மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestSandhya sri- நானும் நாவலும்Post ReplyPost Reply: Sandhya sri- நானும் நாவலும்

Quote from Sandhiya sri on November 2, 2020, 2:34 PM
நானும் நாவலும்! விளையாட்டு பெண்ணான எனக்கு தெரியாத, புரியாத பல விசயங்களைக் கற்றுக் கொடுத்தது நாவல்கள். சின்ன வயதில் இருந்து மன அழுத்தத்தால் வளர்ந்தவள். என் பத்தொன்பதாம் வயதுவரை நாவல்கள் பற்றி தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்றே சொல்லலாம். ஒரு விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்ற இடத்தில் பொழுது போகவில்லை என்றவுடன் பக்கத்து வீட்டுப் பெண்மணி என்னை நாவல் படிக்கும்படி தூண்டினார். நான் முதலில் படித்த நாவல், ‘நேசமுள்ள வான்சுடரே’ வழக்கம்போல ரமணிச்சந்திரன் அம்மாவின் கதைதான். கிருபாகரன் – கலைவாணி இன்றும் அவர்களின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. அன்றிலிருந்து நாவல் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது. அப்பாவிடம் கேட்டு ரமணிச்சந்திரன் அம்மாவின் நாவல்களை வாசிக்க தொடங்கினேன். அதன்பிறகு கல்லூரி தொடங்கிவிட்டது. அப்போது அப்பாவுடன் வெளியே சென்றபோது பால்நிலா என்ற கதையை வாங்கிட்டு வந்தேன். அன்று இரவு விடிய விடிய படிச்சு முடிச்சிட்டேன். கதையை படித்த சந்தோசத்தில் இன்டர்னல் எக்ஸாம் இருப்பதை மறந்துட்டேன். மறுநாள் காலை நிரஞ்சனோடு கற்பனையில் மிதந்தபடி கிளாசுக்கு போனால் எக்ஸாம். அப்போதெல்லாம் கெட்ட பழக்கம் கிளாசை சரியாக கவனிப்பது. அதனால் கேள்விகள் ஈஸியாக இருந்தால் பதிலையும் நல்லாவே எழுதிட்டேன். கிளாஸ் ரூமில் முதல் ஆளாக எழுதி முடித்து பேப்பரை கொண்டுபோய் வைத்தால், “நிஜமா எழுதிட்டியா?” என்பது போல மேம் ஒரு லுக் விட்டாங்க. என் தோழிகள் வட்டாரத்தில், “எனக்கு மார்க் வராது. நான் அன்னைக்கு நைட் கதைதான் படிச்சேன்னு” அந்த கதையை சொல்லிட்டு இருக்கும்போது டெஸ்ட் பேப்பர் வந்துவிட்டது. அதில் நல்ல மார்க் வேற வாங்கி மேடமிடம் ஸ்பெசல் பாராட்டு வேற. அன்னைக்கு ப்ரிண்ட்ஸ் கிளாஸ் ரூமிற்குள் விட்டு துரத்தி துரத்தி அடித்தது இன்னைக்கும் என் நினைவில் இருக்கு. அழகான கதை படித்து தர்மடி வாங்கிய நாளை மறக்கவும் முடியாது. 2016 வருடம் ஆயுதபூஜைக்கு ஒரு வாரம் முன்னாடி புது வைரம் நான் உனக்கு ரமணி அம்மாவின் கதையை மாத இதழில் வாங்கிகொண்டு வீடு வந்தால், “இந்த வருடம் துணி நிறைய வந்திருக்கு தைக்கும் வேலையைப் பாருன்னு” சொல்லிட்டார் அப்பா. வேற வழியில்லையே அந்த வாரம் முழுவதும் கதை புத்தகத்தை கையில் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். அடுத்தது தீபாவளி என்பதால் கதை புத்தகத்தை தொடவே விடல. முதல் பக்கத்தை படித்துவிட்டு வைத்துவிட்டு மூன்று வாரமும் தலைவலி அதிகமானதுதான் மிச்சம். கடைசியில் தீபாவளி அன்று வேலையை முடித்துவிட்டு மதியம் உட்கார்ந்து பொழுதுக்குள் படித்து முடித்துவிட்டேன் அப்புறம்தான் நிம்மதியாக தூக்கமே வந்துச்சு. அந்த கதையில் இறுதியில் அவன் உயிரைக் கொடுத்து அவளை காப்பாற்றும்போது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். அப்போது என் மனமோ, ‘ஒரு நிமிடம் இவன் இறந்துவிட்டால் அடுத்து அவளின் வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகும்? அவன் மன்னிக்க முடியாத தவறு செய்தபோது அவனை அவளால் இழக்க முடியவில்லை. இதுதான் உண்மையான நேசமா?’ அந்த கேள்விக்கு அன்றுதான் விடை கிடைத்தது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்கும் உரிமை நம்மிடம் கிடையாது. அதனால் மன்னிக்கலாமே. அவன் உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்ற எண்ணம் எழுந்தது. இன்றும் அந்த நாவல் படிக்கும்போது மனோரஞ்சன் மனதில் மணம் வீசாமல் இருப்பதில்லை. அதன்பிறகு வரிசையாக நிறைய பேரின் நாவல்களை வாசிக்க தொடங்கினேன். சசிமுரளி, வெண்ணிலா சந்திரா, பிரேமா, என். சீதாலட்சுமி, எல்.சி.திவாகர், விஜி மீனா, விஜி பிரபு,நிதனி பிரபு, ரோசி கஜன், ஸ்ரீகலா, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, பிரேமலதா பாலசுப்ரமணியம், எஸ். ஜோவிதா, ஷென்பா, தமிழ் மதுரா, இன்பா அலோசியஸ், ரேவதி அசோக் என்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். என் கல்லூரிக்கு வீட்டில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அரைமணி நேரம் நடந்தால் கல்லூரி வந்துவிடும். ஆனால் அப்போது கூட கதை பற்றி நானும், என் தோழியும் பேசிக்கொண்டே சொல்வோம். வகுப்பறையில் நோட்ஸ் எழுத சொன்னால் கடைசி டேஸ்கின் கீழே கதை புத்தகத்தை படித்துகொண்டு மேடம் சொல்ல சொல்ல ரன்னிங் நோட்ஸ் எழுதி இருக்கிறேன். கதையில் வரும் commerce நுணுக்கங்களை அப்படியே கிளாஸ் ரூமில் பகிர்வேன். நாவல்கள் படிப்பதில் எனக்கு வணிகவியல் பாடங்களின் நுணுக்கம் புரிபடும். குறிப்பாக ரமணிச்சந்திரன் அம்மாவின் கதையில் வரும் பி.ஏ. செலக்ட் பண்ற இடங்கள், பங்கு மாற்றம் பற்றிய விசயங்கள் எல்லாமே எனக்கு படிப்பதற்கு உதவி புரிந்தது. கல்லூரியில் படிக்கும்போது நிறைய புத்தகங்களை வாங்கி சென்று மொட்டை மாடியில் மரத்தின் நிழலில் அமர்ந்து படித்திருக்கிறேன். கதைக்கு கதை சாப்பிட ருசியான ஸ்நேக்ஸ், அரட்டையடிக்க தோழிகளின் வட்டம் என்று சென்றது என் நாட்கள். நான் தினமும் ஒரு கதை சொல்வதை பார்த்து என் வகுப்பு தோழிகளும் நாவல் வாசிக்க தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு புத்தகம் கொண்டுபோய் கொடுப்பேன் படித்துவிட்டு, “உன்னால் தான் எனக்கு இந்த கதை படிக்க முடிந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது கதை” என்று கருத்துகள் வரும். கல்லூரி நாட்கள் முடிந்தது. அதே நேரத்தில் வீட்டில் வேலைகளை செய்துக்கொண்டே கதை படிப்பது அதுவொரு தனி அனுபவம். அதற்கென்று நேரம் ஒதுக்கு என்று சொல்பதை காதில் போட்டுகொள்ளவே மாட்டேன். இடது கையில் கதை புத்தகமும், வலது கையில் குழம்பு கரண்டியும் வைத்துகொண்டு சமையல் செய்வது தனி சுகம். கதையின் சுவாரசியங்களுக்கு நடுவே குழம்பின் ருசியும் அருமையாக வரும். சமையலில் சின்ன வயதில் இருந்தே நாட்டம் அதிகம் என்றாலும் கதை புத்தகத்தில் வரும் சில ரெசிபிகளை செய்து பார்ப்பேன். வீட்டில் இருந்து அப்பாவுடன் டைலரிங் கற்று கொண்டிருந்தேன். எனக்கு கற்பனை உலகத்தில் ஹீரோவுடன் டுயட் பாடினாலும் தையல் மிஷனில் உட்கார்ந்து தைப்பேன். கதை வாசித்துக்கொண்டே துணியை அளவெடுத்து தைப்பது கஷ்டம். ஆனால் வலது பக்கத்தில் புத்தகம் வைத்துகொண்டு படித்துக்கொண்டே தைப்பேன். இதனால் சிலநேரங்களில் கையில் ஊசி ஏறி இருக்கிறது. எனக்கு நாவல்கள் பிடிக்குமென்று அப்பா, அம்மா இருவரும் வெளியே செல்லும்போது மறுக்காமல் கேட்ட புத்தகத்தை வாங்கி கொடுத்துவிடுவார்கள். அப்புறம் தான் ஆன்லைனில் நுழைந்தேன். இங்கே வந்ததும் இலங்கை தமிழ் கதைகளை மட்டும் தேடி தேடி வாசிப்பேன். அப்புறம் எழுத தொடங்கியபிறகு என் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆனாலும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கும் பழக்கத்தை விடவே கிடையாது. யாழ் சத்யா, வதனி பிரபு, மகிழ் குழலி, யுவா கார்த்திகா, தனு, மோனிஷா, வநிஷா, அழகி, அனிதா ராஜ்குமார், சாந்தினி தாஸ், விஷ்வாபூமி, யாழினி, சாரா மோகன், காயத்ரி மணிகண்டன், சரண்யா வெங்கட், வெண்பா போன்ற எழுத்தாளர் புத்தகங்களை வாசிக்கிறேன். என்றும் ஒரு எழுத்தாளராக இருப்பதைவிட வாசகியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும். நான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட காரணமே இந்த நாவல்கள்தான். சோகமாக இருக்கும் நேரத்திலும் சரி, சந்தோசமாக இருக்கும் நேரத்திலும் சரி நான் படிப்பது நாவல்களைத் தான். நான் விரும்பி படித்த கதைகளில் சில கதைகள் இன்னும் நினைவில் நிற்கும் காட்சிகள் மற்றும் நான் ரசித்த கதாபாத்திரங்கள். இதயம் – விஜி மீனா  இந்த கதையை இன்று வரை புத்தகமாக எதிர்பார்க்கும் வாசகிகளில் நானும் ஒருத்தி. இந்த கதை ‘இதயம்’ என்ற ஒன்றை மட்டும் மையமாக வைத்து குடும்பம், காதல், நட்பு என்று அனைத்தும் கலந்த கதம்பம். இந்த கதையில் வரும் நான்குப்பேர் கார்த்திக் – சக்தி, சூர்யா – ராகவி. கார்த்திக்கை மட்டும் நேசித்த சக்தி அவனின் வார்த்தைகளால் காயப்படுவதும் அவனை பிரிந்து செல்வது, சூர்யா சக்தி மீது வைத்திருக்கும் உண்மையான நட்பு, ராகவி தன் தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று தன் ஆசையை மறைப்பது என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமையான படைப்பு என்று சொல்லலாம். சக்தி கார்த்திக் மீது கொண்டிருக்கும் வெறுப்பு ஒருப்பக்கம் இருந்தாலும் தன் மனைவியை வேறொரு நபருக்கு மனைவியாக காணும்போது கார்த்திக் வலியுடன் நிற்கும் காட்சி இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அதே போல பிரியாவை தன் மகள் என்று கார்த்திக் அறிமுகம் செய்யும்போது ஓரிடத்தில் சக்தி அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது ஒரு பெண்ணாக, காதலியாக, மனைவியாக ஏற்று கொள்ள முடியாமல் அவள் நிற்கிறாள் என்பதைவிட நான் தடுமாறி நின்றேன் என்றே சொல்லலாம். ஓரிடத்தில் தன் மகள் தன்னை தந்தை என்று அழைக்காமல் இருக்கிறாளே என்று வருந்தும் இடத்தில் சூர்யா ‘கார்த்திக் அப்பா’ என்று கற்றுகொடுக்கும் காட்சி வெகு நுணுக்கமான உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம். சூர்யா ஒரு நண்பனாக சக்திக்கு செய்த உதவிகள், அவளுக்காகவே என்று யோசித்து முடிவெடுக்கும் வேலையில், ‘எனக்கு இப்படியொரு நண்பன் இருந்திருந்தால் நானும் என் சோகங்களை சொல்லி அழுது என் துக்கத்தை இறக்கி வைத்திருப்பேனே’ என்று நினைத்திருக்கிறேன். ராகவி காதலை சொல்ல முடியாமல் தவிப்பது, கார்த்திக் வாழ்க்கையின் பின்னணி என்று அனைத்தும் படித்தபிறகு அழுதது நிஜம். என் காதலியை தவிர வேறொரு பெண்ணின் நிழலை கூட தீண்டமாட்டேன் என்று சொன்னவன் பாவனாவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்தபோதும், ‘அதை கடமைன்னு சொல்லாதீங்க. அவ இல்லன்னா நான் என்னவாகி இருப்பேன்னு எனக்கே தெரியாது’ என்று சொல்லும்போது நிஜமாகவே மனம் நிறைவுற்றது. ஒருவரின் பார்வைக்கு தவறானவராக தெரிந்தாலோ சித்தரிக்கபட்டளோ அவர் அப்படி இல்லை என்ற நிதர்சனம் புரிய வைக்கும் ஒரு கதாபாத்திரம் கார்த்திக். இவர்கள் நால்வரும் கதாபாத்திரங்களாக சித்தரிக்க பட்டு இருந்தாலும் என் மனதில் இன்றும் உயிருடன் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாவல் என்ற என் எல்லையைக் கடந்து நான் சம்பவம் நடக்கும் இடத்திற்கு கற்பனை முதல் முறையாக சென்றது இந்த கதையின் மூலமாகத்தான். என் கல்லூரி நாட்களில் எனக்கும், என் உயிர்தோழிக்கும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. காதல் கனவே கலையாதே - வெண்ணிலா சந்திரா கதிர்நிலவன் - நித்திலா தனக்கு வரபோகும் கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நாயகி விரும்பியதற்கு எதிர் மாறாக அமையும்போது அவள் அனுபவிக்கும் மனவுளைச்சல் பற்றி ஆழகாக சொல்லி இருப்பார்கள். எனக்கு இந்த கதையில் பிடித்தது தன் குழந்தையை அழித்துவிட்டால் என்று தெரிந்ததும் அவன் உண்மையை சொல்லும் காட்சியும், கருவில் அழிந்துவிட்டதாக நினைத்த குழந்தையை தன் மனையாள் சுமக்கிறாள் என்று அவன் உணரும் தருணமும் அவன் அடையும் மகிழ்ச்சி. ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கும்போது ஆண் மனைவியின் அருகே இருந்தால் கண்டிப்பாக அவளை வார்த்தைகளால் குத்தி கிழிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலமாக சமுதாயத்தில் தவறுகள் குறையலாம் என்று தோன்ற வைத்தது. இந்த கதையில் சாருவின் பங்கு அவளின் நட்பின் மூலமான என் உயிர் தோழியை உண்மையான பாசத்தை உணர்ந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது வரமாய் வந்த தளிரே – பிரேமா ஷ்யாம் – மீரா பந்தயத்திற்காக திருமணம் செய்யும் நாயகன், அவனை புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடும் நாயகி இருவருக்கும் இடையே இருக்கும் பந்தத்தின் பெயர் சொல்ல பிறக்கும் மகள். உண்மையாகவே முதல் பாதியில் என்னடா இவன் இப்படி இருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அவனின் வாழ்க்கையில் தியா நுழைந்த பிறகு அவன் பட்டம் விட கற்றுக் கொள்வது, மழையில் மகளோடு விளையாடுவது, குழந்தையைத் தொலைத்துவிட்டு அவளை காணாமல் தவித்து போவது என்று அவன் கொஞ்ச கொஞ்சமாக மாறிவதும் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் இடங்களில் மனம் ஏனோ கனத்துப்போனது. பணம் இருப்பவனுக்கு பிள்ளைகளோடு செலவிட நேரம் கிடைப்பதில்லை. அந்த நிறைவை அடையும் ஏழை தந்தைக்கு கிடைத்தாலும் பிள்ளைகளை கஷ்டப்பட வைத்துவிட்டேனே என்ற வருத்தம் குறைவதில்லை. சமுதாயத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் ஹப்பா மெய்சிலிர்த்து போனேனேன் அந்த உண்மையை உணரும் இடத்தில்.. ஒரு நாள் வரும் இயற்கை சீற்றம் அனைவரின் வாழ்க்கையையும் எப்படி புரட்டிப்போடுகிறது என்றும், ரோட்டில் நடக்கும்போது பிள்ளைகளை முன்னே விட்டு பின்னே நடக்கும் தந்தைகளைவிட, தனக்கு நிகராக நடக்சகும் தந்தையின் மனதை மகள் துல்லியமாக உணர்கிறாள் என்ற உண்மையைத் தியாவிடம் கற்றுக் கொண்டேன். ஹிந்தி அப்பாவுக்கு நான்தான் கற்றுக் கொடுக்கிறேன் என்று அவள் பெருமையாக சொல்லும்போது அப்படியொரு மகிழ்ச்சி என் மனதில்! இந்த கதையில் ஷ்யாம் வளர்ந்த விதம் நிஜமாகவே கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கடைசியாக அவன் சொல்லும் சில விஷயங்களை இன்றைய சமுதாயம் நடுத்தர வயதினர் செய்யாமல் இருந்தாலே நாளைய தலைமுறை நன்றாக இருக்குமென்று நினைக்க வைத்த கதை. காதல் பரிசு – என். சீதாலட்சுமி தன் நட்பை எப்படி வீட்டினர் தவறாக புரிந்துகொள்ளலாம் என்ற நாயகியின் நியாயமான கோபத்தை படிப்படியாக வைத்து எழுதபட்ட கதை. இதில் நிகிலனின் குறும்பு மின்னும் பேச்சுக்கள் அனைத்தும் பக்கத்து வீட்டினரோடு நேரில் பேசுவது போலவே உணர்ந்தேன். அதுவும் மிருதுளா கையில் அவன் அடி வாங்குவதெல்லாம் அவ்வளவு பிடித்தது. இன்னும் இரண்டு போடு என்று நானும் சத்தமாக சொல்லி திருதிருவென்று விழித்திருக்கிறேன். கதையில் நாம் பயணிக்க அவர்களை உணர வேண்டும் என்பது போன்று வசனங்கள் மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருந்தது. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே மிருதுளா இடத்தில் நான் இருந்திருந்தாலும் திருமணத்திற்கு ஓகே சொன்ன நண்பனை கட்டையால் இரண்டு அடி அடித்திருப்பேன். ச்சே சான்ஸ் மிஸ் ஆகிடுச்சு. நெஞ்சமெல்லாம் நீயே – பிரேமலதா பாலசுப்பிரமணியம் அத்தை மகளும், மாமன் மகனும் நட்பாக இருந்தது இந்த கதையில் தான். இந்த கதை என்னுடைய கல்லூரி கடைசி வருடத்தில் படித்தேன். லாஸ்ட் பெஞ்சில் உட்கார்ந்து எக்ஸாம்க்கு படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றதும் லேப்டாப்பில் படித்து தோழியுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்த கதை. அதுவும் எங்க காலேஜ் மொட்டை மாடியில் நானும் தோழியும் ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து பரிச்சை பற்றிய பயம் இல்லாமல், நாளை பற்றிய கவலை இல்லாமல் அந்த நொடி மட்டுமே ரசித்த ஒரு அழகிய தருணத்தை ஏற்படுத்திய கதை. ஒவ்வொரு டைலாக் எண்டிலும் எங்க இருவரின் முகத்திலும் தெரிந்த எல்லையில்ல மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் இதயத்தில் ஓரிடத்தில் இனிக்கிறது. அந்த அளவிற்கு இந்த கதை எங்களின் உணர்வுகளோடு கலந்ததுவிட்ட ஒன்று காதல் ரதியே –சுபஸ்ரீ கிருஷ்ணவேணி  சக்திவேல் – ரேவதி வெளிநாட்டில் வேலை செய்யும் சக்திவேலை உடனே வரவழைத்து ரேவதியை பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் தொடக்கும் நொடியிலிருந்து இறுதிவரை இடியே விழுந்தாலும் தெரியாது என்ற எண்ணத்துடன் கதையில் மூழ்கி திளைத்த நாட்கள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கு. அதுவும் ரேவதி சொல்லும், ‘கோலிசோடா, ஊர்நாட்டான், உங்க இஷ்டம்’ இந்த வார்த்தைகள் எல்லாம் எங்க வகுப்பு தோழியிடம் சொல்லிவிட்டு அவர்கள் விளக்கம் கேட்கும்போது, “இந்த கதையை படி புரியும்னு” குரங்கு தான் கேட்டது இல்லாமல் வனத்தையும் சேர்த்து அழித்த கதைபோல அனைவருக்கும் ப்ரீயாக கதை படிக்க கற்றுத்தந்த நாட்கள். அதற்காகவே எந்த நேரமும் பேக்கில் புத்தகத்தை வைத்திருந்தது எல்லாம் மறந்து போகுமா என்ன? எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு - நிதனி பிரபு இணையத்தில் நான் தொடர்கதையாக படித்த முதல் இலங்கை தமிழ் கதை. பருவ வயதில் ரவிவர்மா கவிநயாவை திருமணம் செய்ய அவன் தாயார் செய்யும் கொடுமையால் தாலியின் மகத்துவம் அறியாமல் கழட்டிவிட்டு வந்துவிடும் நாயகி. அதன்பிறகு உண்மையறிந்து நாயகன் தேடி வரும் இடங்களும், ராஜ் அவனை கோபத்துடன் திட்டும் இடமும், அதற்கு பதில் கொடுக்கும் இடமும் பாராட்டுக்கு உரிய இடங்கள். நிஜமாகவே இலங்கை தமிழை ரசித்து படித்த கதை. அன்றிலிருந்து இலங்கைக்கு சென்று இவங்க இருவரையும் நேரில் பார்க்கணும்னு ஒரு முட்டள்தனமான எண்ணமெல்லாம் இன்றும் இருக்கிறது. காதல் செய்த மாயமோ - ரோசி கஜன் சந்தோஷ் – காவ்யா. இந்த கதை நான் புத்தகமாக படித்த முதல் இலங்கை தமிழ் கதை. இதில் நாயகன் – நாயகியின் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. ஒரு மெல்லிய நேசம் எப்படி இருக்குமென்று இந்த கதையில் படித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதுவும் இரவு நேரத்தில் கண்கள் கலங்கிட நாயகி அழுதுக்கொண்டே வருவதை கண்டு சந்தோஷ் துடித்துப்போய் விசாரிக்கும் இடங்களில் என் மனம் பறிபோனது உண்மை. காவ்யாவின் காதல் அதை அவள் உணரும் தருணம். அடுத்தநொடியே இல்லையென்று ஆகும்போது அவளுக்குள் ஏற்படும் வலியை எனக்கும் கடத்தி சென்றது எழுத்துகள் என்று சொல்லலாம். உருகாதோ எந்தன் உள்ளம் – எஸ்.ஜோவிதா ரோஹித் – மாதங்கி. சிறுவயதில் கெட்டவனாக இருக்கும் ஒருவன் மாறவே கூடாதா? உன்னை பார்த்தால் எனக்கு கல்யாண ஆசையே வரல? என்று எதிரும் புதிருமாக நிற்கும் நாயகன் – நாயகியின் அழகிய காதல் கதை. ஒருவரின் வார்த்தைகளால் மனம் இறுகி போகும். அந்த மாதிரி அவளின் வார்த்தைகளால் பாதிக்கும் அவனின் மனம் கல்லாக மாறிப் போகிறது. ஒவ்வொரு முறையும் தன்னை புரிய வைக்க போராடி ரோஹித் தோல்வியைத் தழுவும்போது ஐயோ பாவம் என்று சொல்ல தூண்டும். கடைசி மணவறைக்கும் போகும் முன்னர் கத்தி அழுது தன் காதலை வெளிபடுத்திய இடத்திற்கு ரோஹித் வரும்போது கதையின் தலைப்பு போலவே என் இதயமும் உருகித்தான் போனது. இதயம் மேவிய காதலினாலே – ஷெண்பா சூர்யா – நிஷா. இந்த அக்காவின் கதைகள் என்றதும் நினைவிற்கு வருவது நின்னைச் சரணடைந்தேன், நீயெனதின்னுயிர் கதைதான். அந்த கதைக்கு பிறகு இந்த கதையை படித்தபோதும் இதில் ஏதோவொரு ஸ்பெசல் மேஜிக் இருந்தது. லூசு என்று சொன்னால் நமக்கு வரும் இயல்பான கோபம் தான் நாயகிக்கு வரும். அந்த ஒரு வார்த்தையை சொன்ன பாவத்திற்கு சூர்யா அனுபவிக்கும் வலி இருக்கே. சின்ன வாண்டு கூட அவனை கேலி பேசும். என்னவோ இந்த கதையில் இருந்த அந்த மெல்லிய நேசம் மனதை இதமாக வருடியது. வார்த்தை தவறிவிட்டாய் – தமிழ்மதுரா இந்த கதையின் முடிவை எங்களிடமே கொடுத்த எழுத்தாளருக்கு நன்றி தாங்க சொல்லணும். இந்த கதையில் இந்த இடமென்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது கதையின் முடிவுதான். தவறு செய்தால் மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும் என்ற நினைவுகளைக் கடந்து தவறுகளை தெரிந்தே செய்தால் கண்டிப்பாக மன்னிப்பு கிடையாது என்று நிராகரித்த நாயகியின் துணிச்சலான பேச்சு மனதை கவர்ந்தது. இந்த கதையின் முடிவை நான் ரொம்பவே விரும்பி படிச்சேன். அந்த இடத்தில் ஒரு தாயாக அவள் சகித்துக்கொண்டு அவனோடு இருந்தாலும், ஒரு மனைவியாக நின்று கணவனுக்கு தண்டனை கொடுத்தத்தில் ஒரு பெண்ணாக நான் நிஜமாக சந்தோசப்பட்டேன். சித்ராங்கதா இந்த நாவலின் வந்த சரயு – ஜிஷ்ணு மறக்கவே முடியாது. அதுவும் நம்ம அணுகுண்டு – சரவேடியின் நட்பை மறக்கவே முடியாதுங்க. பாருங்க. ஒரிஜினல் நேமை மறந்துட்டு அவங்க வைத்த பட்ட பெயரை சொல்றேனே அந்த அளவிற்கு நான் இந்த கதையில் பைத்தியமாக மாறிப் போனேன் என்று சொன்னால் அதை நீங்க நம்பனும் ஓகே. மெல்லிய நேசம் – விஷ்வாபூமி தந்தையின் தவறான நடத்தையின் காரணமாக வழிமாறிப் போகும் நாயகன். தன் தந்தையின் கட்டுப்பட்டு அவரின் அரக்க குணத்திற்கு தன்னையும், படிப்பையும் வீணடிக்க விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறும் நாயகி. இருவருக்கும் இடையே ஏற்படும் மெல்லிய நேசம். அதுவும் தவறை மட்டுமே செய்யும் நாயகன் அவளிடம் மட்டும் தாய்மையை உணர்ந்துவது இடங்களோ அருமை. இந்த கதையில் அவன் திருமணத்திற்கு மறுக்கும் இடங்களில் மற்ற நாயகனிடம் இருந்து அவனை தனித்து தெரிய வைத்தது எழுத்தாளரின் எழுத்துகள். நறுமுகை – wattpad ஸ்டோரி இந்த கதையின் நாயகி நறுமுகை தாங்க ஹைலைட். குழந்தை திருமணத்தில் இருந்தும், இன்னும் கட்டுபாடுகள் என்று சொல்லி படிப்பை நிறுத்தும் கிராமங்களில் இருந்து துணிச்சலாக வெளியே வந்து கிருஷ்ணாவின் வீட்டில் இருந்து படிப்பை முடித்து கடைசியில் அவனையே திருமணம் செய்து இறுதியாக வெற்றியின் சிகரமாக அவளுக்கு தொல்லை கொடுக்கும் பாட்டியே அவளுக்கு பிரசவம் பார்க்கும் காட்சிகள் அழகாக இருந்தது. இந்த கதையில் எனக்கு பிடித்தது எழுத்தாளரின் எழுத்து தான். ஒவ்வொருவரின் பாயின்ட் ஆப் வியூ தனியாக சொல்லி இருப்பாங்க. கதையை பொறுமையாக படிப்பவர்களுக்கு அது அருமையான கதை. அவனின் அவள் – சாராமோகன் இந்த கதையும் நான் ரசித்து படித்த கதை. இந்த கதையில் இனியாவின் குறும்புகள் அனைத்தும் அழகு. முதல் காதலில் தோல்வியுற்ற தன்னவனை மீட்டெடுத்து அவனின் அன்பை தனக்குள் சேமித்து வைத்துகொள்ளும் அவளின் காதல் கண்களைக் கலங்க வைத்தது. அதுவும் சில இடங்களில் கதாநாயகன் என்ற பிம்பத்தை விட்டு வெளியே வந்து தன் துன்பத்தை சொல்லி அவன் கதறும் தருணங்களில் என்னையும் மீறி வாய்விட்டு எழுதிருக்கிறேன். அருமையான படைப்பு.. உயிரே உனக்காக - யாழினி ஆதவ் –சூர்யா என்ற இரட்டை சகோதரர்களின் காதல் கதை. அதில் சூர்யா வந்து செல்லும் இடங்களில் மனதில் கல்வெட்டாக பதிந்து போனது. சிட்டுக்குருவியாக சுற்றி திரியும் நாயகி சிறகுடைந்த பறவையாக மாற்றி சிறகில் அடைப்பதும், நல்ல நண்பன் போல பழகிய அக்காவின் கணவன் தன்னையே திருமணம் செய்ய சம்மதிக்கும் சூழ்நிலைகள். இதற்கிடையே சூர்யாவின் காதல் படும்பாடு, உறவுகள் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். நம்மோட பகை மனஸ்தாபம் நம்மோடு போகட்டும் என்று சில இடங்கள் அழுத்தமாக ஆழமாக நெஞ்சில் பதிந்தது. தன் காதலியை தவறாக பேசிவிட்டு வந்து மன அழுத்தம் தாளாமல் சூர்யா அழுகும் போது கண்களில் கண்ணீர் தானாகவே பெருகும். அந்தளவிற்கு இந்த கதையின் திருப்பங்களில் என் மனம் திசைமாறியது. சமர்ப்பணம் - அனிதா ராஜ்குமார் ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படும் காதல், நட்பு, குடும்பம் என்ற சூழ்நிலை கடந்த ஒரு கதை. இந்த கதையில் அவரவர் செய்யும் தவறுகளால் மற்றவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அவலங்களை படம்போட்டு காட்டி இருப்பார். சமுதாயத்தில் நடக்கும் பல விஷயங்களை அப்படியே கதையில் அவர் செதுக்கியபோது உள்ளம் சிதைந்தது. என்னவொரு எழுத்து என்று நினைக்காமல் ஒரு நிமிடம் கூட நகரவில்லை. அந்த அளவிற்கு அழகான ஆழமான எழுத்துகள். சமர்ப்பணம் கதையில் என்மனம் சரணடைந்தது உண்மையே.. இரு துருவங்கள் - மோனிஷா  ஆதித்யா – விந்தியா. இந்த கதை எனக்கு போட்டியில் கலந்து கொண்டதற்கு பரிசாக கொடுக்கபட்டது. எல்லோரும் வளர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில் நின்று நான் அவள் இல்லை, அவள் திரௌபதி அல்ல என்று அனைத்து கதைகளையும் பட்டியலிட்டு சொன்னால் முதல் கதையான இந்த கதைக்கு ஈடாகாது. நாயகியின் திமிரை விரும்பும் நாயகன். அவன் தவறானவன் அல்ல என்று உணர்ந்து கொள்ளும் நாயகி என்று இருவரும் இரண்டு வேறு துருவங்களாக நின்றது கதையை நான் ரசித்து படிக்க காரணமாக இருந்தது. அதுவும் நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே ஏற்படும் மோதல், புரிதல், காதல் அனைத்தும் அருமை. மேலே நான் பட்டியலிட்ட கதைகளை கட்டுரையாக படித்தாலும் சரிதான், இல்லை விமர்சனம் மாதிரி இருக்கு என்று சொன்னாலும் சந்தோசம் தான். ஏனென்றால் இந்த கதைகள் அனைத்தும் என் மனதில் நீங்காமல் இடம் பிடித்த கதைகள். நாவலில் நான் என்னை மறந்து படித்து, சிரித்து, அழுது என்று ஒவ்வொரு முறையும் இந்த கதைகள் அதே தாக்கத்தை தான் மனதினுள் ஏற்படுத்துகிறது. இந்த நாவல்களில் எல்லாமே ஏதோவொரு இடத்தில் என்னை நானே உணர்ந்து இருக்கேன். என்னை மீறிய உணர்வுகளை வெளிபடுத்தி இருக்கேன். இந்த நாவல்கள் அனைத்தும் நான் துவண்டு விழுகும்போது தோள்கொடுக்க உறுதுணையாகவும், கவலைபடும் வேலையில் ஆறுதலாகவும், தோழிகளை தேடி மனம் அலைபாயும் நேரத்தில் தோழியாகவும் மாறியது. அனைத்து நாவல்களையும் வாசித்தாலும் மனதில் கல்வெட்டாக மாறிப்போன சில ரணங்கள், துக்கம், துயரம் இவை மூலமாக நான் பாதிக்கப்படும் வேலையில் எனக்கு தைரியம் மூட்டும் நாவல்களோடு என் பயணமும் தொடரும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா