மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestBhagya sivakumar - நானும் நாவலும்Post ReplyPost Reply: Bhagya sivakumar - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on November 9, 2020, 1:18 PM</div>வணக்கம் வாசகர்களே! நான் பாக்யா சிவக்குமார் என்ற பெயரில் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகம் ஆனேன். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நான் பெரிய எழுத்தாளினி எல்லாம் இல்லை.. ஆனால் வளர்ந்து வரும் எழுத்தாளினி என்று கூறலாம். சொல்லப்போனால் வாட்பேடில் எழுதிக்கொண்டு இருந்த என்னை ஒரு புதிய உலகத்தை காட்டியது எழுத்தாளினி மோனிஷா அவர்கள் தான். முதலில் நான் அவருடைய ரசிகை என்பதை தெரிவித்து கொள்கிறேன். சரி என் நாவல் அனுபவத்தை பற்றி கூறுகிறேன் வாருங்கள் நட்புக்களே! சிறுவயதில் பாட்டி சொன்ன நீதிக்கதைகள் கேட்டு வளர்ந்தேன், அவ்வப்போது என் பாட்டி கூறிய சாய்பாபா பற்றிய தெய்வீக கதையும் கேட்டு வந்தேன் அப்போதெல்லாம் கதைகள் மீது பற்று என்று கூற இயலாது ஆனால் கதை கேட்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. என்னுடைய கல்லூரி நாட்களில் என்னுடைய தோழி திவ்யா ஒரு நாவல் வாசகி. அவளுக்கு கதை படிப்பது மிகவும் பிடிக்கும். அவள் படித்த "இடைவேளி அதிகம் இல்லை" நாவலை எனக்கு விவரித்தாள். நானும் சுவாரஸ்யமாக கேட்டேன். "அடுத்த அத்தியாயம் எப்போது சொல்வாய்" என்று அவளிடம் கேட்பதுண்டு. இது தான் நாவல் கதை நான் விரும்ப காரணமாக அமைந்தது. நாளடைவில் நானே தனிப்பட்ட முறையில் "ராதை மனதில்" கதை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் முழுவதுமாக படிக்க இயலவில்லை காரணம் என்னுடைய சோம்பல் தான். ஆனால் கதைகள் மீது ஆர்வம் இருந்துகொண்டு தான் இருந்தது. என்னுடைய டைரியில் சின்ன சின்னதாக கதைகள் எழுதி அதை நானே வாசித்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. பிறகு வார இதழ் மற்றும் மாத இதழில் வரும் சிறுகதைகள் படிக்க ஆரம்பித்தேன். அந்த கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தேன். கதை என்றாலே சுவாரஸ்யம் தான் அதிலும் நாவல் கதைகளை படிக்கும் போது அந்த உணர்வே தனி. முழுவதுமாக ஒரு நாவல் கதையை படித்து முடித்தேன் செயலியில். அப்றம் சில கதைகள் மனதில் பதிய ஆரம்பித்தது. "ஞாபகங்கள் தாலாட்டும்" என்ற கதை மறக்க முடியாத அனுபவமாய் இருந்தது. அந்த கதையோடு பயணித்தது போல் ஓர் உணர்வு . பிறகு மறுமணம் பற்றி ஒரு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதையும் முழுவதுமாக படித்தேன். இப்படி வாசிப்பு பயணம் துவங்கியது. பிடித்த கதைகளுக்காக என்னுடைய நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தேன். போனவருடம் புத்தக கண்காட்சி சென்றபோது "இந்த மனம் எந்தன் சொந்தம்" என்ற புத்தகத்தை வாங்கினேன். ரமணிச்சந்திரன் அவர்களின் படைப்பு அது. அந்த கதை இயல்பான அக்கா தங்கை இருவருக்கும் உள்ள வேறுபாடு மற்றும் ஒரு சாதாரண குடும்ப கதை. உதயா - யோகேந்திரன் கதாபாத்திரம் மிகவும் ஈர்த்தது. சிறிது இடைவேளிக்கு பிறகு மோனிஷா அவர்கள் எழுதிய "நான் அவள் இல்லை" கதையை படிக்க ஆரம்பித்தேன். கதையோடு மூழ்கிவிட்டேன் என்று சொல்லலாம். அந்த அளவு கதை அருமை...இன்னமும் படித்துக்கொண்டு இருக்கிறேன். 16 அத்தியாயங்கள் வரை படித்துள்ளேன். சாக்ஷி கதாபாத்திரம் அருமை. மகிழின் ஆழமான காதலும் அருமை.. நிறைய கதாபாத்திரம் அடங்கிய அழகான கதை ...படிக்க படிக்க ஆர்வம் தூண்டிவிடும். அதற்கிடையில் "சொல்லடி சிவசக்தி" புத்தகம் வாங்கினேன். சொல்லவே வேண்டாம் வழக்கம் போல் மோனிஷாவின் எழுத்து திறமை அதில் இருந்தது. சிவசக்தி கதாபாத்திரம் அருமை... மேலும் நான் நிறைய ஆடியோ நாவல்கள் செவிகளில் வாயிலாக கேட்டு மகிழ்வதுண்டு. அப்படி கேட்டு மகிழ்ந்த நாவல்களில் ஒன்று "உன் மனைவியாகிய நான்" எழுதியது ஆனந்த லட்சுமி. இப்படி ஆடியோ கதைகள் கேட்பதிலும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். எழுத்தாளர் சுஜாதா சார் எழுதிய ஶ்ரீரங்கத்து தேவதை கதையும் ஒருசில பகுதி கேட்டு மகிழ்ந்தேன். பிறகு "சோலைமலை இளவரசி" கல்கி அய்யா எழுதிய நாவல் படிக்க ஆரம்பித்தேன். ஒருசில அத்தியாயங்கள் படித்தேன்.. முழுவதுமாக முடிக்க இயலவில்லை. ஆனால் அதுவும் படித்து விடவேண்டும். எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது.. என்னுடைய வயதான காலத்தில் முழுநேர வாசகியாக இருந்து..நிறைய புத்தகங்கள் வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு என்னுடைய நேரத்தை புத்தகத்தோடு செலவிட வேண்டும். வயதான காலத்தின் துன்பத்தை எல்லாம் அந்த வாசிப்பு மறக்கடித்து விடும் என்ற நம்பிக்கை தான். உண்மையில் கதை வாசிப்பு ஒரு நல்ல பழக்கம் தான் ஏனெனில் கதை வெறும் கற்பனை அல்ல.. ஒருசில அனுபவங்களும் தான். படிக்கும் போது அந்த அனுபவங்கள் உங்களுக்கு பாடம் கற்பிக்கலாம். அந்த பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். உங்கள் கவலைகள் மறக்கடித்து உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். "24 மணிநேரம் இருக்க ஒரு பத்து நிமிடமாவது படிக்க செலவிடுங்கள். பிறகு வரும் நல்ல மாற்றத்தை அனுபவியுங்கள்". நன்றி... வணக்கம். </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா