மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestNaanum Naavalum Contest ResultPost ReplyPost Reply: Naanum Naavalum Contest Result

Quote from monisha on November 19, 2020, 12:20 PM
#நானும்நாவலும் போட்டிமுடிவுகள். வாசக தோழமைகளுக்கு வணக்கம். கொரானா லாக் டவுனில் நாம் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டாலும் மனம் திறந்து பேச இந்த சமூக ஊடகம் ஒரு புது உலகத்தை நமக்கு அமைத்து தந்திருக்கிறது. முகநூலில் ஒத்த ரசனையுடைய வாசிப்பு நண்பர்களுடன் உரையாடிய போது என் உலகமும் விரிவடைந்தது. தேசம் தாண்டி கடல் தாண்டி தோழமைகள் உருவானர்கள் என்று சொல்லி கொள்வதில் எனக்கு மிக்க பெருமிதம். அத்தகைய நட்பு வட்டத்திற்கான அர்பணிப்பு நோக்கத்தோடும் மேலும் ‘மோனிஷா கதைக்களம்’ தளத்தின் முதல் வருட கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவும் நானும் நாவலும் போட்டி நடத்தப்பட்டது. இங்கே எழுத்தாளர்களுக்கான போட்டி என்பது மிக பிரசித்தம். தடுக்கி விழுந்தால் நாவல் போட்டிகள். வாசகர்களும் சலிக்காமல் படித்து சிறப்பான கதைகளுக்கு தங்கள் விமர்சனங்களை அள்ளி தந்து கொண்டே இருக்கிறீர்கள். அப்படியான வாசகர்களின் அனுபவத்தை கேட்கலாமே என்று உதித்த யோசனைதான் இந்த போட்டி கதைகளை உணர்ந்து ரசித்து படிக்கும் வாசகன்/வாசகிகள்தான் சிறந்த எழுத்தாளனுக்கான ஊக்கம் என்பது என்னுடைய கருத்து. அத்தகைய வாசக தோழமைகளின் ஊக்கத்தின் தொடக்க புள்ளியையும் அவர்கள் நாவலுடன் பயணித்த வந்த பாதையையும் அறிந்து கொள்ளும் பேரவாவை இந்த ‘நானும் நாவலும்’ போட்டி செவ்வனே சிறப்பாக செய்தது. தாத்தா பாட்டி அக்கா தோழி இப்படி ஒவ்வொருக்கும் படிக்கும் ஊக்கம் அவர்களின் வீட்டில் பள்ளியில் நூலகத்தில் என்று பல்வேறு இடங்களில் கிடைத்திருக்கிறது. ஆனால் நாளை வரும் சந்ததிகளுக்கு அத்தகைய ஊக்கம் எங்கிருந்து கிடைக்கும் என்பதுதான் என்னுடைய பெரிய கவலை. நாம் காதலோடு சேகரித்த புத்தகங்கள் செல்லரித்து போய்விடுமோ? என்ற பயம் எப்போதுமே என் மனதில் உண்டு. ஆனால் ஒவ்வொருவரின் பதிவும் என்னுடைய பயத்தை அரத்தமற்றதாக மாற்றிவிட்டது. வாசிப்பின் வாசனையை சுவாசித்தவனால் முழுவதுமாக வேறு எதிலும் லயிக்க முடியாது. படிப்பது மீதான மோகத்திற்கு எல்லைகளே இல்லை. வாசிப்பு முதுமையிலும் நம்மை இளமையாகவும் மனஆரோக்யதுடனும் வைத்திருக்க உதவும் காயகல்பம்.  காற்றாக மாறி உலகத்தை சுற்றி வர செய்யும் ஓர் ஆச்சரியம். அழுபவனை சிரிக்க வைத்து சிரிப்பவனை அழ வைத்து நாவல்கள் நம்மோடு விளையாடும் ஓர் அற்புத உணர்வு என்று சொன்னால் அது மிகையில்லை. புத்தகம் நம்மை மயக்கத்திலும் ஆழ்த்தும். சில நேரங்களில் தண்ணீர் தெளித்து நம் மயக்கத்தை தெளியவும் வைக்கும். சரி… இப்போ போட்டியாளர்கள் பற்றி வருவோம். 23 பேர் பங்கேற்ற இந்த ‘நானும் நாவலும்’ போட்டியில் வெற்றியாளர்களை அறிவிப்பது என்பது சற்றே சிரமமான காரியமாகவே இருந்தது. ஒவ்வொருவரின் பதிவை படிப்பதே புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரவரின் பதிவும் ஒன்றை மற்றொன்றை மிஞ்சி நின்றது என்று சொல்லலாம். நாவல் படித்த அனுபவங்கள் என்று சொல்வதை விட வாசிப்பின் மீதான காதல் என்று விவரித்தால் சரியாக இருக்கும். இந்த காதலில் யாருடையது உயர்ந்தது தாழ்ந்தது என்று தராதரம் பிரிக்க இயலாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. எனினும் சிறப்பான இருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 1250 பரிசு தொகை என்று தொடக்கத்தில் அறிவித்த பின் அதை மாற்ற இயலாது. எனினும் பரிசு தொகை பெரும் இருவரை தவிர இருவருக்கு மதிப்புமிக்க வாசகர்கள் என்றும்... புதுமையான சிந்தனைக்காக ஒருவருக்கும்... இளம் தலைமுறை வாசகன் என்று ஒருவருக்கும்... மொத்தமாக நால்வருக்கு அடுத்த வெளியாகும் என்னுடைய புத்தகத்தின் ஆசிரியர் பிரதியை பரிசாக அனுப்பி வைப்பதென முடிவெடுத்துள்ளேன்.( புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. வெளியான பின்பு அனுப்பி வைக்கப்படும்.) ********************************************************* தலா 1250 பரிசு தொகை வெல்லும் இருவர்  தேன்மொழி பானு ப்ரியா புத்தகம் பெறுபவர்கள்(4) மதிப்புமிக்க வாசகர்கள்  செல்வராணி சித்ராசரஸ்வதி புதுமையான சிந்தனை  வைஷ்ணவி இளம் தலைமுறை வாசகன்  அவினாஷ் டோனி ****************************************************************************************** இந்த போட்டியை நிறைவாக முடித்து தந்த வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Thanks to all.  என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற உத்வேகத்தை வாசகர்களின் நானும் நாவலும் கருத்துக்கள் அளித்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. -மோனிஷா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா