மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aval draupathi allaAval Draupathi Alla - 2Post ReplyPost Reply: Aval Draupathi Alla - 2

Quote from monisha on November 14, 2020, 9:18 PM

2

சாரதி
அரவிந்த் காரை ஓட்டிக் கொண்டிருந்தானே ஒழிய அவன் கவனமெல்லாம் சாலையின் மீதில்லை. மாறாய் அவன் நினைவெல்லாம் வீராவைச் சுற்றியே இருந்தது. அவனுக்கு அப்போது அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வரவும் அவன் முகம் மலர்ந்து இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அவனால் மறக்க முடியாத சந்திப்பு அது! அரவிந்தின் கல்லூரியில் அன்று இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் விழா கோலாகலமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவன்தான் காலேஜ் கல்ச்சுரல் செகரட்ரி! பல பொறுப்புகளும் அவன் தலையில்தான் வந்து விடிந்தது. "ஹாய் ப்ரெண்ட்ஸ், டூ யுவர் கைன்ட் அடேன்ஷன்... நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருக்கும் மாணவ மாணவிகள் எல்லோரும் உங்க நேம் அன்ட் காலேஜ் நேம் சொல்லி ரெஜிஸ்ட்ர் செஞ்சுக்கோங்க" இந்த அறிவிப்புகள் வந்ததும் அங்கிருந்த மாணவ மாணவிகள் எல்லோரும் பதிவு செய்யும் இடத்தில் சூழ்ந்து கொள்ள, அரவிந்த் உள்ளே சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருந்தான். அப்போதுதான் ஒரு மாணவன் அந்த கூட்டத்தை தள்ளிக் கொண்டு வந்து தன் கல்லூரி மாணவர்களின் பெயர்களை சொல்லி பதிவு செய்ய, "ஐடி கார்ட்ஸ் ப்ளீஸ்" என்று பெயர் பட்டியலில் இருந்த எல்லோரின் பெயரை அரவிந்த் சரி பார்க்கக் கேட்க அவர்களும் தங்கள் தங்கள் அடையாள அட்டையை அவனிடம் கொடுத்தனர். அதனை சரி பார்த்தவன், "வீராவோட ஐடி கார்ட்" என்று கேட்க அந்த மாணவ கூட்டம் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டது. "இங்கே வீரா யாரு?" என்று அரவிந்த் மீண்டும் நிமிர்ந்து பார்த்து கேட்க அப்போது அவனிடம் பெயர் பட்டியலை தந்த மாணவன், ஆம்! மாணவன் தன் கணீர் ஆண்மையான குரலில், "நான்தான்" என்க, "ஐடி கார்ட்" என்று கேட்டு அரவிந்த் தன் கரத்தை நீட்டினான். "வீட்டுலேயே மறந்து வைச்சிட்டு வன்ட்டேன் ண்ணா" என்று தாழ்மையாய் பதிலளித்தான் அவன்! "அப்படின்னா நீங்க கலந்துக்க முடியாது... ஸாரி" என்று அரவிந்த் பளிச்சென்று உரைக்க, அங்கிருந்த மாணவ பட்டாளம், "விளையாடதே வீரா... ஐடி கார்டை கொடு" என்று எல்லோரும் சொல்ல, வேறுவழியின்றி அவள் சலித்துக் கொண்டு தன் ஐடிகார்டை முன்னே வைக்க, அரவிந்தும் சிரத்தையில்லாமலே அதனை எடுத்துப் பார்த்தான். சட்டென்று அவன் பார்வை அதிர்ச்சியில் விரிய, "இதுல வீரமாக்காளின்னு போட்டிருக்கு" என்றதும் அவள் முகம் அஷ்டகோணலாய் மாறியது. "அந்த வீரமாக்காளி இவதான்" என்று சொல்லி அவள் தலையிலிருந்த தொப்பியை அவள் கூட இருந்த சகமாணவன் கழட்ட, அவளின் கூந்தல் அருவியாய் அவள் தோளில் படர்ந்து வீழ்ந்தது. அரவிந்த் முகத்தில் அதிர்ச்சி சில நொடிகள் ஓட்டிக் கொண்டிருந்தாலும் அடுத்து நொடியே அது கேலிப் புன்னகையாய் மாற, "ப்பே" என்று தன் கல்லூரித் தோழனைப் பார்த்து வீரா முகத்தை திருப்பிக் கொண்டு தன் மூக்கின் கீழ் ஒட்டியிருந்த மீசையை லாவகமாய் பிரித்து எடுத்தாள். அவள் ஆண் குரலில் பேசிய விதம் நடை உடை பாவனை என எல்லாமே அவளை பெண்ணென்று சந்தேகப்படவே தோன்ற முடியாதளவுக்கு இருக்க, அரவிந்த் தன்னை அவள் முட்டாளாய் மாற்றிவிட்டாள் என்பதையும் மறந்து,அவளின் திறமையை எண்ணி மெச்சவே செய்தான். அதோடு நிற்காமல் அவள் கரிசல் கூந்தலில் ஆரம்பித்து... பிறை நுதலைத் தொட்டு... கூரிய நாசியில் வழுக்கி... அவளின் செம்மாதுளை இதழ்களைக் கடந்து... அவன் பார்வை கொஞ்சம் வன்மமாய் இறங்கி செல்ல, "ஹலோ மிஸ்டர்" என்று மேஜையைத் தட்டி அவனின் கவனத்தை சிதைத்து, "ரெஜிஸ்ட் பண்ணிட்டீங்களா?" என்று கேட்டாள் வீரா. அந்த நொடியில்... அந்த இடத்தில்... அரவிந்த் தன் மனதை அவளிடம் பறிகொடுத்துவிட்டான். ஆனாலும் அதனை காட்டிக் கொள்ளாமல், "சாரி... உங்க காலேஜை ரெஜிஸ்டர் பண்ண முடியாது... நீங்க செஞ்சது சீட்டிங்" என்று அவன் உதட்டை தொட்ட புன்னகையை விழுங்கிக் கொண்டு இறுக்கமான பார்வையோடு பேச, எல்லோரும் வீராவை கோபமாய் பார்க்க அவள் துணுக்குற்றாள். "அய்யோ அண்ணே! சும்மாக்காட்டினாலும் பண்ணேன்" என்றவள் இறங்கி வர அவள் அண்ணா என்று விளித்ததில் அரவிந்த் நெஞ்சம் படாரென வெடித்தது. விழியெல்லாம் சிவப்பேற சட்டென்று எழுந்தவன், அவன் உடன் அமர்ந்திருந்த மாணவனிடம் ஏதோ சமிஞ்சையால் சொல்லிவிட்டு அகன்றுவிட, வீராவுடன் இருந்த அந்த மாணவ பட்டாளம் தவிப்புற்றது.  "உங்க காலேஜை ரெஜிஸ்டர் பண்ணியாச்சு" என்று அரவிந்த் உடனிருந்தவன் சொல்ல, எல்லோரும் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டு அங்கிருந்து சென்றனர். "வீரமாக்காளி... உங்க ஐடி கார்ட்" என்று பதிவு செய்யும் மாணவன் கத்த, திரும்பிப் பார்த்த அவளின் பார்வையில் அத்தனை ஆவேசம்! "அவனை ஒரு வழி பண்ணிடுறேன்" என்று பதிவு செய்யும் இடத்தை நோக்கி செல்லப் பார்த்தவளை, அவள் தோழமைகள் கெட்டியாய் பிடித்துக் கொண்டனர். இல்லையென்றால் அவனை நிச்சயம் அடித்து வைத்து புது பிரச்சனையைக் கிளப்பிவிடுவாள்.  அவளை தடுத்துவிட்டு வேறொருவன் சென்று அவளின் ஐடி கார்டை பெற்றுவந்தான். அதன் பிறகு ஆட்டம் பாட்டம் நாடகங்கள் என்று போட்டிகளெல்லாம் அரங்கேற அந்த அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. அதுவும் வீராவின் கல்லூரி நிகழ்ச்சிகள் வரும் போதெல்லாம் மேடையை விடவும் மாணவர்கள் எல்லோரும் கீழே விசிலடித்து ஆரவரித்த வீராவையே பார்த்துக் கொண்டிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாய் அவளும் அவர்கள் கல்லூரி சார்பாக ஆண் வேடமணிந்து மோனோ ஆக்டிங்கில் பங்கேற்க, அவள் நடிப்பைக் கண்டு அனைவருமே வியந்து பாராட்டினர். யாருக்குமே அவள் பெண்ணென்று சந்தேகம் எழும்பவில்லை. அந்தளவுக்காய் இருந்தது அவளின் நடிப்பும் திறமையும்! அன்று முழுக்க அரவிந்த் மற்ற வேலைகளையெல்லாம் மறந்து அவளை மட்டுமே பின்தொடர்ந்து கொண்டிருக்க, அன்று அவள் மீது பிடித்த பித்து! இன்னும் அவனுக்குத் தீர்ந்தபாடில்லை. அவள் தொடர்ச்சியாய் அவனை நிராகரித்த போதும் கூட, அவளை விடாமல் பின்தொடர்ந்து கொண்டுதான் இருந்தான். என்ன செய்வது? அவனால் அவளை விட்டுக் கொடுக்கவோ விலகி செல்லவோ முடியவில்லை. அந்தளவுக்காய் அவளின் மீது வெறித்தனமாய் தன் காதலை வளர்த்துக் கொண்டுவிட்டான். இன்றைய நிலைமைக்கு அவனே அவளை மறக்க வேண்டும் என்று எண்ணினாலும் அது அவனுக்கு சற்று அசாத்தியமான காரியம்தான்! இந்த நினைப்பில் அவன் காரை ஓட்டிக் கொண்டு செல்ல, அப்போது அழைத்த கைப்பேசியை சலிப்பாய் ஏற்று தன் காதுக்கு கொடுத்தவன், அப்படியே அதிர்ந்து போனான். அவனுக்கு கிடைத்த தகவல் அவன் தந்தை நாரயாணசுவாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தீவிரமான மாரடைப்பு! ஒரு வாரமாய் ஏற்பட்ட மனஉளைச்சல்! அவரை அந்தளவுக்கு பாதித்திருக்க, இறுதியாய் அவர் பேசிய அந்த அழைப்பு! அதற்கு பின்னரே மனஉளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பில் சாய்ந்தார். அவரிடம் பேசியது வேறுயாருமல்ல! சாரதி! சாரதி டெக்ஸ்டைல்ஸ் அன்ட் ரெடிமேட்ஸின் நிறுவனர். ஐந்து வருடத்திற்கு முன்பு இத்தகைய பெயர் மற்றும் இந்த நிறுவனத்தைப் பற்றி யாரும் கேள்விபட்டிருக்கக் கூட முடியாது. ஏனெனில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை! ஆனால் இன்றோ டெக்ஸ்டைல் வியாபரங்களில் தனக்கென்று தனி அங்கீகாரத்தை பெற்றிருந்தான். சென்னையின் முக்கிய பிரதான இடங்களில் அதன் கிளைகள் வரிசையாய் திறக்கபட்ட வண்ணம் இருக்க, தீடீரென்று எங்கிருந்து முளைத்தது இந்த சாரதி டெக்ஸ்டைல்ஸ்?! இத்தகைய கேள்விக்கான விடையைதான் அப்பொழுது துணிகடை நடத்திவரும் வியாபார பெருந்தலைகள் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவனின் அசுர வளர்ச்சியைப் பார்த்தவர்கள் பொறாமை கொண்டதைவிட மிரட்சியுற்றதே அதிகம். பாரம்பரியம் என்ற வார்த்தையை உடைத்தெறிந்து விட்டு டெக்ஸ்டைல் வியாபாரத்தில் பலரும் பிரமிக்கும் வண்ணம் உயர உயர கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இளம் தொழிலதிபன்! யாருடைய துணையுமின்றி தனியே வளர்ந்த சுயம்பு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல அவன்! சிறு வயதிலிருந்தான அவனின் கடின உழைப்புக்குக் கிட்டிய வெற்றி அது! அவமானங்களுக்குக் கிடைத்த சன்மானம்! அவன் கடந்து வந்த பாதை மோசமான முட்பாதை! இருபத்தி எட்டு வயதில் அவன் எட்டிய உயரம் அசாத்தியமானது. அவனே சாரதி! நல்லவன் கெட்டவன் என இரு அவதாரங்களையும் எடுப்பான்... தேவைப்படும் போது! இன்று அவன் எந்த அவதாரத்தில் இருக்கிறான் என்பதை நாம் நேரில்தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஓர் ஆடம்பரமான அறையில் சிகரெட்டை புகைத்தபடி, கம்பீரமும்... மிடுக்கும்... உயரமும்... என மூன்றும் சரிவிகிதத்தில் சரியாய் அமைந்திருக்க, அவனின் கூர்மையான விழிகள் அவை எல்லாவற்றையும் வீழ்த்திவிட்டு முதன்மை இடத்தைப் பிடித்திருந்தது. அவனின் அடர்ந்த புருவங்களுக்குக் கீழிருக்கும் அந்த கூரிய வாள் போன்ற விழிகளுக்கு ஓர் தனி சக்தி தான்!  அவனின் ஒற்றை பார்வையே போதுமானது. எதிரே நிற்கும் யாராயினும் நிலைகுலைந்து போவார்கள். அதோடு நேர்த்தியான மீசையும் சில நாட்களாய் வழிக்காத தாடியுமென அவனிடம் இளமையைக் கடந்த ஓர் ஆளுமை தென்பட்டது. அவன் முகதோற்றமோ அவன் பழகுவதற்கு சற்றே கடினாமனவன் என்று சொல்ல, அத்தகைய பிம்பத்தை உடைக்கும் விதமாய் இருந்தது சாரதியின் அப்போதைய நடவடிக்கை! விளம்பர மாடல் இஷிகாவுடன் அத்தனை நெருக்கமாய் இருந்தான் அவன். அதுவும் கண் கொண்டு காண முடியாதளவுக்கு! அவன் மடியில் அவள் இருக்க அவளுடனாய் சல்லாபித்துக் கொண்டே கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தான். "என்ன நாராயணன் சார்? எப்படி இருக்கீங்க?" எகத்தாளமாய் வந்த அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், "நேரடியா விஷயத்துக்கு வா? நீ எதுக்கு எனக்கு கால் பண்ண?!" நறுக்கு தெறித்தது போல் கேட்டார் நாரயணன். "தங்கள் நலத்தை பற்றி விசாரிக்கவே யாம் அழைப்பு விடுத்தோம்" எள்ளலாய் அவன் பதிலளிக்க ஓர் பெண்ணின் சிரிப்பின் குரல் பின்புலத்தில்! நாராயணசுவாமி முகத்தில் கோபம் கொப்பளிக்க, சாரதா பதறி கொண்டு, "என்னங்க? ஏன் டென்ஷனாகிறீங்க? யாருங்க பேசுறது?" என்று வினவ அவர் மனைவியின் வார்த்தைகளை அலட்சியம் செய்துவிட்டு எழுந்து நின்றவர், "அப்போ... நடந்த எல்லாத்துக்கும் நீதான் காரணமா?!" அனலைக் கக்கியது அவர் பார்வை! "எக்ஸேக்ட்லீ... நடந்த எல்லாவற்றிற்கும் யாமே காரணம்! இந்த சாரதியே காரணம்" என்றவன் சொல்லி கர்வமாய் சிரிக்க நாராயணசுவாமி சீற்றமாய், "டேய் உன்னை!" என்று கோரமாய் குரலெழுப்பினார். "கத்தாதீங்க நாரயணன் சார்... பட்டுன்னு நெஞ்சுவலி கிஞ்சுவலி வந்துடப் போகுது... ஏற்கனவே இருக்குற பிரச்சனை போதாதா? இதை வேற இழுத்துவிட்டுக்காதீங்க... அப்புறம் சாரதம்மாவுக்குதான் கஷ்டம்" அமர்த்தலாகவே அவன் சொல்ல, அவருக்கோ அவன் பேச பேச உள்ளத்தில் எரிமலையாய் கோபம் வெடித்து சிதறியது. அப்போது சாரதி, "சும்மா இருந்தவனை சீண்டி விட்டுவிட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா?!" என்க, "நான் அப்படி என்னடா பண்ணேன் உனக்கு" சினத்தோடு கேட்டார். "அய்! தெரியாத மாதிரி கேட்குறீங்க... என் கடையில கார்ப்ரேஷன் ரூல்ஸ்படி எட்டாவது மாடி கட்டக் கூடாதுன்னு கம்பிளைன்ட் பண்ணி தரைமட்டமாக்குனது மறந்து போச்சா?!"  "அது... அது ஒண்ணும் நான் பண்ணல" என்று அவர் தடுமாறினார். "சும்மா சமாளிக்காதீங்க... உங்க கடை உயரத்துக்கு... நேத்து வந்தவன் கடை வளர்ந்திருச்சேங்குற காண்டல நீங்க இதை செஞ்சீங்கன்னு எனக்குத் தெரியும் முதலாளி" அவன் தீவிரமாய் பேச எதிர்புறத்தில் ஓர் நீண்ட மௌனம்! "நீங்க செஞ்சதுக்கு பதிலுக்கு பதில் நானும் செஞ்சேன்... ஆனா என்ன? கொஞ்சம் இறங்கி செஞ்சுட்டேன்" என்றான் சாரதி. "என் கடையில வேலை செஞ்சு... என்கிட்டயே தொழில் கத்துகிட்டு என்னையே அசிங்கப்படுத்திட்ட?! நன்றி கெட்ட நாயே!" படுகோபமாய் அவர் சொல்ல, "ஆமா! நான் உங்ககிட்ட வேலை செஞ்சேன்தான்... அதுக்கு... கடைசி வரைக்கும் நாய் மாதிரி வாலை ஆட்டிக்கிட்டு உங்க பின்னாடியே வரணும்னா எப்படி? கத்துக் கொடுத்த குருவாவே இருந்தாலும் எதிரே நின்னா... அடிச்சுதானே ஆகணும்... அப்பதான் நம்ம ஜெயிக்க முடியும்னு மகாபாரதத்துல அந்த பரமாத்மாவே சொல்லி இருக்காரு முதலாளி" என்றவன் இடைவெளி விட்டு, "இதுக்கப்புறமும் இந்த சாரதிகிட்ட விளையாடாதீங்க... அப்புறம் கொள்ளி போட உங்களுக்கு பிள்ளை இருக்க மாட்டான்" என்று அழுத்தமாய் உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டிக்க நாரயணன் அப்படியே படுக்கையின் மீது அமர்ந்தார். கைகட்டிக் கொண்டு பவ்வியமாய் அவர் பார்த்த சாரதிக்கும் இப்போது அவரிடம் பேசிய சாரதிக்கும் மலையளவு வித்தியாசம்! சாரதி! பிறக்கும் போது பணம் படைத்தவன் அல்ல. ஆனால் பணக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாகவே சாக வேண்டுமென்பதே அவன் இலட்சியம்! அந்த இலட்சியத்திற்காக அவன் காலிலும் விழுவான். சில நேரங்களில் காலையும் வாருவான். எந்த யுக்தியை எங்கே கையாள வேண்டுமோ அதை அங்கங்கே சரியாய் பயன்படுத்தியதின் விளைவுதான் அவனின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு காரணகர்த்தா! அவனின் வளர்ச்சியை பார்த்து நாராயணசுவாமிக்குமே பொறாமை எழுந்தது உண்மைதான். அந்த கடுப்பில்தான் அவர் கடையின் உயரத்திற்கு நிகராய் வளர்ந்த அவன் கடையின் மேல்தளத்தை தரைமட்டமாக்க, ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டாயிற்றே! அதுவும் சாரதி பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவன். அங்கே நாரயாணசுவாமிக்கு ஏழரை ஆரம்பித்தது. இஷிகாவை வைத்து புத்திசாலிதனமாய் காய் நகர்த்தி அவரை சிக்கலில் சிக்க வைத்தான். அதுவும் அவன் இப்போது கடைசியாய் சொன்ன வார்த்தையில் கதிகலங்கி போனவர், அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் வீழ்ந்தார். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான சாரதி தன் கைப்பேசியின் அழைப்பைத் துண்டித்த மறுநொடி அதனை படுக்கையில் தூக்கியெறிந்துவிட்டு இஷிகாவை இறுக அணைக்க, அவள் இன்பமாய் அதிர்ந்தாள். "வலிக்குது... கொஞ்சம் சாப்ஃடா?!" என்க, "அதெல்லாம் இந்த சாரதியோட அகராதியிலேயே கிடையாது" என்றபடி அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தியவன், அவளுக்குத் தேவையான சினிமா சான்ஸை வாங்கிக் கொடுத்து அவளை தன்வசம் இழுத்து நாராயணசுவாமியின் விதியை எழுதியதோடு அவனுக்கு தேவையானவற்றையும் அவளிடமிருந்து தீர்த்துக் கொண்டான். கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே! எதிலும் நஷ்டப்படுவது அவனுக்குப் பிடிக்காது. எல்லாவற்றிலும் லாபம் ஈட்ட வேண்டும். அவனுக்கு எதுவும் வியாபாரம்! எதிலும் வியாபாரம்! இத்தகைய அடங்கா குதிரையாய் தறிகெட்டு ஓடும் சாரதியை அடக்கி ஆளப் பிறந்தவளோ, இப்போது அடங்கி ஓடுங்கி டிவிக்குள் ஐக்கியமாகி இருந்தாள். பல ஒண்டுகுடித்தனங்கள் இருக்கும் ஓரே அறை கொண்ட சிறுவீடு அது! நடுவில் தடுப்புப் போட்டு ஒரு பக்கத்தில் சமையல் அறை. பத்து பதினைந்து சமையல் உபகரணங்களோடு ஒரு ஸ்டவ்! வரிசையாய் நாலு ஐந்து வண்ணமயமான பிளாஸ்டிக் குடங்கள், அலமாரியே தெரியாமல் பிதுங்கியிருந்த துணிமணிகள், ஓரே ஓரு சேர், நானும் இருக்கிறேன் என்று பெயருக்கென்று ஓடும் ஓரே ஒரு காற்றாடி, இவைகளோடு அத்தியாவசியமாகிப் போன அனாவாசியமான டிவி! இப்படி பொருட்களை எல்லாம் ஓரே அறைக்குள்ளேயே அடைத்துக் குடித்தனம் நடத்தும் திறமையெல்லாம் சென்னை வாசிகளுக்கே உண்டான திறமை. இந்த பொருட்களோடு பொருட்களாய் வீரா டிவிக்குள்ளேயே தொலைந்திருக்க, "என்ன மாதிரி கண்ணுயா?" என்றவள் அந்த படத்தின் கதாநாயகனைப் பார்த்து மெச்சிக் கொள்ளும் போதுதான் அவள் சிலையல்ல! உயிருள்ள ஜீவராசி என தெரிந்தது. ‘காக்க காக்க’ படத்தில் வரும் சூர்யாவின் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தவள் அந்த பாட்டை தன் மெல்லிய இதழ்களால் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். 'ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா அன்பே இரவைக் கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா என் கனவில் ஆ… நான் கண்ட ஆ… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ… பேசிடலாம் கலாபக்காதலா' நாயகனின் இறுக்கமான பார்வையிலும் நிமிர்ந்த நடையிலும் அப்படியே தலைகுப்புற வீழ்ந்துவிட்டாள். அதுவும் அவன் நாயகியை இழுத்து அணைக்கும் போது அவளின் உணர்வுகளெல்லாம் சிலாகிக்க... அவையெல்லாம் பத்தொன்பதா? இருபதா? என ஊசலாடிக் கொண்டிருக்கும் அவள் வயது படுத்தும்பாடு! அவள் அந்த பாட்டில் தனைமறிந்து கிடக்க, முதுகில் சரேலன்று வீழ்ந்த அடியில் வீரா அப்படியே அதிர்ச்சிகுள்ளாகி திரும்ப, பின்னோடு சொர்ணம் பத்ரகாளியாய் காட்சி கொடுத்துக் கொண்டு நின்றிருந்தார்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா