மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)ananthay …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)ananthayo-15

Quote from monisha on June 2, 2020, 9:47 PM

15

அந்த சூழ்நிலையின் கணம் தாங்காமல் அதை எளிதாக்கும் முயற்சியில் இறங்கினான் சரவணன்.

"சரி உன் ஜோடி புறா இல்லாம நீ தனியா வந்ததே இல்லையே. இன்னைக்கு என்ன திடீர்னு தனியா வந்திருக்க." என்று சரவணன் கேட்க பாத்திமாவின் கண்கள் பளிச்சிட்டன. உற்சாகம் பொங்கிய மனதை அடக்கியவண்ணம் பாத்திமா அவனுக்கு பதில் உரைத்தாள்.

"த்ரிஷ்யாவுக்கு உடம்பு சரி இல்ல. இரண்டு நாளா காய்ச்சல். அவளை சாப்பிட வைச்சு மாத்திரை குடுத்துட்டு அவ தூங்கின அப்புறம் தான் இங்க வந்தேன். ரூம்ல என்னவோ மாதிரி தனிமையை இருந்துது. அதான் இங்க வந்தேன்."

"உடம்பு சரி இல்லையா? டாக்டர் என்ன சொன்னாங்க. சாதாரண காய்ச்சல் தானா... இல்ல ..?"

"சாதாரண காய்ச்சல் தான் பிரபா அண்ணா... நான் உங்கள அண்ணானு கூப்பிடலாமா?"

அவளின் அண்ணா என்ற வார்த்தையில் பிரபாவின் முகம் பூவாய் மலர்ந்தது. "என்ன நீ அண்ணனு கூப்பிடலானா வேற யாரை கூப்பிடுவா?" என்று வினவ,

"சரி சரி உங்க பாசமலர் தோட்டத்தை தண்ணி ஊத்தி அப்புறமா வளர்த்துக்கோங்க. இப்போ விஷயத்துக்கு வருவோம். சரி பாத்திமா.

பிரபாவோட சித்தப்பா நல்லவர் இல்ல. அதுக்கு எங்களை ஏன் ஒதுக்கணும். இவ்வளவு நாள் எங்க கூட பழகியும் உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை வரலன்னு தானே அதுக்கு அர்த்தம்." என்று சரவணன் அழுத்தமாக கேட்டான். அவனின் குரலில் கோபம் இல்லை. இவர்கள் தம்மை நம்பவில்லையே என்று ஆற்றாமை தான் இருந்தது.

"அவ மனசுல என்ன இருக்குனு இதனை நாள் கூடவே இருக்குற எனக்கே தெரியல. அவ்வளவு அழுத்தமா இருக்கா. கொஞ்சம் நாளா என்கூட கூட சரியாய் பேசுறதில்ல. ஒரு வேலை பிரபா அவங்க சித்தப்பா கூட தொடர்பு வைச்சு இருக்காருங்கிற கோபமா கூட இருக்கலாம்."

இதை கேட்ட பிரபாவிற்கு கோபம் அதிகரித்தது.

"எதையுமே தெளிவா பேசி புரிஞ்சுக்க மாட்டா உன் பிரெண்ட். அவளுக்கு தான் தான் பெரிய புத்திசாலினு நினைப்பு. எனக்கு நினைவு தெரிஞ்சு நாளில இருந்து நான் அவரை நேர்ல பார்த்ததே இல்ல. அம்மா ஒரு ஒரு தரம் சொல்லி இருக்காங்க. அப்பாவுக்கு ஒரு தம்பி இருந்ததாவும் அவர் பழக்கவழக்கம் சரி இல்லாத காரணத்தால தாத்தா பாட்டியே அவரை வீட்டை விட்டு துரத்திட்டாங்கனும். வீட்டுக்கு ரீசன்ட்டா போனப்ப பழைய ஆல்பம்ல இருந்த போட்டோ எல்லாத்தையும் மொபைல்ல போட்டோ எடுத்தேன். உங்க ரெண்டு பெருக்கும் காட்டலாம்னு தான். எனக்கே தெரியாம அதுல இந்த போட்டோவும் இருந்திருக்கு."

"இதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா பாத்திமா?"

"இல்ல பிரபா அண்ணா. நான் த்ரிஷ்யா கிட்ட பேசுறேன்."

"ஒன்னும் வேண்டாம் அவளுக்கா அறிவு வந்து என்கிட்ட இதை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா கேட்கட்டும். எனக்காக நீ பொய் சிபாரிசு பண்றதுக்கு அவ என்ன கௌர்மெண்ட் ஜாபா. அவளை எப்படி டீல் பண்றதுனு எனக்கு தெரியும்." என்று கூறி விட்டு பிரபா சரவணனுடன் சென்றுவிட்டான்.

இன்னும் மூன்று நாட்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் பிரபாவும் திரஷ்யாவும் நேரெதிரே சந்தித்தனர்.

"ஹாய் த்ரிஷ்யா" என்ற பிரபாவின் அழைப்பிற்கு முறைப்பையே பதிலாக தந்த த்ரிஷ்யா அவனை தாண்டி சென்றுவிட்டாள்.

இந்த முறை, "ஹேய் குல்ஃபீ" என்று அழைக்க த்ரிஷ்யாவிற்கு கோபம் தலைக்கேறியது. பாத்திமா தன் சிரிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"த்ரிஷ்யா ஓ மை டார்லிங்" என்ற அவனின் அடுத்தக் கனையில் த்ரிஷ்யாவின் பொறுமை பறந்தோடியது.

அவள் வேகமாக பிரபாவை நோக்கி அவனை அடிக்க உயர்த்திய கையை பற்றியவன் அவள் கண்களை நேராக சந்தித்தான். அவன் பார்வையின் தீவிரம் தாங்காமல் த்ரிஷ்யா தலையை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.

"ஏன் த்ரிஷ்யா என்ன ஒதுக்குற?"

"நீங்க யாருனே எனக்கு தெரியாது. நான் ஏன் உங்ககிட்ட பேசணும்?"

"அப்போ கண்டிப்பா நீ ஒரு நல்ல ஐ டாக்டர பாக்கணும்."

"என் பொறுமையா சோதிக்காம வழிய விடுங்க."

"விடலன்னா?"

"ஈவடீசிங்கினு உங்களை உள்ள தூக்கி போட்டிருவேன். "

"ஓ அப்படியா? சரி இன்னும் ரெண்டே நாள்ல நீயா வந்து என்கிட்ட பேசுவ. உன்னை நான் பேச வைப்பேன்" என்று சவாலாக கூறிவிட்டு சென்றான் பிரபா.

அவன் என்ன செய்ய போகிறான் என்று தெரிந்து கொள்ள எண்ணிய தன் ஆவலை கட்டுபடுத்தியபடி த்ரிஷ்யா மேலே நடந்தாள்.

இரண்டு நாள் கழிந்து அந்த மோசமான நாளும் வந்தது. த்ரிஷ்யா மற்றும் பாத்திமாவின் வாழ்க்கையை திசை அறியாமல் மாற்றிய அந்த கொடிய நாளை பற்றி பிரபா, அஸ்மாவிற்கும் ஆனந்தராஜிற்கும் கூறும் முன்னரே த்ரிஷ்யாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அந்த கைபேசி அழைப்பு அவர்கள் மூவரையும் நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது.

பிரபா அந்த அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆனந்தராஜ் அவனை அழைப்பை ஏற்கும்படி கூறினார்.

"சொல்லுமா த்ரிஷ்யா."

"சாரி. ஒரு முக்கியமான வேலையா போறீங்கன்னு தான் சொல்லிட்டு போனீங்க. நீங்க போய் அஞ்சு மணி நேரமாகுது. அதான் உங்களுக்கு கால் பண்ணேன்."

"இதோ இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன்." என்று கூறி பிரபா அழைப்பை துண்டித்தான்.

கணவனின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த த்ரிஷ்யாவின் மனம் தன் தாய் சீதா கூறிய விஷயத்தையே அசைபோட தொடங்கியது.

"த்ரிஷ்யா நீ உன் புருஷனோட சேர்ந்து சந்தோஷமா வாழறது தான் நம்ம பிரச்சனைக்கெல்லாம் தீர்வாகும்."

"ஆனா அம்மா அவரோட சந்தோஷம்? ஒரு வேலை டாக்டர் சொன்ன மாதிரி ஆயிடுச்சுனா அவர் வாழ்க்கை கேள்வி குறி ஆகாதா?"

"அதெப்படி ஆகும். இப்போ நீங்க ஒண்ணா இல்லாம பிரிஞ்சு இருந்தா தான் அந்த பிரச்னை எல்லாம் வரும்."

"என்னம்மா சொல்ற எனக்கு புரியல. கொஞ்சம் புரியுற மாதிரி பேசுறியா?" என்று த்ரிஷ்யா எரிச்சலுடன் கேட்க சீதா கூறிய அறிவுரை அதிர்ச்சி அளித்தது,

"டாக்டர் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா? இப்போ உனக்கு நடந்தது எல்லாம் மறந்து போச்சு. திரும்ப எப்போ உனக்கு அதெல்லாம் ஞாபகம் வருதோ அப்போ உனக்கு இப்போ நடக்குற சம்பவங்கள் எல்லாம் மறந்து போக வாய்ப்பிருக்குனு சொன்னாரு. அதானே? இப்போ உங்களுக்குள்ள எதுவுமே நடக்காம இருந்து திடீர்னு டாக்டர் சொல்றமாதிரி ஏதாச்சும் நடந்துடுச்சுனா அப்பறம் உனக்கு அவர் மேல எந்த பிடிப்புமே இல்லாம போய்டும். அப்புறம் அவர் வாழ்க்கை நீ சொல்றமாதிரி கேள்வி கூறியா தான் ஆகிடும். அப்படி ஆகாம இருக்கனும்னா நீ அவர் கூட சேர்ந்து வாழனும். அப்பறம் உங்க இரண்டு பேருக்கும் ஒரு குழந்தை வந்துடுச்சுனா உங்கள எந்த சக்தியும் பிரிக்க முடியாது இல்ல."

த்ரிஷ்யா தன் தாயிற்கு பதிலேதும் கூறாமல் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளை யோசித்து நல்ல முடிவு எடுக்கும்படி கூறி விட்டு சீதா அறையை விட்டு வெளியேறினார்.

சீதா சொன்ன விஷயங்களில் உள்ள சாதக பாதகங்களை தாண்டி பிரபாவுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொள்ள அவளுக்கு இருந்த தீவிரம் அவரின் கருத்துக்களை ஏற்கவே விரும்பியது. அந்த முடிவையே தாயிடம் கூற அவரின் மனமும் மகிழ்ச்சியில் திளைத்தது. இந்த எண்ணத்தில் த்ரிஷ்யாவை சீதா அலங்கரிக்க அவளின் முகத்தில் காதல் திளைத்திருந்ததால் பூசிக்கொண்டிருக்கும் வேட்கைப்பூக்களால் அவள் பூலோக தேவதையாகவே காட்சி அளித்தாள்.

பிரபா கூறியது போல் இல்லாமல் மேலும் ஒரு மணி நேரம் கழித்தே வீடுவந்து சேர்ந்தான். மனசோர்வுடன் வீடு வந்த பிரபாவிற்கு த்ரிஷ்யா தேவதையாய் அலங்கரித்து நின்றதோ அல்லது அவனுக்கு அன்புடன் அவள் உணவு பரிமாறியதோ எதுவும் கண்ணிலும் கருத்திலும் படவில்லை. இரவு அறையை அடைந்தவன் அந்த அறை முன் தினம் இருந்ததை விட அதிகமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தை கண்டு அதிர்ந்தான்.

புரியாத வண்ணம் அவன் த்ரிஷ்யாவை பார்க்க அவள் அவன் பார்வையில் முகம் சிவந்து நின்றாள். அப்பொழுது தான் த்ரிஷ்யாவை தலை முதல் கால்வரை ஆராய்ந்தவன் அயர்ந்து நின்றான். த்ரிஷ்யாவின் அலங்காரமும் அவளின் சிவந்த முகமும் அவளின் மனநிலையை உணர்த்த பிரபாவிற்கு தான் பெரும் சங்கடமாகி விட்டிருந்தது.

'நம்ம தங்கச்சி மாதிரி நினைச்ச பாத்திமா இந்த நிலைமைல இருக்கும் பொழுது நம்ம எப்படி சந்தோஷமா இருக்கமுடியும் த்ரிஷ்யா. உன் உயிர் தோழியுடைய நிலைமை இப்படி இருக்கும் பொழுது நான் உன்கூட சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கினா உண்மை தெரியும் போது நீ எவ்வளவு வேதனை படுவ. இதை எப்படி நான் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க போறேன்.' என்று மனதிற்குள்ளேயே மருகிக்கொண்டிருந்தான்.

பிரபாவின் அருகில் த்ரிஷ்யா வந்து நிற்க அவ்வளவு நேரம் அவன் இருப்பதாக நம்பி இருந்த அவனது மனோதிடம் காற்றில் ஆவியாகி போனது தான் பரிதாபம். அவள் அருகே நிற்கும் பொழுது உலகத்தில் எதுவுமே இல்லாமல் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பது போல் ஒரு பிரமை உண்டானது அவனுக்கு.

கைகள் நடுங்க அவளது கன்னங்களை வருடிய பிரபா தன்னை மறந்து அவளை நோக்கி குனிந்த மறுநொடிய அவசரமாக பின்னடைந்தான்.

"என்னங்க.. என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏசில கூட உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது."

"ஒன்னும் இல்ல... இது... இதெல்லாம் என்ன?" என்று கேட்டவனின் குரல் நடுங்கியதோ? அவனுக்கே சந்தேகமாக தான் இருந்தது. அவனுக்கு அந்த அறையே மூச்சு முட்டுவது போல் இருந்தது.

"இதெல்லாம் அம்மா ஏற்பாடு. என்னை எதுவும் கேட்காதீங்க." என்று கூறியவள் குரலில் எரிச்சல் தொனித்தது.

'காலையில் கொஞ்சி குலாவி என்ன என்னவோ பேசிட்டு இப்போ என்ன ஏதுனு கேள்வி கேட்டுட்டு இருக்காரு. மூஞ்சியும் சரி இல்ல. இவங்களுக்கு நினைச்சா எல்லாம் நடக்கணும். இல்லனா எதுவும் வேணாம். ஆம்பளைங்களுக்கு எல்லாமே அவங்க இஷ்டம் தான் போல' என்று மனதிற்குள் அவனை நன்றாக அர்ச்சனை செய்தவள் சட்டென்று அந்த நினைப்பை மாற்றிக்கொண்டாள்.

'நேத்து அவர் நினைச்சு இருந்தா அவர் ஆசை பட்டதை நிறைவேற்றி இருக்கலாம். யார் தடுக்க முடியும். நானே அவர்கிட்ட என்னையே தொலைச்ச நிலைமைல தானே இருந்தேன். இருந்தாலும் என் உடல் நலனை தான் பெருசா நினைச்சாரு. அவரை போய் இப்படி யோசிச்சு இருக்க கூடாது.' என்று தனக்குள்ளே மருகி கொண்டிருந்தவளை பிரபாவின் குரல் அழைத்தது.

"இல்ல த்ரிஷ்யா. நேத்து நான் என்ன என்னவோ நினைச்சேன் தான். ஆனா அதெல்லாம் தப்போனு இப்போ தோணுது. என்ன தான் நமக்கு கல்யாணம் ஆனாலும் உனக்கு இப்போ எல்லாம் மறந்த நிலைல நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கறது சரி வரும்னு தோணல. எதுக்கும் உனக்கு எல்லாம் பூரணமே குணமானதுக்கு அப்புறம்...." என்று ஒருவாறு சமாளிக்க எண்ணி பேச தொடங்கிவனை த்ரிஷ்யாவின் பேச்சு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஒரு வேலை எனக்கு குணமாகாமலே போய்ட்டா?" என்று கேட்டாள் ஒரு மாதிரி குரலில்.

த்ரிஷ்யா இப்படியொரு வாதத்தை எடுத்து வைப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"இல்லமா. நாம ஏன் நெகடிவா யோசிக்கணும். நல்லதே நினைப்போமே"

"சரி நீங்க சொல்றபடியே எனக்கு ஞாபகம் வந்து அப்புறம் விபத்துக்கு பிறகு நடந்தது எல்லாமே மறந்துபோய்ட்டா அப்போ என்ன பண்ணுவீங்க?"

"சே சே... அப்படி எல்லாம் நடக்காதுமா.. ஏன் வீணா மனச போட்டு குழப்பிக்குற."

"அதுக்கு வாய்ப்பு இருக்குனு டாக்டர் சொன்னாரு."

"சரி ஒரு வேலை முந்தைய நாட்களில் நான் உன்னால மோசமா வெறுக்கப்பட்டவனா இருக்கலாம். அப்படி இருந்து உனக்கு எல்லாம் ஞாபகம் வரும் பொழுது நீ என்ன வெறுத்துட்டா அப்பறம் நான் உன் வாழ்க்கையே பாழாக்கிட்டேன்னு தான் நினைப்ப" என்று பிரபா கேட்ட அடுத்த நொடி த்ரிஷ்யாவின் பார்வை கூர்மையானது.

"நாம ரெண்டு பெரும் லவ் பண்ணோம்னு தானே சொன்னீங்க?"

"ஆமாம் நான் இல்லனு இப்பவும் சொல்லலையே. ஆனா உனக்கு விபத்து நடக்கிறதுக்கு முன்னாடி அதாவது நான் மைசூர்ல இருந்து சென்னை வருமுன்னாடி உனக்கும் எனக்கும் ஒரு சின்ன சண்டை. அதனால தான் அப்படி சொன்னேன்." என்று பிரபா கூறியதும் தான் த்ரிஷ்யாவின் முகம் தெளிவுற்றது.

"ஐயோ... இதுக்கா இவ்வளவு யோசிச்சீங்க. நான்கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன். சண்டையே வாரமா காதலர்கள் இருக்கமுடியுமா? அதுக்காக நான் உங்கள வெறுத்துடுவேனா? என்ன பேச்சு இதெல்லாம். உங்கள என்னால எந்த காலத்திலேயும் வெறுக்க முடியாது. நீங்க அப்பழுக்கில்லாத வைரம்." என்று கூறி தன் கையை அவன் கை வளைத்துக்குள் கோர்த்து அவன் தோள்மீது செய்துகொண்டாள்.

பிரபாவிற்கு தான் நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது. முந்தைய தினம் இப்படியெல்லாம் பிரபாவிற்கு யோசிக்க தெரியும் என்று யாரவது சொல்லி இருந்தாள் அவன் சிரித்திருப்பான். அவளின் ஒரு கண் அசைவிற்காக காத்துக்கொண்டிருந்தவன் ஆயிற்றே. அனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. பாத்திமாவை பார்த்து விட்டு வந்ததில் இருந்தே அவன் மனம் கனத்தநிலையில் இருந்தது.

ஆனால் இது எதையும் அறியாத த்ரிஷ்யா மெதுவாக அவனை அணைத்து அவன் தோள் வளைவில் முகம் புதைத்துக்கொள்ள பிரபா அந்த தாக்குதலில் செய்வதறியாது திகைத்தது ஒரு நொடியே. மெல்ல அவள் கைகளை விலக்கிக்கொண்டு அவன் படுக்கையை நோக்கி சென்றான்.

"எனக்கு டையர்டா இருக்குமா. தூக்கம் வருது." என்று கூறிப்படியே படுக்கையில் சாய்ந்தான்.

த்ரிஷ்யாவிற்கு அவனை நினைத்தால் சிரிப்பாக வந்தது. தன் நலனை எண்ணியே அவன் ஒதுங்கி செல்வதாக எண்ணி கொண்டாள்.

'எப்படியும் அம்மா சொன்னது தான் சரி. உங்களை சீக்கிரம் என் வழிக்கு கொண்டுவந்து காட்டுறேன்.' என்று நினைத்தவள் முகத்தில்  மிதமான புன்னகை அரும்பியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா