மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -6Post ReplyPost Reply: kadhal sirai -6 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on April 12, 2021, 4:56 PM</div>இன்றோடு ஒருவாரம் ஆனது அருந்ததியிற்கும் கதிரிற்கும் திருமணம் முடிந்து. "மாமா, புள்ளைங்களுக்கு இன்னும் சடங்கு சம்பிரதாயம் பண்ணவேயில்லை, நம்ம ஜோசியரை பார்த்து நாள் குறிக்கணும்" என்று சண்முகம் தாத்தாவிடம் அகிலாண்டேஷ்வரி தயங்கியபடி கேட்க. "நானும் அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன் மருமகளே நான் போய் ஜோசியர் கிட்ட கேட்டுட்டு வரேன்" என்றார் சண்முகம். இதை ஒலிந்திருந்தபடி தன் அறையில் இருந்து செவிசாய்த்தாள் அருந்ததி. மனசுக்குள் ஏதோ இறக்கை முளைத்த மாதிரியான ஒரு உணர்வு. எதர்ச்சையாக கதிரிற்கும் காதில் விழுந்தது. அதை நினைத்து நகைத்துக்கொண்டான். வெளியே சென்று வந்த சண்முகம்.. "இன்னைக்கே நாள் நல்லாருக்காம். அதனால் இன்றிரவு ஏற்பாடு பண்ணலாம்னு ஜோசியர் சொன்னார்" என்றுரைக்க. அப்படியென்றால் பழம் பூ எல்லாம் வாங்கிவரவேண்டும் என்று அகிலாண்டேஷ்வரியும் சந்திரலேகாவும் கிளம்பினர். அருந்ததியோ இன்றிரவு நடக்கப்போகும் சம்பிரதாயத்தை எண்ணி கனவில் மூழ்கினாள். "அண்ணி, ப்யூட்டி பார்லர் போலாம் வரியா" என்றழைத்தாள் கவியரசி. "என்ன திடிரென கூப்பிடுற" என்க. "எல்லாம் உன் விசேஷமாதான். வா ஒரு பேஷியல் பண்ணிப்பிங்க" என்றழைக்க.. அவளுக்கும் அது சரியென்று பட்டது. அவளுடன் கிளம்பினாள். "மேடம் இவங்களுக்கு பேஷியல் அப்றம் வேக்ஸிங் இரண்டுமே பண்ணுங்க" என்றாள் கவியரசி. "சரி" என்றபடி அழகுகலை நிபுணர் தன் வேலையை கவனித்தார். பின்னாடியே காயத்ரியும் அதே பார்லருக்கு வந்திறங்கினாள். "என்ன காயூ இந்த பக்கம்" என்றாள் கவியரசி. "ம்ம்ம் பஸ் பாஸ் ரெனியுவல் பண்ணலானு. அடிப்போடி பார்லர் எதுக்கு வருவாங்க. நான் த்ரெட்டிங் பண்ண வந்தேன்" "ஏன் பிரவினை மீட் பண்ண போறியோ" என்று வம்பிழுக்க.. "அடிப்பாவி சும்மா இருக்கிற சங்கை ஏண்டி ஊதி கெடுக்கிற ,நான் எப்பவுமே த்ரெட்டிங் பண்ணுறவள் தானே" என்றாள் காயூ. அனைவருடைய வேலையும் முடிந்துவிட்டது. மூவருமாக கிளம்பி வீட்டுக்கு வந்தனர். கதிர் அப்போது வீட்டில் இல்லை வெளியே ஷில்பாவை சந்திக்க சென்றிருந்தான். "கதிர் என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கு" என்று நக்கலடித்தாள் ஷில்பா. "ஓய் என்ன நக்கலா நானே டென்ஷனா இருக்கேன்" என்றான் கதிர். "உனக்கு என்னப்பா டென்ஷன் நீ தான் புதுமாப்பிள்ளையா ஜாலியாக இருக்கியே உனக்கென்ன கவலை" என்க.. "என்னத்தை சொல்ல, நினைச்சே பார்க்காமல் திடிர் கல்யாணம். இன்னைக்கு திடிர் பர்ஸ்ட் நைட். எல்லாம் என்னை கேட்டு எங்க நடக்குது. அவங்களா முடிவு பண்ணி என்னை பலியாடு ஆக்குறாங்க" என்று சற்று முகவாட்டத்துடன் உரைத்தான். அதற்கு வெறுமென சிரித்து வைத்தாள் ஷில்பா. "உனக்கு கிண்டலா இருக்கா? இப்படி சிரிக்கிற" என்க. "பின்ன சிரிக்காமல் என்ன செய்ய சொல்ற அவன் அவன் 35 வயசு ஆகியும் பொண்ணு கிடைக்காமல் அல்லாடுறாங்க. உனக்கு 25 வயசுல அமைஞ்சிருக்கு அதுவும் உன் அத்தை பொண்ணு. நல்லா என்ஜாய் பண்றதை விட்டுட்டு இப்படி முகத்தை தொங்கவிட்டு இருந்தா சிரிப்பு வராமல் என்ன பண்றதாம்" என்று தனக்கே உரிய தோரணையில் சொல்ல அவனுக்கு அது சரியென்று பட்டது. "ஆமாம்ல நான் ஏன் இந்த அளவு யோசிக்கவேயில்லை" என்று வருந்தினான். "இங்கே பாரு கதிரு. கல்யாணம் ,குழந்தை பாக்யம் இதெல்லாம் ஒரு வரம். தேடி வரப்போ வேண்டாம்னு நிராகரிக்காத. இப்போ என்னை பற்றி யோசிச்சு பாரு. இதையெல்லாம் நான் யோசிக்க முடியுமா? என் வாழ்க்கையில் இந்த பாக்யம் அமையப்போறது இல்லை...." என்று தழுதழுத்த குரலில் சொல்லும்போதே கதிரிற்கும் கண்கலங்கியது. ஏதோ ஒரு புரிதலுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சட்டென்று வீடே பதட்டமான சூழ்நிலையில் இருந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன ஆச்சு ஏன் எல்லாரும் டல்லா இருக்கீங்க" என்று வினவினான். "அது வந்து கதிர் அண்ணே " என்றிழுத்தாள் கவியரசி. "என்ன ஆச்சு சொல்லி தொலையுங்க" என்றான் கொஞ்சம் அதட்டலாக. "அது வந்து, எவ்வளவு ஏறி இறங்கியும் மஞ்சள் கலர் ரோஸ் கிடைக்கலையாம். எல்லாமே ரெட் ரோஸ் தானா...அதான் உன் ரூம் அலங்காரத்துக்கு மஞ்சள் ரோஸ் இல்லைனு வருத்தம்" என்றதும்... "அட தூ... இவ்வளவு தானா? நான் என்னமோ ஏதோனு பதறிட்டேன்" என்றபடி வரவேற்பரையில் அமர்ந்து டீவி ஆன் செய்தான்"... மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்சப்பூவே வா .. என்ற பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருக்க அதைக்கண்டதும் எல்லோரும் நக்கலடிக்க துவங்கினர். 'அண்ணே... முதலிரவு கனவு ஆரம்பித்து விட்டது போல' என்று காயத்ரி நினைத்துக்கொண்டு நகர்ந்தாள். அன்று வீடே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. அன்றிரவு இருவருக்கும் முன்னவே உணவு கொடுத்துவிட்டு இருவரையும் தயாராக சொன்னார்கள். அவர்களது அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கதிர் அறையில் காத்துக்கிடந்தான். இவளோ பட்டுப்புடவையில் தேவதைப்போல ஜொலித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். "கதிர் மாமா... இந்தாங்க " என்று பால் சொம்பினை நீட்டினாள். "இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு. உக்காரு முதல்ல" என்றதும் அவனருகே வந்து அமர்ந்தாள். சற்று நேரம் இருவருக்குள் அமைதி நிலவியது. "என்ன அருந்ததி அமைதியா இருக்க எதாவது பேசலாமே".. "ம்ம்ம். உங்கள் கிட்ட ஒன்னு கேக்கணும். உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே"? என்றாள் சட்டென்று. "ஹாஹா பிடிக்கும் ஆனால் இந்த ஒருவாரமா உன்னை எப்படி எதிர்கொள்வதுன்னு தெரியாமல் விலகிப்போனேன் மற்றபடி ஒன்னுமில்லை" என்றதும் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள் அருந்ததி. அவளது கையை அழுத்தி பிடித்தபடி. "அருந்ததி... இந்த லைப் நமக்கு எதிர்பாராத விதமாக அமைஞ்சது கடவுள் போட்ட முடிச்சு . நம்ம சந்தோஷமா அடியெடுத்து வைப்போம். நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா....." என்று ஆரம்பிக்கும் போதே அவள் முகம் வெட்கத்தில் தத்தளித்தது. "அடுத்த வருஷம் நம்ம கைல ஒரு குழந்தை தவழனும்." என்று சொல்லி முடித்தான். அவள் வெட்கத்தில் பார்வையை வேறெங்கோ செலுத்திக்கொண்டிருந்தாள். "அருந்ததி..." என்று அவனது உச்சரிப்பில் திரும்பியவள். என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். விளக்கை அணைத்துவிடவா என்று ஜாடையில் கேட்டான். அவளும் தலையசைத்தாள். ....... நாட்கள் இப்படியே உருண்டோடியது. இவர்கள் திருமணம் ஆகி எங்கும் தனியே செல்லவில்லையே என்று ஏர்காடுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருக்கும் பூங்காக்களில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் சில்லென்ற காற்றை நாசியில் சுவாசித்தவாறு தங்களது ஹனிமூன் நாட்களை கழித்தனர். ஹனிமூன் முடிந்ததும் வீடு திரும்பினர். அகிலாண்டேஷ்வரிக்கும் சந்திரலேகாவிற்கும் பேரன் பேத்தி பற்றிய ஆசைகள் ஆரம்பம் ஆனது. "அருந்ததி....எப்போ எங்களை ஆயாவாக்க போற" என்று லேகா கேட்க... "ம்ம்ம் பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு போ,எல்லாரும் ஆயானு கூப்பிடுவாங்க. அடபோமா." என்று நகைத்துவிட்டு செல்ல... "பாருங்க அண்ணி உங்கள் மருமகளுக்கு கொழுப்பை" என்றவுடன். "ஹாஹா. அட விடு லேகா. பாத்துக்கலாம்" என்றபடி வேலையை கவனித்தனர். குடும்பத்தில் இப்படி. அடிக்கடி கிண்டலும் கேலியுமாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. உலகமே இயங்காமல் முடங்கிப்போகும் என்று யாரும் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. ஆம் கொரனா வைரஸ் காரணமாக முடங்கிப்போனது. வியாபரம் செய்ய இயலாமல் ஷோரூம் மூடப்பட்டது. சந்தோஷமாக கலகலப்பான குடும்பத்தில் அங்கு ஆரம்பித்தது மனவுளைச்சல்... "மச்சான் வியாபாரமே நடக்கிலனா எப்படி வாங்கின கடன் எல்லாம் அடைக்கப்போறோம்" என்று மனம் வருந்தி விருதாச்சலத்திடம் சொல்ல... "எல்லாம் மாறும் மாப்பிள்ளை பார்ப்போம். என்று துரைசாமியிடம் உரைக்க" ஒருபக்கம் அருந்ததியோ. "ஏன் மாமா, இந்த மாதிரி நேரத்தில் நான் கன்சிவ் ஆனால் ஹாஸ்பிட்டல்க்கு அடிக்கடி போகணுமே. பயமா இருக்கு" என்க... அவரவருக்கு அவரவர் கவலை ஆரம்பம் ஆனது. இவர்களுக்கு மட்டுமா. இந்த மாதிரி எத்தனை குடும்பத்தில் எத்தனை வருத்தங்கள். காயத்ரியோ எப்படி பொழுதை ஓட்டுவது என்று தெரியாமல் தன் காதலனுடன் அழைப்பேசியில் உரையாடுவதை வழக்கமாக்கினாள். "பிரவின்... செம்ம போரிங்கா இருக்கு உனக்கு எப்படி" என்றதும். "ஹாஹா எனக்கு ஒரு வகையில் வசதியா இருக்கு" என்றதும் புரியாமல் விழித்தாள் காயத்ரி. "ஏய் காயூ என்ன முழிக்கிற. இப்படி நாள் முழுக்க உன் கூட பேசிட்டு இருக்கேன்ல அதை சொன்னேன் டி லூசு" என்றதும் சிரித்துவிட்டாள். ஒருபுறம் கவியரசியோ காலேஜ் செல்ல முடியாமல் ஆன்லைன் கிளாசில் மூழ்கினாள். இப்படி ஆளாளுக்கு அவரவர் கவலையில்.... இதற்கிடையில் சண்முகம் தாத்தாவிற்கு உடம்பு முடியாமல் போனது. ஏற்கனவே டாக்டர் பரிந்துரை செய்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். அகிலாண்டேஷ்வரியும் சந்திரலேகாவும் சமையலறையே கதி என்பதுபோல் இருந்தனர். "ஏன் அண்ணி...நமக்கு மட்டும் யாரும் லீவே தரமாட்டேங்குறாங்க. " என்றதும். "என்ன" என்பதுபோல் அகிலாண்டேஷ்வரி கேட்க... "இல்லை, எல்லாரும் வீட்ல இருக்காங்க. நாம மட்டும் கிச்சன்ல லீவே இல்லாமல் உழைச்சிட்டு இருக்கோமே அதை சொன்னேன்" என்று சொல்லி லேகாவும் அகிலாண்டேஷ்வரியும் சிரித்தனர். "ஆமாம் ல லேகா...இந்த இல்லத்தரசிங்களுக்கு எப்பவுமே லீவே இல்லை அதான் கவலையா இருக்கிறது" என்றதும் எதர்ச்சையாக வந்த கதிர். "அவ்வளவு தானே லீவு குடுத்துட்டா போச்சு. இப்படி வாங்க இன்னைக்கு நான் சமைக்கிறேன்" என்றதும். "என்னது நீயா....உனக்கு இதெல்லாம் வராது போடா" என்றதும். "ஏன் வராது எல்லாம் வரும். நான் பண்றேன். " என்று அவர்களை விலக்கிவிட்டு தான் செய்ய ஆரம்பித்தான். அவன் சமைப்பதை மாமியாரும் தாயாரும் ரசித்தபடி நின்றனர். "அண்ணி சும்மா சொல்லக்கூடாது கதிர் நல்லாவே சமைக்கிறான். இருங்க அந்த சோம்பேறியை அழைச்சிட்டு வரேன்" என்று தன் மகள் அருந்ததியை அழைத்து வந்தார். "ஏய் பொம்பள புள்ள என்னைக்காவது இப்படி செய்றியா இழுத்து போட்டு வேலையை. அங்கப்பாரு கதிரை" என்று காட்ட அவளோ வாய் மேல் கை வைத்தபடி. "கதிர் மாமா இருங்க நானும் உதவி பண்றேன்" என்றதும். "லேகா, வா போலாம் இனி நம்ம நிக்க வேண்டாம். அவங்க இரண்டு பேரும் அன்னோன்யமாக பண்ணட்டும்" என்றபடி விலகிச்செல்ல... "ஏய் பொண்டாட்டி... என்ன நைஸாக கிச்சனுக்கு வந்துட்ட நான் இருக்கிறதை பாத்தவுடனே. ரொமான்ஸ் பண்ணலானா" என்று சிரிக்க... "ம்ம்ம்.... ரொம்ப தான் உங்களுக்கு. போனால் போகட்டும் ஹெல்ப் பண்ணலானு வந்தா கிண்டலா பண்றீங்க" என்று அவனை செல்லமாக அடித்தாள். அடுத்து என்ன பார்ப்போம்.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா