மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 11Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 11

Quote from monisha on December 20, 2025, 11:53 PM

அத்தியாயம் – 11

“ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டா கடைசி வரைக்கும் அதுல உறுதியா நின்னு அதை செஞ்சு முடிக்கணும். ஆனா நீ என்ன பண்ண” என்று அடி வாங்கிய அதிர்ச்சியில் நின்றிருந்த ரஞ்சனிடம் சீற்றத்துடன் கூறிக் கொண்டிருந்தாள் கவிதா.

அவமானத்துடன் அவளை ஏறிட்டவன், “தப்புதான் சாரி... ஆனா” என்று மேலே பேசுவதற்குள் அவள் இடையிட்டாள்.

“என்ன ஆனா... ம்ம் என்ன ஆனா” என்று கோபமாக கத்த, “ப்ளீஸ் கத்தாதீங்க... எங்க அப்பா உள்ளே தூங்கிட்டு இருக்காரு. அவர் எழுந்தா பிரச்னையாயிடும்” என்று பயத்துடன் எச்சரிக்க, “என்ன பண்ணிடுவான் அந்த ஆளு” என்றாள் அசட்டையாக.

அவரிடம் அடி வாங்கிய பிறகும் எப்படி இவள் இப்படிப் பேசுகிறாள் என்று குழப்பத்துடன் பார்த்தவன் மெல்லிய குரலில், “உங்களுக்கு அவரை பத்தி முழுசா தெரியாதுங்க” என்றான்.

“என்ன முழுசா தெரியாது. எல்லாம் தெரியும்... அந்த ஆளு ஒரு ரவுடி” என்று சொல்லி கொண்டே போக அவன் உடனடியாக, “இல்ல, நீங்க சொல்ற மாதிரி எல்லாம் அவர் கிடையாது. அவர் நல்லவர்தான்” என்றான்.

“எது, பெத்த மகனையே அடிமை மாதிரி நடத்துறவன் நல்லவனா?” என்று கேட்க அவன் தயக்கத்துடன், “அவர் முரட்டுத்தனமா நடந்துப்பாருதான். ஆனா அதுக்காக கெட்டவர் எல்லாம் கிடையாதுங்க” என்றான்.

“அப்படியா சரி. அப்போ அவர்கிட்ட சொல்லிட்டு வா. நம்ம சென்னைக்கு கிளம்பலாம்” என, அவன் திருதிருவென்று விழித்தான்.

“என்ன நிற்குற, சீக்கிரம் கிளம்பு. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றவள் சொல்ல, “இல்ல அப்பா விடமாட்டாரு” என்றான் தலையைக் குனிந்தபடி.

“இப்பதானே நீ அவரு நல்லவரு வல்லவருன்னு எல்லாம் சொன்ன”

“உங்களுக்கு என் நிலைமை புரியாதுங்க. அதுவும் இல்லாம பிரச்னை அப்பா மட்டும் இல்லங்க. பாட்டியும்தான். அவங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ராபளம் இருக்கு. இதுல நான் தாத்தாவோட போறேன்னு சொன்னா அவங்களால தாங்கிக்க முடியாது. மனசொடஞ்சு போயிடுவாங்க ”

“தாத்தா கூட பேரன் சேர்றதை தாங்கிக்க முடியாது, இப்படிப்பட்ட ரவுடி அப்பா கூட இருக்கலாம். அது உங்க பாட்டிக்கு பிரச்னை இல்லயோ” என்றவள் பேசியதை கேட்டு கோபம் கொண்டவன்,

“திரும்ப திரும்ப அப்பாவை ரவுடினு எல்லாம் சொல்லாதீங்க.” என்றான்.

“அப்ப அந்த லாக் அப் டெத், அதை பண்ணது உங்க அப்பா இல்லையா?” என்றவள் கேட்டதில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

அதேசமயம் கோலப்பொடியுடன் வாசலுக்கு வந்த சாரதா கவிதாவை பார்த்துவிட்டு, “யாரும்மா நீ” என்று விசாரிக்க, “போச்சு” என்று அந்த நொடியே ரஞ்சன் அடுத்த அதிர்ச்சிக்கு தயாரானான்.

பாட்டியிடம் அவள் ஏதாவது சொல்லி விடுவாளோ என்று கவிதாவிடம் தலையை மறுப்பாக அசைத்து காட்டினான். ஆனால் அவள் கொஞ்சமும் அவனைப் பொருட்படுத்தவில்லை.

“உங்களை பார்க்கத்தான் பாட்டி வந்திருக்கேன்”

“என்னைய பார்க்கவா? யாருன்னு தெரியலையே” என்று யோசித்த சாரதா அவளின் தோற்றத்தை பார்வையிட்டு, ‘ஒரு வேளை நம்ம சோமு பொண்ணு நந்தினியா. ஆனா அந்த புள்ள இம்புட்டு உசரமா இருக்காதே’ என்று நினைத்துக் குழம்ப,

“நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா உங்களை எனக்கு தெரியும். உங்க பேரன் ரஞ்சன் மூலமா” என்று சொல்லி மேலும் ரஞ்சன் தலையில் இடியை இறக்கினாள்.

அந்தக் கணமே பேரனை நோக்கிய சாரதாவோ, “யாரு ரஞ்சு?” என்று கேட்க, அவன் வாய் பசை போட்டது போல ஒட்டிக் கொண்டது.

அதற்குள் கவிதாவே, “நான் ரஞ்சனோட வேலை பார்க்குறேன். அவனோட பிரண்டு” என்று அறிமுகம் செய்து கொள்ள, “அப்படியா உள்ளே வாம்மா” என்று சாரதா உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்கள் பின்பாக வந்த ரஞ்சன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை நடுக்கத்துடன் பார்த்தான்.

ஐயோ! அவர் எழுந்துவிட்டால் இங்கே ஒரு பிரளயமே வெடிக்குமே. ஆனால் கவிதாவிடம் பதற்றமோ பயமோ எதுவுமே இல்லை.

“இப்படி உட்காரும்மா” என்று விட்டு சாரதா தண்ணீர் எடுத்து வரச் செல்ல கவிதா தன் பையை இறக்கிவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள்.

நடுக்கத்துடன் அவள் அருகே வந்து நின்ற ரஞ்சன், “அப்பா மட்டும் எழுந்துட்டா அவ்வளவுதான்” என்றான்.

“அப்படினா வா, அவர் எழுந்திருக்கிறதுக்குள்ள இங்கிருந்து ஓடிடலாம்” என்று ரகசியமாக கூற அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

“என்ன?”

“ஓடிடலாம்னு சொன்னேன்”

“நான் எங்கே போனாலும் அப்பாவுக்கு தெரிஞ்சிடும்”

“உன் வாழ்க்கை முழுசுக்கும் இப்படியே பயந்துட்டே இருக்க போறியா நீ, உண்மையிலயே உன்னை கட்டுபடுத்தி வைச்சு இருக்கிறது உங்க அப்பா இல்ல. உன் பயம்தான். நீ அதிலிருந்துதான் முதல வெளியே வரணும்.”

அவன் எதுவும் பேசாமல் நிற்க, அப்போது சாரதா அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். அதனை பெற்று கொண்டவள், “இங்க வாஷ் ரூம் எங்க இருக்கு” என்று கேட்க, “பின்னாடி இருக்கும்மா” என்றார்.

பின்கட்டிற்குச் சென்ற கவிதா அங்கே பல்துலக்கி கொண்டிருந்த ரத்னாவிடம், “ஹே நீ ரத்னாதானே?” என்று கேட்டாள்.

“ஆமா. நீங்க.. உங்களுக்கு எப்படி என் பேர்”

“நான் ரஞ்சனோட பிரண்ட்... அவன் போன்ல உன் போட்டோவை பார்த்திருகேன்”

“எது, அண்ணாவுக்கு பிரண்டா... அதுவும்” என்று அவள் ஆச்சரியமாக வாயை பிளந்தாள்.

“என்ன அதுவும்”

“இல்ல ஒன்னும் இல்ல”

“நான் பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாம் இல்ல”

“ம்ம்ம் பண்ணிக்கலாம்” என்றதும் கவிதா கழிவறைக்குள் சென்றுவிட்டாள்.

அடுத்த நொடியே அண்ணனிடம் ஓடிச்சென்ற ரத்னா, “அண்ணா யாரு அது. செம ஸ்டைலா அழகா இருக்காங்க. அதுவும் உன்னை பிரண்டுன்னு வேற சொல்றாங்க. பிரண்டுனா கேர்ள் பிரண்டா?” என்று குதர்க்கமாகக் கேட்கவும் அவளை முறைத்தவன், “ஒழுங்கா உள்ளே போ” என்றான்.

“வெறும் பிரண்டா இல்ல கேர்ள் பிரண்டானு சொல்லு... அப்பத்தான் உள்ளே போவேன்”

“இரண்டுக்கும் என்னடி வித்தியாசம்”

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், “வாய்ப்பு இல்ல ராஜா... வாய்ப்பே இல்ல” என்று சொல்லி உதட்டைக் கோணலாகச் சுழித்துக் கொண்டு உள்ளே போனவள் அங்கிருந்த நாற்காலியை தள்ளிவிட்டாள். அது போட்ட சத்தத்தில், “யார்ரா அது” என்று ராகவன் சத்தமிட, ரத்னா ஓடியேவிட்டாள்.

ராகவன் உறக்கம் களைந்து கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்ததை கண்டு பதற்றமான ரஞ்சன், அவசரமாகப் பின்கட்டிற்கு ஓடினான். அங்கே கவிதா குழாயில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

“ஐயோ! அப்பா எழுந்துட்டாருங்க”

“என்ன?”

“உங்ககிட்ட அப்பவே சொன்னேன்” என்ற அவனுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் விளங்கவில்லை.

“எழுந்ததும் அவர் நேரா பாத்ரூமுகுதானே வருவாரு” என்றவன் மேலும் பயத்துடன் கூற, அத்தனை நேரம் துணிவுடன் நின்ற கவிதாவிற்கும் நடுங்கியது.

“லூசு மாதிரி நிற்காத. இப்ப என்ன செய்றதுன்னு சொல்லு” என்றவள் ரஞ்சனை திட்டவும், அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. அப்பா நேராக கழிவறைக்குத்தான் செல்வார்.

ஆதலால் அவளைக் குளியலறைக்குள் இழுத்து சென்று கதவை உள் தாழ்ப்பாள் போட, “என்ன பண்ற நீ” என்றாள்.

அப்போது பக்கத்தில் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது.

“ஷ்ஷ்” என்று அவன் சொல்ல, அவளும் அமைதியாகிவிட்டாள்.

‘இப்ப என்ன பண்ண போறோம்’ என்று அவள் செய்கையில் கேட்க கதவை திறந்தவன், “ஓட போறோம். நீங்க போய் உங்க பேகை எடுத்துக்கோங்க. நான் போய் கார் சாவி எடுத்துட்டு வரேன்” என்று விட்டு அறைக்கு ஓடினான்.

அவளும் அவன் சொன்னது போல பையை எடுத்து கொண்டு வெளியே ஓடினாள்.

விரைவாக அறைக்குள் சென்று சாவியை எடுத்து கொண்ட ரஞ்சன் எதரே சாரதா வந்து நின்றார்.

“எங்கடா போற. ஆமா எங்க அந்த பொண்ணு”

“பாட்டி நான்... சென்னைக்கு போறேன். சாரி, உங்களுக்கு எல்லாத்தையும் போன்ல சொல்றேன். அப்பா ஏதாவது சொன்னாருனா நம்பாதீங்க” என்று விட்டு தன்னுடைய தோள் பையை மாட்டிக் கொண்டு வாசலுக்கு ஓடினான்.

முன்பே வெளியே வந்துவிட்ட கவிதாவிடம், “கார் அந்த பக்கமா நிற்குது” என்று சொல்லி முன்னே சென்று வழிகாட்டினான். அடுத்த பத்தாவது நிமிஷம் அவர்கள் கார் ஊர் எல்லைக்கு வந்திருந்தது.

அவன் பெருமூச்செறிய, “சாரி உன்னை நான் அடிச்சிருக்க கூடாது” என்றாள்.

“எனக்கு அடி வாங்குறது எல்லாம் பழகி போச்சு” என்றவன் கூற, “ஸோ சாரி” என்று இம்முறை அதிக குற்றவுணர்வுடன் அவள் சொல்ல,

“இல்லங்க நீங்க வரலனா நான் என்ன பண்ணி இருப்பன்னு தெரியல. ஏன், இப்படி ஓடி வர்றதுக்கு கூட எனக்கு தைரியம் வந்திருக்காது” என்றான்.

“ஆனா அப்பாவிற்கு விஷயம் தெரிஞ்சதும் நேரா தாதத்தாவை தேடித்தான் வருவாரு. அதை நினைச்சாதான்”

“அதெல்லாம் பிரச்னை இல்ல. பிரகாஷ் தாத்தாவை எங்காயாச்சும் வெளியூருக்கு இல்ல வெளிநாட்டுக்கு போக சொல்லிடலாம். நான் லோன் போட்டு மடிப்பாக்கத்துல ஒரு புது ப்ளாட் வாங்கி வைச்சிருந்தேன். நம்ம இரண்டு பேரும் அங்கே போய் தங்கிடுவோம்” என்றாள்.

“எப்படி நீங்க டக்கு டக்குன்னு யோசிச்சு ஒரு முடிவு எடுக்குறீங்க”

“நமக்கான முடிவை நம்ம எடுக்கலனா, நம்ம முடிவை அடுத்தவங்க எடுத்துடுவங்க. அதுக்கு நம்ம விடவே கூடாது. தப்போ சரியோ நம்ம முடிவை நம்மதான் எடுக்கணும். அது தப்பா போனாலும் நம்ம அதை சமாளிக்கணும்” என்று கூறிய அவளை அவன் அதிசயித்துப் பார்த்தான்.

வாழ்க்கை பாடத்தை மிகச் சாதாரணமாக அவள் அவனுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இன்று அவள் இல்லாமல் போனாலும் அவள் சொல்லி கொடுத்த ஒவ்வொரு விஷயம் அவன் மனதில அழுத்தமாக பதிந்திருந்தது. சரியாக அந்தச் சமயம் அவனின் செல்பேசியின் அலாரம் அடித்தது. மணி 5.30.

உடனடியாகக் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து உடைமாற்றினான்.

பின்னர் அஜயை எழுப்பி தயாராகச் சொன்னான். அவன் குளிரில் நடுங்கிக் கொண்டே காரில் ஏறி உட்கார்ந்து கொள்ள, ரஞ்சன் காரை அந்த பனிமூடியச் சாலையில் மெதுவாக ஓட்டிச் சென்றான்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு வட்டக்கலில் இருந்த ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தினான் ரஞ்சன்.

“அப்பாடா நானே சொல்லணும்னு நினைச்சேன். டீ குடிச்சுட்டு போலாம்னு” என்றான் அஜய்.

“டீ குடிக்குறதுக்காக இங்க நிறுத்தல”

“அப்புறம்”

“கவிதா தினமும் காலையில இந்த பக்கம்தான் வாக்கிங் போவாங்க. அப்புறம் இங்கதான் வந்து டீ குடிப்பாங்க” என்று கூற அவனை வியப்பாக ஏறிட்ட அஜய், “அடிப்பாவி! இரண்டு நாளா டீக்கடை டீக்கடையாதான் அலைஞ்சுட்டு இருந்தியா நீ” என்று கேட்டான்.

“உங்க பிரண்டுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதுதானே” என்றவன் கடைகாரரிடம் சென்று, “அண்ணா ஒரு மசாலா டீ, அப்புறம் ஒரு பால். ப்ளைனா” என்று சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தான்.

அவன் அருகே அமர்ந்த அஜய், “கண்டிப்பா அவதானா? நல்லா தெரியுமா” என்று சந்தேகமாகக் கேட்டான்.

“உங்களுக்கு உங்க பிரண்டை பத்தி தெரியாதா? எந்த டீக்கடைக்கு போய் டீ குடிச்சாலும் அது நல்லா இருக்கா இல்லையானு சொல்லிட்டுதான் போவாங்க. யாராலயும் அவங்கள சுலபமா மறக்க முடியாது. மறக்க விட மாட்டாங்க”

“நீ சொல்றது உண்மைதான். ஆனா எனக்கென்னவோ இத்தன வருஷ நட்புக்கு அப்புறமும் கூட அவளை நான் முழுசா புரிஞ்சிக்கலன்னுதான் தோணுது டா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடைக்காரர், “ஒரு மசாலா டீ ஒரு பாலு” என்று சொல்லி டம்ளர்களை மேடையில் வைத்தார்.

அதனை எடுத்து கொண்ட அஜயும் ரஞ்சனும் அந்த பனி மூடிய சாலையையே எதிர்பார்ப்புடன் பார்த்தனர்.

யாரோ ஒரு பெண் தூரத்தில் நடந்து வருவது மங்கலாகத் தெரிய, இருவரும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர். ஆனால் நெருங்கி வரவும்தான் அது அவள் இல்லை என்று தெரிந்தது.

மீண்டும் இருவரும் மூச்சுவிட்டனர். இப்படியே இரண்டு மூன்று முறை நடந்துவிட, இருவரின் முகமும் சோர்ந்து போனது.

அஜயின் நம்பிக்கையும் தளர்ந்து போனது. ரஞ்சன் டீ கடைக்காரரிடம் சென்று, “இந்த டைமுக்குதானே வருவாங்கன்னு சொன்னீங்க” என்று கேட்டான்.

“ஆமா இந்த டைமுக்குதான் தம்பி” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவர் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினார்.

சாலையில் மெல்ல மெல்லப் பனி விலகி சூரிய வெளிச்சம் படர அஜய் நம்பிக்கையின்றிப் பார்த்தான். ஆனால் ரஞ்சனோ அவளை இன்றே பார்த்துவிட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அங்கேயே அசையாமல் நின்றான்.

அப்போது பார்த்து அவர்கள் பின்பக்கத்திலிருந்து, “அண்ணா இரண்டு மசாலா டீ” என்று ஒரு குரல் கேட்டது.

அந்தக் குரல்... ரஞ்சனும் அஜயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அதேநேரம் திரும்பி அந்தக் குரலுக்கு உரியவளைப் பார்த்தனர்.

அது அவளேதான். கவிதா!

மூன்று வருடத்திற்குப் பிறகும் அவள் அப்படியேதான் இருந்தாள். என்ன கொஞ்சம் ஒல்லியாக. கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் குளிருக்கான மேலங்கி ஒன்றை அணிந்திருந்தாள். கச்சிதமாக அவள் தேகத்திற்கு பொருத்தமாக இருந்தது.

அஜய், “கவிதா” என்று அழைப்பதற்குள், “கவி” என்று ஓர் ஆணின் குரல் அவள் தோளைத் தொட்டது.

“ரொம்ப குளிருது. இவ்வளவு காலையில எப்படித்தான் வாக்கிங் வர்றியோ”

“உன்னை கார்லதானே உட்கார சொன்னேன்” என்றவள் அவனிடம் பேசி கொண்டிருக்கும் போதுதான், “ஏய் அஜய்” என்று அழைத்தான் கவிதாவுடன் நின்ற ஆடவன். அவள் பார்வையும் அப்போதுதான் அவர்கள் மீது விழுந்தது.

“என்ன அஜய் அடையாளம் தெரியலையா, நான்தான்டா ஸ்ரீதர்” என்று உற்சாகமாக கூற, “ஓ ஸ்ரீ” என்றான் அஜய்.

“ஆமா ஸ்ரீயேதான் என்னை மறந்துட்ட இல்ல நீ... ஆனா நான் உன்னை மறக்கல. இப்போ கூட உன்னை பத்தி கவிக்கிட்ட பேசிட்டு இருந்தேன். இல்ல கவி” என்று ஸ்ரீதர் அதிர்ச்சியில் நின்றிருந்த கவிதாவின் தோள்களை உரிமையுடன் பற்றிக் கொண்டான்.

நடப்பது ஒன்றும் புரியாமல் நின்ற ரஞ்சன், தன் மதிப்பிற்குரிய மனைவியின் தோள்களை இன்னொரு ஆண் அணைத்து பிடித்திருந்ததை பார்த்து நொறுங்கி போனான்.

அதற்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லை. ஏதோ உள்ளே உடைந்தது. அவன் அங்கிருந்து விடுவிடுவென்று நடக்க, “ரஞ்சன் நில்லு... ரஞ்சன்” என்று அஜய் அவன் பின்னோடு ஓடினான்.

அங்கிருந்து வெகுதூரத்தில் இருந்த கல்லில் அமைதியாக அமர்ந்துவிட்ட ரஞ்சனை பார்த்த அஜய், “நீ போன வேகத்தைப் பார்த்து நான் பயந்துட்டேன்டா” என்றான்.

“யார் அந்த ஸ்ரீதர்?”

“அவன் எங்க காலேஜ் மெட்”

“வெறும் காலேஜ் மெட்டா”

“அது.. அவன் கவிதாவை காலேஜ்ல ஒன் சைட்டா காதலிச்சுட்டு இருந்தான். அவ விருப்பம் இல்லன்னு சொன்ன பிறகும் பைத்தியம் மாதிரி பின்னாடியே சுத்திட்டு இருந்தான்”

“இப்ப புரியுது” என்று ரஞ்சனின் குரல் உடைய, “அவசரப்படாதே” என்றான் அஜய்.

அதேசமயம் கவிதாவின் குரல், “அஜய்” என்று அழைக்க, அவன் ஆவேசமாக திரும்பினான்.

“எது அஜயா? என்னைய எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்காடி”

“நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு அஜய்”

“தேவை இல்ல, நீயும் நானும் பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல. எப்போ நீ என்கிட்டே சொல்லாம கொல்லாம போனியோ அப்பவே எல்லா முடிஞ்சு போச்சு நமக்குள்ள. உனக்கு ஏதாவது சொல்லணும்னா இவன்கிட்ட சொல்லு. இன்னுமும் உன்னை இவன்தான் நம்பிட்டு இருக்கான். உனக்காக காத்திட்டு இருக்கான்” என்ற அஜய் அவர்கள் இருவரையும் தனியாக விட்டு அங்கிருந்து அகன்றுவிட, கவிதா ரஞ்சனை பார்த்தாள்.

அவன் அந்த கல்லில் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ரஞ்சன்” என்று அழைத்த கணமே அவன் எழுந்து நின்று அவள் விழிகளை நோக்கினான். ஆனால், அவளால் அவனை நேராகப் பார்க்க முடியவில்லை. அவள் தலையைத் தாழ்ந்து கொண்டாள்.

“யாரோ எனக்கு கண்ணை பார்த்துதான் பேசணும்னு சொல்லி கொடுத்தாங்க”

அந்த நொடியே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் விழிகளை... அது அவள் முதல் முதலாகப் பார்த்த விழிகள் இல்லை. படபடப்பும் பயமும் கலந்த அந்த விழிகள் இப்போது தெளிவும் தைரியத்துடன் நிமிர்ந்து நோக்கியது.

அவளை விழுங்கிவிடும் தீரத்துடனும் பார்த்தது.

அந்த விழிகளின் வலிகளை உணர்ந்து கொண்டவள், “ஐம் சா...” என்று மன்னிப்பை கேட்டு முடிப்பதற்குள் அவன் கரம் அவளை அறைந்துவிட்டது. என்ன அடி அது!

கதிகலங்கி நின்றவள் வலியில் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே அதிர்ச்சியுடன் அவனை ஏறிட, “ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டா கடைசி வரைக்கும் அதுல உறுதியா நின்னு அதை செஞ்சு முடிக்கணும்னு நீங்கதானே எனக்கு அடிச்ச்ச்சு சொல்லி கொடுத்தீங்க” என்று அவளின் வார்த்தைகளை அவளுக்கே திருப்பிச் சொன்னவன், “சொன்னதை நீங்களே மறக்கலாமா கவிதா?” என்று எகத்தாளமாக கேட்டு

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா