மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 53Post ReplyPost Reply: Naan Aval Illai - 53

Quote from monisha on November 29, 2020, 9:07 PM

53

திருமண அரங்கேற்றம்
சையத்தின் திருமண சடங்கு எளிமையான முறையில் நடந்தேறின. இஸ்லாமிய பாணியில் அந்தத் திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் எல்லாம் அவனின் திருமணத்தை நேரடியாகப் படம்பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அதுவும் பெரிய பிரச்சனைக்குப் பிறகு நிகழும் திருமணம் வேறு. ஆதலால் அவனின் திருமணம் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது அதுவும் அல்லாமல் சையத் சொன்னபடியே மதுவை திருமணம் செய்து கொண்டதும், அது கலப்புத் திருமணம் என்பதாலும் அவனின் மீதிருந்த தவறான அபிப்பிராயம் சற்று மாறியிருந்தது. ஜென்னியும் அவன் திருமணத்தை தொலைக்காட்சியில் தான் பார்த்தாள். அவளுக்கு சையத்தின் திருமணத்தை நேரில் பார்க்க அத்தனை ஆவலாய் இருந்த போதும் அவள் வருவதை அவனே விரும்பவில்லை எனும் போது எப்படிப் போக முடியும்? சையத்தை ஒரு வாரம் முன்பு அவன் வீட்டிற்கே சென்று பார்க்கப் போயிருந்தாள் ஜென்னி. சாஜியும் அஃப்சானாவும் அவளிடம் இயல்பாகவே பேசினர். அதே நேரம் சையத் அவளை நிமிர்ந்து கூட பாராமல், "எப்ப வந்தீங்க ஜென்னி?" என்று கேட்க, "இப்பதான்" என்றாள். "அப்படியா ?!" என்றவன் அவளிடம், "கொஞ்சம் வேலை இருக்கு... நான் வெளியே கிளம்பறேன்... அப்புறம் மீட் பண்ணுவோமா?!" என்று அவளைத் தவிர்க்க, "நான் உங்ககிட்ட பேசணும் சையத்" என்றாள் அழுத்தமாக! "கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு" என்றவன் தப்பிக் கொள்ள பார்க்க, ஜென்னி கூர்ந்த பார்வையோடு, "இப்படி சொல்றதுக்குப் பதிலா என்கிட்ட பேச முடியாதுன்னு நேரடியாகவே சொல்லிடலாமே" என்று அவள் புறப்பட எத்தனித்தாள். சாஜி இவர்களின் சம்பாஷணையை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். சையத் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொள்கிறான் என்று அவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது இருக்கும் நிலையில் மகனையும் எதுவும் அவரால் கேட்கவும் முடியவில்லை. ஜென்னி வெளியேறிக் கொண்டிருக்க சாஜி அவளை அழைத்து நிற்கச் சொல்லி, "சையத்துக்கு வர்ற பதினைந்தாம் தேதி நிக்காஹ் வைச்சிருக்கோம்... அவசர அவசரமாய் முடிவாயிடுச்சு... யாரையும் சரியா கூப்பிடக் கூட முடியல... ஆனா நீ கண்டிப்பா வந்துடணும்" என்க, அவள் சையத்தை நோக்கி, "சையத் என்னைக் கூப்பிடவேயில்லை ம்மா" என்றவள் கேட்க, அவன் மௌனமாய் நின்றிருந்தான். தான் மனதார நேசித்தவள். அவளைத் தன் திருமணத்தில் பார்க்குமளவுக்காய் அவன் மனதிற்குச் சக்தியில்லை. அதுவும் அல்லாமல் ஜென்னியை அவன் நேசித்தது அவளுக்குத் தெரியவில்லை எனினும் மதுவுக்குத் தெரியுமே! மதுவிற்கும் அப்படி ஒரு சங்கடமான சூழலைத் தோற்றுவிக்க அவன் விரும்பாத காரணத்தால் அவளை அழைக்க விருப்பமில்லாதவன் போல் காட்டிக் கொள்ள, அஃப்சானாவிற்கு ஓரளவுக்குத் தன் தமையனின் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆனால் சாஜிக்கு அதிர்ச்சிகரமாய் இருந்தது. அவர் மகனை நெருங்கி, "ஜென்னியை உன் நிக்காவுக்கு கூப்பிடு சையத்" என்றுரைக்க, ஜென்னி இடைமறித்து "வேண்டா ம்மா அவருக்கு விருப்பமில்லன்னும் போது கம்பெல் பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறினாள். அந்தக் கணம் அவனின் மனமும் சுக்குநூறாய் உடைந்திருந்தது. இருப்பினும் அதைக் காட்டி கொள்ளாமல் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு நின்றிருக்க, "என்ன சையத் நீ? இப்படி பண்ணிட்ட" என்றவர் மகனிடம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொல்லிவிட்டு அகன்றார். அந்தச் சமயம் சையத் ஏதோ நினைவுவந்தவனாய் ஜென்னியின் பின்னோடு சென்று அவளை அழைக்க, அவளும் ஆவலாய் திரும்பினாள். "உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றவன் சொல்ல, அப்போதும் அவன் பார்வை அவளிடம் நிற்கவில்லை. "என்ன விஷயம்?" என்று அவள் குழப்பமுற "நாம பேசிகிட்டிருந்தோமே... அந்த மூவி... இனி அதை நான் பண்ற ஐடியா ல இல்ல" அவள் அதிர்ச்சியோடு "ஏன் சையத்?" என்று கேள்வி எழுப்ப, "அந்தப் படத்தை நான் பண்ணனும்னு ஆரம்பிச்சதுல இருந்து எல்லாமே தப்பாவே நடக்குது... அதான் டிராப் பண்ணிட்டேன்" என்று இறுக்கமான பார்வையோடு உரைத்தான். "இது உங்களோட சொந்த முடிவா?" என்றவள் கேட்டு சந்தேகித்துப் பார்க்க அவள் தெரிந்துதான் கேட்கிறாளோ என லேசாய் தடுமாறியவன் பதில் சொல்லாமல் ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தான். சையத் இருக்கும் நிலையில் ராகவ் குறித்து எதுவும் பேச முடியாத சூழ்நிலையில் இருந்தான். ராகவின் மூலமாக மீண்டும் வேறு வேறு பிரச்சனைகளைத் தூக்கி சுமக்க அவன் விரும்பவில்லை. மதுவுக்கு நேர்ந்தது போல தன் தம்பி தங்கைகளுக்கும் ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று உள்ளூர அச்சப்பட்டுக் கொண்டிருந்தான். தவறான சேர்க்கையும் நட்பும் என்றாக இருந்தாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் என்பதை சையத் அப்போது நன்றாக உணர்ந்திருக்க, ராகவை எதிர்த்துக் கொண்டு ஜென்னியை அந்த படத்தில் நடிக்க வைக்க அவனுக்கு துணிவில்லை. அதே நேரம் ஜென்னி அல்லாத வேறு ஒரு பெண்ணை அந்த படத்தின் கதாநாயகியாக அவனால் பொருத்திப் பார்க்கவும் முடியாது. இதனாலயே ஜென்னியிடம் இருந்து விலகி இருக்க எத்தனித்தான். ஆனால் ஜென்னி சையத்தின் நடவடிக்கை பேச்சின் மூலமாக அவன் பிரச்சனையை ஓரளவுக்குக் கணித்தாலும் அதை அவனிடம் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவள் சையத்தைப் பார்த்த செய்தியையும் அவன் நடந்து கொண்ட விதத்தையும் ராகவிடம் தெரிவிக்க, அவனுக்கு மிதந்திடாத குறை. அதுவும் அவன் அந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்று சொன்னதை ஜென்னி ராகவிடம் சொன்னதில் அவன் மனமெல்லாம் இன்பத்தில் மூழ்கித் திளைத்திருந்தது. ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் அவன் வருத்தமுறுவது போல் நடிக்க, "இப்ப என்ன பண்றது ராகவ்?" என்றவள் கேட்க ஆழ்ந்து யோசிப்பது போல் பாவனைச் செய்தவன், "நான் வேணா சையத்கிட்ட பேசி பார்க்கிறேன்... ஆனா அவன் நான் சொல்றதை கேட்பானான்னு தெரியல... அவனுக்கு என் மேல கொஞ்சம் மனவருத்தம்" என்றான். "எதனால?" என்றவள் ஆர்வமாகக் கேட்க, "நான் மது விஷயத்தில அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசல இல்ல.. அதான் அவனுக்குக் கோபம்" என்றான். புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்தியவன் மேலும், "ஆனா சையத் சொல்றதிலயும் பாயின்ட் இருக்கு... அந்த படத்தைப் பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சதில இருந்து எதுவுமே பாஸிட்டிவ்வா நடக்கல ஜென்னி... ஸோ அந்த படத்தை டிராப் பண்றதுதான் எனக்கும் சரின்னு படுது" என்க, "ப்ச்... ஒகே " என்றவள் வருத்தத்தோடு சமாதானமடைய, அதற்குப் பிறகு இருவரும் அதைத் தவிர்த்து வேறு சில விஷயங்களைப் பற்றி அளவளாவினர். அவள் புறப்படும் தருவாயில் ராகவ் அவளிடம், "சையத் மூவிதான் டிராப்பாகிடுச்சே... இப்பயாச்சும் நம்ம மேரேஜ் பத்தி நீ ஒரு முடிவுக்கு வரலாமே" என்றதும் அவனைக் கூர்மையாய் நோக்கினாள். அவள் பார்வையில் இருப்பது கோபமா அல்லது குழப்பமா என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல், "உன்னோட டெசிஷன்தான் பைஃனல்... நீ யோசிச்சு சொல்லு" என்று பின்வாங்கினாலும் அவளுக்கு இம்முறை மறுக்க வேறு காரணமில்லை. சம்மதித்தே தீர வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அவனின் எண்ணத்திற்கு ஏற்றாற் போல் ஜென்னியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆனால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு! அவனும் அவளின் எந்த விருப்பத்திற்கும் மறுப்புத் தெரிவிக்காமல் உடன்பட்டான். அதே நேரம் இந்து முறைப்படியும் நடத்திக் கொள்ளலாம் என அவனிடம் அவள் உரைத்திருக்க, அவனோ எம்மதமும் சம்மதம் என்றாகியிருந்தான். அவனுக்குத் தேவை அவள். அது எப்படி எவ்வாறாக நிகழ்ந்தால் என்ன? அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வெறியாய் மாறி வெகுநாளாகியிருந்தது. அவளுக்காக எதையும் செய்யவும் அவன் துணிந்திருந்தான். திருமண ஏற்பாடுகளுக்காகத் தண்ணியாக செலவாகும் பணம் குறித்து எல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. அவளை மணம் புரிய வேண்டும் என்ற எண்ணமே திண்ணமாயிருந்தான். சிலந்தி தன் வலையாய் அழகாகப் பின்னுவது அதன் இரையைப் பிடிக்கத்தானே? இங்கே இரையாக மாறப் போவது யார் என்பதுதான் பெரும் சுவராஸ்யத்திற்குரிய ஒன்று.  ************ சையத்தின் திருமண நிகழ்வில் ஆங்காங்கே சில உறவுகளின் மனகசப்புகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்க, வேற்று மத பெண்ணை மணந்து கொள்கிறான் என்ற வருத்தம்தான் எல்லோருக்கும். இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களில் இவையெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில் அதுக் காதல் திருமணமும் அல்ல. சில சர்ச்சைகளால் அரங்கேறிய திருமணம் வேறு. ஆனால் இதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாய் சில முக்கிய நட்சத்திரங்களின் வருகை அந்த இடத்தையே அல்லோலப்பட வைத்திருந்தது. அங்கே இருந்த பலரும் கடைசி வரையில் ராகவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருக்க, மீடியா முதற்கொண்டு எல்லோருக்குமே ஏமாற்றம்தான் மிச்சமானது. அவன் வரவில்லை. இதற்கிடையில் மதுவின் நிலைமைதான் பரிதாபகரமாய் இருந்தது. புரியாத புதிரான சடங்குகளுக்கு இடையில் தவித்துப் போயிருந்தாள். அதே நேரம் மதுவின் பெற்றோர்களோடு சில முக்கிய உறவினர்களைத் தவிர்த்து வேறு யாரும் அந்தத் திருமண சடங்குகளில் பங்கேற்கவில்லை. மனிதம் என்பதை விட மதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போய்விடுகிறது. மதுவின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது கை கொடுத்து உதவாத அவளின் உறவினர்கள், அவள் இக்கட்டில் சிக்கியிருக்கும் போது அவதூறாகப் பேச மட்டும் கூடினர் என்பதுதான் கொடுமை. ஆதலால் அவர்கள் திருமணத்திற்கு வராததினால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. அதுவும் அவனைப் போன்றவனுக்காக எதையும் இழக்கலாம் என்றளவுக்காய் அவள் மனநிலை அவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தொடங்கியது. அந்தச் சடங்குகள் அவளுக்குப் புரியாமல் இருந்தாலும், அவனின் இன்பதுன்பங்கள் அனைத்திலும் துணையிருக்க வேண்டும் என்று அவளே மனதளவில் உறுதி பூண்டாள். மரணம் வரை அவனைப் பிரியவே கூடாது என்று அவள் தீர்க்கமாய் எண்ணிக் கொள்ள, அவன் கரத்தின் பற்றுதலில் அத்தகைய உறுதியையும் பாதுகாப்பையும் அவன் நிச்சயம் தருவான் என்பதையும் உணர்ந்து கொண்டாள். திருமணம் முடிந்து மதுவின் பெற்றோர்கள் அவளுக்குக் கண்ணீரோடு விடையளிக்க, அந்த வீடும் அங்கே இருப்பவர்களும் அவளுக்குப் பழக்கப்பட்டவர்கள்தான் எனினும் மனம் அவர்களோடு இயைந்து போக சிரமப்பட்டது. சையத் அவள் சொல்லாமலே அவளின் மனநிலையைப் புரிந்து கொண்டான். ஜென்னியின் மீது கொண்ட காதல் தோல்விக்கு பிறகு வரிசையாய் அவனுக்குப் பல தடங்கல்கள். ராகவினை எதிர்த்துக் கொண்டு அவன் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைதூக்க வேண்டுமெனில் அது பிரம்மப் பிரயத்தனம்தான். அவனின் சினிமா வாழ்க்கையையே முடக்கிப் போடப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் திருமணம் அவசியமா என்று எல்லோருக்குமே தோன்றியது. ஆனால் நடந்த நிகழ்வால் மதுவின் குடும்பமே தலைகாட்ட முடியாமல் இருக்க, அதே நிலைமைதான் இவனுக்கும். எல்லாவற்றையும் சரி செய்ய இதைத் தவிர அவனுக்கு வேறுவழியில்லை. அதே நேரம் மதுவை முழுமனதோடு ஏற்கத் தயாரான பின்னரே அவளை மணமுடித்தான். அன்று அவன் குடும்பத்தை பிரிந்திருந்த கால கட்டங்களில் அவனின் தனிமையை போக்கியதில் அவளுக்கு அதிகப் பங்குண்டு என்பதை அவன் மறந்திருக்கவில்லை. அவள்தான் இனி தன்னுடைய உறவு என்று தன் மனமாற்றிக் கொண்டவனுக்கு அப்போதைய சிக்கல், அந்த முதலிரவின் காட்சியை எப்படி அரங்கேற்றுவது என்பதுதான். அதுவும் மதுவின் பார்வையில் அபரிமிதமாய் தெரிந்த பயபக்தியும் மரியாதையும் அவனை சங்கடப்படுத்த, அவளை அருகில் அவன் அமரச் சொல்லி அரைமணி நேரம் கடந்திருந்தது. அவளோ சலிப்புறாமல் அவள் கட்டியிருந்த புடவை முந்தியை சுழற்றிக் கொண்டிருந்தாள். அதுக்கு பெயர்தான் நாணமா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆனால் அவனுடன் சரிக்கு நிகராய் பார்த்து பேசுவதெல்லாம் அவள் இதுவரையிலும் கனவிலும் எண்ணியிராத ஒன்று. பொறுமையிழந்தவன் மெல்லிய குரலில், "மது" என்றழைக்க, அவள் "சார்" என்று நிமிரவும், அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்ன சொன்ன?" என்றவன் அழுத்திக் கேட்க, அவள் அஞ்சியபடி, "தெரியாம சொல்லிட்டேன்... இனிமே வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகிக்கிறேன்" என்றாள். "எப்போ பழகிப்ப?" என்றவன் கேட்க, "சீக்கிரமாவே?" என்று வேகமாய் தலையசைத்தவளைப் பார்த்து புன்னகைத்தவன், "சரி... அது அப்புறமா பழகிக்கலாம்... இப்ப உட்காரு" என்று தன் அருகாமையில் அமர சொல்ல உள்ளூர அவளை ஏதோ தடுக்க, "என்ன மது நீ... பழைய பட ஹீரோயின் ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ணிட்டிருக்க" என்றவன் சொல்லவும் அவள் வாய் விட்டு சிரித்தாள். அவளின் அந்த சிரிப்பில் அவனின் தயக்கம் மறைந்து அவளை அருகாமையில் இழுக்கவும் அவன் அருகில் அமர்ந்தவள், "அய்யோ சார்" என்று மீண்டும் பதறினாள். "மது" என்றவன் சீற்றமாய் விழிகளை உருட்ட, "உம்ஹும் தப்பு தப்பு... அப்படிக் கூப்பிட மாட்டேன்" என்று தன் கரத்தால் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கோர, அவள் கரத்தைப் பற்றி விலக்கியவன், "நீ எனக்கு செகரட்டரி இல்லை... வொஃய்ப்" என்க, அந்த உறவை அவள் முழுமையாய் ஏற்க இன்னும் சில நாட்கள் பிடிக்குமே. ஆனால் அதனை அவள் மனதில் ஆழமாய் விதைக்க எண்ணியவன், அவளின் வித்தியாசமான உடையலங்காரங்களைப் பார்த்தான். வெறுமையாய் இருந்த அவள் நெற்றியும் தலையை மறைத்தபடி இருந்த அந்த அழகான துப்பட்டாவும் அவளை அவர்கள் மதத்துப் பெண்ணாகவே காட்டிக் கொண்டிருந்தது. அவன் அவள் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த சரிகையால் மின்னிக் கொண்டிருந்த துணியை விலக்கினான். அவள் நாணமுற தலையைக் கவிழ்ந்து கொள்ள, அவள் முகத்தைத் தன் கரத்தால் நிமிர்த்திப் பிடித்தவன் "நீ எதுக்காகவும் உன்னை மாத்திக்க தேவையில்லை... எங்களை மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்... உனக்கு எப்படி விருப்பமோ நீ அப்படியே இருக்கலாம்" என்றான். அவளுக்குக் கண்ணீர் பெருகி ஊற்ற, "உங்களுக்கு எது விருப்பமோ அதுதான் எனக்கும்" என்றவள் தழுதழுத்தக் குரலில் கூறவும், "அப்படின்னா நீ இப்படி அழறது எனக்கு சுத்தமா விருப்பமில்லை" என்றவன் சொல்ல, அவள் விழி நீரைத் துடைத்தபடி, "இல்லைங்க... நான் அழல" என்றாள். அவன் குறும்பாக புன்னகைத்தபடி, "இப்போ என் விருப்பம்" என்றவன் வார்த்தைகளால் விவரிக்காமல் பார்வையால் அவள் தேகத்தைத் தீண்ட, அவன் எண்ணம் புரிந்து அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அவளின் நாணமும் மௌனமும் அவனைக் கிறங்கடிக்க அவளின் கரத்தைப் பற்றி ஒவ்வொரு விரலாக முத்தமிட்டவன் முன்னேறிச் செல்ல அவள் நெகிழ்ந்து படுக்கையின் மீது சரிந்தாள். தன் கரத்தின் வளையத்திற்குள் அவளைச் சிறைபிடித்து நிதானமாய் அவள் உடை களைந்து ரசனையாய் அவளோடு புணர்ந்தவன், தன்னவளுக்குக் காதலோடு கூடிய களவியல் பாடத்தைக் கற்பித்து அவளுடனான இன்பத்தில் கரைதொட முடியாமல் தானே அதில் கரைந்தும் போனான். சையத்தின் காதல் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால் அவன் வாழ்க்கை பொய்த்துப் போகவில்லை. ********* மருத்துவமனையில் இருந்த வேந்தன் ஒருவாறு உடல் தேறி வீட்டிற்கு வந்திருந்தான். விஷயம் தெரிந்த மாத்திரத்தில் பதறித் துடித்துப் போயிருந்தார் வள்ளியம்மை. ஞானசேகரனும் வேந்தனுக்கு ஏற்பட்ட விபத்தால் தன் கோபத்தில் இருந்து கொஞ்சம் இறங்கியிருந்தார். ஆனால் மகிழ் மட்டும் மேம்போக்காய் தன் தமையனைக் கண்டும் காணாமல் விலகி இருந்தான். அவனைப் பார்க்கவும் பேசவும் முழுமையாய் தவிர்த்தான். அவன் கோபமுற்றிருக்கும் உண்மையான காரணம் குறித்து யாருக்கும் தெரியாது. அவனும் தெரியப்படுத்தவில்லை. அதுவும் அல்லாமல் அவனுக்குப் புற்றுநோய் இருக்கும் விஷயம் குறித்தும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவுமில்லை. அது தெரிய வந்தால் நிச்சயம் யாரும் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள். ஓர் சுமைதாங்கியாய் தன் மனதிலேயே எல்லாவற்றையும் சுமந்தபடி அவன் உள்ளூர புழுங்கிக் கொண்டிருந்தான். அன்று இரவு மகிழ் தன் அறையில் தனித்திருக்க, வேந்தன் அவன் கவனிக்காத சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தான். நோயாளிகளுக்கான அத்தனை அடையாளமும் அவன் முகத்தில் படர்ந்திருக்க மகிழ் அவனைப் பார்த்த கணம், "முதல்ல வெளியே போ" என்று சீற்றமடைய, "போறேன் மகிழ்... ஆனா ஒரே ஒரு விஷயம் கேட்டுட்டு போயிடுறேன்" என்றான் நிதானத்தோடு! "ஒண்ணும் வேண்டாம்" என்றவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, வேந்தன் அவனிடம், "ப்ளீஸ் மகிழ்... நான் அடிப்பட்டு கிடந்த போது என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது யாருன்னு மட்டும் சொல்லு" என்க, அவன் அதிர்ச்சியோடு திரும்பி, "தெரிஞ்சு கேட்கிறியா இல்லை தெரியாம கேட்கிறியா?" என்று கேள்வி கேட்டான். "தெரிஞ்சுக்கணும்னு கேட்கிறேன்" அவன் யோசித்துவிட்டு வெறுப்பாய் பார்த்தவன், "நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசி யாரை அவமானப்படுத்துனியோ அவதான்... உனக்கெல்லாம் பாவம் பார்த்திருக்கா பார்... அவளைக் கொன்னா என்னன்னு தோணுது" என்க, வேந்தன் தவிப்போடு, "சாக்ஷியை நான் பார்க்கணும் மகிழ்" என்றான். "எதுக்கு? அவ நிம்மதியைக் கெடுக்கவா?" "நான் அவகிட்ட மன்னிப்பு கேட்கணும் மகிழ்" "மன்னிப்பு கேட்டு உன் பாவக் கணக்கை குறைச்சுக்கலாம்னு நினைக்கிறியா?" "நிச்சயமா இல்ல மகிழ்... அப்படியே நான் அவ கால்ல விழுந்தாலும் நான் அவளுக்கு செஞ்சதை சரி பண்ண முடியாது" "தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு அவளைப் பார்க்கணுங்கிற?" என்றவன் அலட்சியமாய் பார்க்க, "முடியல மகிழ்... ரொம்ப கஷ்டமாயிருக்கு... அன்னைக்கு அவ ரோட்ல விழுந்து கிடந்த போது நான் கொஞ்சமும் இறக்கப்படாம சாகட்டும்னு விட்டுட்டு போனேன்... ஆனா எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்த போது அவ காப்பாத்தி இருக்கா பாரு? என் மனசாட்சி என்னைக் கொல்லுதுடா" என்றவன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் தளும்ப உரைக்க, மகிழ் அவன் சொன்னவற்றைக் கேட்டு இது எப்போது நிகழ்ந்தது என்று புரியாமல் திகைத்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா