மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumAnnouncements: Contestsஎன்னைக் கவர்ந்த கதாபாத்திரம் அவள் …Post ReplyPost Reply: என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் அவள் திரெளவபதி அல்ல நாயகி வீரா என்னும் வீரமாக்காளி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">நலம் விரும்பி !!..</a> on December 27, 2019, 6:21 PM</div><ol> <li>இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எவ்வளவு பிரச்சினைகளை தனது வாழ்க்கையில் சந்தித்து கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை கண் முன்னே கொண்டு வந்த நாவல் உங்கள் அவள் திரெளவபதி அல்ல மட்டுமே .. சேரியில் பிறந்து வளர்ந்து தனது அம்மா சொர்ணம் மூலம் கல்லூரி சென்று படிப்பு படித்தாலும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தது சொர்ணம் அம்மா மட்டுமே .. சுகுமாறன் , சரத் , சாரங்கபாணி - தெய்வானை , அரவிந்தன் , ஏன் பார்த்தசாரதி கூட அவர்கள் வளர்ச்சி , நலனில் மட்டுமே அக்கறை கொண்டு வாழும் போது , தனி மனிஷியாக கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் ஆண் வேடமிட்டு , கெத்தாக இருப்பதும் , கட்சி நடத்தும் அரசியல் கூட்டத்தில் விசில் அடித்து அமர்க்களப் படுத்துவதும் , சாரதியை யார் என்று தெரியாமல் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனை வரை சென்று , பெண் என்பதால் ஆண்களின் கழுகு பார்வையில் இருந்து தப்பித்து , தன்னுடைய சகோதரிகள் அமலா , நதியா இருவரின் வாழ்க்கை மேம்பட , பணம் படைத்த தொழில் அதிபர் சாரதி அவரிடம் வாகன ஓட்டுநர் பணியை பெற்று , தனது திறமையால் வேலையை சரியாக செய்து , நல்ல பெயர் பெற்று ! சாரதியின் குணம் அறிந்து அரவிந்தன் காதலை புறந்தள்ளி , பத்திரபதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு , சாரதி மற்றும் சகோதரிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குவது ஆகட்டும் , அரவிந்தன் வீட்டிற்கு சென்று சாரதியை மன்னிப்பு கேட்க சொல்வதும் , சாரங்கபாணி உடல்நிலை சரியில்லாத போது அவரை மருத்துவமனையில் சேர்த்து அவர்கள் பிள்ளைகள் மற்றும் தெய்வாணை சாரதியை நினைத்து பெருமைப்பட வைத்ததும் , தனது தீட்டுப்பட்ட மூன்று நாளாக இருந்தும் அரவிந்தன் மற்றும் கூலிப் படையை எதிர்த்து எந்த சாரதியையும் எதிர்பார்க்காமல் பாரதியின் ரெளத்திரம் பழகு என்று , தன்னை காப்பாற்ற தனக்கு தைரியம் உண்டு என்ற நம்பிக்கையை , தன்னம்பிக்கையை கொண்டு வாழ்க்கையை காப்பாற்றிய வீரா தான் மிகவும் பிடிக்கும் ஆசிரியை .. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டிய கதாபாத்திரம் வீரா .. பின் குறிப்பு [ நான் அவள் இல்லை - சாக்ஷி & ஜெனித்தா ரொம்பவும் பிடிக்கும் , ஆனால் ஜெனி குடும்ப பிண்ணனி , சினிமா உலகம் , டேவிட் பணம் , தொழில் , மீடியா பின்புலம் என்று அதிகபட்சம் அவரை சுற்றி நல்லவர்கள் இருந்தார்கள் .. அனைத்தும் இருந்து நான் வெற்றி பெறுவது மிகவும் எளிது . எதுவுமே இல்லாமல் வீரா வெற்றி பெற்றது சிறப்பு .. மற்றும் ஒரு சிறு பின்குறிப்பு பெண்கள் கதாபாத்திரம் கொண்டு எழுதும் நாவல்கள் அனைத்தும் அருமை ஆனால் போட்டி என்று வரும் போது ஒருவருக்கு தானே பரிசு கிடைக்கும் முதல் பரிசு ஆதலால் தான் அவள் திரெளவபதி அல்ல நாவல் க்கு என்னுடைய பரிசு .. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் எழுத்தாளர் மோனிஷா ..!!</li> </ol></blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா