மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Konjam vanjam kondenadiKonjam vanjam kondeandi - 28Post ReplyPost Reply: Konjam vanjam kondeandi - 28

Quote from monisha on October 31, 2020, 10:25 PM

28

பெரும் சங்கடம்
ஷிவானி குருவின் அகண்ட மார்புக்குள் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருக்க, குருவோ முன்னமே விழித்துக் கொண்டிருந்தான் அவளை இறுக்கமாய் அணைத்தபடி! அந்த அறையில் வெளிச்சம் மெல்ல மெல்ல கூடிக் கொண்டே வர, அதனை உணர்ந்தாலும் அவளை விட்டு விலகவே அவனுக்கு மனம் வரவில்லை. ஆசையாய் அவள் நெற்றியை வருடிக் கொடுத்து அவளின் தெளிந்த முகத்தை ஆழ்ந்து ரசித்தவனுக்கு இன்னும் அவள் மீதான தாபம் தீரவேயில்லை. அவளின் முகத்தை அவன் முத்தத்தால் ஆராதித்துக் கொண்டிருக்க, அவளோ எதையும் பொருட்படுத்தாமல் உறக்கமே அவள் தலையாய கடமையென அதில் மும்முரமாய் இருந்தாள். அவனின் எந்த செயலிற்கும் எதிர்ப்பும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் உணர்ச்சியற்றுக் கிடந்தவளை விழித்துக் கொள்ள செய்ய அவன் இன்னும் தீவிரமாய் தன் சரச லீலைகளைப் புரிய… அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை மீட்டுக் கொண்டவள் "எனக்கு தூக்கம் தூக்கமா வருது... டிஸ்டர்ப் பண்ணாத மீ" என்று அரைகுறையாய் உளறிவிட்டு மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர, "சீ... நான் உன் புருஷன்டி" என்றவன் அவள் காதுமடலை உரசினான். லேசான அதிர்ச்சியோடு சிரமப்பட்டுக் கண்களை திறந்தவள், "மாம்ஸ் நீங்களா?" என்று போதையிலேயே கேட்டுவிட்டு மீண்டும் தன் உறங்கும் வேலையைத் தொடர்ந்தாள். "திரும்பியும் தூங்கிப்புட்டாளே... இவளை" என்றவன் கொஞ்சம் குரூரமாய் அவளை ஆராய்ந்து பார்த்து அவள் மெல்லிய கன்னத்தைக் கடித்து வைத்தான். "ஆ......" என்று பெரும் அலறலோடு எழுந்து அமர்ந்தவள் தன் கன்னங்களைத் தேய்க்க, குரு தான் நினைத்ததை சாதித்துவிட்ட பெருமிதத்தில் தன் கரங்களைத் தலைக்குக் கொடுத்தபடி படுத்து கொண்டு சிரித்தான். அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு சராமாரியாய் கோபம் ஏற, "ஆர் யூ மேட் ஆர் வாட்... ஏன் இப்படி பண்ணிங்க?" என்று கேட்க, "மாமன் ஆசையா முத்தம் கொடுக்கேன்... நீ என்னவோ தூங்கிட்டு கிடக்க... அதான் கடிச்சு வைச்சேன்" என்றவன் புன்முறுவலோடு சொல்லவும் அவள் முகம் கோபத் தொனியில் இருந்து யோசனைகுறியாய் மாறியது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு சிந்திக்கத் தொடங்கினாள். 'என்னாச்சு... நைட்டிரஸ் எடுக்க பீரோவைத் திறந்தோம்... ஏதோ தலையில விழுந்துச்சு... அப்புறம் போட்டோ பார்தோம்' என்றவள் தன் நினைவுகளை அணிவகுத்துக் கொண்டிருக்க, குரு சுதாரித்துக் கொண்டான். 'ரொம்ப யோசிக்கிறாளே... இராத்திரி செஞ்ச வேலைக்கு நம்மல செமத்தயா வாங்க போறாளோ?' என்று எண்ணியவன் வேகமாய் படுக்கையில் இருந்து எழுந்து ஓசைப்படாமல் வெளியே செல்ல பார்க்க, "மாம்ஸ் அங்கேயே நில்லுங்க" என்றாள். அவன் அவளைக் கவனியாதவன் போல, "இருல... நேரமாயாயிடுச்சு... குளிச்சிட்டு வந்துடுதேன்" என்றவன் திரும்பி செல்ல அவள் எரிச்சலோடு, "தப்பிக்கப் பார்க்காதீங்க... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லிட்டுப் போங்க" என்றாள். அவளை யோசனைகுறியாய் பார்த்தவன், "என்னல கேட்க போறவ?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க, "நீங்க நைட் என்கிட்ட என்ன சொன்னீங்க?" என்று அழுகையும் கோபமாய் முறைத்தாள். "என்ன சொன்னேன்?" அலட்சியமாய் அவன் கேட்க, "என் கிட்ட கூட வரமாட்டேன்னு சொன்னீங்க இல்ல" என்றவள் கேட்க, "நானாம்ல உன் கிட்ட வந்தேன்... நீதான்ம்ல வந்த... போட்டோவை பார்க்கிறேன் பேர்வழின்னு என்னைய இடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்த" என்றவன் சமாளிக்க அவள் குழப்பமானாள். "நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்ல... நான் போட்டோதான் பார்த்தேன்" என்றவள் வெகுளித்தனமாய் சொல்ல, "நீ போட்டோவைப் பார்த்த... ஆனா நான் உன்னையேதாம்ல பார்த்தேன்... அதுவும் சேலையில சும்மா செதுக்கின சிலை கணக்கா இருந்தீகளா... பிறவு எனக்கு தூக்கமா வரும்" என்றவன் தன் மனவுணர்களை விரிவாக்கம் செய்ய அவள் அத்தனைக் கடுப்போடு, படுக்கையில் கிடந்த தலையணை எல்லாம் அவன் மீது வீச அவன் புன்னகை மாறாமல் அவளின் தாக்குதலை ஏற்றுக் கொண்டு நின்றான். அவளோ இருந்த எல்லா தலையணையையும் தூக்கியெறிந்துவிட்டு பிறகு வேறெதாவது கிடைக்கபெறுகிறதா என்று பார்வையை சுழற்ற அவன் புன்னகை ததும்ப, "ஏம்ல அந்த போர்வையை மட்டும் விட்டு வைச்சிருக்கவ... அதையும் தூக்கி வீசு" என்க, அதுதான் இப்போதைக்கு அவளின் ஆபத்பாந்தவன். அதையும் தூக்கியெறிந்துவிட்டால் தன் நிலைமை என்னவென்று யோசித்தவள் இறுக்கமாய் அந்த போர்வையை தன் மேலே சுற்றிக் கொண்டு, அவனைப் பார்க்க பிடிக்காமல் படுக்கையில் அப்படியே தன் கால்களை மடக்கி முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் செய்கையைப் பார்த்து பொறுமையாய் அவளருகில் வந்து அமர்ந்தவன், "ஷிவானி" என்றழைக்க அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் திருப்பிக் கொண்டாள். "ஷிவானி கொஞ்சம் என்னைய பாரு" என்றவன் சொல்ல, "மாட்டேன்" என்றாள். "இராத்திரியெல்லாம் சும்மா கிடந்திட்டு இப்ப எதுக்குல கோபப்படுத... அம்புட்டு கோபம் இருக்கிறவ அப்பவே காண்பிச்சிருக்க வேண்டியதுதானே... அதுவும் எல்லாம் முடிஞ்ச பிறவும் என்னைய கட்டிப்பிடிச்சி தூங்கிட்டிருந்த... இப்போ என்னத்துக்குல சலம்புத" அவன் படபடவென கோபமாய் பொறிந்து தள்ள அவள் தலையை நிமிர்த்தி அவனை ஏறிட்டுப் பார்க்க அவள் விழியில் நீர் வழிந்தோடியிருந்தது. கண்களெல்லாம் சிவந்திருக்க, "என்னடி?" என்று பதறியபடி அவள் அருகாமையில் சென்று அவளை அணைத்துக் கொண்டு கண்ணீரைத் துடைக்க, அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள், "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... நேத்து நைட் என்னால உங்களை ரெஸிஸ்ட் பண்ண முடியல...டு பீ பிரேஃங்... இது இப்படிதான்னு ஐம் நாட் அவேர்" என்று குரல் தழுதழுக்க உரைத்தாள். அவன் சிறு புன்னகையோடு, "இதெல்லாம் கணவன் மனைவிக்குள்ள நடக்கிறதுதான்... தாம்பத்யம் நடந்தாதான் அந்நியோன்யம் வரும்... அப்பதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி நடந்துக்கிட முடியும்டி என் செல்லப் பொண்டாட்டி" என்றவன் அவள் கன்னத்தைக் கிள்ள, "இதைதான் சித்தி நைட் சொன்னாங்களோ?" என்றவள் சந்தேகித்துக் கேட்டாள். "சொல்லியிருப்பாக... ஆனா உனக்கு விளங்கியிருக்காது" என்றவன் சிரித்துக் கொண்டே சொல்ல அவள் முகம் சுணங்கினாள். "போங்க மாம்ஸ்... எனக்கு என்ன... இதைபத்தியெல்லாம் முன்ன பின்ன தெரியுமா என்ன?" "ஆமாஆமா... இது மட்டும்தான் உமக்கு விளங்கல... மத்த எல்லாம் ரொம்பத் தெளிவா விளங்கிடும்!" என்று சொல்லி அவன் எள்ளிநகையாட, அவனை அவள் அத்தனைக் கோபமாக முறைத்தாள். ஆனால் அவனோ சற்று அசராமல் விஷமமான புன்னகையோடு, "ஏய்! அந்த திராட்சை கண்ணால என்னை அப்படி பார்க்காதடி... மனுஷனுக்கு மூடேறுது" என்று சொல்ல அவள் நாணப்பட்டு அவனைத் தள்ளிவிட்டு விலக முற்பட்டாள். அவனோ அவளை விடாமல் மீண்டும் படுக்கையில் சாய்த்துத் தன் சரசத்தைப் புரிய அவள் அவனைத் தடுக்க எத்தனித்தாலும் அதை அவள் முழுமையாய் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டிலுள்ளவர்களே தங்கள் பொறுமையிழந்து கதவைத் தட்டும் வரை அவர்களாய் கதவைத் திறக்கும் எண்ணமேயில்லை. அந்தளவுக்கு இருவரும் அந்த புது அனுபவத்தில் லயித்து ஒன்றியிருந்தனர். அதே நேரம் இரண்டு நாட்களாய் அந்த வீட்டில் உள்ள மற்ற யாரைப் பற்றியும் கவலையில்லாமல் அதிகம் தனிமையையும் நெருக்கத்தையும் மட்டுமே நாடியிருக்க அவர்களின் அந்த அந்நியோன்யத்தைப் பார்த்து எல்லோரும் ஆனந்தப்பட்டுக் கொண்டனர். வேதாவிற்கும் மரகதத்திற்கும் ஷிவானியின் மாற்றம் ஆச்சர்யமே. தயா கிண்டலும் கேலியுமாய் இருக்க எல்லாமே குதூகலமாகவே இருந்தது. ஆனால் இதில் லேசாய் மனமுடைந்தவர் சபரிதான். மற்ற தந்தை மகள் உறவை விடவும் அவர் மகளுடனான உறவு முற்றிலும் வித்தியாசமானது. இன்னும் நெருக்கமானது. அத்தனை நெருக்கமாய் இருந்துவிட்டு சட்டென்று இப்போது ஏற்பட்ட அந்த இடைவெளி அவரைப் பெரிதாய் பாதித்திருந்தது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்குண்ட முள் போல அவர் மனநிலை இருக்க, குருவை அவரால் மருமகன் என்ற உறவோடு பார்க்க முடியவில்லை. ஒரு வில்லனாய் தன் மகளை தன்னிடம் இருந்து பிரித்த ராட்சசனாய் பார்த்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த மனநிலை தவறென்று அவருக்கே புரிந்தாலும் அதனை அவரால் தவிர்க்க முடியவில்லை. மலேசியா புறப்படவும் அவரால் அப்போதைக்கு முடியுமென்று தோன்றவில்லை. தன் மகளை விட்டு அத்தனை தூரம் எப்படிச் செல்ல போகிறோம். எப்படி அவளில்லாமல் அங்கே தான் இருக்கப் போகிறோம் என்ற அதிபயங்கரமான கேள்வி அவரைப் பெரிதுமாய் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. நிச்சயம் அதை செய்ய அவருக்கு அதீத துணிச்சல் வேண்டும். ஆனால் இப்போதைக்கு அத்தகைய துணிவு அவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆதலாலேயே விருப்பமேயில்லாமல் தன் மகளை மட்டும் கருத்தில் கொண்டு அங்கே தங்கியிருந்தார் சபரி. இப்போது அதுவே அவரைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. குரு ஷிவானியைத் தனிமையில் விடுவதே இல்லையே! அவள் குளியலறைக்கு போகும் போதும் கூட! அங்கேயும் பெரிய ரணகளமே நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தது. "அய்யோ மாம்ஸ்... நான் குளிக்கணும் ... கொஞ்சம் வெளியே போங்க" என்றவள் அவஸ்த்தையோடு சொல்ல அவனா கேட்பான். அவளை இழுத்து அணைத்துக் கொண்டு "எனக்கும்தாம்ல குளிக்கணும்" என்க, "அய்யோ விடுங்க மாம்ஸ்" என்றவள் தவிக்க, "உம்ஹும்... இரண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்" என்றான் அவள் மீது தன் இதழ்களால் ஊர்ந்து கொண்டே! "அதெல்லாம் நான் ஒத்துக்கமாட்டேன்" என்றவள் சொல்லிக் கொண்டே அவனை விலக்கி விடப் பார்க்க அவனோ இன்னும் இன்னும் அவளை நெருங்கி அணைக்க அவளுக்கு மூச்சு மூட்டிக் கொண்டிருந்தது. அந்த சமயம் தயா, "குரு" என்று அழைக்கும் சத்தம் கேட்டது குளியலறைக்கு வெளியே! குரு பூகம்பம் வந்ததைப் போன்று பதறிக் கொண்டு ஷிவானியை விட்டு விலக, அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். "குரு குளிக்கிறியோ?!" என்று அப்போது கதவருகே தயா சந்தேகமாய் கேட்க குரு தான் உள்ளே இருப்பதை சொல்லிவிடக் கூடாது என்று ஷிவானியிடம் சமிஞ்சை செய்தான். "என்ன சித்தப்பா ?" என்று குரல்கொடுத்தாள். தயா உடனே, "அய்யய்யோ சாரிம்மா... குரு இங்கனதான் இருக்கான்னு நினைச்சிப்புட்டு" என்றவர் பதற, "அவர் இங்கேதான் இருக்காரு சித்தப்பா" என்று அவனைப் போட்டுக் கொடுத்துவிட்டாள் ஷிவானி. குரு கடுப்போடு தலையில் அடித்துக் கொண்டு அவளை முறைக்க, அதற்குள் தயா வாசலில் நின்று, "குரு...இப்போதைக்கு வெளியே வருவியா எப்படி?" என்று கேட்டான். "தோ வர்றேன் மாமா" என்று கடுகடுத்த முகத்தோடு பதலளித்தவன், "போட்டாம்ல கொடுக்கிற... உன்னைய" என்றவன் போகும் அவசரத்திலும் அவளை இழுத்து அணைத்து கன்னத்தைக் கடித்து வைத்தான். "ஆ" என்றவள் வலியால் அலற அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான். அங்கே தயாவைப் பார்த்து குரு அசடு வழிய, "அந்த புள்ளய தனியா குளிக்கக் கூட விட மாட்டியால" என்று கேட்டான் தயா. "போ மாமா... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... ஷிவானிதான் உள்ளற பல்லி இருந்துதுன்னு துரத்திவிட கூப்பிட்டா" என்றவன் கோர்வையாய் பொய்யுரைக்க, "அதெப்படி மச்சான்? கதவை அடைச்சிப்புட்டு பல்லியைத் துரத்தின" தயா வியப்பாய் கேட்க, 'ஆமா அதெப்படி?' என்று குருவே ஆழமாய் யோசிக்கலானான் "மொச புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாதால... என்கிட்டியே புளுகுதியா?!" என்று தயா முறைப்பாய் கேட்க, "மாமா... நீ கொஞ்சம் காலைக் காட்டேன்" என்றான் குரு. "ஏம்ல... காலை வாரி விடப்போறியோ?" என்று தயா கேட்கவும் "இல்ல மாமா... பஞ்ச் பஞ்சா பழமொழி பேசுற உன் அறிவைப் பார்த்து நான் அப்படியே வியக்கேன்" என்று குரு சொல்லி மெச்சிய பார்வை பார்த்தான். "என்னைய புகழ்ந்து அப்படியே பேச்சை மாத்திடலாம்னு பார்க்கிறியோ? தெரியும்ல உன்னைய பத்தி" "அய்யோ விடேன் மாமா... நீ பாட்டுக்கு எல்லோர்கிட்டயும் இந்த விஷயத்தை உளறி வைக்காதே" என்றதும் தயா அவன் தோளைத் தட்டிக் கொடுத்து, "இதையெல்லாம் போய் சொல்லிட்டு கிடப்பாங்களா? அதெல்லாம் விடு... நீ பேசாம எங்கனயாவது வெளியூருக்கு அந்த புள்ளய கூட்டிட்டுப் போய் நாலு நாள் இருந்துட்டு வா" என்றான் தயா. "அதெல்லாம் சிரமம் மாமா.. வரிசையாய் மூணு மாசத்துக்கு ஆர்டர் எடுத்து வைச்சிருக்கேன்... அதையெல்லாம் யார் பார்ப்பா... இன்னைக்காச்சும் நான் மெஸ்ஸுக்கு போய் ஆகணும்... நாளைக்கு வேற இரண்டு ஆர்டர் இருக்கு... சமையல் சாமானெல்லாம் வாங்கிப் போடணும்" "என்னல இப்படி சொல்லுத... கல்யாணமாகி ஒரு வாரமாச்சும் புள்ள கூட சந்தோஷமா இருப்பியா" "எனக்கென்ன கல்யாணம்னு முன்கூட்டியே தெரிஞ்சா நடந்தது... எல்லாம் அதுவே நடந்து போச்சுது... போகணும்னு எனக்கு மட்டும் வெளிப்பா என்ன?" என்றவன் சலித்துக் கொண்டிருக்க, "சரி... என்னவோ பார்த்து பண்ணு... நானும் ஊருக்கு கிளம்பிடுதேன்" என்றதும் அதிர்ச்சியாவன், "அதெல்லாம் முடியாது... ஒரு வாரமாச்சும் இருந்துட்டுதான் போணும்" என்றான் குரு தீர்க்கமாக! "புரிஞ்சுக்கோ குரு... நானும் போய் பொழப்பைப் பார்க்க வேணாமா?!" "அதெல்லாம் ஒருவாரம் கழிச்சிப் பார்த்துக்கிடலாம்" "சொல்றதைக் கேளுவ... நான் இப்போ கிளம்புதேன்... பேசாம நீ ஷிவானியைக் கூட்டிட்டு நம்மூர் பக்கம் வந்துட்டு போ... ஆள் அரவமே இருக்காது... தோப்பு துறவுன்னு எல்லாத்தையும் சுத்தி காண்பிச்சிட்டு சந்தோஷமா இருப்ப... வேலை கீலை ஏதாச்சும் இருந்தா சுப்புவை பார்த்துக்கிட சொல்லு" என்க, குருவின் முகம் சுருங்கிப் போனது. "ஒரு இரண்டு நாளாச்சும் இரு மாமா" "ப்ச் அடுத்த தடவை வரும் போது கண்டிப்பா இருக்கேன்" என்று தயா அவனை ஒருவாறு சமாளிக்க, "போ மாமா... நீ இப்படிதான் சொல்லுவ" என்று குரு தன் மாமனிடம் சிறுபிள்ளைத்தனமாய் கோபித்துக் கொள்ள, தயாவிற்குமே அவன் வார்த்தையை மீறுவது சங்கடமாய் இருந்தாலும் புறப்பட வேண்டிய அவசியம் இருந்ததால் அவனும் தன் குடும்பத்தோடு புறப்பட்டான். மரகதம் புறப்படுவதற்கு முன்னதாக நிறைய அறிவுரைகளை ஷிவானிக்கு வழங்க, அவையெல்லாம் எந்தளவுக்கு அவள் மூளைக்கு எட்டியதோ தெரியாது. ஆனால் அவர்களை வழியனுப்பும் போது ரொம்பவும் மனமுடைந்து போனாள். வீடே வெறிச்சோடி போனது போல இருந்தது. குரு அவர்களை வழியனுப்பிவிட்டு அவசர அவசரமாய் குளித்து முடித்து மெஸ்ஸிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருக்க, ஷிவானி சாவகாசமாய் செய்தித்தாளை புரட்ட ஆரம்பித்தாள். அறிவுப் பூர்வமாய் படிக்காவிட்டாலும் விளையாட்டு செய்திகளை ஆர்வமாய் படிப்பாள். சபரியும் மகள் அருகில்தான் அமர்ந்திருக்க இருவரும் அன்றுதான் ரொம்ப நாள் கழித்து இயல்பாய் பேசிக் கொண்டிருந்தனர். அதுவும் செய்திதாளில் உள்ள விளையாட்டு செய்திகளைப் பற்றிய தீவிர அலசல். அது எப்போதும் அவர்களுக்கு இடையில் நிகழ்வதுதான். சபரிக்கு அந்த உரையாடலில் அத்தனை ஆனந்தம். ஆனால் அதனை நீடிக்கவிடாமல், "ஷிவானி" என்று குரு அறைக்குள் இருந்தபடி அழைக்க, "என்ன மாம்ஸ்?" என்றவள் சோபாவில் அமர்ந்தபடியே கேட்டாள். "இங்கன வா... சொல்லுதேன்" என்றவன் உள்ளிருந்து அழைக்க சலிப்போடு அந்த செய்தித் தாளை கீழே வைத்தவள், "ஜஸ்ட் எ மினிட் டேட்... தோ வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள். சபரிக்கு பற்றிக் கொண்டு எரிந்தது. தன் மகளிடம் பேசுவதற்குக் கொஞ்ச நேரம் கூட விடமாட்டானா என்று கடுப்பேறியது அவருக்கு. அதே நேரம் ஷிவானி அறைக்குள் செல்ல குரு கதவை மூடிவிட்டு அவளைப் பின்னோடு அணைத்து கொண்டான். "எம்புட்டு திமிருந்தா என்னைய போட்டுக் கொடுத்திருப்ப" என்றவன் அவள் காதுமடலில் உரசிக் கொண்டே கேட்க அவள் நெளிந்தபடி, "நீங்க மட்டும் என்னைக் குளிக்க விடாம டார்ச்சர் பண்ணா?"என்று கேட்டு அவனிடமிருந்து விலகி வர முற்பட அவன் இன்னும் நெருக்கமாய் அணைத்துக் கொண்டு, "அப்படிதான்டி செய்யுவேன்... என்னல பண்ணுவ?" என்றவன் சொல்ல, "நான் மலேசியா போயிடுவேன்" என்றாள். மறுகணமே அவன் என்ன நினைத்தானோ?! அப்படியே அவளை விட்டுப் பிரிந்து நின்றான். அவன் முகமாற்றத்தை பார்த்து அவள் துணுக்குற்று மௌனமாய் அவனைப் பார்க்க, அவன் நெற்றியை தேய்த்துக் கொண்டு கண்களை மூடித் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். "என்னாச்சு மாம்ஸ்?" அவள் புரியாமல் கேட்க, "ஒண்ணுமில்ல நீ போ" என்றவன் இறுக்கமாய் உரைத்தான் "சாரி மாம்ஸ்... தெரியாம" என்றவள் சொல்ல, "போடி" என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு! அவள் யோசனையோடு அறையை விட்டு வெளியேறி மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இப்போது அவளால் செய்தித்தாளில் கவனம் செலுத்த முடியவில்லை. தான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றவள் தன்னைத்தானே நொந்து கொள்ள, "என்ன வாணிம்மா?" என்று மகளின் முகபாவத்தை பார்த்து கவலையுற்று அவர் கேட்க, "நத்திங் டேட்" என்றாள். அவள் உதடுதான் அப்படி சொன்னது. ஆனால் அவள் முகத்தில் அதற்கான தெளிவு இல்லை. அந்த நொடி வேதா தன் கணவனுக்கு காலை உணவு எடுத்து வர அதனை தன் மகளின் கரத்தில் திணித்தவர், "இந்தா வாணிம்மா நீ சாப்பிடு" என்றுரைத்தார். "இல்ல டேட்... நீங்க" என்றவள் சொல்லக் கட்டாயபடுத்தி அவளுக்கு அவர் ஊட்டிவிட இந்தக் காட்சியை சற்று விசித்திரமாய் பார்த்து தன் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு குரு கடந்து சென்று நேராய் அடுக்களைக்குள் நுழைந்து, "ம்மோவ்... எனக்கும் தோசை" என்றவன் சமையல் மேடை மீது ஏறி அமர வேதா அவனைப் பார்த்து சிரித்தபடி, "என்னடா குரங்கு மாதிரி... வெளியே போய் ஹாலில் உட்காரு... நான் எடுத்துட்டு வர்றேன்" என்றார். "அங்கன உம்ம மவளும், வீட்டுக்காரரும் ஓட்டுற பாசமலர் படத்தை என்னால பார்க்க முடியல... நான் இங்கனயே உட்கார்ந்து சாப்பிட்டுகிடுதேன்" என்க, தங்கமும் வேதாவும் ஓருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு தோசையை அவனுக்கு தட்டில் பரிமாற, அவன் சாப்பிட்டுக் கொண்டே, "அக்கா... நான் ஷிவானியை வெளியேக் கூட்டிட்டு போகட்டுமா?!" என்று தயக்கமாய் கேட்க, "என்னடா கேள்வி... கூட்டிட்டுப் போடா" என்றார் வேதா. தங்கமோ, "பார்த்து பத்திரமா கூட்டிட்டு போல" என்க, அவனும் தலையசைத்துவிட்டு சாப்பிட்டு முடித்த கையோடு வெளியே வர, அங்கே இன்னும் ஷிவானி தன் தந்தையோடு முடிந்தும் முடியாமலும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவன் அவளிடம் மிரட்டலாய் கண்ணசைத்து சமிஞ்சையால் அறைக்குள் வரச் சொன்னான். அவன் கண்ணாலயே பேசினாலும் அது அவளுக்குப் புரிய வேண்டுமே! அவள் குழப்பமாய் உற்றுப் பார்க்க அவன் மீண்டும் உள்ளே வர சொல்லி காற்றிலேயே படம் வரைய அதனை சபரி கவனித்துவிட்டார். "என்ன விஷயம் குரு?" என்று சபரி கேட்க அவன் முகத்தை சுருக்கிக் கொண்டு, "அது... ஷிவானியை கூப்பிட்டேன்" என்றதும் அவள் ஆர்வமாய் அவனை ஏறிட்டாள். "அவ சாப்பிட்டுட்டு வருவா" அவளுக்கு பதிலாய் சபரியே பதில் சொல்ல அவன் கடுப்போடு அறைக்குள் சென்றுவிட்டான். அவளோ அவன் அழைப்பிற்காக காத்திருந்தவள் போல, "டேட் எனக்குப் போதும்" என்றவள் அவசரமாய் தன் கரத்தை அலம்பிக் கொண்டு ஓடிவிட சபரி மனதிற்குள்ளேயே மருகிக் கொண்டார். ஷிவானி கதவருகே வந்து நின்று, "என்ன மாம்ஸ்?" என்றவள் கேட்கும் போது அவன் படுக்கையில் அமர்ந்தபடி, "என் வாட்ச்சைக் காணோம்... நீ பார்த்தியாம்ல" என்றவன் கேட்க அவள் முகம் சுணங்க, "இதுக்குதான் கூப்பிட்டீங்களா?!" என்றாள் சலிப்போடு! "வேறெதுக்குன்னு நினைச்சவ" என்று கேட்டு உள்ளூர புன்னகையித்துக் கொண்டான். "நான் எதுவும் நினைக்கல" "சரி அதை விடுல... வாட்ச்சை தேடிக் கொடு" என்றவன் சொல்ல, "உங்க வாட்ச்... நீங்க தேடுங்க... நான் ஏன் தேடணும்?" எகத்தாளமாய் கேட்டாள். அவளைக் கோபமாய் முறைத்தவன், "அப்போ தேடி தர மாட்டீகளோ?!" என்றவன் கேட்டுக் கொண்டு அவளை கல்மிஷமாய் பார்த்துப் பின்னோடு இருந்த அறைக் கதவை மூடியபடி அவளை நெருங்க, "சரி சரி நான் தேடித் தர்றேன்" என்றாள். அவன் புன்னகையோடு ஓதுங்கி நிற்க அவள் பொருள் வைக்கும் இடங்களை எல்லாம் அவள் அலசி ஆராய, அவனோ அந்த நொடி அவளைதான் தன் விழி கொண்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். "எங்க மாம்ஸ் வைச்சீங்க?" அவள் தேடி கொண்டே கேட்க, "இங்கனதான் மேசை மேல வைச்சேன்... நீ பார்க்கலியா?!" "ப்ச் நான் பார்க்கலியே" என்றதும் "சோனாடா கம்பெனி... பிரௌன் கலர் ஸ்டேப் வாட்ச்" என்றவன் அடையாளம் சொல்ல அவள் நகத்தைக் கடித்து கொண்டு தீவிரமாய் யோசித்தவள் சட்டென்று ஏதோ நினைவுவந்தவளாய் அவனை விழி இடுங்கப் பார்த்தாள். "ஏம்ல அப்படி பார்க்குத?" என்றவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் பேக்கெட்டில் இருந்த வாட்ச்சை அவள் கைப்பற்ற அவனோ அவள் இடையைப் பற்றி தன்னோடு இழுத்துக் கொண்டான். அவள் சிலர்ப்படைய அவளைத் தன்னோடு இழுத்து அணைத்து கொண்டு அவள் முகத்தை ஏக்கமாய் பார்த்தவன், "என்னைய விட்டுட்டு மலேசியா போயிடுவன்னு எப்படிறி சொல்லுவ?" தவிப்பாய் கேட்டவன் அவள் முன்னங்கழுத்தில் மெல்ல இறங்கி முத்தமிட சற்றே கிறங்கிப் போனவள், "ஐம் சாரி... இனிமே சொல்லமாட்டேன்" என்று சொல்லும் போதே அவளை அவன் படுக்கையில் கிடத்தினான். "மாம்ஸ் மெஸ்ஸுக்கு போக வேண்டாமா?" என்றவள் போதையுண்டவள் போல் கிறக்கமாய் கேட்க, "உன்னைய விட்டுட்டா?!" என்றான் தாபத்தோடு! அப்போது, "வாணிம்மா" என்ற சபரியின் குரல் இருவரையும் மீட்டெடுக்க அவள் பதட்டமாய் உடையை சரி செய்து கொண்டு, "யா கம்மிங் டேட்" என்று செல்ல பார்த்தவளின் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டான். "கையை விடுங்க மாம்ஸ்... நான் போகணும்" "உங்க அப்பாரு கூப்பிட்டா உடனே நீ என்னைய விட்டு போயிடுவல" சூட்சமமாய் அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல், "அவர் கூப்பிட்டா போய்தானே ஆகணும்" என்றவள் சொல்லிவிட்டு வாசல் புறம் செல்ல எதையோ பறிகொடுத்தவன் போல அவன் முகம் மாறியிருந்தது. ஷிவானி வெளியே செல்ல எத்தனிக்கும் போது, "சீக்கிரம் பேசிட்டு வந்து கிளம்பு... நம்ம இரண்டு பேரும் வெளியே புறப்படலாம்" என்றவன் சொல்ல, அவள் முகம் பிரகாசமானது. "சீரியஸ்ஸ்லி" என்றவள் ஆவல் ததும்பக் கேட்க, "ஹ்ம்ம்... முதல்ல மெஸ்சுக்குப் போவோம்... அங்கன கொஞ்சம் சோலி கிடக்கு... அதையே முடிச்சிக்கிட்டு வெளியே போயிட்டு வருவோம்" என்றான் அவன். "சூப்பர் மாம்ஸ்... ஆனா அல்வா வாங்கித் தரணும்... ஒகேவா?" என்றவள் ஆவலாய் கேட்க அவன் கலீரென்று சிரித்துவிட்டு, "உனக்கு அல்வா என்னல... அல்வா கடையே வாங்கித் தர்றேன்" என்றான். ஷிவானி முகமெல்லாம் புன்னகையோடு அங்கிருந்து செல்ல குரு தலையெல்லாம் சீவிக் கொண்டு வெளியே புறப்படத் தயாராகி வர, அப்போது சபரியும் ஷிவானியும் ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தவர்கள் குருவைப் பார்த்ததும் அமைதியாகினர்.  ஷிவானி குருவிடம் கார் சாவியைக் கொடுத்து, "டேட் கார்ல போக சொன்னாரு?!" என்க, அவளை எரிப்பது போல் பார்த்தவன், "ஏன் என் கூட பைக்ல வரமாட்டியோ?" என்று கோபமானான். அப்போது சபரி முன்வந்து, "ஏன் கார் சும்மாதானே நிக்குது... அதுல கூட்டிட்டுப் போங்க" என்றார். "இல்ல மாமா... நான் பைக்லயே பார்த்து பத்திரமா கூட்டிட்டுப் போறேன்" "அதெல்லாம் சரியா வராது... அவளுக்கு பைக்ல எல்லாம் ட்ரவல் பண்ணி பழக்கமில்லை... நீ கார்ல கூட்டிட்டு போ" என்றவர் அதிகாரமாய் சொல்ல அவன் முகம் கோப நிலைக்கு மாறியிருந்தது. இவர்களின் உரையாடலைப் பார்த்து வேதாவிற்கு அச்சம் தொற்றிக் கொள்ள குரு தீர்மானமாய் பைக்கில் அழைத்துப் போவதாக சொல்லிவிட்டான். அப்போது சபரி தன் மகளைக் கூர்ந்து பார்த்து,"ஏன் ஷிவானி? உனக்கு கார்ல போனா வசதியா இல்ல... பைக்ல போனா வசதியா?" என்றவர் கேட்க வேதாவிற்குத் தலைசுற்றியது. 'ஏன் இந்த மனுஷன் இப்படி ஏழரையைக் கூட்டிறாரு' என்றவர் மனதில் எண்ணிக் கொண்டிருக்க, அப்போது ஷிவானி தன் தந்தையையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள். "நான் கேட்டதுக்கு பதில் சொல்லு வாணிம்மா" என்றவர் மீண்டும் அழுத்திக் கேட்க, "கார்தான் பெஸ்ட் கம்பேர் டூ பைக்" என்றவள் பதிலளிக்க சபரி குருவை நிமிர்ந்து பார்த்தார். அவன் முகம் உக்கிரமாய் மாறியிருந்தது. அவளின் பதில் அவனை உள்ளூர ரணப்படுத்தியிருக்க அவள் தன்னையே தாழ்த்திப் பேசியது போல அவமானமாய் உணர்ந்தான். சபரி குருவை நிமிர்ந்து பார்த்தவர், "இப்பையாச்சும் கார்ல கூட்டிட்டுப் போறீங்களா?" என்று கேட்க, "நானே சொந்தமா கார் வாங்கின பிறவு அவள கூட்டிட்டு போறேன்" என்று சொல்லியவன் ஷிவானியை கோபமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட, சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் கோபமும் இப்போது லேசாய் பற்றிக் கொண்டிருக்க அந்த உஷ்ணத்தில் சிக்கிக் கொண்டது ஷிவானிதான். ஆசையாய் புறப்பட்டு வந்தவள் அப்படியே ஏமாற்றத்தோடு நின்றுவிட்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா