மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Avalukaga Avanavalukaga avan-9Post ReplyPost Reply: avalukaga avan-9 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on December 26, 2020, 1:07 PM</div>நாட்கள் அப்படியே கடந்து செல்ல கனகவள்ளியிற்கு தமிழ் மகிழை மணந்து கொள்வாள் என்ற நம்பிக்கை விட்டுப்போனது. இப்படியே போனால் தன் மகனின் வாழ்க்கை பாழாகிடும். இதற்கு ஏதேனும் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்று தீர்மானித்து. அன்று முருகேஷிற்கு அழைப்பு விடுத்தார் தொலைப்பேசியில். "நான் அக்கா பேசுறன். ஒன்றுமில்லை நான் ஒன்று சொன்னால் கோபிச்சிக்க மாட்டியே" என்றதும். "அய்யோ அக்கா உன்கிட்ட நான் ஏன் கோபப்படபோறேன் நீ விஷயத்தை சொல்லு"என்றதும். "அது வந்து நம்ப மகிழுக்கு உன் பொண்ணு தர்ஷாவை கட்டிவச்சிடலாமா" என்றதும். "அக்கா இதை கேக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. மகிழ் கிட்ட கேட்டியா முதல்ல.".என்றதும் "என் ராசா நான் சொன்னாலே புரிஞ்சிக்கும் நீ எதுக்கும் கவலைபடாத" என்று சொல்ல அப்படியே ஆகட்டும் கா. என்று போனை வைத்துவிட்டு இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன் மனைவியிடமும் மகளிடமும் சொல்ல... "அப்பா நிஜமாவே அத்தை போன் பண்ணி இப்படி சொன்னாங்களா" என்று கேட்க.. "அட ஆமாத்தா அக்காவே சொல்லுச்சு. உனக்கு இதுல விருப்பம் தானே. விருப்பம் இல்லைனா சொல்லிடு" என்றதும். "அப்பா, எனக்கு மனப்பூர்வமாக சம்மதம்" என்று தன் ஆசை நிறைவேறப்போகும் கனவில் மிதந்தாள். இங்கு மகிழ் தான் பின்வாங்கிக்கொண்டிருந்தான். "மா...உனக்கு இதே வேலையாக இருப்பியா. முதல்ல உன் பேத்தி தமிழ் தான் னு சொல்லுவ இப்ப தர்ஷாவா மொத்தத்தில் உனக்கு யாரையாவது பிடிச்சு எனக்கு கட்டிடனும் அதானே" "டேய் அப்படி இல்லை டா"...என்க "ப்ளீஸ் மா என்னை நிம்மதியாக விடுங்களேன்" என்று கெஞ்சியவனை அமைதிப்படுத்தியவராய் எப்படியோ ஒத்துக்க வைக்க... அந்த அழகிய விடியலில் இருவருக்கும் வடபழனி முருகன் கோவிலில் இனிதே திருமணம் நடந்தேறியது. "வாழ்த்துக்கள் மாம்ஸ்" என்று வாழ்த்திய தமிழை எதிர்கொள்ள முடியாமல் தயங்கினான். யாரை தன்னவளாக்கி மாலை சூட நினைத்தானோ அவளே தன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு செல்கிறாளே கிராதகி. ஒருமுறையேனும் என் காதல் அவளுக்கு புரியவில்லை போலும். முதலிரவிற்கான நேரம் குறிக்கப்படது. அன்றிரவே இருவரும் இல்லர வாழ்வில் இணைவதற்கான சம்பரதாயம் நடைப்பெற்றது. 'தமிழினால் நான் முட்டாள் ஆனதுபோதும். இனி என்னால் தர்ஷா ஏமாற்றம் அடையக்கூடாது என்று எண்ணியவன் அவளை முழுமையாக ஏற்றுக்கொண்டான்'. தர்ஷாவின் கனவு இனிதே நிறைவேறியது யாரை மணக்க நினைத்தாளோ அவனுக்கே மாலையிட்டு வாழ்க்கையை துவங்கிவிட்டாள். மறுநாள் பொழுது விடிந்ததும் காலையிலேயே துயில் எழுந்து தன் எண்ணவனின் பாதங்களை வணங்கிவிட்டு வெளியே வந்து ஸ்நானம் முடித்தவள் நேரே பூஜையறையில் பூஜித்துவிட்டு வெளியே வர இதைக்கண்ட கனகவள்ளியிற்கு ஆச்சரியம் தான் தாங்கவில்லை... "அம்மாடி தர்ஷா நீயா இது" என்று கன்னத்தில் கைவைத்தபடி கேட்க.. "ஏன் அத்தை நானே தான். ஏன் இவ்வளவு ஆச்சரியம்" என்று கேட்க.. "பெங்களூர்ல வளர்ந்த நவநாகரீக பொண்ணு. இப்படி பவ்வியமாக ஒரே நாளில் மாறிட்டியே அதான்" என்றுரைக்க. "என் மாம்ஸ்காக நான் மாறிட்டேன்" என்று புன்னகையித்தபடி நகர்ந்தாள். இவளல்லவா என் மருமகள் என்ன ஒரு மாறுதல் அதுவும் ஒரே நாளில் அப்படியென்றால் ஆரம்பத்திலிருந்து மகிழ்மேல் அவளுக்கு பிரியமோ என்னவோ தெரியவில்லை. தெரிந்திருந்தால் அப்போவே மணம் முடித்து வைத்திருப்பேனே என்று நொடித்துக்கொண்டு தன் வேலையை கவனித்தார். "தர்ஷா ஒரு நிமிஷம்" என்று குறுக்கிட்டான் அவன் "என்ன மாம்ஸ்..." என்றபடி இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்க.. "நான் மகிழை விரும்பினதை கேட்டு அப்போ கோபப்பட்டியே அதுக்கு இது தான் காரணமா. என்னை நீ விரும்புனியா. " என்று கேட்க... "ஆமாம் மா அதை உன்கிட்ட சொல்ல தயக்கமா இருந்தது. அதை வெளிப்படுத்த தெரியாமல் தான் கோபமாக பேசினேன் ஐயம் சாரி. என்றதும். "உன்னோட சூழலில் நான் இருந்தாலும் அப்படித்தானே ரியாக்ட் பண்ணிருப்பேன். விடு தர்ஷா" என்று சமாதானம் சொல்ல.. "பழையசு எல்லாம் மறந்துட்டு நம்ப சந்தோஷமா வாழ்வோம் மாமா. இப்படி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் முடியும் னு நான் நினைக்கலை. நீ எனக்கில்லை என்று முடிவுக்கே வந்தப்றம் தான் திடிரென இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி" என்றாள் சிரித்தவாறே. "ஹாஹா. சரி கிளம்பு கோவிலுக்கு போயிட்டு வருவோம்" என்று இருவரும் கோவிலுக்கு அவனுடைய இருசக்கர வாகனத்தில் சென்றனர். போற வழியில் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்தபடி வண்டியை செலுத்தினான். "ப்பா கல்யாணம் ஆயிட்டாளே ஒரு கெத்துதான்ல" என்றாள் அவள். "ஆமாம் ஆமாம்... இனிமேல் நம்ப பேரியமனுஷங்க தான்" என்று சிரித்தான் மகிழ். என்னவோ தெரியவில்லை திடிரென அன்று தமிழுடன் பைக்கில் சென்றது நினைவுக்கு வந்தது. என்னதான் தர்ஷாவை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் ஒரேடியாக தமிழ்ச்செல்வியை மனதில் இருந்து அகற்றி விட இயலுமா என்ன... என்னதான் இருந்தாலும் ஒருகாலத்தில் தமிழை விரும்பியவனாயிற்றே அவ்வளவு எளிதில் எல்லாம் மறக்க முடியாது. இப்படி மனதில் கடந்த காலத்தை அசைப்போட்டபடி நேரே கோவிலின் வாசலில் நிற்க... வெளியே விற்றுக்கொண்டிருக்கும் அர்ச்சனை பொருட்கள் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். "சாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிடுங்க" என்ற அவனை தடுத்தவள். "மகிழ் தர்ஷா" என்று பெயரை சொல்லி அர்ச்சனை தர...அதைக்கண்டவன். "என்ன தர்ஷா சாமி பெயருக்கே பண்ணா என்ன". "ஹாஹா இல்லை, நம்ப இரண்டு பேர் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ணாதான் அந்த சாமிக்கே பிடிக்கும்" என்று சொல்லிவிட்டு கைகூப்பி வணங்கினாள். "ரொம்ப தாங்க்ஸ் கடவுளே" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்து வணங்கினாள். "இந்த கல்யாணத்துல என் அம்மாவும் மனைவியும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க அதுபோதும் எனக்கு"என்று அவனும் நன்றி சொல்ல.. கடவுளுக்கே குளிர்ந்திருக்கும் நன்றி மழையில். தொடரும் </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா