மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிபுக்குரியவள் - அத்தியாயம் 8Post ReplyPost Reply: மதிபுக்குரியவள் - அத்தியாயம் 8

Quote from monisha on November 20, 2025, 12:35 PM

அத்தியாயம் – 8

“ஏய் கவிதா... கவிதா” காமாட்சி உறக்கத்திலிருந்த மகளை உலுக்கிக் கொண்டிருந்தார்.

“விடிஞ்சிருச்சா?” என்று கண்களைக் கசக்கியவள் தூக்கக் கலக்கத்துடன், “ஏம்மா நானே எழுந்திருக்க மாட்டானா... எதுக்கு என்னைய போட்டு இப்படி உலுக்கிட்டு இருக்க” என்றாள்.

“என்ன நடக்குதுன்னு வந்து பாரு”

“என்னத்தம்மா வந்து பார்க்க சொல்ற”

“எழுந்திருச்சு நீயே வந்து பாருன்னு சொன்னேன்” என்று காமாட்சி அவள் கையை பிடித்துத் தூக்கினாள்.

“சரி சரி... கையை விடு. வரேன்” என்று போர்வையை உதறிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, “ஏய் ஏய் வெளியே போகாத இங்கே நின்னே பாரு” என்று காமாட்சி அறை கதவருகிலேயே நிறுத்தினாள்.

அப்போதுதான் வெளியே ஒரு குரல் ஆக்ரோஷமாகப் பேசுவதைக் கவனித்தாள்.

“யாருமா அது. இவ்வளவு சத்தமா பேசிட்டு இருக்கிறது” என்றதும் காமாட்சி, “உன் புருஷனோட அப்பன்” என்றதும் கவிதாவிற்கு கோபம் வந்துவிட்டது.

“புருஷன் கிருஷன்னு சொன்னேன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்”

“நீ பண்ண வேலையை வேற எப்படிறி சொல்லுவாங்க”

“ம்ம்ம்மா” என்று கவிதா பல்லைகடிக்க, “அந்த விசயத்த விடு. முதல வெளியே பாரு. அந்த ஆளு வெறி பிடிச்ச மிருகம் மாதிரி கத்துக்கிட்டு இருக்கான். அதுவும் செக்யூரிட்டிங்கல எல்லாம் வேற அடிச்சு போட்டான்.” என, கவிதா அதிர்ச்சியுடன் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தாள்.

ராகவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாளே ஒழிய நேரடியாக இதுதான் முதல் முறை பார்க்கிறாள்.

நெடுநெடுவென்று உயரமும் கம்பீரமுமாக நின்ற மனிதரை பார்த்தவளுக்கு உண்மையில் மிரட்சியாக இருந்தது. அதுவும் முகத்திலிருந்த தடிமனான மீசை அவர் தோற்றத்தை இன்னும் பயங்கரமாக காட்ட, “ரஞ்சன்... ரஞ்சன். எங்கடா இருக்க? இப்போ வெளியே வர போறியா இல்லையா” என்று கரகரத்த குரலில் சீறி கொண்டிருந்தார்.

அந்த கணமே கவிதா வெளியே செல்ல எத்தனிக்க, காமாட்சி மகளின் கையை இறுக்கமாகப் பற்றினார்.

“ப்ச் கையை விடும்மா கையை விடுனு சொன்னேன்” என்று அவர் பிடியை உதறிக் கொண்டு கதவைத் திறந்து வந்தாள்.

வீட்டின் முகப்பறையிலிருந்த அலங்காரப் பொருட்கள் எல்லாம் தரையில் சிதறிக் கிடந்தன. சிலவற்றை சில்லு சில்லாக நொறுங்கி இருந்தன.

“சத்தியமா ரஞ்சன் இங்க இல்ல ராகவா” என்று பிரகாஷ் ஒருபக்கம் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் ராகவன் அவர் சொல்வதைக் காதிலேயே வாங்கவே இல்லை.

“ரஞ்சன் டேய் ரஞ்சன்...” என்ற அவர் குரலில் இன்னும் இன்னும் ஆவேசம் கூடியது.

முன்னே வந்து நின்ற கவிதா, “ஹெலோ ஹெலோ...ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க?” என்றாள். ராகவன் விழிகள் அவளைக் குழப்பத்துடன் அளவெடுத்தன.

“இப்போ நீங்களா வெளியே போறீங்களா இல்ல போலீஸ்க்கு கால் பண்ணட்டுமா?” என்று கவிதா மிரட்டியதை ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல அவர் விழுந்து விழுந்து சிரித்து வைக்க, ‘எதுக்கு இப்போ இப்படி லூசு மாதிரி சிரிக்குறான்’ என்று கடுப்பாக முறைத்தாள்.

அதேநேரம் பிரகாஷ், “கவிதா நீ உள்ளே போ” என்றார்.

“முதல இந்த ஆளு வெளியே போகட்டும்”

“எது? நான் வெளியே போகணுமா? முடியாது என்னடி பண்ணுவ. போலிசை கூப்பிடுவியா போய் கூப்பிடு போ” என்றார்.

“மிஸ்டர்... மரியாதை” என்று கவிதா விரல்களைக் காட்டி எச்சரிக்க, “பெரிய இவ இவ... இவளுக்கு மரியாதை வேற கொடுக்கணுமாக்கும் போடி ஓரமா” என்று அவளைத் தள்ளிவிட்டார் .

தள்ளிய வேகத்தில் அவள் சுவரில் சென்று முட்டிக் கொள்ள,”கவிதா” என்று பிரகாஷ் பதறி கொண்டு அவளை தாங்க போன சமயத்தில், ராகவன் அவர் கழுத்தைப் பற்றினார்.

“எங்கேய்யா என் புள்ள? எங்க என் புள்ள. இப்போ நீ சொல்ல போறியா இல்லையா? எங்கே ஒளிச்சு வைச்சு இருக்க” என்று பிரகாஷ் கழுத்தை பிடித்து அழுத்த, அவருக்கு மூச்சு மூட்டியது.

மூர்ச்சையான மகளை மடியில் தாங்கியிருந்த காமாட்சி இந்த காட்சியை பார்த்ததும், “ஐயாவை கொலை செய்றானே. யாராவது வாங்களேன் யாராவது வாங்களேன்” என்று கூச்சலிட ஆரம்பித்தார்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு அடிப்பட்டு விழுந்த கிடந்த காவலாளியும் மற்ற வேலைக்காரர்களும் விரைந்து வந்தனர்.

“ஐயாவை விடுடா. ஐயாவை விடு” என்று ராகவனை தடுக்க முயன்றனர். அவன் பலத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை

“அப்பாஆஆ வேண்டாம். ப்ளீஸ் தாத்தாவை விட்டுட்டுங்க” என்று பதற்றத்துடன் ஒலித்த ரஞ்சனின் குரலைக் கேட்ட நொடிதான் ராகவனின் பிடி தளர்ந்தது.

படிக்கட்டில் இறங்கி வந்து மகனை ராகவன் உஷ்ணத்துடன் நோக்க, “ப்ளீஸ் தாத்தாவை விட்டுருங்க. நான் உங்க கூட வந்துடுறேன்” என்றான். அந்த நொடியே ராகவன் பிரகாஷின் கழுத்தை விட்டான்.

அவர் தொண்டையைச் சரி செய்து கொண்டு மூச்சை இழுத்து விட, ரஞ்சன் நடுக்கத்துடன் இறங்கி வந்தான்.

“வாடா நான் பெத்த மவனே, எனக்கு தெரியும்டா நீ இங்கேதான் ஒளிஞ்சிட்டு இருப்பன்னு. தெரியும்” என்று கூற, “ரஞ்சன் வேண்டாம். நீ போகாதே” என்று பிரகாஷ் தடுத்தார்.

சீற்றத்துடன் அவர் புறம் திரும்பிய ராகவன், “என்ன கெழவா, அடிச்சு மூஞ்சை கீஞ்சை எல்லாம் பேத்தாதான் அடங்குவியா நீ” என்று கேட்க, “வேணாம் பா. ப்ளீஸ் பா. நம்ம போலாம்” என்று ரஞ்சன் தந்தையின் கரத்தை பற்றிக் கொண்டு கெஞ்சினான்.

குரூரமாக பிரகாஷையும் அந்த வீட்டு ஆட்களையும் ஒருமுறை எச்சரிக்கையாகப் பார்த்த ராகவன், அதன் பின் ரஞ்சன் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

மயக்கத்திலிருந்த கவிதாவை பார்த்தபடியே ரஞ்சன் அங்கிருந்து அகன்றான்.

காமாட்சி தலையில் அடிப்பட்டு மயங்கிக் கிடந்த மகளைத் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டார். அவளுக்கு ஒன்றும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிரகாஷ் உடனடியாக உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

காமாட்சி கவிதாவை கைதாங்கலாக அழைத்து வந்து படுக்கையில் கிடத்த, அவள் மெதுவாகக் கண் விழித்தாள். சில நொடிகளுக்கு எங்கே இருக்கிறோம் என்ன ஏதென்று எதுவுமே அவளுக்கு புரியவில்லை. தலை வேறு வலித்தது.

“என்னாச்சு மா” என்று தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“ஹ்ம்ம், எப்பவும் போல பிரச்னைல தலையைக் கொடுத்து அடி வாங்கிட்டு வந்திருக்க”

“பிரச்னையா என்ன பிரச்னை?”

“அதான் அந்த ஆளு ராகவன் வந்து கத்திட்டு போனானே” என்று காமாட்சி சொல்லவும்தான் அவளுக்கு நடத்தவை எல்லாம் நினைவில் வந்து குதித்தன.

“ஆமா, தாத்தா எங்கே? எதுவும் பிரச்னையாகிடுச்சா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவன் புள்ளைய கூட்டிட்டு போயிட்டான்” என்றார்.

“அப்படியா?” என்று யோசித்தவள், “நான் தாத்தாகிட்ட போய் பேசிட்டு வரேன்” என்று எழுந்து கொள்ள, “அவரும் வீட்டுல இல்ல இப்பதான் எங்கேயோ கிளம்பி போனாரு” என்றார்.

“எங்க போனாரு?”

“எனக்கு என்னடி தெரியும்”

கவிதா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்துவிட, “யோசிச்சது போதும் எழுந்து முகத்தை எல்லாம் அலம்பிட்டு வா... நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என,

“சரி” என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தாள். நெற்றியின் ஓரமாகப் பெரிதாக வீங்கி இருந்தது.

‘ப்பா எப்படி வீங்கி இருக்கு’ என்றபடி அதனைத் தொட்டுப் பார்த்து, ‘ஸ்ஸ்ஸ் ஆ’ என்று வலியில் முகத்தைச் சுருக்கினாள்.

‘சரியான காட்டு மிரண்டியா இருப்பான் போல’ என்று முனகிக் கொண்டே பல்லை விலக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வர, காமாட்சி சூடான தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்தார்.

அதனை வாங்கி அவள் பருகவும், “கவிதா” என்று மெதுவாக அழைத்தார் காமாட்சி.

“என்னம்மா? சொல்லு” என்றாள்.

“நீ அந்த ராகவன் விசயத்துல எதுவும் தலையிட்டுக்காதடி”

“புரியல. ஏன் அப்படி சொல்ற?”

“அந்த ஆளு ரொம்ப மோசமானவன்”

“அதுதான் பார்த்தாலே தெரியுதே”

“இல்லடி அந்த ஆளு..” என்று காமாட்சி தயங்க, “முழுசா சொல்லும” என்றாள்.

“அந்த ஆளு ஒரு கொலைகாரன்டி” எனவும் கவிதாவிற்கு தூக்கிவாரி போட்டது.

“கொலைகரானா? என்னம்மா சொல்ற”

“அந்த ஆள நான் டிவில பார்த்திருக்கேன்டி. ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு அப்பாவி பையனா லாக் அப் ல வைச்சு அடிச்சே கொன்னுட்டான். அதுவும் கொடூரமா?”

கவிதா நம்பாமல், “நீ வேற யாரையாவது பார்த்துட்டு சொல்றியா இருக்கும்” என்றாள்.

“இல்ல இல்ல எனக்கு நல்லா தெரியும்”

“ம்மா ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி டிவில பார்த்த முகத்தை எப்படி உன்னால ஞாபகம் வைச்சுக்க முடியும். அதெல்லாம் இருக்காது”

“சில முகத்தை அவ்வளவு சீக்கிரத்துல மறக்க முடியாது” என்று சொல்லும் போதே காமாட்சியின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது.

யோசனையுடன் அவரை பார்த்தவள், “அப்படியே நீ சொல்ற மாதிரி பாத்தா கூட அந்த ஆளு இப்போ ஜெயிலதானே ம்மா இருக்கணும்” என,

“இந்த போலிஸ்காரனுங்க எல்லாம் கூட்டு களவானிங்க. சாட்சி இல்ல ஆதாரம் இல்லன்னு ஏதாவது சொல்லி வெளியே விட்டு இருப்பானுங்க.” என்று காமாட்சி மேலும் சொன்னது கவிதாவை இன்னும் குழப்பியது.

“நீ சொல்றதை எல்லாம் பார்த்தா தாத்தாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும்தானே”

“ஏன் தெரியாம? எல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சுதான் அந்த கொலைகாரனோட பையனுக்கு உன்னைய கட்டி வைச்சு இருக்காரு” என்று காமாட்சி கடுகடுப்புடன் சொல்ல,

“தாத்தாவை பத்தி அப்படி எல்லாம் பேசாத” என்றாள் கவிதா.

“அவரு நல்லவருதான். உன்னைய படிக்க வைச்சு ஆளுக்கினாருதான். எல்லாம் சரிதான். ஆனா பெத்தவ நான் குத்துகல்லாட்டமா இருக்கும் போது அவர் எப்படிடி உன்னோட கல்யாண முடிவை எடுக்க முடியும். அதுவும் அந்த ரஞ்சனோட அப்பன் மட்டும் கொலகாரனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இது எதுவுமே நான் நடக்கவே விட்டிருக்க மாட்டேன்” என்று மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் காமாட்சி கொட்ட, “ம்மா போதும் நிறுத்துறியா” என்று கவிதா எரிச்சலானாள்.

“ஆமா நான் மட்டும் எதுவும் பேசிட கூடாது இல்ல உனக்கு”

“உன் கோபம் வருத்தம் எல்லாம் நியாயம்தான். ஆனா ரஞ்சனை கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். அப்புறம் இந்த ராகவன் கெட்டவனா இருக்கலாம். ஆனா ரஞ்சன் நல்லவன். ரொம்ப நல்லவன்.” என்று கவிதா அழுத்தமாக கூற, காமாட்சி அலட்சியமாக நொடித்துக் கொண்டார்.

“அவன் நல்லவன் மட்டுமில்லடி. கோழை.”

“ம்மா”

“என்ன அம்மா, நீ அந்த ஆளு முன்னாடி நின்னு சண்டை போட்டுட்டு இருக்கும் போது அவன் எங்கே இருந்தான்னு நினைக்குற. மாடி ரூம்ல ஒளிஞ்சிகிட்டுதான் இருந்தான். கோழை மாதிரி

ஏன், நீ அடிப்பட்டு விழுந்த கிடந்த போது கூட அவன் உன் பக்கத்துல் வந்து பார்க்கல. அப்படியே அவங்க அப்பன் கையை பிடிச்சு போயிட்டே இருந்தான். தெரியுமா உனக்கு”

“ம்மா ப்ளீஸ், ரஞ்சனோட நிலைமை தெரியாம நீ இஷ்டத்துக்கு பேசாத. சொல்லிட்டேன்”

“என்னடி பெரிய நிலைமை. நீ அவனுக்காகச் சண்டை போடுற. ஆனா அவன் கோழை மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கான். ஆம்பளயா தைரியமா முன்னாடி வந்து நிற்கத் தெரியாத ஒருத்தனோட எப்படிறி உன்னால வாழ முடியும்.

நாளைக்கே உனக்கு ஏதாவது பிரச்னைனா உன்னைய அங்கேயே விட்டுட்டு ஓடிட மாட்டானா?”

“ம்மா போதும். ம்மா போதும்னு சொன்னேன்” என்று கவிதா கத்தவும், காமாட்சி நிறுத்திவிட்டார்.

அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதாவின் மூளைக்குள் சென்று தெறிக்க, அப்படியே தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.

“நீ இவனுக்கு பதிலா அந்த அஜயையே கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்கலாம்”

“ஐயையோ! அஜய் என் பிரண்டுனு நான் உன்கிட்ட நூறு தடவை சொல்லிட்டேன்”

“ஏன் பிரண்டை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?”

“ஆஅ... முடியல” என்று தலையை நிமிர்த்தியவள், “இப்போ மட்டும் நீ என் ரூமை விட்டு போல. அம்மான்னு கூட பார்க்க மாட்டேன். அடிச்சு மண்டையை ஒடிச்சிருவேன்”

“நீ எப்போ என்னைய அம்மாவை பார்த்திருக்க இல்ல மதிச்சிருக்க” என்று அப்போதும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்த காமாட்சியை, “ம்மா போம்மா” என்று கவிதா வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அந்த அறையில் அமைதி மீண்டிருந்தது. ஆனால் அவள் மனதில் நிறையக் குழப்பங்கள் சூழ்ந்து கொண்டன. ‘கவி வியர்ஸ்’ காப்பாற்றும் எண்ணத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டோமோ என்று யோசித்தாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா