மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestChitrasaraswathi - நானும் நாவலும்Post ReplyPost Reply: Chitrasaraswathi - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Chitrasaraswathi</a> on October 29, 2020, 5:12 PM</div>நான் மூன்றாவது படிக்கும் பொழுது ராணி புத்தகத்தில் வரும் சிறுவர் கதைகள் படிக்கும் வழக்கம் வந்தது. எங்கள் வீட்டில் குமுதம், விகடன், கலைமகள், கல்கி பத்திரிக்கைகள் வாங்கியதால் அதில் வரும் தொடர் கதைகள், சிறுகதைகள் படிக்கும் பழக்கம் இருந்தது. எனது அம்மா ஆசிரியர், அவர் எப்பொழுதும் எனது வாசிப்பை தடை செய்ததில்லை. அவர்தான் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பார். எந்தக் கதையையும் படிக்கத் தடை செய்ததில்லை. நான்தான் நல்லக் கதை எது தேவையில்லாத கதை எது என்று தீர்மானிக்க வேண்டும் என்று சொல்வார். அருமையான எழுத்தர்களின் கதைகளை எனக்கு சொல்வார். அதனால்தான் எனது வாசிப்பு இணையதளத்தில் தொடங்கும் பொழுது அவர் பெயரை என்னுடன் இணைத்து சித்ரா, சித்ரா சரஸ்வதி ஆனேன். இப்படி படித்துக் கொண்டிருந்த நான் திருமணத்திற்கு பிறகு ஐந்து வருடங்கள் எனது புகுந்த வீட்டில் படிக்கும் ஆர்வமில்லாத வீடு என்பதால் படிக்கவே புத்தகங்கள் கிடைக்காது மளிகை சாமான்கள் கட்டி வரும் சிறிய தாளினைக் கூட எடுத்து வைத்து படிப்பேன். நான் தனியார் அலுவலகத்தில் வேலைக்கு செல்லும் பொழுது எனது ஊதியத்தில் சிறு பகுதியை புத்தகங்கள் வாங்க செலவிடுவேன். மீண்டும் படிக்க தொடங்கினேன். தற்போது அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் உள்ள போதும் எனது ஓய்வூதியத்திலிருந்து 10% புத்தகங்கள் வாங்க செலவிடுகிறேன். வேலைக்கு செல்லும் பொழுது எத்தனை வேலை இருந்தாலும் எந்த நேரம் வந்தாலும் தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரமாவது படிப்பது எனக்கு வழக்கமாக உள்ளது. எனக்கு படிக்கும் பொழுது அதில் ஆழ்ந்துவிடும் வழக்கத்தால் யாராவது கூப்பிட்டால் கூட நான் கவனிக்காமல் விட்டுவிடுவேன் அந்தப் பழக்கத்தால் நிறைய திட்டு வாங்குவது வழக்கம். சாப்பிடும் பொழுதும், தொலைக்காட்சி பார்த்தாலும் அப்பொழுதும் படித்துக் கொண்டுதான் இருப்பேன். எனக்கு பிடிக்காத எழுத்தாளரே இல்லை. எல்லா எழுத்துக்களும் பிடிக்கும் வக்ரமான எழுத்துக்கள் தவிர. பள்ளியில் எனது தோழிகளுடன் கதையில் நாயகி இறந்து போனதற்கு அழுதிருக்கிறேன். கலைமகளில் வந்த இதயக் கோவில் கதையின் நாயகி சுபத்ரா இறந்து போனதிற்கு எனது தோழி அழுததற்கு வகுப்பே எதற்கு அழுகிறாள் என்று பதறிய நிகழ்ச்சி மறக்க முடியாது. புத்தகங்கள் என்னில் ஒரு பகுதிதான். அதை வேறாக நான் நினைப்பதில்லை. என்னுடைய கடினமான காலங்களை கடக்க உதவிய தோணி புத்தகங்கள்தான் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொழுதும் என்னுடைய அங்கமாக இருந்தது புத்தகங்கள். எனது சிறிய நூலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களின் கதைகளை புத்தக வடிவில் வைத்துள்ளேன். அப்படி ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வைத்துள்ளேன். ரமணியம்மா புத்தகங்கள் அனைத்தும் உள்ளது. எழுத்தாளர் லக்ஷ்மி, வாஸந்தி, ரமணிச்சந்திரன், சிவசங்கரி, சுஜாதா, எண்டமூரி, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி, இந்துமதி, கமலா சடகோபன், தற்போதைய எழுத்தாளர்கள் முத்துலட்சுமி ராகவன், ஜெய்சக்தி, காஞ்சனா ஜெயதிலகர், மல்லிகா மணிவண்ணன், சஷிமுரளி, ஸ்ரீகலா, நீலாமணி, இன்பா, அன்னா ஸ்வீட்டி, மோனிஷா, அழகி, அகிலா கண்ணன், கிருஷ்ண ப்ரியா நாராயனண், விஜயலட்சுமி ஜெகன், ப்ரியா பிரகாஷ், சிவரஞ்சனி, ஜனனி நவீன், ஸ்ரீநிதா, ஸ்ரீநவி, ரம்யா ராஜன், சரண்யா ஹேமா, சரயு, கவிப்ரீதா ராஜி அன்பு, அம்மு யோகா போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பு கதைகள் ஹாரிபட்டர், அமீஷ், டாவின்சி கோட் புத்தகங்கள் எனது சேமிப்பில் உள்ளது.சில பெயர்கள் விடுபட்டு இருக்கலாம் . வாசிப்பு எனது மூச்சு போல என்னுள் கலத்துள்ள உயிர்த் தோழி.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா