மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-18

Quote from monisha on June 17, 2020, 9:54 PM
தன் நண்பன் பேசியது சரவணனால் ஏற்க முடியவில்லை. 'என்ன சொல்றான் இவன். இவன் பேசுறத பார்த்தா? த்ரிஷ்யாவிற்கு எதுவும் ஞாபகம் வரவே கூடாதா? பாத்திமாவுக்கும் குணமாகக் கூடாதா? கொஞ்சம் நாளாகவே இவன் நடவடிக்கையே சரி இல்ல. வேலையை ரிசைன் பண்ணிட்டான். அதை பத்தி யார்க்கிட்டயும் மூச்சு விடக்கூடாதுன்னு சொன்னான். இப்போ என்னடான்னா என்னைக்குமே த்ரிஷ்யாவும் பாத்திமாவும் பார்த்துக்க கூடாது. அது அவங்க இரண்டு பேருக்குமே நல்லது இல்லன்னு சொல்றான்!!' முகத்தில் குழப்பத்துடன் வந்த சரவணனை அஸ்மா எதிர்கொண்டார்.  "என்ன சரோ. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?" "அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. என் ப்ரண்டு ஒருத்தனுக்கு ஏதோ பிரச்சனையாம். வர முடியுமானு கேட்டான். அதான் என்ன பண்றதுனு யோசிச்சுட்டு இருந்தேன்." "அதுக்கென்னப்பா நீங்க போயிட்டு வாங்க." "இல்ல அத்தை. இங்க உங்களைத் தனியா எப்படி...?" "எனக்கு என்ன? நான் என்ன காட்டுலையா இருக்கேன்? அதுவும் இல்லாம பிரபாவோட ப்ரண்ட் ஹாஸ்பிட்டில என்பதாலேயோ என்னவோ எல்லாருமே ரொம்ப நல்ல விதமா நடந்துக்குறாங்க?" "சரிங்க அத்தை. நான் கிளம்புறேன். எப்போ எது வேணும்னாலும் எனக்கு போன் பண்ணுங்க? நான் உடனே இங்க வந்துடுவேன். முடிஞ்ச அளவு சீக்கிரமா வர பார்க்குறேன்." "சரிப்பா" சரவணன் பிரபாவை தேடிச் சென்றுகொண்டிருந்த அதே நேரம் பிரபா அவனின் தந்தையின் தலையை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தான்.  "என்ன டா பிரபா? ஏன் டா இதெல்லாம் இப்போ கேட்குற?" "அப்பா ப்ளீஸ் என்ன எதுவும் கேட்காதீங்க. நான் கேட்குற கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொல்லுங்க? இப்போ மகேஷ் என்ன பன்றான்?" "அவன் ஒரு ஜாதி கட்சில சேர்ந்து எம் எல் ஏ ஆயிட்டான். போதுமா?" "எப்படி.... எப்படிப்பா? அவனுக்கு எப்படி இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சுது? அவன்.... அவனை... எனக்கு ஒண்ணுமே புரியலையே?" என்று தலை முடியைப் பிய்த்துக்கொண்டு தனக்கு தானே பேசுபவன் போல பேசிக்கொண்டே போன பிரபாவை பார்த்த அவனது பெற்றோர்கள் கலவரமடைந்தனர்.  எந்த ஒரு நிலையிலும், "ஐயோ இப்போது என்ன செய்வது?" என்று பிரபா அதிர்ந்து நின்று அவர்கள் பார்த்ததே இல்லை. ஆனால் இன்று அவன் தலை முடியை பிய்த்து கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த காட்சி அவர்கள் இருவரையுமே உலுக்கியது என்று கூறினால் அது மிகையாகாது. "டேய் பிரபா இப்போவாவது சொல்லுடா… என்னதான் டா பிரச்சனை?" என்று கேட்ட அவன் தாயின் குரலில் சொல்லவொண்னா வேதனையும் பயமும் குடிகொண்டது. பிரபாவிற்கு தன்னை அமைதி படுத்திக்கொள்ளச் சிலமணி நேரம் பிடித்தது. மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நடந்த அனைத்தையும் தன் தாய் தந்தையாரிடம் கூறினான்.  அவன் கூறியதைக் கேட்ட இருவர் முகத்திலும் பெரும் அதிர்ச்சி.  "இவ்வளவு நடந்து இருக்கு எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சு பெரிய மனுஷன் ஆகிட்டீங்க! எல்லா விஷயத்தையும் நீங்களே பார்த்துப்பீங்க அப்படி தானே?" என்று சந்தானகிருஷ்ணன் கோபத்துடன் கேட்டார். ஜோதி அதிர்ச்சி மாறாத முகத்துடன் பிரபாவையே பார்த்துக் கொண்டிருந்தார். பிரபா இதுவரை எந்த ஒரு விஷயத்தையும் ஜோதியிடம் உடனுக்குடன் தெரிவித்து விடுவான். அந்த அளவு அவர்கள் இருவருக்குள்ளும் தோழமை இருந்தது.  த்ரிஷ்யாவை அவன் பார்த்த நாள் முதல் அவளது பிறந்து நாளுக்கு முந்தைய நாள் வரை கூட வரை நடந்த அனைத்து விஷயங்களையும் பிரபா ஜோதியுடன் பகிர்ந்து கொண்டான். அவளையே அவன் திருமணம் செய்து கொள்ள ஜோதிதான் அவனுக்கு உதவி புரிந்தார். ஆனால் பாத்திமாவுக்கு நேர்ந்த கொடுமையோ த்ரிஷ்யாவிற்கு நடந்த விபத்தைப் பற்றியோ அவன் இதுவரை அவரிடம் மூச்சு கூட விடவில்லை. த்ரிஷ்யாவின் விபத்து பற்றியே அவனுக்குத் திருமணத்தின் பிறகு தான் தெரியும் என்று அவனே கூறியதுதான். ஆனால் ராஜசேகர் பற்றி இவன் சொல்லாமல் மறைத்த காரணம் தான் அவருக்குப் புரிபடவே இல்லை. இப்பொழுது இந்த ஆராய்ச்சியை விட முக்கியமான சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. எனவே ஜோதி மெல்ல தன் கணவனின் முகத்தை ஏறிட்டு சில கேள்விகள் கேட்டார். "இப்போ அந்த ராஜசேகர் எங்க இருக்கான்? எப்படி இருக்கான்? உங்களுக்கு நிஜாமாவே தெரியாதா?" "நீ என்ன… என்னை சந்தேகமா பார்க்குற? அவனை என் தம்பின்னு சொல்லவே நான் வெட்க படுறேன். அவன் பண்ண வேலைக்கு அவன் மட்டும் என் கைல கிடைச்சானா இங்கயே கொன்னு புதைச்சுடுவேன்." அவரின் குரலில் தெரிந்த உறுதி தாய் மகன் இருவருக்குமே நம்பிக்கை அளித்தது. மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பிரபா தந்தையுடன் ஆலோசிக்க எண்ணினான். "அந்த மகேஷ்… அதான் உங்க தம்பியோட புள்ள. அவன் முகவரி உங்களுக்குத் தெரியுமா?" "இல்லடா. அந்த கேடுகெட்டவன் ஒரு கல்யாணத்தைப் பண்ணி ஒரு புள்ளையையும் பெத்துக்குட்டு அவங்கள விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனதில்லாம அங்கேயும் இவன் கைவரிசையைக் காட்டி இருக்கான். எப்போ அவனை தலை முழுகினேனோ அன்னைக்கு அப்புறம் அவனைப் பத்தி நான் எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல. அதனால மகேஷ் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. ஆனா மகேஷ் உறுப்பினரா இருக்குற கட்சித் தலைவர் எனக்கு தெரிஞ்சவர் தான். அவர் தான் ஒரு முறை இவனை பத்தி என்கிட்ட சொன்னாரு.." "அப்போ அவருக்கே போன் பண்ணி மகேஷ் இருக்குற இடத்தோட முகவரியைக் கேட்டு தெரிஞ்சுக்கலாமே?" என்று பிரபா கூற சந்தானகிருஷ்ணன் உடனே ஆமோதித்தார். தன் கைபேசியில் அவரது எண்ணிற்கு அழைத்து பேசியதில் அவருக்கு வேண்டிய விவரம் கிடைத்தது. ஆனால் மகேஷ் இப்பொழுது ஊரில் இல்லை என்றும் யாரோ ஒரு விளம்பர நடிகையுடன் உல்லாச பயணம் சென்றிருப்பதாகவும் கூறினார். "டேய் பிரபா. அவன் எல்லாம் ஒரு ஆளு? அவன் நம்மள மீறி என்ன பண்ணிட முடியும்னு நினைக்குற? முதல்ல அவனுக்கு அவன் அப்பனுக்கும் ஒத்துப்போகாது. இதுல அவன் அப்பனுக்காக அவன் வந்த நிற்கப்போறான்னு நினைக்குறியா?" ஆனால் அவரின் இந்த கேள்விக்கு பிரபா மறுப்பாக தலையசைத்தான். "இப்போ அந்த ராஜசேகர் அவனோட பையன் மகேஷ் கூட தான் இருக்கானாம். அது மட்டும் இல்லப்பா. த்ரிஷ்யாவை ஆக்ஸிடெண்ட் பண்ணது மகேஷோட ஆள் தான்." என்று கூறி பிரபா தன் தாய் தந்தை இருவரையும் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.  "என்ன டா ஒன்னு ஒண்ணா சொல்ற. இன்னும் என்னலாம் நடந்து இருக்கு. போக இதெல்லாம் நீ எப்படி தெரிஞ்சுக்குட்ட." "என் மாமனாரும் ப்ரண்ட் ஒரு டிடக்ட்டிவ் ஏஜென்சில தான் வேலை பார்க்குறார். அவர் மூலமா தான் நாங்க இந்த விவரம் எல்லாம் தெரிஞ்சுக்குட்டோம். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் பா. மேற்கொண்டு மகேஷால பாத்திமாவுக்கும் த்ரிஷாவுக்கும் ஏதாவது ஆச்சுன்னா அவனை நான் சும்மா விட மாட்டேன்." என்று பிரபா கூறிக்கொண்டு இருக்கும் போதே, "நானும் சும்மா விடமாட்டேன்" என்று இன்னொரு குரல் வாசல் புறம் கேட்க அங்கே சரவணன் நின்று கொண்டிருந்தான். இவர்களில் சூளுரையைக் கேட்ட ஜோதி இருவரையும் கோபத்துடன் முறைத்தார். "என்ன பண்ணுவீங்க. அவனோட அப்பாவை படுத்த படுக்கை ஆக்கினா மாதிரியே அவனையும் ஆக்குவீங்களா? இல்லன்னா ஒரேடியா அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போவீங்களா?" என்று கேட்டவரின் குரலில் அனல் தெறித்தது. அவரது திடீர் கோபத்தை எதிர்கொண்ட இருவரும் பதில் ஏதும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றனர். "சரி நீங்க இரண்டு பேரும் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுங்க. அப்படியே இந்த இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையையும் குழிதோண்டி புதைச்சுட்டு போயிடுங்க" "அம்ம்ம்ம்மா" என்று பிரபா அதிர, "என்ன டா அம்மா? அன்னைக்கு மைசூர்ல பாத்திமாவுக்கு அந்த ஆள் தொல்லைக் குடுத்தான்னு அதுக்காக அவனைப் படுத்த படுக்கையாக்கிட்டீங்க. சரி அதுகூட அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் வந்த கோபம். அதனால அப்படி செஞ்சீங்கன்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கு நிலைமையே வேற. மகேஷ்க்கு எல்லாம் விவரமும் அன்னைக்கே தெரிஞ்சு இருக்கு. ஆனா அவன் எதுவுமே பண்ணாம அமைதியா அவனுக்குரிய த்ரிஷ்யா மேல வைச்சான். ஒரு கேடுகெட்டவனே அவ்வளவு நிதானமா காய் நகர்த்தி இருக்கிறான். ஆனா எவ்வளவோ புத்தி தெரிஞ்ச நீங்க இரண்டு பேரும் முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்கீங்க.” சரவணன் மற்றும் பிரபாவிற்கு அவர் கூறியதில் கருவே புரியவில்லை. இவர் அவனை தண்டிக்க வேண்டும் என்கிறாரா வேண்டாம் என்கிறாரா? என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் ஜோதியைப் பார்த்தனர். "நீங்க பேசுறது தலையும் புரியல வாலும் புரியல அம்மா " "அமாம் ஆண்ட்டி. நீங்க என்ன தான் சொல்லவர்றீங்க?" "சொல்றேன். ஆனா பொறுமையா நிதானமா நான் சொல்றதை அப்படியே செயல் படுத்துனீங்கனா அந்த மகேஷை மொத்தமா தரைமட்டத்துக்குக் கொண்டு போயிடலாம்" என்று கூறியவர் மெல்ல தன் திட்டத்தைக் கூறி முடித்தார். கேட்டுக்கொண்டிருந்த இருவரின் முகத்திலும் தெளிவு பிறந்தது. "நீங்க ஒரு சாணக்கியன்மா" என்று பிரபா தன் தாயை பாராட்ட சந்தானகிருஷ்ணன்தன் மனைவியின் தோளில் கைபோட்டபடி, "பின்ன. அவ யாரு. என் பொண்டாட்டி ஆச்சே" என்று பெருமை பாட்டு பாடினார். "சரி சரி. அமைதியா இருங்க த்ரிஷ்யா அவ அம்மா வீட்டுக்கு போய் பார்த்துட்டு உடனே திரும்பிடுவேன்னு சொன்னா. அவ வந்தாலும் வந்துடுவா. இதோட இந்த பேச்சை நிறுத்திக்கலாம்." என்று கூறி ஜோதி விலகி செல்ல சந்தானகிருஷ்ணனும் வேலை என்று வெளியில் கிளம்பிவிட்டார். தனித்து விடப்பட்ட நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். மறுகணமே சரவணன் பிரபாவை கட்டி அணைத்துக்கொண்டான். "என்னை மன்னிச்சுடு மச்சி. நீ ஏன் த்ரிஷ்யாவும் பாத்திமாவும் ஒரே இடத்துல இருக்கக்கூடாதுனு சொன்னதன் காரணம் இப்போ தான்டா புரியுது. " "பரவாயில்லா விடுடா. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்."  "ஏன் பிரபா எனக்கு ஒரு விஷயம் தான் புரியல. அன்னைக்கு நடந்த சம்பவம் தெரிஞ்ச இரண்டே பேரு நீயும் நானும் மட்டும் தான். அப்புறம் எப்படி அந்த மகேஷ்க்கு தெரிஞ்சு இருக்கும்” என்று கேட்க பிரபா தன் மனக்கண்ணில் நடந்த சம்பவங்களை காட்சிப்படுத்தினான். பிரபா த்ரிஷ்யாவிடம் எப்படியும் அவளை அவனிடம் இரண்டு நாளில் பேசவைப்பதாகச் சாவல் விட்டுச் சென்றவன் மறுநாளே த்ரிஷ்யாவை கூடை பந்து விளையாட்டு நடக்கும் இடத்தில் சந்தித்தான். அங்கு த்ரிஷ்யா அட்டகாசமாக கோல் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்த பிரபா அவளை வெறுப்பேற்றவென்றே தானும் விளையாட்டில் இறங்கினான். ஏற்கனவே அங்கு ஐந்து பேர் கொண்ட இரு குழுக்கள் விளையாடிக்கொண்டிருக்க த்ரிஷ்யாவிற்கு எதிர் குழுவுடன் பிரபாவும் இணைந்துகொண்டான். த்ரிஷ்யா பிரபாவை முறைத்துக்கொண்டு நின்றாள். ஆட்டம் ஆரம்பம் ஆனது. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து எல்லா பந்துகளையும் கூடையில் போட்டவள் த்ரிஷ்யா மட்டும் தான். ஆனால் பிரபா களத்தில் இறங்கி அரைமணி நேரம் கழிந்த பின்னும் த்ரிஷ்யாவின் ஒரு பந்து கூட கூடையில் விழவில்லை. இதற்குக் காரணம் பிரபாவை கண்டு அவள் தடுமாறியதாலா அல்லது அவன் அவ்வளவு திறமையாக விளையாடிக் கொண்டிருந்தானா என்று த்ரிஷ்யாவிற்கு புரிபடவில்லை. வெகுநேரம் ஆடி களைத்ததால் ஒவ்வொருவராக ஆட்டத்தை விட்டு விலகிச் செல்ல பிரபாவும் த்ரிஷ்யாவும் மட்டும் தனித்து விடப்பட்டனர். த்ரிஷ்யாவிற்கும் களைப்பாகத் தான் இருந்தது. ஆனால் பிரபாவிடம் தோல்வியை ஒத்துக்கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை. புன்னகையுடன் பிரபா த்ரிஷ்யாவை நெருங்கினான். த்ரிஷ்யா அவனை உஷ்ணபார்வை பார்த்துவிட்டு பின் அவனை பார்க்க விரும்பாதவள் போல முகத்தை வேறுப்புறம் திருப்பிக் கொண்டாள். அப்பொழுது பிரபா த்ரிஷ்யா முகத்தை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே பாடத் தொடங்கிவிட்டான். "என் காதலே என் காதலே  என்னை என்ன செய்யப் போகிறாய்!!  நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ  ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்!!  சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்  என்ன தரப் போகிறாய்!!  கிள்ளுவதைக் கிள்ளி விட்டு  ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்!!" இவன் பாடி முடித்ததும் அவள் கலவரத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள். இதுவரை அவன் அவளிடம் தன் காதலைப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசியது இல்லை. ஏன் நேற்றுவரை அதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் அவன் பாத்திமாவிடம் தன்னை காதலிப்பதாகச் சொன்னதே பொய்யோ என்று நினைக்குமளவிற்கு அவனுடைய பேச்சும் செய்கையும் அமைந்திருந்தது. ஆனால் இன்று திடீரென்று அவளைப் பார்த்து அவன் அப்படி பாடியதும் அவளது மனவுறுதி பலமாக ஆட்டம் கண்டது. இன்னும் அவன் முன் நின்றாள் எங்கே தன் வசமிழந்து விடுவோமோ என்றும் அவனிடமே தன்னை வெளிப்படுத்திவிடுமோ என்றும் அஞ்சியவளாய் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். இந்த காட்சி இன்னும் ஒரு ஜோடி கண்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. த்ரிஷ்யா எப்பொழுது விளையாடச் சென்றாலும் பாத்திமா ஆவலுடன் பார்க்கிங் பெஞ்சில் அமர்ந்து அவளது விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம்.  எப்பொழுதும் த்ரிஷ்யா இருந்தாள் அந்த விளையாட்டு சுவாரஸ்யத்துடனே இருக்கும் என்பதால் அவள் வேறு எங்கும் செல்லாமல் த்ரிஷ்யா விளையாடி முடிக்கும் வரை அங்கேயே அமர்ந்து இருப்பாள். இன்றும் அப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போதே பிரபா விளையாட்டில் சேர்ந்துகொள்ளவும் பாத்திமாவிற்கு விசிலடிக்க முடியாத ஒரே குறை தான். நடந்தவற்றை அனைத்தையும் ஒரு ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் பிரபா திடீரென்று பாடத் தொடங்கியதும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள். த்ரிஷ்யா சென்றதும் பாத்திமாவின் குரலை கேட்ட பிரபா அவள் அருகில் வந்தமர்ந்தான். "ஏன் பாத்திமா? என் குரல் என்ன அவ்வளவு நாராசமாவா இருந்துது. உன் ப்ரண்ட் இப்படி தலை தெறிக்க ஓடுறா?" "அது அவளை தான் கேட்கணும்." "நீயும் தானே கேட்ட. நீயே சொல்லு." "நான் கொஞ்சம் தூரமா இருந்து தானே கேட்டேன். நீங்கதான் விட்டா அவ காதுக்குள்ளேயே போய் பாட போறவர் மாதிரி அவ்வளவு நெருக்கமா நின்னு பாடுனீங்களே. அவளுக்கு தான் டி டி ஸ் சவுண்ட்ல கேட்டு இருக்கும்." என்று கூறி மீண்டும் சிரித்தாள். "சரி அதெல்லாம் போகட்டும். நாளைக்கு மறுநாள் த்ரிஷ்யாவோட பிறந்தநாள் ஆச்சே. அவளுக்கு என்ன பரிசு தரப்போறீங்க?" என்று வினவினாள். "அப்படியா? அப்போ கொண்டாடிட வேண்டியது தான். " "ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் அண்ணா. அவ அப்படி முகத்தை திருப்பிக்கிட்டு போறா. நீங்க என்னடானா ஜாலியா கொண்டாட்டத்தைப் பற்றி பேசுறீங்க" "நான் ஏன் பயப்புடனும். என் மனசுல அவ இருக்கா. அதை வெளிக்காட்ட நான் தயார். அவ மனசுலையும் நான் தான் இருக்கேன், ஆனா அவ அதை மறைக்க நினைக்குறா. அதனால தான் இப்போ கூட என்ன பார்த்து பயந்து ஓடுறா" "அதுவும் சரி தான்". "பாத்திமா. நாளைக்கு த்ரிஷ்யாவுக்கு பரிசு வாங்க நீ என்கூட வர முடியுமா?" "ஓ எஸ். என்ன ஒன்னு. த்ரிஷ்யா கண்ணுல மண்ணை தூவிட்டு தான் வரணும். அதெல்லாம் பார்த்துக்கலாம். ஐ அம் இன்." என்று கூறிய மகிழ்ச்சியுடன் பிரபாவுடன் கை குலுக்கினாள் பாத்திமா மறுநாள் இதே நேரம் விதி அவளைப் பார்த்துச் சிரிக்கப்போவதை அறியாமல்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா