மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo-21

Quote from monisha on July 7, 2020, 9:36 PM

21
மறுநாள் காலையில் பிரபா த்ரிஷ்யாவை தொடர்பு கொள்ள முயன்று தோற்றான். பாத்திமா மற்றும் த்ரிஷ்யாவின் கைப்பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. சுதாவிடம் விவரம் கேட்டான். "அவங்க விடிய காலைலயே கிளம்பி சென்டருக்கு போயிட்டாங்களே!" என்றாள். சென்டர்க்கு சென்றால் அவளும் பாத்திமாவும் விடுப்பு எடுத்து இருப்பதாக தகவல் வந்தது. இதற்கிடையில் பிரபாவின் தந்தைக்கு உடல் நலம் குன்றியதாக தகவல் வரவே ஒன்றும் செய்யமுடியாமல் பிரபா ஊருக்கு கிளம்பினான். அதன் பிறகு த்ரிஷ்யாவுடன் திருமணம் பேசியபொழுது தான் அவளை மீண்டும் அவன் சந்தித்தான். பாத்திமாவை பற்றிய தகவலை யாரிடமும் கேட்க சற்று தயக்கமாகவே இருந்தது. ஆனாலும் திருமண நாள் அன்று அவளை சந்திக்க நினைத்த பொழுதும் அவள் வராதது அவனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. இருப்பினும் திருமணத்திற்கு பிறகு த்ரிஷ்யாவிடம் அவளை பற்றி கேட்டறிய எண்ணினான். ஆனால் அதற்கு பிறகு அவன் கேட்டறிந்த அனைத்துமே அதிர்ச்சிக்குரிய தவல்கள் தான். இவை அனைத்தையும் யோசித்த பிரபாவிற்கு லேசாக பொறி தட்டியது. "டேய் சரோ. உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நம்ம அந்த ராஜசேகரோட ஆட்களை அடிச்சு போட்டுட்டு தானே அவனை தூக்கிட்டு போனோம். திரும்ப அந்த ஆள அந்த காட்டுக்கே தூக்கிட்டு போனப்போ அவனுங்க ரெண்டு பேருமே அங்க இல்ல. நாமளும் அன்னைக்கு இருந்த நிலைமைல அதை கவனிக்க தவறிட்டோம். "கரெக்டா சொன்ன டா பிரபா. அடுத்து நாம என்ன பண்ண போறோம்." "வேற என்ன அம்மா சொன்ன பிளானை எக்ஸிகியூட் பண்ண வேண்டியது தான். அவன் இந்தியாக்குள்ள காலடி எடுத்து வைக்கும் பொழுது அவனுக்கு இங்க எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி மட்டும் பண்ணலைன்னா அவன் நம்மள ஒன்னும் இல்லாம பண்ணிடுவான்." என்று கூறிய பிரபா அந்த திட்டத்தை நிறைவேற்றும் வேலைகளை செய்வதில் மும்முரமாக இறங்கினான். அதன்படி சரியாக மூன்று நாட்களில் சுரேஷ் கட்டி வைத்திருந்த செல்வாக்கு என்னும் கோட்டையை தரை மட்டமாக்கும் செய்தி ஒன்று தொலைக்காட்சியில் வெளியாகி கொண்டிருந்தது. "சுரேஷ் என்ற எம் எல் ஏ விளம்பர நடிகை சாக்ஷியை மிரட்டி பணியவைத்து உல்லாசப்பயணம் அழைத்து சென்றதாகவும் சென்ற இடத்தில் சாட்சியை அவர் பல கொடுமைகளுக்கு உள்ளாக்க அவரின் சொல்லுக்கும் ஆசைக்கும் இணங்காத காரணத்தால் அங்கேயே அவளை கொலை செய்ய முயன்றதாகவும் நடிகை சாக்ஷி புகார் செய்துள்ளார். சாட்சியங்களை விசாரித்த போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில் கட்சி தலைவர் மோகன் சுரேஷின் செயலை வன்மையாக கண்டிக்க சுரேஷ் கட்சி மற்றும் பதவி இரண்டிலிருந்தும் விலக்கப்பட்டார்". இச்செய்தியை கண்ட ஆனந்தராஜ் மற்றும் ஜோதி பிரபாவுக்கு பாராட்டு மழை பொழிந்தனர். "சரி டா பிரபா இனிமேலாச்சும் உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழற வழிய பாரு." என்று தாய் கூற மகன் மனதில் இருந்த கவலையை மறைத்து வெட்கப்படுவது போல் தலையை திருப்பிக்கொண்டான். அவனுக்கு திருமணம் ஆகி பத்து நாட்கள்தான் இருக்கும். ஆனால் பத்து வருடங்களானது போன்ற ஓர் உணர்வு. பிரச்சனை என்பது வேறு. கவலை என்பது வேறு. பிரச்சனை வரும் முன்னரே இப்படி நடந்துவிடுமோ அப்படி நடந்துவிடுமோ என்று கவலைப்படுவது தான் மனித இயல்பு. அப்படி ஒரு நிலையில் தான் பிரபா இருந்தான். பிரச்சனைகள் ஓரளவு முடிந்தது. ஆனால் அவனது கவலை தீர்ந்தபாடில்லை. இன்றே த்ரிஷ்யாவிற்கு நினைவு திரும்பினால் நன்றாக இருக்குமே என்று கூட எண்ண தொடங்கினான். தினம் தினம் அவனுக்கு முள் மேல் நடப்பது போன்ற உணர்வு. வானத்தை பார்த்துக்கொண்டு பாலகனியில் அமர்ந்திருந்த பிரபாவை தேடி த்ரிஷ்யா வந்தாள். "என்ன எப்போ பாரு எதையோ இழந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கீங்க. நீங்க இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கவே இல்லை." "சரி என்ன பண்ணலாம்னு சொல்லு." "நம்ம எங்கயாச்சும் வெளியூர் போகலாமா?" "வெளியூரா? எதுக்கு மா?" "ஹ்ம்ம் தயிர் கடையுறதுக்கு. கேட்குறீங்க பாரு கேள்வி." என்று கூறி உதட்டை பிதுக்கினாள். "ஹே பார்த்துடீ. அது என்னோட லிப்ஸ். நீ பாட்டுக்கு லெஃப்ட்டு ரைட்னு திருப்பிட்டு இருக்குற. அதுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நான் என்ன பண்றது. எனக்கு இந்த லிப்ஸ் கூட நிறைய வேலை இருக்கே." என்று கிறக்கமான குரலில் கூறி அவளின் உதட்டை விரலால் நீவியபடி அவள் அருகில் பிரபா நெருங்க அவனை பிடித்து வேகமாக தள்ளிவிட்டாள். அவள் அப்படி தள்ளிவிடக்கூடும் என்று எதிர்பார்த்திராத பிரபா நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டான். விழும்போது தன்னை அறியாமல் அவன் தள்ளிவிட்ட பூஜாடி மேஜை மீது சாய்ந்து அதிலிருந்த தண்ணீர் மொத்தமும் அவன் தலை மேல் கொட்டியது. இவை அனைத்தும் ஒரு சிலநொடிகளில் நடந்து முடிய அவனையே பார்த்து கொண்டிருந்த த்ரிஷ்யா அடக்கமாட்டாமல் சிரித்தாள். "தள்ளிவிட்டதும் இல்லாம சிரிக்குறியா? ஆசையா ரொமான்ஸ் பண்ண வர புருஷன் கிட்டயே உன் கராத்தே திறமையை காட்டுறியா?" என்று கோபமாக கேட்டபடியே எழுந்து அவளை பிடிக்க எத்தனிக்க த்ரிஷ்யா அவன் கையில் அகப்படாமல் ஓடினாள். அவர்களின் வாழ்க்கை ஓர் இனிமையான திருமண பந்தத்தில் சஞ்சரித்தது. சில நாட்களை இனிமையாக கழிய ஒரு நாள் பிரபாவின் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்தி கொண்டிருந்தனர். "ஏன்டா பிரபா? கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது. இன்னைக்கு வரை என் மருமகளை ஒரு ஹனிமூனுக்காவது கூட்டிட்டு போனியா? சரியான வேஸ்ட் ஃபெலோ டா நீ" என்று ஜோதி அவனை வம்புக்கு இழுக்க அவரது கணவர் அவருக்கு துணை நின்றார். "ஆமான்டா உங்க அம்மா சொல்ற மாதிரி நீ ஒரு தண்டம். நானும் உங்க அம்மாவும் கல்யாணம் ஆன மூணு மாதத்திற்குள்ள நாலு ஹனிமூன் போயிட்டோம்." என்று சந்தானகிருஷ்ணன் கூறி நகைத்தார். இதனை கேட்ட த்ரிஷ்யாவின் கண்கள் மின்ன, "அத்தை!!" என்று ஜோதியை பார்த்து குறும்பாக கண் சிமிட்ட ஜோதி வெட்கப்படுவதற்கு பதிலாக உதட்டை சுளித்தார், "ஹ்ம்ம்க்கும்... அதுக்கு பேர் ஹனிமூன் இல்ல மிஸ்டர் சந்தான கிருஷ்ணன். பிசினெஸ் ட்ரிப்ன்னு சொல்லுங்க." என்று கணவனை பார்த்து முறைத்து கொண்டே கூறியவர்,  "இவர் ஒரு இடம் விடாம மீட்டிங் பிஸ்னஸ்னு சுத்தி திரிஞ்சாரு. நான் அந்த ஹோட்டல் கார்டன்லயும் ஸ்விம்மிங் பூல்லையும் தனிமூன் கொண்டாடிட்டு இருந்தேன்." என்று கூறி தலையில் அடித்துக்கொண்டார். பிரபா குறும்பாக ஜோதியை பார்த்து, "அப்போ உங்க முதல் வெட்டிங் டேக்கு முன்னாடியே நான் எப்படி மா பிறந்தேன்" என்று கேட்டு வைக்க ஜோதி அவன் முதுகிலே ஓங்கி ஒன்று வைத்தார். "இதெல்லாம் உனக்கு தேவை தான். பசங்க முன்னாடி என் மானத்தை வாங்கணும்னு நினைச்ச. கடைசில உன் புள்ள உன்காலையே வாரிட்டான்." என்று சந்தாகிருஷ்ணன் கூறி சிரித்தார். "என்ன விட்டுட்டு பேமிலி மொத்தமும் ஜாலியா டின்னர் சாப்பிடுறீங்களா?" என்று வாசலில் ஒரு குரல் கேட்டது. அது யாரென்று வாசகர்கள் யோசிக்காமலேயே கண்டு பிடித்திருப்பீர்கள். பிரபாவோ வாசலை பார்க்காமல் தட்டை பார்த்து உணவு உண்டபடியே அவனுக்கு பதில் கூறினான். "அதான் நீ மூக்குல வேர்த்தா மாதிரியே கரெக்டா சாப்பாடு டைமூக்கு என்ட்ரி கொடுத்துடுறியே!!" "ஜோதி அம்மா சாப்பாட்டுக்கு என் நாக்கு அடிமை." என்று கூறியபடியே உள்ளே நுழைந்தான் அவனது அன்பு நண்பன் சரவணன். "ஆண்ட்டி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?." "ஊத்தாப்பம்." "ஊத்தப்பாமா? என்னோட பிரியமான டின்னர். சீக்கிரம் தட்டை எடுத்து என் முன்னே வையுங்க." என்று சரவணன் பரபரக்க, "ஊத்தாப்பம்னு சொன்ன உடனே அவன் வாயிலையே ஊத்த ஆரம்பிச்சுடுச்சு பாரு த்ரிஷ்யா. சீக்கிரம் தட்டை எடுத்து வை. இல்லன்னா வீடு முழுக்க துடைக்க வேண்டி வரும்." என்று பிரபா அவனை கேலி செய்தான். ஊத்தப்பத்தை ரசித்தபடியே சரவணன், "ஏன் த்ரிஷ்யா. நீ எப்போ இந்த அண்ணனுக்கு உன் கையால சாப்பாடு போட போற?" என்று கேட்க பிரபாவிற்கு புரையேறிவிட்டது. அவசரமாக த்ரிஷ்யா தண்ணீர் எடுத்து கொடுக்க அதை வாங்கி குடித்த பிரபா ஓர் ரகசிய குரலில், "உன் கதை முடியும் நேரம் இது" என்று ராகமாக பாடினான். "என்ன மச்சான். ஏதாச்சும் சொன்னியா?" "இல்லடா நான் என்ன சொல்லப்போறேன். நீயாச்சு உன் தங்கை ஆச்சு." "என்ன மா த்ரிஷ்யா. நான் கேட்டதுக்கு பதிலே காணோம்." என்று சரவணன் த்ரிஷ்யாவை பார்த்து கேட்க பதிலுக்கு த்ரிஷ்யாவோ,  "அதுக்கென்ன அண்ணா உங்களுக்கு இல்லாததா? நாளைக்கு டின்னர் என் கையால தான் சாப்பிடப்போறீங்க." என்று கூற சரவணன் மகிழ்ச்சியாக உணவை முடித்துக்கொண்டு கிளம்பினான். அவன் வாசலை அடைந்ததும் பிரபா, "டேய் மச்சான். எதுக்கும் நாளைக்கு வரும் பொழுது பாத்திமா அஸ்மா ஆன்டிகிட்ட எல்லாம் சொல்லிட்டு வந்துடுடா." என்று கூறி மறைமுக எச்சரிக்கை ஒன்றை விதிக்க அதனை புரிந்துகொள்ளாத சரவணன், "அவங்க ரெண்டு பேர்கிட்ட சொல்லாம நான் எங்கேயுமே போறதில்ல மச்சான்." என்று கூறிவிட்டு சென்றான். மறுநாள் இரவு உணவிற்காக சரவணன் பிரபாவின் வீட்டை அடைந்த பொழுது த்ரிஷ்யா அவனை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றாள். அச்சமயம் பிரபாவோ அவனிடம் செய்கையில் ஏதோ சொல்ல எத்தனிக்க ஜோதி அவனின் கையை பிடித்து தடுத்து விட்டார். பிரபா அவரிடம் ரகசிய குரலில் "பாவம் மா அவன் ரொம்ப ஆசையா வந்திருக்கான்." என்று கூற, "மறவாயில்ல. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும். அன்னைக்கு நாம த்ரிஷ்ய சமையலை சாப்பிடும் பொழுது நீ கூட சரோ இல்லாம போய்ட்டானேன்னு வருத்தப் பட்டியே. இப்போ பார்த்தியா சரோவுக்கும் அந்த பாக்கியம் கிட்ட போகுது" என்று கூறி மர்ம புன்னகை ஒன்றை உதிர்த்தார். த்ரிஷ்யா சரவணனிற்கு சப்பாத்தியை பரிமாற அவனோ, "எல்லாருக்கும் வைச்சுடுமா. எல்லாரையும் பார்க்க வைச்சு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும்." என்று கூற பிரபாவோ,  "இல்ல மச்சி. நாங்கெல்லாம் முன்னாடியே சாப்பிட்டோம். இதுக்கு உனக்காக மட்டுமே த்ரிஷ்யா ஸ்பெஷல்லா சமைச்சது. நீ என்ஜாய் பன்னு." என்று கூறினான். சப்பாத்தியை குருமாவில் தொட்டு வாயில் வைத்தவன் அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திரு திருவென்று விழித்தான். அப்பொழுது அவனது அருகில் வந்தமர்ந்த ஜோதி மென்குரலில் அவனிடம் ரகசியம் பேசினாள். "ஒழுங்கு மரியாதையா என் மருமக வைச்சதை மிச்சம் வைக்காம சாப்பிட்டு போற. தப்பி தவறி அவகிட்ட ஏதாச்சும் சொன்ன உனக்கு இந்த வீட்டுல அப்புறம் சோறே கிடையாது." அவர் கூறியதை கேட்டு வெகுசிரமப்பட்டு வாயில் இருந்ததை விழுங்கியவன் த்ரிஷ்யாவை பார்த்து, "உன் சமையல் பிரமாதம் மா. இந்த கையால சாப்பிட கொடுத்து வைச்சிருக்கணும். என் நண்பன் கொடுத்து வைச்சவன்" என்று கூறியவன் கண்களில் இருந்த கண்ணீரை கண்டுவிட்டான். "நல்லா இருக்குல்ல?அப்பறம் ஏன் நீங்க அழறீங்க?" "இது அழுகை இல்லம்மா ஆனந்த கண்ணீர்." பிரபா அவனின் காதருகில் குனிந்து, "இருந்தாலும் உனக்கு மனதைரியம் ஜாஸ்தி மச்சான்." என்றான். பதிலுக்கு சரவணனனோ, “ஏன்டா சொல்லமாட்ட? குடும்பம் மொத்தமும் சேர்ந்து எனக்கு சப்பாத்தில சூனியம் வைச்சுட்டீங்க இல்ல? எனக்கு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருந்தா நான் இந்த பக்கமே தலை வைச்சு படுத்திருக்க மாட்டேனே டா" என்று புலம்பினான். பின் த்ரிஷ்யாவை பார்த்து, "த்ரிஷியம்மா இந்த குருமாவை எப்படி மா செஞ்ச?" என்று கேட்க அவளோ, "அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லண்ணா. தக்காளி வெங்காயம், பூண்டு, பட்டாணி, தங்கையோட சேர்ந்து கொஞ்சம் புளியை கரைச்சு ஊத்தினேன். அவ்வளவு தான். ஏன் அண்ணா கேட்குறீங்க? இந்த ரெசிபியை வீட்டுல சொல்லி செய்ய சொல்ல போறீங்களா?" என்று கேட்டு வைக்க இம்முறை சரவணனிற்கு புரையேறியது. 'குருமாவில் புளிய உத்தினதும் இல்லாம அத ரெசிப்பினு வேற சொல்றாளே. எல்லாம் காலக்கொடுமை.' என்று மனதிற்குள்ளேயே புலம்பியவன் அவளிடம் வேறு கேட்டான். "உனக்கு இந்த யூடூயுப்பில் பார்த்து சமைக்குற பழக்கம் எல்லாம் இல்லையா அம்மா?" "ஐயோ. அண்ணா அதை ஏன் கேட்குறீங்க. அவங்க டிசைன் டிசைனா எதையோ கரைச்சு ஊத்தி இது தான் சமையல்னு சொல்லி ட்ரெண்ட் ஆக்க பார்க்குறாங்க. எனக்கு அதெல்லாம் பிடிக்காது." என்று உதட்டை சுளித்தாள். "அது சரி சமைச்சுட்டு டேஸ்ட் பண்ற பழக்கம்லாம் இல்லையா?" "அதெப்படி அண்ணா நாமளே சமைச்சுட்டு நாமளே சாப்பிடுறது. மத்தவங்க சாப்பிட்டு நல்ல இருக்குனு சொன்னாலே எனக்கு வயிறு நேர,...." என்று கூறி முடிக்கும் முன்னரே வாயை பொத்திக்கொண்டு சமையல் அறையில் புகுந்து கொண்டாள். அவளை பின் தொடர்ந்து பிரபாவும் ஜோதியும் கூட ஓடினர். இதனை கண்ட சரவணன், "இவ செஞ்சதை சாப்பிட்டு நாம தான் ஓமிட் பண்ணனும். இவ ஏன் வாந்தி எடுக்குறா? ஒரு வேலை தெரியாம அவளும் இதை டேஸ்ட் பண்ணி இருப்பாளோ?" என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா