மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 7Post ReplyPost Reply: Naan Aval Illai - 7

Quote from monisha on November 29, 2020, 8:08 PM

7

வாய்ப்பு
சென்னை விமான நிலையம் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. பல வகையான நிறங்களில் பலவகையான மனித முகங்கள்... இந்தக் கூட்டத்திற்கு இடையில் டேவிட் ஃபார்மல் ப்ளூ ஷர்ட் அணிந்து கொண்டு எல்லோரின் பார்வையும் ஈர்க்கச் செய்ய... தன் கருப்பு நிற கூலர்ஸை சட்டையில் மாட்டிவிட்டுக் கொண்டு தன் கவனத்தை சிதறவிடாமல் விறுவிறுவென நடந்து சென்று கொண்டிருந்தான். அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து வந்து தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடிகன் ராகவின் நுழைவால் எல்லோரின் கவனமும் அவன் புறம் திரும்பியது. நாயகனின் அத்தனை அம்சமும் பொருந்திய தோற்றம் அவனுக்கு. க்ரே நிற ஷர்ட்டில் அவன் நடந்து வந்த தோரணையில் எல்லோருமே அசந்து அவனைப் பார்த்திருந்தனர். கம்பீரம் பொருந்திய உயரத்தோடு அவன் நிமிர்வான பார்வையில் நடந்து வந்து கொண்டிருக்க, ஈக்கள் போல அவனை மக்கள் கூட்டம் மொய்க்கத் தொடங்கின. அவர்களோடு பத்திரிக்கையாளர்களும் முன்னேறி அவனோடு பேச முயன்று கொண்டிருக்க, யாரையும் பொருட்படுத்தாமல் அவன் விமான நிலையத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தான். டேவிடிற்கு இந்தக் காட்சியை பார்க்கக் கோபமாய் இருந்தது. அவன் ஒரு சாதாரண நடிகன். எதற்கு மக்கள் அவனை இப்படி சூழ்ந்து கொள்ள வேண்டும் ? கடவுள் நிலைக்கு அவனைப் பார்ப்பது ரொம்ப அதீதம் என்று தோன்றிற்று. அவன் எண்ணியது போலவே ஒரு கையெழுத்துக்காகவும் புகைப்படத்துக்காகவும் அவனைப் பின்தொடர்ந்து பலர் சென்று கொண்டிருந்தனர். இன்று காலைதான் அவனுடைய திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் பொருட்டு அவன் ரசிகர்கள் எல்லாம் பெரும் குதூகலத்தில் இருந்தனர். படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே சிறப்பாகவே வந்து கொண்டிருக்க, பெங்களூரில் இருந்து வந்திறங்கியவன் நேராய் இயக்குநர் நந்தக்குமாரின் வீட்டிற்குத்தான் சென்றான். தமிழ் சினிமாவில் புதுமையான கருத்துக்களை புகுத்தி படம் எடுக்கும் பிரபலமான இயக்குநர் நந்தக்குமார். ராகவ் வந்திறங்கிய மாத்திரத்தில் நந்தா அவனைச் சிறப்பாக வரவேற்று அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் அனுபவப்பூர்வமான இயக்குநரும் கூட. படம் உறுதியான வெற்றி என்று இருவரும் மார்தட்டி பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களின் பின்னோடு அடக்கமே உருவமாய் சையத் நின்று கொண்டிருந்தான். ராகவ் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் நெருங்கிப் பழகியது சையத்திடம்தான். சையத்தின் திறமை ஏற்கனவே ராகவை ஈர்த்திருந்தது. அவனுக்கு வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் திரைப்படத்துறையில் பெரும் பேறு பெறுவான் என்று ராகவ் முன்னமே கணித்து வைத்திருந்தான். வெகுநேரம் நந்தக்குமாரிடம் பேசிய ராகவ், புறப்படும் முன்னர் சையத்தை தன் அருகாமையில் அழைத்து, "நீங்க சொன்ன ஸ்க்ரிப்ட் பத்தி யோசிச்சேன் சையத்... நாளைக்கு ஈவ்னிங் என் வீட்டுக்கு வாங்க... அதை பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்" என்றான். 'மாஷா அல்லாஹ்' என்று தனக்குத்தானே உச்சரித்து கொண்ட சையத் இன்ப அதிர்ச்சியில் திளைத்தான். அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு ராகவின் மூலமாக அவனைத் தேடி வந்திருந்தது. அந்தக் கணம் அவன் வீட்டில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைத்துப் பார்த்தான். அவன் குடும்பத்தார் முன்னிலையில் தன் திறமையைக் காட்ட அமையும் சரியான சந்தர்ப்பம் இது. அவனின் இத்தனை நாள் உழைப்புக்கான பலன். இதனைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணிக் கொண்டான்.  எங்கே பார்த்தாலும் நடிகன் ராகவிற்கான புகழாரம் ஒலித்துக் கொண்டிருந்தது. வீ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் வாசனின் ஒரே மகன்தான் ராகவ்.  ஏதோ பணம்படைத்தவன் என்பதால் மட்டும் ராகவ் திரைப்படத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறவில்லை. அப்படி மாறிவிடவும் முடியாது. அரசியலில் பணம்படைத்தவன் தலைமை ஏற்கலாம். ஆனால் திரைப்படத்துறையில் மக்கள் அவன் திறமையை ஏற்றால் மட்டுமே சாதிக்க முடியும். அப்படி ஏற்றுக் கொண்டால் அவனைக் கடவுளுக்கு நிகராகவும் பார்ப்பர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது ராகவ் அந்த நிலைக்கு உயர்ந்திருந்தான். பணத்தைத் தாண்டி அவன் திறமையும் அவன் தேடிப்பிடித்த திறமையாளர்களும் அவனுக்குத் தொடர் வெற்றியைத் தேடித் தர, நந்தகுமாரோடு இணைந்த இந்தப் படமும் வெற்றி பெற்றுவிட்டது. இதனை ஹேட்டிரிக் வெற்றி என்றே கொண்டாட வேண்டும். கிட்டதட்ட முதல் நாளே படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அந்தப் படத்தின் போக்கும் ராகவின் நடிப்பும் சாமனியர்கள் மனதையும் கவரும்படியாக இருந்தது என்பதாலேயே அவன் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். அத்தகைய பிரபலமான நட்சத்திரமான ராகவ் இன்று சையத்தின் திறமையை அறிந்து அவனை கைதூக்கிவிட பெரும் வாய்ப்பை உருவாக்கித் தரப் போகிறான். அந்த வாய்ப்பு ராகவின் வாழ்க்கையையும் சேர்த்தே மாற்றப் போகிறது. இங்கே இருவருக்கிடையில் உண்டான பிணைப்பு, விதி முன்னமே தீர்மானித்தது என்பது இருவரும் அறிந்திராத ஒன்று.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா