மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 10Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 10

Quote from monisha on December 6, 2025, 10:01 PM

அத்தியாயம் – 10

“ரத்னா ஏ ரத்னா எழுந்திருடி... எழுந்திருங்குறேன் இல்ல” சாரதாவின் அதட்டலுக்குக் கொஞ்சமும் அசராமல் ரத்னா உறங்கிக் கொண்டிருக்க, அந்தச் சத்தத்தில் ரஞ்சனின் உறக்கம் களைந்ததுதான் மிச்சம்.

தரையில் படுத்திருந்தவன் மெல்லக் கண்களைத் திறந்தான். நேராக அவன் பார்வை சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தின் மீது விழுந்தது. சிறிய முள் ஐந்திலும் பெரிய முள் பத்திலும் நின்றிருந்தது.

“மணி அஞ்சு அம்பதுதானே ஆகுது. அதுக்குள்ள எதுக்கு பாட்டி தங்கச்சியை எழுப்புறீங்க”

“இன்னைக்கு முழு நாள் கரன்ட் கட் பண்ணிடுவாங்கலாம். அதான் குழாய்ல தண்ணி பிடிச்சி வைச்சிடலாம்னு. அதுக்குதான் உன் தங்கச்சியை எழுப்பு எழுப்புன்னு எழுப்புறேன். எங்க, கொஞ்சமாச்சும் அசராளா பாரு”

“அதுக்கு ஏன் தங்கச்சியை எழுப்புறீங்க. என்னை எழுப்ப வேண்டியதுதானே”

“நீயே வேல வேலன்னு ஓடிட்டு இருக்க, வந்து இருக்க இரண்டு மூணு நாளையும் உன்னைய வேலை வாங்க சொல்றியா”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் வரேன் இருங்க” என்று போர்வையை உதறி கொண்டு எழுந்து நின்றான்.

“ஒன்னும் வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரம் படு. நானே தூக்கியாந்துக்குறேன்”

“உங்களுக்கே இடுப்பு வலி. கம்னு இருங்க. நான் போய் பிடிச்சுட்டு வரேன். நீங்க குடத்தை மட்டும் எடுத்து வையுங்க” என்றவன் பின்கட்டில் சென்று முகத்தை அலம்பித் துடைத்துக் கொண்டு வந்தான்.

அதன் பின் வாசலில் இருந்த இரண்டு குடங்களைத் தூக்கிக் கொண்டு தெருமுனையிலிருந்த குழாயிற்குச் சென்றான்.

அங்கே தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண், “ரஞ்சு... நீ எப்ப வந்த” என்று ஆர்வமாக விசாரித்தாள்.

“வந்து மூணு நாளாச்சு அண்ணி”

“வூட்டு பக்கம் வந்து போலாம் இல்ல”

“வரேன் அண்ணி”

“ஆமா வரேன் வரேன்னு சொல்றியே ஒழிய வர்றதே இல்ல”

“ஊருக்கு வர்றதுக்கே நேரம் கிடைக்குறது இல்ல”

“இப்படியே ஓடிக்கிட்டே இருந்தா எப்படித்தான். உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா. ம்ம்ம் சாரதா அத்தையும் பாவம் எத்தனை நாளிக்கு தனியா கஷ்டப்படுவாங்க” என்றவள் சொல்ல, அவன் எதுவும் பேசாமல் நின்றான். அதேநேரம் அவளின் குடத்தில் தண்ணீர் நிரம்பி ஊற்ற, அவன் அதனைத் தூக்க அவளுக்கு உதவினான்.

அவள் அப்போதும் கிளம்பாமல், “சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குற வழிய பாரு. ஏன் நம்மூர்லயே நிறைய பொண்ணுங்க இருக்கு. நீ ஊம்னு சொல்லு. நானே உங்க அண்ணன்கிட்ட சொல்லி பேசி முடிக்க சொல்றேன்” என்று அவள் பேசியதை எல்லாம் கேட்டதும் அவனுக்கு கவிதாவின் நினைவு வந்தது.

‘அஃபிஸியலா நம்ம பண்ணிக்கிட்டது பேர் கல்யாணமா இருக்கலாம். ஆனா எமோஷனலா இந்த உறவுல ஒன்னும் இல்லங்குறதுல நானும் நீயும் தெளிவா இருக்கணும். உனக்கு உங்க தாத்தா சொத்தை நிர்வகிக்க நான் உதவி செய்றேன். அதேபோல என் கம்பனியோட உரிமை முழுசா கிடைக்க எனக்கு நீ உதவி செய்யணும். புரிஞ்சுதா?’

அன்று இந்த விஷயத்தை அவ்வளவு சாதாரணமாகச் சொல்லி அவனைப் பார்த்துத் தலையாட்டினாள்.

“ரஞ்சு, ரஞ்சு... என்னாச்சு. ஏன் அப்படியே சிலையாட்டம்மா நிற்குற. தண்ணி வீணாகுது பாரு. குடத்தை வைய்யு” என்ற அந்த அக்காவின் குரல் அவனை மீண்டும் இயல்பு நிலைக்கு இழுத்து வர, அவன் குடத்தை வைத்தான்.

“என்னவோ போ, நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.” என்று விட்டு அவள் கிளம்பிவிட, அவன் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டான்.

பின்னர் தான் எடுத்து வந்த குடங்களில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டான். இப்படியே இரண்டு மூன்று நடை தண்ணீரைப் பிடித்து வந்து தொட்டியை நிரப்பினான்.

“போதும் கண்ணா, அப்படியே இறக்கி ஓரமா வைச்சிடு” என்று கூறிய சாரதா, “இரு. பால் சூடு பண்ணிட்டேன், உனக்கு எடுத்துட்டு வரேன்” என, “ஐயோ பாட்டி நான்தான் பால் குடிக்கிறதை விட்டன்னு உங்ககிட்ட வந்த நாளிலிருந்து சொல்லிட்டு இருக்கேன் இல்ல” என்றான்.

“ஏன்டா கண்ணா. உடம்புக்கு நல்லது. கொஞ்சமா குடிக்கலாம் இல்ல” என்று ஆதங்கப்பட்ட சாரதாவிடம் அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அன்று அவன் பால்தான் குடிப்பேன் என்றதற்கு அவள் எவ்வளவு கேவலமாகப் பார்த்தால், என்பதை அவனால் இன்னும் மறக்க முடியவில்லை.

“ப்ளீஸ் எனக்கு எதுவும் வேண்டாம் விடுங்க” என்று விட்டு சோபாவில் சரிந்தவன், எதிரே அவன் தந்தை முகப்பறை கட்டிலில் எந்தவிதக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டபடி உறங்குவதைக் கண்டு எரிச்சலுற்றான்.

‘இந்த மனுஷனால்தான் நான் இப்போ இங்கே மாட்டிக்கிட்டு இருக்கேன். போனையும் உடைச்சிட்டாரு, காசையும் பிடுங்கிக்கிட்டாரு. இதுல ‘இந்த ஊரை தாண்டி போனா புள்ளனு கூட பார்க்க மாட்டேன் கண்ட துண்டமா வெட்டி போட்டிருவேனு’ சொல்லி இருக்காரு. இப்போ என்னதான் நான் பண்றது. நேத்து ரிசப்ஷன் நடக்காம தாத்தாவும் கவிதாவும் எவ்வளவு அவமானப்பட்டு இருப்பாங்க. பாவம்! எல்லாம் என்னால, எதுவும் செய்ய முடியாத என்னோட கோழைத்தனத்தால’ என்றவன் உள்ளூர பொறுமி கொண்டிருந்த நிலையில் ரத்னா தூக்க கல்ககத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து வந்து, “அண்ணா” என்று சோபாவில் அவன் மடியில் வந்து சுருண்டாள்.

தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவன் மனம் அமைதியானது. அவள் தலையை அவன் பாசமாக வருடிக் கொடுக்க, “நீதான் உன் தங்கச்சிக்கு நல்லா செல்லம் கொடுத்துக் கெடுத்து வைச்சு இருக்க. பாரு, எப்போ எழுப்புனா எப்போ எழுந்து வரான்னு” என்று சாரதா கடுகடுத்தார்.

“விடுங்க பாட்டி சின்ன பொண்ணுதானே”

“சின்ன பொண்ணுனா சுறுசுறுப்பா எழுந்து கூடமாட வேலை செய்ய வேணாமா. பாரு பெட்ல இருந்து வந்து சோபாவால படுத்துக்கிட்டதை. தினமும் இதே கதைதான்

ஏய் ரத்னா எழுந்திருடி. இன்னைக்கு உங்க அண்ணனே தண்ணி எல்லாம் பிடிச்சுட்டு வந்துட்டான். நீ போய் வாச தெளிச்சு கோலம் போடுற வேலையாவது செய்,” என்று சாரதா அதிகாரமாக கூறவும்,

“போ கெழவி உனக்கு வேற வேலையே இல்ல” என்று ரத்னா உதட்டை சுழித்தாள்.

“சின்ன பொண்ணுன்னு சொன்னியே, பார்த்தியா எப்படி பேசுறான்னு”

“ரத்னா, பாட்டியை அப்படி எல்லாம் பேச கூடாது. தப்பு” என்று அவன் தங்கையைக் கண்டித்தான்.

“இல்ல அண்ணா, தினமும் நிறைய ஹோம் வொர்க் கொடுக்குறாங்க. எழுதிட்டு படுக்கவே லேட்டாகிடுது. இதுல இந்த பாட்டி சீக்கிரம் எழுப்பி தண்ணி பிடி, கோலம் போடுன்னு உயிரை எடுக்குது.”

“ஆமாமா நான்தான் உயிரை எடுக்குறேன். இனிமே பாரு. உன்கிட்ட எந்த வேலையும் சொல்ல மாட்டேன். நீ ராணி மாதிரி இரு. நானே எல்லா வேலையும் செஞ்சிக்குறேன்” என்றவர் வேக வேகமாக வாசலைப் பெருக்கக் கிளம்பிவிட்டார்.

“ஏன் ரத்னா இப்படி பண்ற. கொஞ்சம் பாட்டிக்கு ஹெல்ப் பண்ணாதான் என்ன? அவங்களுக்கும் வயசாகுது இல்ல.” என்றதும் அவள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே, “இல்ல அண்ணா அவங்கதான்...” என்று இழுத்தாள்.

“நீ எதுவும் பேசத் தேவை இல்ல. போய் பிரஷ் பண்ணு” என்று அவளை அனுப்பி விட்டு, வாசலுக்கு வந்தான்.

“வயசான காலத்துலயும் இப்படி உழைச்சிட்டே இருக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு போல” என்று புலம்பியபடி வேலை செய்த சாரதாவை பாவமாக பார்த்தான்.

அவர் சொன்னது போல வயதான பிறகும் அவருக்கு ஓய்வே இல்லை என்று எண்ணியவன், வாசலைக் கூட்டிக் கொண்டிருந்த சாரதாவிடமிருந்து துடைப்பத்தைப் பிடுங்கினான்.

“நான் பெருக்கி தண்ணி தெளிக்கிறேன். நீங்க கோலம் மட்டும் போடுங்க”

“ஆம்பள பையன் நீ எதுக்கு இதெல்லாம் செஞ்சிக்கிட்டு. வேண்டாம் இப்படி கொடு”

“அதெல்லாம் பரவாயில்ல” என்றவன் கூட்டிப் பெருக்க, “ஐயோ வேண்டாம் கண்ணா, நீ இப்படி கொடு” என்று அவனிடம் துடைப்பத்தை அவர் வாங்க முற்பட,

“குனிஞ்சு நிமிர்ந்து பெருக்குனா உங்களுக்கு இடுப்பு வலி வந்திரும். பாட்டி, நீங்க போங்க. போங்கனு சொல்றேன் இல்ல” என்றவன் தர மறுத்து தானே அந்த வேலையைச் செய்தான்.

“சரி நான் போய் கோலமாவு எடுத்துட்டு வரேன்” என்று அவர் உள்ளே சென்றுவிட, ரஞ்சன் சுத்தமாக பெருக்கி வாலியை கையிலெடுத்து தண்ணீரைத் தெளிக்கத் தொடங்கினான்.

அது எதிர்பாராதவிதமாக அவன் முன்னே வந்து நின்ற பெண் மீது தெறித்தது.

அப்போதுதான் உயரமான ஹீல்ஸ் செருப்புடன் முன்னே நின்ற காலை பார்த்துக் குழம்பியபடி நிமிர்ந்தான். கவிதா முகமெல்லாம் தண்ணீர் சொட்ட நின்றிருந்தாள்.

அவன் வியப்பு அதிர்ச்சி இரண்டும் கலந்த நிலையில் நின்றிருக்க, அவளோ சீற்றமாக முறைத்தபடி அவனை நெருங்கி வந்தாள்.

பதினெட்டு மணி நேரத்திற்கு முன்பு...

“நான் அப்பவே இந்த கல்யாணம் வேண்டானு சொன்னேன் கொஞ்சமாச்சும் கேட்டியா. அவ்வளவும் பிடிவாதம். இதுல நான் செய்றது சரிதான்னு திமிரா சொன்ன. இப்போ என்னாச்சு. யார் அசிங்கப்பட்டது” என்று அஜய் நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருக்க, அவளால் பொறுக்க முடியவில்லை.

“அஜய் போதும்” என்ற அவள் ஏற்கனவே ரிசப்ஷன் நின்றுவிட்ட கடுப்பில் இருக்க, இவன் வேறு காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன போதும். நீ பண்ணி வைச்ச வேலைக்கு...”

“அய்யோ இப்ப என்ன பண்ணிட்டேனு இப்படி குதிக்குற நீ”

“என்ன பண்ணிட்டியா? கல்யாணம்கிற பேர்ல ஒன்னு பண்ணியே, என்னத்த சொல்ல... சுமாரா படிச்ச பொண்ணு கூட நீ பண்ண மாதிரி ஒரு கல்யாணத்தை பண்ண மாட்டாடி”

“நான் ஏன் அந்த முடிவை எடுத்தன்னு உனக்கு தெரியும் தானே”

“தெரியும். ஆனாலும் இது சரியா வராது வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேனா இல்லையா?”

“ஆமா சொன்ன. இப்ப அதுக்கு என்னங்குற”

“என்னங்குறனா? அடியேய்!. அந்த ரஞ்சன் உனக்கும் பே பே உங்க தாத்தனுக்கும் பே பேன்னு காட்டிட்டு ஓடிட்டான். மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்குன கதையாகிடுச்சு உன் கதை. இல்ல இல்ல... நம்ம கதை. இப்போ நம்ம கம்பனியும் சேர்ந்து கோவிந்தா ஆகபோகுது”

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது” என்று கவிதா உறுதியாகக் கூற, “என்ன அந்த ரஞ்சன் திரும்பி வருவான்னு நினைக்குறியாக்கும்” என்றான்.

“அவன் வரலன்னா என்ன, நான் போய் கூட்டிட்டு வருவேன்”

“எங்கே போய் கூட்டிட்டு வருவ”

“வேறெங்க அவன் ஊருக்குத்தான்”

“அங்கே அவனோட ரவுடி அப்பன் இருப்பான். ஏற்கனவே அவன் உன்னை அடிச்சு இருக்கான். நீ தனியா எல்லாம் போனா பின்னிடுவான்.”

“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது”

“ரொம்பத்தான்டி நம்பிக்கை உனக்கு”

“ஆமா நம்பிக்கைதான். நான் போகத்தான் போறேன்”

“அப்படினா நானும் வரேன் உன் கூட”

“ஒன்னும் தேவை இல்ல. நானே பார்த்துக்கிறேன்”

“இப்படிதான் நானே பார்த்துக்கிறேன். நானே பார்த்துக்கிறேனு எல்லாத்தையும் சொதப்பி வைச்சு இருக்க”

“ஆமா நான் சொதப்பி வைச்சு இருக்கேன். நீ எல்லாத்தையும் அப்படியே சூப்பரா பண்ணி கிழிச்சிட்டியாக்கும்”

“இப்போ நான் என்ன பண்ணேன்”

“நீ எதுவும் பண்ண மாட்டுற. அதான் உன் பிரச்னையே”

“இப்போ என்னடி சொல்ல வர்ற நீ”

“ஆனந்தியோட வீட்டுல மாப்பிளை பார்த்து நிச்சயம் பண்றதுக்கு தேதி குறிக்க போறாங்க நாளைக்கு.” என்றதும் அஜயின் முகம் இறுகியது.

அவன் எதுவும் பேசாமல் நின்றுவிட, “ஒழுங்கா போய் அவகிட்ட லவ்வை சொல்ற வழியை பாரு” என்றாள்.

“நான் ஒன்னும் அவளை...” என்றவன் பேச எத்தனிப்பதற்குள்,

“பொய் பேசுனா கொன்னுடுவேன் உன்னை. சொன்னதைச் செய். அப்புறம் உன் வாழ்க்கை பூரா நீ பீல் பண்ணுவ. சொல்லிட்டேன்”

“ஆனா நீ தனியா எல்லாம் அந்த ஊருக்கு போகாத.” என்றவன் பதற்றத்துடன் கூறினான்.

“என்னை எனக்கு பார்த்துக்க தெரியும். நீ முதல உன் பிரச்னையை முடி” என்றவள் அன்று இரவு ரயிலில் கிளம்பி ஜோலார்பேட்டை வந்து இறங்கினாள்.

அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து விடியற்காலையில் ரஞ்சனின் ஊரான சந்திராபுரத்திலுள்ள அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

பெரிய தோள் பையுடன் சிவப்பு வண்ண குர்தியில் அவன் எதிரே நின்றவளை, ரஞ்சன் நம்ப முடியாமல் பார்த்தான்.

அவள் முகத்திலிருந்து நீர் திவலைகள் வழிந்து அவள் கழுத்து வளைவில் இறங்க, அவன் மனம் தடுமாறியது. எப்போது அவளை பார்த்தாலும் ஏற்படும் பரவச உணர்வு, அந்த கணம் அவனுக்குள் இன்னும் அதிகமாக சுரந்தது.

‘தான் காணும் காட்சி நிஜமா?’ என்றவன் தன்னை மறந்து அவளை விழியகற்றாமல் பார்த்திருக்க, அவளோ கொஞ்சம் யோசிக்காமல் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டாள்.

நிஜரூபமாக தான் நிற்பதை, அவன் கன்னத்தின் வழியாக மூளைக்குள் தெறிக்கவிட்டாள்

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா