மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 60Post ReplyPost Reply: Naan Aval Illai - 60

Quote from monisha on November 29, 2020, 9:26 PM

60

மன்னிப்பு
டிவியில் திரும்ப திரும்ப ராகவ் ஜென்னியிடம் நடந்து கொண்ட முறையை ஒளிபரப்ப அந்தக் காட்சியை பார்த்த எல்லோருமே அதிர்ந்து போயிருந்தனர். அதே நேரம் அவன் செயலைக் கண்டு அந்தளவுக்காய் வெறுக்கவும் ஆரம்பித்தனர். ராகவ் என்ற பெயரைக் கேட்டாலே எல்லோரும் முகம் சுளித்துக் கொள்ள, அவன் கட்டிக்காத்த பேர் புகழோடு சேர்த்து அவனின் வசீகரிக்கும் முகமும் சீரழிந்து போனது. அவன் முகத்தின் ஒருபக்கம் அத்தனைக் கோரமாய் மாறியிருக்க யாரும் அவன் அருகில் வரவும் தயங்கினர். அப்படி வருபவர்களும் அவன் முகத்தைப் பார்க்கவும் விருப்பம் கொள்ளாமல் நிராகரித்தனர். நேற்றுவரை அவன் செல்லும் இடங்களில் அவனைத் திரும்பி பார்க்காத ஆட்களே கிடையாது. அவன் எங்கு சென்று நின்றாலும் அவனை ஓர் கூட்டம் சூழ்ந்து கொள்ளும். ஆனால் எல்லாமே ஒரு நொடியில் நிர்மூலமாகிவிட்டது. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து வீழ்ந்தான்... இல்லை... ஜென்னியின் புத்திசாலித்தனத்தால் வீழ்த்தப்பட்டான் வாழ்க்கையின் சாரம்சமும் அதுதான். நிலையாமையைப் புரிந்து கொள்ளாமல் அகம்பாவத்தோடும் ஒழுக்கமின்றியும் வாழும் ஒவ்வொருவனுக்கும் ராகவின் வாழ்க்கை ஒரு பாடம். அவனவன் விதைத்ததை அவனவன் அறுவடை செய்தே தீர வேண்டும். ராகவும் அவன் விதைத்த வினைகளை அறுவடை செய்து கொண்டிருந்தான். அவனென்ன கொஞ்சநஞ்சமா விதைத்திருக்கிறான். வலியும் வேதனையும் அவனவனுக்கு வரும் போதுதான் புரியும். "ஏ ஜென்னி... எங்கடி இருக்க? உன்னை கொன்னாதான்டி எனக்கு மனசு ஆறும்" என்று வெறிகொண்டு கத்தியபடியேதான் அவன் அந்த ஆர்பாட்டத்தை செய்து கொண்டிருந்தான். அவள் மீதான வெறியும் கோபமும் அவனைத் தன்னிலை மறக்கச் செய்தது. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்ததிலிருந்து அந்த இடத்தையே துவம்சம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு நேர்ந்ததை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒருபுறம் வலியும் இன்னொரு புறம் அவமானமும் அவனைக் கொன்று தின்று கொண்டிருந்தது. அந்த தவிப்பிலும் கோபத்திலும்தான் அங்கே இருந்த எல்லாப் பொருள்களையும் உடைத்து நொறுக்கிக் கொண்டிருந்தான். அவற்றை எல்லாம் நொறுக்கிவிட்டால் அவனுக்கு நேர்ந்தது இல்லையென்று ஆகிவிடுமா?! ஆனால் முட்டாள்தனமாய் அவன் தன்னிலை மறந்து அவ்விதம் நடந்து கொள்ள, அவனின் அந்தச் செய்கையால் அங்கிருந்தவர்கள் அனைவரும் மிரட்சியடைந்தனர். மருத்துவர்கள் கூட அவனை நெருங்க அச்சம் கொண்டனர். வாசனால் தன் மகனை அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அவனின் நிலையயை எப்படி சரி செய்வது என்று ஆழ்ந்து அவர் யோசிக்க, அந்த சமயம் ராகவை கைது செய்ய போலீஸ் வந்திருந்தனர். ஜென்னியின் மீது அவன் அமிலத்தை வீச இருந்த காட்சியை இந்த உலகமே பார்த்து கொண்டிருந்ததே. வாசனுக்கு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்றே புரியவில்லை. அவரால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. மகனை பொறுப்பாய் வளர்க்காமல் பணம் பொருள் பின்னோடு ஓடியதற்கான தண்டனையை அவரும் அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனாலும் இவர்கள் எல்லாம் திருந்தும் ஜென்மங்கள் அல்லவே. ராகவ் நிறுத்தாமல், "ஜென்னி" என்று அவள் மீது வெறியாய் சத்தமிட அவருக்கும் ஜென்னி மீது அந்தளவுக்கு துவேஷம் மூண்டிருந்தது. அதோடு மனோவும் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் விவரிக்க, ஜென்னி டேவிடை சந்தோஷமாய் வாழ விடவே கூடாதென மனதிற்குள் சபதம் ஏற்றுக் கொண்டார். ****** சையத்திற்கு கொஞ்ச நாட்களாய் நெருக்கடி அதிகமாகிக் கொண்டிருந்தது. பணம் செலவாகிக் கொண்டிருந்தது ஒழிய வரவு என்று எதுவும் இல்லை. அதுவும் இல்லாமல் மதுவின் குடும்பத்தையும் அவன்தான் கவனித்துக் கொள்கிறான். அவனுக்குத் தெரிந்தது கற்றது எல்லாம் சினிமா மட்டும்தான். வேறு வேலைகளைப் பற்றியும் வியாபாரங்கள் பற்றியும் இதுவரை அறிந்து கொள்ளாதது எத்தனை பெரிய தவறென்று இன்று அவன் வருந்திக்கொண்டிருந்தான். சினிமாவைப் பொறுத்துவரை வெற்றி வந்தால் அவர்கள் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கப்படுவார்கள். அதே போல் தோல்வி வந்தால் மொத்தமாகத் தூக்கியெறியப்படுவார்கள். அவன் தோல்வி அடையவில்லை எனினும் அவன் மேல் விழுந்த கரும்புள்ளி அவனின் சினிமா வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திருந்தது. மூன்று மாதங்களாக வாய்ப்புகளைத் தேடி அவன் அலைய, யாருமே அவனுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகயில்லை. ராகவின் பெயர் மோசமானதில் அவனின் பெயரும் அடிப்பட்டது. ஜென்னி ராகவை வீழ்த்தியதில் அவனுக்குச் சந்தோஷம்தான் எனினும் எல்லோரையும் போல அவளும் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பாளோ என்ற எண்ணத்தில் அவளை எதற்காகவும் அணுகாமல் இருந்தான். அதுவும் அவளிடம் இருந்து எந்த உதவியும் பெற அவன் விரும்பவில்லை. அவளை அன்று அந்தளவுக்கு நிராகரித்து அனுப்பிய குற்றவுணர்வு வேறு உள்ளூர குத்திக் கொண்டிருந்தது. சையத் அப்போது தன் மனைவி மதுவிடம் பணத்தை எண்ணிக் கொடுத்து, "தங்கச்சிக்கு பீஸ் கட்ட வைச்சுக்கோ" என்க, "இப்போ இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா... அப்பாவுக்கு வேற இப்பதான் ஹாஸ்பிடல் பில் கட்டினோம் வேற" என்று மது வேதனையுறச் சொல்லவும் "பரவாயில்லை மது... பார்த்துக்கலாம்" என்றான். அவன் எப்போது கேட்டாலும் பார்த்துக்கலாம் என்கிறானே தவிர, எப்படி எல்லாவற்றையும் சமாளிப்பான் என்று அவளுக்கு கலக்கமாய் இருந்தது. அதுவும் தான் அவன் வாழ்வில் வந்ததிலிருந்துதான் அவனுக்கு இத்தனை கஷ்டம் என்ற தாழ்வுமனப்பான்மை வேறு அவளைத் தவிப்புக்குள்ளாக்கியது. அவள் முகபாவனையை புரிந்தவன், "நீ பாட்டுக்கு கண்ட மேனிக்கு யோசிக்காதே... எல்லாமே சரியாயிடும்" என்றபடி அவளை அணைத்துப்பிடிக்க, அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தவள், "எல்லாமே என்னாலதான்... நான் வந்ததுனாலதான்" என்க, அவன் முகத்தை நிமிர்த்திப் பிடித்து "இல்லை எல்லாம் என்னாலதான்" என்றான். அவள் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்கவும், "உனக்கு தெரியாது மது... எங்க அப்பா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாரு... நான்தான் அவர் கஷ்டத்தைப் புரிஞ்சுக்காம உதாசீனப்படுத்திட்டேன்... அதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனைதான்... இதுல நீயும் என் கூட கஷ்டபடுறன்னுதான் எனக்கு வேதனையா இருக்கு" என்று சொல்லவும், "அப்படி எல்லாம் இல்லை... நீங்க சும்மா எல்லா தப்பையும் உங்க மேலயே போட்டுக்காதீங்க?!" என்றவள் புருவத்தை சுருக்கி முகம் சுணங்கினாள். "உன் பேர்லயும் தப்பு இருக்கு" என்றவன் அவளை முறைப்பாய் பார்க்க, "என்னங்க அது ?" என்று அவள் கேள்விக்குறியாய் பார்க்க, "என்னை நீ சரியாவே பார்த்துக்கிறதே இல்ல" என்றவன் குறும்பாய் புன்னகைக்க, அவள் ,"போங்க நீங்க" என்று நாணத்தோடு தலைகவிழ்ந்து கொண்டாள். "நீ இப்படி வெட்கப்பட்டே என்னைக் கொல்றடி" என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தன் முத்த அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தவன் அவள் இதழ்களில் வந்து தடைப்பட்டு நிற்கவும் விழித்து அவனைக் குழப்பமாய் ஏறிட்டவளிடம், "மிச்சத்தை நான் நைட் கன்டினியூ... பண்றேன்" என்றவன் சொல்ல, "உங்களை" என்றவனை தள்ளிவிட்டு அறைக்கதவை அவள் திறக்கப் போக, "எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்ற... இது கோபமா வெட்கமா?!" என்றவன் கேட்டபடி அவளை பின்தொடர அவள் வெளியே சென்றுவிட்டாள். "ஏ சொல்லிட்டு போடி" என்று அவன் கேட்பது காதில் விழுந்தாலும் கேட்காமல் சென்றவள் முகப்பு அறையில் ஜென்னியும் டேவிடும் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யமாய் நின்றுவிட்டாள். "எப்படி இருக்கீங்க மது?" என்று ஜென்னி சோபாவில் அமர்ந்தபடி கேட்க, "நல்லா இருக்கேன் மேடம்" என்று சொன்னவள் பின்னோடு வந்த தன் கணவனைப் பார்க்க அவன் ஜென்னியை அதிர்ச்சியோடு பார்த்தான். அவள் அருகில் அமர்ந்த டேவிடை சந்தேகமாய் பார்த்தவன், "நீங்க ஜே சேனல் எம்.டி மிஸ்டர். டேவிட்தானே?!" என்று கேட்க அவன் புன்னகையோடு,"ஹ்ம்ம்" என்றான். சையத் ஜென்னியைப் பார்த்து பேச எண்ணும் போதே அவள் டேவிடின் புறம் திரும்பி ஏதோ சொல்ல அவன் தன் பேகிலிருந்து இன்விடேஷன் கார்டை எடுத்தான். இருவரும் எழுந்து நின்று கொண்டு அங்கே நின்றிருந்த சாஜிம்மாவிடம் அதனைக் கொடுத்து, "எல்லோரும் கண்டிப்பா வந்திடணும்... அப்சானா ஆஷிக் வந்ததும் அவங்ககிட்ட கூட சொல்லிடுங்கமா" என்க, அவர் சந்தோஷ களிப்பில் அவளை உச்சிமுகர்ந்தார். ஜென்னி உடனே சையத்தின் புறம் திரும்பி, "நீங்களும் மதுவும் கண்டிப்பா வந்திடணும்... இல்லன்னா எனக்கு செம கோபம் வந்திரும் சொல்லிட்டேன்" என்றாள். சையத் குற்றவுணர்வோடு ,"ஜென்னி" என்றழைக்க அவள் புன்னகை மாறாமல், "என் மேரேஜ் முடிஞ்சதும் உங்க டீரீம் மூவியை நாம பண்றோம்... நீங்க அதுக்கான வேலையைப் பாருங்க" என்றாள். மது தன் கணவனைப் பார்த்து புன்னகைக்க, வியப்பானவன் டேவிடை நோக்கினான். ஜென்னி புன்முறுவலோடு, "அவரை ஏன் பார்க்குறீங்க? நான் சம்மதம் சொன்னா அவருக்கும் சம்மதம்தான்... என்ன டேவிட்?" என்றவள் டேவிடின் புறம் திரும்ப, "எஸ்... நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க சையத்... மூவி ப்ரொடக்ஷன் நான் பார்த்துக்கிறேன்" என்றதும் அவன் இன்பத்தில் திளைத்து, "தேங்க் யூ ஸோ மச்" என்று டேவிடின் கைகளைக் குலுக்கியவன் ஜென்னியின் புறம் திரும்பி, "தேங்க்ஸ் ஜென்னி" என்றான். இருவரும் இது குறித்து பேசிவிட்டுப் புறப்பட சையத் ஆனந்த அதிர்ச்சியில் திளைத்திருக்க, மதுவும் சாஜிம்மாவவும் சந்தோஷத்தில் மூழ்கினர். ஜென்னியின் வார்த்தை சையத்திற்கு புத்துயிர் தந்தது போல் இருக்க அவன் மனமெல்லாம் அந்த நொடியே தன் கனவு படத்தை எப்படி இயக்க வேண்டுமென்ற திட்டமிடலை செய்யத் தொடங்கியது. சையத் வீட்டிலிருந்து புறப்பட்ட டேவிடும் ஜென்னியும் காரில் சென்று கொண்டிருக்க, டேவிடின் கைப்பேசி ஓலிக்கவும் எடுத்துப் பேசியவன் ஜென்னியின் முகத்தை மிரட்சியோடு பார்க்க, "என்னாச்சு டேவிட் ?" என்று கேள்வி எழுப்பினாள். "அது... மகிழோட அண்ணன் சீரியஸா இருக்கிறாராம்... உன்னை பார்க்கணும்னு" என்று இழுக்க அவள் யோசனையாய் அமர்ந்திருந்தாள். வேந்தன் நிலையைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தான் அவனால்தான் அந்த மோசமான நாட்களைக் கடந்துவர நேரிட்டது என்று எண்ணியவளுக்கு ஏனோ அவன் மன்னிப்பை ஏற்க விருப்பமில்லை. மகிழின் தமையனாயிருந்து அவன் செய்ததெல்லாம் எப்படி மறக்க முடியும். அவனை அன்று நகைகடை திறப்பு விழாவில் பார்த்த போதே அவனையும் சும்மா விட்டுவிடக் கூடாதென்று அவள் மனம் சொல்ல,  அதன் பிறகுதான் அவன் விட்டு சென்ற கைப்பேசியை வைத்து சில முக்கியமான ஆதாரங்களை எடுத்து அவன் திருமணத்தை நிறுத்தி அவன் வேலையையும் போக வைத்தாள். அதன் பிறகு அவன் அடிப்பட்ட போது மருத்துவமனையில் சேர்த்தது மனித நேயத்தின் காரணியால். மற்றபடி மன்னிக்க அவள் மனம் இடம் கொடுக்க மறுத்தது. அப்போது டேவிட் அவளிடம் "போய் பார்த்துட்டு வந்திடலாமே" என்று அமைதியாய் கேட்க, "உங்க இஷ்டம்" என்று விட்டேத்தியாய் பதிலுரைக்கவும் அவளுக்கு விருப்பமில்லை என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. இருந்தாலும் வேந்தன் இறக்கும் தருவாயில் கோபத்தைக் காட்டுவது எந்த வகையிலும் சரியில்லை என்று எண்ணியவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஜென்னியும் டேவிடும் வந்தடைந்து வேந்தன் இருக்கும் அறைக்கு வர வள்ளியும் எழிலும் அழுது கொண்டிருக்க, மாயா அவர்கள் இருவரையும் தேற்றிக் கொண்டிருந்தாள். ஞானசேகரன் உடைந்து போய் அமர்ந்திருக்க மகிழ் சிலை போல் உணர்வுகளற்று நின்றிருந்தாலும் அவன் விழிகளில் நீர் சூழ்ந்திருந்தது. எல்லோரின் நிலைமையும் பார்த்தவள் மகிழ் அருகில் வந்து "என்னாச்சு?" என்று கேட்க, அவன் எங்கோ வெறித்தபடி தலையை மட்டும் அசைத்து வேந்தன் இறந்த செய்தியை உரைத்து, "இந்த லெட்டரை அண்ணன் உன்கிட்ட கொடுக்க சொன்னாரு" என்று அதனை நீட்ட அவள் அதனை வாங்க முற்படும் போதே அவள் கரம் நடுங்கியது. அதனைப் பிரித்தவள் அதிலிருந்த வேந்தனின் கையெழுத்தின் கோலத்தைப் பார்த்தே மரணத் தருவாயில் கைகள் நடுங்க அவன் கண்ணீர்விட்டு எழுதியிருக்கிறான் என்பது புரிந்தது. 'எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதியில்லன்னு நல்லா தெரியும். நான் செஞ்ச கீழ்தனமான வேலைக்கு என்னை நீ மன்னிக்க மாட்டன்னும் தெரியும். ஆனா உன்கிட்ட மன்னிப்பு கேட்காம செத்துப் போக எனக்கு மனசு வரல... உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு' என்று அவன் எழுதிய கடிதத்தைப் படித்த மாத்திரத்தில் அவள் கண்ணீர் உடைப்பெடுத்தது. டேவிட் அவள் அருகில் வந்து தோளினை தட்டிக் கொடுக்க அவன் மேல் சாய்ந்தழுதவள், "தேவையில்லாம என் கோபத்தைப் பிடிச்சிட்டு தப்பு பண்ணிட்டேனோ டேவிட்?" என்று வினவ, "அப்படி எல்லாம் இல்ல... உன் பாயின்ட் ஆஃப் வீயூல இருந்துபார்த்தா நீ செஞ்சது சரிதான்" என்று சொல்லி சமாதானம் செய்தான். வேந்தனுக்கு சாக்ஷியின் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி அவள் வாழ்க்கையையே பாழ்படுத்திவிட்டதெனும் போது அவளால் எப்படி மன்னிக்க முடியும். ஆனால் வேந்தனின் கடிதம் அவள் மனதை உருகச் செய்து அவன் மீதான கோபத்தை மறக்கடித்துவிட்டது. அவனின் இறுதிச் சடங்கில் அவள் கலந்து கொண்டதே வேந்தனுக்கு அவள் வழங்கிய மன்னிப்பு.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா