மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 55Post ReplyPost Reply: Naan Aval Illai - 55

Quote from monisha on November 29, 2020, 9:09 PM

55

மின்சாரத்தைப் பாய்ச்சியது
ராகவ் சினிமாவில் உடையலங்காரம் செய்யும் கைதேர்ந்த நிபுணர்களை வைத்து ஜென்னியின் திருமண உடைகளை வடிவமைக்க ஏற்பாடு செய்தான். அவள் சொன்னபடிதான் உடைகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவள் ஒன்றுவிடாமல் எல்லா உடைகளையும் குறை சொல்லி அங்குள்ளவர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள். அந்த நீளமான வெள்ளை கவுன் தரையில் தவழ, அதை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தவள், "ஏதோ மிஸ்ஸிங்... இல்ல ராகவ்" என்று கேட்க, அவன் நொந்துவிட்டான். அவன் பார்வைக்கு அந்த உடை அழகாகத்தான் இருந்தது. அதுவும் அவள் அந்த உடையில் பேரழகியாகத்தான் தெரிந்தாள். ஆனால் அவள் பார்வைக்கு மட்டும் அப்படி என்ன குறை தெரிகிறது என்று அவனால் கணிக்க முடியவில்லை. அவளோ உடை வடிவமைப்பாளர்களிடம், "இன்னும் கூட கொஞ்சம் கிராண்டா இருந்திருக்கலாம்... அன்ட் இன்னும் கூட கொஞ்சம் டெக்ரேட்டிவ்வா இருந்திருக்கலாம்" என்று அவள் திருப்தியடையாமல் உரைக்க, "இல்ல மேடம்... இன்னும் கிராண்டா பண்ணா கவுன் வெயிட்டாயிடும்... மோரோவர் இது எய்ட்டீன் லேக்ஸ்... இன்னும் வொர்க் பண்ணா ரேட் இன்கிரீஸ் ஆகும்" என்று சொல்லவும் கோபமான பார்வையோடு, "வாட் நான்ஸென்ஸ்... மணி இஸ் நாட் அ மேட்டர்... எனக்கு மாடிபைஃவ் பண்ணி நான் சொன்ன மாதிரி பண்ணுங்க... யாருமே இவ்வளவு கிராண்டா போட்டிருக்கக் கூடாது... அப்படி இருக்கணும்... வெயிட்டெல்லாம் பத்தி யோசிக்காதீங்க... எவ்வளவு கனமா இருந்தாலும் அதை நான் தாங்குவேன்" என்றவள் அழுத்தமாய் சொல்லவும், ராகவ் அவளிடம், "வெயிட்டா இருந்தா உனக்குதான் கஷ்டம்" என்றான். அவள் புன்னகைத்துவிட்டு, "லைஃப்ல ஒரு தடவைதான் சில வாய்ப்புகள் கிடைக்கும்... அதை தவறவிட்டா அப்புறம் திரும்பி அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமலே போயிடும்... ஸோ எனக்கு எல்லாமே தி பெஸ்ட்டா இருக்கணும்" என்று தீர்க்கமாய் அவள் கூறவும் அவனும் வேறுவழியின்றி அவள் சொன்னதை புரிந்தும் புரியாமலும் ஆமோதித்தான். அதே நேரம் உடை வடிவமைப்பாளர்களிடம் அவள் எப்படிச் சொல்கிறாளோ அவ்விதம் செய்ய சொன்னவன், பணத்தைப் பற்றி கவலை இல்லை என்றான். ஆனால் அவன் தந்தையை பிரிந்து வந்திருக்கும் நிலையில் பணத்தின் முக்கியத்துவம் அவனுக்குப் புரிய ஆரம்பித்திருந்தது. அவள் தேர்வு செய்யும் எல்லாமே தனித்துவமாய் ஆடம்பரமாய் இருந்தது. அவன் பத்து மடங்காய் பார்த்தால் அவள் இருபது மடங்காய் தேர்ந்தெடுத்தாள். மனோ நேரடியாகச் சொல்லாவிட்டாலும் பணம் செலவழிவது குறித்து ஒளிவுமறைவாய் எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருந்தான். ஆனால் ராகவின் மனம் அவளைத் தாண்டி எதையும் சிந்திக்கவில்லை. அவனின் மூளையை மழுங்கடிக்கும் போதையாக அல்லவா அவள் இருந்தாள். போதை என்பதே நம்மை மறக்கடிப்பதுதானே. அவன் மொத்தமாய் அந்த நொடி மறக்கடிக்கப்பட்டிருந்தான். ஜென்னி அந்த வெள்ளை கவுனில் அத்தனை ஆடம்பரமாகவும் அழகாகவும் காட்சியளிக்க அவளை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் காதருகே ஹஸ்கி குரலில், "நீ இந்த டிரஸ்ல அப்படியே தேவதை மாதிரி இருக்க... இப்பவே கூட நம்ம மேரேஜ் நடந்தா எனக்கு ஹேப்பிதான்" என்றதும் அவனை அவள் திரும்பி முறைக்க, "இப்பவே உன் விரலில் மோதிரம் போட்டுட்டா கூட எனக்கு ஒகே" என்றவன் கிறக்கத்தோடு அவள் கரத்தைப் பற்றவும், "எங்க இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சிட்டு பேசுங்க" என்று அவள் கரத்தை அவசரமாய் இழுத்துக் கொண்டு விலகிச் சென்றாள். அவன் ஏக்கமாய் பெருமூச்செறிந்திருக்க, ஜென்னி அப்போது அவள் விரலில் சூடியிருந்த மோதிரத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள். டேவிட் அவளுக்கு அணிவித்த மோதிரம் அது. அவள் மனம் அந்த நொடி அங்கே நிற்காமல் பின்னோக்கி சென்றது. ராகவைப் பற்றி கேள்வி எழுப்பி டேவிட் பார்த்த பார்வையில் அவளின் மனோதிடம் வலுவிழந்தது. எல்லோரையும் தன் சாமர்த்தியமான பேச்சால் சமாளித்தவளுக்கு டேவிடை மட்டும் அப்படி முடியவில்லை. அவன் பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. உண்மையைப் பேச சொல்லி அவளைப் பணித்தது. மனதில் உள்ள எதையும் மறைக்காமல் அவள் சொல்லிவிட டேவிடை அன்று முற்றிலுமாய் வேறுபரிமாணத்தில் கண்டாள். அத்தனைக் கோபமாய் மாறியவனை மீட்டு கட்டுக்குள் கொண்டு வர அவள் ரொம்பவும் சிரமப்பட்டுவிட்டாள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே! அப்படிதான் இருந்தது அவனின் சீற்றம். ஆனால் ஒருவழியாக ஜென்னி அவனிடம் கெஞ்சலாய் வேண்டி கேட்க, மெல்ல தன் கோபத்திலிருந்து இறங்கி வந்தவன், "நீ சொன்னதுக்காக பார்க்குறேன்... இல்லன்னா அந்த ராகவை இப்பவே கொன்னு புதைச்சிடுவேன்" என்க, அவள் மூச்சை இழுத்துவிட்டாள். ஒருவழியாய் அவனைச் சமாளித்தாயிற்று என்று அவள் நிம்மதியடைய, டேவிட் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவன் புறப்பட போகிறானோ என்ற அச்சத்தில், "ஃப்ளைட்டுக்கு லேட்டாயிருக்கும் இல்ல" என்க, அவன் புன்முறுவலோடு, "இல்ல ஜென்னி... இன்னும் டைம் இருக்கு... இப்ப கிளம்பினா கூட ஃப்ளைட்டை பிடிச்சிடலாம்" என்றவன் சொல்லவும் அதிர்ந்தவள், "அப்போ கிளம்பப் போறீங்களா?" என்றவள் ஏக்கப் பார்வையோடு கேட்டாள். "போக வேண்டாங்கிறியா?!" அவன் அவளை கேள்விக் குறியாய் பார்க்க, "உம்ஹும்" என்று மறுப்பாய் தலையசைத்தாள். அந்தப் பயணச்சீட்டை அவள் முன்னரே இரண்டாய் கிழித்து அவள் கரத்தில் வைக்க, அவள் முகமெல்லாம் பிரகாசித்தது. "இதைத்தானே நீ எதிர்பார்த்த" என்றவன் கேட்க, அவள் புன்னகை இழையோட, "தேங்க்ஸ் டேவிட்" என்றாள். "உன் தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்" என்று அவன் சன்னமான குரலில் சொல்லி அவளை நெருங்கி வர, "டேவிட்" என்றவள் பதற்றமடைந்தாள். "நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஜென்னி" என்றவன் பார்வை அவள் விழியோடு கலந்திருக்க அவள் தயக்கத்தோடு, "நான் சொல்றதைக் கேளுங்க டேவிட்" என்றதும் அவன் கரத்தால் அவள் உதட்டை மூடியவன், "நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நம்ம கல்யாணம் நடக்கதான் போகுது... அது நடந்தே தீரும்" என்று அவன் சொல்லும் போதே அவள் வியப்பின் விளிம்பில் இருக்க, டேவிட் தன் அறை கப்போர்ட் கதவைத் திறந்து துழாவி எதையோ எடுத்து வந்தான். அவள் கலக்கத்தோடு என்னவென்று பார்க்க அவன் தன் கரத்திலிருந்த மோதிரத்தைக் காட்டி, "உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சதும் நான் உனக்காக ஆசையா வாங்கி வைச்சது" என்றவன் அதனைக் காட்ட அவன் கரத்திற்குள் அது மின்னலெனப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவள் பதட்டத்தோடு, "அவசரப்படுறீங்களோன்னு தோணுது... வெறுமையா ஒரு வாழ்க்கை எத்தனை நாளுக்கு வாழ முடியும்... ப்ராக்டிக்கலா கொஞ்சம் யோசிச்சு பாருங்க" என்றாள். அவளை மட்டுமே குறியாய் பார்த்திருந்த அவன் விழிகள் அவளை தன்வசம் இழுத்துக் கொண்டிருந்தது. அவன் ரொம்பவும் நிதானமாக, "உன் பயமும் கவலையும் எனக்கு நல்லா புரியுது ஜென்னி... நீ சொல்ற மாதிரி வெறுமையா ஒரு வாழ்க்கையை வாழ முடியாதுதான்... ஆனா காதலோடு வாழலாம்... கடைசி வரைக்கும்... இந்த டேவிடுக்கு நரைச்சு வயசாகி முடியெல்லாம் கொட்டி கெழவனாகிற வரைக்கும்" என்ற போது அவள் விழியில் நீர் நிரம்பி நின்றது. இருப்பினும் அவன் சொன்னதை அவளால் அப்போதும் ஏற்க முடியவில்லை. வெறும் காதலோடு மட்டும் தன்னோடு அவனை வாழச் சொல்வது சுயநலம் அல்லவா? அவனின் ஆசாபாசங்கள் எல்லாம் பொய்த்துப் போகாதா? அதுவும் டேவிட் மாதிரி எந்த பொண்ணையும் சிந்தையாலும் தீண்டி அறியாதவனுக்கு இது பெரிய அநியாயம் இல்லையா என்றவள் தவிப்புற, "என்ன ஜென்னி யோசிக்கிற?" என்று டேவிட் கேட்க, "உங்களுக்கு மனசு உடம்புன்னு இரண்டுத்தையும் முழுசா என்னால கொடுக்க முடியாது... அப்புறம் எப்படி?” “சொல் பேச்சு கேளுங்க டேவிட்... என்னை விட்டுடுங்க ப்ளீஸ்... என்னால வாழ்க்கை பூரா ஒரு கில்டி பீலிங்கோட...உ ம்ஹும் என்னால முடியாது" என்று தலையசைத்து அவள் அழுத்தமாய் மறுப்புத் தெரிவிக்க, அவள் தலையை நிமிர்த்திப் பிடித்தவன், "கில்டியெல்லாம் எதுக்கு?... முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ... அன்னைக்கு உன் வாழ்க்கையில நடந்தது பெரிய அநியாயம்... ரொம்ப ரொம்ப மோசமான விபத்து. அதனால மனசளவில் நீ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கதான்... என்னால புரிஞ்சுக்க முடியுது... ஆனா தாம்பத்யங்கிறது வேற... இட்ஸ் ப்யூர்லி மென்ட் வித் லவ்... அது நமக்குள்ள நடக்கும் ஜென்னி... நீ விருப்பபடும் போது நடக்கும்... நீ விருப்பப்பட்டாதான் நடக்கும்" என்றவன் அந்தக் கணம் அவள் கரம் பற்றி விரல்களில் அந்த வைர மோதிரத்தை அவள் கவனிக்கும் முன்னரே அணிவித்தான். "டேவிட்" என்று அவள் அதிர்ச்சியோடு அவளின் விரலுக்கு மெருகேற்றியிருந்த அந்த மோதிரத்தைப் பார்க்க, அவன் கரத்தை சுவற்றில் ஊன்றி அவளை தன் கரத்திற்குள் நிறுத்தினான் அவளைத் தொடாமலே. அவள் விழிகள் அவனை மட்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்க, அவள் கரத்தைப் பற்றியபடி, "ஐ லவ் யூ ஜென்னி" என்று சொல்லி அவன் மோதிரம் அணிவித்த அவள் கரத்தைப் பற்றி முத்தமிட்டான். மின்சாரத்தைப் பாய்ச்சியது போல் அவள் தேகமெல்லாம் சிலிர்ப்படைந்தது. அவள் உடலெல்லாம் உஷ்ணம் ஏறிக் கொண்டிருக்க, அவளிடம் நெருக்கமாய் வந்து அவள் நெற்றியில் அழுத்தமாய் தம் இதழ்களைப் பதிக்க, அவள் உணர்வுகள் கிளர்த்தெழுந்து கொண்டன. அவனின் தீண்டலை அவள் வெகுவாய் ரசிக்க, அவன் பார்வை சற்று இறங்கி அவள் இதழ்களை நோக்கி வரவும் அவள் கலக்கத்தோடு தம் விழிகளை இறுக மூடிக் கொள்ள அவன் கரம் அவள் கன்னத்தை வருடியபடி, "டோன்ட் வொர்ரி... நீயா பழசை மறந்து எல்லாத்தையும் இயல்பா அக்செப்ட் பண்ணிக்கிற வரைக்கும் நான் வெயிட் பண்றேன்" என்று சொல்லி அவன் விலகி நின்றாள். தன் விழிகளைத் திறந்தவள் அந்த முத்தத்தை அவன் தரவில்லை என்று உள்ளூர ஏமாற்றமடைந்தது உண்மை. பெண்மையின் உணர்வுகள் முற்றிலும் விசித்திரமானது. எது வேண்டும் வேண்டாம் என்பதை அவர்களாலேயே பல நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது. முதல்முறையாய் அவன் நெருக்கத்தில் அவள் உணர்ந்தது அச்சமல்ல. நாணம் என்பது புரிந்தது. அவள் வாழ்க்கையில் நடந்த சில கோரச் சம்பவங்கள் அவள் ஆசைகளையும் கனவுகளையும் உடைத்திருக்க, அவற்றை எல்லாம் கடந்து வெகுதூரம் பயணித்து வந்தவளுக்கு மீண்டும் அத்தகைய ஆசை மறுபடியும் டேவிடால் துளிர்விட்டிருந்தது. ஆனால் அவள் இப்போது உருவாக்கி வைத்திருக்கும் சிக்கல் அவள் கழுத்தையே இறுக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ராகவிற்கு அவள் தரப் போகும் ஏமாற்றம் அவனை எந்நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். அது அவளுக்கு எத்தகைய ஆபத்தை வேண்டுமானாலும் உண்டுபண்ணலாம். எல்லாவற்றையும் அவள் முன்னமே முடிவு செய்துதான். ஆனால் அந்த நொடி அவளுக்குள் டேவிடோடு வாழ வேண்டுமென்று உண்டான ஆசை அவளைக் கொஞ்சம் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா