மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Avalukaga AvanAvalukaga avan -2Post ReplyPost Reply: Avalukaga avan -2

Quote from bhagyasivakumar on November 10, 2020, 1:50 PM

அத்தியாயம் -2
தனது அறையில் மும்மரமாக தனது ஜாமன்ட்ரி பாக்ஸை தேடிக்கொண்டு இருந்தாள் தமிழ். "டேய் அண்ணா நீ எடுத்தியா" என்று சந்தேகத்துடன் கேட்க அவள் அண்ணன் குமரனோ...ஏறிட்டு பார்த்துவிட்டு "அடியேய் அது என்ன அல்வா டப்பாவா டி நான் எல்லாம் எடுக்கவேயில்லை எங்கயாவது வச்சிட்டு தேடுவ"என்றான் சிரித்துவிட்டு. தனது ஜாமன்ட்ரி டப்பாவை எங்கு வைத்தோம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடிக்கொண்டு இருந்தாள், ஆனாலும் கிடைத்தபாடில்லை.. "ம்ம்ம் எங்கே போயிருக்கும்".....என்று யோசிக்க அவளுக்கு யோசனை துளியளவும் எட்டவில்லை. அண்ணன் எடுத்திருக்கவும் வாய்ப்பில்லை. பிறகு எங்கே தான் போயிருக்கும்,அதற்கென கால் முளைத்திருக்கிறதா என்ன அய்யோ என்ன செய்வேன் ஆண்டவா நாளைக்கு வேற மேதமேடிக்ஸ் டெஸ்ட் இருக்கே...என்று மனதினுள் நொந்துக்கொண்டிருந்தாள். ...... "மவளே எவ்வளவு தேடினாலும் உனக்கு கிடைக்க போறதில்லை" என்று அதனை ஒலித்துவைத்துக்கொண்டு அதை எடுத்து பார்த்த மகிழ் கூறிக்கொண்டு இருந்தான். "டேய் மகிழ்..அங்கே என்னடா சின்ன பிள்ளை மாதிரி ஜாமன்ட்ரி பாக்ஸ் பார்த்துட்டு இருக்கிறவன்,தண்ணீர் காலி ஆயிடுச்சு போய் கேன் வாங்கிட்டு வா" என்று அவன் தாய் அழைக்க அவனோ அதை வைத்துவிட்டு 'கொஞ்சம் நேரம் உக்கார விடமாட்டிங்களே என்றபடி ' கேன் வாட்டர் வாங்க கடைக்குச் சென்றான். கடைவீதிக்கு போற வழியில் தான் தன் கல்லூரியில் உடன்படித்த துர்காவை கண்டான். நிறைமாத கர்ப்பிணியாக அவள் நடக்க முடியாமல் நடந்து வந்துக்கொண்டிருக்க அவளை பார்த்ததும்.. "துர்கா...எப்படி இருக்க..வீட்டில் எல்லாரும் சவுக்கியமா. ஆமாம் வயித்துல குட்டி பாப்பாவா சொல்லவேயில்லை"என்க அவளோ பதில் என்ன சொல்வதறியாது கண்கலங்க... "ஏய் இப்ப என்ன கேட்டுட்டேன் கண்கலங்குற" என்றான் பதற்றத்துடன். "மகிழு எனக்கு என்ன சொல்றதுனு தெரியல..நீ நினைக்கிற மாதிரி நான் சந்தோஷமாக எல்லாம் இல்லை... நானே மனசளவுல உடைஞ்சு போயிருக்கேன். என் கணவர் இறந்து ஆறுமாசம் ஆகுது. இப்ப ஆதரவு இல்லாமல் தன்னந்தனியாக இருக்கேன். அப்பா அம்மாக்கும் வயசு ஆயிடுச்சு.. என்ன செய்ய என் தலையெழுத்து என்று புலம்பியவளை சற்று ஆசுவாசப்படுத்தி... "துர்கா...ஏன் யாருமில்லை நினைக்கிற ஒரு நண்பனாக நான் எப்பவும் உனக்கு ஆதரவாக இருப்பேன். செலவுக்கு எதாவது பணம் வேண்டுமா.." என்றபடி தன் சட்டைப்பையில் இருக்கும் ஆயிரம் ரூபாயை எடுத்து அவள் கையில் திணித்தான். "மகிழு உன்னை பார்த்த பிறகு புதுசா ஏதோ நம்பிக்கை வந்த மாதிரி இருக்கு. ரொம்ப நன்றி இப்பக்கூட நான் செக்கப் செய்ய டாக்டர் கிட்ட தான் போறேன்" என்று அவள் சொல்ல... "சரி வா நீ போக வேண்டிய ஆஸ்பிட்டல்ல விட்டுடுறேன் " என்று அவளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் சற்று அவள் செக்கப் முடியும் வரை துணை இருப்போம் என்று அவளுடனே உள்ளே நுழைந்தான். அவளும் டோக்கன் வாங்கிக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள். தனியாக வந்திருக்க நேரிட்டபோது நண்பன் உடன் வந்தது அவளுக்கு சற்று ஆதரவாக இருந்தது. அவனும் துர்காவின் நிலைக்கண்டு வருந்தினான். சற்று நேரத்தில் மருத்துவர் உள்ளே அழைக்க அவள் மட்டும் உள்ளே செல்ல வெளியே காத்துகிடந்தான். அப்போது தான் தாயார் தண்ணீர் கேன் வாங்க சொன்னதே புத்திக்கு எட்டியது. ஆனாலும் துர்காவின் செக்கப் முடியும் வரை அவன் போவதாக இல்லை. வெளியே வந்த துர்கா "மகிழு பாப்பா நல்லாருக்காம் அடுத்த வாரம் டெலிவரி டேட் கொடுத்திருக்காங்க" என்க அவனோ மலர்ச்சியாக... "துர்கா எதுக்கும் கவலைபடாத நல்லபடியா குழந்தை பிறக்கும். வலி வந்தா உடனே தயங்காமல் எனக்கு போன் பண்ணு நான் கண்டிப்பாக வரேன்" என்று கூறிவிட்டு அவளை அழைத்து வீடுவரை விட்டுவிட்டு தண்ணீர் கேன் வாங்க கடைக்குச் சென்றான். சற்று நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான். வந்தவனை கோபத்தோடு எதிர்கொண்டார் தாயார். "உன்னை கடைக்கு அனுப்பி வச்சா நீ எங்கே போயிட்டு வர? அது இருக்கட்டும் யாரு டா அந்த பொண்ணு. வயிறு புள்ளதார்ச்சியோட ஆஸ்பிட்டல்ல உன்னை சரசக்கா பார்த்தாங்களாமே" என்று கேட்க... "மா...அது துர்கா மா" என்றான் தைரியமாக "யார் டா அந்த பொண்ணு" என்க.. கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாயை இருக தோளோடு சேர்த்து.. "மா...அந்த பொண்ணு என் கூட படிச்ச பொண்ணுமா..அவளுக்கு ஆதரவு இல்லை நிறைமாத கர்ப்பிணி அதான் செக்கப் போறேனு சொன்னவளை நான் கூட்டிட்டு ஆஸ்பிட்டல் போனேன்" என்று முழுவதையும் சொல்லி முடிக்க.. அப்போது தான் உயிர் வந்தது போல் இருந்தது அவருக்கு ,ஏனெனில் அவருடைய மனதிலும் தன் பேத்தி தமிழ்ச்செல்வி தான் மருமகளாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தனது ஆசையை வெளிக்காட்டிக்கவில்லை. நேரம் வரும் போது மருமகன் துரைசிங்கத்திடம் சொல்லிக்கலாம் என்று விட்டுவிட்டார் மகிழின் தாயார் கனகவள்ளி. "சரி டா மகிழ் தண்ணீர் கேன் உள்ளே வை" என்று உரைத்துவிட்டு தன் வேலையை கவனிக்க துவங்கினாள். மகிழோ வந்தவுடன் மீண்டும் அந்த ஜாமன்ட்ரி பாக்ஸ் கண்ணுக்கு தென்பட அதை கையில் ஏந்தியவன். "தமிழு உன் நியாபகர்த்தமா நான் எத்தனையோ எடுத்து வச்சுருக்கேன் அதுல இதுவும் ஒன்று" என்று தனக்குள் உரைக்க அங்கோ ஜாமன்ட்ரி பாக்ஸ் இல்லாமல் தவித்தவள் வேறு வழியின்றி கடைக்குச் சென்று வேறொரு ஜாமன்ட்ரி பாக்ஸ் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். "என்னடி வாங்கிட்டியா" என்றான் குமரன்.. "ஊம் பின்னே வேற வழி" என்றவள் மறுநாள் தேர்வுக்கு தன்னை தயார் படுத்திக்க ஆயுத்தமானாள். தமிழ்ச்செல்வியின் ஆசை எல்லாம் சி.ஏ படிக்க வேண்டும் என்பது தான். எனவே தான் காமர்ஸ் பிரிவினை தேர்ந்தெடுத்து படித்துவருகிறாள். அவளுக்கு கணிதம் என்றாலும் ஒருவித துடிப்பு தான் எனவே பிஸினஸ் மேதமேடிக்ஸ் எடுத்து அதனுடன் பிரிவாக படித்துவருகிறாள். சி.ஏ படிப்பது அவ்வளவு எளிதல்லவே இருப்பினும் அவளுடைய கனவுகளோடு போராட அவள் தயாராக தான் இருக்கிறாள். இசைமீது எந்த அளவு ஆர்வம் இருக்கிறதோ அந்த அளவு படிப்பிலும் உள்ளது. ஆனால் இசை மீதுள்ள ஆர்வத்தினால் எங்கு படிப்பு பாதித்திடுமோ என்று துரைசிங்கத்தின் கவலை. ஆனால் குமரனுக்கும் மகாலட்சுமியிற்கும் அவள் மீது அளவுக்கடந்த நம்பிக்கை உள்ளது ,அவள் எது செய்தாலும் சரியாகதான் செய்வாள் என்று. அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழும் நிச்சயம் செய்வாள். ஆனால் இதற்கிடையில் அவள் சந்திக்கும் போராட்டம் தான் என்ன ?, அவளின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுமா? அல்லது ஏதெனும் தடங்கல் வரப்போகிறதா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ....

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா