மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Konjam vanjam kondenadiKonjam vanjam kondenadi - 12Post ReplyPost Reply: Konjam vanjam kondenadi - 12

Quote from monisha on October 31, 2020, 9:55 PM

12

இதயம் நழுவியது
ஷிவானியின் மனமெல்லாம் படக் படக்கென துடித்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண் நண்பர்களோடு நெருக்கமாய் பேசிப் பழகிய போதும் அவர்கள் எல்லாம் காதலிப்பதாக வழிந்து கொண்டு நிற்கும் போதும் கூட இத்தகைய உணர்வு தோன்றியதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அவள் தந்தைதான். அவளை பத்துவயது பெண் போலவே அவர் நடத்தி நடத்தி அவளுக்கு பருவ வயதென்பதே மறந்து போனது. வேதாவிற்கு அவள் அவ்விதம் சிறுபிள்ளைத்தனமாய் இருப்பது மனதிற்குள் ஒருவித கலக்கத்தை உண்டாக்கியிருந்தது. மகளிடம் அவள் நடை உடை பாவனை மற்றும் எப்படி யாரிடம் பழக வேண்டுமென்பதில் கட்டுப்பாடு விதித்தாலும், சபரி அதையெல்லாம் உடைத்தெறிந்து அவளுக்கு அதீத சுதந்திரத்தை கொடுத்தே பழக்கியிருந்தார். அதே நேரம் ஷிவானியும் அவளைச் சுற்றி நடக்கும் சிறுசிறு விஷயங்களைக் கூட தந்தையிடம் சொல்லத் தவறியதில்லை. இத்தகைய பிணைப்பு லேசாய் உடைப்பட்டது மோகனின் அதிகபிரசங்கித்தனத்தால்தான். ஆனால் அந்த பயம் அர்த்தமற்றது என்பதை அவள் மறுவார்த்தையின்றி மோகனை நிச்சயம் செய்து கொள்ள சம்மதிக்கும் போதே அவருக்குப் புரிந்து போனது. தன் மகள் தன் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டாள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இங்கே மகளை தைரியமாய் விட்டுச்சென்றார். ஆனால் விதியின் எண்ணம் வேறுவிதமாய் இருந்ததே. ஏணி மேலிருந்து தவறி சிவகுரு மீது விழந்த போது கூட அவள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சட்டென்று அவள் எதிர்பாரா வண்ணம் அவன் அவளைக் கட்டிக்கொண்டு புரள மூச்சு ஒரு நொடி நின்று மேலெழும்பியது. கள்ளங்கபடமில்லாத அவள் மனதை சலனப்படுத்த இதை விடவும் ஒரு காட்சி அரங்கேறவேண்டுமா? உண்மையிலேயே அத்தகைய உணர்வை எப்படி சமாளிப்பதென்று புரியாமல் விடுவிடுவென எழுந்தவள் அவனை ஏறிட்டும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள். 'இப்ப என்ன ஆச்சுதுன்னு இந்த சலம்பு சலம்பிட்டு போறா... நாம ஒண்ணுமே பண்ணலயே... இவளாதானே வந்து மேல விழுந்தா' என்று எண்ணி தனக்குள்ளேயே குழம்பியவன் பின் தன் கோழி பிடிக்கும் வேலையை நினைவுப்படுத்தி கொண்டு அந்த வேலையில் ஈடுப்பட்டான். அதற்குள் ஷிவானி நேராய் வேதாவின் அருகில் போய் மௌன சிலையாய் அமர்ந்து கொள்ள, மகளின் முகப்பாவனையை பார்த்து அவர் துணுக்குற்றார். "எதுக்கு இப்படி மூஞ்சி தூக்கி வைச்சிட்டிருக்க?" "......." "உங்க அப்பா ஞாபகம் வந்திருச்சா?" "......." "வேணா ஒரு போஃன் பண்ணி பேசுடி" "......." "ஏன்டி இப்படி ஊமைக்கொட்டான் மாதிரி உட்கார்ந்திட்டிருக்க?" என்று பொறுமையிழுந்து அவள் தலையில் தட்ட, "எதுக்கு மீ அடிச்ச?" என்று தலையை தேய்த்தாள் ஷிவானி. "பின்ன... அடிக்காம... கேட்டுட்டே இருக்கேன் இல்ல... வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்க" என்று வேதா எரிச்சலடைய "இப்ப என்ன உனக்கு தெரியணும்?" என்று ஷிவானி சீறினாள். அந்த சமயம் குரு கோழியை உரித்து எடுத்துக் கொண்டு அடுக்களை நோக்கி போக, அவள் இவனைப் பார்க்க இவன் அவளைப் பார்த்தான். இதை கவனித்த வேதா, 'என்னடா நடக்குது இங்கே... ஏதாச்சும் ஏடாகூடாம நடந்துச்சுன்னா அந்த மனிஷன் என்னை குழி தோண்டி புதைச்சிருவாரே' என்று அச்சமுற்றவர், மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார். ஏதோ அவருக்கு தப்பாய் தோன்ற தன் மகளை அவசரமாய் திருப்பி, "சிவா உன்கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணுச்சா?" என்று கேட்டு வைக்க அவள் அதை எப்படிச் சொல்வதென்று பேந்த பேந்த விழித்தாள். "சொல்லி தொலையேன்டி" என்று வேதா அவளை உலுக்க, "அங்கன ஏன் கேட்கிறீக... என்கிட்ட கேளும்... நான் சொல்லுதேன்" என்று குரு அவள் முன்னாடி வந்து நின்றான். இப்போது வரை குரு வேதாவிடம் சுமூகமாக பேசவில்லை. அவன் தீடீரென்று அப்படி வந்து அவர் முன்னே நிற்கவும் குழப்பமானவர், தன் தம்பியைப் பார்த்து, "நீங்கதான் ரொம்ப ரோஷக்காரவுக... என்கிட்ட பேச மாட்டீகளே... இப்ப மட்டும் என்ன?" என்று சொல்லி பார்வையை திருப்பி கொண்டார் வேதா. "நான் ஏதோ பண்ணிட்டேன்னு உங்க சீமந்த புத்திரிகிட்ட விசாரிச்சிக்கிட்டிருந்தீகளே... அதனாலதான் பேசினனாக்கும்... இல்லாட்டி உங்ககிட்ட பேச எனக்கென்ன கிடக்கு" என்றவன் அலட்சியமாய் உரைக்க, அவன் பேசியதைக் கேட்டு வேதாமுகம் வாடி போனது. இந்த சம்பாஷணையை பார்த்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதற்குள் குரு ஷிவானியைப் பார்த்து, "நான் என்னவே பண்ணேன் உன்னை... உங்க அம்மா என்னை சந்தேகப் படுதாக... ஒழுங்கா பதில் சொல்லுவே" என்று அவன் மிரட்டலாய் கேட்க, "அது... நான் மாடிக்கு போக ஏணி மேல ஏறி" என்றவள் ஆரம்பிக்க அவன் பதட்டமடைந்தான். இவள் எல்லாவற்றையும் சொல்லி தன்னை வம்பில் சிக்க வைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாளோ என்று எண்ணியவன், அவள் பேச்சை இடைமறித்து "உங்க பொண்ணுதான் நான் சொல்லச் சொல்ல கேட்காம ஏணி மேல ஏறி விழுந்திட்டாக... அதுக்கு நான் அவளை வைஞ்சிட்டேன்... அதுக்காகதான் மூஞ்சை தூக்கி வைச்சிட்டிருக்காக... அம்புட்டுதான்" என்றவன் ஷிவானியிடம், "அம்புட்டுதானே?!" என்று அழுத்திக் கேட்க, "எஸ் எஸ்... தட்ஸ் இட் மீ" என்று அவன் சொன்னதை ஆமோதித்ததை போல தலையசைத்தாள். குரு உள்ளிருந்து மூச்சை வெளிவிட்டவன் அங்கே நிற்காமல் நகர்ந்து செல்ல வேதா அவன் பின்னோடு ஓடி, "சிவா" என்றழைத்தார். அவன் திரும்பிப் பாராமலே நிற்க வேதா இறங்கிய தொனியில், "தப்பா எடுத்துக்காதே சிவா... நீயும் ஷிவானியும் பழகுற விஷயம் தெரிஞ்சா அவரை என்னை கொன்னே போட்டிருவாரு... அதுவும் என்கிட்ட அவர் சொல்லியே அனுப்பினாரு... எந்த ஜென்மத்திலயும் உன்னை மருமகனா அவரு ஏத்துக்க மாட்டாராம்" என்க, சட்டென்று திரும்பியவன் எகத்தாளமான பார்வையோடு, "இப்படின்னு அவகளே சொன்னாகளா?" என்று வினவினான். "ஹ்ம்ம்" என்று முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டார் வேதா. "அப்படின்னா இந்த ஜென்மத்தில உம்ம வூட்டுக்காருக்கு நான்தைன் மருமவன்... உம்ம மவளுக்கு நான்தான் புருஷன்" என்றதும் வேதா அதிர்ச்சியில், "என்ன சொல்ற சிவா நீ?" என்றார். "தினை விதைச்சவன் தினை அறுப்பான்... வினை விதைச்சவன் வினை அறுப்பான்... உம்ம வூட்டுக்காரு எதை விதைச்சாகளோ அதை அறுப்பாக" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் அகல... வேதா தலையை பிடித்துக் கொண்டார். இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிக்க போவது தானா அல்லது தன் மகள் ஷிவானியா என்று அவருக்குப் புரியவில்லை. அதே நேரம் இத்தனை வருடத்திற்குப் பிறகு பிறந்த வீட்டிற்கு வந்தும் அந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் இதென்ன புது பிரச்சனை என்று அவஸ்தைப்பட்டார். இது ஒன்று புதிதல்லவே. எல்லா பெண்களுக்கும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது பழகிய விஷயம்தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல. வேதா தவிப்பான மனநிலையில் இருக்க, அப்போது அவரின் ஐஸ்வரியாவின் தாய் அமிர்தவள்ளியின் வருகை அந்த சிந்தனையை மாற்றியிருந்தது. அமிர்தத்தின் கணவன் வெங்கடாச்சலம் வேதாவையும் ஷிவானியையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு புறப்பட, "உங்க அக்கா கோழி அடிச்சி குழம்பு வைச்சிருக்காக... சாப்பிட்டு போவே" என்றார் முருகவேல் மருமகனிடம். "கடையில வேலை கிடக்கு மாமா... விரசா முடிச்சிட்டு வந்திடுதேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். வெங்கடாச்சலம் தங்கத்தின் சொந்த தம்பி. திருமணமாகி அவர்கள் மட்டும் பக்கத்துத் தெருவிலேயே குடியிருந்தனர். ஆதலால் அந்த மருமகனிடம் மட்டும் கொஞ்சம் உரிமையாய் பேசுவார் முருகவேல். அமிர்தவள்ளிக்கும் வெங்கடாசலத்திற்கும் இரு குழந்தைகள். ஐஸ்வர்யா ஏற்கனவே அறிமுகம். அடுத்து அவளின் தம்பி குமரன். பேசியே ஊரை விற்றுவிடுவான். அவர்கள் எல்லோரின் வருகையால் அந்த வீடே களைகட்டியது. அமிர்தவள்ளிக்கு எங்கே ஷிவானிக்குத் தன் தம்பியை மாப்பிள்ளையாக்கி விடுவார்களோ என்று உள்ளூர ஒரு நெருடல் இருந்தாலும் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது. அந்த வீட்டு பெரிய மருமகனின் வீம்பு பற்றிதான் எல்லோருக்குமே தெரியுமே. அந்த நம்பிக்கைதான் அமிர்தத்துக்கு! ஆனால் ஐஸ்வர்யாவுக்கோ திக் திக்கென்றுதான் இருந்தது. ஷிவானியின் நடை உடை பாவனை எல்லாம் உயர்மட்ட ஆட்களின் பாணியில் இருக்க அவளுக்குள் பொறாமையும் பயமும் ஏகபோகமாய் வளர்ந்து கொண்டிருந்தது. ஆதலால் ஷிவானி அவளிடம் ஆசையாய் பேசினாலும் ஐஸ்வர்யா வேண்டா வெறுப்பாய் பெயருக்கென்று இரண்டு வார்த்தை மட்டும் பேசினாள். ஷிவானி குமரனிடம் பேசப் போக அவனிடமும் ஐஸ்வர்யா அதிகம் பேசக் கூடாதென கண்காட்டினாள். இந்த குடும்ப அரசியல் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தங்கம் வைத்த நாட்டுக் கோழி குழம்பின் மணத்தில் எல்லோரும் ஆவலாய் மதிய உணவிற்கு அமர்ந்தனர். அதிலும் ஷிவானிதான் அதீத ஆர்வமாய் அமர்ந்தாள். வாசனை வேறு அவள் மூக்கைத் துளைக்க, தாத்தா பாட்டி சித்தி அவரவர் பங்குக்கு அவளை பலமாக கவனித்தனர். அவள் தப்பித்தால் போதுமென சாப்பிட்டு முடித்து கொல்லைப்புறம் வந்து நின்றாள். அவள் இப்படியும் அப்படியும் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருக்க சிவகுரு அவளைப் பார்த்து, "என்னல ஆச்சுது?" என்று புரியாமல் கேட்க, "மாம்ஸ்... காரம் தாங்கல" என்று நாக்கை பாம்பு போல நீட்டி நீட்டி அவதியுற்றுக் கொண்டிருந்தாள். "தண்ணி குடிக்க வேண்டியதுதானே" "ஹ்ம்ம்ம்... மூணு சொம்பு குடிச்சிட்டேன்... அதுக்கு மேல குடிச்சா வயிறு வெடிச்சிடும்" அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவன், "வேண்டி வேண்டி சாப்பிட்டுட்டு இப்ப காரம் காரம்னு குதிக்கீக" "போங்க மாம்ஸ்... ஆச்சியும் சித்தியும் சாப்பிடு சாப்பிடுன்னு போட்டுக்கிட்டே இருந்தாக" "அங்கனயே சொல்ல வேண்டிதானே" "ஆச்சி கஷ்டப்பட்டு சமைச்சிருக்காங்க... நான் காரம் ஜாஸ்தின்னு சொன்னா மனசு வருத்தப்பட மாட்டாங்களா... அதுவும் ஆசையா பரிமாறும் போது எப்படி வேண்டான்னு சொல்றது" என்றவள் சொல்ல உறவுகளை மதிக்கும் அவளின் குணத்தின் மீது வியப்புற்றவன் அவள் படும் அவஸ்த்தையை பார்த்து, "இதோ வந்திடுதேன்... இங்கனேயே இரு" என்று சொல்லிவிட்டு அகன்றான். மீண்டும் அதே வேகத்தில் திரும்பியவன், "சத்த வாயை திற... சீனி போடறேன்... காரம் அடங்கிடும்" என்று சொல்லி தன் கரத்தில் எடுத்து வந்த சக்கரையை அவள் வாயில் கொட்டினான். சில நொடிகளில் அவள் ஒருவாறு நிதானமடைந்து, "தேங்க்ஸ் மாம்ஸ்... தேங்க்யூ ஸோ மச்" என்றாள். "யாருக்குல உன் தேங்க்ஸ் வேணும்... அதை நீயே வைச்சுக்கோ" என்று கோபமானான். "என்ன மாம்ஸ்? நல்லாதானே பேசிட்டிருந்தீங்க... திடீர்னு என்னாச்சு" "என்னாச்சுதா? ஏணில இருந்து நீ என் மேல விழுந்த கதையை அப்படியே அக்காகிட்ட சொல்லி என்னை வம்பில மாட்டி விட பார்க்குதே" "அது வந்து" "பேசாதே... வர்ற ஆத்திரத்துக்கு ஒண்ணு விட்டேன்னா கன்னம் கதை பாடும்" என்றவன் சீற்றமாய் பேசி கொண்டிருக்க அவள் மிரட்சியாய் பார்த்தாள். "அதுவுமில்லாம நீயா வந்துதான் என் மேல விழுந்த... அப்புறம் எதுக்கு மூஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டே" "ஆமா விழுந்தேன்... நீங்க ஏன் என்னை கட்டிப்பிடிச்சீங்க... அதுவும் கட்டிப்பிடிச்சி கீழே தள்ளி" என்று மேலே பேச முடியாமல் அவள் நாணப்பட்டு தலையைக் கவிழ்ந்து கொள்ள, "என் பொத்தன்ல மாட்டியிருந்த முடியை நீ எடுக்க ரொம்ப சிரமப்பட்ட... அதான் உதவி செய்யலாம்னு" என்று சொன்னவனை ஏற இறங்கப் பார்த்தவள், "அதான் உங்க ஊர்ல உதவியா?!"என்று முறைத்தபடி கேட்டாள். "எங்க ஊர்ல நாங்க அப்படிதான் உதவி செய்வோம்... பாசமா கட்டிக்கிட்டு... உங்க ஊர்ல எப்படி... எட்டி நின்னுதான் உதவுவாகளோ?" என்றவன் கிண்டலாய் சிரித்துக் கொண்டே கேட்க, "நீங்க என்னவோ மனசில வைச்சிக்கிட்டு பேசுறீங்க" என்று அவள் கூர்மையாய் அவனை அளவெடுக்க புன்னகையித்தவன், "வேறென்ன? உன்னைய கட்டிக்கிடலாம்தான்" என்று பளிச்சென்று தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டான். அந்த எண்ணம் அவன் மனதிலிருப்பதை எல்லோரும் அறியும் போது அவள் அறியாளா என்ன? ஆனால் அவன் ஏதோ அக்கா மகள் என்ற உரிமையில் பேசுகிறான் என்பதே எல்லோரின் எண்ணமும். அதைத் தாண்டி அவன் ரொம்பவும் ஆழமாய் உள்ளூர அந்த எண்ணத்தை வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் உட்பட வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் அலட்சியமாய், "ஸாரி மாம்ஸ்... நீங்க நினைக்கிறது கனவில கூட நடக்காது" என்று வெகுசாதாரணமாய் சொல்லிவிட்டு அவள் அவனைக் கடந்து செல்ல, "ஏன்... அந்த வெண்டைக்காயைதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டபடி அவள் பின்னோடு நடந்தான். "அவனைப் பத்தி பேசாதீங்க... நான் ஒண்ணும் அவனைக் கட்டிக்கிட மாட்டேன்... ஐ ஹேட் ஹிம்" "அன்னைக்கு அவனை க்ளோஸ் ப்ரெண்டுன்னெல்லாம் சொன்னீக" "அவன் ரொம்ப ஓவரா பேசிட்டான்... செவுல்லயே ஒண்ணு விட்டேன்" என்று அவள் சொல்லவும் அதிர்ச்சியாய் நின்றவன் "அடிச்சீகளா... எதுக்கு?" என்று கேட்டான். "பின்ன... என்னை வெறுப்பேத்திக்கிட்டே இருந்தான்... அதுவும் இல்லாம உங்களை வேற மரியாதையில்லாம பேசினான்... அதான்" அவனுக்கு ஆச்சர்யம் மிகுந்திட அவளோ முன்னேறி வீட்டிற்குள் நுழைய, அவனும் வேகமெடுத்து அவளோடு உள்ளே நுழைந்து, "அப்போ உன் நிச்சியதார்த்தம்" என்று எதிர்பார்ப்போடு கேட்டான். "கேன்ஸலாயிடுச்சு" என்று சாதரணமாக அவள் சொல்ல, "நிசமாத்தான் சொல்றீகளா?" என்று நம்ப முடியாமல் கேட்டான். "ஹ்ம்ம்" என்று அவள் பேசிக் கொண்டே போய் கவனியாமல் வாசற்படியில் முட்டிக் கொண்டு நெற்றியை பிடிக்க, அவன் பதறிக் கொண்டு அவள் நெற்றியைத் தேய்த்துவிட்டான். "நான்தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல... குனிஞ்சி போன்னு" என்றவன் அக்கறையாய் சொல்லி அழுந்த தேய்க்க, "விடுங்க மாம்ஸ்... வலிக்குது" என்றாள். "சும்மா இருவே... அப்புறம் பணியாரமாட்டம் மண்டை வீங்கிரும்" என்று சொல்லி அவன் தேய்க்க அந்த நொடி அவள் விழிகள் அவனையே பார்க்க நேரிட்டது. அவள் இதயம் அவனிடம் மெல்ல மெல்ல நழுவிக் கொண்டிருக்க, குருவோ அவள் பார்வையில் மதிமயங்கி நெற்றியை தேய்ப்பதை நிறுத்தித் தன் கரத்தை அவள் கன்னத்திற்கு இடம்பெய்ர்த்திருந்தான். இந்த காட்சியை சபரி பார்த்திருந்தால் எந்தளவுக்கு காண்டாகியிருப்பாரோ அந்தளவுக்கு வெறுப்பாக பார்த்திருந்தாள் ஐஸ்வர்யா. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க, "மாம்ம்ம்ம்ம்ம்மா" என்று அவள் குரலை உயர்த்தி அந்த வீடே இரண்டாகும் அளவிற்குக் கத்தி வைத்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா