மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Avalukaga AvanAvalukaga Avan - 1Post ReplyPost Reply: Avalukaga Avan - 1

Quote from monisha on November 10, 2020, 12:17 PM

அத்தியாயம் -1
இசை என்றாலே எல்லோருக்கும் ஓர் அலாதியான பிரியம் தான். இசை நம் உணர்வுகளோடு பயணிக்கிறது எனவும் கூறலாம். அப்படித்தான் நம்முடைய கதாநாயகி தமிழ்ச்செல்வியும். இசை மீது உள்ள ஆர்வத்தினால் பாட்டு வகுப்பிற்கு அடம்பிடித்து தன்னுடைய பதினாறாவது வயதில் சேர்ந்தாள்.  அவளுடைய தந்தையிற்கோ துளியளவும் விருப்பம் இல்லை... "படிக்கிற வயசுல படிப்பை விட்டுட்டு உனக்கு என்ன பாட்டு வகுப்பு அது இதுனு" என்று அவ்வப்போது வசைப்பாட… "அப்பா...ஐ நோ வாட் ஐயம் டூயிங்" என்று ஒரே வாக்கியத்தில் தன்னுடைய விருப்பத்தை கூறிவிட்டு தன் வேலையை கவனிப்பாள். அவள் எது செய்தாலும் தாயின் ஆதரவும் அவள் அண்ணணின் ஆதரவும் கிடைத்துக்கொண்டே இருந்தது. தாய் மகாலட்சுமியிற்கு தமிழ்ச்செல்வி என்றாலே அவ்வளவு பிரியம். தமிழ்ச்செல்வி பிறந்தபின் தான் தன் வீட்டிற்கே ஓர் கலை வந்தது என்று அவ்வப்போது கூறுவதுண்டு.  "வந்துட்டா எப்பப்ரு பொண்ணுக்கு வக்காலத்து வாங்க" என்று மகாலட்சுமியின் மாமியார் குறைப்படுவதும் அவ்வீட்டில் சகஜம் தான்.  தமிழ்ச்செல்வி பதினோறாம் வகுப்பிலிருந்து தினமும் சைக்கிளில் பள்ளியிற்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்தாள். அன்றும் வழக்கம் போல் அவ்வாறு செல்லுககையில் சைக்கிள் செயின் கழன்று விழுந்தது. சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டாள். எவ்வளவு முயன்றும் அவளால் அது இயலாத காரியமாக இருந்தது.  'சை...இன்னைக்கு வேற ப்ரேயர் மீட்டிங் சீக்கிரம் போகணும் இப்படி பண்ணுதே இந்த எழவு சைக்கிள்' என்று மனதில் புலம்புவதற்கும் அவளுடைய தாய்மாமன் மகிழ் வருவதற்கும் சரியாக இருந்தது. "ஏய் வாலு என்ன பிரச்சனை" என்று குரல் கொடுத்தவாறு பைக்கை ஓரம்கட்டிவிட்டு அவளருகே வர, "மகிழ் மாமா...சைக்கிள் செயின் கழன்று விழுந்துடுச்சு மாட்டவே முடியல கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" என்க மகிழோ இது தான் சாக்கு என்றபடி. "தமிழு ஒன்னும் பிரச்சினை இல்லை சைக்கிள் அப்படி ஓரங்கட்டு , வா நான் பைக்ல விட்டுட்டு அப்படியே கடைக்கு போறேன்"என்று அழைக்க..அவளோ யோசித்து விட்டு  "சரி எனக்கும் நேரமாகுது நீங்க என்னை விட்டுடுங்க மாம்ஸ்" என்று பின்சீட்டில் அவனது பைக்கில் ஏறிக்கொள்ள அவனோ தன் முறைப்பெண் தமிழ்ச்செல்வியை பைக்கில் அமர்த்தியதை நினைத்து மனதளவில் மகிழ்ச்சிக்கொண்டு உர்ருன்னு தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.  "மாமா ரொம்ப நாளாக உங்கள் கிட்ட ஒன்று கேக்கணும். கேட்கவா" என்றாள் தமிழ். அவள் என்ன கேட்க போகிறாள் என்று குழம்பியவன்  "சொல்லு தமிழு " என்று ஆர்வத்துடன் கேட்க. அவளோ தன் கூந்தலை காதோரம் ஒதுக்கியபடி, "மாம்ஸ் நீங்க பி.ஏ வரலாறு முடிச்சிருக்கீங்க அதுவும் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட் அப்படியிருந்தும் ஏன் மளிகை கடை நடத்துறீங்க. எங்காயச்சும் வேலைக்கு போகலாம்ல " என்று கேட்க அவனோ புன்னகைத்து, "இங்க பாருடா மா… லைப்ல எல்லாமே நம்ப நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்கிறது இல்லை. நானும் வேலைக்கு போகணும் னு ஆசைப்பட்டேன் ஆனால் அப்பாவுக்கு வயசாகிடுச்சு அதனால கடையை என் பொறுப்பில் விட்டுருக்காரு நான் தானே பார்த்துக்கணும்" என்று அவன் இயல்பாக கூறியது ஒருநொடி யோசித்துவிட்டு.. "ம்ம்ம் சரிமாமா..இதோ என் ஸ்கூல் வந்திடுச்சு" என்று இறங்கியவள் தன் பையை தோளில் மாட்டியவாறு சென்றாள்.  சற்று நேரத்தில் பள்ளியின் ப்ரேயர் மீட்டிங் ஆரம்பம் ஆனது. 'இறைவா..நான் ஒரு இசைக்கருவி இதில் ஏழு ஸ்வரங்களும் உன் அருளால்' என்று பக்திமிக்க ஒரு குரல் ஒலித்துக்கொண்டு இருந்தது. அது வேறுயாருமல்ல நம் தமிழ்ச்செல்வி தான். அவளது குரலில் லயித்து போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது அவ்வாறு லயித்து ரசித்தவனில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கும் ஒருவன். உணவு இடைவேளையில் தமிழ்ச்செல்வி வகுப்பின் வாசலில் நின்று அவளை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருப்பான். ஆனால் அவளுக்கு தெரியாது. அவன் தன்னை விரும்புகிறான் என்று.  கார்த்திக் நல்ல மாநிறமான நிறம் மட்டுமல்ல ஆண்மைக்குரிய அரும்பு மீசையும் நல்ல உயரமும் உடையவன். அவனுடைய தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் தாயோ மிகப்பெரிய மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்.  பெற்றோர் இருவரும் தத்தமது வேலையில் பிஸியாக இருப்பதாலோ என்னவோ அவன் தனிமையில் வாட ஆரம்பித்தான். உடன்பிறப்பு என்று யாரும் இல்லை.. அவன் ஒரே செல்ல மகன். அவனுக்கும் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு உள்ளதால் தான் பயோலஜி பிரிவு தேர்ந்தெடுத்து படித்து வருகிறான். நீட் தேர்விற்காக பயிற்சியும் எடுத்து வருகிறான். "ஒழுங்கா நீட்ல பாஸ் ஆயிடு அப்பத்தான் உன் கனவு நிறைவேறும்" என்று பெற்றோர் அவ்வப்போது கூறும் அறிவுரையும் சலிப்பாகியது அவனுக்கு.  காதல் ஒருபக்கம் கனவு ஒருபக்கம். எது ஜெயிக்க போகிறது என்று நம் கதையின் போக்கில் பார்த்து கொள்ளலாம். ....... பள்ளி முடிந்து அன்று மாலை மகிழ் அவளை அழைத்துவர வந்தான். "தமிழு என்ன டல்லா இருக்க...ஸ்கூல்ல எதாவது பிரச்சினை நடந்ததா" என்று மகிழ் வினவ.. "அட அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா… உடம்புக்கு முடியல" என்று பட்டும்படாமல் சொல்ல.. "என்னது உடம்புக்கு முடியலையா அச்சச்சோ... வா நீ முதல்ல டாக்டர் கிட்ட" என்று அவளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தான். "அய்யோ மாம்ஸ் எனக்கு ஒன்றுமில்லை... நீயேன் இப்படி இருக்க.. உடம்பு முடியலை அப்படினா டாக்டர் கிட்டதான் வரனுமாம்.. ஹாஹா" என்று நமட்டு சிரிப்புடன் கூற.. "ஹேய் அதெல்லாம் இல்லை... எதுனாலும் முதல்ல டாக்டர் பார்த்து சரிபண்ணிக்கனும் இல்லைனா படிக்கிற புள்ள அப்றம் கஷ்டமாயிடும்"என்று ரிஸெப்ஷனில் டோக்கன் வாங்க சென்றவனை பிடித்து நிறுத்தியவள். "அய்யோ லூசு மாமா...எனக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லா பெண்களும் அவதிப்படுற மாதந்தோறும் வரும் பிரச்சனை தான். இதுக்கு இவ்வளவு பரபரப்பு தேவையா.." என்க.. அவனோ அவளை ஏறெடுத்து பார்த்துவிட்டு.. "ஓ....சாரிடா தமிழ் நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்" என்றபடி அவளை அழைத்துக்கொண்டு புறப்பட எதையோ நினைத்து சிரித்துக்கொண்டே தனது இருசக்கர வாகனத்தை கிளப்பியவன் நேராக தன் அக்கா மகாலட்சுமி வீட்டில் வந்து நிறுத்தினான். "வாடா தம்பி ....உட்காரு" என்று அழைத்தவாறே குவழையில் நீர் எடுத்து வந்து தர அதைப்பருக கொடுத்தாள்.  "மாமா எங்க க்கா.." என்றான் தன் அக்கா கணவர் துரைசிங்கத்தை விசாரித்தப்படி. "இதோ வந்திடுவாறு டா இன்னைக்கு ஆபிஸ்ல ஏதோ ஆடிட்டிங் அதான் கொஞ்சம் தாமதமாகும்னு சொன்னாரு" என்றுரைக்க... "சரிக்கா... நான் கிளம்புறன்" என்று அவன் விறுவிறுவென கிளம்ப.. "டேய் தம்பி ஒரு நிமிஷம்" என்க தன் அக்காளை ஏறிட்டு பார்த்ததும். அவளோ வழக்கம் போல் அவனது கல்யாணம் பேச்சை ஆரம்பித்தாள். "மகிழ் சீக்கிரமே ஒரு பொண்ணு பார்த்து கட்டிக்க டா வயசு 26 ஆகுதுல" என்றுரைக்க.. "யக்கவ் 26 தான் ஆகுது புரியுதா " என்றவாறு நகைக்க.. "அதுக்கில்ல மகிழ் அப்பா அம்மாவுக்கு வயசாகுது எம்புட்டு நாளைக்கு அம்மா தனியாக எல்லா வீட்டுவேலையும் செய்யும். பாவம் டா" என்று கூற.. "ஆக மொத்தம் வீட்ல உங்கள் அம்மா ஒத்தாசைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்ற அதானே" என்று உச்சுக்கொட்டியபடி புறப்பட்டான்.  'எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறான்' என்றபடி சமையலறையினுள் நுழைந்தாள் மகாலட்சுமி. மகாலட்சுமி எதார்த்தமாக கூறினாலும் மகிழ் மனது அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் அவன் மனதில் வேறொன்று அல்லவா இருக்கிறது. அதை அவ்வளவு எளிதாக தன் அக்காளிடம் சொல்லிவிட முடியாது.  விரைவில் மகிழ் மனது புரியும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா