மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Konjam vanjam kondenadiKonjam vanjam kondenadi - 11Post ReplyPost Reply: Konjam vanjam kondenadi - 11

Quote from monisha on October 31, 2020, 9:51 PM

11

நிலைதடுமாறிவிட்டாள்
ஷிவானியை பார்த்ததும் குருவின் மனம் சடாரென வானுயர பறக்க, அது சபரியை பார்த்ததும் படாரேன கீழே தரைத்தட்டியது. சபரிக்கோ வந்ததும் அவன் முகத்திலா தான் விழிக்க வேண்டும் என்று கடுப்பானது. அப்போது குரு, "வாங்க மாமோய்... உள்ளர வாங்க... ஏன் அங்கனயே நிக்கீக?" என்று ஏளனமாய் அழைக்க அவர் ஏற இறங்க அவனை எகத்தாளமாய் பார்த்தார். 'அன்னைக்கு வந்த போது முகத்தை திருப்பிட்டதில்லாம... திமிரா பேசிட்டு... இன்னைக்கு என்னத்துக்கு வாங்கன்னு கூப்பிடுறான்?' என்றவர் குழப்பமாக யோசிக்க, அப்போது ஷிவானி காரை விட்டு வெளியே நின்றிருப்பதைப் பார்த்தவருக்கு பகீரென்றது. இந்த மரியாதை தனக்கானதல்ல. தன் மகளை பார்த்ததினாலோ என்றவர் விபரீதமாய் யோசிக்கும் போதே முருகவேலும் தங்கமும் வாசலுக்கு ஓடிவந்தனர். வேதா இறங்குவதைப் பார்த்து அவர்கள் பூரிப்போடு உள்ளழைக்க, அப்போது குருவின் அப்பத்தா அவனை சீண்டி, "யாருல?" என்று கேட்டு உன்னிப்பாய் கவனிக்கலானார். "எந்த பேத்தியை பார்க்கணும்... பார்க்கணும்னு ஆசைப்பட்டீகளோ அந்த பேத்தி வந்திருக்காக" என்றவன் இறங்கி அவர் காதோரம் சொல்ல, "என்ன குரு சொல்லுத?... சிவானியா வந்திருக்கா?!" என்று ஆவல் ததும்பக் கேட்டு தன் கூரிய விழிகளை அகலவிரித்தார். பேரனும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஷிவானியை பார்த்த தங்கமும் முருகவேலும் ஒரு பாசமலர் காட்சியை அரங்கேற்றினர். பேத்தியின் மீது பாசத்தைப் பொழிந்த அதே நேரம் மருமகனையும் மறவாமல் அவர்கள் மரியாதையாய் வரவேற்க, "எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்பணும்" என்று அவர்களை அலட்சியப்படுத்தியபடி சொன்னார் சபரி. "என்ன மாப்பிள்ளை வாசல் வரைக்கும் வந்துட்டு... உள்ளே வராம..." என்று முருகவேல் தன் வயதையும் பொருட்படுத்தாமல் கெஞ்ச, "எதுக்கு உள்ளே வரணும்... உங்க குடும்பமே சேர்ந்துக்கிட்டு என்னை அவமானப்படுத்தவா... அதுவும் உங்க பிள்ளை அன்னைக்கு என்ன பேச்சு பேசினான்... அப்போ நீங்கெல்லாம் நின்னு வேடிக்கை பார்த்துட்டுதானே இருந்தீங்க" என்க, அவர்கள் இருவரும் மனம் நொந்து போயினர். முருகவேல் குருவின் புறம் திரும்பி, "மாமாகிட்ட மன்னிப்பு கேட்டு அவுகள உள்ளே கூப்பிடு வே" என்க, அந்த வார்த்தைகள் வள்ளியம்மையின் காதில் தெரிந்தோ தெரியாமலோ விழுந்துவிட்டது. "என் பேரன் எதுக்குல மன்னிப்பு கேட்கணும்... அவன் என்னல தப்பு பண்ணான்... சிவானி புள்ளய அவன் கட்டிக்கிற உரிமைதானே... அதைத்தானே கேட்டான்" என்று சொல்லவும் சபரியின் முகம் கடுகடுவென மாற, முருகவேல் சீற்றத்தோடு, "ஏ கிழவி... சத்த நேரம் நீ சும்மா இருக்கியா " என்று வள்ளியம்மையை முறைத்தார். குரு தன் அப்பத்தாவின் கரத்தைப் பற்றி சமிஞ்சையால் அமைதியாய் இருக்கச் சொன்னான். வேதாவோ இருதலைகொள்ளி எறும்பாய் யார் பக்கம் நிற்பதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, இந்தக் காட்சியை புரியாமல் பார்த்திருந்த ஷிவானி முன்வந்து, "டேட் ஸ்டாப் இட்... முதல்ல இருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்காதீங்க... ஜஸ்ட் லீவ் இட்" என்றாள். அவளின் வார்த்தைக்கு மட்டும்தான் சபரியிடம் அதீத மதிப்பு இருந்தது. "சரி வாணிம்மா... நீயும் அம்மாவும் இங்க இரண்டு மூணு நாள் தங்கிட்டு வாங்க... நான் சென்னைக்கு கிளம்பிறேன்" என்றவர் சொல்லி காரில் ஏற, "டேட்... நான் ஒன் வீக் சொன்னேன்" "அவ்வளவு நாளெல்லாம் இந்த வீட்டில உன்னால தாக்குபிடிக்க முடியாது... இங்க எந்த பெஃஸிலிட்டீஸும்(facilities) உனக்குக் கிடைக்காது... டூ டேஸ்ங்கிறதே உனக்கு பாஸிபிள் இல்ல" என்றவர் குத்தலாய் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொள்ள, குருவிற்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. "வாசல் வரைக்கும் வந்துட்டு உள்ளே வராம" என்று தன் மௌனத்தைக் கலைத்து வேதா பேச, அவரின் வார்த்தைக்கு சற்றும் மதிப்பு கொடுக்காமல், "வாணி பத்திரம்... நான் சொன்னதெல்லாம் நினைவு இருக்கட்டும்... எதுவாயிருந்தாலும் போஃன் பண்ணு" என்று சொல்லிவிட்டு தன் மகளிடம் கையசைத்தவர் காரில் ஏறி புறப்பட்டு விட அந்த நொடி முருகவேலிற்கும் தங்கத்திற்கும் மனம் பாரமானது. வேதாவிற்கும் தன் கணவன் செய்கை மனதை வேதனைப்படுத்த... துவண்டு போனவரிடம், "விடுங்க மீ... டேட் பத்தி உங்களுக்குத் தெரியாதா?" என்று சமாதானம் உரைத்தாள் ஷிவானி! எல்லோரும் வாசலிலயே நின்றிருக்க, "வாம்மா... உள்ளர போவோம்" என்று தங்கம் அழைத்துக் கொண்டு வர, பேத்தியின் வருகைக்காக குருவின் ஆதரவோடு நின்றிருந்தார் வள்ளியம்மை. "வா தாயி" என்றவர் அவள் கன்னத்தை வருடிக் கொடுக்க, வேதா ஷிவானியிடம் "எங்க அப்பத்தா... நீ அவங்கள அம்மாட்சின்னு கூப்பிடு" என்று அறிமுகப்படுத்தினார். அவர் அவள் முகவாயை கிள்ளி முத்தமிட்டபடி, "எம்புட்டு அழகா இருக்கா என் பேத்தி" என்க, ஷிவானி நெகிழ்ச்சியாய், "அம்மாச்சி" என்றபடி பாட்டியை அணைத்துக் கொண்டாள். அப்போது முருகவேல் இடைபுகுந்து, "இங்கனயேதான் உங்க பேத்தி ஒரு வாரம் இருக்கப் போறாளே... அப்புறம் என்ன? ஆசை தீர அவளைக் கொஞ்சிக்கலாம்... இப்போ வழியை விட்டு ஒதுங்கி நில்லு ஆத்தா... உள்ளர போணும்" என்றதும் வள்ளியம்மை மீண்டும் ஷிவானி முகவாயை பிடித்துத் தன் கரத்தால் முத்தம் கொடுக்க, "நான் உள்ளே போயிட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் அம்மாச்சி" என்றாள் ஷிவானி. அதன் பிறகு எல்லோரும் வீட்டிற்குள் நுழைய, ஷிவானி சுற்றும் முற்றும் அளவெடுத்தபடியே உள்நுழைந்தாள். அவளை அளவெடுத்தபடியே சிவகுரு நுழைய, அவள் வாசற்படியில் தன் தலையை இடித்துக் கொள்ள போக சட்டென்று குரு தன் கரத்தை வைத்து அவள் சிரம் இடிபடாமல் காத்துவிட்டான். "பாத்து போ... இங்கன நிலப்படியெல்லாம் உசரம் கம்மி... கொஞ்சம் தலையைக் குனிஞ்சுதான் போகோனும்" என்க, அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள், "நிலப்படின்னா?" என்று கேட்க, "வாசப்படியே சொல்லுதேன்" என்றதும், "ஓ!!" என்று புரிந்தது போல் தலையசைத்தாள். இந்த காட்சியை பார்த்த வேதாவிற்கு சுருக்கென்றது. அப்போது அவள் கணவனின் வார்த்தைகளை நினைவுக்கூர்ந்தார். 'உன் தம்பியை வாணிம்மாவை விட்டுத் தள்ளியே இருக்க சொல்லு... அவன் மனசில அவ மேல ஆசை வைச்சிருந்தான்னா அதையெல்லாம் தலைமுழுகிட சொல்லு... எந்த ஜென்மத்திலயும் அவன் எனக்கு மருமகனாக முடியாது' என்று அவர் தனியே அழைத்துக் கண்டிப்பாக சொல்லியிருந்தார். குறுகுறுப்பாக அந்த எண்ணம் மனதை உறுத்தியபடியே வந்தவர் அந்த விசாலமான அறைக்குள் நுழைய முருகவேல் இன்பம் பொங்க, "இந்தா தங்கம்... உன் மவளுக்கும் பேத்திக்கும் ஆசை தீர என்னவெல்லாம் செஞ்சிக் கொடுக்கணுமோ கொடு" என்க, தங்கமும் அதே ஆனந்தத்தோடு ஷிவானியின் புறம் திரும்பி, "ஏன் கண்ணு... உனக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும்" என்று கேட்டதுதான் தாமதம். ஷிவானி, "நாஸிலெமாக் ஸ்டீம் போட்.... இட்லியன் மேக்ரோனி" என்று ஆரம்பித்தவள் விதவிதமாய் புரியாத பெயர்களை அடுக்க, குரு அவள் வரிசை கட்டி சொன்னவற்றைக் கேட்டு எச்சிலை விழுங்கிக் கொண்டான். தங்கமும் முருகவேலும் புரியாமல் திருதிருவென விழிக்க, வேதா எரிச்சலடைந்து தன் மகளின் பின்மண்டையில் ஒன்று போட்டு "நம்மூர் சாப்பாடு பேரே தெரியாதாடி உனக்கு" என்று கேட்க, "மீ... ஆச்சிதானே என்ன பிடிக்கும்னு கேட்டாக" என்று முகம் சுணங்கினாள். "பிள்ளையை ஏன் வையற... அவளுக்கு பிடிச்சதைதானே சொல்லுதா" என்று முருகவேல் பேத்திக்கு பரிந்து கொண்டு வந்தவர் ஷிவானியின் புறம் திரும்பி, "நீ சொன்னதெல்லாம் என்ன தாயி... கடை கண்ணில கிடைக்குமா சொல்லுக... நான் குருவை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுதேன்" என்று அவள் தலையைத் தடவினார். "அதெல்லாம் கிடைக்காது ப்பா... அவதான் லூசாட்டம் உளறிட்டிருக்கானா" என்று வேதா சொல்லும் போதே, "வாய மூடுவே... பிள்ளையை போய் லூசுகீசுன்னு சொல்லிக்கிட்டு" என்று தங்கம் அவர் முறைக்கு பேத்திக்காக பரிந்து பேசிவிட்டு, "நீ அந்த நாஸிக்க... லெமாவை எப்படி செய்றதுன்னு சொல்லு... இந்த ஆச்சி செஞ்சி தர்றேன்" என்றதும் ஷிவானி சிரித்துவிட்டாள். முருகவேல் மனைவியைப் பார்த்து எள்ளிநகைத்தபடி, "அப்படியே செஞ்சிப்புட்டாலும்... இந்த நாற்பது வருஷத்துல உங்க ஆச்சி நாலு குழம்பத்தான் மாத்தி மாத்தி செஞ்சிக்கிட்டு கிடக்காக... அதுலயே உப்பு காரத்தை இன்னி வரைக்கும் ஒழுங்கா போட காணோம்" என்க, தங்கத்தின் முகம் கோபத்தில் கொப்பளிக்க, குருவும் வேதாவும் வாய்க்குள்ளேயே சிரித்தனர். "டோன்ட் வொர்ரி தாத்தா... நான் நிறைய வெரைட்டி ஆஃப் புட்ஸ் சமைப்பேன்... உங்களுக்கு டெய்லிக்கும் ஒரு வெரைட்டி செஞ்சு தர்றேன்" என்று சொல்ல வேதா அதிர்ந்து பார்த்தார். 'இங்க வந்தும் அந்த கொடுமையை அனுபவிக்கணுமா?' அவருடைய மைன்ட் வாய்ஸ். முருகவேல் ஆவல் ததும்ப, "என் பேத்தி எனக்கு சமைச்சு தரப் போறாக... நீ அடுப்பங்கறைய விட்டு போவே அங்கிட்டு... ஒரு நாலு நாளைக்காச்சும்... நான் புதுசா சாப்பிட போகுதேன்" என்று சொல்ல வேதாவிற்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. தங்கம் முகத்தை சுருக்கிக் கொண்டு, "ம்ம்க்கும்... பார்த்தியா வேதா...உங்க ஐயாவுக்கு... என சமையலு சலிச்சு போச்சாம்ல... அவர் பேத்தி கையால சாப்பிடப் போறாகாளாம்" என்க, "நீ ஏன் பொறாமையில பொங்குதே... உனக்கும் சேர்த்துதான சமைச்சு கொடுப்பாக" என்று மனைவிடம் பெருமிதமாய் உரைத்தார் முருகவேல்! "ஒண்ணும் வேண்டாம்... அந்த நாசமா போறதை நீங்களே சாப்பிடுக" என்று தங்கம் முகத்தை திருப்ப, "ஏ கூறுகெட்டவளே... அது நாஸமா போறதில்ல... நாஸிக்கே" என்ற போது சிரிக்கத் தொடங்கிய ஷிவானி ஒருநிலைக்கு மேல் முடியாமல் வயிற்றைப் பிடித்து கொண்டு கண்கலங்கினாள். வேதாவும் குருவும் கூட வாயை மூடிக் கொண்டு சிரிப்பு அடக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, ஷிவானி சிரிக்க அவர்களும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு முருகவேலும் தங்கமும் மனதுலேசாக சிரித்து மகிழ, அந்த இடம் முழுக்க சிரிப்பொலி ஆக்கிரமித்துக் கொண்டது. இறுதியாக எல்லோரும் தங்கள் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொள்ள முருகவேல் தன் பேத்தியிடம், "நீங்க ஊர்க்கு போறதுக்குள்ள சொன்னதெல்லாம் இந்த தாத்தாவுக்கு சமைச்சி தருவீக இல்ல" என்று கேட்டார் 'தானே சொந்த செலவில சூன்யம் வைச்சுக்கிறதுன்னு சொல்லுவாங்களே. அது இதுதான் போல' வேதாவோ தன் தந்தையிடம் ஜாடை மாடையாக வேண்டாமென சொல்ல அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஷிவானி ஆவல் ததும்ப, "அப்போ இன்னைக்கே நான் உங்களுக்கு குக் பண்ணி தரட்டுமா தாத்தா?!" என்று கேட்க, வேதா "அய்யய்யோ" என்று பதறியவர் சட்டென்று தன் குரலைத் தாழ்த்தி, "இன்னைக்கு ஒருநாள் எங்க அம்மா கையால நான் சாப்பிட்டுக்கறேன்டி" என்றார் கெஞ்சலாக! அப்போது தங்கம் மகளை ஆசையாய் பார்த்து, "என்ன வேணும்... சொல்லு புள்ள" என்றுகேட்க, அவர் வெகுஆர்வமாக, "நீங்க மசாலா எல்லாம் கையால அரைச்சு நாட்டு கோழி குழம்பு வைப்பிங்களே... அந்த டேஸ்டுக்கு ஈடே இல்ல... செஞ்சு தருவீகளா?" என்று ஏக்கமாய் கேட்டார். "என்ன கேள்வி கேட்ட... இதோ செஞ்சு கொடுத்திடுதேன்" என்றவர் குருவின் புறம் திரும்பி, "போய் நல்லா வெடைக் கோழியாய் ஒண்ணு பிடிச்சிட்டுவால" என்றதும் அவன் புறவாசல் வழியே செல்லத் தொடங்கினான். "மாம்ஸ் நானும் வர்றேன்" என்று ஷிவானி அவன் பின்னோடு செல்ல வேதாவுக்கு பதட்டமானது. கணவன் சொன்னது அவ்வப்போது நினைவு வந்து அவர் மனதை உலுக்க ஷிவானியின் கள்ளத்தனமில்லாத மனதிற்கு அந்த கவலை எல்லாம் இல்லை. குருவின் அருகாமையில் சென்றபடி, "எங்கே போய் கோழி பிடிக்கப் போறீங்க?" என்றவள் ஆவலோடு கேட்டபடி அவன் பின்னே நடக்க, "கொள்ளை புறத்தில ஆச்சிதான் நிறைய கோழி வளர்க்காகளே... அதுல ஒண்ண பிடிச்சிட்டு வர வேண்டியதுதான்" என்றான். "சூப்பர் நானும் நீங்க எப்படி கோழி பிடிக்க போறீங்கன்னு பார்க்கிறேன்" என்று சொல்லியவளை பார்த்துப் புன்னகைத்து கொண்டவன் முன்னேறி நடக்க, சில நிலப்படிகளைத் தாண்டி அவர்கள் புறவாசலை நோக்கிப் போய் கொண்டிருக்க ஷிவானி ஒவ்வொரு அறையையும் கடக்கும் போதே இது என்ன அது என்னவென்று கேட்டுக் கொண்டே வந்தாள். வரும் வழியில் இருந்த ஏணியை பார்த்தவள், "இதென்ன மாம்ஸ்?" என்று வினவ, "மேல் மச்சிலுக்குப் போற வழி... அதாவாது மாடிக்கு" என்றதும் ஆர்வமாய், "நான் மேலே ஏறி போய் பார்த்துட்டு வர்றேன்" என்று தன் லாங் ஸ்கர்ட்டை தூக்கி பிடித்துக் கொண்டு அவள் ஏறஆரம்பித்தாள். "இறங்குவே... அப்புறம் விழுந்து கிழுந்து வைக்க போற" என்றவன் பதட்டமடைய, "அதெல்லாம் மாட்டேன்" என்று முன்னேறி அவள் ஏறினாள் "சொல்லுற பேச்சைக் கேளும்" என்று குரு எச்சரிக்க அவள் காதிலே வாங்கவில்லை. அப்போது அவள் ஏறி கொண்டிருந்த ஏணி ஆட்டம் கண்டுவிட, "மாம்ஸ் ஆடுது... ஏணியைப் பிடிங்க" என்றவள் பாதி உயரத்தில் நின்று கொண்டு தடுமாறி விழப் போக அவன் பிடிக்க யத்தனித்த போது அவள் அவனை தரையில் சாய்த்து அவன் மீதே விழுந்து வைத்தாள். மொத்தமாய் அவன் தேகத்தின் மேலேயே அவள் சரிந்துகிடக்க "நாங்கதான் சொல்லுதோம்ல... உனக்கென்ன அதிகப்ரசங்கிதனம்" என்றவன் கேட்கும் போது அவள் எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள். "எழுந்திரு புள்ள... யாராச்சும் நம்மல இப்படியே பார்த்து வைக்க போறாக... அப்புறம் யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாக... என்னைத்தான் சாடுவாக" என்றவன் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான். "எழுந்திருக்க முடியல மாம்ஸ்... என் முடி உங்க ஷர்ட் பட்டன்ல மாட்டி வலிக்குது" என்றவள் அவதியுற, குரு சற்று தலையைத் தூக்கி அவள் நிலையை பார்த்தவனுக்கு மனம் சஞ்சலப்பட்டது. அவன் மார்பின் மீதுகிடந்தவள் சிக்கிக் கொண்டு அவள் முடியை பதட்டமாய் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏடாகூடாமாய் சிக்க வைத்து கொண்டிருக்க, வேறுவழியின்றி அவள் இடையை அவன் வளைத்துப் பிடிக்க, "மாம்ஸ் என்ன பண்றீங்க?" என்றவள் நெளிய "சத்த நேரம் சும்மா இரு" என்று அவளை அப்படியே புரட்டி கீழ் தள்ளி அவன் அவள் மேல்புறம் வந்தான். அவனின் மீசையும் கம்பீரமும் அவளுக்குள் அந்த நொடி மிரட்சியை ஏற்படுத்திய அதே சமயம் அவனின் நெருக்கம் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது. அவனுக்கும் கிட்டதட்ட அதே நிலைமைதான். அவளின் வடிவமைப்பான தேகத்தின் மீது அவன் உணர்வுகள் மையல் கொண்டுவிட, அந்த எண்ணங்களை எல்லாம் சிரமப்பட்டு ஓதுக்கி வைத்தவன், தன் சட்டை பட்டனில் மாட்டியிருந்த அவள் முடியை லாவகமாய் எடுத்துவிட்டு எழுந்து நின்றான். அதோடு அவள் எழுந்து கொள்ளவும் அவன் உதவிகரம் நீட்ட, அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல் தானே எழுந்து அமர்ந்து கொண்டாள். அதுவும் சம்மேளம் போட்டு அமர்ந்து தரையை பார்த்தபடி! அவன் தவிப்போடு, "இப்போ நான் என்ன செஞ்சிப்புட்டேன்னு இப்படி என் முகத்தை பார்க்காம உட்கார்ந்திருக்கீக" என்று கேட்கும் போதும் அவள் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். அதை எப்படி சொல்வாள். இதுவரையிலும் உணரப்படாத தன் பெண்மையின் நுண்ணிய உணர்வுகள் அவனின் தொடுகை எழுப்பிவிட்டிருக்க, அவள் சற்று நிலைத்தடுமாறிவிட்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா