மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 24Post ReplyPost Reply: Naan Aval Illai - 24

Quote from monisha on November 29, 2020, 8:34 PM

24

அவள் தேவதை
ராகவ் அவள் வீட்டின் நுழைவாயிற்குள் சென்ற நொடி அவன் விழிகள் ஜென்னியை காணப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இருக்க, அதிர்ச்சிகரமாய் அவன் அங்கே சையத்தைக் கண்டான். அசையாமல் அவன் அப்படியே நின்றுவிட, சையத் தன் நண்பனை பார்த்த உவகையோடு எழுந்து நின்று, "வாங்க ராகவ்... இப்பதான் ஜென்னி சொன்னாங்க... நீங்க வரப் போறதா" என்றுரைத்தான். ஜென்னி சரியாய் அந்தச் சமயம் உள்ளிருந்து வந்தவள் அவனைப் பார்த்ததும், "வெல்கம் மிஸ்டர். ராகவ்... உங்களுக்காகதான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்" என்று புன்முறுவலோடு அழைத்தாள். இம்முறையும் தன்னை அவமானப்படுத்திப் பார்க்கவே அழைத்திருக்கிறாளோ என்ற எண்ணத்தோடு அவன் பார்வை அவளை அளவெடுக்க அவள் புன்னகை மாறாமல், "என்ன யோசிச்சுட்டிருக்கீங்க ? உள்ளே வாங்க" என்றாள். அவன் விருப்பமின்மையோடு நுழைய, "உட்காருங்க ராகவ்... நீங்களூம் உட்காருங்க சையத்... ஜஸ்ட் அ மினிட்... வந்திடுறேன்" என்று அவர்களை அமர வைத்துவிட்டு உள்ளே சென்றாள். ராகவ் சையத் அருகாமையில் அமர்ந்தபடி, "என்கிட்ட நீ ஏன்... இங்க வரப் போறதை பத்தி சொல்லவேயில்லை சையத் ?" என்று வினவினான். அவன் இந்தக் கேள்வியை கேட்பான் என்று யூகித்தவனாய், "சொல்லி இருப்பேன் ராகவ்... அன்னைக்கு நடந்த இன்ஸிடென்ட்ல நீங்க ஜென்னி மேல கோபமா இருப்பீங்கன்னு நினைச்சேன்... ஆனா" என்று நிறுத்தி சிந்தனையோடு ராகவை பார்த்தான். "எனக்கு இப்பவும் கோபம்தான் சையத்... அவ என்னோட ரேஞ்ச் தெரியாம அப்படிப் பேசியிருக்கக் கூடாது" சையத்திற்கு குழப்பமாயிருந்தது. அவ்வளவு கோபமாயிருப்பவன் ஜென்னியின் வீட்டிற்கு வருவானேன். இப்படி யோசித்திருக்கும் போதே ஜென்னி ட்ரேயில் கூல்ட்ரிங்ஸ் எடுத்துக் கொண்டு வந்தாள். "என்ன ஜென்னி நீங்க போய்?" என்று சையத் ஆச்சர்யமாய் பார்க்க, அவள் புன்னகையோடு, "இதுல என்ன இருக்கு... நீங்க என்னோட கெஸ்ட்... நான் எடுத்துட்டு வரக் கூடாதா?!" என்று கேட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுத்தாள். அவளை இருவரும் புரியாத பார்வை பார்த்தனர். அவள் எத்தகையவள் என்று அவர்கள் இருவராலும் கணிக்க முடியவில்லை. திமிர் பிடித்தவள் கர்வமானவள் என்று அவள் மீது உருவாகியிருந்த பிம்பெல்லாம் அந்த நொடி ஆட்டம் கண்டது. பின்னர் ஜென்னியும் அவர்களோடு அமர்ந்தபடி,."நீங்க இரண்டு பேரும் வருவீங்களோன்னு நினைச்சேன்... பட் தேங்க்ஸ்... நான் பேசினதை எல்லாம் மனசுல வைச்சுக்காம வந்திருக்கீங்க" என்க, சையத் கூல்ட்ரிங்ஸை பருகியபடி, "நீங்க தப்பா அன்னைக்கு எதுவும் பேசல ஜென்னி... உங்க விருப்பத்தை தானே சொன்னீங்க" என்றதும் ராகவிற்கு சுருக்கென்றது. அவள் தன்னை அவமானப்படுத்தியது இவனுக்கு ரொம்ப சாதாரணமான விஷயமா? ஏற்கனவே ஜென்னி அவர்கள் நட்பை பலவீனப்படுத்தியிருக்க, சையத்தின் அந்த வார்த்தை அவர்கள் நட்புக்கிடையில் விரிசலை உருவாக்கியிருந்தது. அந்தச் சமயம் ஜென்னி அமைதியாயிருந்த ராகவிடம் திரும்பி, "சாரி ராகவ்... நீங்களும் என்னை மிஸ்டேக் பண்ணிக்காதீங்க... பணத்தைப் பத்தி பேசினதும் கொஞ்சம் சீரியஸாகிட்டேன்... அப்படி நடந்துட்டிருக்க கூடாது... மத்தபடி உங்க மேல தனிப்பட்ட முறையில எனக்கு எந்த வித கோபமும் இல்லை" என்றாள். "அப்படின்னா... படத்துல நடிக்க ஜென்னிக்கு ஒகேன்னு எடுத்துக்கலாமா?!" என்று கேட்டான் ராகவ்.இருவரையும் அவள் வரச் சொல்லியிருக்கிறாள் எனில், அதுதான் அவளுடைய எண்ணம் என்பது அவனின் கணிப்பு. ஜென்னி சற்று தயங்கி, "நோ மிஸ்டர். ராகவ்... அந்த மாதிரி ஐடியா எனக்குச் சுத்தமா இல்லை" என்றவளை இருவரும் வியப்பாகப் பார்த்தனர். சையத்தும் கூட அவள் மனம் மாறி சம்மதிக்கவே அழைத்திருக்கிறாள் என்று எண்ணமிட்டிருந்தான். அப்போது ஜென்னி அவர்களிடம், "ப்ளீஸ் மூவி பத்தி பேச வேண்டாம்... நான் அதுக்காக உங்களை இங்க வரச் சொல்லல... அன்னைக்கு ஹோட்டலில் நான் அப்படி நடந்துக்கிட்டது... எனக்கே கொஞ்சம் கில்டியா ஃபீலாயிடுச்சு... ப்ச்... அதனாலதான் இந்த மீட்டிங்... அனேகமா நாளைக்கு நான் மும்பை கிளம்பிட்டா... எனக்கு அது கொஞ்சம் நெருடலாகவே இருக்கும்" என்றாள். சையத்திற்கு அவளைத் தன் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க ஆசையிருந்தும், மீண்டும் அவளைக் கட்டாயப்படுத்த மனதில்லாமல் அமைதியாயிருந்தான். அதே நேரம் ராகவிற்கு அவள் எண்ணம் பிடிபடவேயில்லை. அன்று அவளே தேடி வந்து சந்தித்தது, பின் அவளின் கோபம், இன்று அவளே அழைத்திருப்பது என எல்லாமே புரியாத புதிராய் இருக்க, அதற்கு அவள் சொல்லும் காரணத்தை அவனால் துளியளவும் நம்ப முடியவில்லை. இவனின் இந்த யோசனைக்கு இடையில், சையத்திடம் ஜென்னி இயல்பாகப் பேசிக் கொண்டே, "உங்க ஃபேம்லி கூட நீங்க இப்ப இல்லையா சையத்?!" என்று கேட்க அவன் முகம் சுருங்கிப் போனது. அப்போது ராகவ் முந்திக் கொண்டு, "அவன் ஃபேம்லி பத்தி தெரிஞ்சுதானே அன்னைக்கு சையத்தைக் குத்தி காட்டுற மாதிரி பேசின... இப்போ தெரியாத மாதிரி கேட்டா எப்படி?" என்று குத்தலாய் பார்த்தான். அவளைத் தாக்கி பேசச் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தவன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, அவள் திடுக்கிட்டுப் பார்த்து, "நோ ... நான் சையத்தை குத்திக் காட்டி பேசணுங்கிற நோக்கத்தில பேசல" என்றாள். ராகவ் புருவத்தை உயர்த்தி, "ஓ... அப்போ வேறென்ன நோக்கத்தில பேசின" என்று கேட்க, சையத் அந்த கணம் நண்பனின் கரத்தைப் பற்றி, "ராகவ் வேண்டாம்" என்று அவனை பேசவிடாமல் நிறுத்தினான். ராகவின் பேச்சால் ஜென்னிக்கு கோபம் மூள, அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் சையத்திடம் அமைதியாய் திரும்பி,  "ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சையத்... நான் சொன்ன வார்த்தை உங்களை எந்தளவுக்கு காயப்படுத்தியிருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது" என்றாள். சையத் உடனே, "இல்ல ஜென்னி... நீங்க அப்படி பேசினதுல தப்பில்லை... அதுதான் எனக்கே என் தப்பை புரிய வைச்சுது" என்றான். அவள் யோசனைக்குறியோடு பார்த்திருக்க சையத்தே தொடர்ந்தான். "நீங்க அப்படி பேசின போதுதான் நான் எங்க அம்மா அப்பாவை எந்தளவுக்கு காயப்படுத்தியிருக்கேன்னு எனக்கு புரிஞ்சிது... எனக்காக எவ்வளவோ செஞ்ச என்னோட வாப்பாவை உதாசீனப்படுத்தி பேசி இருக்கேன்னு புரிஞ்சுது... என் இலட்சியத்தை நிறைவேத்திக்க யோசிச்சிருக்கேன்... ஆனா என் குடும்பத்தோட தேவையை பூர்த்தி செய்யணும்னு நான் யோசிக்கலயே... எவ்வளவு சுயநலமா இருந்திருக்கேன்" என்று அவன் தன்னையே நிந்தித்துக் கொண்டான். உள்ளுக்குள் அவன் தேக்கி வைத்திருந்த வேதனை தன் கரையை உடைக்க அவன் விழிநீரை வெளிவர விடாமல் தன் கைக்குட்டையில் துடைத்தான். ராகவிற்கோ எரிச்சலாய் இருந்தது. 'இந்த இமோஷனல் டிராமா இங்க தேவைதானா?' என்று மனதில் எண்ணியவன் சையத்தின் தோளினைத் தட்டி, "காம் டவுன் சையத்" என்றான். ஜென்னி வியப்புக்குறியோடு அவனை ஆழப் பார்த்தவள் யோசனையோடு, "உங்க ஃபேம்லி இப்போ எங்க இருக்காங்க ?" என்று கேட்க, சையத் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, "தெரியல ஜென்னி" என்றவன் இடைவெளிவிட்டு மேலே பேசினான். “எனக்கு என் வாப்பா இறந்த விஷயமே ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சுது... அப்போ நான் என் முதல் பட ஷுட்ல இருந்திருக்கேன்... படம் ஹிட்டாகி என் குடும்பத்தைப் பார்க்கலாம்னு போன பிறகுதான் எனக்கு இந்த விஷயமே தெரியும்... அதனாலதான் அம்மா என்கிட்ட கோபப்பட்டாங்க.... முகம் கொடுத்துக் கூட பேசாம ஒதுக்கிட்டாங்க” “ஒன்றரை வருஷமாச்சு... நான் தேடி போனாலும் வர வேண்டாம்னு சண்டை போட்டாங்க... இப்ப ஆறேழு மாசமா வீடு காலி பண்ணிட்டு எங்க போனாங்க என்னன்னு ஒண்ணும் தெரியல" என்று வருத்தத்தோடு உரைத்தான். ராகவ் எரிச்சலோடு "இப்ப இதைப் பத்தி கண்டிப்பா பேசணுமா?" என்று வினவ, ஜென்னியும் தலையசைத்து "கரெக்ட்தான்... இப்ப இதைப் பத்தி பேசி மூட் ஆஃப் ஆக வேண்டாம்... விடுங்க சையத்" என்று அவனை சமாதானம் செய்ய, ரூபா உள்ளிருந்து வந்தவள், "டின்னருக்கு எல்லாமே ரெடி ஜென்னி... " என்று அவள் காதோடு உரைத்தாள். ஜென்னி எழுந்து கொண்டு, "வாங்க டின்னர் சாப்பிட்டுகிட்டே பேசுவோமே" என்று அழைத்தாள். ராகவ் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்க அவசரமாய் எழுந்து கொண்டவன், "எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு... நான் கிளம்பணும்... நீங்க சாப்பிடுங்க" என்று வெளியெற முனைய, ஜென்னி அவனைத் தடுத்து நிறுத்தியபடி, "ராகவ்... என்ன இது ? இவ்வளவு நேரம் இருந்துட்டு இப்ப போய் கிளம்பறேன்னு சொன்னா" என்று கேட்கவும், "எனக்கு வொர்க் இருக்கு ஜென்னி" என்று பிடிவாதமாய் நின்றான். "இருக்கட்டுமே... ஃபைவ் டூ டென் மினிட்ஸ்ல என்னவாகிட போகுது... சாப்பிட்டு போகலாம்... அதுவும் இல்லாம டின்னர் உங்களுக்குப் பிடிச்ச டிஷ்ஷஸா ரெடி பண்ண சொல்லியிருக்கேன்... வாங்க ப்ளீஸ்" என்ற போதே சையத்தும் அவன் தோளைப் பற்றி அழைத்தான். அதற்குப் பிறகாய் நிராகரித்துக் கடந்து செல்ல மனமில்லாமல் அவர்கள் அழைப்பை ஏற்று வந்தான். அந்தக் கண்ணாடி போன்ற மேஜையில் வகை வகையான உணவுகள் பாத்திரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்களை அமரச் சொல்லிவிட்டு ஜென்னியும் ரூபாவும் பரிமாற, சையத் அவளிடம், "இங்க வொர்க்கர்ஸ் யாரும் இல்லையா?" என்று கேட்க, "இருக்காங்களே... நிறைய... பட் நீங்க இரண்டு பேரும் ஸ்பெஷல் கெஸ்ட் இல்லையா?!" என்றாள் அவள். ராகவிற்கு அவள் நடந்து கொள்வதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என கூர்மையாய் யோசித்திருக்க, சையத்திற்கோ அவள் பண்பு பிரமிப்பாய் இருந்தது. ஜென்னி சையத்தின் தட்டில் பரிமாறிவிட்டு, "சாப்பிடுங்க சையத்... இது ஸ்பெஷல் தோசை... மேட் பாஃர் யூ" என்றவள் அவனுக்கு வரிசையாய் சில அசைவ உணவுகளை பரிமாறினாள். ராகவும் அந்த நேரம் உணவை ருசித்துவிட்டு, "இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை... ரொம்ப டேஸ்ட்டா இருக்கு... குக் ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்டோ" என்று உரைக்க, "எஸ்... ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட் குக்" என்று ஜென்னி சொல்லிவிட்டு சையத்தைப் பார்க்க, அவன் தட்டில் உள்ள உணவுகளை ஆச்சர்யமாய் பார்த்தபடி பழைய நினைவுகளுக்குள் சென்றிருந்தான். ஜென்னி, "சாப்பிடுங்க சையத்" என்றாள். அவனும் தன் தட்டிலிருந்து உணவை எடுத்து ருசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட அவளிடம், "யாரு உங்க குக் ஜென்னி?" என்று கேள்வியாய் பார்த்தான். அவள் பதில் பேசாமல் மௌனமாய் அவனையே பார்க்க, சையத் ஆவல் மிகுதியால், "நான் அவங்களைப் பார்க்கணும்" என்று எழுந்து கொண்டான். "அதுக்கென்ன பார்க்கலாம்... நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க" என்றாள். "நோ ஜென்னி... எனக்கு இப்ப பார்க்கணும்" என்று தன் பார்வையைச் சுற்றிலும் சுழற்றினான். "என்ன சையத்? இப்ப குக்கைப் பார்த்து என்ன பண்ண போற... குக்கிங் ஏதாவது கத்துக்கிற ஐடியா இருக்கா?!" என்று கேட்டு ராகவ் பரிகசித்துச் சிரிக்க, ஜென்னி புன்முறுவலோடு, "அது அப்படி இல்ல மிஸ்டர். ராகவ்... உங்களுக்கு அந்த டிஷ்ல இருக்கிற ருசிதான் தெரியுது... ஆனா சையத்திற்கு அதுல ஆழமான அன்பு தெரியுது... இல்லயா சையத்?!" என்று கேட்க, சையத் ஜென்னியை புரியாமல் பார்க்க, அவள் சொன்னதைக் கேட்டு ராகவும் குழம்பினான். ஜென்னி புன்னகைத்து, "சாஜிம்மா... ப்ளீஸ் வாங்க... உங்க மகனை ஏற்கனவே ரொம்ப தவிக்க விட்டுட்டீங்க... இதுக்கு மேலயும் வேண்டாம்" என்று அழைத்தாள். சையத் தேடலாய் பார்க்க சாஜி சமையலறையில் இருந்து வெளியே வந்தார். "ம்ம்ம்...மா" என்றவன் அந்த நொடியே தன் அம்மாவை கட்டிக் கொள்ள, அவரும் கண்ணீர் மல்க, "சையத்" என்று அவனை அணைத்துக் கொண்டார். ராகவ் யோசனைகுறியோடு ஜென்னியின் புறம் திரும்பி சமிஞ்சையால் அவரை யாரென்று கேட்க, "சையத்தோட அம்மா" என்றாள். ராகவ் இதுவரையில் அவர்களைப் பார்த்ததில்லை. அவனுக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை. சையத்திற்கோ நடப்பது நிஜமா கனவா என்று சந்தேகம் தோன்றியது. அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் பெருகி ஓட, சாஜியும் கட்டுப்படுத்த முடியாமல் அவன் மீது சாய்ந்தபடி,  "நான் உன்னை புரிஞ்சுக்காம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... இல்ல சையத்" என்றார். "என்ன பேசுறீங்கம்மா? நான்தான் உங்களையும் வாப்பாவையும் புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என்றான். அந்த சமயம், "அண்ணா" என்றழைத்தபடி சையத்தின் தங்கை அவன் அருகாமையில் வரவும் பரிவோடு, "அஃப்சானா" என்று அவளையும் தன்னோடு அணைத்துக் கொண்டான். அந்த கணம் சையத்திற்கு தன் தம்பி நினைவுக்கு வர, "ஆஷிக் எங்கம்மா?" என்று கேட்டான். சாஜி பதில் சொல்வதற்கு முன்னதாக ஜென்னி முந்திக் கொண்டு, "ஆஷிக் மும்பையில இருக்கான் சையத்" என்றாள். சையத் தன் அம்மாவை கேள்வியாய் பார்க்க, இத்தனை நேரம் புரியாமல் பார்த்திருந்த ராகவ் ஜென்னியிடம், "அது சரி... உனக்கெப்படி.. சையத்தோட ஃபேமிலியை பத்தி தெரியும்" என்று கேட்டான். சையத்தின் மனதிலும் அதே கேள்வி எழுந்தது. ஜென்னி கைக்கட்டி நின்றபடி, "அது பெரிய கதை... அப்புறம் பேசிக்கலாம்.. இப்ப டின்னர் டைம்" என்றவள் சையத்தையும் அழைத்து அமரச் சொன்னாள். சையத்தின் முகம் அத்தனை பிரகாசமாயிருந்தது. தன் அம்மாவின் கையால் என்றாவது சாப்பிடுவோமா என்று உள்ளுக்குள் இருந்த தவிப்பெல்லாம் தீர்ந்து போயிருந்தது. பல நாள் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாய் அன்று சையத் ஆசை தீர உண்டான். சாஜியும் ஆசை தீர மகனுக்கு உணவு பரிமாறியவர் ராகவிற்கும் பார்த்துப் பார்த்து பரிமாறினார். எல்லோரும் உணவருந்திய பின் முகப்பறையில் அமர, அஃப்சானா சையத்தின் அருகில் அமர்ந்து ஜென்னியைப் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தாள். ஜென்னியின் மீதான கிறக்கமும் மயக்கமும் அவனுக்கு ஏற்கனவே காதலாய் மாறி இன்று அவன் வாழ்வில் நுழைந்த தேவதையே அவள் என்று தோன்றியது அவனுக்கு. அவள் மீதான மரியாதையும் அபரிமிதமாய் பெருகியிருந்தது. சையத் இந்த எண்ணத்தோடு அவளையே பார்த்திருக்க, ராகவிற்கு உள்ளுக்குள் பற்றி எறிந்தது. ராகவ் அந்தச் சூழ்நிலையை மாற்ற எண்ணி, "இப்ப சொல்லு ஜென்னி... சையத் அம்மாவை எப்படி உனக்கு தெரியும்?" என்று கேட்க, அவள் நிமிர்ந்து அமர்ந்தபடி, "அது... என் டேட் ஒன் இயர் பேக் சென்னையில இந்த வீட்டை வாங்கினார்... அந்த வீட்டை மெயின்டெய்ன் பண்ண ஆள் தேடின போது சாஜிம்மாவும் அவங்க பையனும் வேலைக்கு சேர்ந்தாங்க... ஆறு மாசம் முன்னாடி டேட் இங்க வந்து தங்கியிருந்த போது... சாஜிம்மா குக்கிங் ரொம்ப பிடிச்சு போய் மும்பை கூட்டிட்டு வந்துட்டாரு” “முதல்ல வராமாட்டேன்னு சொன்னாங்க... அப்புறம் டேட் பசங்க படிக்க ஏற்பாடு பண்றேன்னு சொன்ன பிறகு மனசு மாறி சாஜிம்மா அஃப்சானா ஆஷிக் எல்லோரையும் கூட்டிட்டு வந்துட்டாங்க... வந்த கொஞ்ச நாள்லயே எல்லோரும் எங்களோட ரொம்ப மிங்கிளாயிட்டாங்க... அதோடு ஆஷிக் ப்ரில்லியன்ஸி டேடுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு... கூடவே வைச்சுக்கிட்டாரு" என்றவள் சையத்தை நோக்கி, "ஆனா சாஜிம்மா ஒரு தடவை கூட உங்களைப் பத்தி இந்த ஆறு மாசத்துல பேசினதேயில்லை சையத்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க இன்ட்ர்வ்யூ பார்த்து ரொம்ப அழுத போதுதான் அஃப்சானா என்கிட்ட உங்களைப் பத்தி சொன்னா... அப்பதான் சென்னை ரீஓபன் இனாகுரேஷனுக்கும் என்னை அழைச்சாங்க” “முதல்ல வேண்டாம்னு நினைச்சேன் அப்புறம் சாஜிம்மாவுக்காக வரலாம்னு முடிவு பண்ணேன்... அதே டைம்ல மிஸ்டர். ராகவ் என்னை மீட் பண்ண கால் பண்ணியிருந்தார்... அப்போ வேறெதோ மூட்ல அப்படி பேசிட்டேன்... அப்புறம் தெரிஞ்சுது.... நீங்களும் ராகவும் ரொம்ப க்ளோஸ்னு.... அந்த ஐடியாலதான் டேட்கிட்ட பேசிட்டு இனாகுரேஷனுக்காக சென்னைக்கு சாஜிம்மாவையும் கூட கூட்டிட்டு வந்தேன்... வந்ததும் உங்களை மீட் பண்ண வந்து நம்ம கான்வஸேஷன் தப்பான ரூட்ல போய்" என்று அவள் சொல்லி நிறுத்த, "அப்போ அந்த மீட்டிங் சையத்துக்காகவா?!" ராகவ் கேள்வியாய் பார்த்தான். "ஆமாம் ராகவ்... அதுவும் இல்லாம நீங்க புதுசா பண்ண போற மூவிக்காக என்னை கமிட் பண்ண கூப்பிடறீங்கன்னு நான் கெஸ் பண்ணேன்... ஸோ மிஸ்டர். சையத்தும் வருவாருன்னு நினைச்சேன்... அங்க நான் நினைச்சதை பேசவிடாம... நீங்க இரண்டு பேரும் மூவி பத்தியே பேசிட்டிருந்தீங்க... என்னால பேச முடியல... அந்த மோசமான ஸிச்சுவேஷன்ல சொல்ல வந்ததையும் சொல்ல முடியல" என்றாள். ரூபாவிற்கு இப்போதுதான் நடந்த நிகழ்விற்கான காரண காரியங்கள் விளங்கின. இதைதான் கமிட்மென்ட் என்றாளோ? மனதோடு எண்ணிக் கொண்டவள், ஒரு காரியத்தை எடுத்து அதை மனதோடு வைத்து செய்து முடிக்கும் அவளின் உறுதியைக் கண்டு அந்த நொடி வியப்படைந்திருந்தாள். ராகவிற்கு தன்னை அவள் எதற்கு அழைத்தாள் என்று எண்ணம் உண்டாக அதனை ஜென்னி யூகித்தபடி, "உங்களை நான் ஏன் கூப்பிட்டேன்னு யோசிக்கிறீங்களா ராகவ்?" என்று கேள்வி எழுப்ப அவன் அவளின் கணிக்கும் திறனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.  "இன்னைக்கு உங்களை நான் இன்வைட் பண்ணதுக்கு ஸ்பெஷல் ரீஸன்... சாஜிம்மாதான்... அவங்க பிள்ளையோட வெற்றிக்கு நீங்கதான் காரணம்னு உங்களைப் பார்த்து நன்றி சொல்லணும்னு என்கிட்ட சொன்னாங்க" என்க, அந்த கணம் சாஜியும் ஆமோதித்து , "ஆமாம் தம்பி... நீங்க சையத்தோட வளர்ச்சிக்காக ரொம்ப துணையா இருந்திருக்கீங்கன்னு டீவில சையத் சொல்லிக் கேட்டேன்... உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு... எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல" என்று அவர் கைகூப்பி நிற்க, ராகவ் சங்கடத்தோடு, "அவன் என் நண்பன்மா இதுல என்ன இருக்கு.. அதுவும் இல்லாம அவன் திறமைதான் அவன் வெற்றிக்குக் காரணம் " என்றான். ஜென்னியும் ஆமோதித்து, "நூறு பர்ஸண்ட் உண்மை... சையத்தோட திறமைதான் இந்தளவுக்கு அவரை உயர்த்திருக்கு" என்றாள். சையத்திற்கு வானத்தில் மிதந்திருப்பது போன்றிருந்தது. இத்தனை சந்தோஷத்தை அவன் அனுபவித்ததே இல்லை என்பது போல் திக்குமுக்காடிப் போனான். அவன் வார்த்தைகள் வராமல் ஜென்னி அருகாமையில் வந்து நின்று நெகிழ்வாய் பார்த்தவன்,  "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜென்னி... நீங்க யாரு எனக்கு ?... சத்தியமா புரியல... எவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சாலும் அதைக் கொண்டாட யாராச்சும் கூட இருக்கணும்... நான் இத்தனை நாளா அதுக்காகதான் ஏங்கிட்டிருந்தேன்... அதை நீங்க நான் கேட்காமலே தந்திருக்கீங்க... என்ன சொல்றது... ஆனா நன்றின்னு மட்டும் சொல்ல மாட்டேன் ஜென்னி... நீங்க செஞ்ச காரியத்துக்கு அது பத்தாது" என்று சொல்லும் போது அவள் குறுக்கிட்டு அவனை நிறுத்த, அவன் அவளை கையமர்த்தி, "ப்ளீஸ் ஜென்னி... நான் முழுசா பேசிடிறேன்" என்று தொடர்ந்தான். "நான் இப்படி சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... என் சுயவிருப்பத்துக்காக சொல்லல... நான் நெக்ஸ்ட் எடுக்கப் போற அந்த மூவில உங்களைத் தவிர வேறு யாருமே நடிக்க வைக்க முடியும்னு எனக்கு தோணல... நீங்க மட்டும்தான் அந்த ரோலை பண்ண முடியும்... பணத்துக்காக இல்ல புகழுக்காக வேண்டாம்” “பெண் சமுதாயத்துக்காக... முன்னேற்றத்துக்காகன்னு யோசிச்சுப் பாருங்க... நீங்க மட்டும் அந்த படத்துல நடிக்க விருப்பப்படலன்னா... நான் நிச்சயம் அந்த ப்ரோஜெக்டையே ட்ராப் பண்ணிடுவேன்" என்று சொல்ல ஜென்னி வாயடைத்துப் போனாள். ராகவிற்கு அவன் கடைசியாக சொன்னது அதிர்ச்சிகரமாக இருந்தது. அது அவனின் கனவுபடம் என்று வாய் ஓயாமல் சொல்வானே. ஜென்னியும் அவன் சொன்னதில் அதிர்ந்து, "என்ன சொல்றீங்க சையத்?" என்று கேட்க, "உங்களைத் தவிர வேறெந்த பெண்ணையும் அந்த படத்தோட கதாநாயகியாய் என்னால யோசிச்சு கூடப் பார்க்க முடியாது" என்றான் தீர்க்கமாக! ராகவ் அந்த நேரத்தில் குறுக்கிட்டு பேச முடியவில்லை, எனினும் அவனுக்குள் கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது. இறுதியாய் அவர்கள் உரையாடல் முடிந்து சையத் தன் அம்மாவையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு புறப்பட, ஜென்னி கார் வரை வழியனுப்ப வந்தாள். சையத் புறப்படும் தருவாயில் அவளிடம் காதலை சொல்ல மனம் துடிக்க... அவன் பெருமூச்சோடு, "தேங்க் யூ ஜென்னி.. நான் இதை எப்பவும் மறக்கவே மாட்டேன்" என்றான். "விடுங்க சையத்" என்றவள் அஃப்சானாவை பார்த்து, "சந்தோஷமா அஃப்சானா ?!" என்க, அவள் ஜென்னியை கட்டிக் கொண்டு வெதும்பியவள், "தேங்க்ஸ் கா" என்று ஜென்னியை விடாமல் கட்டிக் கொண்டிருக்க, சாஜியும் கலங்கி நின்றார். மகனோடு போகிறோம் என்பதைத் தாண்டி ஜென்னியை பிரிய போகிறோம் என்ற சோகமே அவர்களை ஆளுமை செய்ய, ஜென்னி பிரயத்தனப்பட்டு சமாதானம் செய்து அவர்களை அனுப்பிவிட்டாள். அவர்களின் அந்தப் பிரிவு உணர்வுப்பூர்வமான காட்சியாய் அரங்கேறியது. அவர்கள் சென்ற பின் ராகவ் புறப்படத் தயாராக ஜென்னி புன்முறுவலோடு, "உங்க டைமை ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன் போல... சாரி" என்க, அவன் பெருமூச்செறிந்து, "இட்ஸ் ஒகே... ஆனா இப்போ நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்... முடியுமா?!" என்று கேட்டு இறுக்கமாய் பார்த்தான். "உள்ளே போய் பேசலாம்" "இல்லை இங்கயே" என்றபடி அவன் ரூபாவைப் பார்க்க, ஜென்னியும் அவளை சமிஞ்சையால் அங்கிருந்து போகச் சொன்னாள். சுற்றிலும் இருள் பரவி நிசப்தமாய் கிடக்க, ராகவ் ஆழ்ந்து அவளையே பார்த்தான். ஜென்னி சங்கடமாய் உணர்ந்த போதும் அதை காட்டிக் கொள்ளாமல், "ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி சைலன்ட்டா இருக்கீங்க" என்று வினவ, அவன் அவள் வசம் சாயும் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க முயன்றான். ஜென்னி எரிச்சலோடு, "ராகவ்... இங்க ஸ்மோக் பண்ணாதீங்க... எனக்கு அந்த ஸ்மெலெல்லாம் அலர்ஜி" என்று சொல்லும் போதே அவள் முகத்தில் படபடப்பு தொற்றிக் கொண்டது. ராகவ் அவள் சொல்வதைக் கேட்காமல் அதனைப் பற்ற வைத்துவிட்டு, "நீ சொல்றதெல்லாம் நான் கேட்கணுமா?!" என்றபடி புகையினை இழுத்து வெளியேற்ற அதை நுகர்ந்தவளுக்குக் கலவரம் தொற்றிக் கொண்டது. "நான்ஸென்ஸ்" என்றவள் அருவருப்பாய் பார்த்துவிட்டு நகர எத்தனிக்க அவனோ அவள் கரத்தை கெட்டியாய் பற்றி இழுத்து, அவன் காரில் அவளை நெருக்கியபடி, "என்னால முடியல.. எனக்கு இப்பவே உன்னை கிஸ் பண்ணனும்" என்க, அவள் பார்வை உஷ்ணமாய் மாறியது. "ஸ்கவுன்ட்ரல்" என்று திட்டிவிட்டு அவனை விலக்கிவிட முயல, அவனோ அசையாமல் நின்றான். அவள், "செக்யூரிட்டி" என்று சத்தமிட, அவன் கோபமடைந்து "இப்ப எதுக்கு சும்மா சீன் க்ரியேட் பண்ற... ஒரு கிஸ்ல உன் கற்பா போயிடப் போகுது" என்றவன் சிகரெட்டை புகைத்தபடி அவளை நெருங்கினான். அவள் நாசிக்குள் புகுந்த அந்த சிகரெட் வாடை அவள் உடல் மூளை என இரண்டையும் மெல்ல செயலிழுக்க செய்து கொண்டிருந்தது. ஜென்னி அவள் வாழ்வில் சிரமப்பட்டு எதை மறந்திருந்தாளோ, இன்று அவனின் அந்தச் செய்கையால் அவை நினைவலைகளாய் எழும்பியது. பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இதயத்தின் துடிப்பு அதிகரிக்க, அவள் உடலெல்லாம் வியர்த்து நடுக்கமுறத் தொடங்கி இறுதியாய் மூச்சுவிட முடியாமல் திணற ஆரம்பித்தாள். ராகவ் சிகரெட்டைப் புகைத்தபடி அவள் தடுமாறுவதைப் பார்த்து வியப்பானவன், அதை விரும்பவும் செய்தான். அவனைத் தடுக்கவும் முடியாமல் அந்தச் சூழலில் இருந்து விடுபடவும் முடியாமல் அவள் இருக்க, ராகவின் நினைப்பிற்கு அது சாதகமாகியது.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா