மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestJanu Murugan - நானும் நாவலும்Post ReplyPost Reply: Janu Murugan - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Janu Murugan</a> on November 5, 2020, 12:18 PM</div>வணக்கம் மக்களே! நான் ஜானு முருகன்.. என்னைப் பத்தி சொல்றளவுக்கு ஒன்னும் இல்லை! ஆனால் நான் எப்படி ஒரு வாசகியா மாறுனேன்னு சொல்ல ஒரு கதையே வச்சுருக்கேன். நான் எழுத்தாளராவதற்கு முன்னாடி நானும் ஒரு வாசகியா இருந்தேன். (யாரந்த எழுத்தாளர்னு தேடாதீங்க.. நான் தான் அது.. நீங்க நம்பிதான் ஆகனும் மக்களே! 😂😂😂) சரி வாங்க ஒரு சின்ன ப்ளாஷ்பேக் மக்களே! பயப்படாதீங்க.. சின்ன கதைதான். 2013 - அப்போ நான் 8வது படிச்சுட்டு இருந்தேன்.. அன்னைக்கு ஞாயிற்று கிழமை. சும்மாவே நம்ம கைகால் ஒரு இடத்துல நிக்காது.. நானும் என்னைனுடைய நண்பர்களும் அதாங்க எங்க தெருல இருக்க நண்டு சிண்டுங்க கூட தெருவுல விளையாடீட்டு இருந்தேங்க.. அப்ப என் அம்மாச்சி வெளிய கிளம்புனாங்க... நான் அவங்க எங்க போறாங்கன்னு கேக்கறதுக்காக ஆர்வமா அவங்க பக்கத்துல ஆர்வமா போனேன்.. "அம்மாச்சி எங்க போறீங்க?" ன்னு நான் கேட்டேன். அவங்க, "நான் லைப்ரரிக்கு போறேன்.. நீயும் வர்றீயா?" 'லைப்ரேரியா? சும்மாவே நமக்கு படிக்க பிடிக்காது.. இதுல லைப்ரேரிக்கு போறதுக்கு இதுங்க கூட விளையட்றதே பரவியில்லை..' என நினைத்து விட்டு, "அம்மாச்சி, நீங்க போய்ட்டு வாங்க.. நான் வரலை.." அம்மாச்சி, "இல்லை, நீ ஒருதடவையாவது என் கூடவா..." ன்னு கட்டாயப்படுத்துனாங்க.. சரி ரொம்ப நாளா தூரத்துல இருந்தே பார்த்தோம்.. இன்னைக்கு என்னதான் உள்ள இருக்கன்னு பார்ப்போமேன்னு அவங்க கூட போனேன்... முதல் முறையா லைப்ரரிக்கு உள்ள காலை எடுத்து வச்சேன் அப்போதான். அம்மாச்சி, "நீ இங்கேயே அமைதியா உக்காரு.. நான் போய் புக்கை தேடி எடுத்துட்டு வரேன்னு" சொல்லி என்னை ஒரு சேர்ல உக்காரவச்சுட்டு போய்ட்டாங்க.. நான் ஒரு இரண்டு நிமிஷம் உக்காந்தேன். ரொம்ப அமைதியா இருந்துச்சு.. செம போரிங்கா இருந்துச்சு.. சும்மாவே நம்மளுக்கு வாய் நீளம்... "அம்மாச்சி, புக்கை எடுத்துட்டீங்களா?" ன்னு ஒரு கத்து கத்துனேன் பாருங்க... அங்க இருக்க எல்லார் பார்வையும் என் மேல் தான் விழுந்துச்சு.. அம்மாச்சி என் பக்கத்துல வந்து, "இங்க இப்படிலாம் கத்த கூடாது! அமைதியா இதை படிச்சுட்டு உக்காரு..." ன்னு சொல்லி ஒரு சிறுவர் புத்தகத்தை கொடுத்துட்டு போனாங்க... சீ சிறுவர் புக்கை படிக்குறதா? எனக்கு 13வயசாகிடுச்சு.. அப்படின்னு தோணுச்சு.. சரி சும்மா இருக்குறதுக்கு இதையாவது படிப்போம்னு படிக்க ஆரம்பிச்சேன்.. ஹான் நல்லாதான் இருந்துச்சு... புக்கு படிக்குறதுக்கு கூட நல்லா இருக்கே! ன்னு முதல் தடவை ஃபீல் பண்ணேன்... அப்புறம் நானும் லைப்ரேரில உறுப்பினர் கார்டு போட்டு வாராவாரம் என் அம்மாச்சி கூட லைப்ரரிக்கு போக ஆரம்பிச்சேன்... அப்படியே அது தொடர ஆரம்பிச்சது... புக் படிக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பிச்சாங்க.. எல்லாம் என் வயதுக்கு மீறிய நட்புதான்.. அதெல்லாம் நானா ஏறபடுத்திக்கிட்டதுதான்.. அங்க லைப்ரேரில இருக்க அக்கா எனக்கு ஃப்ரண்ட் ஆகிட்டாங்க... சிறுவர் கதை தான் ஒரு ஒருவருஷமா படிச்சுட்டு இருந்தேன்... ஒரு நாள் சிறுவர் கதைலயே கொஞ்சம் பெரிய புக்கா எடுத்தேன்.. என் அம்மாச்சி, "இந்த புக்கை எல்லாம் எடுக்காத! உன்னாலை படிக்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க..." எனக்கு கோவம் வந்துடுச்சு.. "ஏன் படிக்க முடியாது..? என்னால் முடியும்! நானும் உங்களை மாதிரி பெரிய புக்கா படிக்கப் போறேன்னு சொல்லி.." ஒரு பெரிய புக், கிட்டத்தட்ட 300 பக்கம் இருக்கும்.. வீராப்பா எடுத்துட்டு வந்துட்டேன்.. அந்த புக்கை உக்கார்ந்து அன்னைக்கு ஒரு நாள்ல படிச்சு முடிச்சுட்டேன்... என் அம்மாச்சி கிட்ட போய், "அம்மாச்சி என்னமோ சொன்னீங்க.. என்னால் படிக்க முடியாதுன்னு... பாருங்க நான் படிச்சு முடிச்சுட்டேன்..." ன்னு சொன்னேன். அம்மாச்சி என்னைப் பாராட்டுனாங்க... அப்படியே உச்சி குளிர்ந்து போச்சு.. 😍😍 பேசிக்காவே என்னை யாராவது பாராட்டுனா நான் பறக்க ஆரம்பிச்சுடுவேன். அதான்..😁😁😁.. சரி ப்ளாஷ் பேக் ஓவர்பா.. நான் படித்த முதல் நாவல் - "அன்பு என்பது" ஆசிரியர்கள் பெயர் : சத்தியமா தெரியாது... என் மனம் கவர்ந்த நாவல்.. அந்த கதையை படித்துவிட்டு இரண்டு நாட்கள் அதிலிருந்து வெளிவர முடியலை! அன்பு ஒன்று இந்த உலகத்தில் எதையும் மாற்றும் சக்தி உடையது... ஒருவரின் அன்பை தெரிந்து அலட்சியப் படுத்தினால் என்ன ஆகும் என்பது அந்த கதையின் கரு.. அதில் என்னை ஈர்த்த கதாபாத்திரம் மல்லிகா( பேர் சரியா ஞாபகம் இல்லை) காதல்னா என்ன? அதைப் பத்தி எந்த ஒரு ஐடியாவுமே என்கிட்ட இல்லை அந்த கதைப் படிக்குற வரைக்கும்... பின்னாடியே சுத்தி பேசி பழகி ஊர் சுத்துறதுதான் காதல் அபப்டி என்னும் என்னுடைய கருத்தை மாற்றியது.. ஆம்! அவளுடைய தூய அன்பு அவனோட வலிக்கு மருந்தா இருந்துச்சு.. உணர்த்தப் படுவது காதல் அல்ல! இது என்ன என்று தெரியாத போது கூட தன்னால் உணர முடிந்தால் அது தான் காதல்... காதல் அப்படின்னு ஒரு வார்த்தைக்கு அகராதி தேடி கொடுத்த கதை அது... நான் இரண்டாவதா படிச்ச புத்தகம் எழுத்தாளர் இராஜேஷ் குமார் அவர்களுடைய "உன்னுடைய கண்களுக்கு மட்டும்" கதை பெயரே வித்யாசமா இருந்துச்சுன்னு எடுத்து படிச்சேன்.. அந்த கதை எனக்கு நிறைய கத்துக் கொடுத்துச்சு.. அதுல ஒரு சீன் என்னால் இன்னும் மறக்க முடியலை! அந்த கதைல ஒருத்தரை கொலை பண்ணி அவரோட உடல் கூறு போட்டு கழிவறையில் டிஸ்போஸ் பண்ணிடுவாங்க... அதை அந்த போலீஸ் ஆபிசர் கண்டுபிடிப்பாரு.. அது எப்டினா அந்த இறந்த மனிதனுடைய சதையின் ஒரு பகுதியை எறும்பு எடுத்துட்டுப் போகும். அது மூலமா கண்டுபிடிப்பாரு... எனக்குன்னா ரொம்ப ஆச்சிரியம்.. இப்படிலாம் கண்டுபிடிக்கலாமான்னு.. அப்புறம் அதை எப்படி கண்டுபிடிச்சாங்க...சின்ன சதைப் பகுதில என்ன இருக்கப் போவுதுன்னு.. அப்புறம் பெரிய புள்ளையானதும் படிக்க படிக்க தெரிஞ்சுது.. ஜீன் மூலமா கண்டுபிடிக்கலாம்னு.... இப்படியே நிறைய கதைகள் படிக்க ஆரம்பிச்சேன். முதல் இரண்டு கதைதான் எனக்கு ஞாபகம் இருந்துச்சுபா... அப்புறம் அதுவே பழக்கமாகி இன்று வரை என்னாலை அதை விட முடியலை... அப்புறம் ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் போனதும் கதை படிக்க முடியாமல் போச்சு... ஆன்ட்ராய்ட் போன் வாங்குனதுக்குப் பிறகு ஆன்லைன்ல கதை படிக்கலாம்னு தெரிஞ்சு இப்ப முழுசும் போன்ல தான் படிச்சுட்டு இருக்கேன்... இப்ப சமீபத்துல படிச்ச ஒரு கதை என் மனதை பாதித்தது விட்டது. கதை பெயர்: நீ இல்லாமல் போனால் ஆசிரியர்: ஆதி பிரபா இந்த கதை என்னை ரொம்ப ரொம்ப டச் பண்ணீடுச்சு... ஒரு மனைவியோட பங்கு வாழ்க்கைல என்னனுன்னு உணர வச்சது.. எல்லா கணவன்களும் அவளுக்கு என்ன வேலை இருக்கப் போவுது.. வீட்ல சும்மாதான் இருக்கா.. அவளுக்குன்னு என்ன பெருசா ஆசை இருக்கப் போகுது.. இதான் பெரும்பாலான கணவன்மாரோட எண்ணம்.. ஆனால் அப்படி இல்லைன்னு உணர வச்ச கதை அது... அதுல கதாநாயகிக்கு விபத்து நடந்து அவங்க மருத்துவமனைல இருக்கும் போது முகிலன்( கதை நாயகன்) உட்கார்ந்து அழுவாரு... அப்போ உணமைலயே எனக்கு அழுகை வந்துச்சு... முகிலன் யோசிச்சு பார்ப்பாரு...அவர் மனைவியோட பங்கை தன் வாழ்க்கைல... அவ இல்லாமல் நான் இல்லை! அப்படின்னு அவர் உணரும் தருணம்.. அதை நான் உணர்ந்தேன். அதல்லவோ ஒரு எழுத்தாளரின் வெற்றி.. ஒரு எழுத்தாளராக ஆதிபிரபா அவர்கள் ஜெயிச்சுட்டாங்க... படிச்சுட்டு ஜஸ்ட் லைக் தட்னு மறந்துட்டுப் போறது கதை இல்லை.. அந்த கதைல நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு உணரவைக்கனும்... எதோ பண்ணிடுச்சு அந்த கதை.. சொல்லனும்னா நான் நிறைய சொல்லலாம்.. நான் சமீபத்தில் படித்து என் மனதில் நீங்கா இடம் பிடித்த கதை கதை பெயர்: ஊடல் ஆசிரியர்: மோனிஷா இந்த கதை என்னை சிந்திக்க வச்சது ஏராளம்.. இந்த கதையில் இருந்து நான் கத்துக்கிட்டது ஏராளம்... கௌதம் கதாபாத்திரம் என் மனதில் நின்று விட்டது.. ஆம் பெண்களுக்கு மட்டும் தான் பிறந்து வீடு புகுந்த வீடுன்னு சண்டை வருமா? ஆண்களுக்கும் வரும் மனைவி மற்றும் தாய்க்கு இடைல... கௌதம் கையாண்ட விதம் அருமை! குழந்தை இல்லைன்னு ஒரு தடவை கூட காயத்ரியை பத்தி தப்பா பேசுனது இல்லை.. ஏன்னா அந்த அளவுக்கு கௌதம் காயத்ரியை நேசிச்சாரு... உண்மையான காதல் குறைகளை பார்க்காது.. நிறைகளை மட்டுமே பார்க்கும் என்பதுக்கு ஒரு எடுத்துக்காட்டு... காயத்ரி - அவள் தன் இளம் வயதில் செய்த தப்பை நினைச்சு அழுவா... ஆமா எல்லாரும் பண்ற ஒரோ தப்பு.. ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம அந்த வயதுல வர்ற ஈர்ப்பை காதல்னு நம்பி காயத்ரி மாதிரி வாழ்க்கைல ஏமாந்தவங்க நிறைய பேர்.. சிலர் அதை கடந்து வர்றாங்க. சிலர் அதிலே முழ்கிப் போயிடுறாங்க.. தாய்மை! ஒரு வரம். அது இந்த உலகத்தில் எல்லாருக்கும் கிடைக்காது.. அம்மா என்ற வார்த்தைக்கு எல்ளோ சக்தி இருக்குன்றது குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும். குழந்தை இல்லைன்ற ஒரு காரணத்துக்காக காயத்ரி அந்த கதைல ரொம்ப கஷ்டப்படுவா.. இதுல அந்த பக்கத்தா வீட்டு மாமி.. இது மாதிரி ஆளுங்க இன்னும் இருக்கத்தான் செய்றாங்க... அடுத்தவங்க வாழ்க்கைல தேவையில்லாமல் தலையிடுவது... தேவை இல்லாமல் பேசி நோகடிப்பது.. இவங்கலாம் எப்போதான் திருந்தப் போறாங்களோ? அடுத்து காயத்ரி அம்மா... எனக்குப் பிடிக்கலை.. இந்த கதை படிக்க கூடாதுன்னு சொல்றாங்களே ஏன் படிக்க கூடாதுன்னு சொன்னாங்களா? சும்மா செய்யக் கூடாது செய்யக் கூடாதுன்னு சொன்னா மட்டும் போதுமா? ஏன் செய்யக் கூடாதுன்னு சொல்லனும். இல்லை அதையே தான் செய்யனும் தோண்றது இயல்பு.. வளர்மதி கதாபாத்திரம் என்னை ஈர்த்தது.. எவ்வளவு பெரிய இழப்பு வந்தாலும் அதிலிருந்து மீண்டு அவளோட வாழ்க்கையை அவளுக்கு பிடிச்ச மாதிரி மாற்றி அமைச்சது சிறப்பு.. ஒரு தோழியா காயத்ரிக்கு சரியான அறிவுரை வழங்கியது நல்லா இருந்துச்சு... காயத்ரி அப்பா.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.. வளர்மதி கதை படிக்கும் போது வந்து நாம எந்த மாதிரியான கதை படிக்கிறோம்னு முக்கியம்னு சொன்னாரு... அது அவளுக்கு மட்டும் இல்லை... எனக்கும்னு சேர்த்து தோணுச்சு.... போதும்பா முடியலைன்னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது... அவ்ளோதான் முடிச்சுடுறேன்... கதை படிச்சு நான் கற்றுக் கொண்டது ஏராளம். ஒரு விஷயத்தை இப்படி தான் செய்யனும் இப்படி தான் இருக்கும்னு என்னோட கண்ணோட்டத்தை மாத்திடுச்சு... வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் பார்க்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன்... நிறைய! நிறைய! சொன்னா சொல்லிக்கிட்டே போகலாம். பட் இதுவே ரொம்ப அதிகம். இதோட நிப்பாட்டிக்கிறேன்... என்றும் அன்புடன் ஜானு முருகன் 💜</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா