்மா ஜெயராணி பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

இருப்பினும் ராகவனுக்கு கோபமேறிவிட்டது. “என்ன? நான் வாங்கி தந்ததை போட மாட்டனாமா, போடா மாட்டனாமா” என்று வெறிபிடித்தவன் போலக் கத்தத் தொடங்கிவிட்டான்.

“இல்லங்க அவன் அப்படி சொல்லல” என்று ஜெயராணி சமாளித்துக் கொண்டிருக்கும் போதே ராகவன் பெல்ட்டை கழற்ற, “என்னங்க இருங்க. நான் சொல்றேன். அவன் போட்டுக்குவான்” என்று ஜெயராணி கணவனைத் தடுக்கப் பார்த்தாள்.

பயத்தில் ரஞ்சனோ கதவின் பின்புறம் சென்று ஒளிந்து கொண்டான். ராகவன் அவனைச் சீற்றமாக வெளியே இழுத்து பெல்ட்டை வீச, “அம்ம்ம்ம்ம்மா” என்று வலியில் துடிதுடித்து போனான்.

“இப்போ சொல்லு போட மாட்டேனு” என்று ராகவன் பெல்ட்டுடன் மிரட்ட, “போட்டுக்கிறேன் பா போட்டுக்கிறேன் பா” என்று அழுது கொண்டே கெஞ்சினான்.

“குட் பாய்” என்று விகாரமாகச் சிரித்தவன், “பார்த்தியா போட்டுக்கிறேன்னு சொல்லிட்டான். பிள்ளைக்கு இப்படி சொல்லணும்” என்று ராணியிடம் கர்வமாக உரைத்தார்.

மகனை இறுக அணைத்து கொண்டு ராணி அழுதாள். நடந்த விஷயத்தை எல்லாம் அறிந்த ரஞ்சனின் பாட்டியும் ராணியின் அம்மாவுமான சாரதா அதிர்ச்சியானார்.

“இத்தனை நாளா அவர் கோபத்த என்கிட்ட மட்டும்தான் காட்டுனாரு. இப்போ புள்ளகிட்டயும் காட்ட ஆரம்பிச்சிட்டாரும்மா” என்று ராணி வருத்தப்பட, “எல்லாம் என் தப்பு என் தப்பு” என்று தலையிலடித்து கொண்டு அழுதார் சாரதா.

அவனுடைய எட்டாவது வயது பிறந்த நாள் அது. அழுது கொண்டிருந்த அவனை அணைத்துக் கொண்டு அம்மாவும் பாட்டியும்,

“எல்லாம் சரியாயிடும் கண்ணா எல்லாம் சரியாகிடும் கண்ணா” என்று கூறியது இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. எதுவுமே சரியாகவில்லை. நிலைமை இன்னும் மோசமானதுதான் மிச்சம்.

‘இப்படி அழுமூஞ்சியா எல்லார் முன்னாடியும் வந்து நிற்கக் கூடாது. புரிஞ்சதா... சிரி நல்லா சிரி... ஆ அப்படி’

அன்று பிறந்த நாள் விழாவில் அப்பா அவனைச் சிரிக்கச் சொன்னார். சிரிக்காவிட்டால் அடிப்பாரோ என்ற பயத்திலேயே சிரித்தான். சிரமப்பட்டு வலியுடன் சிரித்தான்.

அதன்பிறகு அவன் வாழ்வில் எப்போது இயல்பாகச் சிரித்தான் என்று நினைவில்லை. காயங்களும் வடுக்களும் பதிந்து போன அளவுக்கு நல்ல நினைவுகள் எதுவும் ஆழமாக அவனுக்குப் பதிவாகவில்லை.

உறக்கத்தில் கூட அப்பாவின் கோபமும் அதட்டலையும் தாண்டி வேறு எதுவும் வந்ததில்லை. பல காலமாக அப்பாவின் கைப்பாவையாகவே இருந்துவிட்டதால் தனித்து எப்படி இயங்குவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது படபடவென்று ஒரு சத்தம். மிரட்சியுடன் கதவைப் பார்த்தான்.

“ரஞ்சன் ரெடியா?” என்று கேட்டாள் கவிதா. அவன் இன்னும் உடையைக் கூட மாற்றவில்லை.

பதற்றத்துடன் எழுந்து சட்டையைக் கழற்றிக் கொண்டே, “பைவ் மினிட்ஸ்” என்றான்.

“நானே டிரஸ் பண்ணிட்டேன். உனக்கு என்ன?”

“தோ வரேன்”

“சீக்கிரம் ரஞ்சன்” என்றவள் சொல்ல அவன் பரபரவென்று உடைகளை மாற்றிவிட்டு அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் முன்பு நின்றான். நன்றாகவே இல்லை. அவனுக்குப் பிடிக்கவே இல்லை.

சோளக்காட்டுப் பொம்மைக்குச் சட்டை மாட்டிவிட்டது போல இருந்தது. எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றனர்.

“ரஞ்சன், எவ்வளவு நேரம். போட்டோகிராபர் வேற டென்ஷன் ஆகிறாரு. ரொம்ப வெயில் ஏறத்துக்கு முன்ன போட்டோஸ் எடுக்கணுமாம்?”

அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இப்படியே அவள் முன்பாக செல்வதற்குக் கூச்சமாக இருந்தது.

“ரஞ்சன்... என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா.. டிரஸ் எதுவும் பத்தலயா என்ன? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். முதல கதவை திற. கதவை திறன்னு சொன்னேன்” அப்படியே தந்தையின் அதிகாரத் தொனியைக் கேட்டது போல இருந்தது.

“இப்போ கதவை திறக்க போறியா இல்லையா?”

அடுத்த நொடியே கதவைத் திறந்துவிட்டவன், நிமிர்ந்து அவளைப் பார்க்கவே இல்லை. என்ன சொல்ல போகிறாளோ என்று பயந்து தலையைக் குனிந்தபடியே நின்றான்.

அவள், “குட்” என, அவன் ஆச்சரியத்துடன் நிமிர்ந்தான். சிவப்பு நிறச் சேலையில் அழகாய் அலங்கரித்தபடி இருந்தாள். ஒரு நொடி தன்னை மறந்து அவளை ரசித்தவன், பின்னர் மீண்டும் எப்படி அவள் அருகில் தான் நிற்க முடியும் என்று உள்ளத்தால் குறுகினான்.

“இந்த போட்டோ ஷுட் எல்லாம் கண்டிப்பா பண்ணணுமா?” என்று மிக மிக மெல்லிய குரலில் கேட்டான்.

“என்ன?”

“இல்ல தாத்தாகிட்ட எனக்கு இதெல்லாம் வராதுனு சொன்னேன். அவர்தான் கேட்கல”

“இதெல்லானா... புரியல எதெல்லாம்?” அவள் கைகளைக் கட்டியபடி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

“இல்ல போட்டோவுக்கு போஸ் கொடுக்கறது எல்லாம் எனக்கு வராது.” என்று மெதுவாகச் சொன்னான்.

பேசிக் கொண்டிருந்தவன் விழிகள் அவள் கண்களைப் பார்க்கமுடியாமல் அலைபாய்ந்தபடி இருந்தன.

“ரஞ்சன் லுக் அட் மை ஐஸ்... ரஞ்சன்” என்று அதட்டினாள்.

உடனடியாக அவள் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவள் விழிகளை எதிர்கொள்ள அவனுக்குச் சிரமமாக இருந்தது.

“என் முகத்துல என் கண்ணு இங்கே இருக்கு. ஹியர்... லுக் ஹியர்னு சொன்னேன்” மீண்டும் மிரட்டினாள்.

அவன் அவள் கண்களைப் பார்த்தான். அழகான அதேநேரம் தீர்க்கமான விழிகள் அவை.

“யார்கிட்ட பேசினாலும் அவங்க கண்ணை பார்த்து பேசணும். புரிஞ்சுதா?”

“ம்ம்ம்”

“ஓகே இந்த போட்டோ விஷயத்துக்கு வருவோம். எனக்கும் இதுல எல்லாம் பெருசா விருப்பமில்லதான். இந்த எலைட் சமூகத்துக்காக இதெல்லாம் நம்ம செஞ்சுத்தான் ஆகணும்” என்று அழுத்தி சொன்னாள்.

“ஆனா நான்...” என்று அவன் நிறுத்திவிட “இன்னும் என்ன ஆனா” என்று கடுப்பாகக் கேட்டாள்.

“இல்ல, போட்டோஸ்ல எல்லாம் நான் நல்லாவே இருக்க மாட்டேன்”

அவள் ஏளனமாகச் சிரித்து, “யார் சொன்னா உனக்கு அப்படி?” என்றாள்.

“யாரும் சொல்லல, எனக்..கே தெரியும்”

“புல் ஷிட், நீ அழகா இல்லன்னு நீயே நினைசுக்கிட்டியாக்கும். அப்படி எல்லாம் கிடையாது. யூ லுக் குட்.”

அவன் ஆச்சரியத்துடன் நிமிர, “உண்மையாதான், யூ லுக் குட்” என்றாள். சட்டென்று உள்ளத்தில் ஒரு விதப் பரவச உணர்வு பரவியது.

“அப்படியா, ஆனா இந்த டிரஸ்...” என்று மீண்டும் அவன் குரலின் சுருதி இறங்கியது.

அவன் மனநிலையை ஒருவாறு புரிந்து கொண்டவள், “டிரஸ்ல எந்த பிரச்னையும் இல்ல ரஞ்சன். ஒவ்வொரு டிரஸ்க்கும் ஒரு எலிகன்ட் லுக் இருக்கும். என்னதான் நல்லா தச்ச டிரஸாவே இருந்தாலும் அதை நம்ம கேரி பண்ற விதத்துலதான் அது அழகா மாறும்.

நீ முதல நம்பிக்கையா பீல் பண்ணு. நான் ஸ்மார்டா இருக்கேன்னு நம்பு. கெத்தா நிமிர்ந்து நில்லு” என்றாள்.

அப்போதும் அவன் நம்பிக்கையன்றி அவளைப் பார்த்தான்.

“ஒரு நிமிஷம்” என்றவள் வெளியே சென்று சில ஒப்பனை பொருட்களை எடுத்து வந்தாள்.

“இப்படி வந்து உட்காரு” என்று அவனை அமர வைத்து முடியில் ஏதோ ஸ்ப்ரே போல செய்து களைத்துவிட்டாள். இலேசாக முகத்தில் சில ஒப்பனைகளைப் போட்டுவிட்டாள்.

அவளின் எந்தச் செய்கைகளுக்கும் எதிர்வினையாற்றாமல் அவன் அப்படியே சிலை போலக் கிடந்தான்.

ஒப்பனைகளை முடித்து அவனை ஆழ்ந்து பார்த்தவள், “என்னவோ குறையுதே. ஆமா டை எங்கே?” என்றாள்.

“தெரியலயே. நான் பார்க்கல”

“இல்ல, டை இருந்துச்சே”

அந்த அறையை சுற்றி பார்த்தவள், “இதோ கீழே கிடக்கு” என்று அதனை எடுத்து அவன் கையில் தந்தாள்.

“இந்தா, டையை கட்டு”

அவன் திருதிருவென்று விழிக்கவும், “என்ன டை கூட கட்ட தெரியாதா உனக்கு?” என்று கேட்க, அவன் ‘இல்லை’ என்று தலையசைத்தான்.

“இந்த தடவ நான் கட்டிவிடுறேன். எப்படி கட்டுறேனு நல்லா பாத்துக்கோ. அடுத்த தடவ நானோ தாத்தாவோ கட்டிவிட மாட்டோம். சொல்லிட்டேன் ” என்று கறாராக சொன்னவள், அதனை அவன் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிட்டாள்.

அதனை பார்க்க முயன்றாலும் அவன் விழிகள் என்னவோ அவள் முகத்திலேயே சென்று நின்றது.

மை தீட்டிய விழிகளும் வளைந்த புருவங்களும் வட்டமான சிறிய பொட்டும் காதில் அசைந்தாடும் ஜிமிக்கியும் என்று மனம் அலைபாய்ந்தது.

சற்றுமுன்பு அவள் விழிகளை நேராக நோக்க தயங்கிய அவன் விழிகள், இப்போது அவளைத் தாண்டி வேறு எதையுமே பார்க்கவில்லை.

அவள் கட்டி முடிக்கும் வரை அவன் மனம் மொத்தமாக அவளிடம் தஞ்சம் புகுந்துவிட, “ஓகே கட்டியாச்ச, சரி வா” என்று சொல்லி அவனுள் பொங்கிய உணர்வுகளைக் களைத்தாள்.

அவன் எழுந்து கொள்ள, கண்ணாடி முன்பு வரச் சொல்லிக் கைகாட்டினாள். அப்போதும் அவன் தயக்கத்துடனே சென்றான்.

“ப்ச், நிமிர்ந்து நேரா நில்லு. தலையை நேரா வை. கொஞ்சம் கெத்தா... இதை பாரு இப்படி” என்று எப்படி எல்லாம் நிற்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தாள்.

அப்போதும் அவள் சொல்லிக் கொடுத்தது போல அவனால் நிற்க முடியவில்லை.

“இத பாரு, என்னை பாரு ரஞ்சன்” என்று செய்து காட்டிய போதும் அவனால் முடியவில்லை.

“ப்ச் என் பொறுமையைச் சோதிக்காத, இப்படி நில்லேன் டா” என்று இறுதியாக நெருங்கி வந்து அவன் தோள்களைத் தொட்டு நேராக நிறுத்தினாள். தலையைத் தூக்கிவிட்டாள்.

அவளின் அந்த தொடுகை... அந்த ஸ்பரிஸம் அவனை என்னவோ செய்தது.

அவள் தொடுகைக்கு ஏற்றார் போல அவன் உடலும் மனமும் இலகுவாக வளைந்து கொடுக்க தொடங்கியது.

“யா தட்ஸ் இட். கொஞ்சமா சிரி... ரஞ்சன் ஸ்மைல். அப்படிதான்” என்றவள் அவனை அப்படியே கண்ணாடியின் புறம் திருப்பினாள்.

அந்த காட்சியை பார்த்தவன் வாயடைத்து நின்றுவிட்டான். அவன்தானா அது? நம்பவே முடியவில்லை. இது போல அவன் தன் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்ததே இல்லை.

அப்படியே பார்த்தாலும் கூனிக்குறுகிய அவன் உள்ளத்தின் வெளிப்பாடுதான் கண்ணாடியிலும் அவனுக்கு தெரியும். அதனாலேயே கண்ணாடி பார்க்கும் பழக்கத்தையே அவன் விட்டொழித்துவிட்டான்.

ஆனால் இன்று அவன் பார்ப்பது என்ன? இன்னும் ஆச்சரியமாக இருந்தது. நம்ப முடியவில்லை.

அருகே நின்ற கவிதா, “யூ லுக் குட் மேன்” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தாள். வியப்புடன் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தவன் விழிகளில் நெகிழ்ச்சியில் கண்ணீர் சுரந்தது.

கண்ணாடியில் தெரிந்தது அவன் பிம்பமாக இருக்கலாம். ஆனால் அது அவள் வடித்தது. அன்று அவளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒவ்வொரு படமும் அத்தனை அழகாக அமைந்தது. அந்த நொடி அழுகு என்பது வெறும் முகத்திலிருந்து வெளிப்படுவதில்லை என்று விளங்கியது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா