மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 18Post ReplyPost Reply: Naan Aval Illai - 18

Quote from monisha on November 29, 2020, 8:26 PM

18

உயிர்ப்பித்த உணர்வுகள்
நேற்றிரவு மகிழ் சாக்ஷியை பற்றி பேசியவை எல்லாம் மாயாவை ரொம்பவும் காயப்படுத்தியிருந்தது. அதோடு அவனின் நிராகரிப்பு அவளை சொல்ல முடியாத வேதனைக்கு ஆட்படுத்தியிருந்தது. ஆனால் அவள் அதிகம் வருத்தம் கொண்டது மகிழுக்காகதான். அவன் இன்னும் சாக்ஷியின் நினைப்பில் இப்படி ஓயாமல் மருகிக் கொண்டிருக்கிறானே என்ற கவலை. சாக்ஷி என்று போனாளோ அன்றே அவன் சந்தோஷம் எல்லாம் தொலைதூரம் போனது. அப்படியே அவன் சிரித்து பழகினாலும் அது வெளி உலகத்திற்காக அவன் அணிந்து கொண்ட முகமூடி. நாளடைவில் அந்த முகமூடி அவன் முகமாகவே மாறிப் போக, போலியான சிரிப்பிற்குள்ளேயே அவன் வாழ்க்கை தொலைந்துவிடுமோ என்ற வேதனை அவளுக்கு. அவன் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு ஒரு மனைவியாய் தானே அவனுக்குத் துணையிருக்க வேண்டும். இத்தகைய ஞானோதயம் அவளுக்குத் தானாக பிறந்துவிடவில்லை. அவள் தாய் யாழ்முகை அவளை அமர வைத்து பக்கம் பக்கமாய் நிறைய அறிவுரைகளைச் சொன்னார். அதோடு அவர்கள் தனிமையில் இருக்க யாழ்முகையும் மாதவனும் அன்றே அவசர அவசரமாய் பெட்டியெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்படுவதாகச் சென்றுவிட்டனர். யாழ்முகை சொன்ன அறிவுரைக்கெல்லாம் ஏற்ப மாயா என்றும் இல்லாத திருநாளாய் புடவையெல்லாம் உடுத்தி அலங்கரித்துக் கொண்டு அவ்வப்போது கண்ணாடியை வேறு பார்த்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே அவன் மனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய முடியும் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, அது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகிறது என்பது மகிழின் மனநிலையைக் கொண்டே முடிவு செய்ய முடியும். ஆதலால் துணிந்து இன்று அவனிடம் தன காதலைச் சொல்லிவிடுவது என அவன் வருகைக்காகக் காத்து கிடந்தாள். அவனிடம் எப்படி ஆரம்பிப்பது? எப்படிக் காதலைச் சொல்வது? தவிப்பும் காத்திருப்புமாய் நொடிக்கு ஒரு முறை வாசல்புறம் பார்த்திருந்தாள் மாயா. காதலைச் சொல்வதில் தன் தோழிக்கு நிகராகுமா? சட்டென்று அந்த நாள் அவள் நினைவுகளாய் எழும்பி நின்றன. தினமும் ரேடியோவில் ஒலிக்கும் மகிழின் குரலின் மீது சாக்ஷிக்கு அத்தனை ஈர்ப்பு. இல்லத்தில் உள்ள எல்லோருக்குமே அவன் குரலில் ஈர்ப்புதான். ஏன் மாயாவுக்கும் பிடித்தம்தான். ஆனால் சாக்ஷிக்கு மட்டும் அந்த ஈர்ப்பு தன் எல்லைகளைக் கடந்திருந்தது. ஒருநாள் அவன் நிகழ்ச்சியைக் கேட்டுவிடாமல் போனாலும் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும். புலம்பித் தள்ளி எல்லோரையும் ஒருவழி செய்துவிடுவாள். ஆதலால் இல்லத்தில் உள்ள எல்லோருமே மகிழின் நிகழ்ச்சி வந்துவிட்டாலே, 'ஏ சாக்ஷியோட ஆளு பேசுறாரு' என்று பரிகசிக்க அவள் அதை என்றுமே மறுதலித்ததில்லை. மனதளவில் ஆழமாய் அந்தக் குரலோடு வாழ ஆரம்பித்திருந்தாள். அப்போதுதான் மகிழ் அந்தக் காதலர் தின நிகழ்ச்சியை நடத்த இல்லத்தில் கேட்டுக் கொண்டிருந்த எல்லோருக்கும் குதுகலம் பற்றிக் கொண்டது. விளையாட்டாகத்தான் எல்லோரும், "இன்னைக்கு நீ மகிழ்கிட்ட ப்ரொப்போஸ் பண்ற" என்று அவளைத் தூண்டிவிட்டனர். "ஏன் பண்ணமாட்டேன்னு தைரியமோ?" என்று அவளும் கேட்க, "சாக்ஷி... இது விளையாட்டில்ல... நீ பேசப் போறது ஆர் ஜே மகிழ்கிட்ட" என்று மாயா அச்சப்படுத்த, "எனக்கென்ன பயம்? அவங்க கடவுளாவே இருந்தாலும் என் மனசுல இருக்கிற விருப்பத்தை நான் சொல்லணும்னு நினைச்சா சொல்லுவேன்" என்றாள். மாயா உடனே அவளை மேலும் அச்சப்படுத்த, மகிழ் ரேடியோவில் சொன்ன எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அதிசயிக்கும் விதமாய் அந்த அழைப்பு ஒருநிலையில் ஏற்கப்பட்டுவிட்டது. மாயா உடனே கைப்பேசியை சாக்ஷியிடம் கொடுத்துவிட்டாள். அவளுக்குக் கிட்டிய வாய்ப்பை தன் தோழியிடம் விட்டுக் கொடுத்ததின் பராபலன் இன்னும் அவளை விடாமல் துரத்துகின்றது. சாக்ஷி அளவுக்கு தனக்கு தைரியம் இல்லையா? அவளால் அத்தனை சுலபமாய் அவனிடம் காதலை சொல்ல முடிந்த போது தன்னால் ஏன் முடியவில்லை? கேள்வி கேட்டு கொண்டவளுக்கு அதற்கான காரணமும் கிட்டியது. சாக்ஷி மகிழிடம் காதலைச் சொல்லும் போது அவளுக்கென்று எதிர்பார்ப்புகளோ அல்லது எந்தவித இழப்புகளோ இல்லை. ஆனால் இங்கே அவள் சொல்லப் போகும் காதல் அவனின் உறவைக் கூட இழக்க நேரிடலாம். அதனாலேயே தான் இந்தளவுக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று காரணம் கற்பித்துக் கொண்டாள். காதலைச் சொல்லாமலிருக்க காரணங்கள் ஆயிரம் கிடைத்தாலும் இன்று சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியும் அவளுக்கு இருந்தது. இரவு நடுநிசியைக் கடக்கும் போது மகிழ் வீட்டிற்கு வந்தடைந்தான். அவன் தரையை பார்த்தபடியே சோர்வோடும் கலக்கத்தோடும் நுழைய, அதனை அவள் விழிகளும் கண்டுகொண்டன. எதனால் இந்தக் கலக்கம் எனப் புரியாமல் அவன் அருகாமையில் வந்தவள், "என்னாச்சு மகிழ்? ரொம்ப வேலையோ?!" என்று கேட்க, "ஹ்ம்ம்" என்றான். அவன் தோளில் இருந்த பேகை வாங்கிக் கொண்டவள், "சரி நீங்க போய் ப்ரெஷாயிட்டு வாங்க" என்றாள். அவனோ, "ஹ்ம்ம்ம்" என்றபடி அசையாமல் நின்றிருந்தான். "மகிழ்" என்று அவள் அழைக்க, அவன் பதிலில்லாமல் சிலையெனவே நிற்க மீண்டும் அவள், "மகிழ்" என்று சத்தமாய் அழைத்தாள். "ஆன்" என்று உறக்கத்திலிருந்து விழித்தவன் போல அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் ஏதோ சொல்ல முடியாத குழப்பத்தைத் தேக்கி வைத்திருப்பதாகத் தோன்றியது. தவிப்பும் அவஸ்தையோடும் இருந்தவனிடம், "மகிழ் ஏன் இப்படி இருக்கீங்க... என்னாச்சு... ஏதாவது பிரச்சனையா?" என்று அவள் கேட்க அவனுக்கு எந்தப்புறம் தலையசைப்பது என்றே புரியவில்லை. "அது... நான்" என்று மகிழ் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் திணற, அவள் உடனே, "மகிழ் ரிலாக்ஸ்... நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்... நீங்க இப்படி உட்காருங்க" என்று சொல்லி உள்ளே செல்லப் பார்த்தவளை நகர விடாமல் அவள் கரத்தைப் பற்றி நிறுத்தினான். அவள் யோசனைகுறியோடு நிமிர்ந்து அவனைப் பார்க்க அவன் கண்களில் நீர் வழிய, "நான் சாக்ஷியைப் பார்த்தேன் மாயா" என்றவனின் முகத்தில் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒரு சேர கலந்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பாய் தொலைந்து போன அவன் காதல் உயிர்பெற்று அவனுக்குள் ஊற்றாய் மீண்டும் பெருக ஆரம்பித்திருந்தது. அந்த உணர்வுகளோடு கட்டுண்டு கிடந்தவனுக்கு மேலே பேச வார்த்தைகளே வரவில்லை. ஆனால் மாயா அவன் சொன்னதைக் கேட்டு அளவுகடந்த ஏமாற்றமடைய, அந்த நொடி அத்தனை எரிச்சலும் கோபமும் மூண்டிருந்தது அவளுக்கு. அவன் கையை உதறியவள் ரௌத்திரமான பார்வையோடு, "பைத்தியம் பிடிச்சிருக்கா மகிழ் உங்களுக்கு... சாக்ஷி சாக்ஷி சாக்ஷி... எப்ப பாரு சாக்ஷி... எது பேசினாலும் சாக்ஷி... அவளைத் தவிர நீங்க வேறு எதைப் பத்தியும் யோசிக்க மாட்டீங்களா?... பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்களா?... இதுல சாக்ஷியைப் பார்த்தேன்னு வேற" என்று சொல்லி தலை மீது கைவைத்து கொண்டாள். அவள் உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்து மௌனமானவன் பின் பொறுமையோடு, "நம்பு மாயா... நான் சாக்ஷியைப் பார்த்தேன்" என்று சொல்ல அவள் விரக்தியான பார்வையோடு அவனை ஏறிட்டு, "அய்ய்ய்ய்ய்யோ மகிழ்... அவளை எப்படி நீங்க பார்க்க முடியும்... அவதான் செத்துட்டாளே" என்று கத்தினாள். அவளின் அந்த வார்த்தை அவன் பொறுமையை சுக்குநூறாய் உடைத்தது. அவன் கட்டுக்கடங்காத கோபத்தோடு, "வாயை மூடு... அடிச்சேன்னு வை... தவடை பேந்திரும்" என்று கை ஓங்க அவள் மிரட்சியோடு அவனிடமிருந்து ஒதுங்கி நின்றாள். "முதல்ல நான் காண்பிக்கிறதைப் பார்த்துட்டு அப்புறம் நீ என்ன வேணா பேசு" என்றான். அவளோ அவனின் செயலால் அதிர்ந்து போயிருந்தாள். அவன் ஒருமுறை கூட அவளிடம் அப்படி எல்லாம் மரியாதை குறைவாய் பேசியதில்லை. எந்தப் பெண்ணிடமும் அப்படிப் பேசுபவனும் கிடையாது. நடந்து கொள்பவனும் கிடையாது. ஆனால் இன்று அவளை அடிக்க கை ஓங்கி மரியாதை குறைவாகவும் பேசிவிட்டான். அவள் அதற்கு மேல்  அவனை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாய் நின்றிருந்த நேரம் அவன் டி.வியை இயக்கினான். எதற்காக அவன் சம்பந்தமில்லாமல் டிவியை இயக்குகிறான். அவள் புரியாமல் குழப்பமாய் பார்த்திருந்தாள். ****** டேவிட் சொன்னது போல் ஜெனித்தாவைப் பார்க்க அன்றிரவு உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தான். பணக்காரர்களின் சாயலில் சற்றும் குறைவில்லாத மாளிகை அது. அவர்கள் இருவரும் அந்தத் தோட்டத்தை சுற்றிலும் நடந்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் எதேச்சையாய் தன் செல்பேசியில் நேரத்தைப் பார்த்தவள், "சாரி டேவிட்... டைம் பார்க்காம ரொம்ப நேரம் பேசிட்டிருந்துட்டேன்" என்றாள். அவனும் நேரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, "ஆமாம் ஜென்னி... ரொம்ப லேட்டாயிடுச்சு... சரி ஒகே... அப்புறம் பார்ப்போம்" என்று முன்னேறி அவன் கார் நோக்கி நடந்தான். செல்லும் போதே, "நான் வேற இங்க உன் வீட்டுல இவ்வளவு நேரம் இருக்கிறது மட்டும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிதுன்னு வைச்சுக்கோ அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாரு" என்றான். அவள் குழப்பமாக, "ஏன் அப்படி? அவ்வளவு பெரிய சேனல் எம்.டி இவ்வளவு கன்ஸர்வேட்டிவ்வா யோசிப்பாரா? நம்ப முடியலயே" என்றாள். "அவர் கன்ஸர்வேட்டிவ் இல்ல ஜென்னி... நான்தான்... எனக்கு இப்ப வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்னு ஒருத்தர் கூட கிடையாது... அதனாலதான் எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்டான்னு அவரால் நம்ப முடியல" என்று சொல்லிச் சிரித்தான். "எனக்கும் அதே டௌட்தான்... நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க டேவிட்?" என்றாள். "ப்ளீஸ் ஜென்னி... இதே மாதிரி கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டுட்டாங்க... எக்கச்சக்கமான அட்வைஸும் பண்ணிட்டாங்க... நான் அதெல்லாம் நிறைய கேட்டுட்டேன்... ஸோ நீயும் ஆரம்பிக்காதே" என்றபடி காரில் ஏறப் போனான். "ஓகே ஆரம்பிக்கல... பட் எப்பவுமே இப்படி சீரியஸா இருக்காதீங்க டேவிட்... கொஞ்சம் லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க" என்றதும் காரில் ஏறாமல் நின்றவன் ஆழமாய் பார்த்து, "என்ஜாய் பண்றதுன்னா என்ன ஜென்னி? லவ் பண்றது மேரேஜ் பண்றதுமா?! நான்சென்ஸ்... அதைத் தாண்டி வாழ்க்கையில வேறெதுவும் இல்லையா... எப்பவும் எ பிளஸ் பி ஒல் ஸ்குயர் மாதிரி ஒரே மாதிரி ஃபார்முலாவை பிடிச்சிக்கிட்டு மேரேஜ் லவ்வுனுதான் வாழணுமா?" என்று படபடவென பொறிந்து அவனின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான். அவள் இயல்பான புன்னகையோடு, "டேவிட்... நீங்க பார்முலா மாதிரி வாழ வேண்டாம்... அதே நேரத்தில இவ்வளவு ஃபார்மலாவும் வாழ வேண்டாமே" என்று நிதானித்து அவள் சொல்ல, "இறைவனுக்கு சேவை செய்றது... அன்பு காட்டுறது... இதெல்லாம் ஃபார்மலானா வாழ்க்கையா ஜென்னி?!" என்று அதே ஆதங்கத்தோடே அவளிடம் கேட்டான். "இதெல்லாம் கூட... கொஞ்சம் லவ்வும் கலந்து இருக்கலாமே டேவிட்" என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு அவன் வியப்பாகப் பார்த்திருக்க, அவள் மாறாத புன்னகையோடு, "நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா டேவிட்" என்று ஆரம்பித்தவள் அவனிடம், "கடவுள் இல்லாம கூட இந்த உலகம் இயங்கலாம்... ஆனா காதல் இல்லாம... நோ வே" என்றாள். அவளின் இந்த வாதம் அவனைக் கடுப்பாக்க, "அகெய்ன் நான்சென்ஸ் மாதிரி பேசாதே ஜென்னி" என்று முறைத்தான். "நான் ஒண்ணும் நான்சென்ஸ் இல்ல... நீங்கதான்" டேவிடின் பார்வையில் கனலேற அவள் அலட்டிக் கொள்ளாமல், "தப்பா நினைச்சுகாதீங்க... ஸென்ஸ்தான் நம்ம பீலிங்க்ஸ்... அது இல்லன்னு சொல்றது சென்சில்லாம நடந்துக்கிறதுதானே?!" என்று கேள்வி எழுப்பினாள். அவன் அவளை எகத்தாளமாய் பார்த்து, "லவ் அட்ராக்ஷன் இதுக்கு மட்டும்தான் நம்ம ஸென்ஸ் ஆர்கன்னு சொல்ல வர்றியா?" "இதுக்கும்னு சொல்ல வர்றேன்" "அந்த உம் இல்லன்னா எதுவும் இல்லையோ?!" "ஆமாம்" என்று சொல்லி தோள்களைக் குலுக்கினாள். "இட்ஸ் டோட்டலி ரிடிக்குலஸ்" என்று முகத்தை அவன் திருப்பிக் கொள்ள, அவள் புன்னகையை உதிர்த்தபடி, "நோ இட்ஸ் நாட்" என்று மறுத்தவள் அவனிடம், "ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு சக்திதான் இந்த உலகத்தை ஸ்தம்பிக்கவிடாம இயக்கிட்டிருக்கு... சின்ன சின்ன ஜீவராசிகளில் ஆரம்பிச்சு நம்மள மாதிரி மனுஷங்க வரைக்கும்... அந்த உணர்வு இருக்கிற காரணத்தினால மட்டும்தான் இன்னைக்கு நீங்க நான் உட்பட எல்லாமே சர்வைவ் ஆகிட்டிருக்கு... ஏன் தாவரங்கள் உட்பட... அதை இல்லன்னு மறுக்க முடியாமா உங்களால?!" ஆழமாய் அவள் கேட்ட கேள்வி அவனை பதிலுரைக்க முடியாமல் செய்துவிட அவள் மீண்டும், "ஈர்ப்போட அடுத்த நிலைதான் காதல்... அந்த காதல் இல்லைன்னா வாழ்க்கை சுவாரஸ்யமாய் இருக்காது... காதல்தான் எல்லாத்தையும் நேசிக்கவும் ரசிக்கவும் கத்துக் கொடுக்கும்.. வலியைக் கூட தாங்கிக்கிட்டு வாழவும் கத்துக் கொடுக்கும்" என்றாள் அழுத்தமாக! "புரியுது ஜென்னி... ஆனா என்னால ஒரு பெண்ணை காதல் உணர்வோடு பார்க்க முடியும்னு தோணல... ஐ டோநோ ஒய்... தேவையில்லாம எந்த பெண்ணுக்கும் என்னால ஏமாற்றம் ஏற்பட வேண்டாம்... அதனால்தான் நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றது". "சுத்தி இருக்கிறவங்களை சந்தோஷமா வைச்சுக்கணும்னா அதுக்கு முதல்ல நாம சந்தோஷமா இருக்கணும்... உங்ககிட்ட நிறைய கேரிங் இருக்கு... ஆனா ஷேரிங் இல்ல  நமக்கு யாராவது அன்பை காட்டினாதானே நாம மத்தவங்க மேல அதே அன்பைக் காட்ட முடியும்... அது ஒரு சைக்கிள்... உண்மை என்னன்னா உங்க பேரண்ட்ஸ் வாழ்க்கையில காதல் இல்லங்கிறதால... அது உங்க வாழ்க்கையிலயும் இல்ல" என்று ரொம்பவும் நேரடியாக அவன் வாழ்க்கையின் குறைப்பாட்டை அவள் சுட்டிக்காட்ட அவன் முகம் சுருங்கிப் போனது. பதில் பேசாமல் காரில் சாய்ந்து மௌனமாய் அவன் யோசித்துக் கொண்டிருக்க ஜென்னி அவன் முகமாற்றங்களை பார்த்து துணுக்குற்றவள், "ஸாரி டேவிட்... ரொம்ப அதிகபிரசங்கித்தனமா பேசிட்டேனா?" என்றாள். அவன் புன்முறுவலோடு ஆமாம் என்று தலையசைக்க அவள் முகம் வாட்டமுற்றது. "ஆனா நீ அப்படி பேசுனது எனக்குப் பிடிச்சிருக்கு... அட்வைஸை விட இந்த அதிகபிரசங்கித்தனம் பெட்டர்... இன்னும் கேட்டா யாரும் இதுவரைக்கும் என்கிட்ட இவ்வளவு உரிமையோடு பேசினதில்லை" என்றான். அவள் அமைதியோடு பார்த்திருக்க அவனே மேலும், "நீ சொன்ன விஷயத்தைப் பத்தி நான் யோசிக்கிறேன்" என்றான். அவள் குதூகலமாகி, "சூப்பர்... அப்போ லவ் பண்றதைப் பத்தி யோசிப்பீங்க" "ஹ்ம்ம்.... அந்த ஃபீல் வந்தா பார்ப்போமே" "வராம எங்கப் போகுது... வரும்... ஆனா நீங்க இப்படி கடிவாளம் கட்டின குதிரை மாதிரி இருக்காதீங்க" என்றாள். அவள் சொன்னதற்கு புன்னகைத்தவன், "சரி ஜென்னி ரொம்ப லேட்டாயிடுச்சு" என்று தயங்க, "ஆமா ஆமா லேட்டாயிடுச்சு கிளம்புங்க" என்றாள். அதோடு அவளிடம் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்தவன் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றான். இரவு நேரம் என்பதால் வாகன நெரிசல்கள் குறைவாகவே இருந்தது. இருந்தும் டேவிட் மிதமான வேகத்திலேயே பயணப்பட்டான். அவன் அறிந்த நிதர்சனங்கள் பல அவனுக்கு வலி நிறைந்ததாகவே இருந்திருக்க, இன்று அவள் உணர்த்திய நிதர்சனமோ அவனைப் புதிதாக பிறக்கச் செய்தது. உலகத்தை புது கண்ணோட்டத்தோடு எதிர்கொள்ளச் செய்தது. ஆனால் ஜென்னிக்கு விரைவில் இது பிரச்சனையாய் மாறப் போகிறது. வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது போல, அவள் உயிர்ப்பித்த அவனின் உணர்வுகள் அவள் புறமே திரும்புமே!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா