மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -8Post ReplyPost Reply: kadhal sirai -8 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on April 24, 2021, 12:00 PM</div>மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு என்றபடி கத்திக்கொண்டு உள்ளே வந்தார் சண்முகம் தாத்தா. உள்ளே 50 வயது மதிக்கதக்க ஒரு பெண்மணியும் அறுபது வயது எட்டிய ஒரு ஆணும், 30வயதில் ஒரு பெண்ணும் வந்திருந்தனர். "அவனுக்கு வேலை இருந்துச்சு ஆபிஸ்ல லீவு தரவில்லை அதான் அவன் வரல. நாங்க பார்த்து முடிவு பண்ணாலே போதும்னு சொன்னான்" என்று ஆரம்பித்தார் அந்த பெண்மணி. "அது சரி பரவாயில்லை விடுங்க. ஆனால் மாப்பிள்ளை போட்டோவாச்சு கொடுத்தீங்கனா ரொம்ப நல்லாருக்கும்"என்றதும். "இல்லைங்க அவனே சென்னை வந்து பொண்ணை நேரில் சந்திக்கிறதா சொன்னான். அதனால போட்டோ எதுவும் இப்ப வேண்டாம்னு" என்று அந்த ஆண் பேச்சை இழுக்க... "ஓ அப்படினா பரவாயில்லை. எப்படியோ மாப்பிள்ளையோட அப்பா அம்மா அக்கா வந்துருக்கீங்களே அதுபோதும்"என்றார் சண்முகம் தாத்தா. "மாமா, பொண்ணை அழைச்சிட்டு வரவா? "என்று அகிலாண்டேஷ்வரி கேட்க சரியென்று தலையசைத்தார். உடனே அருந்ததியை அனுப்பி அவளை அழைத்து வருமாறு கூறினர். "காயத்ரி, வா கூப்பிடுறாங்க" என்றதும். "அண்ணி மாப்பிள்ளை வரலையோ? அப்போ நான் எப்படி வேண்டாம்னு சொல்றது கல்யாணத்தை? மாப்பிள்ளை கிட்ட தனியா பேசாலாமேனு இருந்தேன்" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டவளை சமாதானம் படுத்தி அழைத்து வந்தாள். "பொண்ணு என் தம்பிக்கு பொறுத்தமா இருப்பா மா" என்று கிசுகிசுத்தார் மாப்பிள்ளையின் அக்கா. "எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு. அவனும் போட்டோவில் பார்த்து பிடிச்சிருக்குனு சொன்னான் . அப்போ நாங்க போய்வரோம். லீவு இருக்கிறப்ப மாப்பிளாளையை சென்னைக்கு அனுப்புறோம்" என்று சொல்லிவிட்டு விடைப்பெற்று சென்றனர். 'இது என்ன கூத்து ,என்னை மட்டும் போட்டோவில் பார்த்துட்டு அவரை நான் நேரில் தான் பார்க்கணுமா' என்று தனக்குள் கூறிக்கொண்டாள். "ட்ரிங்... ட்ரிங்" அங்கு ப்ரவினுக்கு கைப்பேசி அழைப்பு அழைத்தது. எடுத்து ஹலோ என்று சொன்னவுடன் எதிர்முனையில் காயத்ரி தேம்பி தேம்பி அழுததை கண்டவன். "ஏய் காயத்ரி இப்ப எதுக்குடி அழற"என்றான். "ஏன் டா இவ்வளவு நாள் என்னோட கால் நீ எடுக்கவேயில்லை. எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க தெரியுமா"என்றதும். "என்னது மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா சூப்பர் உன் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பாக வரேன்" என்று கிண்டல் செய்தவனை திட்டித்தீர்த்தாள். "சரி சரி ரிலாக்ஸ் பார்த்துக்கலாம். ஆமாம் மாப்பிள்ளை பேரு" என்று கேட்டதும். "யாருக்கு தெரியும் கோவைல தான் இருக்கானாம். பி.பி.ஒவில் வேலையாம்" என்று பதிலளித்தாள் வேண்டா வெறுப்பாக. "ஓ...சரி விடு நான் இருக்கேன்" என்று அவளை சமாதானம் செய்துவிட்டு போனை வைத்து தன் வேலையை கவனித்தான். இங்கு கதிர் அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருக்க "எங்கேங்க கிளம்பிட்டிங்க"என்று அருந்ததி கேட்க. "ஒரு ஸ்கிரிப்ட்டு ரெடியா இருக்கு. அதான் ப்ரொடியுசர் பார்த்து பேசிட்டு வரலாம்னு. அந்த ப்ரொடியுசருக்கு என்னோட குறும்படம் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் எனக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என்று நினைக்கிறாரு. நானும் பெரிய திரைக்கு காலடி எடுத்து வச்சாதான் வளர முடியும். காலத்துக்கும் ஷார்ட் பிலிம்ஸ் பண்ணிட்டா இருக்க முடியும்" என்று சொன்னவனை பிரமிப்பாய் பார்த்தவள். "கதிர் மாமா உன் கிட்ட எனக்கு பிடிச்சதே எதையாவது சாதிக்கணும் அப்டிங்கிற எண்ணம் தான். நல்லபடியா போய்ட்டு வா" என்று அனுப்பி வைத்தாள். நாட்கள் வெகுவாக கடந்தன... பழையபடி கடையில் நல்ல வியாபாரம் துவங்கியது. அவ்வப்போது கதிரும் கடைக்குச் சென்று வருவான். அந்த படம் படப்பிடிப்பு ஆரம்பமும் ஆனது. வீட்டில் இவன் படம் இயக்க போகிறான் என்று கேள்விபட்ட அந்த நொடி ஆச்சரியத்தில் மிதந்தனர். ஒரு இயக்குனரோட குடும்பத்தினரா நாம் என்று பெருமிதம் கொண்டனர். "சினிமா துறையில் காலடி வைத்தது நம்ம குடும்பத்தில் நீ தான். நம்ம குடும்பத்துக்கு பேரு சேர்க்கணும்" என்று விருதாச்சலம் அறிவுரை கூறினார். இந்த படத்தில் ஷில்பாவிற்கு ஒரு கதாபாத்திரம் தரப்பட்டது. கதிர் மூலம் மீண்டும் அவளுக்கு ஒரு வாய்ப்பு. படத்தை பற்றியும் கதாபாத்திரம் பற்றியும் விளக்குவதற்காக அவ்வப்போது ஷில்பாவிடம் போனில் உரையாடுவதை கண்டு வெதும்பியது அருந்ததியிற்கு. "யாருங்க அந்த ஷில்பா" என்ற கேள்விக்கு அவள் என்னுடைய தோழி என்று உரைத்துவிட்டு கடந்துச்செல்வான் கதிர். 'இப்போதெல்லாம் என்னை விட அவள் கிட்டதானே நிறைய நேரம் பேசுறாரு.' என்று வருந்தினாள். இதைப்பற்றி அடிக்கடி அவள் சிந்திக்க... "அருந்ததி. இன்னைக்கு உனக்கு ஷில்பாவை அறிமுகம் படுத்தலாம் என்று நினைக்கிறேன் வாபோலாம்" என்று அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றான். அவர்களை வரவேற்றாள் ஷில்பா. ஷில்பாவை பார்த்ததும் இவளுக்கு எல்லாம் புரிந்தது. 'ஷில்பா ஒரு திருநங்கையா' என்று ஆச்சியத்திலிருந்து வெளியே வரவே ரொம்ப நேரம் ஆனது. "என்ன அருந்ததி...."என்று அவள் தோளை உலுக்கினாள் ஷில்பா. "நீங்க..... திரு..நங்கைனு எனக்கு இப்பதான் தெரியும். சாரி இவ்வளவு நாள் உங்கள் கூட இவர் பழகுறதை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்" என்றதும். "பரவாயில்லை மா நீ ஒரு சராசரி பெண் தானே. இதுல என்ன இருக்கு. கதிர் மாதிரி ஒரு கணவன் கிடைக்க நீ புன்னியம் பண்ணிருக்கனும்" என்று தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய... அருந்ததியிற்கு கண்கள் கலங்கின. "ஷில்பா இன்னைல இருந்து உங்களுக்கு ஒரு சகோதரி இருக்கா என்று நினைச்சிக்கோங்க. நீங்க எப்போ வேணும்னாலும் எனக்கு போன் பண்ணலாம் சரியா? எதாவது உதவினா கேளுங்க" என்று சொன்னவுடன். "ஹாஹா. சரி தங்கச்சி மா என்ன சாப்பிடுற"என்று கேட்க... "ஒன்னும் வேண்டாம் கா,இன்னொரு நாள் வரேன்" என்று விடைப்பெற்று கொண்டு கிளம்பினர். வரும்போது தன் கணவனின் தோள் மீது சாய்ந்தவாறு பைக்கில் வந்தாள். "என்ன அருந்ததி சந்தேகம் போயிடுச்சா" என்றதும். "அதெல்லாம் போயிடுச்சு... ஹாஹா. நான் ஒரு அவசரம் பிடிச்சவ எல்லாமே தப்புத்தப்பா புரிஞ்சிக்கிறேன்." என்று தன் தலையில் தானே கொட்டினாள். "விடு...எப்படியோ இதுமூலமாக ஷில்பாக்கு ஒரு சிஸ்டர் கிடைச்சாச்சு" என்று சொல்லிவிட்டு நேரே வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். வெளியே படியில் அமைதியாய் அமர்ந்திருந்த காயத்ரியை பார்த்த அருந்ததி... "என்னங்க நீங்க உள்ளே போங்க காயத்ரி கிட்ட பேசிட்டு வரேன்" என்றபடி காயத்ரி இருக்கும் திசையை நோக்கி நகர்ந்தாள். "காயூ என்னடா டல்லா இருக்க" என்று பாசமாக விசாரித்த அண்ணியின் தோளில் சாய்ந்தவள். "அண்ணி,எனக்கு நல்லா கதறி அழனும் போல இருக்கு. சின்னவயசுல அப்பா அம்மாவை இழந்துட்டு இங்கே இருக்கிற எல்லாரையும் என் உறவாக நினைச்சன். படிக்கனும் என்று ஆசைப்பட்டு படிச்சேன். ஹாஸ்டல்ல யாருமே இல்லாமல் இருந்த எனக்கு ப்ரவினோட நட்பு ரொம்ப பிடிச்சிருந்தது. எப்படி சொல்றதுனு தெரியல ஒரு செக்யூரா ஃபீல் பண்ணேன். ஆனால் இன்னைக்கு அவன் என் வாழ்க்கையில் வருவானா மாட்டானானு நினைக்கிறப்ப ரொம்ப பயமா இருக்கு. யாருன்னு தெரியாத ஒருத்தனுக்கு மனைவியா ஆகபாபோறேனா? இல்லை என் காதலை தேடி போகப்போறேனானு சுத்தமாக புரியல" என்று விம்மியவளை நிமிர்த்தி... "காயூ...எதுக்கும் கவலை படாதே மாப்பிள்ளை உன் சந்திக்கிறேனு சொல்லியிருக்காருல. அவரை பார்க்கிறப்ப எல்லாம் சொல்லிடு. அவரு உன்னை புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு." என்று ஆறுதலாய் கூற ஒரு வெற்று புன்னகையுடன். "பார்ப்போம் விதி என்ன விளையாடுதோ" என்று சொல்லிவிட்டு காயத்ரி எழுந்து சென்றாள். 'கடவுளே! இவள் ஆசைப்படுற பையனோட இவள் ஒன்னு சேரனும். அவளோட வலியை தான் ஒரு காலத்துல நான் அனுபவிச்சிட்டு இருந்தேன். வர மாப்பிள்ளையை கட்டிக்கவும் முடியாமல் இந்த வீட்டில் உள்ளவர்களை மறக்கவும் முடியாமல். அவளாவது நிம்மதியாக மணவறையில் உக்காரனும்' என்று தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொணடு எழ எத்தனித்தாள்... "அருந்ததி...."என்று அழைத்தான் கதிர். "சொல்லுங்கள் மாமா ஏன் கூப்டிங்க" என்று அவள் கேட்க. "ஆமா நம்ம காயத்ரிக்கு என்ன பிரச்சனை அவள் வாட்டமாவே இருக்காளே" என்றதும். "அதெல்லாம் ஒன்றுமில்லை நான் பார்த்துக்குறேன். நீங்க இதெல்லாம் யோசிக்காமல் ரிலாக்ஸா இருந்து உங்கள் மூவியை நல்லபடியா எடுங்க" என்று புன்னகையித்தாள். அவனும் அத்தோடு அந்த பேச்சை விட்டுவிட்டு அறைக்குள் புகுந்தான். கணவனுக்கு மட்டுமல்ல யாருக்கும் காயத்ரியின் காதல் பற்றி எதுவும் தெரியவே வேண்டாம். விதிப்படி நடக்கட்டும் என்று அருந்ததி யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டாள். அடுத்து என்ன. </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா