மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil kavidhaigal: Monisha kavidhaigalசுயச்சிறைPost ReplyPost Reply: சுயச்சிறை <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 22, 2019, 4:00 PM</div>குடும்பச் சூழலுக்குள் புதையுண்டு போனீர்ங்களா! தாயிற்கு துணையாக சமையலறையில் சாதம் வெடித்து... தந்தை சொல்லின்படி திருமணம் முடித்து... தாலி கட்டியவனுக்காக தன்னையே கொடுத்து... தாலாட்டு பாடி தன்னலத்தை தொலைத்து... தொலைகாட்சி தொடர்களில் பொய் கவலைளுக்கு கண்ணீர் வடித்து... பக்கத்து வீட்டு ரகசியங்களை கேட்டு முடித்து... முடிந்து போனதோ உங்கள் வாழ்க்கை... எல்லையற்ற வானமும், பூமியும் உங்களை பொறுத்தவரையில் அவசியமற்றதோ! உங்களுக்கு மட்டும் வாழ்க்கை ஓரே பாதையில் சுழல்கிறதா? உங்களின் கதைகள் மட்டும் ஒரே வரியில் முடிந்துவிட்டதா? மரணத்திற்கு முன்னதாக மணல் குழிக்குள் கிடப்பது ஏனோ? கருவறை இருளுக்குள் இருந்த ஆண்கள், பூமியை தொட்டதும் விடியலை தொடுகிறார்கள்! நீங்கள் மட்டும் கருவறை அறையை விட்டு வந்தபின்னும் அதே இருளுக்குள் புதையுண்டு கிடக்கிறீர்கள்... கடைசியாக இருள் மாறுபடுகிறது கருவறையில் இருந்து கல்லறைக்கு ஜனனம்-மரணம் இடையில் இருக்கும் அந்த இடைவெளி வாழ்க்கையை நீங்கள் மறந்துவிட்டீர்களா! பெற்றோருக்காக காதலை விட்டுகொடுத்தாய் கணவனுக்காக போற்றி காத்த கற்பை அற்பமாய் தூக்கி கொடுத்தாய் தாய் என்ற பெயரால் தனக்கென்றில்லாத அனைத்தையும் தூக்கி கொடுத்தாய்... இதற்கிடையில் என்று நீ உனக்காக வாழ்ந்தாய்! அந்த ஒருநாள் நீ இந்த பூமித்தாயின் மடியில் ஜனித்ததின் பயன் அடைவாய் பெண்மையே! உங்கள் சிறை பிறரால் பூட்டப்பட்டதல்ல உற்று கவனியுங்கள் சாவி உங்களிடம்தான்... மறந்து விட்டு சிறை சுவற்றை உலகமென்று சுற்றி வருகிறீர்கள்... உங்களை திறந்து விடுவது யாரோ? !!</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா