மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-17

Quote from monisha on June 11, 2020, 2:46 PM
முருகன் சைக்காட்டிரிக் ஹாஸ்பெட்டில் . மருத்துவர் சுரேஷ் அஷ்மாவிடமும் சரவணனிடமும் பாத்திமாவின் நிலைமையை விளக்கமாக எடுத்துரைத்து கொண்டிருந்தார். அவர் கூறுவதை கேட்க கேட்க அஸ்மாவிற்கும் சரவணனிற்கும் பாத்திமா குணமாகிவிடுவாள் என்று நம்பிக்கை ஊற்றாக பெருகியது. "ஒரு விஷயம் நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். என்ன தான் நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணாலும் அவங்களோட மனநிலையை முழுமையா மாத்துற சக்தி அவங்களுக்கு நெருக்காம தொடர்பு உடையவங்களுக்குதான் இருக்கு. அவங்க கூட பேசுங்க. தொடர்ந்து பேசுங்க. முக்கியமா நல்ல விஷயங்களை பேசுங்க. அவங்க முன்னாடி தயவு செய்து அழவேண்டாம். நீங்க பேச பேச தான் அவங்களோட உணர்வுகளுக்கு புத்துயிர் கிடைக்கும். இது க்யூர் பண்ணமுடியாதுனு எதுவும் இல்ல. நிச்சயம் அவங்க கூடிய சீக்கிரம் பழைய பாத்திமாவா மாறுங்க." "ரொம்ப நன்றி டாக்டர்" என்று இருவருமே ஒருசேர கூறினர். அந்த குரலில் இருந்த உணர்ச்சி அவர்கள் இருவருக்குமே பாத்திமா எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. சரவணனும் அஸ்மாவும் பாத்திமா இருந்த அறைக்கு சென்றனர். அவள் எப்பொழுதும் போல் சூனியத்தை வெறித்தபடி உணர்ச்சியற்ற முகத்துடன் எதையோ பெரிதாக இழந்து விட்டவள் போல் காணப்பட்டாள். அறையில் நுழையும் முன்னர் அஸ்மா சரவணனை தடுத்து அவனிடம் ஒரு கேள்வியை கேட்டார். "தம்பி. ஒரு நிமிஷம் நில்லுங்க. நீங்க இன்னும் பாத்திமாவை விரும்புறீங்களா?" "என்ன ஆன்ட்டி. இப்போ போய் இதை கேட்குறீங்க.?” "ஒரு வேலை நீங்க அவளை விரும்பலன்னா இந்த நிமிஷத்துல இருந்து என் பொண்ணு வாழ்க்கைல இருந்து நீங்க பிரிஞ்சு போயிடுங்க." "ஆன்ட்டி.." என்று கூறியவனின் குரலில் அதிர்ச்சி இருந்தது. உணர்ச்சி வசத்தால் அவன் விழிகள் கலங்கின. "என் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை ஆன்ட்டி. நான் சின்ன வயசுல இருந்து எந்த விஷயத்துக்காகவும் கஷ்டப்பட்டதில்ல. எது கேட்டாலும் கிடைக்கும். நான் பெரிய பணக்காரன் இல்ல. அதே நேரம் ஏழையும் இல்ல. எந்த பிரச்னையும் இல்லாத என் வாழ்க்கையை நான் எப்பவுமே சிரிச்சுட்டு காமெடி பண்ணிக்குட்டு மத்தவங்கள சிரிக்க வைச்சுட்டு வாழ்றவன். ஆனா நான் முதல் முதல எனக்கு நினைவு தெரிஞ்சு அழுத நாள் எது தெரியுமா? உங்க பொண்ணோட சின்ன வயசுல நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பத்தி அவளே சொல்லி கேட்கும் பொழுதுதான்." "எனக்குன்னு தனியா இனிமே ஒரு வாழ்க்கை இல்ல ஆன்ட்டி. என் உலகம் வாழ்க்கை எல்லாமே அவ தான். ஒரு வேல அவ நல்லபடியா குணமாகி வந்தா உங்களுக்கும் விருப்பம் இருந்தா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூட சந்தோசமா வாழ்வேன். மாறா அவ இப்படியே இருந்தா நானும் அவ கூடவே இப்படியே இருந்துடுவேன். இதுல மாற்றுக்கருத்து எதுவும் இல்ல ஆன்ட்டி." அவன் கூறியதை கேட்ட அஸ்மாவின் கண்களில் கண்ணீர் சொரிந்தது. தனக்கு தான் நல்ல வாழ்க்கை அமையவில்லை. தன் பெண்ணிற்கு கிடைக்க பெறாத வரமே வாழ்க்கையாய் கிடைத்திருந்தும் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் இல்லையே. இது தான் தன் குடும்பத்தின் சாபமோ என்று உள்ளம் வெதும்பினார். "இன்னைக்கு எனக்கு மனசு நிறைவா இருக்கு தம்பி. அதே மாதிரி அவளும் சீக்கிரம் குணமாயிட்டா அவளை உங்க கைல பிடிச்சு கொடுத்துட்டு நான் நிம்மதியா என் கண்ணை மூடிடுவேன்." "அட… அப்புறம் எங்க பிள்ளைங்களை யார் தூக்கி வளர்க்குறது. நைஸா உங்க கடமைல இருந்து நழுவிடலாம்னு பார்க்குறீங்களா? அது தான் நடக்காது" என்று கூறிய வேகத்தில் அஸ்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. தன் கண்களில் இருந்த நீரை துடைத்துக் கொண்டு சரவணனின் கைகளை பிடித்துக்கொண்டார். "நீங்க சொல்றதெல்லாம் நடக்குமா? அப்படி மட்டும் நடந்துட்டா எனக்கு வேற என்ன தம்பி வேணும்." "நடக்கும் ஆனா ஒரு கண்டிஷன். நீங்க என்னை சரோனு கூப்பிட்டாதான் நான் உங்க பொண்ண கட்டிப்பேன்." என்று கூறி மீண்டும் அவரை சிரிக்கவைத்தான். "அப்போ நீங்களும் என்ன அத்தைனு தான் கூப்பிடணும்." என்று அவரும் தன் பங்கிற்கு ஒரு கட்டளையை பிறப்பிக்க, இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. "சரி சரி. நீங்க போய் அவ கூட கொஞ்சம் நேரம் பேசிட்டு வாங்க. நான் கொஞ்சம் காலார நடந்துட்டு வரேன்." என்று அவர் கூற சரவணன் அவரை நன்றியோடு பார்த்தபடி அறையினுள் சென்று பாத்திமாவின் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தான். "பாத்திமா. என்ன பார்க்க மாட்டியா?" "......." "எனக்கு தெரியும். உனக்கு என் மேல கோபம்னு. என்ன நான் உன்னை பார்க்க இத்தனை நாளா வரலன்னு தானே? " "......." "உனக்கு தெரியுமா? அன்னைக்கு நைட் உனக்கு என்ன நடந்ததுன்னு பிரபா நீ ரூமுக்கு போனதுக்கு அப்புறம் என்கிட்ட சொன்னான். எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா? உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன்...." என்று கூறி பற்களை கடித்தான். அவன் கண்கள் ரௌத்திரத்தினால் சிவந்திருந்தது. அப்பொழுது தான் டாக்டர் நல்லதை மட்டுமே அவளிடம் பேசவேண்டும் என்று கூறியது நினைவு வர தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு பேச்சை திசை திருப்பினான். "அன்னைக்கு அடுத்த நாளே நீ ஊருக்கு போயிட்டதா த்ரிஷ்யா சொன்னா. அப்புறம் பிரபாவும் அவங்க அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லன்னு ஊருக்கு போயிட்டான். உன் போனும் ஸ்விட்ச ஆப்லேயே தான் இருந்தது. த்ரிஷ்யா நம்பரும் தான். சரி ஆபீஸ் டீடைல்ஸ் வைச்சு அட்ரஸ் கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லமா போச்சு. ஒரு எம்பிலாயீயோட ஒப்புதல் இல்லமா அவங்க விவரங்களை பகிர்ந்துக்க மாட்டாங்களாம். நாம எல்லாரும் நண்பர்களா இருந்து என்ன பிரயோஜனம் நாம ஒருத்தர பத்தி ஒருத்தர் உருப்படியா ஒரு விவரமும் தெரிஞ்சுக்கல." "அதனால வந்த விளைவுகளை பார்த்தியா? த்ரிஷ்யாவிற்கு விபத்து நடந்தது பிரபாவுக்கு கூட தெரியல. நீ என்ன ஆனேன்னு எங்களுக்கு தெரியல." என்று பேசிக்கொண்டே இருந்த சரவணன் திடீரென்று அவன் பேசுவதை நிறுத்திவிட்டு பாத்திமாவை அதிசயத்துடன் பார்த்தான். அவளது விழியோரம் நீர் கசிந்தது. ஜீவனற்ற கிடந்த அவ்விழிகளில் வேதனையின் சாயல். உயிரற்ற கிடந்த அவள் உணர்வுகள் மீண்டும் உயிர் பெற்றது போல தோன்றியது அக்காட்சி! உடனே தலைத்தெறிக்க ஓடி மருத்துவர் சுரேஷ் முன்னிலையில் சென்று நின்றான்.  "என்ன சரவணன் ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடிவறீங்க. என்ன?" என்று பதட்டத்துடன் கேட்டான் "பாத்திமா ... பாத்திமா கண்ணுல ... கண்ணுல கண்ணீர்" என்று மூச்சுவாங்க அதே நேரம் உணர்ச்சிபொங்க தட்டுத்தடுமாறி கூறினான் சரவணன். அறையின் வெளியே நின்றிருந்த அஸ்மாவோ சரவணன் பதட்டத்துடன் ஓடியதை கண்டு, என்னவோ ஏதோ என்று மகளை பார்க்க உள்ளே ஓடினார். அங்கே கண்ட காட்சி அவரை ஸ்தம்பிக்க செய்தது. இது நாள் வரையிலும் எந்த உணர்ச்சியும் இல்லாத மரக்கட்டையை போல் கிடந்த தன் மகள் உதிர்க்கும் கண்ணீர் கூட அவருக்கு தற்போது இன்பத்தையே நல்கியது. தன் மகளின் கண்ணீர் கூட தனக்கு மகிழ்ச்சியை தரக்கூடும் என்று அவர் அன்றுதான் அறிந்துக்கொண்டார். இந்நிலையில் சரவணன் மருத்துவரை அழைத்துக்கொண்டு அறையினுள் பிரவேசிக்க, பாத்திமாவை பார்த்த சுரேஷின் முகத்தில் ஒரு வித நிம்மதி குடிகொண்டது. அவன் சரவணன் தோளில் தட்டி கொடுத்து, "வெல் டன் மிஸ்டர் சரவணன். இதுவே ஒரு நல்ல சைன் தான். அவங்க பூரணமா குணமடையுற நாள் ரொம்ப தூரத்துல இல்ல. ஆனா நீங்க அவங்க கிட்ட ஏதோ ஒரு உணர்ச்சிகரமான விஷயத்தை பத்தி பேசி இருக்கீங்க. அவங்கள அது ரொம்பவும் பாதிச்சு இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்கறது கூட நல்லது தான். அவங்கள குணபடுத்துற ஆயுதமா கூட அது அமையலாம். பார்த்துக்கோங்க." கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அஸ்மா உணர்ச்சிபொங்க சரவணனின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு ஓவென்று கதறி அழுதார். "என்ன அத்தை இது. பாத்திமா முன்னாடி நம்ம அழகூடாதுனு இப்போ தானே டாக்டர் சொன்னார். அதுக்குள்ள மறந்துட்டீங்களா?" "இல்ல சரோ. நான் கிட்டத்தட்ட மூணு மாசமா இவளை பார்த்துக்குறேன். ஆனா இன்னைக்கு ஒரே நாள் நீங்க வந்த உடனே அவளுக்குள்ளே இவ்வளவு பெரிய மாற்றம் உண்டு பண்ணி இருக்கீங்க. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல." "ஆனாலும் அத்தை நீங்க என்ன இப்படி கலாய்க்க கூடாது" என்று சிரிக்காமல் சரவணன் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு கூறிய விதத்தில் அஸ்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "நான் கலாய்ச்சேனா? உங்களையா? எப்போ?" "இத்தனை நாளா என் பொண்ண நல்லா பார்த்துக்குட்டேன். நீ வந்த ஒரே நாள்ல என் பொண்ண அழ வைச்சுட்டேனு சொல்லி தானே கிண்டல் பண்றீங்க?" என்று அவன் கூற அஸ்மா தாங்க மாட்டாமல் சிரித்துவிட்டார். "போங்க தம்பி நீங்க." "உஹும்… இப்போதைக்கு உங்க இரண்டு பேரையும் விட்டு எங்கேயும் போறதா இல்ல அத்தை" என்றவன் உறுதியாக கூற அவர் முகத்தில் நிம்மதி படர்ந்தது. பின்னர் அவர் சரவணனிடம், "தம்பி ஒரு விஷயம்… டாக்டர் கடைசியா என்ன சொன்னாருப்பா எனக்கு அது புரியலயே." என்று அஸ்மா கேட்க சற்று நேரம் யோசித்து கொண்டிருந்த சரவணனின் மூளையில் திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது.  "கொஞ்சம் நேரம் இங்கயே பாத்திமா பக்கத்துலயே இருங்க அத்தை. நான் ஒரு ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்." என்று கூறிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற சரவணன் கைபேசியில் பிரபாவை அழைத்தான். "உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி. எந்த உணர்ச்சியும் இல்லாம இருந்த பாத்திமா கண்ணுல இன்னைக்கு கண்ணீரை பார்த்தேன்." "என்னது பாத்திமா அழுதாலா? ஏன் அழுதா? என்ன ஆச்சு? அவளுக்கு தலைல ஏதும் வலியா? இல்லனா ஏதாவது ப்ரோப்ளமா?" என்று பிரபா பதட்டத்துடன் கேட்டு வைக்க, சரவணன் மறுமுனையில் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பை கேட்ட பிரபாவிற்கு கோபம் தலைக்கேறியது. "டேய் லூசு. அவ அழுதது உனக்கு நல்ல செய்தியா? இதுல சிரிக்கவேற செய்ற." "எப்பா பாச மலரே. விட்டா மலர்களை போல் தங்கை உறங்குகிறாள். அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்னு பாட்டு கூட பாடுவ. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு" என்று கூறியவன் மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். "ஏன் பிரபா? கடைசியா டாக்டர் சொன்னதை யோசிச்சு பார்த்தா எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் தோணுது. நான் பேசினதுலேயே அவளை உணர்ச்சி வசப்படுத்தின விஷயம் ஒன்னே ஒன்னு தான். அது தான் த்ரிஷ்யாவுக்கு நடந்த விபத்து.” "என்ன டா சொல்ற? "சாரி டா மச்சான். நான் அதை சொல்லணும்னு நினைச்சு சொல்லல. ஆனா ஏதோ பேசிட்டே இருந்தப்போ என்னையே அறியாம அந்த வார்த்தை என் வாய்ல இருந்து வந்துடுச்சு. அப்போ தான்டா எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது. த்ரிஷ்யாவால மட்டும்தான் பாத்திமாவை குணப்படுத்த முடியும். என்ன மாதிரி நட்பு இந்த ரெண்டு பெண்களுடையதும்! ஒரு சகோதரத்துவத்தை தாண்டின அன்பு. நீ எப்படியாச்சு தங்கச்சிய இங்க கூட்டிட்டு வரியா?" என்று சரவணன் கேட்வும், "முட்டாள். முட்டாள் மாதிரி பேசதே" என்று பிரபா கொதித்துவிட்டான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா