மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanathay …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanathayo-22

Quote from monisha on July 12, 2020, 1:59 PM

22
"போதும் போதும் இதுக்கு மேல் என்னால முடியாது. ஆள விடுங்க." என்று த்ரிஷ்யா கைகளைக் கூப்பி பிரபாவிடம் வேண்ட, அவனோ அவளை பொருட்படுத்தவில்லை.   "உன்னை விடுறதா? வாய்ப்பே இல்ல. டாக்டர் பிரியா என்ன சொன்னாங்கனு மறந்துடுச்சா? நீ அனிமிக்கா இருக்க. நிறைய ஜூஸ் குடிக்கணும்னு. நீ என்னடான்னா ரெண்டு கிளாஸ் ஜூஸ்க்கே போதும்னு கத்துற. உன் வயித்துகொள்ள வளரும் என் பொண்ணு மேல உனக்கு அக்கறையே இல்லையா? " "ஐயோ தெய்வமே. நிறைய ஜூஸ்னா அப்போ அப்போ குடிக்கணும். ஒரே டைம்ல லிட்டர் கணக்குல உள்ள இறக்கரதுக்கு என் வயிறு என்ன டாங்க்கா? அத்தை நீங்களாச்சும் உங்க புள்ள கிட்ட சொல்லக் கூடாதா?" என்று ஜோதியை பார்த்துச் சலிப்புடன் கூறினாள். "என் புள்ளையவே உன்னால சமாளிக்க முடியலன்னா நாளைக்கு என் பேத்தியை எப்படி சமாளிப்ப?" என்று ஜோதி குறைகூற, "ஆனாலும் உங்க புள்ள பண்ற லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ஜோ." என்று மருமகளுக்காக வக்காலத்து வாங்கினார் சந்தானகிருஷ்ணன். பிரபா அவன் தந்தையின் பேச்சை சட்டை செய்யாமல் அடுத்த பழச்சாற்றைக் கையில் எடுத்தான். "இங்க பாரு த்ரிஷ்யா. இன்னும் நாலே மாசம் தான். என் பெண்ணை என் கையில கொடுத்துட்டு நீ ஜாலியா இரு. அது வரை நீ என் பேச்சை கேட்டு தான் ஆகணும். யூ ஹவ் நோ ஆப்ஷன்." "எதுக்கு அவளுக்கும் பால் பாட்டில் ஒன்னு வாங்கி லிட்டர் கணக்குல ஜூஸ் ஊத்திக் கொடுக்கவா?" "ஏன்? கொடுத்தா என்ன? உன்னை மாதிரி இல்ல. நான் சொன்ன என் பொண்ணு கேட்பா?" என்று அவன் கூற த்ரிஷ்யா அதற்கு முறைப்பையே பதிலாக அளித்தாள். "சரி எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன்." என்று கூற த்ரிஷ்யா அவனிடம், "என்ன வேலை?" என்று வினவினாள். இப்பொழுதெல்லாம் த்ரிஷ்யா அவனை சில விஷயங்களில்  நம்புவதில்லை. முக்கியமாக அவன் வேலையை ராஜினாமா செய்த விஷயத்தை அவன் மறைத்தது அவளுக்குத் தெரிய வந்த நாளிலிருந்து. பிரபாவே தான் அவன் தன் வேலையைக் கைவிட்ட விவரத்தைக் கூறினான். ஆனால் அதை உடனே கூறவில்லை. மூன்று மாதம் கழித்துத் தான் கூறினான். இந்த மூன்று மாதங்கள் வேலை என்ற பேரில் எங்கே சென்று கொண்டிருந்தான் என்ற கேள்விக்கு முக்கியமான வேலை என்பதைத் தவிர எந்த பதிலும் இல்லை. நேரம் வரும் போது அவனே கூறுவதாக கூறினான். அதே முக்கியமான வேலைக்கு தான் இப்பொழுதும் செல்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. த்ரிஷ்யாவை பொறுத்த வரை அவளுக்கு அம்னிஷியா இருப்பது போன்றே எண்ணமே இல்லை. அவள் ஒரு சராசரி குடும்ப பெண்ணாக காதல் மனைவியாக பிறக்கப் போகும் தன் குழந்தைக்குத் தாயாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் பிரபாவின் நடவடிக்கைகள் அவளுக்குள் பல சந்தேகத்தைத் தோற்றுவித்தது. அந்த சஞ்சலம் மட்டும் இல்லை என்றால் அவளை போல் மகிழ்ச்சியாக வாழும் பெண் இந்த உலகத்தில் இல்லை என்றே கூறலாம். என்ன வேலை என்ற அவளது கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் கல்லாக முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான். "நான் தான்மா மாப்பிள்ளையை வர சொன்னேன். ஒன்னும் இல்ல. நான் ஒரு நண்பனை பார்க்கணும். வீட்டுல நம்ம கார் வேற ரிப்பேர் ஆயிடுச்சு. அதான் மாப்பிள்ளை கிட்ட கார் கிடைக்குமான்னு கேட்டேன். அவர் தானே வந்து என்ன கூட்டிட்டு போறதா சொன்னாரு." என்று அப்பொழுது தான் வீட்டினுள் தன் மனைவியுடன் நுழைந்த ஆனந்தராஜ் பதில் கூறினார். ஒரு நம்பாத பாவனையுடன் அவரை பார்த்தாள். "அவர் உங்கள தான் கூட்டிட்டு போக வராருனா நீங்களே ஏன் பா இங்க வரனும்?" "என்னமா பேசுற? மாப்பிள்ளை தான் ஏதோ ஒரு பாசத்துல வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னா நானும் இது தான் வாய்ப்புனு வீட்டிலே இருந்துட முடியுமா? அதான் நேரா இங்க வந்துட்டேன். உங்க அம்மா வேற உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தா. நான் போயிட்டு வர வரை அவ இங்கயே இருக்கட்டும்." என்றார் ஆனந்தராஜ். பிரபா எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். ஜோதி, "என்ன டா பார்த்துட்டே இருக்க. மாமாவை நீயே கூட்டிட்டு போயிட்டு வா." என்று கூற பிரபா த்ரிஷ்யாவை திரும்பி பார்த்தான். அவள் பதில் ஏதும் கூறாமல் இருக்கவே ஆனந்தராஜ் "வேணாம் தங்கச்சி. மாப்பிள்ளை இங்கயே இருக்கட்டும். அவரை ஏன் சிரமத்துக்கு உள்ளாக்குறீங்க. த்ரிஷ்யாவும் மாப்பிள்ளை கூட இருக்கணும்னு நினைப்பா." என்று கூற இப்பொழுது த்ரிஷ்யா தன் மௌனத்தை கலைத்தாள். "இல்லப்பா. அத்தை சொல்றது தான் கரெக்ட். அவரே உங்கள கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரட்டும். என்னால இவர் தொல்லை தாங்க முடியல. கொஞ்ச நேரம் இவர் இல்லாம நிம்மதியா இருப்பேன்." என்று அவள் கூற அவளை பார்த்து முறைத்துவிட்டு விருட்டென்று வெளியேறினான் பிரபா. இவ்விருவரின் செய்கையைப் பார்த்து தலையாட்டி சிரித்துக் கொண்டார் ஜோதி. "இன்னும் கொஞ்ச நாளுல இவங்களுக்கே ஒரு குழந்தை வர போகுது. ஆனா இவங்க இரண்டு பேரும் இன்னும் குழந்தை மாதிரி தான் நடந்துக்குறாங்க" என்று அவர் கூற ஆனந்தராஜ் சிரித்தபடியே மருமகனைத் தொடர்ந்து சென்றார். பிரபாவின் கார் முருகன் மருத்துவமனையை அடைந்தது. நேராக இருவரும் பாத்திமா இருந்த அறையை அடைய அங்கே சரவணன் அலுவலகம் செல்ல தயாராக இருந்தான். "வாங்க அங்கிள் உட்காருங்க." என்று அவன் ஆனந்தராஜை உபசரிக்க அவர் அஸ்மாவை தேடினார். அப்பொழுது அவர்களின் வருகையை அறிந்த அஸ்மாவும் அறையில் நுழைந்தார். "எப்படி அஸ்மா இருக்கு என் பொண்ணுக்கு." "அவ எவ்வளவோ முன்னேறி இருக்கா அண்ணா. வாங்க நீங்களே வந்து அவ கிட்ட பேசுங்க." என்று அவரை பாத்திமா அருகில் அழைத்துச் செல்ல அங்கே பாத்திமா கைகளில் பசில் கியூபை சுழற்றிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. விழி அகல அஸ்மாவை பார்க்க அவர் மேலும் கீழுமாகத் தலையசைத்தார். ஆனந்தராஜின் கண்கள் கலங்கின. "எப்படியோ என் பொண்ணு நல்லபடியா குணமாகிட்டான்னா எனக்கு அதை  விட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்." என்று கூறியவரைக் கண்கள் கலங்கப் பார்த்தார் அஸ்மா. ஒரு வேலை பாத்திமாவின் தந்தை உயிரோடு இருந்திருந்தால் கூட அவள் மீது இவ்வளவு பரிவும் பாசமும் செலுத்தி இருப்பாரா என்பதே சந்தேகம்தான். அவருக்கு த்ரிஷ்யா ஒரு கண் என்றால் பாத்திமா மறு கண் என்பது அஸ்மாவிற்கு நன்றாகவே தெரியும். "நாம பிரபாவுக்கும் சரோக்கும் தான் அண்ணா நன்றி சொல்லணும். அவர் இல்லன்னா இது நடந்தே இருக்காது." "உண்மை தான் மா. இவங்க ரெண்டு பேரையும் நிலை குலைந்து போன நம்ம பொண்ணுங்க வாழ்க்கையை சீர் செய்ய அந்த கடவுளே அனுப்பி வைச்சிருக்காருனு தோணுது." என்று உணர்ச்சி பொங்க கூறியவர் சரவணனின் கைகளைப் பற்றி "ரொம்ப நன்றி பா" என்று கூற அவனோ,  "என் மனைவியை பார்த்துக்க என்கிட்ட நீங்க ஏன் அங்கிள் நன்றி சொல்லணும்?" என்று கேட்டு  வைக்க, "அப்படிப் போடு மச்சி" என்று பிரபா கைத்தட்டினான். அவனின் பதிலில் அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜ் பின் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். "சரி அங்கிள் வேலைக்கு போக டைம் ஆயிடுச்சு. நான் கிளம்புறேன்" என்று அவர்களிடம் விடை பெற்றவன் பாத்திமா அருகில் சென்று, "போயிட்டு வரேன் பேபி" என்று கூற புரியாத குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் விழித்தான். சரவணன் அங்கு இருந்தவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு அவள் கையை எடுத்து அதில் தன் இதழ்களைப் பதித்தவன் அடுத்த நொடி இருந்த சுவடின்றி பறந்தோடி விட்டான். அவனின் செயலை பார்த்து அங்கிருந்த மூவரும் சிரித்துக்கொண்டனர். பிரபா தினமும் பாத்திமாவை பார்க்க வருவது வழக்கம். அவளுக்கு ஸ்பீச் தெரப்பி மற்றும் லிசன் தெரப்பி கொடுக்கும் வரை இருந்துவிட்டு அவளிடம் அன்றைய நிகழ்வைப் பேசிவிட்டு பின்னரே வீடு திரும்புவான். இது ஆனந்தராஜிற்குக் கூட தெரியும். ஆனால் இம்மூவரும் அறியாத ஒரு விஷயமும் இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த நொடி த்ரிஷ்யா அந்த மருத்துவமனைக்குள்தான் இருந்தாள் என்பது. த்ரிஷ்யா அன்று காலையில் வீட்டிற்கு வந்த தன் தாய் சீதாவைக் கோவிலுக்கு தன்னுடன் வரும்படி அழைத்தாள். அவரும் மகள் தன்னிடம் ஏதோ தனியாகப் பேச நினைப்பதாய் உணர்ந்து அவளுடன் சென்றார். கோவிலுக்கு சென்றதும் தெய்வத்தை வழிபட்டவள் மௌனமாகவே மீண்டும் காரினுள் ஏறிக்கொள்ள சீதாவின் மனம் குழம்பியது. 'என்ன இவ. கோவிலுக்கு வந்து நம்ம கிட்ட ஏதாச்சும் பேசுவான்னு பார்த்தா தெய்வ வழிபாடு முடிஞ்சதும் எதுவும் பேசாம வீடு திரும்பிட்டா.' என்று நினைத்துக் கொண்டே சாலையைப் பார்த்தவர் அப்பொழுது தான் கவனித்தார். கார் வீடு செல்லும் வழி அன்றி வேறு வழியில் பயணித்து கொண்டிருந்தது. மகளாக ஓட்டுநரிடம் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை. 'ஒரு வேளை வண்டி ஏறும் முன்னரே டிரைவர் கிட்ட சொல்லி வைச்சு இருப்பாளோ' என்று தோன்ற சீதாவின் மனதில் இலேசாகக் குளிர் பரவ துவங்கியது. பொதுவாகவே த்ரிஷ்யா நேர்மையானவள். அவளை யாராவது ஏமாற்றுவது போல் தெரிந்தாள் அவர்களை இலேசில் விடும் ரகம் அல்ல. அவர்களை தண்டிக்க முடிவு செய்துவிட்டால் அவள் முகம் கல் போன்று இருக்கும். இப்பொழுது மகளின் முகம் அப்படிதான் காட்சி அளித்தது. த்ரிஷ்யாவிற்கு அம்னிஷியா வந்த பிறகு இது நாள் வரை அவளின் இந்த முகம் வெளியாகாமலிருந்தது. ஆனால் இப்பொழுது அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவளுக்கு ஒரு வேளை எல்லாம் நினைவு வந்திருக்குமோ என்று. ஆனால் அப்படியும் அவருக்குத் தோன்றவில்லை. காலையில் அவர்கள் வீட்டில் அவள் நடந்து கொண்ட விதம் யோசிக்கும் பொழுது நிச்சயமாக அவளுக்கு எதுவும் நினைவு வந்து இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. 'என்ன இருந்தாலும் பிறப்பு குணம் மாறிடுமா என்ன?' என்று நினைத்தவர் அவளிடம் விவரம் எதுவும் கேட்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். கேட்டாள் எப்படியும் பதில் வரப்போவதில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரிந்தது. யோசனைகளை விலக்கி மீண்டும் சாலையில் கண் பதித்தவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அது முருகன் மருத்துவமனை செல்லும் வழி. சீதாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது. எதுவோ சரி இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. இப்பொழுது செய்வதற்கு எதுவும் இல்லை. விதிப்படி நடக்கட்டும் என்று அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொண்டார். மருத்துவமனை உள்ளே நுழைந்த த்ரிஷ்யா வரவேற்பறையிலிருந்த பெண்ணிடம் தலைமை மருத்துவரின் அறையின் வழியைக் கேட்டாள். "அப்பாயின்மென்ட் இருக்கா மேம்." என்று கேட்க அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். "சாரி மேம். பெரிய டாக்டர் அனுமதி இல்லாம உள்ள விடமுடியாது." என்று கூறினாள் அந்த பெண். "ப்ளீஸ் டாக்டர்கிட்ட நான் அவர் பிரண்ட் பிரபாவோட மனைவின்னு சொல்லுங்க." என்றாள். இந்த வார்த்தையைக் கேட்டு விருட்டென்று திரும்பி மகளை பார்த்தார் சீதா. அப்பொழுதுதான் கவனித்தார் அவருடைய கைபேசி த்ரிஷ்யாவின் கையில் இருப்பதை. அதற்குள் அந்த பெண் மருத்துவரிடம் அனுமதி பெற்று தாய் மகள் இருவரையும் மருத்துவர் அறைக்கு அனுப்பிவைத்தாள். த்ரிஷ்யா மருத்துவர் சுரேஷின் அறையினுள் நுழைய அவன் அவளை மிக மரியாதையுடன் வரவேற்றான். "வாங்க மிஸஸ் பிரபா. எப்படி இருக்கீங்க? என்ன உங்க பிரெண்டை பார்க்க வந்திருக்கீங்களா?" என்று சகஜமாகக் கேட்டார்.  அவரின் கேள்வி அவளுக்கு பெரும் வியப்பை அளித்தது. ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே பதிலளித்தாள். "நான் ரொம்ப நல்லா இருக்கேன் டாக்டர். ஆமாம் என் பிரண்டை பார்க்க தான் வந்து இருக்கேன். அவங்க எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள். சீதாவிற்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போன்ற பிரமை. "அவங்க ரொம்பவே முன்னேறிட்டு வராங்க மிஸஸ் பிரபா. இன்பாக்ட் அவங்க ரொம்பவே ஸ்பீடா ரெக்கவர் ஆகிட்டு வராங்க." என்று கூற "அவங்க எந்த ரூம்ல இருக்காங்கன்னு கொஞ்சம்.." என்று தயங்கிய படி கேட்க டாக்டர் சுரேஷ் அவளை சந்தேகமாகப் பார்த்தார். 'இதென்ன? இந்த பொண்ணுக்கு பிரபா இப்போ இங்க இருக்குறது தெரியாத? இவ அவனுக்கே போன் செய்து கேட்கலாமே. அதை விட பிரபா கூட வராம ஏன் இவங்க தனியா வரனும்.' என்று யோசித்துக்கொண்டிருந்தான். "நீங்க பிரபாவுக்கே போன் செய்து கேட்டிருக்கலாமே!" என்று கூற, "இல்ல. நான் இந்த நிலைமையில் இங்க வந்தது அவருக்கு தெரிஞ்சா விடமாட்டாரு. ஆனா எனக்கு என் பிரண்டை பார்க்கனும். அவர் இங்கதான் இருக்காருன்னு தெரியும். நேர்ல பார்த்து நான் சமாதானம் சொல்லிடுறேன்." என்று கூற அவள் மேடிட்ட வயிறை பார்த்த டாக்டர் சுரேஷ் மறுபேச்சின்றி அவளுக்கு பாத்திமாவின் அறை எண்ணைக் கூறி அனுப்பிவைத்தான். உடனே அவன் பிரபாவிற்கு போன் செய்ய உயிர்ப்பிக்கப்படாமல் இருந்தது. பிரபா ஒரு பெரிய தவறு செய்திருந்தான். தன் நண்பனும் மருத்துவருமான சுரேஷிடம் பாத்திமா தன் மனைவியின் தோழி என்று கூறி இருந்தானே தவிர த்ரிஷ்யாவை பற்றி வேறெதுவும் கூறவில்லை. ஒரு நாள் டாக்டர் சுரேஷ் அவன் மனைவியை பற்றி வினவினான். "பிரபா.இவங்க உன் மனைவியோட தோழி தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு." "ஏன் சுரேஷ் உனக்கு அப்படி ஒரு டவுட்?" "இதுவரை நீயும் சரவணனும் வந்து எத்தனையோ நாள் பாத்திமாவை பார்த்துட்டு போய் இருக்கீங்க. ஆனா ஒரு நாள் கூட உன்னோட மனைவி வந்து பார்க்கலையே." "இல்ல சுரேஷ். கொஞ்சம் நிலைமை சரி இல்ல. உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. பாத்திமாவிற்கு ஆபத்து இருக்குனு. அந்த ஆபத்து என் மனைவி பாத்திமாவும் ஒண்ணா இருந்தா நிச்சயம் அதிகம் தான் ஆகும்." என்று பிரபா கூறி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த ஆபத்தும் விலகியதாகக் கூறியிருந்தான்.  அந்த எண்ணத்தில் தான் சுரேஷ் அவளை பாத்திமா அறைக்கு அனுப்பி வைத்தான். பாத்திமா அறை வாசலில் யாரோ நிற்கும் அரவம் கேட்க அங்கு இருந்த மூவரும் ஓசை வந்த திசையைப் பார்க்க அங்கு நின்ற த்ரிஷ்யாவை கண்டு திகைத்து நின்றனர்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா