மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestValarmathi - நானும் நாவலும்Post ReplyPost Reply: Valarmathi - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Valarmathi Veluswamy</a> on October 31, 2020, 3:27 PM</div><p style="text-align: left;">மரணித்த என் தந்தைக்கு மடல் எழுதுவது போல் உணர்கிறேன் இதை எழுதும் பொழுது... என்னை புத்தகங்களுக்கு அறிமுகப்படுத்திய புனிதர் அல்லவா...</p> துள்ளித்திரிந்த வயதில் பூந்தளிரையும், அம்புலிமாமா வையும், வளரும் பொழுது மாமேதைகளின் சுயசரிதைகளையும், பருவப்பெண்ணாக நான் உருமாற ரமணிச்சந்திரணையும் என் வாழ்வில் இணைத்தது நீதானே அப்பா... வாழ்க்கை யின் பல வலிகளை புத்தகங்கள் துணையுடன் தாண்டிய நீங்கள் எனக்கும் அது சாலப்பொருந்தும் என எப்படி சரியாக கணித்தீர்கள் அப்பா? என் வலியை தாங்கமுடியாமல் என்னைவிட்டு விண்ணுலகம் சென்றாயே, நீ விட்ட இடத்திலேயே உறைந்து நின்ற என்னை புதைகுழிக்குள் போகாமல் காப்பாற்றியது புத்தகங்கள் அல்லவா அப்பா... ரமணி அம்மாவில் ஆரம்பித்து இன்று முகநூலில் அனைத்து எழுத்தாளர்களையும் விடாமல் பித்துபிடித்தது போல் படிக்கிறேன். படிப்பதை விட்டால் மூச்சுத்திணறி இறந்து விடுவேன் அப்பா. ஏனெனில் ஒரு வழிப்பாதையில் நரகத்திற்கு நடைபயின்று கொண்டிருக்கும் என்னுடன் துணையாக நடந்து கொண்டிருப்பது நீயும் புத்தகங்களும் தானே அப்பா..... </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா