மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-16

Quote from monisha on June 6, 2020, 8:55 PM

16
மூன்று நாள் விரைந்தோடி புது மணத்தம்பதியரின் மறுவீடு விருந்து முடிந்திருந்தது. பிரபா தங்கள் வீட்டிற்கு . த்ரிஷ்யாவை அழைத்து போக ஆயத்தம் செய்தான். அவளது தாய் கட்டி அணைத்து கண்ணீர் வடிக்க த்ரிஷ்யாவிற்கும் அந்த தருணம் வேதனையாகதான் இருந்தது. ஆனால் கண்ணீர் தான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. ஒரு வேளை அவளுக்கு கண்ணீர் விட்டு பழக்கம் இல்லையோ என்று அவளுக்கே சந்தேகம் வந்தது. அவர்கள் பாசமாக பெற்று வளர்த்த நாட்கள் அவள் நினைவில் இல்லாத போதிலும் விபத்துக்கு பின் இந்த மூன்று மாதங்கள் அவர்கள் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த குறுகிய நாட்களில் அவர்களுக்கு இடையிலான பந்தத்தின் அழுத்தமான பிணைப்பை அவளால் உணர முடிந்தது. அதுவும் தற்போது அவர்களை விட்டு வேறு இடம் அதுவும் முற்றிலும் பார்த்தறியாத புது வீடு புது குடும்பம் என்று செல்லப்போவதை எண்ணுகையில் சற்றே கலக்கமாகவும் இருந்தது.  அவள் மனநிலையை அறிந்துகொண்ட பிரபா தன் கைபிடிக்குள்ளிருந்த அவளது கரத்தை அழுத்தினான். அந்த அழுத்தம் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி அவளுக்கு தைரியம் கொடுத்தது. இந்நிலையில் ஆனந்தராஜ் பிரபாவை தனியே அழைத்து பேசினார். "ஏன் பிரபா. இன்னைக்கு தானே பாத்திமாவை நீங்க சொன்ன டாக்டர் சுரேஷை பார்க்க கூட்டிட்டு போகணும்?" "ஆமாம் அங்கிள். நீங்க ரெண்டு பேரும் பாத்திமாவை கூட்டிட்டு போங்க. நான் த்ரிஷ்யாவை வீட்டுல விட்டுட்டு அப்படியே ஒரு சில வேலைகளை முடிச்சுட்டு நேரா அங்க வந்துடுறேன். என் பிரெண்ட் சரவணன் முன்னமே அங்க இருப்பான். நீங்க கவலை படாதீங்க அங்கிள். பாத்திமாவை பத்தி எந்த விவரமும் யாருக்கும் போகாம நான் பார்த்துக்குறேன்." "சரி பிரபா. நீங்க கிளம்பும் நேரம் ஆயிடுச்சு. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள புறப்படுங்க." என்று கூறி புது மணதம்பதியரை வழியனுப்பி வைத்தனர். த்ரிஷ்யா பிரபாவின் வீட்டில் நுழையும் போதே அவளின் விழிகள் பிரமிப்போடு விரிந்தன. பிரபாவின் தந்தை மரியா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது அவள் அறிந்த ஒன்றுதான். எனினும் அவள் இவ்வளவு அற்புதமான மாளிகையை தன் புகுந்த வீடாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ஆம். அது வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும். அந்த அவ்வளவு பிரம்மாண்டமாகவும் பிரமிப்பாகவும் காட்சியளித்தது அந்த பங்களா. அந்த நொடி தன் கணவனின் மனமும் எவ்வளவு விசாலமானது என்பதை எண்ணி அவள் உள்ளம் நெகிழ்ந்து போனாள். எந்த வேலையும் செய்யாமலே செல்வாக்கோடு மூன்று தலைமுறை வாழுமளவிற்கு அவர்களுக்கு ஏகபோகமாக சொத்துக்கள் குவிந்து கிடக்கிறது. அவன் நினைத்தால் எந்த வேலையும் செய்யாமல் அந்த சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கலாம். தன் தந்தையின் தொழிலில் முதலாளி பதவியில் ராஜ மரியாதையோடு வாழலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஊர் விட்டு ஊர் சென்று வெறும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வேலை செய்திருக்கிறான் என்று அவளின் தந்தை கூற கேட்டவளுக்கு அதிர்ச்சியாகவும் அதேநேரம் வியப்பாகவும் இருந்தது. இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் தாய் ஜோதியின் வரவேற்பு அவளை மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம். "வா மா த்ரிஷ்யா. எனக்கு இந்த நல்ல நேரம் அது இது எல்லாம் பெருசா நம்பிக்கை இல்ல. உங்க மாமா தான் அதெல்லாம் பார்ப்பார். நீ இந்த வீட்டுக்கு வர நேரம் தான் எனக்கு நல்ல நேரம்." என்று அவர் கூற த்ரஷியாவின் மனம் பூரித்து போனது. மேலும் அவர் அடுத்த கூறிய செய்தியில் அவளின் இறுக்கம் முற்றிலும் அகன்றது என்றே கூறவேண்டும். "எனக்கு பெண் குழந்தை இல்லனு ரொம்ப குறை. எந்நேரமும் இந்த ரெண்டு பேர் முகத்தை பார்த்து பார்த்து போர் அடிக்குது. நீ தான் வந்துட்ட இல்ல… இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்." என்று கூறியவரின் குரலில் இருந்த தோழமையும் பாசமும் அவரை மாமியாராகவே அவளால் கருத முடியவில்லை. ஒரு தோழியாகதான் நினைக்க தோன்றியது. த்ரிஷ்யாவிற்கு அன்று மாலை வரை கேலியும் அரட்டையுமாக மாமியாருடன் கழிந்தது. பிரபாவோ அங்கு வந்த சில நொடிகளிலேயே வேலை இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இரவு நெருங்கும் சமயம், த்ரிஷ்யாவை பிரபாவின் அறைக்கு அழைத்து சென்றார் ஜோதி. அந்த அறையின் உள்ளே சென்ற த்ரிஷ்யாவின் கண்கள் அப்படியே அசையாமல் நின்றுவிட்டன. அவளது ஆருயிர் கணவன் அந்த அறை முழுவதும் அவளின் புகைப்படங்களால் நிரப்பியிருந்தான். அவற்றின் நடுநடுவே பிரபாவின் புகைப்படங்களும் இருந்தன. தன் கணவனின் படத்தை ரசித்து பார்த்திருத்தவள் அவன் படத்திற்கு தன் இதழை பதிக்கையில் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள். பிரபா தான் உள்ளே நின்றுகொண்டிருந்தான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன். என்ன தான் அவன் அவளுக்கு ஆதரவாக கைகோர்த்தாலும் அவனிடம் கலகலப்பு கேலி எதுவும் இல்லை. முக்கியமாக கடந்த இருதினங்களாக ஒருவித இறுக்கத்துடனே சுற்றிக்கொண்டிருந்தான். அதுவும் அவள் முன்னிலையில் மட்டும் தான். அவளின் தாய் தந்தை முன்னிலையில் கிண்டல் கேலி எதற்கும் குறைச்சல் இல்லை. த்ரிஷ்யாவிற்கு அவனை பார்க்க பார்க்க எரிச்சலாக இருந்தது. கலகலப்பானவன் அன்பானவன். தன் மீது உயிரையே வைத்திருக்கிறான். இருந்தும் அவளிடம் மட்டும் இந்த ஒதுக்கம் காட்டுவது அவளுக்கு வேதனை அளித்தது. அவனை நெருங்க முடியாதபடி அவளை தள்ளி நிறுத்தும் அந்த பார்வை மேலும் அவளுக்கு கடுப்பை கிளப்பியது. "இப்போ எதுக்கு மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு இருக்கீங்க? நான் உங்க வீட்டுக்கு வந்தது பிடிக்கலையா?" "என்ன ஓளற? முதல்ல இது என் வீடு இல்ல. நம்ம வீடு. அதை தெரிஞ்சுக்கோ. பிடிக்காம தான் உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேனா? இந்த ரூம் முழுக்க பார்த்த அப்புறம் கூட நீ இப்படி பேசுறேன்னா நீ ஒரு முட்டாள்னு அர்த்தம்." "நான் முட்டாளா? சரி அப்புறம் ஏன் பிடிக்குற மனைவி பக்கத்துல கூட வரமாட்டேன்னு தூரமாவே நிக்குறீங்க?" என்று முறைப்போடு கேட்டாள். ஏதோ சொல்லவந்த பிரபா சட்டென்று மௌனம் அடைந்தான். த்ரிஷ்யாவே உடனடியாக, "நான் கண்டுபிடிச்சுட்டேன்" என்று கத்தினாள். "என்ன கண்டுபிடிச்சுட்ட?" "எனக்கு விபத்து நடந்து அம்னீஷியா வந்த மாதிரி உங்களுக்கு ஏதோ விபத்து நடந்து உங்க ஆ.. ஆண்மை போய்டுச்சு. அத மறைக்க அம்னீஷியா குணமாகனும் அது இதுனு கதை விடுறீங்க." என்று த்ரிஷ்யா கூற பிரபா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "இரு டீ உன்னை.." என்று கோபமாக உரைத்தபடியே பிரபா த்ரிஷ்யாவை துரத்த அவள் அவன் கையில் அகப்படாமல் ஓடும் முயற்சியில் கட்டிலின் மீது ஏறி நின்றுகொண்டாள். "இப்போ நீயா கீழ எறங்குறியா இல்ல நான் மேல வரட்டுமா?" "மாட்டேன் மாட்டேன் வரமாட்டேன்" என்று காதை பொத்திக்கொண்டு கத்தினாள். பிரபா அவளை பிடிக்கும் வேகத்தில் அவள் சேலையை பற்றி இழுக்க எதிர்பாராவிதமாக த்ரிஷ்யாவின் முந்தானை விலக, அவளின் பெண்மை அவனை வெகுவாக கிறங்கடித்தது. அனிச்சை செயலாக அவள் தன் கைக்கொண்டு மேலங்கத்தை மறைத்தபடி திரும்பி நின்றுகொண்டாள். நொடி நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் தாக்கம் இருவரையுமே நிலைகொள்ளாமல் செய்துவிட, பிரபா வேகமாக அந்த அறையின் பல்காணி கதவை திறந்து வெளியே சென்றுவிட்டான். த்ரிஷ்யா அவசரமாக தன் முந்தானையை சரி செய்துகொண்டு கட்டிலில் சாய்ந்தபடி கீழிறங்கி உட்கார்ந்து கொண்டாள். பிரபா தலை முடியை கோதியபடி பலகாணியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் மனதில் பலவித எண்ணங்கள் அலை மோதின. அவனுக்கு ஆனந்தராஜ் முந்தைய தினம் கூறியது நினைவு வந்தது. "இங்க பாருங்க பிரபா. நீங்க காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டவர். சினிமால புத்தகத்துல வரமாதிரி ஓர் அறையில் இரு வாழ்க்கைனு எல்லாம் வாழமுடியாது. முக்கியமா கணவன் மனைவிங்குற முத்திரையை வைச்சுக்குட்டு. என்ன எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா? நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தான். நீங்க என் பொண்ணுகிட்ட ஒதுங்கி நிக்குறத பார்த்துட்டுதான் சொல்றேன். என் பொண்ணு உங்கள மனசார விரும்புறா. இதுக்கு முன்னாடி அதாவது விபத்துக்கு முன்னாடியும் விரும்பி இருக்கா. அவ என்கிட்ட சொல்லலனாளும் என் பொண்ணோட மனசு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா ஆள் யாருனு தான் தெரிஞ்சுக்கல.  நீங்க த்ரிஷ்யா கிட்ட ஒதுக்கம் காட்டிறது சரி இல்ல. இதை நான் அவளோட அப்பாவா இருந்து சொல்லல. உங்களுக்கு ஒரு நல்ல ப்ரெண்டா இருந்து சொல்றேன். வாழ்க்கையை நம்ம மனசு சொல்றபடி கேட்டு வாழுங்க. எதுவும் இறுக்கி பிடிக்க நினைச்சா ஒரு நேரம் இல்லனாலும் ஒரு நேரம் அறுந்து விழுந்துடும். டேக் கேர்." பிரபாவிற்கு உள்ளம் புழுங்கிய நிலை தான். ‘வசதிக்கு எந்தவித குறையும் இல்லை. பண்பும் மரியாதையும் சொல்லி கொடுத்து வளர்த்த அம்மா அப்பா. மரியாதைக்குரிய மாமனார். காதலித்து மணம் செய்து கொண்டவள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாழ்க்கை. இருப்பினும் எதுனால் நான் இப்படி இருக்கிறேன்… ஏன் என்னால நிம்மதியாக அவளுடன் வாழ்க்கையை தொடங்க முடியவில்லை' என்றெல்லாம் யோசித்து கலங்கிக்கொண்டிருந்த பிரபா த்ரிஷ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அறையினுள் ஓடினான். த்ரிஷ்யா அந்த அறையில் நவீன முறையில் வடிவமைக்கபட்டிருந்த கண்ணாடி சாளரத்திற்கு அடியில் விழுந்து கிடந்தாள். அவசரமாக அவளை அள்ளி எடுத்து கட்டிலில் கிடத்தினான். "என்ன ஆச்சு எப்படி விழுந்த?" என்று அவன் கேட்க அவள் திருதிருவென்று விழித்தாள். அவளை முறைத்துக்கொண்டே, "எங்க அடி பட்டது சொல்லு. மருந்து தேய்த்து விடுறேன்" என்று அலமாரியில் இருந்த ஒரு டியூப்பை எடுத்து வந்தான். "இல்ல வேணாம்." "என்ன வேணாம். எப்படி அடிபட்டுதுன்னும் சொல்லமாட்டா. எங்கணும் சொல்லமாட்டா. உன்னால கூடிய சீக்கரம் எனக்கு பைத்தியம் பிடிக்கப்போகுது."' "இனிமே தான் பிடிக்கணுமாக்கும்." என்று அவள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள். "என்ன.. என்ன சொன்ன?" "ஒன்னும் இல்ல." "சரி அடிபட்ட இடத்தை காட்டு." "இல்ல வேண்டாம். அதை காண்பிச்சா உங்களால தேய்க்க முடியாது." அவன் அவளை நிதானமாக முறைத்தான். "இப்போ காட்டப்போறியா இல்லையா?" "சரி காட்டுறேன். அப்பறம் என்ன திட்ட மாட்டேன்னு சொன்னா காட்டுறேன்." அவளின் பீடிகை அவனுக்கு எரிச்சலை கூட்ட, ஏற்கனவே அவளின் அருகாமையில் அவஸ்தையை அனுபவித்து கொண்டிருந்தவன் அவளின் இந்த பேச்சினால் மேலும் கடுப்பானான். ஆனால் மிகவும் சிரமப்பட்டு தன்னை கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஒரு முறை கேட்டான். "காட்டுமா ப்ளீஸ்." என்று கூற அதற்கு பதில் த்ரிஷ்யா அவளது இடுப்பில் கைவைத்து காட்ட பிரபாவின் முகம் குப்பென்று வியர்க்க தொடங்கியது. "இந்தா நீயே தேச்சுக்கோ. ஆளவிடு தாயே" என்று கூறி டியூப்பை அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியேற முற்பட்டவனை த்ரிஷ்யா தன் சிரிப்பொலியால் சீண்டினாள். பிரபா அப்படியே நின்று திரும்பி அவளை பார்த்தான். "இப்போ எதுக்கு சிரிக்குற?" "நான் தான் சொன்னேன்ல உங்களால முடியாதுனு" என்று கூறி மீண்டும் சிரித்தாள். 'இவை எதை முடியாதுனு சொல்றா. ஒருவேளை டபுள் மீனிங்க்ல பேசுறாளோ? என்னடா பிரபா உன் ஆண்மைக்கு வந்த சோதனை.' என்று அவனின் மனம் அறைகூவல் விடுத்தது. "என்னால முடியும்". "அப்போ தேய்ச்சுவிடுங்க." அவளின் துடுக்கான பேச்சு பிரபாவிற்கு எதையோ உணர்த்தியது போல் இருந்தது. "நீ என்ன ட்ரை பன்றேன்னு இப்போ எனக்கு நல்லா புரியுது. இதுக்கெல்லாம் வேற ஆள பாரு." "ஓ அப்போ வேற ஆள பார்த்தா உங்களுக்கு ஓகேவா?" என்று கூர்மையான பார்வையுடன் அவள் கேட்க, "ஏய்" என்று அவளை நோக்கி கையை உயர்த்திய பிரபா சட்டென்று தன் செய்கையின் தீவிரம் புரிந்து பின்வாங்கிகொண்டான். அதிர்ச்சியில் த்ரிஷ்யா அசையாமல் நின்றாள். அவளுக்கும் கிண்டலும் கேலியாக இருந்த பேச்சு எப்பொழுது இந்த தீவிர நிலையை அடைந்தது என்று புரியவில்லை. 'ஆனால் பிரபா அடிப்பாரா. இல்ல கைதான் ஓங்கினார் அடிக்குற ஆள் இல்ல அவர். இருந்தாலும் எப்படி அவர் என்ன பார்த்து கை ஓங்கலாம். ஆண் மகன்ற திமிரா?' என்று மனதில் நினைத்ததை மறைக்காமல் அவனிடமே கேட்டாள். "ஆம்பளைன்னு திமிர்ல கை ஓங்குறீங்களா? பதிலுக்கு ஒங்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்." என்று கண்கள் விரித்து மூச்சு வாங்க கோபத்துடன் கேட்டவளை பார்த்த பிரபாவின் கண்கள் சட்டென்று மின்னியது. நியாயமாக அந்த சமயம் அவளிடம் அவன் வாக்குவாதம் புரிந்திருக்க வேண்டும். ஆனால் த்ரிஷ்யாவின் கண்களில் தெரிந்த ஒளி அவனுக்கு அவனின் காதலி த்ரிஷ்யாவை கண்முன்னே நிறுத்தியது. அதனை கண்ட நொடி அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. மெதுவாக அவளின் கையை பிடித்தவன் அவளிடம் மன்னிப்பு கோரினான். "சாரிமா ஏதோ உணர்ச்சி வேகத்துல..." என்று கூறும்பொழுதே அவன் கையை உதறிக்கொண்டு வேகமாக பால்கனி வழியாக வெளியே சென்று அந்த கதவின் தாழையும் அடைத்தாள். பிரபா அந்த அறை கதவை தட்டினான். "த்ரிஷ்யா கதவை திற மா. ப்ளீஸ் நான் தான் சாரி சொல்லிட்டேன்ல." என்று கூறியவனின் குரலில் சொல்லவொண்ணா தவிப்பு தெரிந்தது. அது மார்கழி மாதம் என்பதால் இரவில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இவள் பனியில் நனைந்து உடம்பை கெடுத்துக்கொள்வாளோ என்று பரிதவிப்புதான் அவனுக்கு. ஆனால் த்ரிஷ்யா பதில் ஏதும் சொல்லாமல் கைகளை கட்டிக்கொண்டு மௌனம் சாதித்தாள். சிறிது நேரம் கதவை தட்டிவிட்டு பிரபாவும் விட்டுவிட்டான். இப்பொழுது உதவிக்கு யாரையேனும் அழைத்தாள் அவர்களுக்கு பதில் கூறவேண்டும் என்று எண்ணியவன் கண்ணாடி வழியே அவளை பார்த்து முறைத்தான். "அவ்வளவு சொல்லியும் கேட்கமாட்ட இல்ல? உனக்கு அம்னீஷியா வந்து எல்லாம் மறந்து போய்ச்சு. ஆனா இந்த பிடிவாத குணம் மட்டும் மாறவே இல்லயில்ல? எவ்வளவு நேரம் நிக்குறியோ நில்லு. நீயா கதவை துறக்குற வர நான் எதுவும் பண்ண போறதில்ல. இல்லனா காலைல வர அங்கேயே நில்லு. அப்போதான் உனக்கு கொழுப்பு குறையும்" என்று கூறி விட்டு விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினான். த்ரிஷ்யாவிற்கு திகைப்பு தான். 'என்ன இவர். கெஞ்சுவார் கதறுவார் கடைசில ஐ லவ் யுனு சொல்லுவார் எப்படியும் இவர் மனச மாத்திடலாம்னு கற்பனை கோட்டை கட்டி வைச்சிருந்தா இவர் நம்மள மதிக்காம ரூமை விட்டே வெளில போய்ட்டாரே. அவசரப்பட்டு கோபப்பட்டுட்டோமோ. இவரை நினைச்சுட்டு சரியாய் சாப்பிடல. பசி வேற எடுக்குது.' என்று புலம்பியபடியே சுவரை தாண்டி எட்டிப்பார்த்தாள். 'அய்யய்யோ இதென்ன இங்க இருந்து எட்டி பாத்தா ஏதோ மலைல இருந்து எட்டிப்பாக்குற மாதிரி இவ்வளவு ஆழமா இருக்கு. ஐயோ பயங்கரமா குளுருதே பேசாம ரோஷத்தை விட்டுட்டு உள்ள போய் ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு படுத்துடலாமா? வேணாம் வேணாம்.. அப்புறம் அவரோட கேலி பார்வையை யார் சந்திக்கிறது' என்றெல்லாம் மனதிற்குள்ளேயே புலம்பி தீர்த்தாள். நேரம் ஆக ஆக குளிர் அதிகமாகி கொண்டே போனது. த்ரிஷ்யா தன உடலை குறுக்கி கொண்டு கைமுட்டியை மடியில் ஊன்றியபடி கன்னத்தில் கைகளை வைத்து தேய்த்துக்கொண்டாள். ஒரு புறம் பசி மறு புறம் குளிர் என்று அவளை வாட்டி வதைக்க கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வரும்போல் இருந்தது. அப்படியே விறைத்துவிடுவோமோ என்று எண்ணுகையில் பின்னிருந்து நீண்ட இரு கரங்கள் அவளை அள்ளி அணைத்து கொண்டது. பதட்டத்துடன் யார் என்று பார்க்கையில் காதலும் கனிவுமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன். மறுக்காமல் அவன் கையணைப்பில் அடங்கினாள் த்ரிஷ்யா. அவனது அணைப்பு தன் கூட்டினை அடைந்த பறவைக்கு ஏற்படும் நிம்மதியை அவளுக்கு அளித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. அவளை அறைக்கு சென்று கட்டிலில் கிடத்தி தன் கணவன் மீண்டும் தன்னை விட்டு விலகிவிடுவானோ என்று அச்சத்துடன் அவன் முகம் பார்க்க, அந்த பார்வையை கண்ட பிரபாவின் முகமும் கனிய மெல்ல அவளின் கண்களில் தன் இதழ்களை பதித்தான். அதன் பிறகு பிரபா அவளை விட்டு விலகவும் இல்லை. அந்த இரவு முழுவதும் அவளை உறங்கவும் விடவில்லை

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா