மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestKavi sowmi - நானும் நாவலும்Post ReplyPost Reply: Kavi sowmi - நானும் நாவலும்

Quote from Rajeswari on November 3, 2020, 1:44 PM
நானும் நாவலும்… எல்லோரையும் போலத்தான் அம்புலிமாமா,பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆரம்பித்தது படிக்கும் ஆர்வம் என்னுடைய எட்டாம் வயதில்… மிகவும் அதிகமாக படித்தது என்றால் காமிக்ஸ் அன்றைய நாட்களில் வந்த இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்டி,ஸ்பைடர், செவ்விந்தியர்கள் இவர்களுடைய காமிக்ஸ் என ஒன்று விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. படிப்பின் மீது நிறைய ஆசை இருந்தது நிறைய படிக்க வேண்டும். நல்ல வேலைக்குப் போகவேண்டும் அப்போதைய அன்றைய நாளின் கனவு அதுவாகத்தான் இருந்தது. ஆனால் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கவில்லை. படிப்பு கனவாகவே முடிந்து இருந்தது எட்டாவதோடு என்னுடைய பள்ளிகடவு நிறைவடைந்து இருந்தது. பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்கிற எண்ணம் அப்பாவிற்கு... அதற்கு மேல் படிக்க வைக்கவில்லை.. அழுது அடம்பிடித்து எதுவுமே நடக்கவில்லை. கடைசியாக அப்போதைக்கு மனதில் தோன்றியது படிப்பு என்பது நம்முடைய அறிவை வளர்க்க தானே ஏதோ ஒன்றைப் படிக்கலாம் என்று ஆரம்பித்ததுதான் நாவல் படிக்கும் பழக்கம் … நாவல் மட்டுமல்ல பொதுவாக அனைத்து நியூஸ் பேப்பர்கங்களையும் படிப்பேன். பொது அறிவு வினா-விடை எங்கு வந்தாலும் அதையும் படித்தேன். அப்படியாக தொடர ஆரம்பித்தது தான் என்னுடைய நாவல் படிக்கும் பழக்கம்… அப்போது ராஜேஷ்குமார், சுபா ,பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார் என அனைவருடைய நாவல்களும் வெகு வெகு பிரசித்தம். . டிடெக்டிவ் ஸ்டோரீஸ் மேல தனி கிரேசே உண்டு அந்த சமயத்தில்… புத்தகம் வீட்டிற்கு எளிதாக கிடைத்தது .அப்பா ஒரு பாத்திர வியாபாரி .அதனால கிலோ கணக்குல நிறைய புக்ஸ் இங்கே கிடைக்கும்.எப்பவுமே ஸ்டாக் இருந்துக்கிட்டே இருக்கும் .அதோட தொடர்ச்சியாக ஒவ்வொரு எழுத்தாளர்களாக அறிமுகமாக ஆரம்பித்தாங்க… படிக்கிறதுன்னா என்னோட ஃசாய்ஸ் ரொம்ப பெரிய புத்தகம் தான்... பொன்னியின் செல்வன் சாண்டில்யன் கதைகள் என அப்படியே வளர்ந்து வந்து கொண்டிருந்தது. ரமணி அம்மா,காஞ்சனா ஜெயதிலகர்,அனுராதா ரமணன், சிவசங்கரி தொடங்கி இன்றைய ஆன்லைன் எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் கதைகள் படித்து இருக்கிறேன்.இன்றைக்கு படிக்க இருபத்தி நான்கு மணி நேரம் போதவே போதாது என்கின்ற அளவிற்கு அத்தனை கதைகள் படிக்க கிடைக்கிறது.நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமை படிக்கும் நமக்கு மட்டுமே சொந்தமானது. ஒருவேளை அப்பா என்ன படிக்க வைத்து இருந்தாள்... படிப்பு அதைத் தொடர்ந்து ஒரு வேலை என அந்த வயதில் என்னோட கனவு அந்த இடத்திலேயே நின்று போயிருக்கும் . அது நடக்காததால்… அந்த ஏக்கமோ என்னவோ இன்னமும் புத்தகத்தின் மேல் இருக்கிற ஆர்வம் குறையவே இல்லை .இன்றைக்கு வரைக்கும் புத்தகம் என் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.. திருமணத்திற்குப் பிறகு பிளஸ்-டூ வரைக்கும் எக்ஸாம் எழுதி இருந்தாலும் படிக்கும் ஆர்வம் இந்த நிமிடம் வரை குறையவில்லை .நிச்சயமாக என்னுடைய கடைசி காலம் வரைக்கும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நன்றி.கவிசெளமி.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா