மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestVaishnavi - நானும் நாவலும்Post ReplyPost Reply: Vaishnavi - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Vaishnavi</a> on November 11, 2020, 7:22 PM</div>புத்தகம் வாசிப்பது என் மரபணுவோடு கலந்தது போலும். என் தாத்தா தொலைந்த புத்தக காட்டில் நானும் தொலைய ஆரம்பித்தேன். அது ஒரு அழகிய உலகம். விரும்பி மாட்டி கொண்ட மாய உலகில் திரும்பி வர மனமில்லாமல் பல கதைகளோடு பயணிக்க தொடங்கினேன். மூன்று வயதில் என் தாத்தா காட்சிப்படுத்திய இராமாயணும் மகாபாரதமும் எனக்கு நான் வளர்ந்து பிறகு வேறாக தெரிந்தது. அவர் உருவகப்படுத்திய கடோத்கஜனுக்கும் நான் படித்த கடோத்கஜனுக்கும் வித்தியாசங்கள் நிறைய இருந்தது. இருப்பினும் என் தாத்தா சொன்ன கதை தான் இன்றும் என் மனதில் இருக்கிறது. சில நேரங்களில் என்னை இராணியாக, சில நேரங்களில் என்னை இளவரசியாக, சில நேரங்களில் என்னை தேவதையாக காட்டியதும் அந்த கதைகள் தான். விவரம் தெரிந்து நான் படித்த முதல் நாவல் கல்கியின் கை வண்ணத்தில் உருவான "பொன்னியின் செல்வன்" பக்கங்களை புரட்ட புரட்ட வந்தியத்தேவனோடு நானும் பயணிக்க தொடங்கினேன். அதுவரை குதிரையில் பயணிக்காத என்னை கதை முழுவதும் குதிரையில் ஏற்றி சுற்றி காண்பித்த அந்த வந்தியத்தேவனின் ரசிகை நான். எத்துனை அழகான வர்ணனைகள். நினைத்தால் சிலிர்க்க தான் செய்கிறது. அன்று வரை எந்த நாவலாசிரியர் பெயரும் தெரியாத எனக்கு கல்கி அவர்களின் பெயர் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சில நாள் தேடல்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் "சிவகாமியின் சபதம்" அதுவும் கல்கியின் படைப்பே. மூன்று பாகங்கள் கொண்ட சிவகாமியின் சபதத்தில் என்னால் முதல் பாகத்தை மட்டுமே படிக்க முடிந்தது. இருப்பினும் அந்த நாட்டிய மங்கை சிவகாமி மீதும் அவள் தந்தையின் சிற்ப கலை மீதும் தீராத காதல் எனக்கு. அவ்வளவு அருமையான கதாப்பாத்திரங்களை கல்கி அவர்களால் மட்டுமே அத்துனை அழகாக காட்ட முடியும் என்று தோன்றியது. வாசகியாக இருந்த என்னை எழுத்துக்களை காதல் செய்ய வைத்து என்னை எழுத்தாளராக மாற்றியது வைரமுத்து அவர்களின் வரிகள். கவிப்பேரரசின் கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர், தண்ணீர் தேசம் இவை யாவும் என் தாத்தா எனக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள். ஆயிரம் முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போன்றே தோன்றும் இந்த நாவல்கள் மீது நகர்ந்து செல்ல என் கண்கள் சலித்ததே இல்லை. ஆண்டுகள் பல கடந்தும் என் நாவல் தாகம் தீரவேயில்லை. கல்கி, கவிப்பேரரசு இவர்கள் வரிசையில் நா.முத்துக்குமார் அவர்களும் என் நாவல் தேசத்தில் வழித்துணை ஆனார். அவரோடு சில நாட்கள் பயணித்த அனுபவம் புதுமையாக இருந்தது. எதார்த்தங்கள் நிறைந்த அவர் எழுத்துக்கள் என்னை வாழ்வில் சில இடங்களில் வழி நடத்தி சென்றது. கடந்த வருடம் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று அவர்கள் எழுதிய ஒரு நூலை வாங்கிப் படித்து என் அறையில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. அதன்படி நான் சமீபத்தில் வாங்கிய நூல்களுள் ஒன்று தான் "பாரதி நினைவுகள்". இந்த நூலை எழுதியவர் பாரதியாரின் பக்கத்து வீட்டில் வசித்த யதுகிரி அம்மாள். யதுகிரியின் பார்வையில் பாரதி என்று கூட இந்த நூலைப் பற்றி ஒரு வரியில் சொல்லலாம். பாரதி அத்துனை அருமையான மனிதர். அவர் எழுதிய கவிதைகளின் காரணத்தையும் அவர் எழுதிய சூழலையும் பற்றி பக்கத்தில் இருந்து பார்த்த யதுகிரியின் வரிகளில் பாரதி நினைவுகள். பாரதியின் 39 ஆண்டுகள் கவியுலக பயணத்தை சில மணி நேரங்களில் திரும்பி பார்க்க செய்த புத்தகம். இரண்டு வருட தேடல்களுக்கு பின்னால் கிடைத்த மிக பெரிய பரிசு அந்த பாரதி நினைவுகள். நான் கட்டமைத்து கொண்டிருக்கும் அந்த நூலகம் தான் என் இளைய தலைமுறைக்கு நான் விட்டுச் செல்லும் அடையாளம். நானும் என் நாவல் தேச பயணமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இன்னும் ஆயிரம் மைல்கள் கடந்தாலும் என் தேடல் பயணம் முடிவில்லாமல் நீளும்..</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா