மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 41Post ReplyPost Reply: Naan Aval Illai - 41

Quote from monisha on November 29, 2020, 8:52 PM

41

அணைப்பு
டேவிடும் ஜென்னியும் வீட்டை அடையும் வரை அவர்களின் மௌனநிலையும் கலையவில்லை. கார் டேவிடின் வீட்டின் வாசலில் நுழைய, ஜென்னியின் பெட்டியை உள்ளே எடுத்துப் போக சொல்லி டேவிட் அங்கிருந்த வேலையாளைப் பணித்தான். உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த இன்னொரு பணியாளை அழைத்து, "மேலே கெஸ்ட் ரூம்... க்ளீன் பண்ணி ரெடி பண்ண சொன்னேனே பண்ணிட்டீங்களா?!" என்று கேட்டான். அவன் கேள்விக்கு அவனும் மௌனமாய் தலையசைத்து ஆமோதிக்க, உடனே அவன் அவளிடம், "வா ஜென்னி" என்று அழைத்தான். அந்த வீட்டைச் சுற்றும் முற்றும் தேடலாய் பார்த்துக் கொண்டிருந்தவள், "அங்கிள் எங்கே டேவிட் ?" என்று கேட்கவும், "மேலே ரூம்ல இருப்பாரு" என்றான். "சரி... அவரைப் போய் பாத்து பேசிட்டு போவோம்" "ஒண்ணும் வேண்டாம்" என்று உரைத்தவனை யோசனைக்குறியோடு பார்த்தவள், "வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று கேள்வி எழுப்பினாள். "வேண்டாம்னு அர்த்தம்" என்று அவன் அழுத்தமாக மறுக்க, அவள் கூர்ந்த பார்வையோடு கோபமாய் முறைத்தாள். அவள் விழியில் நின்ற சினத்தைக் கவனித்தவன், "ப்ச்... இங்கதானே இருக்க போறே... அப்புறம் பார்த்துக்கலாமே?!" என்று சமாளித்துவிட்டு, அவள் தங்க ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழைந்த மறுகணம் பிரகாசத்தோடு விசாலமாக இருந்த அந்த அறையினை அவள் தம் விழிகளைச் சுழற்றி பார்க்க, "உனக்கு இந்த ரூம் ஒகேதானே ஜென்னி" என்று இயல்பாகக் கேட்டான். "ஹ்ம்ம்ம்... டபுள் ஒகே" என்றாள். "அப்படின்னா சரி.... நீ ரெஸ்ட் எடு... உனக்கு என்ன வேணாலும் ஜஸ்ட் எ கால்... சர்வன்ட்ஸ் வந்து செஞ்சு கொடுத்திருவாங்க... ஃபீல் ப்ரீ... எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வொர்க் இருக்கு... நான் இப்போ கிளம்பிறேன்...நம்ம ஈவனிங் மீட் பண்ணுவோம்" என்று பரபரப்பாய் சொல்லிவிட்டு அவள் பதிலுரையைக் கூட எதிர்பார்க்காமல் அவன் வெளியேறப் போக, அத்தனை நேரம் அறையை நோட்டமிட்டிருந்தவள் சட்டென்று திரும்பி, "டேவிட் ஒரு நிமிஷம்" என்று அழைத்தாள். அவள் அழைப்பை ஏற்று திரும்பியவன், "என்ன ஜென்னி? ஏதாவது வேணுமா?" என்று கேட்க, அவனைப் பெருமூச்செறிந்து பார்த்தவள், "உங்களுக்கு என்கிட்ட கேட்குறதுக்கு எதுவும் இல்லையா டேவிட்?" என்றதும் அவன் பதிலுரைக்காமல் மௌனமாக நின்றான். அவள் தன் கரத்தைக் கட்டிக் கொண்டு மீண்டும், "உங்க மனசுல என்ன கேட்கணும்னு தோணுதோ... அதை என்கிட்ட கேட்டுடுங்க" என்றவளைப் பார்த்து அவன் புன்னகை அரும்ப, "எனக்கு கேட்குறதுக்கு எதுவுமில்லை?" என்க, "நிஜமாவா? !" என்று அவள் அதிசயித்தாள். "ஹ்ம்ம்" என்றவன் அவளை நோக்கி, "ஆனா உனக்கு என்கிட்ட சொல்றதுக்கு ஏதாவது இருந்தா சொல்லலாம்" என்றவனை அவள் புருவங்கள் நெறிந்திட ஒரு பார்வை பார்த்தாள். அதே நேரம் டேவிடின் உதட்டில் தவழ்ந்த புன்னகை அவளைக் கொல்லாமல் கொன்றது. அவனுக்கு உண்மையிலயே தன் மீது கோபம் இல்லையா என்று தனக்குள்ளையே கேட்டுக் கொண்டவளை அவன் புன்முறுவலோடு நோக்கி, "இவ்வளவு நேரம் யோசிக்கிறேன்னா... அப்போ உனக்கு என்கிட்ட சொல்றதுக்கு ஏதோ இருக்கு" என்றான். அவள் தன் மனதில் உள்ளதைச் சொல்வாளா என்ற எதிர்பார்ப்பு அவன் பார்வையில். ஜென்னி அவன் எண்ணத்தை உணர்ந்து, "உங்களுக்கு கேட்குறதுக்கு எதுவுமில்லைன்னா... எனக்கும் சொல்றதுக்கு எதுவுமில்லை" என்றவள் இயல்பாகத் தோள்களைக் குலுக்கி பதிலுரைத்தாள். அவள் செயலை கண்டு டேவிடுக்கு சிரிக்கத்தான் தோன்றியது. ஆனால் ஜென்னிக்கு கோபம் மூண்டது. எதற்கும் அசைந்து கொடுக்காமல் எந்த சூழ்நிலையையும் நிதானத்தோடு புன்னகையாலேயே வீழ்த்துபவனை எப்படி எதிர்கொள்வது? அந்த நொடி அவள் பொறுமையின்றி நேரடியாகவே கேட்டுவிட்டாள். "உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா டேவிட்?" என்று! அவன் புரியாத பார்வையோடு, "எதுக்கு கோபப்படணும்?" என்றவன் புரியாமல் கேட்க், "நான் ராகவ்வை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்கு" என்று கேட்டு அவன் உணர்வுகளை ஆராய்ந்தபடி ஆழமாய் பார்த்தாள். அவன் ரொம்பவும் இயல்பான முகபாவத்தோடு, "இதுல கோபப்பட என்ன இருக்கு ஜென்னி... மேரேஜ்ங்கிறது உன் தனிப்பட்ட விஷயம்" என்று அவன் சொல்ல, "ப்ளீஸ் டேவிட்... உங்களுக்கு வலிக்கவே இல்லங்கிற மாதிரி ரியாக்ட் பண்ணாதீங்க.. இட்ஸ் ஹர்ட்டிங் மீ" என்று அவள் உணர்ச்சி மேலெழும்ப உரைத்தாள். அவள் சொன்னது போல் அவனுக்கு வலித்தாலும் அதை அவள் மீது திணிப்பது முறையல்ல என்று எண்ணம் கொண்டவனால் எப்படி அவளிடம் கோபம் கொள்ள முடியும்? இன்னொரு புறம் தன் மனதைக் கண்டறிந்து அவள் வேதனையுற்றுப் பேசுவது அவள் மீதான மரியாதையை அவனுக்கு இன்னும்அதிகரிக்கவே செய்தது. தனக்கு அவளைத் துணைவியாய் பெறும் பாக்கியம் இல்லை என்று எண்ணியபடி அவன் அமைதி காக்க, அவள் அந்தக் கணம் அவன் கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டு, "ஸாரி டேவிட்... அன்னைக்கு நீங்க என்கிட்ட கேட்டதை நான் செய்ய முடியல" என்று மனமுருகியவளைப் பார்த்து அவன் மனம் இளகியது. "அதெல்லாம் விடு... இட்ஸ் ஒகே" என்று அவளை சமாதானப்படுத்த அவள் அமைதியடையாமல் அவன் கரத்தைப் பற்றியவாறே,  "ஆனா ஒண்ணு டேவிட்... நான் அன்னைக்கு சொன்ன மாதிரி... உங்க கூட நான் ஒரு ஃப்ரெண்டா எப்பவும் இருப்பேன்" என்றாள். அவள் விழியில் நீர் கோர்த்திருப்பதைப் பார்த்து அவன் மனம் தவிப்புற்ற அதே சமயம் அவள் சொன்ன நட்பென்ற வார்த்தை அவன் மனதை வெகுவாய் காயப்படுத்தியது. அவள் மேலும், "என் வாழ்க்கையில நான் நிறைய இழந்துட்டேன் டேவிட்... ஆனா உங்க நட்பையும் உங்களையும் எதுக்காகவும் யாருக்காகவும் இழக்க விரும்பல" என்றவள் சொல்லும் போதே அவள் உதடுகள் நடுக்கமுற்று விழியில் கண்ணீர் நிரம்பியது. அவளின் வார்த்தையிலிருந்த ஆழமான வலி அவனை வேதனைக்குள்ளாக்க, "உன்னை நானும் இழக்க விரும்பல ஜென்னி" என்றவன் தன்னையும் மீறி அவளை அணைத்துக் கொண்டான். அவள் எதிர்பாராத அதிர்ச்சியில் நின்றுவிட, அந்த நொடி டேவிடை ஆளுமை செய்தது அவனின் காதல் உணர்வு மட்டுமே! அவள் தன் வாழ்வில் எப்போதும் வேண்டுமென்று அவனுக்குள் இருந்த தவிப்பு, அவன் கண்ணியத்தின் கரையை உடைத்தெறியச் செய்தது. நட்பென்ற அணைக்கட்டை உடைத்துக் கொண்டு பெருகிய அவன் காதல் உணர்வு அவளை அவனோடு மூழ்கடித்திட, அவன் கரத்தை விட்டு வெளியே வர முடியாமல், "டேவிட்" என்று அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவன் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவன் தன்னிலை மறந்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனைத் தடுக்கவும் முடியாமல் அவன் உணர்வுகளை நிராகரிக்கவும் முடியாமல் தவித்தவள், ஒருநிலையில் அவனாக அமைதி பெறட்டும் என எதிர்ப்பின்றி தன் முயற்சியைக் கைவிட்டாள். முழுநிலவைப் பார்த்து பொங்கும் கடல் போலதான் அவளைப் பார்த்த நொடி அவன் உணர்வுகள் பொங்கியெழுந்திட, நட்பென்று எல்லைக் கோட்டில் அவன் நிற்கவே எண்ணினாலும் அவளிடத்தில் அது சாத்தியப்படவில்லை. அந்தக் கணம் ஜென்னியின் கைப்பேசி சத்தமாய் ஒலிக்க, அவள் அணைப்பில் ஒன்றியிருந்தவன் புத்துயிர் பெற்று, அவன் கரத்தை விலக்கிப் பின்வாங்கினான். ஜென்னி அவனை ஊடுருவி பார்க்க, அவனோ அவளை நேர்கொண்டு பார்த்திராமல் படபடப்போடு, "ஸாரி... நான் தெரியாம" என்றவன் விழிகள் அலைபாய்ந்தது. அவள் எதுவும் பேசாமல் மௌனமாய் பார்க்க, அவள் மனவுணர்வை கணித்திட ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்தான். உணர்வுகளை மறைத்திருந்த அவள் முகம் எந்தவித எண்ண பிரதிபலிப்பையும் தாங்கியிருக்கவில்லை. அதற்கு மேல் அவள் முன்னிலையில் நிற்க முடியாமல், "நான் ஆபிஸ் கிளம்பிறேன்" என்றவன் வெளியேறிட, ஜென்னி தோற்றுப் போன உணர்வோடு படுக்கையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள். அவனின் அணைப்பிற்குள் இருந்த போது அவள் மனமெல்லாம் ஏதோ செய்தது. காதலுக்கும் காமத்திற்குமான இடைப்பட்ட தேவை அது. தன் மனம் அதனை விழைந்ததோ? அவன் உணர்ச்சிவசத்தால் அணைத்துக் கொண்டாலும் அதில் விரசம் இல்லை. வெகுதூரத்தில் கடலை வானம் முகிழ்வது போல் ஒர் அணைப்பு. தொட்டும் தொடாமலும். அத்தனை இலகுவான அவன் அணைப்பை அவள் விலக்கிவிட்டிருக்க முடியும். ஆனால் அதை ஏன் தான் செய்யவில்லை என்று கேட்டு கொண்டவளுக்கு தன் நட்பு அவன் காதலின் முன் தோற்றுக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றிய நேரம், அவள் கைப்பேசி மீண்டும் அவளை அழைத்தது. முதலில் அழைத்த அதே அழைப்பா? என்றெண்ணி, அதனை தன் கரத்தில் ஏந்தியவள் ராகவ் என்று பெயரைப் பார்த்துவிட்டு அந்த அழைப்பை ஏற்றாள். எதிர்புறத்தில், "ஜென்னி" என்றழைத்தவனிடம், "இப்பதான் என் ஞாபகம் வந்துச்சா ஹீரோ சார்?!" என்று இறுக்கமாக அவள் கேட்க, "ஞாபகம்... வந்துச்சாவா? நான் உன்னைப் பத்தி மட்டும் தான் நினைச்சிட்டிருக்கேன்... உண்மையை சொல்லணும்னா நீ மட்டும்தான் என் நினைவில இருக்க" என்றான் ராகவ். "இது உங்க பட டயலாக்கோ?!" என்று சிரித்துக் கொண்டே அவள் பரிகசித்து கேட்க, "நோ, ஐம் வெரி சீரியஸ்" என்று அழுத்தமாக உரைத்தான். எதிர்புறத்தில் அவள் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்க, "நீ நம்பலயா?!" என்றவன் கோபமாய் கேட்க, "ஹ்ம்ம்.. நம்பிட்டேனே" என்று எள்ளலாய் வந்தது அவள் வார்த்தைகள். அவன் அதே கோபத்தோடு, "நீ சென்னையிலதானே இருக்க... நான் இதோ வர்றேன்" என்றான். "ஹ்ம்ம்... வாங்களேன்... ஆனா டேவிட் வீட்டுக்கு" "ஏன்?" அழுத்திக் கேட்டான். "நான் அங்கதான் ஸ்டே பண்ணி இருக்கேன்" "அதான் ஏன்?" என்று அதிர்ச்சியோடு அவன் கேள்வி எழுப்ப, "என் கூட ரூப்ஸ் வரல... ஸோ தனியா ஸ்டே பண்ண என்னவோ போல இருந்தது... அதான் டேவிட் வீட்டில" என்று சாதாரணமாய் உரைக்க, ராகவ் மௌனமானான். அவள் உடனே, "என்ன ராகவ்? ஏன் சைலன்டாயிட்டீங்க?" என்று வினவினாள். "உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருந்தா... என் கூட வந்து ஸ்டே பண்ணியிருக்கலாம் இல்ல" "எதுக்கு? ஏற்கனவே டிவி நியூஸ் பேப்பர் ஒண்ணுவிடாம நம்ம பேரை சொல்லி பப்ளீஷ் பண்ணிட்டீங்க... இதுல லிவிங் டூகெதர்னு வேற ஊர் பேசணுமோ?!" "நான் அவார்ட் ஃபங்க்ஷ்ன்ல உன் பேரை சொன்னதுல உனக்கு கோபமா?" "இல்ல... ரொம்ப சந்தோஷம்" "நீ ஒகேன்னு சொன்ன பிறகுதானே சொன்னேன்" "ஆமாம் சொன்னேன்... அதுக்காக அப்படி ஒரு மேடையில அப்பட்டமா அறிவிக்கணுமா? எதிலயும் ஒரு நிதானம் வேண்டாமா?" "ஏன்? நான் அப்படி சொன்னது உன் இமேஜை பாதிச்சிருச்சோ?" அவன் நக்கலாய் கேட்க, "நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படறதில்ல ராகவ்" என்றாள். "ஆனா நீ ராகவோட வொய்ஃப் ஆன பிறகு அதை பத்தி எல்லாம் கவலைப்பட்டுதான் ஆகணும் ஜென்னி" என்க, "ம்ம்ம்... அப்போ பார்த்துக்கலாம்" என்றாள். "சரி அதை விடு... எனக்கு இப்போ உடனே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு" என்று தவிப்பாய் அவன் கேட்க, "ம்ம்ம்... பார்க்கலாமே... நான் இப்போ சையத் வீட்டிற்கு கிளம்பறேன்... அங்கே வாங்க... பார்க்கலாம்" என்றதும் ராகவ் பதறிக் கொண்டு, "இப்ப எதுக்கு சையத்தை பார்க்கணும்" என்றான். "ஏன் பார்க்கணும்னு கேட்டா... பார்க்கணும்..? அந்த மூவியோட ஸ்க்ரிப்ட் விஷயமா கொஞ்சம் பேசணும்" என்றதும் எதிர்புறத்தில் ஒரு நீண்ட மௌனம். "ராகவ் என்னாச்சு?" என்று அவள் புரியாமல் கேட்க, "இல்ல ஜென்னி... அந்த மூவியை இப்போ பண்ற ஐடியா இல்லை... கொஞ்சம் எக்னாமிக்கலா ப்ராப்ளம்" என்று சொல்லும் போது அவள் யோசனையோடு, "அப்படியா?" என்று வியப்பானவள், மேலும் அவனிடம் யோசனையோடு, "பரவாயில்லை ராகவ்... எதுவாயிருந்தாலும் நேர்ல பேசிப்போம்... வாங்க" என்றாள். 'இவள் விடமாட்டாள் போலிருக்கே' என்று மனதில் எண்ணியவன், "நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்... நாம இன்னொரு நாள் போவோமா?" என்று உரைக்க, "நீங்க பிஸியா இருந்தா பரவாயில்லை.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்... எனக்கு சாஜிம்மா அஃப்சானாவை எல்லாம் பார்க்கணும்" என்றாள். அவள் போயே தீருவேன் என்ற பட்சத்தில் அவளைத் தனியே அனுப்ப விருப்பமில்லாமல், "இட்ஸ் ஒகே... நானும் வர்றேன்..." என்றவன் உரைக்க, "ஆர் யூ ஷ்வர் ?" என்று கேட்டவளிடம், "ஹ்ம்ம்" என்றான் விருப்பமின்மையோடு! "சரி அப்படின்னா நான் சையத் வீட்டிற்கு வந்திடுறேன்... நீங்களும் அங்கே வந்திருங்க... மீட் பண்ணுவோம்" என்றாள். அவன் படபடப்போடு, "இல்ல ஜென்னி... நான் உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்... நாம இரண்டுப் பேரும் சேர்ந்தே போவோம்" என்க, அவன் பேசுவதில் ஏதோ தவிப்பு இருக்கிறது. அதுவும் சையத்தை தான் தனியே சந்தித்துவிடக் கூடாது என்பதை உணர்ந்தவள் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் "ஒகே ராகவ்... அப்போ ஒரு லெவனோ க்ளார்க் டேவிட் வீட்டுக்கு வந்திருங்க... நான் ரெடியா இருக்கேன்" என்றுரைத்தாள். "ஹ்ம்ம்... வந்திடுறேன்... அட்ரேஸ் மெசெஜ் பண்ணிடு" என்க, "ஹ்ம்ம் ஒகே" என்றவள் அவன் அழைப்பைத் துண்டித்தாள். ராகவ் பேசிய விதத்தில் இருந்து அவன் ஏனோ தான் சையத்தை சந்திக்க கூடாதென்று விரும்புகிறானோ என்று தோன்றிற்று. ஆனால் அதற்குக் காரணம் என்ன? என்று ஜென்னி ஆழ்ந்து சிந்தித்தவள், தன் கைப்பேசி நேரத்தைப் பார்த்த மறுகணம் அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு சையத் வீட்டிற்குப் புறப்படத் தயாராக ஆரம்பித்தாள். மகிழ் அப்போதுதான் படப்பிடிப்பு முடிந்து ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அணைத்து வைக்கப்பட்ட கைப்பேசியை இயக்கியபடி! அந்தச் சமயம் அதில் வந்த அழைப்பைப் பார்த்தவன் இயல்பாக எடுத்துப் பேசினான். ஆனால் எதிர்புறத்தில் அவன் கேட்ட விஷயம் அவன் இதயத்தை உறைந்து போக செய்ய, அதிர்ந்து போனான். அவன் முகமெல்லாம் வெளிறிப் போனது. விழியில் நீர் வழிய அந்த நொடியே அவசரமாய் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு ஓடினான். அவனுடைய கார் சென்னை வாகன நெரிசலிலும் முட்டி மோதிக் கொண்டு அந்தப் பெரிய மருத்துவமனையை சென்று சேர்ந்தது. அவன் அந்த மருத்துவமனை வாசல் வழியே நுழைந்தவன், நேராய் அவன் அங்கிருந்த செவிலியரை விசாரித்து உள்ளே சென்று, அங்கே நின்றிருந்த ஒரு நபரை சந்தேகமாய் பார்த்து, "நீங்கதான் அண்ணாவோட ஃப்ரெண்டா? எனக்கு கால் பண்ணது " என்று கேட்க, "ஹ்ம்ம்... என் பேர் சரவணன்" என்க, "அண்ணா எங்க ண்ணா?" என்று தவிப்போடு கேட்டான். "உள்ளேதான் இருக்கான் மகிழ்... அவன் உங்க மேல எல்லாம் ரொம்ப கோபமா இருக்கான்... நான் ஃபோன் பண்ண விஷயம் தெரிஞ்சா என்னை ஒரு வழி பண்ணிடுவான்... நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க... யதேச்சையா வந்த மாதிரி சொல்லிடுங்க" என்றவனை குழப்பமாய் பார்த்து, "அப்போ நீங்க ஃபோன்ல சொன்னதெல்லாம்" என்று நம்ப முடியாமல் கேட்க, "ஹ்ம்ம்" என்று ஆமோதித்தான். மகிழ் அடங்கா அதிர்ச்சியோடு சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டு,, "எப்படி ண்ணா... அண்ணாவுக்குப் போய்" என்று வருத்தத்தோடு கேட்டான். "ஸ்மோக்கிங் ஹெபிட்னாலதான்" என்றவன் உரைக்க, அவன் அதிர்ந்து நிமிர்ந்தவன், "அந்தளவுக்கு அண்ணன் ஸ்மோக் பண்ணுவாங்களா?!" என்று கேட்டு வியப்பாகப் பார்த்தான். "ஆமாம் மகிழ்... ரொம்ப... அதுவும் வேலை போன விஷயம் தெரிஞ்சு ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு" "அண்ணாவுக்கு வேலை போயிடுச்சா?!" என்று மேலும் ஒரு அதிர்ச்சியோடு அவன் கேட்க, "ஹ்ம்ம்... திடீர்னு தூக்கிட்டாங்க... கேட்டா டிசிப்ளனரி ஆக்ஷன்னு அசால்ட்டா சொல்லி முடிச்சிட்டாங்க" என்று நிறுத்தியவன் மேலும் மகிழின் தோள் மீது கை வைத்து, "அதிலிருந்து ரொம்ப ஸ்மோக்கிங்க்கு அடிக்ட் ஆகிட்டான்... இரண்டு நாள் முன்னாடி வாயிலிருந்து ஓரே ப்ளட்டா வந்து... அதான் ஹாஸ்பிடல்ல செக் கப் பண்ணோம்... அப்புறம்தான் லங் கேன்ஸர்னு" என்றவன் தயங்க மகிழ் உடைந்து நொறுங்கி போனான். அவன் கண்ணீர் கூட உறைந்து போக, அவனுக்குப் புற்று நோய் இருக்கும் விஷயம் தன் ம்மாவுக்குத் தெரிந்தால் அவர் எப்படி தாங்கிக் கொள்வார். அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க, உள்ளூர சிதைந்து போய் நின்றவன் மருத்துவரை சந்தித்து விட்டு வெளியே வந்த தன் தமையனை பார்த்து கட்டியணைத்துக் கதறினான். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே. அவன் மீது என்ன கோபம் இருந்தாலும் அவன் உடல்நிலையை அறிந்த பின் அவனையறியாமல் உள்ளம் உருகிப் போனது. ஆனால் வேந்தனின் மனமோ கல்லாய் இறுகிப் போயிருந்தது. மகிழை இழுத்துத் தள்ளிவிட்டவன், "உன்னாலதான் டா என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு... எதுக்குடா என்னைப் பார்க்க வந்த" என்றதும் மகிழ் உள்ளம் துடிக்க, "என்னாலயா ண்ணா?!" என்று அதிர்ச்சி தாங்காமல் கேட்டான். "ஆமாம் உன்னாலதான்டா... நீதான்டா எல்லாத்துக்கும் காரணம்" என்றவன் அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறப் போக, மகிழால் தன் தமையனின் சீற்றத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எதனால் அவன் அப்படிச் சொல்கிறான் என்பதை யூகிக்கவும் முடியவில்லை. அண்ணனின் பழிச் சொல்லில் இருந்து சுதாரித்தவன் அவன் சென்ற திசை நோக்கிப் பின்தொடர, அப்போது வேந்தனின் நண்பன் அவன் கோபமாக இருப்பதாகவும் வர வேண்டாம் எனவும் சமிஞ்சை செய்ய மகிழ் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. தன் தமையன் எதற்கு தன் மீது இத்தனை பெரிய பழியை சுமத்துகிறான் என்று தெரிந்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா