மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aathiyum AnthamumAA - 22Post ReplyPost Reply: AA - 22

Quote from monisha on April 17, 2021, 8:43 PM

மறைக்கப்பட்ட உண்மை
அந்த இரவு வேளையில் தலையணையைக் கட்டிக் கொண்டு வெதும்பிக் கொண்டிருந்தவள் பின் தன்னையறியாமல் உறங்கிப் போனாள். விடிந்து வெகுநேரம் கழித்தே அவளுக்கு விழிப்பு வந்தது. இரவின் தாக்கம் அவளிடம் ஒரு சோர்வை ஏற்படுத்தியிருந்தது. நேராய் சமையலறையில் புகுந்தவள் தீபாவிடம் காபி போட சொல்லி, அதனை வாங்கி அருந்தியபடி சோபாவில் அமர்ந்திருக்க, செல்லம்மா அவளைப் பார்த்தபடி அறையை விட்டு வெளியே வந்தார். "ஆஃபிஸ் போகலயா ஆதி?" என்றவர் கேட்க, "உம்ஹும்" என்றாள் சிரத்தையின்றி! அவள் முகமெல்லாம் வீங்கி கண்களெல்லாம் சிவந்திருக்க செல்லம்மாவிற்கு உள்ளம் பதறியது. எதற்கும் அழாதவள் இப்படி மனமுடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து தாங்க முடியாமல் தன் மகள் அருகில் அமர்ந்தவர், "அழுதியா?! முகமெல்லாம் வீங்கியிருக்கு... கண்ணெல்லாம் சிவந்திருக்கு" என்க, ஆதி பதில் பேசாமல் தன் தாயின் மடியில் அப்படியே தலைசாய்த்து கொண்டாள். செல்லம்மாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தாய் மகள் உறவே ஆனாலும் என்றுமே அவர்களுக்கு இடையில் அத்தகைய நெருக்கம் இருந்ததில்லை. அதற்குக் காரணம் தானும் ஒரு நாள் தன் மகளுக்கு இல்லாமல் போய்விட்டால் அவள் இந்த உலகில் தனியாக இயங்க முடியாமல் அவதியுறக் கூடாது என்பதற்காகத்தான். அதனாலயே எக்காரணத்தைக் கொண்டும் அதீதமான அன்பையும் அரவணைப்பையும் செல்லம்மா ஆதிக்கு வழங்கியதேயில்லை. ஆனால் இன்று ஆதி இப்படி தன் மடியில் சரிந்திருக்க, எங்கேயோ அவள் தைரியம் தன் கதையைத் தெரிந்து பலவீனப்பட்டு இருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது. மகளின் தலையை வருடியவர், "என்னாச்சு ஆதி?" என்று கேட்க, படுத்திருந்தபடியே தன் பார்வையை உயர்த்தியவள், "அப்பா உண்மையிலேயே இறந்துட்டாராம்மா?" என்று எதிர்பார்ப்பாய் வினவினாள். அந்த நொடியே செல்லம்மாவின் விழியில் இருந்து ஒரு துளிநீர் வெளியே வந்து விழுந்தது. தான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதோ? என்று துணுக்குற்று ஆதி எழுந்து அமர்ந்து, "சாரிம்மா" என்று அவரின் கரத்தைப் பற்றினாள். "உங்கப்பா ஒரு சுயநலவாதி ஆதி" என்று செல்லம்மா சொல்ல ஆதி அதிர்ச்சியானாள். "என்னம்மா சொல்றீங்க?" "ஆமா சுயநலவாதிதான்... என்னை பத்தியும் உன்னை பத்தியும் யோசிக்காம அந்த மனுஷன் நிம்மதியா போய் சேர்ந்திட்டாரு" என்க, ஆதியின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரையும் அப்போது ஒருவித மௌனநிலை ஆட்கொண்டுவிட ஆதி அந்த அமைதியைக் கலைத்து, "அப்பா இறந்ததுக்கப்புறம் என்னாச்சும்மா? நீங்க ஏன் ஊரைவிட்டு வந்தீங்க?" என்றவள் சந்தேகமாய் வினவ, "எல்லாத்தையும்தான் நான் உன்கிட்ட எழுதி கொடுத்திட்டேனே" என்றார் செல்லம்மா. "ப்ளீஸ் நீங்க சொல்லுங்கம்மா... நேரடியா உங்க மூலமா நான் தெரிஞ்சிக்கணும்" அவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "உங்க அப்பா இறந்த செய்தி கேட்டு அந்த ஊரே அழுதது ஆதி... மகனுக்கு இப்படியானதுல மாமாவுக்கு அதிர்ச்சியில கை கால் செயலிழுந்து போச்சு... கனகா அக்காவும் வேல்முருகன் மாமாவும்கூட அழுதாங்க... ப்ச்... அழுதாங்களோ இல்ல ஊருக்காக நடிச்சாங்களோ தெரியாது... ஆனா ஊர்ல இருக்கிறவங்க எல்லோரும் தீர்க்கமா ஒருவிஷயத்தை நம்பினாங்க... செல்வி துரதிஷ்டசாலி... அந்த வீட்டைப் பிடிச்ச தரித்திரம்... கடைசியா புருஷனையே விழுங்கிட்டா" என்று சொல்லி அவர் தன் வேதனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாகிட ஆதி தன் அம்மாவின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள். அந்த சொற்கள் அவரை எந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கும் என்பதை அவளால் உணர முடிந்தது. அப்போது செல்லம்மாவும் தன் மகளின் கரத்தைப் பிடித்தபடி, "அவங்க சொன்னதெல்லாம் உண்மைதான்... நான் துரதிஷ்டசாலிதான்... உங்க அப்பா மாறி ஒருத்தர் புருஷனா அமைஞ்சும் அவர் கூட வாழ முடியாத துரதிஷ்டசாலி... அவர் பிள்ளையை வயித்துல சுமந்திட்டிருக்கேன்னுகூட சொல்ல முடியாத துரதிஷ்டசாலி... அந்த விஷயத்தைக் கேட்டு அவர் சந்தோஷப்படறதைக்கூடப் பார்க்கக் கொடுத்து வைக்காத துரதிஷ்டசாலி" என்று சொல்ல ஆதி அதிர்ச்சியானாள். "அப்போ நீங்க பிரகனன்டா இருந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாமலே போயிடுச்சா?" அந்தக் கேள்வியை கேட்கும் போது ஆதிக்கே உள்ளூர வலித்தது. "ஆமா... அவர்கிட்ட நான் சொல்ல முடியாம போச்சு.." என்றுரைக்க, ஆதியின் முகம் வெளிறிப்போனது. "ஐம் தி அன்லக்கியஸ்ட் பெர்ஸன்... அப்பா இல்லன்றதைவிட நான்னு ஒருத்தி இருந்தன்றதே அப்பாவுக்கு தெரியாமலே போயிடுச்சே" என்றவள் விரக்தியாய் சொல்ல, "சேச்சே அப்படி எல்லாம் இல்ல ஆதி... நீ என் வயித்துக்குள்ள இருக்கும் போதே என் உயிரை காப்பத்தினவ... உண்மையை சொல்லணும்னா இன்னைக்கு நான் உயிரோட இருக்கவே நீதான் காரணம்... உங்க அப்பா இல்லாம நான் வாழவே கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா அவரோட உயிர் நீ... உன்னைய சாகடிக்க எனக்கு மனசு வரல... அதேநேரம் அந்த பாவப்பட்ட குடும்பத்தோட வாரிசா நீ வளர கூடாதுன்னு நினைச்சேன்... என்ன கஷ்டம் வந்தாலும் அந்த குடும்பத்தோட பாவ சாயல்ல நீ வளரவே கூடாதுன்னு முடிவு பண்ணி ஊரை விட்டே வந்துட்டேன்... நான் கர்ப்பமா இருக்கிற விஷயம் கூட அங்கே யாருக்கும் தெரியாது... எனக்கும் சொல்ல விருப்பமில்லை... அதுவுமில்லாம உன்னையும் எல்லோரும் தரித்திரம்னு சொல்லிடுவாங்களோன்னு பயம்" என்று சொல்லிவிட்டு செல்லம்மா மௌனமாக, ஆதி யோசனையில் ஆழ்ந்தாள். செல்லம்மா மேலும், "அந்த ஊர்ல எனக்காகன்னு கவலைப்பட ஓரே ஒரு ஜீவன் இருந்துச்சு ஆதி" என்க, "ஈஸ்வரனை சொல்றீங்களாமா?" "ஹ்ம்ம்... அன்னைக்கு நான் யாருக்கும் தெரியாம இராத்திரியோட இராத்திரியா புறப்பட்டு வந்த போது அவன் தவிச்ச தவிப்பிருக்கே... வார்த்தையால சொல்ல முடியாது... மனசை கல்லாக்கிக்கிட்டுதான் அவனை விட்டு பிரிஞ்சிவந்தேன்... உன்னை வயித்துல வைச்சுக்கிட்டு நான் அலையாத இடம் இல்ல... ஆனா அவ்வளவு கஷ்டத்திலயும் நீ உறுதியா என் வயித்துல நின்னிருந்த பாரு... அது ஆச்சர்யம்தான்... அது உங்க அப்பா செஞ்ச புண்ணியம்... அப்படி ஒருமுறை நான் பசிமயக்கத்தில கிடந்த போது கருணா அண்ணன் என்னைப் பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டு போய் எனக்கு ஆதரவு கொடுத்தாரு... நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன்... நல்லா எழுத படிக்க வரும்... என்னை அவர் பத்திரிக்கையில வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு... அப்பதான் நான் முதல்முதலா எழுத ஆரம்பிச்சேன்... கருணா அண்ணன் நான் எழுதிறதைப் பார்த்து என்னை மேல மேல எழுத சொல்லி ஊக்கப்படுத்தியதால்தான் இன்னைக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன்" என்றவர் சொல்லி முடிக்க ஆதி யோசனையோடு, "எல்லாம் சரிதான் ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் இடிக்குது" என்றாள். "என்ன ஆதி?" "ஏன் அப்பா அந்த இராத்திரி நேரத்துல தோப்பு வழியா வரனும்... அப்படியே இடி மின்னல்ன்னால தீபிடிச்சிதுன்னு வைச்சுக்கிட்டா கூட அப்பா தப்பிச்சி வரமுடியாதளவுக்கு அவ்வளவு வேகமாவா தீ பரவி இருக்கும்?" என்று ஆதி தெள்ளத்தெளிவாய் தன் சந்தேகத்தை கேட்க செல்லம்மாவின் முகம் இருளடர்ந்து போனது. மகளைத் தவிப்பாய் ஏறிட்டவர், "நீ தேவையில்லாதது எல்லாம் யோசிச்சிட்டிருக்க... நடந்தது இதுதான்... இதுல மறைக்கிறதுக்கும் மாத்தறதுக்கும் எதுவும் இல்லை... மேலே மேலே இந்த விஷயத்தைப் பத்தி பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதே... உங்க அப்பாகூட இருந்த நினைவுகளை தவிர வேற எதையுமே நான் யோசிச்சி பார்க்கக்கூட விருப்பப்படல" என்றவர் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விருட்டென எழுந்து சென்றுவிட அப்போது ஆதியின் சந்தேகம் இன்னும் அதிகமாய் வலுத்தது. அதைக் குறித்தே அவள் சிந்தனை சுற்றிச் சூழ வேறெதிலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. தன் தந்தை இறப்பில் ஏதோ மறைக்கப்பட்ட உண்மை இருக்கிறது என்பதை மட்டும் அவள் மனம் ஆழமாய் நம்பியது. ஆனால் அது என்ன? அந்தக் கேள்விக்கான விடையைத் தான் எப்படிக் கண்டறிவது? இப்படியான குழப்பங்களுக்கு இடையில் ஆதி அலுவலகத்தின் வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்து சென்றுவிட அன்று கருணாகரனும் சாரதாவும் செல்லம்மாவை பார்க்க வீடு தேடி வந்திருந்தனர். இம்முறையும் அந்தச் சந்திப்பு திருமணத்தைப் பற்றி பேச என்பதை ஆதி ஒருவாறு யூகித்திருந்தாள். அவள் எண்ணத்திற்கு ஏற்றாற் போலவே கருணாகரன்... அவர்களின் பதிவு திருமணத்திற்கான சில கையொப்பங்களை அவளிடம் நேரடியாக பெற்றுக் கொள்ள வந்திருந்தார். ஆதி அந்தப் படிவங்களைப் பார்த்து அதிர்ச்சியானவள் தன் அம்மாவை ஏறிட்டுப் பார்க்க அவர் மகளிடம் கையெழுத்து போடச் சொல்லி சமிக்ஞை செய்தார். அவளுடைய சம்மதத்திற்கு அங்கே வேலையில்லை. எல்லா முடிவுகளையும் அவர்களே பேசி முடித்துவிட்ட நிலையில் அங்கே தேவைப்பட்டது அவளுடைய கையொப்பம் மட்டும்தான். இப்படி கத்திமுனையில் நிற்க வைப்பவர்களிடம் என்ன பேசுவது? மறுவார்த்தை பேசாமல் ஆதி அந்த படிவங்களில் கையெழுத்திட்டாள். அவளின் சம்மதம் எல்லோருக்குமே ஆச்சர்யம்தான். இந்த விஷயத்தைக் கேட்ட விஷ்வாகூட வியப்பில் மூழ்கினான். ஆனால் ஆதியின் திட்டமும் எண்ணமும் வேறு. இந்தத் திருமணம் அவள் எண்ணங்களைத் திசை திருப்ப அவள் அம்மா செய்யும் ஏற்பாடு என்று நன்றாக புரிந்தது. அவர்கள் யாரையும் நேரடியாக எதிர்த்துக் கொள்ள ஆதி விரும்பவில்லை. அதேநேரம் தன் எண்ணத்தையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க அவள் தயாராயில்லை. திருமண ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க ஆதி எப்படியாவது ஆதித்தபுரத்திற்கு போக வேண்டுமென்ற யோசனையில் இருந்தாள். அதற்கேற்றாற் போல் அன்று சரவணன் ஆதியை அவளின் அலுவலக தொலைபேசியில் அழைத்து தனியாய் பார்க்க அனுமதி கேட்டான். அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்த ஆதிக்கோ பெருத்த ஆச்சர்யம். உடனடியாய் அவனைச் சந்திக்க சென்றாள் ஆதி. ஓயாத அலைகளின் ஓசைக்கிடையில் ஆதி சரவணனுக்காக காத்துக் கொண்டிருக்க அப்போது சரவணனனும் அவளைச் சந்திக்க அங்கே வந்திருந்தான். அவள் நின்று கொண்டிருக்கும் தோரணையைச் சற்று நேரம் பிரமிப்பாய் பார்த்திருந்தவன், அவள் அருகில் நிற்கும் போது தன் உயரம் கொஞ்சம் குறைவாய் இருக்கிறதே என்றெண்ணி அங்கிருந்த மணற்மேட்டில் ஏறி நின்று சமானம் செய்துக் கொண்டான். அவனின் எந்தச் செயலையும் கவனிக்காமல் அவள் கடலலைகளையே பார்த்திருக்க, "ஆதிபரமேஸ்வரி" என்ற அவனின் அழைப்பு அவள் சிந்தனையை தடை செய்தது. சட்டென்று திரும்பியவள், "வாங்க சரவணன்" என்றவள் புன்னகைக்க அவளை அளவெடுத்தபடி அவன் பார்த்த மார்க்கத்தில் ஆதிக்கு எரிச்சல் மூண்டாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், "நானே உங்ககிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன்... நல்ல வேளையா நீங்களே கால் பண்ணிட்டீங்க" என்றவள் சொல்ல சரவணன் குழப்பமானான். "ஆதிபரமேஸ்வரிக்கு என்கிட்ட பேசணுமா... அப்படி என்ன பேசணும்?" "பேசணும்... பட் ப்ளீஸ் ஆதின்னு கூப்பிடுங்க... ஆதிபரமேஸ்வரின்னு நீட்டி முழக்க வேண்டாம்" "ஆதின்னா ஆம்பள பெயர் மாதிரி இருக்கே" "சோ வாட்... அது ஒன்னும் பிரச்சனையில்ல... ஆதின்னு நீங்க கூப்பிடறதனால நான் ஆணா மாறிடுவேணா என்ன?" என்றவள் கேட்க ஆதியின் நேர்கொண்ட பார்வையும் துணிவான பேச்சும் அவனை வெகுவாய் ஈர்த்திருந்தது. அவனுக்குப் பெண்கள் பின்னாடி போவதும் காதல் வசனம் பேசி அவர்களுக்கு வலை விரிப்பதெல்லாம் கை வந்த கலை. ஆனால் ஆதி முன்னிலையில் அந்தக் கலையெல்லாம் எடுபடவில்லை. அவன் வார்த்தைகள் வராமல் அசடு வழிந்துக் கொண்டிருக்க அவனின் தயக்கத்தைப் பார்த்து ஆதியே மேலும் பேசத் தொடங்கினாள். "ஊர்ல பெரியப்பா பெரியம்மா அத்தை எல்லோரும் சௌக்கியமா சரவணன்?!" என்றவள் கேட்க சரவணன் கொஞ்சம் பதட்டமானான். "உனக்கு எல்லாரைப் பத்தியும் தெரியுமா?" "ஏன் தெரியாம? நல்லா தெரியும்... சரி எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு கேட்டனே... பதிலே சொல்லலையே" "நல்லா இருக்காங்க... ஆனா உனக்கு எப்படி? அத்தை உன்கிட்ட எல்லோரை பத்தியும் சொன்னாங்களா என்ன?" என்றவன் ஆவல் ததும்ப கேட்டான். "நானே கொஞ்சம் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்... அப்புறம் அம்மாவும் சொன்னாங்க" என்க, "என்னைப் பத்தி அத்தை ஏதாச்சும் சொன்னாங்களா?" என்று பதட்டமாய் வினவ அவள் புரியாத பார்வையோடு, "ஸ்பெசிஃபிக்கா எதுவும் சொல்லல... ஆனா நீங்க ரஞ்சிதம் அத்தையோட மகன்னு சொன்னாங்க.. அவ்வளவுதான்" என்றாள். இதைக் கேட்ட பின்னரே அவன் மனம் நிம்மதி பெற்றது. அன்று தான் செல்லம்மாவிடம் பேசியதை எல்லாம் ஆதியிடம் சொல்லியிருந்தால் அவளுக்கு தன்மீது தவறான அபிப்பிராயம் வந்திருக்குமே. பின்னர் அவள் தன்னோடு ஊருக்கு வர சம்மதிப்பாளா என்ற கவலைதான் அவனுக்கு. அவன் இப்படியாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ஆதி முன்வந்து, "எனக்கு ஊருக்கு வந்து எல்லோரையும் பார்க்கணும் போல இருக்கு... என்னை அழைச்சிட்டு போறீங்களா சரவணன்?!" என்றுக் கேட்க ஆடு பலிக்கு தானே சம்மதிப்பது போல இருந்தது அவனுக்கு. இருந்தாலும் அவளைச் சந்தேகமாய் பார்த்தவன், "இதுக்கு அத்தை சம்மதிப்பாங்களா?" என்று கேட்க, "அவங்களுக்கு தெரியாது... தெரியவும் வேண்டாம்... நாம மட்டும் போலாம்" என்றாள். சரவணன் சந்தோஷம் பொங்க, "சரி... போலாம்... ஆனா எப்போ?" என்றவன் கேட்கும் போதே, "நாளைக்கு நைட் டென் ஓ க்ளார்க்... எங்க வரணும்னு நான் மெஸேஜ் பண்றேன்... ஓகேவா" என்று ஆதி சொல்ல சரவணனுக்கு தலைசுற்றியது. இரவுதான் அவனின் திட்டத்திற்கும் வசதி என்றாலும் அதையே அவளும் சொல்ல, சந்தேகத்துடன் அவளைப் பார்த்தான். எதற்கும் அவளை ஆழம் பார்க்க எண்ணியவன், "ஏன் இராத்திரி நேரத்தில?" என்று வினவ, "டிராபிக் இருக்காது... மோரோவர் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சிட்டு வந்துருவேன்... நைட் போறதில உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையே?!" என்று அவன் எண்ணத்தைக் கேட்டாள் ஆதி. "சேச்சே... எனக்கு சம்மதம்தான்" "தட்ஸ் கிரேட்” என்று முகம் மலர்ந்தவள், “ஓகே சரவணன்... இப்போ நான் கிளம்பறேன்... மறந்துராதீங்க... ஷார்ப் டென் ஓ கிளார்க்... மெஸஜ் பண்றேன்.. பை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்துவிட்டாள். அவன் தனிமையில் கடலை பார்த்தபடி 'ஏதோ ஓடிப் போகறதுக்கு கூப்பிடற மாதிரி கூப்பிடிட்டு போறா.. தெரிஞ்சுதான் செய்யறாளா? இல்ல தெரியாம செய்யறாளா? இவ அதிபுத்திசாலியா இல்ல அடிமுட்டாளா?' என்றுக் குழம்பிக் கொண்டான். ஆதித்தபுரத்திற்கு செல்ல, ஆதி செல்லம்மாவிற்குத் தெரியாமல் ஆயத்தமானாள். இத்தனை அவசரமாய் ஆதி கிளம்ப முடிவெடுத்ததற்கு இன்னொரு காரணம் விஷ்வாவிற்கும் அவளுக்குமான பதிவுத் திருமணத்தை நிறுத்திவிடும் நோக்கத்தில். அதுமட்டுமல்லாது சரவணன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே ஆதி அன்று இரவு அவனுடன் செல்ல முடிவெடுத்தாள். அங்கே அவளுக்கு உயிர் போகும் அளவுக்காய் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. எனினும் அவள் மனம் அங்கே சொல்ல துடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் விதியின் செயலே.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா