மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aval draupathi allaAval Draupathi Alla - 24Post ReplyPost Reply: Aval Draupathi Alla - 24

Quote from monisha on November 15, 2020, 10:24 PM

24

சாபக்கேடு
நெடுஞ்சாலையில் விர்ரென அந்த கார் பறந்து கொண்டிருக்க, சாரதிதான் அதனை இயக்கிக் கொண்டிருந்தான். வீரா அவன் அருகாமையில் அமர்ந்து கொண்டு, "சார்" என்றவள் அழைக்க, "ஹ்ம்ம்" என்றான் சாலையை பார்த்தபடியே! "நான் ஒட்டின்னு வர்றேன் சார்... இதுக்கு மேல எனக்கே வழி தெரியும்" என்றவள் கெஞ்சலாய் கேட்க, "ப்ச்... வீரா" என்று சாரதி திரும்பி சலித்துக் கொள்ள அவள் மேலே பேசாமல் மௌனமாகினாள். அவள் இப்படி அவனிடம் முதல் முறையாக கேட்கவில்லை. அந்த பங்களாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கேட்டுக் கொண்டு வருகிறாள். அவனும் வேண்டாமென்று மறுத்துக் கொண்டு வருகிறான். ஆனால் வீராவும் விடாமல் தானே வண்டி ஓட்டிவருவதாக அவனிடம் கேட்டு அவனை கடுப்பேத்திக் கொண்டிருந்தாள். "சார்" என்றவள் மீண்டும் சில நொடிகளில் அழைக்க, "நீ சும்மாவே வர மாட்டியா?!" என்று கேட்டு கடுப்பானான். "ஏன் சார் என்னை வண்டி ஒட்ட கூடாதுங்குற... நானே ஓட்டுறனே" "வீரா" என்றவன் கூர்மையாய் முறைக்க அதற்கு மேல் பேசினால் அவன் நெற்றிக் கண்ணை திறந்துவிடுவானே என்று அஞ்சி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு, அவன் ஏன் தன்னை வண்டி ஓட்டுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறான் என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டு வந்தாள். அவனும் அவளைப் போலவே எதைக் குறித்தோ யோசித்துக் கொண்டுதான் வந்தான். அதனாலேயே இருவருக்கிடையில் ஓர் பலத்த மௌனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் புறம் திரும்பியவன் தன் மௌனத்தைக் கலைத்து, "ஆமா! உன் வீட்டுக்கு எந்த பக்கம் போகணும்" என்று கேட்டான். அப்போதே அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தவள் அதிர்ச்சியாகி, "இது எங்க ஏரியாவாச்சே சார்" என்றாள். "அதுவே தெரியலயா உனக்கு?" எனறவன் எகத்தாளமாய் கேட்க, "ஏன் சார்?... நம்ம வூட்டான்டையே உட்டிருந்தா நான் பஸ்ஸேறி வந்திருப்பேன்ல... நீ இன்னாத்துக்கு சார் இம்மா தூரம் வந்திக்கினே" என்றாள். "ப்ச் தேவையில்லாததெல்லாம் பேசாதே... வழி மட்டும் சொல்லு" "பக்கத்துலதான் சார்... நான் இங்கயே இறங்கிக்கிறேனே!" அவன் அவளைக் கூர்மையாய் பார்க்க, அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் புரியாமல் அவள் வழி உரைத்துவிட்டு, "சார் சார் நான் இங்கேயே இறங்கிக்கிறேன்" என்று கெஞ்சிப் பார்த்தாள். "ஏன்?" "இல்ல சார்! ஏற்கனவே எங்க ஏரியால தப்பு தப்பா பேசினிக்கிறாங்க... நான் இம்மா பெரிய கார்ல போய் இறங்கினன்னு வைச்சுக்கோ... அவ்வளவுதான்!" என்றவள் தயக்கமாய் சொல்லி முடிக்கும் போதே அவன் அவள் சொல்வதைப் பொருட்படுத்தாமல் காரை அவள் வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுத்திவிட்டான். அவளுக்குப் பதட்டமானது. "தேங்க்ஸ் சார்" என்று சொல்லி அவனை அவசரமாய் அவள் துரத்திவிட எத்தனிக்க, "ஏன் என்னை உள்ளே கூப்பிட மாட்டியா?" என்றான். 'ஷப்ப்பா இவன் கூட முடியலடா சாமி' என்றவள் சலித்துக் கொண்டிருக்கும் போதே சாரதி காரை விட்டு இறங்கிவிட, அந்த ஏரியா மக்கள் அந்த காரையும் அவனையும் அதிசயித்துப் பார்த்தனர். அதோடு வீராவும் அந்தக் காரை விட்டு இறங்கியதைப் பார்த்தவர்களுக்கு அன்றைக்கான அவல் பொரி கிடைத்துவிட்டது. வீராவைப் பார்த்த எல்லோரின் முகமும் அஷ்டகோணாலாய் மாறி பல்வேறு விதமான முகபாவங்களைக் காட்ட, "சார்! அல்லோரும் தப்பு தப்பா பார்க்கிறாங்க" என்றாள். அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல், "ஆமா! உன் போர்ஷன் எது?" என்றவன் வினவ அவள் கடுப்பேற தன் வீட்டை சுட்டிக் காட்டினாள். அதே நேரம் அவனை முந்திக் கொண்டு அவள் முன்னாடி சென்று மூடியிருந்த கதவைத் தட்டி, "நதி... அம்மு..." என்றழைக்க, சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டு அமலாவும் நதியாவும் வீராவைப் பார்த்ததும் உணர்ச்சி பொங்க அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தனர். அவள் அதிர்ச்சியாய் அவர்கள் முகத்தைப் பார்க்க, இருவரின் முகமும் அழுதுவடிந்து விழியெல்லாம் சிவந்திருந்தது. "இன்னாங்கடி ஆச்சு?!" என்றவள் அழுத்திக் கேட்க, அவர்கள் இருவரும் அழுதபடியே தன் தமக்கையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். "எவனாச்சும் மறுபடியும் கிண்டல் பண்ணானுங்களா?" "இல்ல க்கா... நைட்டு ரவுடிப் பசங்க... குடிச்சிட்டு தெருவில ஓரே கலாட்டா... கன்னா பின்னான்னு பேசிக்கினானுங்க" இதனைக் கேட்டதும் வீரா யோசனையோடு, "ஓ!! அதான் நான் ஃபோன் பண்ணும் போது கடையில ராணியக்கா ஃபோனை எடுக்கலயா?!" என்று விசாரிக்க, "ஹ்ம்ம்... அல்லாரும் அவனுங்கள பார்த்து பயந்து கடை வூட்டெல்லாம் சாத்திக்கின்னு உள்ளே போயிட்டாங்க" "ப்ச்... குடிக்கார பசுங்களா இருப்பானுங்க... இதெல்லாம் நம்ம தெருவில எப்பவும் நடக்கிறதுதானே... இதுக்கு இன்னாத்துக்குடி அழுவுறீங்க" என்றபடி அவர்கள் கண்ணீரை அவள் துடைத்துவிட, "இல்ல க்கா அவனுங்க நம்ம வூட்டு வாசலில் வந்துதான் கலட்டா பண்ணிக்கினானுங்க" என்றதும் வீரா அதிர்ந்தாள். "இன்னாவாம் அவனுங்களுக்கு?!" "உன்னை அனுப்பிச்சு விடணுமா... நீ வந்தாதான் போவானுங்களாம்... இல்லன்னா நீங்க இரண்டு பேரும் வாங்கடின்னு... சொல்லி" இருவரும் மேலே பேச முடியாமல் கண்ணீர்விட வீராவின் முகம் இருளடர்ந்து போனது. அவர்கள் மேலும், "நாங்க கதவை மூடிக்கின்னு உள்ளே வந்துட்டோம்... அவனுங்க இராவெல்லாம் கதவைத் தட்டிக்கின்னே இருந்தானுங்க" "நம்ம தெருவுல யாருமே எதுவும் கேட்கலாயடி...?!" வீரா ஆதங்கமாய் வினவ, "ம்ஹும்" என்றனர். "யார் அவங்கன்னு தெரியுமா?" என்று சாரதி அவர்கள் உரையாடல்களுக்கு இடையில் புகுந்து கேட்டான். அப்போதே அமலாவும் நதியாவும் அவனைக் கவனித்தனர். வீராவோ இந்த டென்ஷனில் அவன் உடன் வந்ததை மறந்துவிட்டிருந்தாள். "சாரி சார்... சாரி சார் இந்த டென்ஷன்ல... நீ உள்ளே வா சார்" என்றவள் அழைக்க சாரதி அப்போது உள்ளே நுழைந்து அந்த ஒற்றை அறை போர்ஷனை சுற்றும் முற்றும் பார்வையிட்டவன் கடைசியாய் சொர்ணத்தின் போட்டோவை உற்று பார்த்துக் கொண்டிருக்க, வீரா நாற்காலியைக் கொண்டு வந்து வைத்து, "உட்காரு சார்" என்றாள். அப்போது நதியாவும் அமலாவும், "யாரு க்கா?" என்று மெலிதாய் கேட்க, "சாரதி சார்" என்றாள் குரலைத் தாழ்த்தி! அப்போது அமலா ஒரு நொடி தன் அழுகையெல்லாம் மறந்துவிட்டு, "சர்வாதிகாரியா?!" என்று கேட்டுவிட வீரா பதறிக் கொண்டு, "லூசு" என்று திட்டியவள் அவன் புறம் திரும்ப அவன் அவளை விழிகள் இடுங்கப் பார்த்தான். "தப்பா நினைச்சுக்காத சார்... அவங்க சாரதிங்கிறதைதான்... த. ப். பா" என்று இழுத்தாள். "தப்பா... ஹ்ம்ம் நம்பிட்டேன்" என்று முறைத்தபடியே தலையசைத்தான். "ஏன்க்கா? நீ பொண்ணுன்னு சாருக்கு தெரிஞ்சு போச்சா?!" அமலாவும் நதியாவும் வீராவின் காதைக் கடிக்க, "ஷ்ஷ்ஷ்" என்று அவர்களை அதட்டியவள், "அம்மு போய் சாருக்கு டீ வாங்கின்னு வா" என்றாள். "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றான் அவன். "ஏன் சார் என் வூட்டுல சாப்பிட மாட்டியா?!" "அப்படியெல்லாம் இல்ல" "அப்ப சாப்பிடு சார்... நீ போய் வாங்கின்னு வா அம்மு" அமலா தயங்கி நின்று, "வெளியே போகவே ஒரு மாறி இருக்குக்கா... இன்னான்னுவோ பேசிக்கிறானுங்க" என்றாள். "சரி நானே போய் வாங்கிட்டு வர்றேன்... எவன் என்ன பேசுறான்னு நானும் பார்க்குறேன்" என்று வீரா சொல்லிக் கொண்டே வெளியேற, "ஏ வீரா வேண்டாம்" என்று சாரதி அழைப்பதைக் காதில் வாங்காமல் சென்றுவிட்டாள். அப்போது நதியாவும் அமலாவும் அவனைப் பார்த்து தயக்கமாய் நிற்க, சாரதி முறுவலித்து, "ஆமா உங்க பேர் என்ன? நீங்க இரண்டு பேரும் என்ன படிக்கிறீங்க?" என்று ஆர்வமாய் வினவ, இருவரும் தங்கள் தங்கள் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொள்ள, நதியா அவனிடம், "நான் ப்ளஸ் ஒன்... அவ நைன்த்" என்றாள். அவர்களிடம் சிநேகமாய் புன்னகையித்தவன், "ஆமா... நேத்து உங்கக்கா என்கிட்ட உங்களை ரொம்ப தைரியசாலின்னுசொன்னா... நீங்க என்னடான்னா சரியான அழுமூஞ்சிகளா இருக்கீங்க" என்றவன் கேலியாய் கேட்க, "நாங்க ஒண்ணும் அழுமூஞ்சிங்க எல்லாம் இல்ல... அக்காவைப் பார்த்ததும்தான் அழுதிட்டோம்... அந்த ரவுடிப் பசங்க நைட்டு கதவை திறந்து உள்ளே வந்திருக்கணும். மிளகா பொடி தூவி... அவனுங்கள விளக்கமாத்தாலேயே அடிக்கலாம்னு எல்லாம் எடுத்து வைச்சிருந்தோம்... அதுக்குள்ள ஓடிட்டானுங்க பேமானி பசங்க" என்றவர்கள் சொல்லி முடித்து, அந்த அறையின் ஒரு ஓரத்தில் கை நீட்டிக் காண்பிக்க அங்கே மிளகாய் பொடி மத்துகட்டை விளக்கமாறோடு சேர்த்து அருவாமனையும் இருந்தது. அவற்றையெல்லாம் வியப்பாகப் பார்த்தவன் பின் சிரித்துவிட்டு, "நீங்க இரண்டு பேரும் உங்க அக்காவுக்கு கொஞ்சமும் குறைஞ்சவங்க இல்ல" என்று சொல்லி மேலும் சிரிக்க அவர்கள் அவனை வியப்பாய் பார்த்தபடியே நின்றனர். சாரதி அதன் பிறகு அவர்களோடு பேசப் பேச நதியாவும் அமலாவும் அவனிடம் இயல்பாக கலந்துரையாட, அவர்களின் வெகுளித்தனமான பேச்சில் சாரதியும் மனம்விட்டு சிரித்துப் பேசினான். அதே நேரம் வெளியே டீ வாங்க சென்ற வீராவைப் பார்த்த அந்த ஏரியா மக்களின் பார்வைகள் யாவும் அவளை வேட்டையாடுவது போல் பார்க்க, சிலர் அவள் காதுபட இழிவான வார்த்தைகளால் நிந்தித்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் டீயை வாங்கிக் கொண்டு அவள் தன் வீட்டிற்குள் நுழைய, அப்போது சாரதி அவர்களிடம் சகஜமாய் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யம் மிகுந்தது. அதே வியப்போடு வீரா சாரதிக்கு டீயைத் தர, அதனை வாங்கிப் பருகியவன், "சரி வீரா... நான்கிளம்பறேன்... உங்க திங்க்ஸெல்லாம்பேக் பண்ணிக்கோங்க" என்றுரைக்க "எதுக்கு சார்?" என்று குழப்பத்தோடு வினவினாள். "நீயும் உன் தங்கச்சிங்களும்n நம்ம அவுட் ஹவுஸ்ல வந்து தங்கிக்கோங்க" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி அவன் செல்ல, "வோணாம் சார்... நான் சுகுமாரு கிட்ட சொல்லி வீடு பார்க்க சொல்லியிருக்கேன்" என்றாள். "அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை" என்று சொல்லி கொண்டே அவன் தன் காரில் ஏறி புறப்பட்டுவிட்டான். வீரா யோசனையோடு வீட்டிற்குள் நுழைய, "சார் போயிட்டாரா க்கா?!" என்றவர்கள் கேட்க, "ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள். அமலா அப்போது, "நம்ம பேசாம சாரோட அவுட் ஹவுஸுக்கு போயிடுவோம் க்கா... இங்க வேணா க்கா... ரொம்ப பயமா இருக்கு க்கா" என்றாள். வீரா அவர்கள் இருவரையும் ஆதரவாய் அணைத்துக் கொண்டாள். அவர்கள் பயம் நியாயமானது. ஆனால் சாரதியையும் முழுவதுமாக நம்ப அவளால் முடியவில்லை. அவனுக்கு வெறும் உதவி செய்யும் எண்ணம் மட்டும்தானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழவே செய்தது. இது குறித்து அவள் சுகுமாருடன் பேச அவனும் அவர்கள் அவுட் ஹவுஸில் தங்கிக் கொள்வதே சாலச்சிறந்தது என்று சொல்லிவிட்டான். இறுதியாய் யோசித்து யோசித்து மண்டை குழும்பி அவளும் அந்த முடிவுக்கே வந்துவிட நதியாவும் அமலாவும் ரொம்பவும் ஆர்வமாய் பொருட்களையெல்லாம் அடுக்கிவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வாசலில் அன்று கலாட்டா செய்த ரவுடிகள் வந்து நிற்க, அமலா அஞ்சி கொண்டு வீராவின் அருகாமையில் ஓடிவந்து, "அவனுங்கதான்க்கா அன்னைக்கு கலாட்டா பண்ணது" என்றதும், வீரா சீற்றத்தோடு, "யாருடா நீங்க?... மறுபடியும் பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா?" என்று ஆவேசமாய் கேட்கும் போதே அவர்கள் குப்புற விழுந்து அவர்கள் காலடியில் கிடந்தனர். சகோதிரிகள் மூவரும் குழப்பமாய் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொள்ள அந்த ரவுடிகள் விழுந்தபடியே, "எங்களை மன்னிச்சிடுங்க... இனிமே இப்படி பண்ணமாட்டோம்" என்றனர். வீரா ஒன்றும் புரியாமல் நிற்க அப்போது அவளிடம் தவறாக பேசிய அந்த வயது முதிர்ந்தவரும் அவள் முன்னிலையில் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் எரிச்சலடைந்தவள், "யோவ்! நீ எதுக்குய்யா இங்க வந்த?" என்று கோபம் பொங்கக் கேட்க, "என்னை மன்னிச்சிரும்மா... நான் பேசினது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு" என்றார் அவரும்! வீரா உச்சபட்ச வெறுப்பொடு, "ஒரு மண்ணு மன்னிப்பும் வேணாம்... போங்கடா வெளியே" என்று சொல்லி அவர்களை விரட்டிவிட்டு அவள் துரிதமாய் கதவை மூட சென்ற போது கேட்டின் அருகில் இருந்த காரில் சைமனைப் பார்த்து துணுக்குற்றாள். "இவன் சாரதி சாரோட ஆளாச்சே" என்று யோசிக்கும் போதே நடந்தவற்றைக்கான காரண காரியங்கள் அவளுக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. சாரதியின் இந்த அக்கறையை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் அவள் மனம் குழம்பியது. ஆனால் அந்த எண்ணத்தையெல்லாம் தாண்டி வீராவும் அவளின் இரு தங்கைகளும் சாரதியின் வீட்டை வந்தடைந்தனர். அப்போது வீராவைப் பார்த்த தெய்வானை, "ஆமா! நீ அந்த டிரைவர் பையன் இல்ல... என்னடா அம்பி? மீசையை மழிச்சிட்ட அப்படியே பொம்பளையாட்டமா இருக்க" என்று ஆச்சர்யமாய் வினவ, "மாமி நான்" என்று அவள் பேச ஆரம்பிக்கவும், "என்னடா பொம்பள குரல்ல பேசற" என்று அதிர்ச்சியாய் கன்னத்தில் கை வைத்துக் கொண்டார். "அய்யோ நான் பொண்ணுதான் மாமி" "ஓ!! வீராவோட தங்கச்சியா நீ?!" "ப்ச் இல்ல" "அப்போ அக்காவா?!" "அய்யோ! மாமி நான்தான் வீரா... இவங்க இரண்டு பேரும் என் தங்கச்சிங்க" என்று அமலாவையும் நதியாவையும் அவள் காண்பிக்க தெய்வானை வியப்பு அடங்காமல், "எதுக்குடா பொம்பளையாட்டமா வேஷம் போட்டுக் குரலை மாத்திப் பேசிட்டிருக்க" என்றார். "அய்யோ மாம்ம்ம்ம்ம்ம்மி... அதான் வேஷம்...இதான் உண்மை... நான் பொண்ணுதான்" என்று உரைத்தவள், தெய்வானையிடம் எல்லாவற்றையும் தெளிவாய் விளக்க அவர் ஷாக்கடித்தது போல் நின்றுவிட்டார். பின் அவர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வீராவை ஏறஇறங்கப் பார்த்து, "கலிகாலம் கலிகாலம்" என்று தலையிலடித்துக் கொண்டு, "இதல்லாம் என்ன பொழுப்போ?!" என்று முகத்தை சுளித்துக் கொண்டுவிட அப்போது சாரதி அங்கே வந்து நின்றான். தெய்வானை அவனைப் பார்த்த மாத்திரத்தில், "பார்த்தியா பார்த்தா... உன்னை எப்படி முட்டாளாக்கியிருக்கா இந்த பொண்ணு" என்று சொல்ல, "அதெல்லாம் எனக்குத் தெரியும்... இவங்க மூணு பேரும் இங்க தங்கிக்க போறாங்க... நீங்களும் உங்க ஆத்துக்காரரும் உள்ளே இருக்குற பெட் ரூமைக் காலி பண்ணிக் கொடுத்திருங்க" என்றதும் தெய்வானை உச்சபட்ச அதிர்ச்சியோடு, "ஏனன்ன்ன்ன்னா இங்க வாங்களேன்?!" என்று கத்தி அழைத்து தன் கணவனிடம் அவர் புகார் தெரிவிக்க, அவரோ விஷயத்தைக் கேட்டறிந்து பொங்கி எழுந்தார். "அபச்சாரம்! அபச்சாரம்!... அவா என்ன குலமோ கோத்திரமோ... அவாளை போய் எங்களோட தங்க வைச்சுக்க சொல்ற... நீ சொல்றது நோக்கே நியாயமா படுதா... பார்த்தா" என்க, "இல்லதான்... ஆனா என்ன பண்றது சித்தப்பா... இருக்குறது ஒரு அவுட் ஹவுஸ்தானே!" என்றான். "நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்" சாரங்கபாணி தீர்க்கமாய் சொல்ல, "அப்படின்னா சரி... நீங்க வேற எங்கயாச்சும் தங்கிக்கோங்க... அவங்க இங்க தங்கிக்கட்டும்" என்றவன் சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து சென்றுவிட்டான். "அடப்பாவி! பார்த்தீங்களான்னா என்ன சொல்லிட்டுப் போறான்னு" என்று தெய்வானை தன் அதிர்ச்சியை தெரிவிக்க, "எல்லாம் நம்ம நேரம்" என்று புலம்பிக் கொண்டே, "பேசாம அந்த அறையில இருக்க பொருளையெல்லாம் எடுத்துட்டு காலி பண்ணிக் கொடுத்துடு... தங்கித் தொலையட்டும்" என்று சொல்லியபடி  அவர் உள்ளே சென்றுவிட்டார். தெய்வானை முடிந்த வரை வீராவையும் அவள் சகோதிரிகளையும் கூடவே சாரதியையும் சபித்துக் கொண்டே உள்ளறையைக் காலி செய்தவர், சம்சாரம் அது மின்சாரம் பட விசு பாணியில் ஒரு கோட்டைக் கிழிக்க, "எதுக்கு மாமி இந்த கோடு?" என்று கேட்டாள் வீரா. "நீங்க யாரும் இந்தக் கோட்டை தாண்டி வரக்கூடாது... சொல்லிட்டேன்" என்று சொல்லிவிட்டு தெய்வானை சிலுப்பிக் கொண்டு உள்ளே செல்ல, "என்னக்கா... இதை போய் கேடி மாமின்ன... இது சரியான லூசு மாமியா இருக்குது" என்று அமலா சொல்ல, "ஷ்ஷ்ஷ்" என்று வீரா அவளை அதட்டினாள். ஆனால் அவளுக்கே தெய்வானையின் செயல்கள் சிரிப்பை வரவழைக்க, மூவரும் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர். அந்த அறையை சுற்றிப் பார்த்தவர்களுக்கு மனதில் ஒருவித நிம்மதி குடியேறியது. "அப்பா... இப்போதைக்கு பிரச்சனையெல்லாம் ஓரளவுக்கு முடிஞ்சிருச்சு...நம்ம இனிமே கொஞ்சம் நிம்மதியாயிருக்கலாம்" என்று நதியா சொல்ல, "ஹ்ம்ம்" என்று வீராவும் அமைதியாய் சுவற்றில் தலையைசாய்த்து பெருமூச்செறிந்தாள். அப்போது வீராவின் பேசி ஒலித்து அவள் நிம்மதியைக் குலைக்க, அவள் அதனை ஏற்று காதில் வைக்க எதிர்புறத்தில் சாரதியின் குரல்! "கொஞ்சம் வெளியே போகணும் வீரா... வா" அவன் சுருக்கமாக சொல்ல, "சரி சார்" என்றவள் துரிதமாய் புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து கார் அருகில் காத்திருந்தாள். சாரதியும் அங்கே வந்து நின்றான். அவளை ஏறஇறங்கப் பார்த்தவன், "என்ன நீ? அப்பதான் ஆம்பள வேஷத்துல இருந்த... லூசா பேன்ட் சட்டையெல்லாம் மாட்டிட்டு சுத்திட்டிருப்ப... இப்பவுமா?" என்க, "அதுக்கென்ன சார்... பரவாயில்ல" என்றாள். "வேற டிரஸ் மாத்திட்டு வா" "வேறன்னா?" "பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றியா?!" "நீதானே சார் என்னைப் பார்த்தா பொண்ணு மாதிரியே தோணலன்னு சொன்ன... அப்புறம் இன்னா சார்? நான் இப்படியே இருக்கேனே" "இப்ப எனக்கு உன்னைப் பொண்ணு மாதிரி பார்க்கணும்... சுடிதார் இல்லன்னா ஸேரி" "இல்ல சுடிதார் வேண்டாம் கம் இன் ஸேரி" என்றவன் முடிவாய் சொல்ல, "கார் ஓட்ட எதுக்கு சார் புடவை... நான் இப்படியே" என்று தயங்கினாள். "சொல்றதை செய்றியா?" என்றவன் கோபமாய் முறைக்க அதற்கு மேல் அவனிடம் விவாதம் புரிவதில் பயனில்லை என்று அவள் வீட்டிற்குள் சென்று அவளிடம் இருப்பதிலேயே சுமாரான ஒரு புடவையை உடுத்திக் கொண்டாள்.  அப்போது அமலாவும் நதியாவும், "அக்கா சூப்பர்க்கா... புடவையில நீ செமயாகீற" என்றனர் இருவரும். "நிஜமாவாடி... நான் சுமாரான புடவையதானடி எடுத்து கட்டிக்கினே?!" என்றவள் முகம் சுணங்க, "அழகா இருக்கன்னு சொன்னா சந்தோஷபடணும்... நீ இன்னாடான்னா" என்றாள் அம்மு. அவள் முதலாய் வெறுப்பதே அவள் அழகைத்தானே! அதை அவள் துளிகூட விரும்பவில்லை. தன் பெண்மையையும் அழகையும் அவள் ஓர் சாபக்கேடாகவே பார்க்கிறாள். அதுவுமில்லாமல் ஏற்கனவே சாரதி மனதில் என்ன இருக்கிறது என்று குழம்பி கொண்டிருந்தவளுக்கு இப்போது அவன் புடவையில் வரச் சொன்னது மேலும் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. அதனை உள்ளூர மறைத்துக் கொண்டு அவள் வெளியே செல்ல, அப்போது சாரதி சிகரெட்டும் கையுமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அவன் பார்வை வீராவின் வருகையை கவனித்துவிட, அவளோ எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எளிமையாக உடையணிந்து கொண்டு வந்தாள். காதில் சிறியதாய் பட்டன் சைஸிற்கு இரு தோடுகள் பொட்டில்லாத நெற்றிதான் எனினும் நேர்த்தியான புருவங்கள் அழகு! சாயமில்லாத உதடுகள், அழகியல் மேற்பூச்சுக்கள் இல்லாத முகம் எனினும் இயல்பாகவே அவையெல்லாம் அழகுதான்! அவளின் தேகத்தின் வடிவத்தை வெட்ட வெளிச்சமாய் காட்டியது அவள் கட்டியிருந்த புடவை. ஆண்மையின் பாணியில் வெட்டியிருந்தாலும் அவள் கேசமும் அவள் அழகிற்கு அழகு சேர்த்ததே! தன் பெண்மையோ அழகோ எந்தவகையிலும் அவன் பார்வையை உறுத்திவிடக் கூடாது என்ற அவளின் எண்ணம் அவள் எளிமையான உடைபாணியில் நன்றாகவே பிரதிபலிக்க, சாரதியை நொடியில் கவர்ந்தது அவளின் அந்த எளிமைதான்! அவளை மொத்தமாய் தன்விழியில் அளவெடுத்துக் கொண்டவன் சாவியை அவளிடம் தூக்கி வீச அவள் முகம் பிரகாசித்தது. அவள் சந்தோஷமாய் சாவியை பிடித்துக் கொண்டு ஏறி அமர, அவனும் கதவை திறந்து உள்ளே அமர்ந்து கொண்டான். "எங்க சார் போணும்?" "டெஸ்டினேஷனில்லாம ஒரு லாங் டிரைவ்" "சார்" என்றவள் அதிர்ச்சியாக, "நான் உன்கிட்ட கொஞ்ச பெர்ஸனலா பேசணும்" என்றான். "என்ன சார் பேசணும்?!" அவள் குரல் நடுங்கியது. "ப்ச் டென்ஷனாகதே... காரை ஸ்டார்ட் பண்ணு... போயிட்டே சொல்றேன்" என்க,அவன் தன்னிடம் என்ன பேசப் போகிறான் என்ற யோசனையோடு காரை இயக்க ஆரம்பித்தாள். அவன் மேலும், "நான் பேசி முடிக்கிற வரைக்கும் நீ காரை நிறுத்தவும் கூடாது... நடுவுல பேசவும் கூடாது... காட் இட்" என்றவன் சொல்ல தவிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்து சில விநாடிகள் யோசித்தவள், "ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா